Relax Please: FB page daily Posts |
- 1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பத...
- தெரிந்த உண்மைகள், தெரியாதவர்களுக்கு மட்டும். -----------------------------------...
- அம்மாவிற்காக ஒரு 5 நிமிடம் <3 #ஒரு வயதான போது, உன்னைக் குளிப்பாட்டி, உணவூட்டி...
- 22 - 26 வயது ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது எது? 1) உங்கள் காதலிக்கு திருமணம்...
- வாழ்வின் மொழி... அதிகம் அன்போடுநடந்து கொள்ளாதேஅடிமையாக்கி விடுவார்கள்.. அதிகம...
- இப்படி வாழ்ந்து பார்க்கலாமே... *ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்...
- வெண்ணிலா கபடிக்குழு என்றொரு திரைப் படத்தில் வந்த பரோட்டா காமெடி உங்கள் அனைவருக்க...
- இந்தியாவைப் பொறுத்தவரை இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட...
- பெண் அழகாகிறாள்...!!!" தனது தம்பிக்கு தான் தாய் என்று உணரும்போது...!!!"
- டிப்ஸ்... டிப்ஸ்...! புளி, உப்பு, வெல்லம் போன்ற பொருட்களை பிளாஸ்டிக் டப்பாக்களி...
- பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.....
- காமராஜரின் எளிமையும் நேர்மையும் ************************************************...
- ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்......
- இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம். இந்த அம்மாக்கள் தோசைக்கல்லில் நிலவு...
- ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் டைட்டானிக் கப்பல் விபத்து நடந்து 90 ஆண்டுகள் ஆகிவிட்டத...
- உட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறு இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீ...
- ஞாபக சக்தி அதிகரிக்க ! ஞாபக சக்தி பெருக தினமும் பப்பாளி, மாதுளம்பழம் சாப்பிடுவத...
- 21 - 25 வயது பெண்களுக்கு மிகவும் கடினமான வயது...!! (திருமணத்திற்கு முன்) 1) காத...
- " அண்ணே! காா்ல எங்கே கிளம்பிட்டீங்க"...? "புதுக்கடை" வரைக்கும் போகணும் தம்பி"!....
- அமெரிக்காவில் ஒரு இந்திய டாக்டர் ஒரு மருத்துவமனையை துவக்கினார். கஸ்டமர்களை கவர்ந...
- காட்டிலிருந்து புலி ஒன்று வழி தவறி ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் ரெஸ்ட் ரூம்புக...
- 'என்ன வாழ்க்கைடா இது' என்று நினைப்பதை விட, 'இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை' என்று...
- இன்று(16-06-2013) அகிலவுலக தந்தையர் தினமாகும். மேலைநாடுகளில் பெரிய அளவில் கொண்ட...
Posted: 16 Jun 2015 09:10 AM PDT 1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். 2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். ... 3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும். 4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். 5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும். 6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும். 7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும். 8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும். 9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும். 10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும். 11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும். 12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும். 13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும். 14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும். 15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும். 16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும். 17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும். 18. சுக்கு(Dry Ginger) , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும். 19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும். 20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும். Relaxplzz |
Posted: 16 Jun 2015 09:10 AM PDT தெரிந்த உண்மைகள், தெரியாதவர்களுக்கு மட்டும். ------------------------------------------------------ சுமார் 1965ம் ஆண்டுவாக்கில், பேரறிஞர் அண்ணா அவர்கள், பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்த சமயம். அவர் டெல்லியில் இருந்தார். அண்ணா டபுள் M.A. படித்து, ஆங்கில இலக்கியத்தில் புலமைபெற்றவர். பாராளுமன்றத்தில் சர்வசாதாரணமாக அவர் ஆங்கிலத்தில் பேசுவார். அந்தசமயம் ஒரு இளவயது டெல்லி பத்திரிகை நிருபர் ஒருவர் பாராளுமன்றத்தைவிட்டு வெளியேவந்த அண்ணாவிடம், "நான் தங்களை பேட்டி எடுக்க விரும்புகிறேன்..." என்றார். அண்ணாவும் பேட்டிகொடுக்க சம்மதித்து பேட்டிக்கு தயாரானார். நிருபர் துணிச்சலாக "உங்களிடம் எதைப்பற்றி கேள்வி கேட்டாலும் சுலபமாக உடனே பதில் சொல்வீர்களாமே... நான் கேட்கும் கேள்விக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா?..." என்றார். அண்ணாவும் "கேளுங்க தம்பி..." என்றார் ஆங்கிலத்தில். உடனே நிருபர் கேட்டார்... "ஆங்கிலத்தில் 1000 வார்த்தைகளுக்கு "A" என்ற எழுத்தே இல்லாமல் உங்களுக்கு பதில் சொல்லத்தெரியுமா?..." என்றார். உடனே அண்ணா சற்றும் தாமதிக்காமல், "தம்பி, 1 முதல் 999 வரை ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளுங்கள். கடைசியில் STOP என்று ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளுங்கள்..." என்றார். இந்தபதிலை கொஞ்சமும் எதிர்பார்க்காத நிருபர் உடனே அண்ணாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அன்றுதான் நிறையபேருக்கு தெரிய ஆரம்பித்தது 1 முதல் 999 வரை ஆங்கிலத்தில் "A" என்ற எழுத்தேவராது என்று. Relaxplzz |
Posted: 16 Jun 2015 08:10 AM PDT அம்மாவிற்காக ஒரு 5 நிமிடம் ♥ #ஒரு வயதான போது, உன்னைக் குளிப்பாட்டி, உணவூட்டி அழகுபடுத்தி மகிழ்ந்தாள். நீ பதிலுக்கு இரவு முழுதும் அழுதாய். #இரண்டு வயதாகையில் உன் விரல் பிடித்து உன்னை நடக்கப் பழக்கினாள். நீயோ அவள் அழைக்கையில் வராமல் முரண்டு பிடித்தாய். #மூன்று வயதாகையில் பாசத்தைக் குழைத்து உனக்காய் உணவு தயாரித்தாள். நீயோ அதை விசிறியடித்து உன் நன்றியைக் காட்டினாய். #நான்கு வயதானபோது வண்ணப் பென்சில்கள் வாங்கி உன்னை மகிழ்வித்தாள். நீ பதிலுக்கு அதைக்கொண்டு சுவரில் கிறுக்கினாய். #ஐந்து வயதானபோது அழகழகாய் ஆடைகள் அணிவித்து மகிழ்ந்தாள். நீயோ பதிலுக்கு சகதியில் புரண்டு அதை அழுக்காக்கி சிரித்தாய். #ஆறு வயதில் அலைந்து அலைந்து நல்ல இடமாய் பார்த்து உன்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள். நீயோ போகமாட்டேன் என்று அழுதாய். #ஏழு வயதில் உனக்கு கிரிக்கெட் பந்து வாங்கித் தந்தாள். நீயோ அதைக் கொண்டு அடுத்த வீட்டு சன்னலை உடைத்தாய். #பத்து வயதில் உன்னை ஆசையுடன் இசைப் பயிற்சிக்கு அனுப்பினாள். நீயோ பயிற்சியெடுக்காமல் நன்றி செலுத்தினாய். #பதினொன்று வயதில் உன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு உற்சாகமாய் திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்றாள். நீயோ அவளை வேறு இருக்கையில் அமரச் சொன்னாய். #பன்னிரண்டு வயதில் பார்க்காதே என்று சொன்ன தொலைக்காட்சி சானல்களை அவள் இல்லாதபோது பார்த்தாய். #பதிமூன்று வயதாகையில் தலை முடியை கத்தரிக்கச் சொன்னாள். நீயோ உனக்கு ரசனையே இல்லை என்று பதில் சொன்னாய். #பதினான்கு வயதாகையில் பள்ளியில் ஒருவார சுற்றுலா அனுப்பினாள். நீயோ ஒரு தொலைபேசி அழைப்பு கூட செய்யாமல் அவளை நிராகரித்தாய். #பதினைந்து வயதாகையில் அலுவலகத்திலிருந்து ஆர்வமுடன் ஓடி வந்து உன்னை அழைக்கையில் அறையைத் தாழிட்டுக் கொண்டு பேசாமல் இருந்தாய். #பதினாறு வயதாகையில் உனக்கு வண்டி ஓட்டக் கற்றுக் கொடுத்தாள். நீ அவளுடைய வாகனத்தை சொல்லாமலேயே எடுத்துக் கொண்டு சுற்றினாய். #பதினேழு வயதாகையில் அவள் ஒரு தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருப்பதாய் சொன்னாள். நீயோ தொலைபேசியை கீழே வைக்காமல் நண்பர்களுடன் அரட்டை அடித்தாய். #பதினெட்டு வயதாகையில் உன்னுடைய பள்ளி இறுதித் தேர்வு வெற்றிக்காக ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். நீயோ அவளை தனியே இருக்க விட்டு நண்பர்களுடன் இரவு முழுதும் கொண்டாட்டம் நடத்தினாய். #பத்தொன்பது வயதாகையில் கல்லூரியில் பணம் கட்ட வந்தாள். நீயோ அவளை ரகசியமாய் சந்தித்துப் பேசி அனுப்பினாய், நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைக்க அவமானப் பட்டாய். #இருபது வயதாகையில் ' நீ யாரையாவது விரும்புகிறாயா ' என்னும் அவளுடைய கேள்விக்கு, 'இதிலெல்லாம் தலையிடாதே' என்று பதில் சொன்னாய். #இருபத்து ஒன்று வயதாகையில் உன்னுடைய எதிர்காலம் பற்றி அறிவுரை சொன்னாள். நீயோ எனக்கு உன்னைப் போலாக வேண்டாம், அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாய். #இருபத்து இரண்டு வயதாகையில் உன் கல்லூரி வெற்றிக்காய் பெருமிதப்பட்டாள். நீயோ நண்பர்களுக்கு விருந்து வைக்க பணம் வேண்டும் என்றாய். #இருபத்து மூன்று வயதாகையில் பாசத்தோடு உனக்களித்த பரிசைக் குறித்து 'நல்லாவே இல்லை' என்று நண்பர்களிடம் சொன்னாய். #இருபத்து நான்கு வயதாகையில் உன்னுடைய தொழில் திட்டம் பற்றிப் பேசினாள். அம்மா சும்மா இருப்பாயா என்று அதட்டி உன் நன்றியைக் காட்டினாய். #இருபத்து ஐந்து வயதாகையில் கையிலிருந்த பணமெல்லாம் செலவழித்து திருமணம் செய்து வைத்து கண்ணீர் விட்டாள். நீயோ அவளை விட்டு தூரமாய் வந்து தனிக்குடித்தனம் செய்தாய். #முப்பது வயதாகையில் உன் குழந்தை வளர்ப்பு குறித்து சில ஆலோசனைகள் சொன்னாள். நீயோ ' அதெல்லாம் அந்தக் காலம்…' என்று பதில் சொன்னாய். #நாற்பது வயதாகையில் உன்னை அழைத்து தன்னுடைய பிறந்த நாள் விழாவுக்கு வர முடியுமா என்றாள். நான் ரொம்ப வேலையாய் இருக்கிறேன் என்று பதில் சொன்னாய். #நாற்பத்தைந்து வயதாகையில் உன்னைக் காணவேண்டும் என்று விரும்பினாள் நீயோ குழந்தைக்கு விடுமுறை கிடைக்கவில்லை என்று பதில் சொன்னாய். #ஐம்பது வயதாகையில் அவள் நோய்வாய்ப் பட்டாள். உன் கரத்தைப் பிடித்துக் கொண்டே அருகில் இருக்க ஆசைப்பட்டாள். நீயோ முதியோர் இல்லத்தில் சேர்க்க ஆலோசனை செய்தாய். ஒருநாள் விடியலில் உனக்கு அழைப்பு வந்தது. உன்னைக் காணவேண்டும் என்னும் ஆசையை முனகலாய் உச்சரித்துக் கொண்டே இறந்து போன உன் தாயைப் பற்றி. நீ காலம் கடந்து கண்ணீர் விட்டாய் ! அன்பு பெரிய பெரிய செயல்களில் வெளிப்படுவதில்லை. சின்னச் சின்ன நிகழ்வுகளில் தான் வெளிப்படுகின்றன. காட்டாத அன்பு மலையாய் கனக்கும். வாய்ப்பு இருக்கும் போதே நேசத்தை வெளிப்படுத்துங்கள். Relaxplzz |
Posted: 16 Jun 2015 08:10 AM PDT 22 - 26 வயது ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது எது? 1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும். 2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம் " இதெல்லாம் எங்க உறுப்படப்போது? " என்பது போன்றே இருக்கும். 3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம் , அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள். 4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும் ரசிப்பீர்கள். 5) உடல் பருமன் ஏறாமல் , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது. 6) தினமும் shave செய்யாவிட்டால் , வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள். 7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள். உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்? 9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும். 10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ , அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும். 11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது. 12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள். 13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள்.காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் . 14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும். 15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள். # எந்த அளவுக்கு துல்லியமாய் எழுதி இருக்கிறேன் என்றுத் தெரியாது.இதைப் படிக்கையில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்கள். Relaxplzz |
Posted: 16 Jun 2015 08:10 AM PDT வாழ்வின் மொழி... அதிகம் அன்போடுநடந்து கொள்ளாதேஅடிமையாக்கி விடுவார்கள்.. அதிகம் பொறுமையுடன் நடக்காதே பைத்தியம் ஆகும் வரை விட மாட்டார்கள்.. எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று நினைக்காதே பலர் உன்னை வெறுக்க நேரிடும்.... எல்லோரையும் நம்பி விடாதே ஏமாற்ற பலர் இருக்கிறார்கள். கோபப்டாமலே இருந்து விடாதே கோமாளியாக்கி விடுவார்கள்.. Relaxplzz |
Posted: 16 Jun 2015 08:10 AM PDT இப்படி வாழ்ந்து பார்க்கலாமே... *ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு. *மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார். *'நன்றி','தயவுசெய்து'-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி. *உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள். *உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து. *ரகசியங்களைக் காப்பாற்று. *புதிய நண்பர்களைத் தேடிக்கொள்: பழைய நண்பர்களை மறந்துவிடாதே. *தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள். *உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள். *தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி *ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே. *கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும். *கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே. *உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும். *மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல். *ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே. *வதந்தி,வம்பு பேசுவதைத் தவிர். *போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு. *ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே.பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை. *வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே. *பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு. *'எனக்குத் தெரியாது', மன்னிக்கவும்', என்பதை சொல்லத் தயங்காதே..!! --------------------------------------- நீங்கள் தெரிந்து கொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்.. Relaxplzz |
Posted: 16 Jun 2015 08:10 AM PDT வெண்ணிலா கபடிக்குழு என்றொரு திரைப் படத்தில் வந்த பரோட்டா காமெடி உங்கள் அனைவருக்கும் தெரியும். அதில் நடித்த சூரி இன்று பரோட்டா சூரியாகி உச்சம் பெற்றுவிட்டார் என்பதும் யாவரும் அறிவோம். இந்தப்பதிவு அந்தப் படத்தைப் பற்றியோ அந்த நடிகரைப் பற்றியோ அல்ல.. இதன் நோக்கம் வேறு. எனக்குத் தெரிந்து ஒரு காலத்தில் XXX ஜோக்காக வந்த ஒரு நகைச்சுவை தான் இந்தப்படத்திற்காக பரோட்டா காமெடியாக மாற்றப்பட்டுள்ளது.. (அது என்ன என 18+ ரசிகர்கள் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் கேட்டாலும் சொல்ல விருப்பமில்லை) உங்களுக்கு காமெடியாக தெரிந்த அந்தக் காட்சியில் தான் வாழ்க்கையில் ஜெயிப்பதற்கான ஒரு செய்தி இருக்கிறது.! அந்தக் காமெடியின் சாராம்சம் என்ன? 50 பரோட்டா சாப்பிடவேண்டும்.. அவர் சாப்பிட்டு விடுகிறார்.. ஆனால் பரிமாறியவர் இல்லை என்கிறார்..இப்போது அவர் திரும்ப முதலில் இருந்து வருவதாக சொல்கிறார்.. நாம் சிரிக்கிறோம்.. ஓகே இது காமெடி... நிஜத்தில் எண்ணிப் பாருங்கள்... 50 பரோட்டா நிரம்பிய வயிறு! மீண்டும் 50 பரோட்டா சாப்பிடுவது எவ்வளவு கடினம்..! மனிதன் வாழ்வில் எதற்காக பாடுபடுகிறான்.! உணவுக்காக.. ஆனால் அவன் போதுமென்று சொல்வதும் அந்த உணவை மட்டுமே.! அப்படி ஒரு சூழலில் அவன் திரும்ப சாப்பிடுவது மிகப்பெரிய சவால்.! அதாவது உனக்கு ஒரு பிரச்சனை என்றாலோ உன் திறமையை யாராவது குறைத்து மதிப்பிட்டாலோ மீண்டும் முதலில் இருந்து தொடங்க யோசிக்கவே கூடாது.! இது தான் அந்தக்காமெடியில் இருந்து நான் கற்றுக்கொண்டது.. உங்களை நிரூபிக்க உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்திருந்தால் நீங்கள் எந்த சவாலையும் ஏற்பீர்கள் அல்லவா.. ஆம் தன்னை நிரூபிக்க மீண்டும் முதல் படியிலிருந்து மேலேற காத்திருப்பவன் காலடி படவே காத்திருக்கிறது சிகரங்களின் உச்சிகள்.. #ஜெயித்துக்_காட்டுவோம் - வெங்கடேஷ் ஆறுமுகம் Relaxplzz |
Posted: 16 Jun 2015 07:06 AM PDT இந்தியாவைப் பொறுத்தவரை இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதை தடுக்கக்கூடிய, கட்டுப்படுத்தக்கூடிய இயற்கை வைத்தியத்தைக் காண்போம் இங்கே... 1. தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலே, இதய நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். வெறுமனே நெல்லிக்காய் சாப்பிட முடியாவிட்டால் நெல்லிக்காயுடன் இஞ்சி சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு கலந்து... சர்க்கரை, தேவைப்பட்டால் உப்பு சேர்த்து, தண்ணீர் கலந்து சாப்பிடலாம். காலையில் டீ குடிப்பதற்குப் பதிலாக இந்த ஜூஸை குடிக்கலாம். 2. வாய்வுக்கோளாறு உள்ளவர்கள் ஒரு முழு பூண்டை தீயில் சுட்டு வெந்ததும் சாப்பிட்டு வந்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். இதே பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தக்குழாயில் உள்ள கொழுப்பை கரைப்பதோடு, இதயத்துக்கும் வலுவூட்டும்! 3. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சிறிதளவு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் அடுத்த 5, 10 நிமிடத்தில் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வரும். 4.இதயம் பலவீனமாக இருப்பவர்கள் காய்ந்த திராட்சைப்பழத்தை பன்னீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து பிசைந்து வடிகட்டி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால், நிவாரணம் கிடைக்கும் Relaxplzz ![]() இயற்கை வைத்தியம் - 2 |
Posted: 16 Jun 2015 06:50 AM PDT |
Posted: 16 Jun 2015 06:10 AM PDT டிப்ஸ்... டிப்ஸ்...! புளி, உப்பு, வெல்லம் போன்ற பொருட்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் வைப்பதைத் தவிர்க்கவும். இவை, காற்றுபட்டால் நீர் விடும் தன்மை கொண்டவை. பிளாஸ்டிக்குடன் சேர்ந்து ரசாயன மாற்றம் ஏற்பட்டு, ஆரோக்கியத்துக்கும் கெடுதல் ஏற்படக்கூடும். கண்ணாடி அல்லது பீங்கான் டப்பாக்களில் பாதுகாத்து வையுங்கள். -------------------------------------------------------------------------------- பிரெட் துண்டுகளின் மேல் வெண்ணெய் தடவுவதற்கு முன்னால், வெண்ணெயில் சிறிது பால் விட்டு நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். பிறகு வெண்ணெயை சீராகத் தடவ சுலபமாக இருக்கும் என்பதுடன், வெண்ணெயும் குறைவாகவே தேவைப்படும். -------------------------------------------------------------------------------------- சட்னி வகைகள் (குறிப்பாக தேங்காய் சட்னி) மிகுந்துவிட்டால், அவற்றுடன் புளிக்காத தயிர், பொடியாக அரிந்த வெங்காயம் அல்லது காராபூந்தி சேர்த்துக் கலந்தால், சுவையான ராய்த்தா தயார். -------------------------------------------------------------------------------------- ரவை, சேமியா உபயோகித்து கிச்சடி தயாரிக்கும்போது, தக்காளிப் பழத்தை முதலிலேயே சேர்த்தால், தக்காளித் துண்டுகள் மிகவும் குழைந்துவிடுவதுடன் கிச்சடியின் நிறமும் மாறிவிடும். தக்காளி போடாமல் கிச்சடி தயாரித்துவிட்டு, அடுப்பை அணைத்துவிடுங்கள். தக்காளித் துண்டுகளை கிச்சடியின் மேல்தூவி, ஒரு ஃபோர்க்கால் ஒரு முறை கிளறிவிட்டு கொஞ்ச நேரம் மூடி வைத்துவிடுங்கள், கிச்சடியின் சூட்டில் தக்காளி பதமாக வெந்துவிடுவதோடு, கிச்சடியின் நிறமும் மாறாமல் இருக்கும் ----------------------------------------------------------------------------------- கால் கிலோ வெங்காயம், கால் கிலோ தக்காளி இவற்றைத் துண்டுகளாக நறுக்கி, நாலைந்து மிளகாய் வற்றலுடன் வதக்கிக் கொள்ளவும். இதை தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்து பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். தேவையானபோது இதை உபயோகித்து... சைட் டிஷ், கிரேவி போன்றவற்றை விரைவில் தயாரித்து விடலாம்... சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். Relaxplzz |
Posted: 16 Jun 2015 06:10 AM PDT பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.. இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்... சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை.. கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும், அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால்,அவர்களது கர்ப்பப்பை நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்... இது அவர்களது நன்மைக்காகத்தான்... என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க்கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றி என்ன சொல்வது!! குறைந்தது ஒருவராவது நல்லபடி நடக்க share செய்வோம் நான் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒரே ஒரு share ஐ மட்டும் Relaxplzz |
Posted: 16 Jun 2015 06:10 AM PDT காமராஜரின் எளிமையும் நேர்மையும் ********************************************************* கதர் ஆடை அணிந்திருந்ததால் எளிமையான தோற்றம் அவருக்கு இயற்கையிலேயே அமைந்திருந்தது. அவருடைய ஒவ்வொரு செயலிலும் எளிமையைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. உயர் பதவி வகிப்பவர்களுக்கே உரிய நியாயமான குறைந்தபட்ச பந்தாகூட அவரிடம் இல்லாதிருந்தது. ஒவ்வொரு நாள் இரவும் படுக்கப் போவதற்கு முன், தன்னைப் பார்க்க வந்த எல்லாரும் போய்விட்டார்களா என்று வைரவனிடம் கேட்பார். போய்விட்டார்கள் என்று சொன்ன பிறகும், இன்னொரு ரவுண்டு போய் பார்த்து விட்டு வரச் சொல்வார். காரணம் கேட்டதற்கு, சில பேர் வெட்கப்பட்டு, பயப்பட்டு ஒதுங்கி நின்றுவிடுவார்கள். கடைசியில் பார்க்க முடியாமலே ஊர் திரும்பிவிடு வார்கள். ஏழைகளாக இருப்பார்கள். மறுபடியும் வரவேண்டுமெனில், செலவு செய்ய வேண்டும். பாவம், அதனால்தான், என்று பதில் சொன்னார். ராஜஸ்தான் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க விரும்பியபோது அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். ஒருமுறை அவர் காரின்முன் சைரன் ஒலியுடன் போலீஸ் ஜீப் சென்று கொண்டிருந்தது. சைரன் ஒலியை என்ன என்று கேட்டு விசாரித்துவிட்டு, காரை நிறுத்தச் சொன்னார். இனிமேல் செத்துப்போய்விட்டவர்களுக்கு சங்கு ஊதிக்கொண்டு போவது மாதிரி சைரன் ஒலித்துக் கொண்டு முன்னால் செல்ல வேண்டாம் என்றும், அது போன்ற வீண் செலவுகள் செய்ய வேண்டாம் என்றும் சொல்லி, அந்த வழக்கத்தையே நிரந்தரமாக நிறுத்தச் சொன்னார். ஒருமுறை வெளியூர் போய்விட்டு திரும்பும்போது, காரிலேயே தூங்கிக்கொண்டு வந்தவர் ஏதோ சப்தம் கேட்டு விழித்துக்கொண்டார். கார் சைதாப்பேட்டை மர்மலாங் (மறைமலையடிகள்) பாலம் அருகே நின்றுகொண்டிருந்தது. ட்ராபிக் ஜாம். ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும்தான் இருந்தார். வாகனங்களை நெறிப்படுத்தி அனுப்ப தனி ஆளாக நின்று அவர் திணறிக்கொண்டிருந்தார். உடனே காமராஜர் கீழே இறங்கி அவரும் அந்த போலீசோடு சேர்ந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உதவினார். அதோடு நின்று விடாமல் சைதை போலீஸ் நிலையத்துக்கும் போய், அது போன்ற இடங்களில் இன்னொருவரை கூடுதலாகப் போட்டால் என்னன்னேன் என்று கண்டித்துவிட்டும் வந்தார். Relaxplzz |
Posted: 16 Jun 2015 05:10 AM PDT ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்... உங்கள் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு ஒளிந்திருக்கக்கூடும். படியுங்கள்… மீண்டும் மீண்டும் படியுங்கள்… பல வரிகள் மிக மிக ஆழமான பரந்த பொருளை கொண்டவை. சுவாமி விவேகானந்தர் : நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்? ✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பத்தையே நினைத்து கற்பனை செய்துகொண்டிருப்பது உன் வழக்கமாகிவிட்டது. அதனால் உன்னால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை. சுவாமி விவேகானந்தர் : நல்லவர்களுக்கு மட்டும் எப்போதும் துன்பம் ஏன்? ✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : உரசாமல் வைரத்தை பட்டை தீட்டமுடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால் அவர்கள் பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல மாட்டார்கள். (By experience their life becomes better, not bitter!) சுவாமி விவேகானந்தர் : அப்போது, சோதனைகள் நன்மைக்கு என்று சொல்கிறீர்களா? ✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : ஆம். அனுபவத்தை விட பெரிய ஆசிரியர் வேறு யாருமில்லை. அது முதலில் சோதனையை கொடுத்துவிட்டு பிறகு தான் பாடத்தை போதிக்கும். சுவாமி விவேகானந்தர் : கணக்கற்ற பிரச்னைகளில் மூழ்கி தவிப்பதால் நாங்கள் எங்கே போகிறோம் தெரியவில்லை…. ✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : வெளியே பார்த்தால் எங்கே போகிறோம் என்று உனக்கு புரியாது. உனக்குள்ளே பார். புரியும். கண்களால் பார்க்கத் தான் முடியும். ஆனால் உள்ளத்தால் தான் வழியை காட்ட முடியும். (Eyes provide sight. Heart provides the way.) சுவாமி விவேகானந்தர் : சரியான பாதையில் போகும்போதும் தோல்வி அடிக்கடி ஏற்படுகிறதே? ✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : செல்லும் பாதையில் வெற்றி என்பது பிறரால் அளக்கப்படுவது. ஆனால் அதில் கிடைக்கும் திருப்தி என்பது உன்னால் உன்னால் மட்டுமே உணரப்படுவது. சுவாமி விவேகானந்தர் : கடினமான சூழ்நிலைகளில் எப்படி நீங்கள் உற்சாகம் குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்? ✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : எப்பொழுதும், இனி எப்படி போகப்போகிறோம் என்று அச்சப்படுவதைவிட இதுவரை நீ எப்படி வந்திருக்கிறாய், எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறாய் என்று பார். உனக்கு கிடைத்த வரங்களை எண்ணிக்கொள். இழந்தவைகளை அல்ல. சுவாமி விவேகானந்தர் : இந்த மக்களை நினைத்து நீங்கள் வியக்கும் விஷயம் எது? ✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பப்படும்போது "எனக்கு ஏன்? என்னை மட்டும் ஏன்??" என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்த கேள்வியை கேட்பதில்லை. அதை நினைத்து தான் வியக்கிறேன். சுவாமி விவேகானந்தர் : வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை நான் அடைவது எப்படி? ✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள். நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள். எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு. இதுவே வாழ்க்கையில் சிறந்தவைகளை பெற கடைபிடிக்கவேண்டிய நியதி. சுவாமி விவேகானந்தர் : கடைசியாக ஒரே ஒரு கேள்வி. சில நேரங்களில் என்னுடைய பிரார்த்தனைகளை இறைவன் கேட்கவில்லையோ என்று தோன்றுகிறது. ✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை. (There are no unanswered prayers!) அச்சத்தை விடு. நம்பிக்கை கொள். வாழ்க்கை என்பது தீர்வு காணப்படவேண்டிய ஒரு புதிர் தானே தவிர பிரச்னை அல்ல. எப்படி வாழவேண்டும் என்று மட்டும் நாம் அறிந்து கொண்டால் வாழ்க்கை மிக மிக இனிமையாக மாறிவிடும். என்னை நம்பு. , Relaxplzz |
Posted: 16 Jun 2015 05:10 AM PDT இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம். இந்த அம்மாக்கள் தோசைக்கல்லில் நிலவு வார்ப்பவர்கள் ! =================== அப்பா கட்டிய வீடாயிருந்தாலும் அது எமக்கு அம்மா வீடுதான் ! =================== அடுப்படியே அம்மாவின் அலுவலகம் ! அன்பு மட்டுமே எதிர்பார்க்கும் சம்பளம் ! =================== பிள்ளைகள் வெளியூரில் பணியிலிருக்கும் ஒரு வீட்டில், பக்கத்துவீட்டுக் குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் ! =================== அப்பா வாசம் வெயில் வாசம் ! அம்மா வாசம் நிலா வாசம் ! எமது சமையலறையெங்கும் நிலா வாசம் ! =================== எமக்குக் காய்ச்சல் வந்தால் மருந்து தேவையில்லை ! அடிக்கடி வந்து தொட்டுப்பார்க்கும் அம்மாவின் கையே போதுமானது ! =================== இவ்வளவு வயதாகியும் புதுச்சட்டைக்கு மஞ்சள்வைத்து வருபவனைக் கேலி செய்யும் நண்பர்களே .......... அது, அவன் வைத்த மஞ்சள் அல்ல ! அவன், அம்மா வைத்த மஞ்சள் ! =================== பிள்ளைகள் ஊரிலிருந்து கொண்டு வரும் பயணப்பையில் இந்த அம்மாக்கள் எதிர்பார்ப்பது இன்னுங்கொஞ்சம் அழுக்குத்துணிகளை ! =================== மகனுக்கான அப்பாவின் கோபத்திற்கெல்லாம் அம்மாவின் முதுகுதான் கிழக்கு ! =================== டைப்பாய்டு வந்து படுத்த அம்மாவுக்கு சமைக்க முடியவில்லையே என்கிற கவலை ! =================== இங்கே பலரது அகராதியில் வீடு என்கிற சொல்லுக்கு நேரே அம்மா என்று உள்ளது ! =================== புகைவண்டியில் பிதுங்கி வழியும் பெருங்கூட்டத்தில் ஊர் போய்ச்சேர ஒற்றைக்காலில் நின்றுகொண்டு எட்டு மணிநேரம் ஒருவன் பயணிக்க முடிவதன் மூன்றெழுத்துக் காரணம், அம்மா ! =================== அம்மா தாயே என்று முதன் முதலில் பிச்சை கேட்டவன் உளவியல் மேதைகளுக்கெல்லாம் ஆசான் ! =================== எந்தப் பொய் சொல்லியும் அம்மாக்களை ஏமாற்றிவிடமுடியும் சாப்பிட்டு விட்டேன் என்கிற அந்த ஒரு பொய்யைத்தவிர ! =================== அத்தி பூத்தாற்போல அப்பனும் மகனும் பேசிச்சிரித்தால் விழாத தூசிக்கு கண்கள் தேய்த்துக்கொண்டே அப்பால் நகர்கிறார்கள் அம்மாக்கள் ! =================== வெளியூர் செல்லும் பிள்ளைகளின் பயணப்பைக்குள் பிரியங்களைத் திணித்து வைப்பவர்கள் இந்த அம்மாக்கள் ! =================== பீஸ் கட்ட பணமென்றால் பிள்ளைகள் அம்மாவைத்தான் நாடுகின்றன ........ காரணம், எப்படியும் வாங்கிக் கொடுத்துவிடுவாள் ! அல்லது எடுத்துக் கொடுத்துவிட்டு திட்டு வாங்கிக்கொள்வாள் ! =================== வீட்டுக்குள் அப்பாவும் இருந்தாலும் அம்மா என்றுதான் கதவு தட்டுகிறோம் ! =================== அம்மாக்களைப் பற்றி எழுதப்பட்ட எல்லா கவிதைகளிலும் குறைந்தபட்சம் இரண்டு சொட்டுக்கண்ணீர் ஈரம் உலராமல் ! =================== அகில உலக அம்மாக்களின் தேசிய முழக்கம் இதுதான் .......... " எம்புள்ள பசி தாங்காது! " Relaxplzz |
Posted: 16 Jun 2015 05:10 AM PDT ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் டைட்டானிக் கப்பல் விபத்து நடந்து 90 ஆண்டுகள் ஆகிவிட்டது விபத்துக்கு முக்கிய காரணமாக ஏதேதோ சொல்லப்பட்டன ஆனால் மிக மிக முக்கிய காரணத்தை சமீபத்தில் தான் இங்கிலாந்தை சேர்ந்த பீட்டர் மற்றும் டேவிட் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இதை லண்டனை சேர்ந்த முக்கிய செய்தித்தாள்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. இதில் அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால் கப்பல் விபத்து நடந்த 25 கி.மீ.சுற்றளவுக்கு மட்டுமே தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். ஆனால் பீட்டரும், டேவிட்டும் 100 கி.மீ. சுற்றளவுக்கு தேடுதல் வேட்டை நடத்தி கண்ட மிகப் பெரிய அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால் அவர்கள் சரியாக விபத்து நடந்த 98 கி.மீ. தொலைவில் கப்பலின் முக்கிய பாகம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர் அது மட்டும் கப்பலில் இருந்து கழண்டு விழாமல் இருந்து இருந்தால் கப்பல் விபத்தே நடந்து இருக்காது என விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவித்து உள்ளனர். இதில் இதயமே நின்று போகும் உண்மை என்னவென்றால் அந்த பாகம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது அதை சரியாக பொருத்தப்படாதது கப்பல் மெக்கானிக்களின் கவனிப்பின்மையை வெளிப்படுத்தி உள்ளது.. இதை உலக நாடுகள் புரிந்து கொண்டு சரியான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் அது மட்டுமில்லாமல் எந்தவொரு பாகத்தையும் இனி கவனக்குறைவாக பொருத்தக்கூடாது எனவும் கடும் சட்டம் பிறப்பிக்க வேண்டும் கண்டெடுக்கப்பட்ட பாகம் இங்கிலாந்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு டைட்டானிக் கப்பலின் பொருத்தப்பட்ட அந்த முக்கிய பாகம் , , , , , , , , , . . . . . . . . . . . , கறுப்பு கலர் திருஷ்டி கயிறும்,எலுமிச்சம் பழமும்தான் ..பாஸ்.. :P :P மெக்கானிக் திருஷ்டிகயிறை ஒழுங்கா கட்டியிருந்தா விபத்தே நடந்திருக்காது இனிமேலாச்சும் கப்பல் கிளம்பறப்ப திருஷ்டி கயிறு, எலுமிச்சம் பழம் எல்லாம் கரெக்டா கட்டணுமுன்னு உலக நாடுகள் உத்தரவிடவேண்டும் #அடப்பாவி உள்ளுக்குள்ள 750 Spare Parts இருக்குடா அதில ஓடாததாடா இதுல ஓடப்போகுது :P :P Relaxplzz |
Posted: 16 Jun 2015 04:10 AM PDT உடம்பு இளைக்க இஞ்சி சாறு இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும். இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும். பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும். Relaxplzz |
Posted: 16 Jun 2015 04:10 AM PDT ஞாபக சக்தி அதிகரிக்க ! ஞாபக சக்தி பெருக தினமும் பப்பாளி, மாதுளம்பழம் சாப்பிடுவது நல்லது. வெந்நீரில் தேனைக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் மறந்து போகுதல் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும். பீர்க்கங்காய் வேரை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மூளை பலம் பெறும். ஞாபக சக்தி அதிகரிக்கும். பசலைக்கீரை சாப்பிட நினைவாற்றல் அதிகரிக்கும். பாதாம் பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி இலை ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி கூடும். செம்பருத்திப் பூவில் உள்ள மகரந்தக் காம்பை நீக்கிவிட்டு சாப்பிட ஞாபக சக்தி அதிகரிக்கும். முளைக்கீரையுடன் வல்லாரைக் கீரை சேர்த்து பருப்புடன் சாப்பிட நினைவாற்றல் அதிகரிக்கும். துளசி இலையை தினசரி சாப்பிட ஞாபக சக்தி அதிகரிக்கும். தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் ஞாபகசக்தி பெருகும். Relaxplzz |
Posted: 16 Jun 2015 12:10 AM PDT 21 - 25 வயது பெண்களுக்கு மிகவும் கடினமான வயது...!! (திருமணத்திற்கு முன்) 1) காத்திருக்க சொல்லும் காதலனின் முகம் பார்ப்பதா இல்லை, கை காட்டுபவனுக்கு கழுத்தை நீட்டச் சொல்லும் தந்தையின் சொல் கேட்பதா என்ற மனப் போராட்டத்தில் இருப்பீர்கள். 2) வேலை தேடி அலையும் போதும் , பெண்களெல்லாம் கல்யாண பத்திரிக்கையில் போட்டுக்கொள்ளத் தானே பட்டம் வாங்குனீர்கள் என்று நகைக்கும் ஆண்களையும் ஒற்றைப் புன்னகைச் சிந்தி கடந்து செல்வீர்கள். 3) மல்லிகை பூவையும் , கண்ணாடி வளையலையும் , சுடிதாரையுமே அதிகம் விரும்பினாலும் , வேலைக்கென ஒரு வேடம் போட்டுக் கொள்வீர்கள். 4) பேசாவிட்டால் உம்மனாமூஞ்சி என்று பெயர் எடுப்பீர்கள். கொஞ்சம் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிட்டாலும் படித்த திமிர் என்ற பட்டம் வாங்குவீர்கள். 5) சமையலறை பக்கம் கூட சென்று இருக்கமாட்டீர்கள். இப்போது மெல்ல மெல்ல எல்லாம் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருப்பீர்கள். 6) முகப் பருக்களை கிள்ளுவதையே பகுதி நேர வேலையாக வைத்திருப்பீர்கள். 7) ஊரைப் பிரிந்து ஏதோ ஒரு பெண்கள் விடுதியில், ஆயிரம் பெண்கள் சூழ்ந்திருக்கையிலும் தனிமையில் இருப்பதாய் உணர்வீர்கள். 8)அடிக்கடி ச்சே ஊரா இது, எங்க ஊரெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா? என்ற வசனத்தை யாரிடமாவது சொல்லிக் கொண்டே இருப்பீர்கள். 9) சொந்தங்கள் சேர்ந்த சுப நிகழ்ச்சுகளில் , மாமாக்கள் எல்லாம் கல்யாணம் எப்பன்னு கேட்டா , அத்தைமார்கலெல்லாம் எத்தனை பௌன் சேர்த்து வச்சுருக்கிங்கன்னு ? கேட்பார்கள். 10) அம்மாவையும் , அப்பாவையும் உங்கள் இரு சக்கரவண்டியில் ஏற்றிச் செல்ல ஆரம்பித்திருப்பீர்கள். 11) புதிதாய் செல்லும் இடங்களில் மனதில் இருக்கும் பயம் கண்களில் தெரியக்கூடாது என்பதில் மிகவும் கவனமாய் இருப்பீர்கள்.ஒரு ஆணைப் போல் நடந்துக் கொள்ள முடிந்த அளவு முயற்சி செய்வீர்கள். 12) வெளியில் சென்று வீடு திரும்பியதும், பேருந்தில் இடிபட்டதையும் , மொபைல் நம்பர் கேட்டு பின்னால் வந்த ஆணை பற்றியும் வீட்டில் மூச்சு விடமாட்டீர்கள். தேவையற்ற பயத்தை அவர்களுக்கு தரவேண்டாம் என எண்ணுவீர்கள். 13) உங்களுக்கென ஒரு கனவு உண்டா? என்பதை சுற்றி இருக்கும் யாரேனும் கேட்கமாட்டார்களா என ஏங்குவீர்கள். 14) எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலும் , நம்பிக்கையும் நிறைந்து இருக்கும். வாய்ப்புகள் வந்தாலும் பெண் என்பதால் வந்த வாய்ப்பு என்றுச் சொல்ல வாய்கள் அதிகம் காத்திருக்கும். 15) எத்தனை சோகம் கண்ட போதிலும் , பெண்ணாய் பிறந்ததற்காக பெருமை கொள்வீர்கள். 16) அப்பா அதட்டி ஒரு சொல் சொல்லிவிட்டால் கலங்கிடும் கண்கள் , அலுவலகத்தில் யார் முன்போ திட்டு வாங்கி விட்டால் கூட கொஞ்சமும் கலங்காது. அழுதால் அதற்கும் இந்த உலகம் நீலிக்கண்ணீர் என்றொரு பெயர் வைக்கும் என்பதை புரிந்திருப்பீர்கள். எத்தனை பெண்களுக்கு பொருந்தும் பதிவு எனத் தெரியாது. யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்தருளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் மங்கையர்களே..! அவ்வ்வ்வ் Relaxplzz |
Posted: 15 Jun 2015 11:10 PM PDT " அண்ணே! காா்ல எங்கே கிளம்பிட்டீங்க"...? "புதுக்கடை" வரைக்கும் போகணும் தம்பி"!.. " போற வழில எனனை கொஞ்சம் 'மாா்த்தாண்டம்' பக்கத்தில ட்ராப் பண்றீங்களா"?.. " வாங்க அதனால என்ன, வந்து உட்காருங்க"!.. " அண்ணே, என்ன விஷயமா போறீங்க"? " அதுவா, என் நண்பன் ஒருத்தனுக்கு பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்காங்க... மேரேஜ் லைஃப் எப்படி இருக்குமுன்னு என் அனுபவததை வெச்சு 9 தமிழ் பட சிடி மூலமா குறிப்பால உணா்த்தப் போறேன்"!. " என்னண்ணே செல்றீங்க!... படத்திற்கும், வாழ்க்கைக்கும் என்னண்ணே சம்பந்தம்"?.. " இப்ப பொண்ணு பார்த்துக்கிட்டு இரூக்காங்க.. "அவள் வருவாளா?", நிச்சயதாா்த்தம் முடிஞ்சதும் "தேவதையை கண்டேன்", கல்யாணம் வரைக்கும் "என் சுவாசக் காற்றே", கல்யாணம் முடிஞ்சதும் "லட்சுமி வந்தாச்சு", திருமணத்திற்கு பிறகு "வரவு எட்டணா செலவு பத்தணா", ஒரு வருஷத்திற்கு பிறகு "பொண்டாட்டி சொன்னா கே்ட்டுக்கணும்", எல்லாமே நம் கை விட்டு போனதும் "எல்லாம் அவன் செயல்", வெளியே ஏதும் நடக்காதது போல கெத்தா திரியறப்போ "வீட்ல எலி வெளில புலி"... அப்பறம் கடைசி வரைக்கும் ஒரே சிடிலதான் வாழ்க்கை ஓடும்! " பிரமாதமுண்ணே...! அது என்னண்ணே கடைசி சிடி"?.. "பேய் வீடு".... :P :P சிரிக்க மட்டும் @ Relaxplzz |
Posted: 15 Jun 2015 11:10 PM PDT அமெரிக்காவில் ஒரு இந்திய டாக்டர் ஒரு மருத்துவமனையை துவக்கினார். கஸ்டமர்களை கவர்ந்திழுக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.அதில் நோயாளிக்கு நோய் குணமானால் ரூ 300 வசூல் செய்யப்படும்.நோய் தீரவில்லை என்றால் ரூ.1000 தரப்படும் என அறிவித்தார். இவரை எப்படியாவது கவிழ்க்க திட்டமிட்ட ஒரு அமெரிக்கர் இந்திய டாக்டரை அணுகினார். அமெரிக்கர் : 'சார்... எனது நாக்கால் சுவையை அறிய முடியவில்லை என்றார். உடனே டாக்டர் : 'ஏம்மா நர்ஸ்....அந்ந 22ம் நம்பர் பாட்டிலை எடுத்து, இவர் வாயில் ஊத்து' என்றார். நர்ஸ் அந்த பாட்டிலில் இருந்து மருந்தை அமெரிக்கரின் வாயில் ஊற்றினார்.உடனே பதறிய அமெரிக்கர், 'அய்யய்யோ.....இது உப்பு கரைசலாச்சே' என்றார். டாக்டர் : 'அப்படினா உங்க நாக்கு சுவையை உணர்கிறது. மேட்டர் ஓகே. எடுங்க ரூ.300 ஐ' என்றார். ஏமாந்துட்டோமோ என்ற கோபத்தில் விட்டதை பிடிக்க , 2 வாரம் கழித்து மீண்டும் டாக்டரிடம் வந்தார் அமெரிக்கர். அமெரிக்கர் : 'எனக்கு ஞாபக மறதி அதிகமாயிருச்சு . இதை சரி செய்யுங்க டாக்டர்'. டாக்டர் : நர்ஸ்.... அந்த 22 ம் நம்பர் பாட்டிலை எடுங்க. அமெரிக்கர் (பதறிப்போய்) : டாக்டர் அது உப்பு கரைசல் என்றார். டாக்டர் : அப்போ உங்களுக்கு ஞாபகம் அதிகமாயிருக்கிறது,ரூ.300ஐ வச்சுட்டு கிளம்புங்க என்றார். அமெரிக்கர்: இந்தியர்களை எப்பொழுதுமே ஏமாற்ற முடியாது என்று புலம்பிக்கொண்டேசென்றுவிட்டார். Relaxplzz |
Posted: 15 Jun 2015 08:15 PM PDT காட்டிலிருந்து புலி ஒன்று வழி தவறி ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் ரெஸ்ட் ரூம்புக்குள் நுழைந்துவிட்டது. பதட்டத்துடன் இருந்த அந்த புலி டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு பசி எடுத்தது. நான்காவது நாள் பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூம்புக்குள் தனியாக வந்த ஒருவரை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் காணாமல் போனது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது, யாருமே கண்டு கொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி. அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர். அவரையும் யாரும் தேடவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப் பட்டவர்கள்தான் அதிகம்! ). இதனால் குளிர்விட்டுப் போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது. அடுத்த நாள் வழக்கம்போல் ஒரு நபரை அடித்துக் கொன்றது. அவர் அந்த அலுவலகத்தின் பியூன். அலுவலக ஊழியர்களுக்கு காபி வாங்குவதற்காக பிளாஸ்கை கழுவ ரெஸ்ட் ரூம்புக்கு வந்திருக்கிறார். சிறிது நேரத்தில் காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லையே என்று மொத்த அலுவலகமும் சல்லடை போட்டு தேடியது. ⏰ நெடுநேர தேடுதலுக்குப் பின் ரெஸ்ட் ரூம்பில் உயிரிழந்து கிடந்த. பியூனையும், அந்த ஆட்கொல்லி புலியையும் கண்டுபிடிக்கிறார்கள். புலி பிடிபடுகிறது பாடம் : உங்கள் மீதான மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ, வசதி வாய்ப்போ அல்ல. நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. Relaxplzz |
Posted: 15 Jun 2015 07:50 PM PDT |
Posted: 15 Jun 2015 06:45 PM PDT இன்று(16-06-2013) அகிலவுலக தந்தையர் தினமாகும். மேலைநாடுகளில் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்ற இந்நாள்பற்றி நமக்கு பெரிதாக ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அல்லது ஊடகங்களின் வாயிலாக கொஞ்சமாய் தெரிந்துவைத்திருப்போம். நண்பர்களுக்காக.. அன்னையர்களுக்காக.. காதலர்களுக்காக.. என்று எல்லாவற்றிற்கும் ஒரு நாள் இருக்கையில், நம்மை விதைத்த தந்தையர்களுக்காகவென்று ஒருநாள் இருக்கக்கூடாதா..? வாருங்கள்.. தந்தையர்நாளை கொண்டாடும்முன் அந்நாள்பற்றிய வரலாறை தெரிந்துகொள்ளலாம். இணையத்தில் கிடைத்தனவற்றை சிறிய அளவில் தொகுத்துள்ளேன். படித்துவிட்டு இந்நாளை கொண்டாடுங்கள். William Jackson Smartஎன்றொரு மனிதர். 1842ஆம் ஆண்டு ஜூன்மாதம் ஐந்தாம்நாளில் பிறந்த இவர், அமெரிக்க காவற்படையில் பணிபுரிந்தார். இவரின் மனைவி Ellen Victoria Cheek Smart. இவர்களுக்கு ஆறு குழந்தைகள். முதற்குழந்தைமட்டும் பெண்குழந்தை. அவரின் பெயர் Sonora Smart Dodd. ஆறாவது குழந்தையை பெற்றெடுக்கும்போது இறந்துபோகிறார் Ellen Victoria. அப்போது Sonoraவிற்கு பதினாறு வயது. அமெரிக்காவிலோ உள்நாட்டுப்போர். காவற்படையிலிருந்த Williamsக்கோ பெருஞ்சுமையான பணிச்சூழல். இந்நிலையில் மனைவியின் இறப்புவேறு. ஆனால் இதற்கெல்லாம் துவண்டுபோகவில்லை Williams. மறுமணஞ்செய்துகொள்ளாமலேயே தனியாகவே தன் ஆறுகுழந்தைகளையும் கூடவே உள்நாட்டுப்போரின் விளைவால் பெற்றோரை இழந்த வாய்பேசவியலாத குழந்தையான Marshellஐயும் அரும்பாடுபட்டு வளர்க்கிறார் அவர். இதையெல்லாம் கூடவே நின்று பார்த்து மனம் நெகழ்கிறார் அவரின் மகளான Sonora. அப்பாவிற்காக ஏதாவது செய்யவேண்டுமென்று அவரின் பாசவுள்ளம் துடிக்கிறது. அப்போது அமெரிக்காவில் "அன்னையார்நாள்" பெரிதாகக்கொண்டாடப்பட்டிருந்த காலம். அதேபோன்று அப்பாக்களுக்காகவும் ஒருநாளை கொண்டாடினாலென்னவென்று Sonoraவின் மனதுள் கேள்வியெழுகிறது. இதற்காக அங்கேயிருந்த உள்ளாட்சியமைப்புகளின் வாயிலாக தேவாலயத்தில் அருட்தந்தையாக இருந்தவரிடம் தன் தந்தையின் பிறந்தநாளான ஜூன் ஐந்தாம்நாளை தந்தையர்களுக்கான நாளாக அறிவிக்கவேண்டுமென வேண்டுகோள்விடுக்கிறார். அங்கேயிருந்தவர்கள் அனைவருக்குமே Williamsன் நன்மனது புரிந்தமையால் எல்லோரும் ஒப்புதலளிக்கின்றனர். இருந்தபோதிலும் உடனடியாக அறிவிக்கமுடியாதெனவும் மேற்சபையின் ஒப்புதலை பெற்றபின்னர் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் அதுபற்றி அறிவிக்கிறேனென்கிறார். அதன்படி 1910-ஜூன்-19ஆம் நாளை தந்தையர் நாளாக அறிவிக்கிறார் அருட்தந்தை. இது, அந்த பகுதியில் மட்டுமே கொண்டாடப்பட்டது. ஆனால் என்ன காரணத்தாலோ தந்தையர்நாளின் கொண்டாட்டங்கள் இல்லாமற்போகின்றன. இதற்கிடையே, Williams 1919ஆம் ஆண்டில் இறந்துபோகிறார். இறக்கும்வரையிலும் தம் குழந்தைகளுக்காகவே வாழ்ந்து அவரின் குழந்தையையும் போரினால் அனாதையாக்கப்பட்ட குழந்தையையும் நன்றாய் வளர்த்த அவரின் மறைவு, Sonoraஐ துன்பத்திலாழ்த்துகிறது. இதற்கிடையே தந்தையர்நாள் கொண்டாடப்படுவதும் நின்றுபோனதால் என்னசெய்வதென்றே தெரியவில்லை Sonoraவிற்கு. இருந்தபோதிலும் மனந்தளராமல் அரசாங்கத்திடம் போராடி, தந்தையர்நாளை அரசாங்கமே அறிவிக்கச்செய்கிறார். எப்போது தெரியுமா? 1972ஆம் ஆண்டில்தான் அறிவிக்கிறார்கள்.. அமெரிக்க அரசாங்த்தின் அதிபர் Nixonதான் இதை அறிவிக்கிறார். அதன்பிறகு ஒவ்வோராண்டும், ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர்நாளாக கொண்டாடுகின்றனர் மேலைநாட்டினர். நம் பண்பாட்டிற்கொவ்வாத மேலைநாட்டின் பல பண்பாடுகளை நம் பண்பாட்டிலும் உட்புகுத்திக்கொண்ட நாம், இதுபோன்ற நல்லனவற்றையும் எடுத்துக்கொண்டால் நன்றாயிருக்குமே..! அமெரிக்காவில் எங்கோ பிறந்த Williamsக்காக நாம் இந்த நாளை கொண்டாடவேண்டாம். அந்நாளின் பெருமையை அடியொற்றி, நமக்காகவே வாழ்ந்து நமக்காக வெயிலென்றும் மழையென்றும் பாராமல் உழைத்துவுழைத்து ஓடாகிப்போன நம் அப்பாவின் மனதிற்காகவும்; நாம் பிறப்பதற்காக நம்மை தன் வயிற்றில் பத்துமாதம் சுமந்தவர் நம் தாயென்றாலும், நாம் வளர்வதற்காக ஆண்டுதோறும் தன் முதுகில் மூட்டைச்சுமப்பவர் நம் தந்தையென்பதால், அவரின் பாசத்திற்கு நன்றிநவிலும்பொருட்டும் இந்நாளை நாம் கொண்டாடலாமே..? சரி. இந்நாளை எப்படிக்கொண்டாடலாம்? அப்பாவிற்கு வாழ்த்துசொல்லலாமா? சொல்லலாம் சொல்லாமலுமிருக்கலாம். அதைவிட, அப்பாவின் காலில்விழுந்து ஆசிபெறலாம். (அப்படியே அம்மாவிடமும்) அப்பாவிற்கு பிடித்தவுணவுகளை வீட்டில் சமைக்கச்சொல்லலாம். அப்பாவை இழந்தவர்கள் அப்பாவிடம் இன்று சிறப்பு வழிபாடுநடத்தலாம். இல்லையெனில் அப்பாவின் நினைவுகளில் கொஞ்சம் மூழ்கிப்போகலாம். எல்லாமே நம் மனதில்தானுள்ளது. இந்நாளில், என் நண்பர்களின் தந்தையர்களுக்கும் தந்தையர்களாக உள்ள என் நண்பர்களுக்கும் என் மனங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். முத்தாய்ப்பாக, என் பழைய குறுங்கவிதையொன்றுடன் முடிக்கிறேன். ஆயிரமாயிரம் சாட்சியங்களிருந்தும் இன்னும் ஆவணப்படுத்தப்படாமலேயே உள்ளது...! தாயன்பிற்கு நிகரான தந்தையர்தம் பெருமை. - ஃபீனிக்ஸ் பாலா Relaxplzz ![]() |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment