Monday, 15 June 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வ...

Posted: 15 Jun 2015 09:30 AM PDT

சென்னை மற்றும் சுற்றுவட்டார
பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு,
பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ITI முடித்த மாணவ
மாணவியர் கவணத்திற்கு...

சென்னையில் உள்ள இரயில்வே இனைப்பு
பெட்டி தொழிற்சாலையில் (ICF ACT APPRENTICE) ஆக்ட்
அப்பர்டீஷ் தொழில் பழகுனர் பயிற்சிக்கு விண்ணப்ப
படிவம் தற்பொழுது வழங்க பட்டுவருகிறது. பயிற்சியின் பொழுது ஒவ்வொரு மாதமும் 5500ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்க படுகிறது
விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு
கொள்ளுங்கள் , நம் தமிழக
மாணவர்களுக்கு இது சம்பந்தமான
விழிப்புர்ணர்வை ஏற்படுத்த
உதவுங்கள் , வடமாநிலத்தை சேர்ந்த
மாணவர்களுக்கு இதனை பற்றிய
விழிப்புர்ணர்வு அதிகம், அதன்
காரணமாகதான் கடந்த 5
வருடங்களுக்கு மேலாக முழுவதும்
வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள்
மட்டுமே நம் மாநிலத்துக்கு உரிய
இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்து
பலன் பெற்று வருகிறார்கள் .
இதனை தங்களால் முடிந்த அளவுக்கு
நண்பர்கள் மத்தியில் ஷேர் செய்யவும் ரயில்வே வேலைவாய்ப்பு பற்றிய
விழிப்புர்ணர்வு தமிழக
மாணவர்களிடத்தில் ஏற்படுத்த உதவுங்கள் . விண்ணப்பங்கள் கொடுக்க வேண்டிய கடைசி தேதி 04-07-2015...

அழகிய ஈழம்!! திருகோணமலை...

Posted: 15 Jun 2015 03:28 AM PDT

அழகிய ஈழம்!! திருகோணமலை...


துபாயில் வாகன ஓட்டுநர் உரிமம் பெற இனி தமிழில் தேர்வு எழுதலாம் - துபாய் அரசின் சா...

Posted: 15 Jun 2015 01:11 AM PDT

துபாயில் வாகன ஓட்டுநர் உரிமம் பெற இனி தமிழில் தேர்வு எழுதலாம் - துபாய் அரசின் சாலை மற்றும் போக்குவரத்து துறை அறிவிப்பு.

துபாயில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு நடத்தப்படும் தேர்வில், தமிழ் உள்பட 4 இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. துபாயில் டிரைவிங் லைசென்ஸ் பெற விரும்புவோர், முதலில் 30 நிமிடம் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த தேர்வு கணினி மூலமாக நடத்தப்படும். இந்த தேர்வை, துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து கழகம் (RTA) நடத்தி வருகிறது. இதனை, ஆங்கிலம், உருது, அரபி ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே எழுத முடியும். இதனால், இந்தியாவை சேர்ந்த பலர், லைசென்ஸ் பெற வேண்டுமானால், பல முறை முயற்சி செய்ய வேண்டி இருந்தது.

இந்த நிலையில், புதிதாக 7 மொழிகளை சேர்க்க RTA முடிவு செய்துள்ளது. இதன்படி, வரும் செப்டம்பர் மாதம் முதல், தமிழ், இந்தி, மலையாளம், பெங்காலி, சைனீஸ், ரஷியன், பெர்சியன் ஆகிய 7 மொழிகள் சேர்க்கப்படும். துபாய் அரசின் இந்த நடவடிக்கையால், மிக எளிதாக இந்தியர்கள் துபாய் டிரைவிங் லைெசன்சை பெற்று விடுவார்கள்.

@நம்பிக்கை ராஜ்


பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ்சில் இருந்தும் வரும் லட்சக்கணக்கான இந்து...

Posted: 15 Jun 2015 12:55 AM PDT

பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ்சில் இருந்தும் வரும் லட்சக்கணக்கான இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமையும், நீண்ட கால விசாவும் மோடி தலைமையிலான பாஜக பதவிக்கு வந்த ஒரு ஆண்டுக்குள் வழங்கப்பட்டுள்ளன..

"இந்தியா இந்துக்களின் இயற்கையான வீடு, இந்நாட்டிற்கு வரும் அனைத்து இந்து அகதிகளும் இன்முகத்துடன் வரவேற்கப்படுவார்கள்," என்று மோடி
சொல்கிறார்...

அப்படியென்றால் ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக
தமிழகத்தில் அகதிகளாக வாழும் 2 லட்சம் ஈழத் தமிழர்களும் இந்துக்கள் இல்லையா?.. தங்களை இந்துக்களாக நம்பும் தமிழர்கள், தமிழகத்தில் மோடியையும் பாஜக வையும் ஆதரிக்கும், அவர்களுக்காக இங்கு வேலை செய்யும் தமிழ் நண்பர்கள் உங்கள் பாஜக தலைமையிடம் கேளுங்கள்.. ஏன்
தமிழர்கள் மட்டும் இந்துக்களாக பார்க்கபடுவதிலை?, தமிழ் மீனவர்கள் இந்திய
மீனவர்களாக பார்க்கபடுவதில்லை என்று...

அப்புறம் என்ன மயித்துக்கு தமிழ் மண்ணில் இந்துக்களாக இணைய சொல்லி பாஜக,
RSS, இந்து முன்னணியாக இங்கு செயல்படுகிறீர்கள் என்றாவது கேளுங்கள்


0 comments:

Post a Comment