Monday, 8 June 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


கொலை பசியிலும் உறவினர் வீட்டில் சாப்பிட மறுப்பது! என்றோ ஒரு நாள் பட்ட அவமானமாக க...

Posted: 08 Jun 2015 09:45 PM PDT

கொலை பசியிலும்
உறவினர் வீட்டில் சாப்பிட
மறுப்பது! என்றோ ஒரு
நாள் பட்ட அவமானமாக
கூட இருக்கலாம்.!!

@காளிமுத்து

நாம் எதிலும் தோற்பதே இல்லை, "ஒன்று வெற்றி கொள்கிறோம் இல்லையேல் கற்றுகொள்கிறோம்.....

Posted: 08 Jun 2015 09:43 PM PDT

நாம் எதிலும் தோற்பதே
இல்லை,
"ஒன்று வெற்றி
கொள்கிறோம்
இல்லையேல்
கற்றுகொள்கிறோம்......"


ஓட்டல்ல எவனெவனோ சாப்ட்ட ஸ்பூன்ல சாப்பிட்டா நாகரீகமாம், அதே நாம சொந்த கையால சாப்ப...

Posted: 08 Jun 2015 09:39 PM PDT

ஓட்டல்ல எவனெவனோ
சாப்ட்ட ஸ்பூன்ல
சாப்பிட்டா நாகரீகமாம்,
அதே நாம சொந்த
கையால சாப்பிட்டா
மேலயும் கீழயும்
பாக்குறானுங்க இந்த
நவநாகரீக கோமாளிகள்...

@காளிமுத்து

2 பேட்டரி வாங்கி கொடுத்தார் என 19 வயதில் அழைத்துசென்றார்கள். 24 ஆண்டுகள் கொடுஞ்...

Posted: 08 Jun 2015 09:23 PM PDT

2 பேட்டரி வாங்கி கொடுத்தார் என 19 வயதில்
அழைத்துசென்றார்கள்.

24 ஆண்டுகள்
கொடுஞ்சிறை.
15 ஆண்டுகள் தூக்கின்
நிழலில் மரண வேதனை
43 வயதாகிறது இப்போது.

மனசாட்சி இல்லாத
சமூகம் இது.


தமிழ்நாட்டில் இருந்து 89,000 கோடியை (2013-2014) வரியாக மத்திய அரசு ஆண்டு தோரும்...

Posted: 08 Jun 2015 11:24 AM PDT

தமிழ்நாட்டில் இருந்து
89,000 கோடியை
(2013-2014) வரியாக
மத்திய அரசு ஆண்டு
தோரும்
வசூலிக்கிறது.

தமிழ்நாட்டின்
வளர்ச்சிக்கு வெறும்
26,000 கோடியை
மட்டுமே
ஒதுக்குகிறது...

2200 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவில் சிறந்து விளங்கிய தமிழர்கள். மீன் சின்னத்து...

Posted: 08 Jun 2015 11:19 AM PDT

2200 ஆண்டுகளுக்கு
முன்பே எழுத்தறிவில்
சிறந்து விளங்கிய
தமிழர்கள். மீன்
சின்னத்துடன்
'பெருவழுதி' என்று பெயர்
பொறிக்கப்பட்ட சங்க கால
மோதிரம் கண்டுபிடிப்பு !
தமிழர்களுக்கு அறிவு
இல்லை, வரலாறு
இல்லை, தமிழ் மொழி
காட்டுமிராண்டி மொழி
என்று தமிழையும்
தமிழர்களையும் இழிவு
படுத்தும் ஆரிய
திராவிடர்களே, இந்த
செய்தியை பாருங்கள் !
இந்திய கண்டத்திலேயே
முதன் முதலில்
எழுத்துக்களுடன் நாணயம்
வெளியிட்டது தமிழர்கள்
தான் என்று பல்வேறு
சான்றுகள்
கிடைத்துள்ளது.
இப்போது தமிழர்கள்
வெளிநாட்டில் இருந்து
வெள்ளியை இறக்குமதி
செய்து அதில் மோதிரம்
முதலான அணிகலன்களை
செய்துள்ளனர் என்பது
தெரியவந்துள்ளது .
புறநானூற்றில்
குறிப்பிடப்பட்ட பாண்டிய
மன்னன் பெருவழுதியின்
மீன் சின்னத்தையும் ,
பெயரையும் தமிழி
எழுத்துருவில்
பொறித்து கிமு
இரண்டாம் நூற்றாண்டில்
மோதிரம்
உருவாகியுள்ளனர்
தமிழர்கள். இந்த
மோதிரத்தை தமிழ்
வணிகர் ஒருவர்
வைத்திருந்தார். இவரிடம்
இருந்து மலையாள தொல்
பொருள் ஆய்வாளர் பீனா
என்பவர் வாங்கி இதில்
உள்ள செய்தியை
வெளிக்கொண்டு
வந்துள்ளார். இவருக்கு நம்
பாராட்டுகள்.
இந்திய தொல்லியல்
துறையிடம் இருந்து
தமிழக தொல்லியல்
துறை இந்த அரிய
கண்டுபிடிப்பை வாங்க
வேண்டும். இப்படியான
தமிழர் வரலாறு கூறும்
தொல்லியல் பொருட்களை
தமிழக அரசு
அருங்காட்சியத்தில்
வைத்து பாதுகாத்து
வரும் தமிழ்
தலைமுறைக்கு காட்ட
வேண்டும்.


கல்வித்துறையில் உடனடியாக செய்ய வேண்டிய முதல் விசயம் இதுதான். கிறிஸ்தவ, இஸ்லாமிய...

Posted: 08 Jun 2015 05:34 AM PDT

கல்வித்துறையில் உடனடியாக செய்ய வேண்டிய முதல் விசயம் இதுதான்.

கிறிஸ்தவ, இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள், மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயாக்கள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து வகை உயர்கல்வி நிறுவனங்களிலும் இறை வழிபாடுகள், மதப்பிரச்சாரங்கள், ஆன்மீக வகுப்புகள் இவை அனைத்தையும் முற்றிலும் தடைசெய்துவிட்டு, கல்வியை மட்டும் கற்றுக் கொடுப்பதே சிறந்த கல்வியியல் அணுகுமுறை.

எல்லாவகை மத வழிபாடுகளையும் உங்கள் பிரார்த்தனைக் கூடங்களிலும் உங்கள் வீட்டு பூஜை அறைகளோடும் நிறுத்திக் கொள்வதே இந்தியாவிற்கும் அதன் எதிர்காலத்திற்கும் நல்லது.

.
- Nelson Xavier

யார் சொன்னா??ஆண்கள் மட்டும் தான் வரதட்சணை எதிர் பாக்குறாங்கனு?? பெண்களும் தான் எ...

Posted: 08 Jun 2015 05:34 AM PDT

யார் சொன்னா??ஆண்கள் மட்டும் தான்
வரதட்சணை எதிர் பாக்குறாங்கனு??
பெண்களும் தான் எதிர் பாக்குறாங்க!!!!
1. கார் வைத்து இருக்க வேண்டும்,
2. சொந்த வீடு இருக்க வேண்டும்,
கை நிறைய சம்பாதிக்க வேண்டும்(சாப்ட்வேர்/
பாரீன் மாப்பிளை யாக இருக்கனும் உள்ளூர்
பயல்க எல்லாம் ஆண்கள் இல்லையோ?),
3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்க
வேண்டும்,
4. முக்கியமா திருமணதிற்கு பின் தனி
குடுத்தனம் போக தயாராக இருக்க வேண்டும்,
5. அக்கா தங்கை இருக்க கூடாது,
6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச
வேண்டும்
7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும்
பணிவும் இருக்க வேண்டும் (ஆனால் அதை
உங்களிடம் எதிர்பார்க்க கூடாது!)
8. பிஸியாக இருக்கனும் ஆனாலும்
உங்களுக்காக நேரம் ஒதுக்கணும்,
9. பிட்டாக இருக்க வேண்டும்,
10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க
வேண்டும் (மாமியார் வீடு மட்டும் மிக
தூரத்தில் இருக்க வேண்டும்),
இதை அனைத்தையும் எதிர்பார்க்கும் நீங்கள்,
இதுவும் ஒரு வித வரதட்சணை என்று
புரியவில்லையா?
மொத்தத்தில் எ டி எம் போன்ற மெசினுடன்
வசதியான வாழ்க்கைக்கு நீங்கள் தரும் லட்சம்
தான் இந்த வரதட்சணை.
காஸ்டிலியான மாப்பிள்ளை வேண்டும்
என்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும்
குடுக்க தயாராக இருக்கும் நீங்கலும் வட்டிக்கு
விட்டு சம்பாதிக்கும் சேட்டும் ஒன்று தான்.
இனியும் வரதட்சணைக்கு ஆண்கள் மட்டும்
தான் காரணம் என்று புலம்புவதை
நிறுத்துங்கள். தன்னால் விடியும்.....

@ரமேஷ் சிவகாசி

0 comments:

Post a Comment