Relax Please: FB page daily Posts |
Posted: 08 Jun 2015 07:10 AM PDT புற்று நோயையும் குணப்படுத்தும் அதிக சத்துக்கள் நிறைந்த கோதுமைப்புல் சாறு -- தயாரிக்கும் முறைகள் கோதுமைப் புல்லில் எல்லா தாதுப் பொருள்களும் இருக்கின்றதாம். இதிலிருக்கும் மக்னீசியம் ஏறத்தால செரிமானத்திற்கு உதவும் 30 என்சைம்களை உசுப்பி விடுகிறதாம் இதிலிருக்கும் வைட்டமின்கள் ஈ , ஏ , சி செல்கள் கிழடு தட்டிபோவதை தடுக்கிறதாம் . இதிலிருக்கும் குளோரொஃபில்லில் இருக்கும் உயிறுள்ள என்சைம்கள் உடலில் புற்று நோய் செல்களை அழிக்க வல்லவையாம் இதிலுள்ள வைட்டமின் E இருதயம் ரத்தக் குழாய்கள் ஆகியவற்றிற்கு மிக நன்மை உண்டாக்கும் இதில் உள்ள வைட்டமின் B17 (laetriel) புற்று நோயைக்குணப்படுத்தும் ஒரே வைட்டமினாம். ஏறத்தால 23 கிலோ பச்சைக் காய்கறிகளில் கிடைக்கக் கூடிய சத்துக்களை ஒரு கிலோ கோதுமைப் புல்லில் பெற்று விடலாமாம் சரி இப்பிடி முக்கியத்துவம் வாய்ந்த கோதுமைப் புல்லை எப்பிடி நாம் பெறுவது, இதனை நாமே வளர்க்கலாம் கோதுமைப் புல் வளர்ப்பு மற்றும் உபயோகம் தேவையானவை செடிகளை நடும் தொட்டி 7 நாள் ஒன்றுக்கு 100 கிராம் வீதம் 7 நாளைக்கு தேவையான நல்ல கோதுமை 700 கிராம் + பொறுமை தொட்டியானது ஒரு சதுர அடித்தொட்டி 3 அங்குலம் ஆழம் உடையதாய் ஒருந்தால் போதும், இந்த ஏழு தொட்டிகளில் முக்கால் பங்கு மண்ணை நிரப்பி சற்று நீர் தெளித்து நேரடியாக சூரிய வெளிச்சம் படாத இடத்தில் வைக்கவும் முதலில் 100 கிராம் கோதுமையை நல்ல சுத்தமான தண்ணீரில் ஊறப் போட்டு ,பின்பு அதை எடுத்து ஒரு ஈரத் துணியில் இறுக முடிந்து தொங்க விட்டு விடுங்கள் . இந்த நிலையில் மேலும் 12 மணி நேரம் இருக்க வேண்டும்.அப்பிடி இருந்தால் கோதுமை முளை கட்டி இருக்கும். முதல் தொட்டியில் இந்த முளை கட்டிய கோதுமையை லேசாக விதைத்து மேலே மண்ணால் மூடி விடவும். இதே போல் அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொரு தொட்டியாக விதைக்க வேண்டும். தினமும் எல்லாத் தொட்டிகளுக்கும் காலை , மாலை இரு வேளைகளிலும் சிறிதளவு தண்ணீர் தெளித்து வரவும் எட்டாவது நாள் பார்த்தால் முதல் தொட்டியில் கோதுமைப் புல் 5 அங்குலம் உயரம் வளர்ந்திருக்கும் . புல்லை ஒரேடியாகப் பிடிங்கி விடாமல் சிறிது விட்டு மீதிப் புல்லை ஒரு கத்திரிக் கோலால் வெட்டி எடுக்கவும் 100 கிராம் கோதுமை விதைத்துக் கிடைக்கும் புல்லில் 4 அல்லது 6 அவுன்ஸ் சாறு கிடைக்கும். ஒருவருக்கு ஒரு நாளைக்கு இந்த அளவு சாறு போதுமானது கோதுமைப் புல்லை 5 அங்குலத்திற்கு மேல் வளரவிட்டால்அதன் பின் நீளமாக வளரும் புல்லில் அதன் குளோரொஃபில்லின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும் சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்து வடிகட்டி எடுத்தால் பசுமையான வீட்கிராஸ் ஜூஸ் மணக்கும் லேசாய் சர்க்கரை கலந்தோ அல்லது வேறு பழச்சாறுகளில் கலந்தோ இதைக் குடிக்கலாம் காலை , மாலை இரு வேளையும் பகிர்ந்து இதனை குடிக்கலாம் மறுநாள் அடுத்த தொட்டி ,அதற்கு மறுநாள் அடுத்த தொட்டி என ஏழு தொட்டியும் முடிந்து எட்டாவது நாள் முதல் தொட்டியில் இருந்து ஆரம்பிக்கவும் கொஞ்ச நாளைக்கு அப்புறம் புல்லின் வளர்ச்சி குறையும் பொழுது தொட்டியில் உள்ளதை வேறோடு பிடுங்கி எடுத்து விட்டு முன் போல் கோதுமை முளை கட்டிப் பயிர் செய்யலாம் எடுத்த உடனே அதிகளவு ஜூஸ் குடிக்க கூடாது ,சிலருக்கு அது சேராமல் பேதி ஆகலாம், வாந்தி வரலாம், சளி பிடிக்கலாம்ஜுரம் வரலாம், இதனால் பீதி ஆகாமல் சாப்பிடுவதை சிலநாள் நிறுத்தி விட்டு அந்த உபாதைகள் அடங்கியதும் மீண்டும் ஆரம்பிக்கலாம் 10 அல்லது 15 நாட்கள் 50 மி.லி குடித்துப் பழக்கப்படுத்திக் கொண்ட பிறகு 100, 150 மி.லி என்று டோசோஜைக் கூட்டிக் கொள்ளவும். முக்கிய விசயங்கள் : ஒன்று - ஜூஸ் குடித்த அரை மணி நேரத்திற்கு வேறு எதையும் பருகக் கூடாது.இரண்டு - முளை கட்டிய கோதுமை விதைக்கும் பொழுது மண்ணிற்கு கெமிக்கல் உரம் எதையும் பயன்படுத்தக் கூடாது பசுஞ்சாணி உரமே சிறந்தது. Relaxplzz |
Posted: 07 Jun 2015 11:10 PM PDT பெண்கள் பற்றிய பொன் மொழிகள் ...! பெண் இன்றிப் பெருமையும் இல்லை: கண் இன்றிக் காட்சியும் இல்லை. பெண் கிளை, பெருங்கிளை. பெண் மிரண்டால் வீடு கொள்ளாது. பெண்ணுக்கு பொன் இட்டுப் பார். பெண் பாவம் பொல்லாதது. பெண் வாழ, பிறந்தகம் மகிழும் பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும். பெண்ணின் வாழ்வு அன்பின் சரித்திரம் -துவிஜேந்திரலால் பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு- லெனின் சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்- காந்தியடிகள் பெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.- சைரஸ் காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம்-ஷேக்ஸ்பியர். அன்பு செய்யும் பெண்ணின் நெஞ்சம் எப்போதும் இளமை உடையது- டேவிட்ஹ்யூம் பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபிட்சம் அடையாது -நேரு. பெண்களின் கண்ணீரே உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி-வில்சன் மிஸ்னர். பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள்-வேட்லி. Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment