Tuesday, 9 June 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


என்ன பதில் சொல்ல முடியும் இந்த கேள்விகளை நம் பிள்ளைகள் கேட்டால்.!! # # # #...

Posted: 09 Jun 2015 09:10 AM PDT

என்ன பதில் சொல்ல முடியும் இந்த கேள்விகளை நம் பிள்ளைகள்
கேட்டால்.!!
#
#
#
#
நான் காட்டில் வேலை செய்வதை கேவலமாகவும்
அதே கணினியில் வேலை செய்வதை
கௌரவமாக நீ நினைப்பது ஏன்?

ஏர் பிடிக்க கற்றுக்கொடுக்க மறுக்கும் நீ
எனக்கு கார் பிடித்து கற்றுக்கொடுக்க துடிப்பது ஏன்?
உழுது வாழ கற்றுக்கொடுப்பதை விட்டுவிட்டு உழைக்காமல் வாழ்வது எப்படி என்று கற்றுத்தருவது ஏன் ?

ஆசா, பாசம், நேசம், அண்ணன்,தம்பி,அக்கா, தங்கைகளுடன் பிறந்து வளர்ந்த நீ என்னை மட்டும் ஒற்றை பிள்ளையாய் பெற்றது ஏன்?

தாத்தா பாட்டின் கை பிடித்து நடக்க கற்றுக்கொண்ட நீ
என்னை மட்டும்
பெரியோர்களுடன் சேரவிடாமல் தவிர்ப்பது ஏன் ?

மணல் வீடு கட்டி விளையாடிய நீ
என்னை மட்டும் பெரியவனாகியதும் மாட மாளிகைதான் கட்ட வேண்டும் என்று கட்டளை இடுவது ஏன்?

கம்மஞ்சசோறும், கேப்பையும் கூழும் குடித்து வளர்ந்த நீ
எனக்கு மட்டும் "பெப்சியும், கோக்கையும் கொடுத்து என் ரத்தத்தில் விஷத்தை கலந்தது ஏன்?

மன்டியிட்டு மண்ணில் விளையாடிய நீ
மார்பிலில்தான் எங்களை விளையாடவேண்டும் என்று சொல்லி முப்பதே வயதில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு என்னை அனுப்ப துடிப்பது ஏன் ?

அரச, ஆல, வேப்ப, புங்கமரக்காற்றை
ஓசியில் சுவாசித்து வளர்ந்த நீ,
ஏசி காற்றை மட்டுமே நான் சுவாசிக்க வேண்டும் என்று நினைப்பது ஏன்?

நான் பண்ணையம் பார்ப்பதை ஏளனமாகவும்,
பன்னாட்டு கம்பெனியில் அடிமையாக வேலை பார்ப்பதை நீ பெருமையாகவும் நினைப்பது ஏன்?

நீர் நிலம் காற்று அத்தனையும் நீ மாசுபடுத்தி விட்டு இவை அனைத்தயும் காசு கொடுத்து வாங்க துடிப்பது ஏன்?

எங்களுக்கு ஓர் கனவு இருக்கும் ஆனால் அந்த கனவை காவு வாங்கிவிட்டு நீ காசை மட்டுமே சம்பாதித்து குவித்து வைப்பது ஏன் ?

இனியாவது நாம் சிந்திப்போமா?
நம் பிள்ளைகளுக்கு நல்லது கெட்டதை சொல்லிக்கொடுக்கும் ஒரு நல்ல நண்பனாக இருக்க கற்றுக்கொள்வோம்.அதுவே நாம் அவர்களுக்கு விட்டுச்செல்லும் பெரிய சொத்து ஆகும்...

சுயநலம் கொண்ட மனிதர்களே !
நாம் வாழ்வது வாழ்க்கை, அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து விட்டு போவோம்..!

Relaxplzz

பூவா தலையா | விதியை மாற்றி அமை ஒரு முறை ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்ற...

Posted: 09 Jun 2015 09:10 AM PDT

பூவா தலையா | விதியை மாற்றி அமை

ஒரு முறை ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து போருக்கு தயாரானார். அவர் "எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம்" என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். அனைவரும் சோர்த்து போய் நம்பிக்கையின்றி இருந்தார்கள்

இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார்.

அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்தார். அது என்னவென்றால்,

அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் குல தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து விட்டு ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் காண்பித்து "நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில் தோற்போம்" என்று துறவி சொன்னதைச் சொன்னார்,

வீரர்களிடம் "நம் தலை விதியை இந்த நாணயம் நிர்ணயிக்கட்டும்" என்று கூறி நாணயத்தை சுழற்றினார். அனைவரும் அதை கூர்ந்து கவனித்தனர்.

அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்க தயாரானார்கள்.

யுத்தத்தில் வெற்றியும் பெற்றனர். யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி "விதியை யாராலும் மாற்ற முடியாது." என்று ராஜாவிடம் சொல்ல "ஆம், என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை" காண்பித்தார்.

நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றி அமைக்கலாம்.

Relaxplzz

இந்திய சினிமாவின் வைர முட்டை! --------------------------------------------------...

Posted: 09 Jun 2015 01:15 AM PDT

இந்திய சினிமாவின் வைர முட்டை!
-----------------------------------------------------------

ஹைய்யா..

காக்கா முட்டை படம் பார்த்த பெருமைக்குரியவர்களில் நானும் ஒருவனானேன்.. இப்போ தான் செகண்ட் ஷோ முடிஞ்சு வீடு வந்து சேர்ந்ததும் முதல்வேலையாக கம்ப்யூட்டரை ஆன் செய்து இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்..

'`கமர்சியல் சீன் இருந்தாதான் சார் படம் பார்க்க வருவானுங்க.." என்ற சினிமாக்காரர்களின் அத்தனை கற்பிதங்களையும் தகர்த்துப் போட்டிருக்கிறது காக்க முட்டை.

படத்தில் கவர்ச்சி இல்லை.. மாஸ் ஹீரோ இல்லை.. குத்தாட்டம் இல்லை.. பறந்து பறந்து அடிக்கும் ஃபைட் சீன் இல்லை.. ஆனால் படம் மக்களால் கொண்டாடப்படுகிறது.

வெறும் ஒரு ஜோடி ஷூவை மையமாக வைத்து உருவான `சில்ட்ரன்ஸ் ஆப் ஹெவன்' படத்தை பார்த்துவிட்டு உருகியிருக்கிறேன்.

தமிழ் சினிமாவில் அப்படி ஒரு உலக சினிமா இல்லாத குறையை காக்கா முட்டை தீர்த்துவிட்டது. சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மிகச்சிறந்த அரசியல் படம் இது.

எவ்வளவு அரசியல்.. எவ்வளவு குறியீடுகள்.. :)

மது உடல் நலனுக்கு கேடானது என்று சொல்லும் முதல் காட்சியான பின்னணி குரலிலே செம ரகளை.

முதல் காட்சியில் ஆரம்பித்து படத்தின் கடைசி காட்சி வரைக்கும் பாராட்டி எழுதிக் கொண்டே போகலாம். படத்தின் கதா நாயகர்களான சின்ன காக்கா முட்டையும், பெரிய காக்கா முட்டையும் தங்கள் நடிப்பால் தமிழ் சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார்கள்.

ஐஸ்வர்யாவுக்கு அவரின் சினிமா வாழ்வின் சாட்சியாக இந்த ஒரு படம் போதும்.. அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.

``கெட்டுப்போனா தான்டா நூலா வரும்'' என்று சொல்லும் பாட்டியில் ஆரம்பித்து குப்பத்து களவாணிகள் இருவரும், காக்கா முட்டைகளின் நண்பர் ஜோ மல்லூரி, குட்டி நாய்( நாய் கண்டினியூட்டி மிஸ்ஸிங்க்) என ஒவ்வொரு நடிகர்களும் நினைவில் நிற்கிறார்கள்.

வர்க்க அரசியலை பிரச்சாரமில்லாமல் அவ்வளவு எளிதாக சொல்லியிருக்கிறார் மணிகண்டன். முதலாளித்துவம் தனது நலனுக்காக எந்த லெவலுக்கும் இறங்கும் என்பதை சொல்ல சிறுவர்களுக்கு முதலாளி பீட்ஸா ஊட்டும் காட்சி ஒன்று போதும்..

இசை, கேமரா என அனைத்தும் சிறப்பு. இதுபோன்ற படத்தை தயாரிக்க முன் வந்த தனுஷ் வெற்றிமாறன் கூட்டணிக்கு வாழ்த்துகள்.

நண்பர்கள் அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள்.. முக்கியமாக குட்டிஸ்களோடு திரையரங்கிற்கு சென்று படம் பாருங்கள்.. பாடம் கற்றுக் கொள்வார்கள்.

காக்கா முட்டை இந்திய சினிமாவின் `வைர முட்டை'.

வாழ்த்துகள் மணிகண்டன்.. தமிழ் சினிமாவின் பெருமை நீங்கள்.. :)

-கார்ட்டூனிஸ்ட் பாலா


0 comments:

Post a Comment