பத்து ரூபாய் நோட்டில் இனி காந்தி படம் இருக்காது...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காந்தி படம் இல்லாத பத்து ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியின்
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு,
பிறகு திரும்பப் பெறப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன.
காந்தி படம் இல்லாத பத்து ரூபாய் நோட்டு
இன்னும் வங்கிகளுக்கு வரவில்லை.
விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
காந்தி படத்துக்குப் பதிலாக
அசோக சக்கரம் மட்டும் இடம் பெற்றுள்ளதாம்.
பாஜக அரசு பொறுப்பேற்றதுமே ரூபாய் நோட்டுகளில்
காந்தி படம் நீக்கப்படும் என்னும் பேச்சு அடிபட்டது.
காந்தி படம் போட்ட ரூபாய்த் தாள்கள் 1996 முதல் வரத் தொடங்கின.
"பண்புகளில் காந்தியம் இல்லாதபோது வெறும்
பணத்தாளில் காந்தி இருந்து என்ன பயன்?" என்பது சரிதான்.
ஆனாலும் அன்றாட வாழ்வில் தேசத் தந்தையை
நினைவூட்டிக் கொண்டிருந்த ஒரு வாய்ப்பும் பறிபோகிறது.
V I A - Siraj Ul Hasan

0 comments:
Post a Comment