Sunday, 31 May 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


Posted: 31 May 2015 07:56 AM PDT


இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்...

Posted: 31 May 2015 05:10 AM PDT

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்..!

ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.

சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.

இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும். அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள்.

இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம்.அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும். அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.

இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள். நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை.

Relaxplzz

கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று சில அரசியல் தலைவ...

Posted: 30 May 2015 11:05 PM PDT

கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று சில அரசியல் தலைவர்கள் பேசி வருகின்றார்கள் அவர்களின் சுய லாபத்திற்காக

நான் இளங்கலை பட்டய படிப்புக்கு லண்டனில் உள்ள ஒரு யுனிவர்சிட்டியில் விண்ணப்பித்திருந்த நேரம்... அவர்களுடைய நேர்காணலில் என்னிடம் கேட்கபட்ட பல கேள்விகளில் இதற்கு சம்பந்தமுள்ள சில கேள்விகளை (நியாபகத்தில் இருப்பவற்றை) இங்கே கொடுக்கிறேன்...

அரசியலை தனிபாடமாக கற்றுருக்கிறீர்களா?

உள்ளூர் அரசியல் குறித்த உங்கள் ஞானம் என்ன?

மக்கள் நலன் சம்பந்தபட்ட போராட்டங்களில் நேரடியாக பங்கேற்றுருக்கிறீர்களா?

ஆம் என்றால் அதை நியாயபடுத்த உங்களுக்கிருக்கும் காரணங்கள் என்னென்ன? இல்லை என்றால் அதற்கான காரணங்கள்?

மாணவர்களுக்கு அரசியல் தேவையா? (ஆம் என்றும் அதற்க்கான நியாயமான காரணங்களை சொல்லியவர்களை வெகுவாக பாராட்டினார்கள்)

இப்படி அவர்களின் மாணவர்களுக்கான அரசியல் நிலைபாடு குறித்த கேள்விகள் நீண்டுகொண்டே போயின...

இன்னும் சொல்லபோனால் கடந்த நாடாளுமன்ற பொது தேர்தலின்போது மாணவர்களை சந்திக்க ஒரு பள்ளிக்கு சென்ற இப்போதைய இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கேமரூனிடம் ஒரு மாணவி தேர்தல் குறித்து கேட்ட கேள்வி ஊடகங்களாலும், பொதுஜனங்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டது. இது பரவலாக எப்போதுமே நடைபெறுவதுதான்.

நடைமுறை செய்திகளை தெரிந்துகொள்வதோடு அரசியலையும் அறிந்துகொள்ளவே இங்குள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் எல்லா பத்திரிக்கைகளும் வைக்கபடுவதுண்டு. வெறும் அலங்காரத்துக்கு அல்ல.

சரி.... அரசியலை தெரிந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அரசியலில் ஈடுபடுகிறார்களா? என்றால்... ஆம் என்று தீர்க்கமாக சொல்லுவேன்.

ஒவ்வொரு பள்ளிகளிலும் Academic Senate என்றும் கல்லூரிகளில் Students representative council என்ற ஒரு அமைப்பும் கட்டாயமாக இருக்கும் / இருக்க வேண்டும். இவர்களின் வேலை வெறுமனே பாடங்களை மனப்பாடம் செய்தோமா அல்லது மார்க் எடுத்தோமா என்று இருக்காது. நாட்டின் அரசியல் நிகழ்வுகளை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து அதை சக மாணவர்களுக்கு பரப்புவதும்தான். 1960 களில் இவர்களால் இங்கிலாந்தில் ஏற்பட்ட அரசியல் புரட்சி ஒரு வரலாறு.

இங்கு மட்டுமல்ல... அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா இப்படி உலகின் பல நாடுகளிலும் மானவர்களுக்குண்டான அரசியல் அறிவையும், ஈடுபாட்டையும், பங்கேற்ப்பையும் காலத்தின் கட்டாயமாக / அவசியமாக பார்கிறார்கள்.

அப்பேற்பட்டவர்களை மேற்கோள் காட்டி அவர்கள் "காரி துப்பி விரட்டி விடுவார்கள்" என்று சொல்லுவது உலக அனுபவம் உள்ள உங்களை போன்றோர்களின் wilful-ignorance ஆகத்தான் பார்க்க முடிகிறது.

இந்திய மாணவர்களை வெறும் புத்தக புழுக்களாகவும், in-put செய்யப்பட்டவைகளை அப்படியே வாந்தி எடுக்கும் ஒரு இயந்திரங்களாகவும் நம் கல்விமுறைகள் மாற்றி கொண்டிருக்கும் தருவாயில், இதை போன்ற நிகழ்கால சமூக, அரசியல் அனுபவங்கள் மாணவர்களுக்கு கிடைப்பது அவர்களின் அதிர்ஷ்டமாகவே பார்க்கப்பட வேண்டும்.

- Mano Jo

Relaxplzz

இந்தஆண்டு பிறந்தநாளுக்கு 5 குழந்தைகளை தத்தெடுக்கும் ஹன்சிகா # நீயெல்லாம் நல்லாவ...

Posted: 30 May 2015 08:00 PM PDT

இந்தஆண்டு பிறந்தநாளுக்கு 5 குழந்தைகளை தத்தெடுக்கும் ஹன்சிகா

# நீயெல்லாம் நல்லாவரனும் ராசாத்தி....வாழ்த்துக்கள் தேவதையே..! (y)


வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...! 1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்த...

Posted: 30 May 2015 07:10 PM PDT

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...!

1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்

2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.

3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.

4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.

6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.

7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.

8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.

9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.

10. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.

11.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது. ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக அறிவு
பெற்று விட்டான் என்பதே.

12. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதை நரகமாக்கி விடாதீர்கள்.

13. பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக் கிடைக்கும். அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப் பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.

14. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன் பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் காவலன்.

15. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும்,கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.

16. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும்.

17. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.

18.எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான்.

19. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.

20. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.

Relaxplzz

மனைவியின் பிறந்தநாள் அன்று. கணவன் குடித்து விட்டு வருகிறான் வீட்டிற்கு வந்தவன்...

Posted: 30 May 2015 10:10 AM PDT

மனைவியின் பிறந்தநாள் அன்று.
கணவன் குடித்து விட்டு வருகிறான்

வீட்டிற்கு வந்தவன் தன்னிலை
அறியாமல் பொருட்களை எல்லாம் கீழே
தள்ளிவிட்டு உடைக்கிறான்.
நடுவீட்டில் வாந்தியும் எடுக்கிறான்.
மனைவிக்கு கோவம்
பொறுக்கவில்லை.

மறுநாள் காலை கணவன்
எழுந்தபோது மனைவி வீட்டில்
இல்லை, ஒரு துண்டு காகிதம்
தலையணை பக்கத்தில் இருந்தது.
அதில் மனைவி எழுதி இருந்தால்...
ஏங்க உங்களுக்கு பிடிச்ச டிப்பன்
செஞ்சி வச்சி இருக்கேன்.. மறக்காமே
சாப்டுங்க.. நா கொஞ்சம் அவசரமா
வெளிய போகணும்.. நேத்து உடைஞ்ச
பொருள் எல்லாம் வாங்கணும்...
சீக்கிரமா வந்துடுவேன்... லவ் யூ "

இதை படித்த கணவனுக்கு அதிர்ச்சி.
கோபாமாக சண்டை போடுவாள்
என்று எதிர் பார்த்த மனைவி இவ்வளவு
அன்பாக கடிதம் எழுதி வைத்து
இருக்கிறாளே...

மகனை அழைத்து கேட்டான் நேத்து
என்ன நடந்தது என்று...

மகன் : "அம்மா உன்ன பெட்ல படுக்கவச்சி..
உன் பேன்ட் பெல்ட் கலட்டுனாங்க...
அப்போ நீ... ஏய் கையை எடு எனக்கு
ஏற்க்கனவே கல்யாணம் ஆகிடுச்சி
போதைலயே சொன்ன பா...

#உண்மையான_அன்பு_புனிதமானது.

♥ ♥

Relaxplzz

0 comments:

Post a Comment