Tamil History and Culture Facebook Posts |
Posted: 03 May 2015 07:36 PM PDT பொன்மொழிகள்.... * ஓடும்போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட.விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவன்தான் வெற்றி பெறுவான். * வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட,தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார்.நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய். * பணம் என்ற ஒன்று நுழையாத வரை எல்லா உறவுகளும் மேன்மையாகத்தான் இருக்கின்றன. * மனிதனின் அத்தனை கோர முகங்களையும் அறிந்த உயிரற்ற பொருள்-பணம். * குழந்தை பிறந்த முதல் ஆண்டு,அது பேசவும்,நடக்கவும் கற்பிக்கிறோம். அடுத்த ஓர் ஆண்டு அது ஒரே இடத்தில் இருக்கவும்,வாயைப் பொத்தவும் கத்துகிறோம். * நாம் யாராலோ நிராகரிக்கப் படும்போதுதான்,நம்மால் நிராகரிக்கப்பட்டவரின் வலியை உணர முடிகிறது. * அனுபவம் ஒரு ஜன்னல்;அதன் மூலம் தெருவைப் பார்க்கலாம்.ஜன்னலே தெருவாகி விடக்கூடாது. * பொதுக் காரியங்களில் நாம் சில சமயம் நம் அறிவை மட்டுமல்ல,பகுத்தறிவையும் இழக்கத் தயாராகி விடுகிறோம். * நம்பிக்கையின் கை உடையும்போது சந்தேகம் காலூன்றத் தொடங்குகிறது. * இயல்பாய் ஏற்படும் மாற்றம்,சுகம். வலிய ஏற்படுத்திக் கொள்ளும் மாற்றம்,சுமை. பா விவேக் |
You are subscribed to email updates from தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் - Tamil History and Culture's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment