Monday, 4 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


வாழ்க்கையில் குழி தோண்டக் கற்றுக் கொள்ளுங்கள்..! மரக்கன்று நடுவதற்காக மட்டும்....

Posted: 04 May 2015 11:07 AM PDT

வாழ்க்கையில் குழி
தோண்டக் கற்றுக்
கொள்ளுங்கள்..!

மரக்கன்று நடுவதற்காக
மட்டும்.

@வெங்கடேஷ்
ஆறுமுகம்

மழை பெய்த பின்னரும் எந்த ஆற்றிலும் தண்ணீர் இல்லை.. ஆனால் எல்லா சாலைகளிலும் வெள்ள...

Posted: 04 May 2015 11:05 AM PDT

மழை பெய்த பின்னரும்
எந்த ஆற்றிலும் தண்ணீர்
இல்லை.. ஆனால் எல்லா
சாலைகளிலும்
வெள்ளம் ஓடுகிறது..

#தமிழகம்
:(

@வெங்கடேஷ்
ஆறுமுகம்

என்னை படைத்த கடவுளுக்கு எனக்கு என்ன வேண்டுமென்று நான் கோவிலுக்கு போய் சொல்லித்தா...

Posted: 04 May 2015 10:39 AM PDT

என்னை படைத்த
கடவுளுக்கு
எனக்கு என்ன
வேண்டுமென்று
நான் கோவிலுக்கு
போய் சொல்லித்தான்
தெரியவேண்டுமா
என்ன??

@செந்தில்

இது என்னானு தெரியுதுங்கலா?!. கரூர் காவிரி ஆற்றில் மணல் அள்ள காத்திருக்கும் லாரி...

Posted: 04 May 2015 10:11 AM PDT

இது என்னானு
தெரியுதுங்கலா?!.

கரூர் காவிரி ஆற்றில்
மணல் அள்ள
காத்திருக்கும் லாரிகள்...

இத்தனை லாரிகளில்
கொண்டு செல்லப்படும்
மணல், அந்த ஆற்றில் ஒரு
இன்ச் மணல் சேர 52 வருடங்கள்
ஆகிறது...

அண்டை மாநிலங்களில்
இது போல ஆற்றில் மணல்
அள்ள தடை
செய்யப்பட்டுள்ளது..

அதனால் அவர்களுக்கும்
சேர்த்து இவர்களே அள்ளி
விற்று வருகின்றனர்...


ஆதித்தமிழனின் வழிபாட்டு முறையானது இறந்துபோன வீரர்களின் நினைவாக கல்நட்டு,அவனுக்கு...

Posted: 04 May 2015 12:30 AM PDT

ஆதித்தமிழனின் வழிபாட்டு முறையானது இறந்துபோன வீரர்களின் நினைவாக கல்நட்டு,அவனுக்குப்பிடித்த உணவு வகைகளை படையலிட்டு,விலங்குகளைப் பலியிட்டு வணங்குவதாகும்.

இறந்துபோன மனிதனின் உடலோடு அவன் பயன்படுத்திய ஆயுதம் மற்றும் பொருட்கள்,அந்தக் குலத்தின் சின்னம் ஆகியவற்றையும் சேர்த்து புதைத்து தனது முன்னோரைத் தமிழன் வணங்கினான்.

இறந்தவர்களின் நினைவும்,அது சார்ந்த நம்பிக்கையும் தங்களுக்கு ஆற்றலை வழங்கும் என்ற கருத்தியலின் அடிப்படையிலேயே நடுகல் வழிபாடு அமைந்தது.

நடுகல்லுக்கு பூக்களைச்சூடி,மயில்தோகையை அணிவித்து வழிபாடு செய்ததை அகநானூறும்,கரையை அழிப்பதுபோல் பீறிட்டுவரும் வெள்ளத்தை அணை தடுத்து நிறுத்தியதுபோல் பாய்ந்துவரும் பகைவர் படையை தடுத்து நிறுத்திய வீரர்களுக்கு நடப்பட்ட நடுகற்களைப் பற்றி புறநானூறும் பேசுகிறது.

இறந்தவர்களின் நினைவாக ஆடு,கோழி வெட்டப்படுவதும்,கள் படைப்பதும் முக்கிய இடம் பிடித்தது.

இல்லடு கள்ளின் சில் குடிச் சீறூர்ப்
புடை நடு கல்லின் நாட்பலி யூட்டி ( புறம்;329)

நடுகற் பீலி சூட்டி நார் அரி
சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ ( புறம்;232 )

நடுகல் பீலி சூட்டி துடுப்படுத்துக்
தோப்பி கள்ளொடு துரூ உப்பலி கொடுக்கும் ( அகம்:35)

இறந்தவனின் நினைவிடத்தில் அவன் விரும்பி உண்ட மதுவும்,பலிகொடுக்கப்பட்ட ஆடும்வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட செய்தியை மேற்கண்ட சங்கப்பாடல்கள் தெரிவிக்கிறது.

@காணி நிலம் -Kaani NILAM


0 comments:

Post a Comment