Tuesday, 5 May 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:P :P Relaxplzz

Posted: 05 May 2015 09:40 AM PDT

:P :P Relaxplzz


பென்சிலால் வரையப்பட்ட அழகான ஓவியம்... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 05 May 2015 09:36 AM PDT

பென்சிலால் வரையப்பட்ட அழகான ஓவியம்...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


ஓவியங்கள் - 2

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 05 May 2015 09:30 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 05 May 2015 09:25 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 05 May 2015 09:18 AM PDT

நம்ம நாட்டுல இருக்குற விவசாயிங்க எல்லாம் முட்டாள் பசங்க... ஆமா. யாருக்குமே விவசா...

Posted: 05 May 2015 09:10 AM PDT

நம்ம நாட்டுல இருக்குற விவசாயிங்க எல்லாம் முட்டாள் பசங்க... ஆமா. யாருக்குமே விவசாயம் பண்ண தெரியல...

பின்ன என்ன.... ஒரு பொண்ணு...வெறும் 10 ஏக்கர் நிலத்தை வச்சுக்கிட்டு, 2009-ல் ரூ. 50 கோடி சம்பாதிச்சிருக்கு .... 2014-ல அதே 10 ஏக்கர் நிலத்தை வச்சுக்கிட்டு ரூ. 113 கோடி சம்பாதிச்சிருக்கு ....

இதை நாம் வருமான வரித்துறை இந்த பொண்ணு தாக்கல் செஞ்ச IT ஆவணங்களை அங்கீகரிச்சு விவசாயத்துல வர்ற வருமானத்துக்கு வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லைன்னு ஒத்துக்கிட்டிருக்கு ...

இதோ..இந்த சார்...ஏதோ கேக்குறார்.... சொல்லுங்க சார்.. அந்த திறமைசாலி பொண்ணு யாருன்னு தானே கேக்குறீங்க.... அவங்க வேற யாரும் இல்லை சார்... நம்ம நாட்டிலேயே மிகவும் ஏழைக்குடும்பதில் பிறந்து ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்குற நம்ம முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் இருக்காரே.. அவரோட மகள் தான் இவங்க......அவங்க பேரு....Supriya Sule.... ஆனா என்ன இவங்க எப்படி விவசாயத்துல இவ்ளோ பணம் சம்பாரிச்சாங்க அப்படின்ற ரகசியத்தை மட்டும் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்றாங்க....

நம்ம மத்திய அரசு அவங்களோட திறமையை பாராட்டி நோபல் பரிசுக்கு சிபாரிசு பண்ணினா நல்லா இருக்கும் ...

- ரௌத்திரம் பழகுவோம்

Relaxplzz


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 05 May 2015 09:01 AM PDT

உலகின் மிகச் சிறந்த உணர்வு.. <3 பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 05 May 2015 08:53 AM PDT

உலகின் மிகச் சிறந்த உணர்வு.. ♥

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


மீண்டும் 3 நாடுகளுக்கு மோடி பயணம். சார் திரும்ப வரும் போது ஒரு நல்ல LED tv வாங்க...

Posted: 05 May 2015 08:45 AM PDT

மீண்டும் 3 நாடுகளுக்கு மோடி பயணம்.
சார் திரும்ப வரும் போது ஒரு நல்ல LED tv
வாங்கிக்கிட்டு வாங்க சார்.. ;-)

- KeethaSj @ Relaxplzz

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 05 May 2015 08:40 AM PDT

நாமளும் அழகுதான்டானு நமக்கு இருக்கும் மிக குறைந்தபட்ச நம்பிக்கையையும் உடைப்பதே அ...

Posted: 05 May 2015 08:35 AM PDT

நாமளும் அழகுதான்டானு நமக்கு இருக்கும் மிக குறைந்தபட்ச
நம்பிக்கையையும் உடைப்பதே அரசாங்க அடையாள அட்டைகளின் வேலையாக இருக்கிறது.
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர்
அடையாள அட்டை வரிசையில் இப்போது ஆதார்அட்டை
பார்க்க பயமா இருக்கு.

- Sridhar Jayaraman @ Relaxplzz

ஏழை குழந்தைகளுக்கு ரயில்வே பாலம் கீழ் பாடம் சொல்லித்தரும் இரு இளைஞர்கள் !! வாழ்...

Posted: 05 May 2015 08:30 AM PDT

ஏழை குழந்தைகளுக்கு ரயில்வே பாலம் கீழ் பாடம் சொல்லித்தரும் இரு இளைஞர்கள் !!

வாழ்த்துக்கள் !! (y) (y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 05 May 2015 08:25 AM PDT

புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு இந்த போஸ்ட்டை போட...

Posted: 05 May 2015 08:20 AM PDT

புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு இந்த போஸ்ட்டை போடுறேன்(அப்பாவி ஆண்கள்லாம் என்னை மன்னிச்சுடுங்க..).

1. கல்யாணம் நிச்சயமான புதுசுல பர்த்டே, லவ்வர்ஸ் டே, வுமன்ஸ் டேன்னு ஏதேதோ சாக்கு சொல்லி வீட்டுக்கு வருவீங்க. ஆனால், கல்யாணம் ஆகிட்டாலோ எங்க பர்த்டே கூட மறந்து போகுதே! நிஜமாவே எங்களைத்தான் பார்க்க வருவீங்களா? இல்லை மச்சினிச்சியை பார்க்க வந்தீங்களா?

2. மீட்டர் 50 ரூபாய்க்கு மேல துணி எடுத்து சட்டை போடாத கஞ்சூஸ் நீங்க, மாமனார் துணி எடுக்கும்போது மட்டும் பார்க் அவென்யூ சர்ட்டும், ரேமாண்ட் ஃபேண்டும் தவிர வேறேதும் போடாத மாதிரி சீன் போடுறிங்களே எப்படி?

3.உங்க வீட்டு விசேஷத்துக்கு மட்டும் ஒரு வாரத்துக்கு லீவ் கிடைக்குது. ஆனால், எங்க வீட்டு விசேசத்தன்னிக்கு மட்டும் ஆடிட்டர் வந்துடுறார், இண்டெர்வியூ, மீட்டிங்க் ஏதாவது வந்துதுடுதே அதெப்படிங்க?

4. உங்க வீட்டு விசேசத்துல வாசல்ல வாழைமரம் கட்டுறது முதற்கொண்டு , மிச்சம் மீதி மளிகை சாமான் வண்டில ஏத்தி வீட்டுக்கு கொண்டு வந்து இறக்கும் வரை மாடா வேலை செய்யும் நீங்கள், எங்க வீட்டு விசேசங்களில் மட்டும் டீக்கா டிரெஸ் பண்ணிக்கிட்டு கால் மேல் கால் போட்டுக்கிட்டு உக்காந்துக்கிட்டு மாப்பிள்ளை முறுக்கு காட்டுறீங்களே அது எப்படிங்க?

5. உங்க வீட்டு விசேசங்களுக்கு சீர் செய்ய மட்டும் லோன் போடாம, சீட்டு பணத்தை உடைக்காம 25,000 கூட பணம் வருது. ஆனால், எங்க வீட்டு விசேசத்துக்கு சீர் செய்யறதுக்கு மட்டும், இன்கம் டாக்ஸ், மன்த் எண்ட் வந்து 1001க்கு மேல செய்ய முடியாம போய்டுதே எப்படிங்க ?

6. உங்க அக்கா பிள்ளைங்க, தம்பி பிள்ளைங்க கோடை விடுமுறைக்கு வந்து டி.வி, வாசிங்க் மெசின், ஏசிலாம் ரிப்பேர் செஞ்சு 1000, 2000ன்னு தண்டம் அழுதாலும் குழந்தைங்கன்னா அப்படிதான்மான்னு சொல்லிட்டு, எங்க அக்கா பிள்ளையோ, அண்ணன் பிள்ளையோ வந்து ஒரு 10ரூபாய் பொம்மையை உடைச்சுட்டால்கூட வானரப்படைகள்ன்னு திட்டுறிங்களே எப்படிங்க?

7. கம்மல் வாங்கி தாங்க, செயின் வாங்கி தாங்கன்னு கேட்டால் மட்டும் வானத்துக்கும் பூமிக்கும் எகிறி குதிக்கும் நீங்க வீடு கட்ட, வண்டி வாங்கும்போது பணம் பத்தலை உன் செயினை தாயேன் கொலுசை தாயேன்னு ஒண்ணுமே தெரியாத அப்பாவி போல வந்து நிக்குறிங்களே எப்படி?

8. புடவை எடுக்கும்போது 500 ரூபாய்க்கு மேல புடவை எடுத்தால் முகத்தை தூக்கி எரவானத்துல வச்சுக்கிட்டு, எங்காவது கிளம்பும்போது எங்க ஆபீஸ் மேனேஜர் வீட்டு விசேசம் இப்படியா சாயம் போன சேலை கட்டிக்கிட்டு வருவே...,ன்னு வழியெல்லாம் திட்டிக்கிட்டே வருவீங்களே. காஸ்ட்லியா புடவை எடுத்துக்குடுக்காத உங்களுக்கு வெட்டி பந்தா மட்டும் ஏங்க?

9. ஒருமணி நேரம் புடவை கட்டி, மேக்கப் போட்டு உங்களோடு வந்தாலும் அழகா இருக்கு, உன் நிறத்துக்கு எடுப்பா இருக்குன்னு சொல்லாத நீங்க பார்த்த பத்து செகண்டுக்குள் இந்த புடவை உங்களுக்காகவே தயாரிச்ச மாதிரி இருக்குங்க. இந்த மயில் டிசைன் அழகுன்னு டைப்பிஸ்ட்டுக்கிட்ட ஜொள்ளு வழிய வழிய சொல்றிங்களே எப்படிங்க?

10. உங்க வீட்டுல இருந்து யாராவது வந்தால், லீவ் போட்டு ஊரை சுத்தி காட்டி, ஊரு கதை, உலகத்து கதைலாம் பேசறீங்க. ஆனால், எங்க வீட்டுல இருந்து யாராவது வந்தால் மட்டும் ஆபீசுல மீட்டிங்க், எம்டி வந்துட்டான்ன்னு சொல்லி ராப்பிச்சைக்க்காரன்கூட தூங்கினப்பின் வர்றீங்களே அதெப்படிங்க?

11.உங்களுக்கு சின்னதா தலைவலி வந்தால்கூடா ஆ, ஊன்னு கத்தி ஊரையே கூட்டி, பொழுதன்னிக்கும் படுத்து ரெஸ்ட் எடுக்கும் நீங்க..., எங்களுக்கு உடம்பு முடியாதப்ப ஃப்ரெண்ட்சை கூட்டி வந்து ஒரு சாம்பார், ரசம், ஒரு பொறியல், அப்பளம் மட்டும் செஞ்சுடேன். வேற எதும் வேணாம்ன்னு உங்களால் மட்டும் சொல்ல முடியுதே எப்படிங்க.

12. நீங்க ரெண்டு வீட்டுக்கு முன்னாடி வரும்போதே உங்க தொப்பை நம்ம வீட்டு வாசல்ல வந்து நிக்குறதை மறந்து.., எங்க ஆபீஸ் ஸ்டெனோ ஸ்லிம்மா சூப்பரா இருக்கா. நீயும் இருக்கியேன்னு பூசுனாப்புல குஷ்பூ போல இருக்கும் எங்களை கிண்டல் பண்றீங்களே எப்படி?

13. நண்பன் ரொம்ப நாள் கழிச்சு ஊருக்கு வந்திருக்கான் அதுக்கு பார்ட்டின்னு சொல்லி ராத்திரி முச்சூடும் பார்லயே பழியா கிடந்துட்டு, கடைத்தெருவுல காலேஜ் மேட்டை பார்த்து ஹாய் பார்த்து ரொம்ப நாளாச்சுடின்னு சொல்லும் தோழிக்கிட்ட பேசக்கூட விடாம வீட்டுக்கு போனும் , கிரிக்கெட் மேட்ச் இருக்குன்னு சொல்றிங்களே எப்படிங்க.

14. பொழுது போகாம சீரியல் பார்க்குற எங்களை குறைச் சொல்லி, ரிமோட்டை பிடுங்கி ஒரு நியூஸ் சேனல் விடாம பார்த்துட்டு, அப்பா இப்போ தமிழக கவர்னர் யார்ப்பா?ன்னு குழந்தை கேட்கும் கேள்விக்கு ரோசையாவோ? சுர்ஜித் பர்னாலாவோன்னு நினைக்குறேன். எதுக்கும் அம்மாவை கேட்டுக்கோன்னு சொல்றீங்களே, நிஜமாவே நியூஸ்தான் பார்த்தீங்களா? இல்லை நியூஸ் வாசிக்குற லேடீசை பார்த்திங்களா?

15. பொழுதன்னிக்கும் ட்விட்டர், விடியோ சாட், ஆடியோ சாட், ஃபேஸ்புக், பிளாக், பஸ்ன்னு நெட்டுல சுத்திக்கிட்டு..., ஸ்கூல்ல போய் அஞ்சாவது ஏ செக்‌ஷன்ல படிக்குற குமாரை பார்க்கனும் சொல்ல பியூன் கூட்டி வரும் பையனை பார்த்து இது என் பையனில்லையேன்னு விழிக்க.. சார் உங்க பையன் பேரு சுகுமார்ன்னு அந்த வழியா வரும் கிளாஸ் டீச்சர் சொல்ற லட்சணத்துல குடும்பம் நடக்குது......

:P :P

Relaxplzz

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 05 May 2015 08:15 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 05 May 2015 08:10 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 05 May 2015 08:05 AM PDT

அழகு.. செம்ம அழகு.. (Cute Alpaca and llamas) பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 05 May 2015 08:00 AM PDT

அழகு.. செம்ம அழகு..
(Cute Alpaca and llamas)

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 05 May 2015 07:52 AM PDT

ATM PIN திருப்பி போட்டா போலிஸ் வருமாம் .. அதுக்கு கரைட்டா போட்டு என் பேலென்ஸ் பா...

Posted: 05 May 2015 07:48 AM PDT

ATM PIN திருப்பி போட்டா போலிஸ் வருமாம் ..
அதுக்கு கரைட்டா போட்டு என் பேலென்ஸ் பார்த்தா திருடனே பரிதாபபட்டு ஒரு 1000, 2000மோ கொடுத்துட்டு போவான்.. :O

- ℳr.ஐடியா மணி @ Relaxplzz

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 05 May 2015 07:38 AM PDT

# பெண்களின் காதல்...!!! அழகு தேவை உள்ளங்களில் மட்டும்...! நெருக்கம் தேவை அவனுட...

Posted: 05 May 2015 06:10 AM PDT

# பெண்களின் காதல்...!!!

அழகு தேவை உள்ளங்களில் மட்டும்...!

நெருக்கம் தேவை அவனுடன் மட்டும்...!

கஷ்டங்களிலும் சந்தோஷத்திலும் அவன் மட்டுமே அருகில் வேண்டும்...!

சின்ன சின்ன சண்டைகள் கட்டாயம் வேண்டும்...!

சண்டை முடியும் முன்பு அவன் பேசிட வேண்டும்...!

தான் வெட்கபடும் பொழுது அவன் மட்டும் ரசித்திட வேண்டும்...!

சற்று கிண்டலும் செய்திட வேண்டும்...!

பின்னர் செல்லமாக கொஞ்சிட வேண்டும்...!

பரிசுகள் தரும் பொழுது சிரித்திட வேண்டும்...!

தந்து முடித்த பின் சற்று அணைத்திடவும் வேண்டும்...!

பொய்கள் சொல்லும் போது அவன் ரசித்திட வேண்டும்...!

தவறுகளை தண்டிக்கும் பொழுது தந்தையாகவும் மாற வேண்டும்...!

சோகங்களின் போது அவன் தன்னை அம்மா என்று அழைத்திட வேண்டும்...!

காலையும் வேண்டும்,மாலையும் வேண்டும், நொடி பொழுது இமைக்கும்
நேரத்திலும் அவன் மட்டும் வேண்டும்...!

இனி வரும் ஜென்மங்களிலும் வேண்டும்...!

அவன் தனக்கு மட்டுமானவன் என்பதில் சுயநலமாக இருப்பதை யாராலும் தடுக்க முடியாது...!
ஏன் அவன் நினைத்தால் கூட...!!!

# பெண்கள் முதல் இடம் தான் அன்பு வைப்பதிலும்...!
அக்கறை காட்டுவதிலும்.!

Relaxplzz

சித்த மருத்துவம் * சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில்...

Posted: 04 May 2015 10:10 PM PDT

சித்த மருத்துவம்

* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

* நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

* வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

* பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

* புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

Relaxplzz

குட்நைட் செல்லம்ஸ் <3

Posted: 04 May 2015 10:38 AM PDT

குட்நைட் செல்லம்ஸ் ♥


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 04 May 2015 10:29 AM PDT

அழகிய ஆர்கிட் மலர்கள்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 04 May 2015 10:23 AM PDT

அழகிய ஆர்கிட் மலர்கள்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 04 May 2015 10:15 AM PDT

மனைவி : ஏங்க இந்த பூகம்பம் திடீர்ன்னு வருதுன்னு வெச்சுக்கோங்க. நீங்க மொதல்ல உங்க...

Posted: 04 May 2015 10:10 AM PDT

மனைவி : ஏங்க இந்த பூகம்பம் திடீர்ன்னு வருதுன்னு வெச்சுக்கோங்க. நீங்க மொதல்ல உங்க அம்மாவைக் காப்பாத்துவீங்களா இல்லை என்னையக் காப்பாத்துவீங்களா?? உண்மையா பதில் சொல்லுங்க.

கணவர் : யோசிக்காம பதில் சொன்னாரு. அட உன்னைத்தாமா மொதல்ல காப்பாத்துவேன்..

மனைவி : மெய்யாலுமா???

கணவர் : ஆமாம். "பூகம்பம் 7.1 ரெக்டர் அளவுகோல்ல செகண்ட்ல அதிரும். இப்ப .நான் எங்க அம்மான்னு சொன்னா, நீ 7 நாளும் எல்லாரையும் அதிர வெச்சுருவ. எது பெட்டரு. நீயே சொல்லு. ஒரு கேள்விதானே...தப்பிச்சேன்.

மனைவி..................................... !!

:P :P

Relaxplzz

வெப்பம் தணிக்கும் வேப்ப மர நிழல்.!வேம்பு பற்றி அறியாத சில தகவல்கள்.! வேப்ப மரத்...

Posted: 04 May 2015 10:03 AM PDT

வெப்பம் தணிக்கும் வேப்ப மர நிழல்.!வேம்பு பற்றி அறியாத சில தகவல்கள்.!

வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் நோய் உண்டாக்கும் நுண் உயிரிகளைக் (bacteria) கொல்லும் சக்தியை உடையது. வேப்பமரங்கள் அதிகமாக இருக்கும் கிராமங்களில் மற்ற இடங்களில் நோய்கள் பரவுவது போல் பரவுவது இல்லை.

நன்றாக தழைத்து வளர்ந்து இருக்கும் வேப்ப மரத்தை தினந்தோறும் பார்த்து வந்தாலே கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும். அம்மரத்தின் அடியில் மாலை நேரங்களில் அமர்ந்து இருந்தாலே மன இறுக்கம் குறையும். உடல் உபாதைகளும் நீங்கும்.

இதனால் தான் மன நல காப்பகங்களில் கூட அதிகமாக நாம் வேப்ப மரங்களை காண முடியும். இதனால் மன நலம் பாதிக்கபட்டவர்கள் குணமடைய வாய்ப்பு உண்டு.

இயற்கையாகவே வேப்பமரத்தின் இலைகளின் நுனி பகுதிகள் பூமியை பார்த்த படியே கீழ் நோக்கி இருக்கும். இதனால் ஒளிச்சேர்கையின் போது வெளியாகும். பிராணவாயுவில் வெகு சக்தியுள்ள பிராண வாயுவின் ஒரு வகை (Ozone) (O3)கலந்து உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனித உடலில் உண்டாகும் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட சஞ்சீவி மரமாக வேம்பு திகழ்கின்றது. இம்மரத்தில் வேர், பட்டை, மரப்பட்டை, மரக்கட்டை , வேப்பங் கொட்டையின் மேல் ஓடு, உள்ளிருக்கும் பருப்பு, வேப்பமரத்து பால் , வேப்பம் பிசின், வேப்பங்காய், வேப்பம் பழம் , பூ, இலை , இலையின் ஈர்க்கு , வேப்பங் கொழுந்து போன்றவை மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளபடியால் அவை அனைத்துமே சித்த, ஆயுர்வேத முறை வைத்தியங்களில் மருந்துப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது.

இதனால் தான் அம்மை கண்டுள்ள வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைக் தோரணம் கட்டி வைப்பார்கள் .இவ்வாறு வைப்பதினால் அம்மை நோயானது பரவாமல் இருக்கும்.அம்மை நோய்க்கு ஆளானவர்களை வேப்பிலை மீது தான் படுக்க வைத்திருப்பார்கள். இது அம்மை நோய் இறங்கும் போது உடம்பில் ஒரு வித நமைச்சலும் அரிப்பும் உண்டாகும்.

இதைத் தடுக்கவே இவ்வாறு செய்கிறார்கள். அம்மை நோய் இறங்கிய பின் தலைக்குத் தண்ணீர் விடுவார்கள். அவ்வாறு தண்ணீர் விடும் சமயத்தில் வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து எடுத்த விழுதினை நோயாளியின் உடம்பு முழுவதும் பூசிப் பின் உடம்பைக் கழுவுவார்கள்.

சமீப காலமாக அறிவியல் ஆய்வுகள் வேப்பிலைக்கு நச்சினை முறிக்கும் தன்மை மற்றும் நுண்ணிய விச கிருமிளையும் அழிக்கும் தன்மை உடையது எனத் தெளிவுபடுத்துகிறது.

மேலும் குழந்தை பிரசவமான வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைத் தோரணம் கட்டி வைப்பார்கள். இவ்வாறு வைப்பதினால் வெளியிலிருந்து வருபவர்களிடமிருந்து நச்சுகிருமியானது தாய் சேய் இருவரிடமும் பரவாமல் தடுத்து இருவரையும் பாதுகாக்கும்.

நீரழிவு என்று சொல்லகூடிய சர்க்கரை வியாதியையும் இது கட்டுபடுத்தும். எவ்வாறென்றால் வேப்பங் கொழுந்தை மை போல் அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை வியாதியின் கடுமை குறைந்து அதைக் கட்டுபடுத்தலாம் .மேலும் மஞ்சள் காமலை, குடற்புண், பாம்புகடி, வீக்கம், காய்ச்சல் போன்றவைகளையும் இது குணப்படுத்த வல்லது.

வேப்பம்பூ ஆனது நிம்பசு(ஸ்)டி ரோல் என்ற பொருளை கொண்டுள்ளது. இது மனித உடலில் சுரக்கும் ஊக்கிகளில் (On hormones) ஒன்றை ஒத்துப் போவதால் இது பசியை தூண்டிடவும், பித்தம் , வாந்தி, வாதம் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்துகிறது.

Relaxplzz


பயன் தரும் மரங்கள்

0 comments:

Post a Comment