Tamil History and Culture Facebook Posts |
- கடவுள் வாழ்கிறாரோ இல்லையோ கடவுளாக சிலர் வாழ்கிறார்கள். !!! புரிந்தவர்கள் மட்டு...
- உலக நடப்புகளை நமது பாணியிலும், சிறிது நகைச்சுவை கலந்தும் கூறியுள்ளோம்.... இது யா...
- மக்களின் முதல்வருக்கு அர்த்தம் தெரியாதவர்கள் இதைப் பார்த்து தெரிந்துகொள்ளவும் ந...
- படித்ததில் பிடித்தது:- 1. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆ...
- உழைப்புக்கு முதுமை தடையில்லை: 85 வயதில் பனைமரம் ஏறி நுங்கு வெட்டி விற்பனை செய்...
- 1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40 லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்...
Posted: 05 May 2015 09:31 AM PDT |
Posted: 05 May 2015 08:49 AM PDT உலக நடப்புகளை நமது பாணியிலும், சிறிது நகைச்சுவை கலந்தும் கூறியுள்ளோம்.... இது யார் மனதையும் புண்படுத்துவதற்கான பதிவல்ல... தம்பி : அண்ணே அடுத்தவாரம் +2 ரிசல்ட் வருது.... அண்ணன் : அதுக்கு என்னல தம்பி? தம்பி : அடுத்தாப்ல என்ன படிக்கனும்னு தெரியலணே, அண்ணன் : மொதல்ல ஒன்னோட ஆசையச் சொல்லுடே.. தம்பி : அண்ணே டாக்டருக்கு படிக்கவா? அண்ணன் : டாக்டராகி சேவை செய்வேனு பேட்டி மட்டும் தான் கொடுக்கத்தெரியும், ஆனா செய்யமாட்டிங்க, வேற சொல்லு.. தம்பி : அப்போ இன்ஜினியருக்கு படிக்கவா? அண்ணன் : இன்ஜினியர் முடிச்சவன் வீட்ல நாலுபேரு கெடக்கானுவோடே.. தம்பி : அப்போ வக்கீலுக்கு படிக்கவாணே, அண்ணன் : ஏன்டா? ஏன்? நான் படுற பாடு போதாதா? (நோட் திஸ் பாய்ண்ட் ப்ரெண்ட்ஸ்) அட பொண்ணு கெடைக்காதுடா.. தம்பி : அப்போ பைலட்டுக்கு படிக்கட்டுமா? ஏதுக்கு? அண்ணன் : மலேசியா பிளேன் பாத்தல்ல.. தம்பி : அப்போ மரைன் ஓகேவா? அண்ணன் : வேணாம்ல உனக்கு தண்ணியில கண்டம், நீச்சல் வேற தெரியாது.. தம்பி : பேசாம ராணுவத்துக்கு போகட்டுமாணே? அண்ணன் : அதுக்கு நீ சரிபட்டு வரமாட்டல.. தம்பி : போலீசு வேலைக்காவது ட்ரை பன்னவாணே? அண்ணன் : லஞ்சத்த வாங்கி தின்னுட்டு, பொம்பள போலீசு கூட போன்ல "ஒன்னு குடுக்கட்டுமா?னு" கேப்ப... வெளுத்துபுடுவேன் ரஸ்கல்.. தம்பி : அப்போ ஏதாவது டிகிரியவாது முடிக்கவாணே? அண்ணன் : சத்தியமா வேலை கிடைக்காதுல, தமிழ் நாட்ல டிகிரி முடிச்சவன் ஒரு கோடி பேரு கெடக்கான்.. தம்பி : கேட்ரிங் ஓகேவா? அண்ணன் : சமையல் செய்றதெல்லாம் கல்யாணம் முடிஞ்சதும் நீயே கத்துப்ப , வேஸ்ட்ல.. தம்பி : ஏதாவது சீட்டு கம்பேனி பிசினஸ் பன்னட்டுமா? அண்ணன் : ஊர்துட்ட திங்க அலையாத, அது நல்லது இல்ல .. தம்பி : ஏதாவது யாவாரம் பன்ன கடைய ஆரமிக்கட்டுமா? அண்ணன் : இன்னொருத்தன் உழைச்சி தர்ரத உக்காந்த இடத்தில யாவாரம் பண்ணி திங்கலாம்னு பாக்க, "குண்டக்கா மண்டக்கா" திட்டீருவேன்.. தம்பி : டீக்கடைய போடட்டுமா? அண்ணன் : பிரதமர் ஆகி நாடு நாடா சுத்திகிட்டும், முதல்வர் போல டம்மியா இருக்கலாம்னு பாக்க, "தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ".. தம்பி : வெளிநாட்டுக்கு போய் சம்பாதிக்கட்டுமா? அண்ணன் : அங்க பாதி பேரு தாய், தகப்பனுக்காக கெடக்குறாங்கடா, மீதி பேரு தாய் நாட்டப்பத்தி கூட சிந்திக்க மாட்டானுங்கல.. தம்பி :அப்போ நான் என்னதான் பன்ன? அண்ணன் : அந்தா கெடக்கு பாரு மம்புட்டி, அத தூக்கு, போய் வயல கொத்து, நாலு வருசம் நாயா கஷ்டப்படு, அடுத்த பத்து பத்து வருசத்து அப்புறம் நீ தான் சாமி எங்களுக்கு கடவுள். தம்பி : ஏன்ணே இப்புடி சொல்ற? அண்ணன் : ஆமால தம்பி, எல்லா படிப்ப படிக்குறதுக்கும் ஆள் இருக்கு, ஆனா எல்லோரும் சாப்பிடுறதுக்கு விவசாயம் பன்ற ஆள் இல்லடே.. அப்புடி சொல்லாதணே நான் இருக்கேன்.... அப்புடி சொல்றா என் சிங்கக்குட்டி, தூக்குடா மம்புட்டிய, வாடா வயலுக்கு போவோம், உனக்கு நான் உதவி பன்றேன்டா.. #விவசாயி_அழிந்தால் ? #விவசாயம்_அழியும் , #விவசாயம்_அழிந்தால் ? #உலகமே_அழியும் உங்க நண்பன்.... பா விவேக் |
Posted: 05 May 2015 04:41 AM PDT |
Posted: 05 May 2015 04:02 AM PDT படித்ததில் பிடித்தது:- 1. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.! 2. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு, சிலருக்கு படிக்கட்டாகவும், சிலருக்கு எஸ்கலேட்டராகவும், சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது.. 3. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும் ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.! 4. தோற்றுப்போய் வீடு திரும்புகையில், தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும், வாழ்க்கையை ஜெயித்துவிடலாம். 5. முதியோர் இல்லத்திற்கு பணம் கொடுங்க, பொருள் கொடுங்க, உணவு கொடுங்க, உடை கொடுங்க.. ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க.. 6. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு.. அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு.. 7. டாக்டரை மறந்து விட்டு நர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும் விசித்திரமான உலகம் இது.! 8.ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட, ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான் பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.! 9. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள், பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை. 10. அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்.. இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்... 11.கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்.. மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கிட வேண்டியிருக்கிறது.! 12.மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள்.. ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்.. மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்.. 13. மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை.. அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்.. 14. ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான், சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம். 15. ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க சரிதான்.. ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க? நன்றி : கணேஷ் அன்பழகன் பா விவேக் |
Posted: 05 May 2015 03:15 AM PDT உழைப்புக்கு முதுமை தடையில்லை: 85 வயதில் பனைமரம் ஏறி நுங்கு வெட்டி விற்பனை செய்யும் முதியவர்.. @ Indupriya MP ... ![]() |
Posted: 04 May 2015 11:51 PM PDT 1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40 லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!! 2. பொது விநியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!! 3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!! 4. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட ஆம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!! 5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!! 6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!! 7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான ரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!! 8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்று கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 9. கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!! நன்றி : கணேஷ் அன்பழகன் பா விவேக் |
You are subscribed to email updates from தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் - Tamil History and Culture's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment