Monday, 4 May 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


இது உலகமகாநடிப்புடா சாமி... சிலநேரங்கள்ல கர்ச்சீஃப்க்காக பேண்ட்பாக்கெட்ல கைவிட...

Posted: 04 May 2015 09:50 AM PDT

இது உலகமகாநடிப்புடா சாமி...

சிலநேரங்கள்ல கர்ச்சீஃப்க்காக பேண்ட்பாக்கெட்ல கைவிட்டா
கர்ச்சீஃப் இருக்காது.

ஆனா, பப்ளிக்ல நிக்கும்போது இப்படியாகிட்டா
நம்ம மனசு என்னமோ
செய்யக்கூடாதத்தப்பை செய்துட்டமாதிரி பக்னு ஆகிடும்.

சுத்திநிக்குற எல்லோருமே நம்மளைத்தான் கவனிக்குறாங்களோனு தோனும்.

அப்போ அப்டியே நைசா
யாருக்குந்தெரியாம
பாக்கெட்லயே கையை துடைச்சிட்டு
நாம விடுற பில்டப் இருக்கே...

அடேயப்பா..!

நடிகர்திலகமே தோத்துடுவார்ல..!

;-)
நாஞ்சொல்றது சரிதான..?
;-) ;-)

- ஃபீனிக்ஸ் பாலா @ Relaxplzz

தமிழ் பட கதாநாயகர்களின் அடுத்த திரைப்பட தலைப்பு: விஜய்: அருவா, குண்டூசி, கடப்பா...

Posted: 04 May 2015 09:45 AM PDT

தமிழ் பட கதாநாயகர்களின் அடுத்த திரைப்பட தலைப்பு:

விஜய்: அருவா, குண்டூசி, கடப்பாறை

விக்ரம்: I, J, K, L, M

சூர்யா: சிங்கம், கரடி, கழுதை

கார்த்தி: நான் மகான் அல்ல, நான் சிவக்குமார் மகன் அல்ல, நான் மனுசனே அல்ல

தனுஷ்: படிக்காதவன், எழுதாதவன், விளங்காதவன்

ஜீவா: SMS, MMS, Missed Call

விஷால்: சத்யம், பைத்தியம், சூனியம்

மாதவன்: குரு என் ஆளு, உஷா உன் ஆளு, "கெளரி யாரு
ஆளு.?

டிஸ்கி: சிரிப்பதற்கு மட்டுமே யாருடைய மனதையும்
புண்படுத்துவதற்கு அல்ல, மி பாவம் யாரும்
சண்டைக்கு வரக்கூடாது, அப்ற அழுதுருவன்
;-) ;-)

- Visalakshi Ramachandran R @ Relaxplzz


எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் :P

Posted: 04 May 2015 09:40 AM PDT

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் :P


அருமையான ஒவியம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y) https://twitter.com/Prasann...

Posted: 04 May 2015 09:35 AM PDT

அருமையான ஒவியம்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

https://twitter.com/PrasannaArtz


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 04 May 2015 09:32 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 04 May 2015 09:23 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 04 May 2015 09:16 AM PDT

வாய் கொழுப்பு, மிக பெரிய கம்பெனி ஒன்றில் ஒருவன் வெகு நேரமாக அங்கும் இங்குமாக எந...

Posted: 04 May 2015 09:10 AM PDT

வாய் கொழுப்பு,

மிக பெரிய கம்பெனி ஒன்றில் ஒருவன் வெகு நேரமாக அங்கும் இங்குமாக எந்தவித நோக்கமும் இன்றி மேலும் கீழும் பார்த்தபடி அலைந்துகொண்டிருந்தான்..

அவனை பார்த்த அந்த கம்பெனி முதலாளி அவன் அருகில் சென்று உனது மாதசம்பளம் எவ்வளவு என்றார்அவன் ஐந்தாயிரம் ரூபாய் என்றான்..

உடனே அவர் தனது பாக்கெட்டில் இருந்து 15000 ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்து "நான் இங்கே வேலை செய்ய தான் சம்பளம் கொடுக்கிறேன்.. சும்மா வேடிக்கை பார்...க்க அல்ல.. இதில் உன்னுடைய மூணு மாத சம்பளம் இருக்கிறது..நீ கிளம்பலாம் உனக்கு இங்கு இனி வேலை இல்லை " என்றார். அவனும் பணத்தை வங்கி கொண்டு இடத்தை காலி செய்தான்..

அவன் போனதும் முதலாளி அருகில் நின்ற மானேஜரிடம் "யார் அந்த பையன் ..எப்போது வேலைக்கு சேர்ந்தான்" என்றார்.. மானேஜர் மெதுவாக சொன்னார் "சார் அவன் கொரியர் கொண்டு வந்த பையன்" என்றார்...

:P :P

Relaxplzz

அப்போது நான் மூன்றாவதுபடித்துக்கொண்டிருந்தேன். நன்றாகநினைவுள்ளது. பள்ளிக்கூடத்த...

Posted: 04 May 2015 09:00 AM PDT

அப்போது நான் மூன்றாவதுபடித்துக்கொண்டிருந்தேன்.
நன்றாகநினைவுள்ளது.

பள்ளிக்கூடத்திலேயே வாடகைப்பேருந்துபிடித்து இந்தப்படம்பார்க்க அழைத்துச்சென்றார்கள்.

1990ஆமாண்டை ஐ.நா., சர்வதேச குழந்தைகளாண்டாக அறிவித்ததாகச்சொன்னார்கள்.

அந்த ஆண்டில் வெளிவந்தபடம்.

மணிரத்னம், இளையராஜா, ஒளிப்பதிவு, வாலி, பின்னணியிசை, ரகுவரன், ரேவதி, ஜனகராஜ், வி.கே.ராமசாமி, பிரபு, சரண்யா...

இதுமாதிரியான எதுவுமேதெரியாதவயது அது.

ஆனால், படம் முடிந்து வெளிவந்தபோது பலமாணவர்களின் கண்களிலும் கண்ணீர்.

என்னருகில் அமர்ந்திருந்த மார்க்ரேட் டீச்சர் வெளியவரும்போது அழுதபடியேவந்தது இன்றும் நினைவுள்ளது.

படத்தின் முற்பகுதி அந்தளவில் ஈர்க்கவில்லை.
பணக்காரக்குழந்தைகள், அடுக்குமாடிவீடுகள், வெள்ளேவெளேரென்ற போர்வைகள், குழந்தைகளுக்கு தனித்தனியறைகளென
அந்தவயதில் நான் பார்த்தறியாத குழந்தையுலகத்தை காட்டியிருப்பார்கள்.

ஆனால், பிற்பகுதி...!

இன்றோடு இப்படத்தை எவ்வளவுமுறைப்பார்த்துள்ளேனென நினைவில்லை.

ஆனால், ஒவ்வொருமுறையும் அழாமலிருந்ததில்லை.

"ஆகாயம் பூமியெல்லாம் இறைவன் உண்டாக்கிவைத்து
ஆசைதான் தீராமலே
உன்னைத்தந்தானம்மா..." என்ற வாலியின்வரிகளை உண்மையாக்கும்படியான நடிப்பு பேபி ஷாம்லியிடமிருந்து.

இந்தப்படத்திற்குப்பிறகு, துர்கா முதலானபடங்களில் ஷாம்லி நடித்திருந்தாலும், நடிப்பில் நூற்றுக்கு நூறுவாங்கியதென்னவோ இப்படத்திலேதான்.

லாக்டோஜென் டப்பாக்களை அஞ்சலியின் பின்னால்கட்டிவிட்டு அவளை விளையாட்டுப்பொருளாக்கியிருப்பார்கள் அந்த குழந்தைகள்.

அதைப்பார்த்து அஞ்சலியின் அண்ணனாகவரும் தருண் சண்டைபோடுவான்.

அன்றிரவு, அண்ணனின் முகக்காயங்களைப்பார்த்துசெய்கின்ற ரீயாக்ஷன் உண்மையிலேயே செம...

அந்த பிஞ்சின் குட்டியுதடுகள் ஏதோசொல்லவருவதும், அது சொல்லமுடியாமல் திணறுவதும்...

இன்னொருகாட்சியில் அம்மாவான ரேவதி,
அஞ்சலியிடம் "நா உன்னோட அம்மா... ஏன் என்கிட்ட பேசமாட்றே... ஏன் என்னப்பார்த்தாலே ஓடுறே.." என்று கேட்கும்போது
அஞ்சலி, சுவரோடு சுவராகநின்று பயந்துகொண்டே பின்னோக்கிப்போகிற காட்சி...!

ஆனால், எல்லாக்காட்சிகளையும் தூக்கிச்சாப்பிட்டது,
அஞ்சலியின் அக்காவாகவருகிற
ஸ்ருதியின்,
"அஞ்சலி... ஏந்திரி அஞ்சலி.. ஏந்திரி..
அம்மா... அஞ்சலிய ஏந்திரிக்கச்சொல்லுங்கம்மா..
அஞ்சலி.. ஏந்திரி அஞ்சலி.." தான்.

குழந்தையாக இருந்தபோது எனது ரசிப்புத்தன்மைவேறு...

இப்போதிருந்த ரசிப்புத்தன்மை வேறு.

ஆனால், எனது ரசிப்புத்தன்மையை ஒரேமாதிரியாய் வைத்திருக்கும் காட்சி,
இந்த க்ளைமேக்ஸ்க்காட்சிதான்.

படத்திற்கு, சிறந்த வட்டாரமொழித்திரைப்படத்திற்கான தேசியவிருதும், மூன்று குழந்தைகளுக்கும் Silver Lotusவிருதும் கிடைத்தன.

ஆனால், இன்றும் இப்படத்தைப்பார்க்கும்போது நாம் சிந்துகின்ற ஒவ்வொருகண்ணீர்த்துளியும் படக்குழுவினருக்கான பாராட்டுகள்தாம்.

- ஃபீனிக்ஸ் பாலா

Relaxplzz


"நினைவுகள்"

கடலுக்கு நடுவில் அழகிய சிறு வீடுகள்.. Ocean Flower villas, the Maldives. பிடித்...

Posted: 04 May 2015 08:55 AM PDT

கடலுக்கு நடுவில் அழகிய சிறு வீடுகள்..
Ocean Flower villas, the Maldives.

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


மௌனமும், தனிமையும் சிறந்த மருந்து சிலநேரங்களில்..

Posted: 04 May 2015 08:50 AM PDT

மௌனமும், தனிமையும் சிறந்த மருந்து சிலநேரங்களில்..


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 04 May 2015 08:40 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 04 May 2015 08:28 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 04 May 2015 08:15 AM PDT

சாய்பாபாவின் சிந்தனை துளிகள்... * என்னால் மட்டுமே முடியும் என்ற ஆணவம் இருக்கும்...

Posted: 04 May 2015 08:00 AM PDT

சாய்பாபாவின் சிந்தனை துளிகள்...

* என்னால் மட்டுமே முடியும் என்ற ஆணவம் இருக்கும் வரை கடவுளின் அருள் பெற முடியாது

* எல்லாம் நீயே என்று சரணாகதி அடைந்து விட்டால் கடவுளின் அருள் நிச்சயமாக துணை நிற்கும்.

* பொதுநல நோக்குடன் கடமையைச் செய்யுங்கள். வறுமையில் தவிப்போருக்கு உதவுங்கள்.

* இயற்கை அன்னை வழங்கும் செல்வங்களை அளவோடு ஏற்று அனுபவியுங்கள்.

* மனதில் எழும் ஆசைக்கு உச்ச வரம்பை உங்களுக்கு நீங்களே வரையறை செய்து கொள்ளுங்கள்.

- சாய்பாபா

Relaxplzz


"சிந்தனைகள்"

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 04 May 2015 07:53 AM PDT

கூகுள்லபோய், Why tamils are...னு கொடுங்க.. கூகுள் தர்ற முதல் Suggestion, Why ta...

Posted: 04 May 2015 07:50 AM PDT

கூகுள்லபோய்,
Why tamils are...னு கொடுங்க..

கூகுள் தர்ற முதல் Suggestion,
Why tamils are intelligentனு வரும்.

#தமிழன். (y) (Y)

- ஃபீனிக்ஸ் பாலா @ Relaxplzz


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 04 May 2015 07:02 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 04 May 2015 06:53 AM PDT

அழகிய வெள்ளை நிற சிங்கங்கள்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 04 May 2015 06:40 AM PDT

அழகிய வெள்ளை நிற சிங்கங்கள்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


ஒரு ஹோட்டலிலுள்ள பாத்திரத்தில் நிறைய வடைகள் இருந்தன.அவை "இந்த மனிதர்கள் நம்மை இப...

Posted: 04 May 2015 06:24 AM PDT

ஒரு ஹோட்டலிலுள்ள பாத்திரத்தில் நிறைய வடைகள் இருந்தன.அவை "இந்த மனிதர்கள் நம்மை இப்படி எண்ணெய் சட்டியில் போட்டு வாட்டி எடுக்கிறார்களே" என்று திட்டி தீர்த்தன.

ஒரு வடை மட்டும்,"நாம் அவர்கள் பசிக்கு உணவாகிறோமே அது நல்ல விஷயம் தானே" என்றது.மற்ற வடைகள் அதை திட்டின.சில மணிநேரங்கள் கழித்து சமையல்காரர் அந்த நல்ல வடையை சாம்பார் பாத்திரத்துக்குள் எடுத்து போட்டார்.

மற்ற வடைகள் அந்த நல்ல வடையை நோக்கி,"என்னமோ மனிதர்கள் நல்லவர்கள் என்றாயே,இப்போ நல்லா சாம்பார் சட்டிக்குள்ள விழுந்தியா?அதில் விழுந்த உன்னால் இனி எழ முடியாது" என்று ஏளனம் செய்தன.நல்ல வடை அமைதியாய் இருந்தது.

பின் வியாபாரம் துவங்கியது.மற்ற வடைகள் 5ரூ'க்கு விற்கப்பட்டன... சாம்பாரில் விழுந்த நல்ல வடை மட்டும் 'சாம்பார் வடை' என்ற பெயரில் 10ரூ'க்கு விற்கப்பட்டது.

நீதி : நல்லவர்கள் வீழ்ந்தாலும் அவர்கள் மதிப்பு உயரும்.

(y) (Y)

via Boopathy Murugesh

Relaxplzz


"தன்னம்பிக்கை கதை"

(y) (y) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 04 May 2015 06:18 AM PDT

21 - 25 வயது பெண்களுக்கு மிகவும் கடினமான வயது... (திருமணத்திற்கு முன்) 1) காத்த...

Posted: 04 May 2015 06:10 AM PDT

21 - 25 வயது பெண்களுக்கு மிகவும் கடினமான வயது...
(திருமணத்திற்கு முன்)

1) காத்திருக்க சொல்லும் காதலனின் முகம் பார்ப்பதா இல்லை, கை காட்டுபவனுக்கு கழுத்தை நீட்டச் சொல்லும் தந்தையின் சொல் கேட்பதா என்ற மனப் போராட்டத்தில் இருப்பீர்கள்.

2) வேலை தேடி அலையும் போதும் , பெண்களெல்லாம் கல்யாண பத்திரிக்கையில் போட்டுக்கொள்ளத் தானே பட்டம் வாங்குனீர்கள் என்று நகைக்கும் ஆண்களையும் ஒற்றைப் புன்னகைச் சிந்தி கடந்து செல்வீர்கள்.

3) மல்லிகை பூவையும் , கண்ணாடி வளையலையும் ,
சுடிதாரையுமே அதிகம் விரும்பினாலும் , வேலைக்கென ஒரு வேடம் போட்டுக் கொள்வீர்கள்.

4) பேசாவிட்டால் உம்மனாமூஞ்சி என்று பெயர் எடுப்பீர்கள். கொஞ்சம் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிட்டாலும் படித்த திமிர் என்ற பட்டம் வாங்குவீர்கள்.

5) சமையலறை பக்கம் கூட சென்று இருக்கமாட்டீர்கள். இப்போது மெல்ல மெல்ல எல்லாம் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருப்பீர்கள்.

6) முகப் பருக்களை கிள்ளுவதையே பகுதி நேர வேலையாக வைத்திருப்பீர்கள்.

7) ஊரைப் பிரிந்து ஏதோ ஒரு பெண்கள் விடுதியில், ஆயிரம் பெண்கள் சூழ்ந்திருக்கையிலும் தனிமையில் இருப்பதாய் உணர்வீர்கள்.

8)அடிக்கடி ச்சே ஊரா இது, எங்க ஊரெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா? என்ற வசனத்தை யாரிடமாவது சொல்லிக் கொண்டே இருப்பீர்கள்.

9) சொந்தங்கள் சேர்ந்த சுப நிகழ்ச்சுகளில் , மாமாக்கள் எல்லாம் கல்யாணம் எப்பன்னு கேட்டா , அத்தைமார்கலெல்லாம் எத்தனை பௌன் சேர்த்து வச்சுருக்கிங்கன்னு ? கேட்பார்கள்.

10) அம்மாவையும் , அப்பாவையும் உங்கள் இரு சக்கரவண்டியில் ஏற்றிச் செல்ல ஆரம்பித்திருப்பீர்கள்.

11) புதிதாய் செல்லும் இடங்களில் மனதில் இருக்கும் பயம் கண்களில் தெரியக்கூடாது என்பதில் மிகவும் கவனமாய் இருப்பீர்கள்.ஒரு ஆணைப் போல் நடந்துக் கொள்ள முடிந்த அளவு முயற்சி செய்வீர்கள்.

12) வெளியில் சென்று வீடு திரும்பியதும், பேருந்தில் இடிபட்டதையும் , மொபைல் நம்பர் கேட்டு பின்னால் வந்த ஆணை பற்றியும் வீட்டில் மூச்சு விட
மாட்டீர்கள்.தேவையற்ற பயத்தை அவர்களுக்கு தரவேண்டாம் என எண்ணுவீர்கள்.

13) உங்களுக்கென ஒரு கனவு உண்டா? என்பதை சுற்றி இருக்கும் யாரேனும் கேட்கமாட்டார்களா என ஏங்குவீர்கள்.
14) எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலும் , நம்பிக்கையும் நிறைந்து இருக்கும். வாய்ப்புகள் வந்தாலும் பெண் என்பதால் வந்த வாய்ப்பு என்றுச் சொல்ல வாய்கள் அதிகம் காத்திருக்கும்.

15) எத்தனை சோகம் கண்ட போதிலும் , பெண்ணாய் பிறந்ததற்காக பெருமை கொள்வீர்கள்.

16) அப்பா அதட்டி ஒரு சொல் சொல்லிவிட்டால் கலங்கிடும் கண்கள் , அலுவலகத்தில் யார் முன்போ திட்டு வாங்கி விட்டால் கூட கொஞ்சமும் கலங்காது. அழுதால் அதற்கும் இந்த உலகம் நீலிக்கண்ணீர் என்றொரு பெயர் வைக்கும் என்பதை புரிந்திருப்பீர்கள்.

எத்தனை பெண்களுக்கு பொருந்தும் பதிவு எனத் தெரியாது.

Relaxplzz

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 04 May 2015 06:06 AM PDT

காக்கிக்குள் கருணை... கம்பீரமான காக்கிக்குள் பாசத்தை ஒளித்துவைக்க முடிந்தாலும்...

Posted: 04 May 2015 05:50 AM PDT

காக்கிக்குள் கருணை...

கம்பீரமான காக்கிக்குள் பாசத்தை ஒளித்துவைக்க முடிந்தாலும் கருணையை ஒளித்து வைக்க முடியாது ...
ஏழைச்சிறுவனின் எதிர்காலத்தை காத்த
காவலர்களுக்கு சொல்வோம் சல்யூட் .. (y) (y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 04 May 2015 05:40 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 04 May 2015 05:34 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 04 May 2015 05:24 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 04 May 2015 04:50 AM PDT

:P https://twitter.com/RelaxplzzTamil

Posted: 04 May 2015 04:42 AM PDT

0 comments:

Post a Comment