Wednesday, 27 May 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


ஒலகத்துல எங்கியாவது கடவுள் இல்லனு சொல்றவன், கடவுள் இருக்குனு சொல்றவன ஏண்டா அப்பி...

Posted: 27 May 2015 06:58 AM PDT

ஒலகத்துல எங்கியாவது கடவுள் இல்லனு சொல்றவன், கடவுள் இருக்குனு சொல்றவன ஏண்டா அப்பிடி சொல்றனு அடிச்சிருக்கானா? கலவரம் பண்ணிருக்கானா? ஒரு ஜென்ரல் நாலேஜுக்காக கேக்குறேன்..

- பிரபல எழுத்தாளர்

மதம், கடவுள் அமைதின்னு சொல்றவன் தான் வெட்டிகிட்டு சாகுறான். நம்பாதவன் மூடிகிட்டு தன் வேலைய பாக்குறான்..

Relaxplzz

இது, பத்தாவதுல கம்மியாமார்க்கெடுத்துட்டதா நெனைக்குற பசங்களுக்கான மற்றும் அவங்களோ...

Posted: 27 May 2015 06:41 AM PDT

இது, பத்தாவதுல
கம்மியாமார்க்கெடுத்துட்டதா நெனைக்குற பசங்களுக்கான
மற்றும் அவங்களோட பெத்தவங்களுக்கானபதிவு.

சிலவிஷயங்களை இங்கே வெளிப்படையாப்பகிர்ந்துக்கணும்னு நெனைக்கிறேன்.

கொஞ்சம் பொறுமையாப்படிங்க.

ஒன்னாவதுலேருந்து பத்தாவதுவரைக்கும் நாந்தான் க்ளாஸ்லீடர்.

எப்போவுமே முதல்ரேங்க்தான். இல்லன்னா, ஞானேஸ்வரின்ற பொண்ணு வரும்.

பெருமைக்காகச்சொல்லல. நல்லாவேபடிப்பேன்.
எங்கம்மா P.U.C. அப்பா மூனாவதுவரைக்கும்.

சின்னவகுப்புகள்ல நல்லாப்படிப்பேன்றதால, பத்தாவதுல ஸ்கூல்ஃபர்ஸ்ட்டா வரணும்னு நெனச்சேன்.

நாலாவதுலேருந்தே கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, விநாடிவினான்னு நிறையகலந்துப்பேன். நல்லாப்படிக்கிறபையனுக்கு இதெல்லாம் அடையாளங்கள்னு அன்னைக்கு பலபேருசொன்னதால இதெல்லாஞ்சொல்றேன்.

ஒன்பதாவதுபடிச்சப்போ, புதுச்சேரியரசுசார்பா ஒவ்வொரு பள்ளியிலேருந்தும் ஒன்பதாவதுல நல்லாபடிக்கிற ரெண்டுபேரை டூர்-அழைச்சிட்டுப்போனாங்க.

அதுல எங்க ஸ்கூல்லேருந்து நானும் B-Classபடிச்ச தாமோதரனும்.

கடைசியில அவன் வரமுடியாமப்போய்ட்டு.

அப்புறம், பத்தாவதுவந்தப்போ அது இந்தியவிடுதலைப்பொன்விழாவருஷம்ன்றதால, ஒவ்வொரு ஸ்கூல்லேருந்தும் பத்தாவதுபடிக்குற ஒரு மாணவனை தேர்ந்தெடுத்து காரைக்கால்மாவட்டத்தாட்சியர்கையால பரிசும் சான்றிதழுங்கொடுத்தாங்க. அதுக்கு
எங்கஸ்கூல்சார்பா நாபோனேன். கலெக்டர் மாத்யு சாமுவேல்கையால பரிசும் சான்றிதழும் வாங்குனேன்.

காலம் மாறுனுச்சு.

பத்தாவதுல நா 360மார்க்.

83,75,48,79,75. முதல்மார்க் பத்மநாபன்றபையன். 403மார்க்.

நா, ஸ்கூல்ல நாலாவதுமார்க்.
கணக்குப்பரிட்சையில 50க்குதான் எழுதுனேன். ஏன்னா, அன்னைக்கு வைரல்ஃபீவர். பாதிப்பரிட்சையில மயக்கம்போட்டுவிழுந்துட்டேன். 50க்கு 48 எடுத்தேன். இத வீட்ல ரிசல்ட்வந்தப்போதான் சொன்னேன். (ஏன்னா, கணக்கு எனக்கு ரொம்பப்பிடிச்ச சப்ஜெக்ட். அதுல இப்படியாகிட்டேனு வருத்தப்படுவாங்களேன்னு உடனேசொல்லல)
தமிழ்ல நா முதல்மதிப்பெண்.

ஸ்கூல்ல யாருமே நம்பல.. நா இவ்ளோ கம்மியா வருவேன்னு.. ஏன்னா, பாலமுருகன்னா பிரைட்ஸ்டூடண்ட்னு அப்போ பேரு.
அது எல்லாத்தையும் குழிதோண்டிப்புதைச்சமாதிரி ஸ்கூல்ல வாத்தியாருங்க பேசிட்டாங்க.
அவங்க Focasசட்டுனு முதல்மார்க்கெடுத்தபையன்மேல வந்துட்டு.

நா கலங்கல.

ஒருவழியா எல்லோரையும் சமாளிச்சிட்டேன். அப்போ வீட்ல அப்பா,அம்மா, அக்கால்லாம் தைரியங்கொடுத்தாங்க.

அந்த மனதைரியந்தான் இன்னைக்குவரைக்கும் என்னை என்னையாவேவச்சிருக்கு.

எனக்கு +1,+2 படிச்சிட்டு அப்புறம் டீச்சருக்கு படிக்கணும்னு ஆசை.

ஆனா வீட்ல வசதியில்ல.

அப்பாவால முடிவெடுக்கமுடியல.

ஆனா, அப்பாவோட மனசு புரிஞ்சதால +1,+2லாம் வேஸ்டாம்ப்பானு நானே பொய்சொல்லிட்டேன்.

பாலிடெக்னிக் போகணும், EEEபடிக்கணும்னு அடுத்த ஆசை.

அதுக்கும் அப்போ செலவாகும்னு சொன்னதால போகமுடியல. ஏன்னா, குடும்பக்கஷ்டத்தை ஓரளவுக்குப்புரிஞ்சிகிட்டதால.

ITIபோனேன்.

போனேன்னு லேசாசொல்லிட்டேன். ஆனா, அங்க சீட்டுவாங்குறதுக்கு நானும் எங்கம்மாவும் மூனுதடவை அலைஞ்சோம். 360மார்க்குக்கே Electrician group, 3rd listலதான் கிடைச்சுது.
( பாலிடெக்னிக்ல EEE இல்லாட்டி,
ITIல Electrician.)

நா ITIபோனதுக்கு முதல்காரணம் அங்க படிக்குறதுக்கு Stipendதருவாங்க.. வீட்டுக்கு கஷ்டந்தரக்கூடாதுன்னுதான்.

ITIல, Merit examனு வைப்பாங்க. அதுல முதல்லவர்ற மாணவனுக்கு 50ரூபா Stipend கூட.
அதுல முதல்மாணவனாவந்தேன்.
OBC studentsக்கு 80ரூபா. மொத்தம் 130ரூபா. ஆனா, நாலைஞ்சுமாசத்துக்கு சேர்ந்துவரும். அதுவரைக்கும் கஷ்டந்தான்.
வீட்ல அங்கயிங்கனு புரட்டித்தருவாங்க.
அப்போ அப்பாவுக்கு வியாபாரம்ல செமநஷ்டம். வீட்ல பால்கறந்து டீக்கடையில குடுக்கணும். அமாவாசையன்னைக்கு பால்காசு கிடையாது. அன்னிக்கு டீக்கடைக்கு ஃப்ரீ. அதனால, அப்போ ரொம்பக்கஷ்டமாயிருக்கும்.
ITIபடிச்சப்போ அமாவாசைக்கடுத்தநாள் ITIபோயிருக்கமாட்டேன். பஸ்ஸுக்கு காசிருக்காது. அதிகமில்ல. போகவர 6ரூபாதான்.

நம்ப கஷ்டமாயிருக்குல்ல?

அப்புறம் ஒருவழியா
ITIமுடிச்சி, 93.42%ஓட வெளிலவந்தேன். இது, காரைக்கால், புதுச்சேரி, மாஹே, ஏனம்ல அந்த வருஷத்துல படிச்ச Electrician Traineesஸோட மார்க்ல top.

அப்புறம் டெல்லிபோயி All India Union Territory Level Skill Competitionல 642/650எடுத்தேன்.

அப்புறம், Puducherry Power Corporation Limitedல முதல் Apprenticeship Traineeயா எந்த Interviewவும் வைக்காம, அவங்களே கூப்பிட்டு உள்ளபோறேன்.

அப்புறம், All India Level Skill Competitionல செலக்ட்டாகுறேன்.
இந்திய அரசு Gold medalலும், 10,000ரூபா பணமுங்கொடுக்குறாங்க.

அப்புறம், 2003ல அரசாங்கவேலைகிடைக்குது. அப்போ வயசு எனக்கு பத்தொன்பதரை. ஒருரூபாசெலவில்லாம Pure Meritல வேலைகிடைக்குது.

வேலையில இருந்துகிட்டே டிப்ளமோபடிச்சேன்.

98%ஓட வெளிலவந்தேன். இது 2012ல தமிழ்நாட்டளவுல Technical Educationல முதல்மார்க்.

இதை ஏன் சொல்றேன்னா,
படிச்சேன், மெடலுவாங்குனேன்னு பெருமைபீத்திக்க இல்ல.

பத்தாவதுல எடுக்குற மார்க் பெரிய மேட்டரே இல்ல.
அது ஒரு Identity. அவ்ளோதான்.

அது போட்டுக்குடுக்குற வாழ்க்கையை பட்டுனு பிடிச்சிக்கணும்.
பெத்தவங்கபடுற கஷ்டத்தையுணர்ந்துபடிக்கணும். சும்மா கடம்பண்ணக்கூடாது.

வெறித்தனமா படிக்கணும். எதுபடிச்சாலும் ஆழமாப்படிக்கணும்.
நல்லப்பசங்களோடமட்டும் பழகணும்.

இதெல்லாம் பண்ணுனா, பத்தாவதுல நாம குறைச்சலாயெடுத்தமார்க்கெல்லாம் ஒரு மேட்டரேயில்ல.

வாழ்க்கையில ஜெயிக்கலாம்.
பெத்தவங்களுக்கு நல்லபெயர்வாங்கித்தரலாம்.

முடியும். உங்களாலமுடியும்.

முடிச்சிக்காட்டுங்க தங்கங்களா... (y)

கடைசியா ஒன்னுசொல்லிக்குறேன்.

மார்க் அதிகமாயெடுத்துட்டா நாம அறிவாளின்றமாதிரி நெனைக்கக்கூடாது.
கம்மியாயெடுத்தா முட்டாள்னு நெனைக்கக்கூடாது.
சரியா?

.
- ஃபீனிக்ஸ் பாலா @ Relaxplzz

மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க ! * நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும்...

Posted: 27 May 2015 06:10 AM PDT

மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க !

* நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களைமனைவியுடன்மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றேசெலவிடுங்கள்.

* முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாகஇருந்து விடா தீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்தவிஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும்ஒன்றாக டி.வி. பார்த்துக்கொண்டிருந்தால், அதில் வரும்கதாபாத்திரங்களிலேயே மூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில்மனைவிஇருக்கிறாள்என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள்.

* காதலர்களை எடுத்துக் கொண்டால், பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாமல் கடலை' போட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் விஷயத்தில் பல நேரங்களில் ஒன்றுமே இருக்காது. ஒன்றுமே இல்லாத விஷயத்தைக் கூட பலமணிநேரம் பேசுவார்கள். அதே போன்று நீங்களும்பேசுங்கள். அதற்காக, ஒன்றும்இல்லாத விஷயத்தை பேசுங்கள்என்று அர்த்தம் இல்லை. உங்கள்குடும்பத்துக்குதேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்த விவாதத்தில் உங்கள் குடும்பப் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம்.

* பூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி அந்தப் பூக்களை உங்கள் அன்பான மனைவிக்கு வாங்கிக் கொடுத்து அசத்துங்கள்.

* சம்பளம் பெறுவோர், சம்பளம் வாங்கிய நாள் அன்று மல்லிகைப்பூவுடன் மனைவிக்கு பிடித்த ஸ்வீட்டையும் வாங்கிக் கொண்டு போய் கொடுத்தால் அவர்களது மனைவி அடையும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.

* உங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினைத்திருங்கள். ஒரு காதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வானோ, அதே போன்று நடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள்.

* உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா? நிறைவேறாத ஆசைகள் இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன்' என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள்இப்படிகேட்டமாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்து போவாள் உங்களவள்.

* மனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும்போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப் பாருங்கள். அந்தநேரம், அவள்மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலேபொழியும். மொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம்அன்பாகஇருப்பாள். நீங்கள் அவளிடம் ஒரு காத லனாய் பழகும்போது அவளும் உங்கள் காதலியாய் மாறிவிடுவாள்! அதனால் காதலியுங்கள், மனைவியை..

Relaxplzz

காதல்னா என்ன...??? ஒரு பொண்ணு ரொம்ப அழகா இருக்கா...அதனால நான் அவள காதலிக்கிறேன்...

Posted: 27 May 2015 05:10 AM PDT

காதல்னா என்ன...???

ஒரு பொண்ணு ரொம்ப அழகா இருக்கா...அதனால நான் அவள காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா,
அது காதல் இல்ல...
Infatuation

நாம விலகி போயிட்டா அந்தபொண்ணு மனசு காயம் ஆயிடுமேனு நீங்க அவள காதலிக்கிறேன்னு நெனச்சா,
அது காதல் இல்ல..
Charity

எல்லா விஷயத்தையும் அவகிட்ட பகிர்ந்துக்கிறேன்... அதனால அவள நான் காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா,
அது காதல் இல்ல...
Pure Friendship

ஆனா....

அவளோட துக்கங்கள் அவள விடவும் உங்கள அதிகமா பாதிச்சு அவளுக்காக நீங்க கண்ணீர்விட்டா...

அது தான் காதல்...

வேற பொண்ணுங்க உங்கள கவர்ந்தாலும்... எந்த காரணமும் இல்லாம நீங்க அவ கூடவே இருந்தீங்கன்னா ...

அது தாங்க தெய்வீக காதல்..

♥ ♥

Relaxplzz

பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக பங்களாதேஷ் செல்கிறார் :>>கூலிங் கிளாஸ் பத்திரம்ண்ண...

Posted: 27 May 2015 04:39 AM PDT

பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக பங்களாதேஷ் செல்கிறார்

:>>கூலிங் கிளாஸ் பத்திரம்ண்ணே ..

.
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் @ Relaxplzz

ஒரு ஊரில் ஒரு கழுதை இருந்தது..அந்த கழுதையைப் பார்த்தால் எல்லாருக்கும் இளப்பம்.ஒர...

Posted: 27 May 2015 01:10 AM PDT

ஒரு ஊரில் ஒரு கழுதை இருந்தது..அந்த கழுதையைப் பார்த்தால் எல்லாருக்கும் இளப்பம்.ஒரு நாள் அந்த கழுதை ஒரு பள்ளத்தில் விழுந்து விட்டது..அதைப் பார்த்த சிலர் பள்ளத்தில் விழுந்த கழுதை மேல் குப்பைகளைக் கொட்டினர்..

சிலர் கற்களை வீசினார்கள்..அந்த கழுதை தன் மேல விழுந்த குப்பைகளையும் கற்களையும் உதறிக் கொண்டு அவற்றின் மீதே ஏறி பள்ளத்தில் இருந்து வெளியே வந்தது..

இதை எதுக்கு சொல்றேன்னா பொறாமைக் காரர்களின் நம்மைப் பற்றிய மட்டமான பேச்சுக்களையும் வசவுகளையும் இப்படித்தான் உதறித் தள்ளி அந்த வார்த்தைகளாலே நம்மை வலிமையுடவராக்கிக் கொண்டு உயரக் கற்றுக் கொள்ள வேண்டும்..

அதற்கு மன்னிக்கும் குணம் வேண்டும்..

அடுத்தவர் நமக்கு இழைத்த தீங்குகளை நாம் நினைத்துக் கொண்டே இருந்தால் எத்தனை வருடங்கள் ஆனாலும் கடந்த காலத்தின் கைதியாகவே இருப்போம் ..

அடுத்தவர்களை மன்னிப்பது என்பது நாம் அவர்களுக்கு தரும் பரிசோ சலுகையோ அல்ல ..அது நமக்கு நாமே தரும் பரிசு ..நம்மை அந்த இறுக்கமான மனநிலையில் இருந்து விடுவித்துக் கொள்ளும் வித்தை..

மன்னிக்கும் குணம் என்னிக்கும் நலம் !

Relaxplzz

சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் அருந்தலாமா? சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர...

Posted: 27 May 2015 12:10 AM PDT

சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் அருந்தலாமா?

சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது. ஆதலால் உணவு உண்ட பின்னர் 15அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

வெது வெதுப்பான தண்ணீர்

உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றதாம். சீனர்களும், ஜப்பானியர்களும், தவறாமல் இதனை பின்பற்றுகின்றனர். அவர்கள் உணவு உண்டபின்னர் சூடாக கிரீன் டீ, அல்லது வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

சூடான தண்ணீர் அருந்துவதால் உணவானது எளிதில் செரிமானமாவதோடு உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் கெட்டக் கொழுப்புக்களையும் தடுக்கிறது. எனவே சாப்பிட்டு முடித்ததும் இளம் சூடான சூப் அல்லது வெது வெதுப்பான தண்ணீர் குடிக்கலாம் என பரிந்துரைக்கின்றனர்.

ஜீல் தண்ணீர் வேண்டாமே

ஜீல்லென்று தண்ணீர் பருகுவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும். நம்மில் அதிகம் பேர் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்பதனபெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரையே பருகுகின்றனர்.. இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் ஜீல் தண்ணீரை குடிப்பதால், நாம் எடுத்துக்கொண்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.

ஜீல் தண்ணீர் பருகுவதை தொடர்ந்து செய்து வந்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம். இதய நோயாளிகள் சாப்பிடும்போது கண்டிப்பாக ஜீல் தண்ணீரை எடுக்ககூடாது. வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

Relaxplzz

உலகின் முக்கிய தினங்கள் - பொது அறிவு :- ஜனவரி 12-தேசிய இளைஞர் தினம் 15-இராணுவ த...

Posted: 26 May 2015 11:10 PM PDT

உலகின் முக்கிய தினங்கள் - பொது அறிவு :-

ஜனவரி
12-தேசிய இளைஞர் தினம்
15-இராணுவ தினம்
26-இந்திய குடியரசு தினம்
26- உலக சுங்க தினம்
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 -தியாகிகள் தினம்

பிப்ரவரி
14 - உலக காதலர் தினம்
25- உலக காசநோய் தினம்
24 தேசிய காலால் வரி தினம்
28- தேசிய அறிவியல் தினம்

மார்ச்
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்

ஏப்ரல்
05 - உலக கடல் தினம்
05 - தேசிய கடற்படை தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

மே
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
11 தேசிய தொழில் நுட்ப தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
31 - உலக புகையிலை மறுப்பு தினம்

ஜீன்
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்

ஜீலை
01 - உலக மருத்துவர்கள் தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்
ஆகஸ்ட்
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 -வெள்ளையனே வெளியேறு தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
29 -தேசிய விளையாட்டு தினம்

செப்டம்பர்
05-ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம்
08 - உலக எழுத்தறிவு தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்

அக்டோபர்
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
08 இந்திய விமானப்படை தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்

நவம்பர்
14-குழந்தைகள் தினம்
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்

டிசம்பர்
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்
23- விவசாயிகள் தினம்

Relaxplzz

அம்மா.. அம்மா...

Posted: 26 May 2015 10:27 PM PDT

அம்மா.. அம்மா...



இந்திய நாட்டின் காவலாளியாக செயல்படுகிறேன் - மோடி ஓ.. அதான் எப்பவும் நாட்டுக்கு...

Posted: 26 May 2015 10:20 PM PDT

இந்திய நாட்டின் காவலாளியாக செயல்படுகிறேன் - மோடி

ஓ.. அதான் எப்பவும் நாட்டுக்கு வெளியவே நிக்கிறிங்களா.!

.
- வெங்கடேஷ் ஆறுமுகம் @ Relaxplzz

எந்த சூழ்நிலையில் இருந்தாலும் கல்வியை கைவிடாதே...

Posted: 26 May 2015 10:01 PM PDT

எந்த சூழ்நிலையில்
இருந்தாலும்
கல்வியை
கைவிடாதே...


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 4

அப்பா சென்னை அமிர்தாவுல படிக்கும் போதே 10,000 ரூபா சம்பளம்னு சொல்றாங்களே.. அப்ப...

Posted: 26 May 2015 10:56 AM PDT

அப்பா சென்னை அமிர்தாவுல படிக்கும் போதே 10,000 ரூபா சம்பளம்னு சொல்றாங்களே.. அப்ப ஏன்? அவங்க என்னோட காலேஜ் பீஸை என் சம்பளத்தில இருந்து பிடிச்சுக்க கூடாது. ;-) ;-)

#சும்மா_டவுட்டு

.
- Kali Muthu @ Relaxplzz


Girl : காலைல இம்சை பண்ணாம கொஞ்ச நேரம் சும்மா இருடா.. Boy : அப்டித்தான் பண்ணுவன்...

Posted: 26 May 2015 10:10 AM PDT

Girl : காலைல இம்சை பண்ணாம கொஞ்ச நேரம் சும்மா இருடா..

Boy : அப்டித்தான் பண்ணுவன் என் செல்லம் Morning ல எவ்ளோ அழகு...

Girl : டேய் யாராவது தூங்கி எழுந்த உடனே அழகா இருப்பாங்களா..?

Boy : அடிப்பாவி என்னடீ இப்டி சொல்லிட்ட நீ தூங்கி எழுந்து கண்ணாடி பார்த்தா எவ்ளோ அழகா இருப்ப தெரியுமா..?

Girl : என்ன கலாய்க்கிறியாடா..?

Boy : உன்ன போய் நான் கலாய்ப்பனா டீ சொல்லுறன் கேளு..

உன்னுடைய முடி கலைஞ்சு உன்னோட கன்னத்த தடவிட்டே இருக்கும் போது கூந்தல் அழகு..

எந்த மேக்கப்பும் இல்லாம பாதி தூக்கத்துல உன்னோட கண்ணு ரெண்டும் மூடி மூடி திறக்கும் அழகு..

தூக்கம் வந்தும் உங்க அம்மா கத்தி கத்தி எழுப்புரதுல சலிச்சுகிட்டே மூஞ்ச சுழிசுகிட்டே எழுந்துப்ப அது தான் செம அழகு...

உன் காதுல இருக்க கம்மல் ல அட்லீஸ்ட் 2 முடி ஆச்சும் சுத்தி இருக்கும் அது சூப்பரா இருக்கும்..

இதெல்லாம் விட உன்ர நெற்றி பொட்டு நீ வைச்ச நெத்திய விட்டு வேற இடம் போய்ருக்கும் இதுதான் பேரழகு..

Girl : ஐயோ சாமி தெரியாம கேட்டுட்டன் காலை ல ஆரம்பிக்க வேணாம்...

Boy : என்னடீ மாமா ஆசையா சொன்னா நீ இப்டி சொல்ர...

Girl : ஐ லவ் யூ டா டா புருசா...

Boy :mee to டீ பொண்டாட்டி

♥ ♥

Relaxplzz

0 comments:

Post a Comment