Thursday, 28 May 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


கொஞ்ச வருசமா வர எந்த படங்களையும் காமெடி பேரு ல மொக்கதா அதிகமா இருக்கு அதுவும் சந...

Posted: 28 May 2015 09:30 AM PDT

கொஞ்ச வருசமா வர எந்த படங்களையும் காமெடி பேரு ல மொக்கதா அதிகமா இருக்கு அதுவும் சந்தானம் ,பரோட்டா சூரி காமெடி எல்லா தாங்க முடில .

வடிவேல் இடம் இன்னும் வெற்றிடம் தான் ஆனா மறுபடி அதே பார்ம் ல வருவார் டவுட்தான் .

இப்ப வர படங்கள்ல ஆறுதலா இருக்கிறது மனோ பாலா காமெடிதான் பாடி பார்த்தாலே சிரிப்பு வந்துருது . காமெடிக்கு தனி ட்ராக் இல்லாம கதையோட காமெடி-ல கலக்குவது சமீபமா இவர்தான் . நகைச்சுவை கலைஞனுக்கு டைலாக் டெலிவரி விட பாடி லாங்குவேஜ் நல்லா இருக்கணும் அது இந்த பாடிக்கு அழகா பொருந்துகிறது .

- Abdul Vahab @ Relaxplzz


மாற்றம் :: ஜமீன்தார் ஒருவர் தனது வீட்டுக்கு இன்னொரு ஜமீன்தாரை விருந்துக்கு அழை...

Posted: 28 May 2015 09:10 AM PDT

மாற்றம் ::

ஜமீன்தார் ஒருவர் தனது வீட்டுக்கு இன்னொரு ஜமீன்தாரை விருந்துக்கு அழைத்திருந்தார். விருந்தாளி வரும்போது மாளிகை பளபளப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக சுத்தப்படுத்தி அலங்காரமாக்கும் வேலை நடந்தது.

அந்த மாளிகையில் நடுநாயகமாக, பிரமாண்டமாக இருந்த பளிங்குகளால் ஆன படிக்கட்டுகளை பளபளப்பாக்கும் வேலையும் நடந்தது. வேலை செய்பவர்கள் மேலே இருந்து துடைத்துக் கொண்டு வந்தார்கள். ஆனால் அந்த ஜமீன்தார் ஒருவனை பார்த்து, `ஏன் மேலே இருந்து துடைக்கிறாய், கீழே இருந்து துடைத்துக் கொண்டு போ` என்றார்.

வேலை செய்பவர்கள் திரு திரு என முழித்தார்கள். அந்த படிக்கட்டுகளை எப்படியும் துடைக்கலாம். ஆனால் எது அதிக பலனைத் தரும். கீழே இருந்து துடைத்தால், அதிகபட்சம் நான்கு படிக்கட்டுகளை துடைக்கலாம். அதற்கும் மேல் துடைக்க, துடைத்த படிகட்டுகள் மீதே கால் வைத்து ஏற வேண்டி இருக்கும். அது மீண்டும் அழுக்காகுமே?

இனி இந்த கதையில் நீதியை மட்டும் பார்ப்போம். நம் நாட்டில் மக்கள் லஞ்சம் கொடுக்கக் கூடாது, அவர்கள் தரமானவர்களாக இருந்தால்தான் அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களும் தரமானவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுவும் உண்மை. எனவே மக்களிடமும் தரம் வேண்டும்தான். ஆனால் அதைவிட வேகமான மாற்றத்தை தலைவர்கள்தான் தரமுடியும்.

எப்படி படிக்கட்டுகளை மேலே இருந்து துடைத்தால் அது அதிக பலனைத் தருமோ, அதேபோல் மேலே இருப்பவர்கள் சுத்தமாக இருந்தால் அது சமுதாயத்தில் வேகமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஒரு குப்பனோ, ராமனோ சிகெரெட் பிடிப்பதை, அல்லது அவர்கள் தரும காரியங்கள் செய்வதை பார்த்து மற்றவர்கள் பின் தொடரும் வாய்ப்பு குறைவு. ஆனால் அதே செயலை ஒரு தலைவரோ அல்லது நடிகரோ செய்தால் அதன் வீச்சு அதிகமாக இருக்கும்.

எனவே மாற்றம் இருபக்கமும் வேண்டும். அது மேலே இருந்து ஆரம்பித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

Thanks http://tamilarivukadhaikal.blogspot.in/

Relaxplzz

தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு! யார் இந்த மாமனிதர் ?! உலக வரலாற்றிலேய...

Posted: 28 May 2015 09:00 AM PDT

தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு!

யார் இந்த மாமனிதர் ?!

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!

யார் இவர் ?

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .
1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!
இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.
2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

குடும்பம்:

மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.
டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!

இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.

மரங்கள் மட்டும் அல்ல:

தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300௦௦ ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த 'முலாய் காடுகள்' !!

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார்.

இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே முடிந்தது.

மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.

உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!

'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.

இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும் வரக்கூடும்... நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Relaxplzz


கிங்பிஷர் நிறுவனத்திடம் இருந்து கடனை திருப்பி வாங்க முடியும் என்ற நம்பிக்கையை இழ...

Posted: 28 May 2015 08:30 AM PDT

கிங்பிஷர் நிறுவனத்திடம் இருந்து கடனை திருப்பி வாங்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம்!
--- United Bank of India.

விடுங்க சார்! எவனாவது ஏழை விவசாயி கறவை மாட்டுக்கோ,
கலப்பைக்கோ கடன் வாங்கி இருப்பான் அவன torture
பண்ணி புடுங்கிக்கலாம்! அப்படி இல்லன்னா, லட்சக்கணக்குல
என்ஜினீயரிங்குக்கு செலவு பண்ண முடியாம ITI யோ, பாலிடெக்னிக்கோ முடிச்சிட்டு எவனாவது லேத் பட்டறை வச்சிருப்பான் அதை ஜப்தி பண்ணி ஏலம் விட்டா போச்சி!!
மானங்கெட்டவங்களா....

எவனாவது ஒரு ஏழை மாணவன் தொழில்
பண்ணணும்னு certificate டோட லோன் கேட்டு வந்தா surety இருக்கா, சொத்து இருக்கா, சொரக்கா இருக்கான்னு
எத்தனை கேள்வி கேக்குறீங்க, எத்தனை முறை அலைய வைக்கிறீங்க திருப்பி அனுப்புறீங்க,
மல்லய்யான்னா மட்டும் ஆளாளுக்கு போட்டி
போட்டுட்டு போய் 1600 கோடி கடன்
கொடுத்திருக்கீங்க!
அப்போ எங்க போச்சி இந்த surety, சொரக்கா
எல்லாம்!? திருப்பி தரக்கூடிய அளவிற்கு நிரந்தர
சொத்து இல்லாத, தொடர்ந்து நஷ்டத்துல மட்டுமே
இயங்கிட்டு இருக்கிற ஒரு நிறுவனத்திற்கு எந்த
அடிப்படையில ஆயிரக்கணக்கான கோடி business
லோன் கொடுத்தீங்க!? பணக்காரனோட jockey ஜட்டி
கிடைக்கலன்னா ஏழைங்க கோவணத்தை
உருவிடலான்னு தானே!?

- பாலகணேசன் தேவராஜன் பல்லடம்

Relaxplzz


நல்ல தம்பி ஒரு நாள் சர்க்கஸ் பார்க்க போயிருந்தார். கூட்டம்னாலும் கூட்டம் பயங்கர...

Posted: 28 May 2015 08:10 AM PDT

நல்ல தம்பி ஒரு நாள் சர்க்கஸ் பார்க்க போயிருந்தார். கூட்டம்னாலும் கூட்டம் பயங்கர கூட்டம். நல்லா வித்தை காட்டிக்கிட்டிருந்தாங்க.

அப்ப பாத்தீங்கனா பயங்கர பில்டப்போட ஒரு சிங்கம் வந்துச்சு. பின்னாடியே ஒரு பொண்ணும் வந்துச்சு. சிங்கம் வாயில ஒரு சாக்லேட் வச்சுக்கிட்டு நிக்க, அந்த பொண்ணு தன் வாயேலே அந்த சாக்லேட்ட எடுத்துட்டா. பயங்கர கைத்தட்டல்.

இப்ப அங்க நின்னுக்கிட்டு இருந்த ரிங் மாஸ்டர் கூட்டத்தை பார்த்து 'யாருக்காவது இப்படி செய்ய தில் இருந்தா மேடைக்கு வாங்க' னு கூப்பிட்டார். #நல்ல தம்பி படார்னு எந்திரிச்சு மேடை ஏறிட்டார்.

ரிங் மாஸ்டர் நல்லதம்பியை ஒரு லுக் விட்டுட்டு சிங்கம் வாயில இன்னொரு சாக்லேட்ட வச்சுட்டு இப்ப எடுங்க அப்படின்னார்.

ரிங் மாஸ்டரை முறைச்சு பார்த்த நல்ல தம்பி 'என்னைய என்னா நினைச்சீங்க...?

சிங்கம் செய்யறத நான் செய்கிறேன். அந்த பொண்ண வந்து எடுக்க சொல்லுங்க' அப்படின்னாரு.

எப்புடி...?

:P :P

Relaxplzz

கரண்ட் தொட்டாத்தான். ஷாக். அடிக்கும். பவர்ஸ்டாரா பாத்தாவே ஷாக் அடிக்கும் .பவரின்...

Posted: 28 May 2015 07:50 AM PDT

கரண்ட் தொட்டாத்தான். ஷாக். அடிக்கும். பவர்ஸ்டாரா பாத்தாவே ஷாக் அடிக்கும் .பவரின் பஞ்ச் டயலாக்.... வேந்தர் டிவியில்....


நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற போது வரவேற்பறையில் காத்திருந...

Posted: 28 May 2015 07:15 AM PDT

நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க
சென்ற போது வரவேற்பறையில் காத்திருந்த நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார்

ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் .

ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் .

இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்ததாக கூறியிருக்கிறார்கள் '.

இறுதியில் ஹிட்லரே வந்து நேதாஜியின்
தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள
"ஹிட்லர் " என்றார் .

ஹிட்லருக்கு ஒரே வியப்பு...

ஹிட்லர் நேதாஜியிடம் " எப்படி நீங்கள்
என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாதே? " என்று கேட்டார்.

நேதாஜி அவர்கள் "இந்த உலகத்தில் சுபாஷ் சந்திர
போசின் தோளில் கை வைக்க ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது" என்றராம் ...!

Relaxplzz

10 ரூபாய் சாப்பாடு: மதுரையில் ஒரு மனிதாபிமானி முதலாளி தொழிலாளி ரெண்டுமே நானும்...

Posted: 28 May 2015 07:00 AM PDT

10 ரூபாய் சாப்பாடு: மதுரையில் ஒரு மனிதாபிமானி

முதலாளி தொழிலாளி ரெண்டுமே நானும் என் மனைவியும் தான். ஆரம்பத்தில் 1.25 ரூபாய்க்கு சாப்பாடு கொடுத்தோம். விலை மலிவாக இருந்ததால் அரசு ஊழியர்களும், கல்லூரி மாணவர்களும் எங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளர்களானார்கள். ஆச்சர்யமாக கிட்டதட்ட அன்னதானம் என்று சொல்வதற்கு ஈடாக மதுரையில் ஒரு ஹோட்டலில் வெறும் 10 ரூபாய்க்கு இன்றும் உணவளிக்கப்படுகிறது என்பது ஆச்சர்யமான செய்தி.

இவர்களால் தான் இன்னமும் பூமியில் மழை பெய்து வருகிறது என்பதில் ஜயம் இல்லை..!!

Relaxplzz


மனிதம் காத்த மனிதன்... உயிரை விட எதுவும் முக்கியமில்லை என்று உணர்த்திய.. ஹர்மன்...

Posted: 28 May 2015 06:30 AM PDT

மனிதம் காத்த மனிதன்...

உயிரை விட எதுவும் முக்கியமில்லை என்று உணர்த்திய.. ஹர்மன் சிங்குக்கு பாராட்டுகள்..குவிகிறது..

சாலை விபத்தில் சிக்கிய சிறுவனை காக்க, தன் தலைப்பாகையை (டர்பன்) கழற்றி உதவிய சீக்கிய மாணவருக்கு, பாராட்டுகள் குவிகின்றது.

நியூசிலாந்து சாலை விபத்தில் சிக்கிய சிறுவனை காக்க, தன் தலைப்பாகையை (டர்பன்) கழற்றி உதவிய சீக்கிய மாணவருக்கு, பாராட்டுகள் குவிகின்றது.ஆக்லாந்தில் பிசினஸ் கோர்ஸ் படித்து வரும் ஹர்மன் சிங், 22, தன்னுடைய வீட்டில் இருந்தார். அப்போது, சாலையில் சென்ற ஆறு வயது சிறுவன் மீது கார் மோதியது.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டதும், வெளியில் ஓடி வந்த ஹர்மன் சிங், தலையில்
இருந்த டர்பனை கழற்றி, காயமடைந்த பகுதியில் கட்டி, உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த, நியூசிலாந்து நாட்டு தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்ந்த
குழுவினர், ஹர்மன் சிங்கின் வீட்டுக்கு சென்று பாராட்டு தெரிவித்தனர்.

ஹர்மன் சிங்கின் வீட்டில், ஒரு பிளாஸ்டிக் டேபிள், இரண்டு நாற்காலிகளுடன், தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில் ஹர்மன் சிங் படுப்பதையும் அறிந்தனர். உடனே, வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் ஒரு கடையை தொடர்பு கொண்டு, லாரி நிறைய வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும், கொண்டு வர செய்து, தங்களுடைய அன்பளிப்பாக வழங்கினர்.சில தினங்களுக்குப் பிறகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனை காண சென்ற ஹர்மன் சிங்குக்கு, சிறுவனின் பெற்றோர் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

ஹர்மன் சிங்கின் செயல் குறித்த செய்தி பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வெளியானதும், ஆயிரக்கணக்கானோர் பாராட்டிஉள்ளனர்.

Thanks Dinamalar

Relaxplzz


தமிழ் சினிமாவின் விதிகள்தமிழ் சினிமாவின் விதிகள்-(பகுதி -2) 1.ஹீரோ Opening song...

Posted: 28 May 2015 06:10 AM PDT

தமிழ் சினிமாவின் விதிகள்தமிழ் சினிமாவின் விதிகள்-(பகுதி -2)

1.ஹீரோ Opening song இல்லாமல் வெளியே வரமாட்டார்கள்.

2.பிச்சை எடுத்தாலும் கனவுப் பாடலை சுவிட்சர்லான்டிலோ, அமெரிக்காவிலோ தான் வைத்துக் கொள்ளவார்கள்

3.நாயகி குளிக்கையில் பல்லியோ, கரப்பான் பூச்சியோ நிச்சயம் வரும்.

4.ஹீரோ 60 வயதானால் கூட 18 வயது பெண்ணோடு தான் ஜோடி சேருவார்கள்.

5.மார்க்கெட்ல பத்து ரூவா மாமுல் கேட்டதுக்கு ஹீரோ வில்லன அடிப்பாரு , வில்லன் குறிதவறாமல் பறந்து போய் காய்கறி கூடையில் தான் விழுந்து கடையையே நாசம் பண்ணுவாங்க ..

6.தீர்ப்பு எழுதறதுக்கு முன்னாடி நொடி ஹிரோ கொலகாரன ஜட்ஜுக்கு முன்னாடி நிறுத்தி,தீர்ப்பை மாத்தி எழுத சொல்றது.

7.கோயில் மணி அடிச்சதும் புறா எல்லாம் பறக்கும்

8.ஹீரோயின் வழுக்கி விழறப்போ ஹீரோ தாங்கி பிடிச்சு தரையில உருளுறது.

9.ஹீரோயின் குளிச்சிட்டு வர்ர நேரமா பாத்து ஹீரோ கட்டிலுக்கு அடில ஒளிஞ்சிருக்குறது.

10.பாகிஸ்தான் காஷ்மீர் தீவிரவாதிக்கு எல்லாம் தமிழ் தெரியறது

11.பாலத்தில் இருந்து, வைக்கோல் நிறைந்த லாரியில் பத்திரமாக குதிப்பது

12.முதல் இரவு காட்சியில் ஹீரோயின் சொம்பு கொண்டுவருவது

13.ஹீரோயினை குழந்தைத்தனமாக காண்பிப்பது, அதைப் பார்த்து ஊருல பாதிப்பொண்ணுங்க லூசு மாதிரி இமிட்டேட் பன்றது

14.ஒரே பாட்டுல அம்பானி ஆவுறது

15.தண்ணிகுள்ளேர்ந்து ஹீரோயின் எந்திருக்கும்போது முடியால தண்ணிய வாரி அடிக்கிறது

16.முதலிரவுல லைட்ட அமத்துறது. விடிஞ்சதும் சூரியன காட்டுறது.

17.யதார்த்தப்பட இயக்குனர்கள் தாடி வளர்த்திருப்பது அவசியம். கண்ணாடியும் இருந்தால் கூடுதல் அழகு. தொலைக்காட்சி பேட்டிகளின்போது பதில் சொல்லமுதல் தாடியை சொறிபவரே அறிவுஜீவி.

18.கிளைமாக்ஸ் க்ரூப் போட்டோ வித் அசட்டு சிரிப்பு சிரிப்பாங்க

- களவாணி பய.

Relaxplzz

இதுவும் நல்ல ஐடியாதான் ! தமிழ்நாட்டு பள்ளிகளிலும் முயற்சிக்கலாம் !!

Posted: 28 May 2015 05:50 AM PDT

இதுவும் நல்ல ஐடியாதான் !
தமிழ்நாட்டு பள்ளிகளிலும் முயற்சிக்கலாம் !!


ஒரு ரஷ்ய ஜோடி, சமீபத்திய இந்தியப்பயணத்தின் போது எடுத்த சிறந்த புகைப்படங்கள் (முக...

Posted: 28 May 2015 05:30 AM PDT

ஒரு ரஷ்ய ஜோடி, சமீபத்திய இந்தியப்பயணத்தின் போது எடுத்த சிறந்த புகைப்படங்கள் (முகம் காட்டாமல், கை பிடித்தவாறு) என அமெரிக்கப் பத்திரிகை ஒன்றில் இன்றைய செய்தி..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


குழந்தைகள் உலகம் எப்போதும் அழகு

Posted: 28 May 2015 05:00 AM PDT

குழந்தைகள் உலகம் எப்போதும் அழகு



மகனே! குழந்தைப் பருவத்தில் உன்னை மீட்டெடுக்க வழியின்றி அறுவை சிகிச்சைக்கு முதன்...

Posted: 28 May 2015 04:57 AM PDT

மகனே! குழந்தைப் பருவத்தில் உன்னை மீட்டெடுக்க வழியின்றி அறுவை சிகிச்சைக்கு முதன் முதலாக
நகையை விற்றேன்..!

முதல் வகுப்பிலேயே உன்னை முதலிடத்தில் உள்ள பள்ளியில் சேர்க்க நன்கொடை கட்டமுடியாமல்
நிலத்தை விற்றேன்..!

அடுத்தடுத்த வகுப்புகளுக்கு ஆடுகளை விற்றேன்..!

மேல்நிலை வகுப்புகளுக்கு மாடுகளை விற்றேன்..!

சுற்றுலா செலவுக்கு சில சமயம் நான்
சுற்றியிருந்த பொருளை விற்றேன்..!

பயணச் செலவுக்கு பல சமயம் என்
பசியை விற்றேன்..!

தேர்வு நாட்களில் உனக்கு தேநீர் கொடுக்கவே என்
தூக்கத்தை விற்றேன்..!

கடைசியில் கல்லூரி படிப்புக்காக
கட்டிய வீட்டையும் விற்றேன்..!

படித்தாய்.. உயர்ந்தாய்.. வளர்ந்தாய்
வாங்கினாய் மீண்டும் எல்லாவற்றையும்..!

இன்று நீ இருப்பதோ மூன்றடுக்கு இல்லத்தில்
நானிருப்பதோ முதியோர் இல்லத்தில்..!

எல்லாம் விற்றும் என்னிடம் இருந்தது இதயம்

எல்லாம் வாங்கியும் உன்னிடம் இல்லாமல்
இருந்தது இதயம்..!

Relaxplzz


"மனம் தொட்ட வரிகள்" - 1

மனதில் நிறுத்தவேண்டிய அறிஞர்களின் பொன்மொழிகள்!! சுவாமி விவேகானந்தர்: உன் வாழ்க...

Posted: 28 May 2015 04:48 AM PDT

மனதில் நிறுத்தவேண்டிய அறிஞர்களின் பொன்மொழிகள்!!

சுவாமி விவேகானந்தர்:

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
*******************************************************************
வில்லியம் ஷேக்ஸ்பியர்:

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
*********************************************************************
அடால்ஃப் ஹிட்லர்:

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
*********************************************************************
ஆலன் ஸ்டிரைக்:

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.
**********************************************************************
அன்னை தெரசா:

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.
************************************************************************
பான்னி ப்ளேயர்:

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
************************************************************************
லியோ டால்ஸ்டாய்:

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
*********************************************************************
ஆப்ரஹாம் லிங்கன்:

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.
*********************************************************************
ஐன்ஸ்டைன்:

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
*********************************************************************
சார்லஸ்:

ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.
***********************************************************************

Relaxplzz


"சிந்தனைகள்"

வாழ்க்கை டுவிட்டரும் பேஸ்புக்கும் மட்டும் அல்ல. வெளி உலகைப் பாருங்கள்.... நிஜ ம...

Posted: 28 May 2015 04:37 AM PDT

வாழ்க்கை
டுவிட்டரும் பேஸ்புக்கும் மட்டும் அல்ல.
வெளி உலகைப் பாருங்கள்....
நிஜ மனிதர்களுடன் பழகுங்கள்.
ஊடகம் ஊறுகாயாக மட்டுமே இருக்கட்டும்.!


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 5

இசைஞானியை எதிரியாகபாவிக்கும் ஒருசில ரகுமான் ரசிகர்களுக்கான பதிவு! பாலு மகேந்திர...

Posted: 28 May 2015 04:22 AM PDT

இசைஞானியை எதிரியாகபாவிக்கும் ஒருசில ரகுமான் ரசிகர்களுக்கான பதிவு!

பாலு மகேந்திரா படத்திற்கு கீபோர்டு வாசிக்க வந்தவர், மது அருந்திவிட்டு வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் இளையராஜா அவரை ஒலிப்பதிவு கூடத்திலிருந்து வெளியே அனுப்பவிட்டார். சில நேரத்திற்கு பின் ராஜாவின் உதவியாளர் ராஜாவிடம், சேகர் சாரின் மகன் இருக்கிறான், சுமாராக கீபோர்டு வாசிப்பான்.. அழைத்து வரவா? என்று கேட்க... ராஜா அழைத்து வாருங்கள் என்று சொன்னவுடன், அச்சிறுவனை அழைத்து
வந்தார்கள்..

ராஜாவின் குறிப்புகளை வாசிக்க சிரமப்படுகிறான் அச்சிறுவன், உடனே ராஜா "அவன் பிஞ்சு விரல்களை" பிடித்து வாசிக்க கற்று கொடுத்தவுடன் சரியாக வாசித்தான் அந்த சிறுவன், படத்திற்கான இசை பதிவு முடிந்தது.

அப்படி ராஜாவின் இசை குறிப்புகளை வாசித்த அந்த சிறுவனின் பெயர் திலீப் (ஏ.ஆர்.ரஹ்மான்). அவர் வாசித்த அந்த படத்தின் பெயர் "மூடுபனி".

- Viruss Simon

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 4

சென்னை மாநகரில் உயிரை விட்ட அநாதைகளுக்கு அன்னையாக இருந்து நல்லடக்கம் செய்யும் ஆ...

Posted: 28 May 2015 04:11 AM PDT

சென்னை மாநகரில் உயிரை விட்ட அநாதைகளுக்கு
அன்னையாக இருந்து நல்லடக்கம் செய்யும் ஆனந்தி அம்மா ..வாழ்த்த வயது இல்லை ...


"உயர்ந்த மனிதர்கள் - நல்ல உள்ளங்கள்"

இப்படியும் சில... 1) வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும். 2)...

Posted: 28 May 2015 03:51 AM PDT

இப்படியும் சில...

1) வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும்.

2) ஆங்கிலம் சரளமா பேசத் தெரிஞ்சவனுக்கு உலகமே தெரியும்.

3) நிறம் கம்மியா இருக்கவனுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது.

4) தமிழ் பேசுறவனுக்கு தமிழைத் தவிர ஒன்றும் தெரியாது.

5) முதல் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் புத்திசாலி.

6) கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் மக்கு.

7) வேட்டிக் கட்டுனவங்க படிக்காதவங்க.

8. கையெழுத்து அழகா இருந்தா எழுதினது பாட்டி வடை சுட்ட கதையா இருந்தாலும் 100 மதிப்பெண்.

9) பொறியியலும் மருத்துவமும் படிப்பவன் மேதை.

10) ஒரு சினிமா வ ஒருதரம் ரசித்துவிட்டால் தொடர்ந்து
அதேபானியில் படம் எடுப்பது.

11) பெற்றோர் பிறந்த நாள் தெரியாதவன், தலைவன் போஸ்டருக்கு பாலூத்தறது.

12) மழை பெய்து தேங்கிய நீரில் நீந்திக் கொண்டே பேருந்து செல்வது .

14) கீழே விழும் புத்தகத்தை பெண்ணிடம் எடுத்துக் கொடுத்ததும் காதல் வருவது.

15) அரசியல்வாதி ஆவதற்கு அதிகப்பட்ச தகுதி TV சேனல் ஆரம்பிப்பது.

16) பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது வீரம் சாகசம்னு நினைப்பது.

17) நகைக் கடைகளுக்கு நடிகைகளை வச்சு மட்டுமே திறப்புவிழா நடத்துவது.

18) இடுப்பு வலி வராத கர்ப்பிணிக்கும் பணத்திற்காக சிசேரியன் செய்வது.

19) பரிட்சை எழுதாதவனுக்கு "பாஸ்" என்று தேர்வு முடிவு வருவது.

20) இலவசங்களுக்காகவும் பணத்திற்காகவும் தன் உரிமை அறியாமல் ஓட்டை விற்பது.

21) Ambulance உம் , காவல் துறையும் அழைத்ததும் வருமோ இல்லையோ pizza வருவது.

22) இலவசமா கிடைக்கற அரிசி தரமில்லாம இருக்கும். இலவசமா கிடைக்கற sim card credit (balance) oh da இருக்கும்.

23) கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் வாகனக் கடனின் வட்டி விகிதத்தை விட அதிகம்.

24)இட்லி ஒரு ரூபாய்க்கும் குடி தண்ணீர் 40 ரூபாய்க்கும் விற்கப்படுவது .

25) குடி தண்ணீருக்கு பஞ்சமுண்டு. சாரயத் தண்ணீருக்கு பஞ்சமில்லை.

26)மின்சாரம் தட்டுப் பாட்டிலும் AC பேருந்து நிறுத்தம் அமைக்கும் அளவிற்கு பெருந்தன்மை இருப்பது.

27)வடக்கே படிப்பவனுக்கு வேலு நாச்சியாரைத் தெரியாது. தெற்கே படிப்பவனுக்கு ஜான்சி ராணி முதல் அனைவரையும் தெரிந்து இருப்பது.

28)சட்டசபை போவாங்க சட்டகிழிய சண்டை போடறதுக்கு மட்டும். அதுக்கு கூட முன்ன நாலு கார் பின்ன நாலு கார் கண்டிப்பா போகணும்.

29) இலவசங்களை காட்டி காட்டியே மக்களை அடிமைப் படுத்த நினைப்பது.

30) ஆ ஊ னா தற்கொலை பண்ணிக்கறது.

31) பதவியில் இருந்துக் கொண்டு தன் சொந்த விருப்பு வெறுப்புகளையும் அரசியல் ஆக்குவது.

32) நான்கு வாரங்களில் சிவப்பழகு, முடியால் மலையைக் கட்டி இழுக்கலாம் என்று மடத்தனமாக விளம்பரம் செய்வது.

இன்னும் நமக்கே நமக்குன்னு நிறைய இருக்கு. நான் இதோடு நிறுத்திக்கிறேன்.

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 5

கோடையில் இவையெல்லாம் விளையாடிய. ...நினைவுகள். .....

Posted: 28 May 2015 03:35 AM PDT

கோடையில் இவையெல்லாம் விளையாடிய. ...நினைவுகள். .....


அந்தக் காலத்தில

'பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்!' கார் பழுது பட்டதால், டாக்சியில் ஏறி கட்சி...

Posted: 28 May 2015 03:22 AM PDT

'பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்!'

கார் பழுது பட்டதால், டாக்சியில் ஏறி கட்சி அலுவலகத்துக்கு வந்தார் காமராஜர். டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பும்படி உதவியாளரிடம் கூறி விட்டு,தன் அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தார். உதவியாளர் டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து இரசீது பெற்றுக் கொண்டார்.

அன்றைய வரவு செலவினைச் சரிபார்த்த காமராஜர், டாக்சிக்கு கொடுத்த பணம் அதிகம் என உணர்ந்து உதவியாளரைச் சாடினார்.

"டாக்சி மீட்டர் எவ்வளவு ரூபாய் காட்டியது என்று பார்த்தாயா?" - காமராஜர்.

"டாக்சி டிரைவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன் ஐயா."

"நீ மீட்டரைப் பார்த்து, அதன் படிதானே பணம் தர வேண்டும்? மீட்டரைப் பார்க்காமல், டாக்சி டிரைவர் கேட்ட ரூபாயை நீ கொடுக்கலாமா? இது பொதுப்பணம் இல்லையா? அஞ்சு ரூபாய், பத்து ரூபாய்ன்னு, பொது மக்கள் கிட்ட வசூலிச்ச பணத்தை நாம நெருப்பு மாதிரிக் கையாளணும். சிக்கனமாகச் செலவழிக்கணும். கட்சிப் பணத்தை, காமராஜர் தன் இஷ்டத்துக்குச் செலவு பண்ணி, வீணாக்கிட்டார்னு குற்றச்சாட்டு வரக் கூடாது," எனக் கூறினார்.

Relaxplzz


"காமராஜர் ஒரு சகாப்தம்"

கொடுப்பவர் கை என்றும் உயர்ந்தே இருக்கும் - Selvaraj Selva

Posted: 28 May 2015 03:11 AM PDT

கொடுப்பவர்
கை
என்றும்
உயர்ந்தே
இருக்கும்

- Selvaraj Selva


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 4

Posted: 28 May 2015 03:05 AM PDT


தாத்தா, நா சொல்லிக் குடுத்த மாதிரியே குதிக்கிறியே, குட் பாய்.. :D :D - Geeta I...

Posted: 28 May 2015 03:00 AM PDT

தாத்தா,
நா சொல்லிக் குடுத்த மாதிரியே குதிக்கிறியே, குட் பாய்.. :D :D

- Geeta Ilangovan


"குட்டிப் பட்டாளம்" - 1

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது... மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கிய...

Posted: 28 May 2015 02:49 AM PDT

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும்,

உடல்வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ] பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்

கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை

நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை

நம்பிக் காண் .

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,

பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு

ஓங்குயிர் தெற்கு

மத்திமம் மேற்கு

மரணம் வடக்கு

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.

தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.

மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி

தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,

இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும்

அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்

(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது,

தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை

நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.

இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்

வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான

வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.

இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.

இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.

இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்

சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.

Relaxplzz


"சில அதிசயங்கள் - தகவல்கள்" - 2

சிறுவயதில் இப்படி அப்பாவுடன் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 28 May 2015 02:26 AM PDT

சிறுவயதில் இப்படி அப்பாவுடன் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


ஞாபகம், அனுபவம் இருக்கா..?

பாக்யராஜ்...தன்னம்பிக்கை மிக்கவர்...வைரமுத்து! பாக்யராஜுக்குள் பதுங்கி இருக்கும...

Posted: 28 May 2015 02:02 AM PDT

பாக்யராஜ்...தன்னம்பிக்கை மிக்கவர்...வைரமுத்து!

பாக்யராஜுக்குள் பதுங்கி இருக்கும் நடிகரை, கலைஞரை, இயக்குநரை, தயாரிப்பாளரைக் கொஞ்சம் மறந்து விட்டு. அவருக்குள் இருக்கும் எழுத்தாளரை அதிகமாகய் அடையாளம் காண ஆசைப்பட்டேன்.

பாரதிராஜா அடித்தல் திருத்தல் இல்லாமல் என்னிடம் அடிக்கடி சொல்லும் ஒரே வாசகம் "எங்கிட்ட இருந்த ஒரே ரைட்டர் பாக்யராஜ்தான்; அவர்தான் ரைட்டர்" சிகரங்களை பறந்து அடைவது ஒரு வகை. சிகரங்களை நடந்து அடைவது ஒரு வகை. ஆனால் பாக்யராஜ் சிகரங்களை அடைந்தது ஊர்ந்து... ஊர்ந்து...தான் பலவீனங்களையே பலங்களாக மாற்றியதே அவர் பலம். தான் உதிர்த்த இலைகளையே தன் வேர்களுக்கு உரமாக்கிக் கொள்கிற விருட்சம் மாதிரி தன் பலவீனங்களையே பலங்களாய் மாற்றிக் கொள்கிற ரசவாதம் அவரைப் பல சந்தர்ப்பங்களில் பாதுகாத்தே வந்திருக்கிறது.

அவர்தான் பழைய வாழ்க்கையை மறக்கவில்லை. தன் மீதுள்ள தழும்புகளை அவர் மறைக்கவில்லை. வளர்ந்த பிறகு இங்கே பலர் தாங்கள் புழுதியின் புத்திரர்கள் என்பதை ஒப்புக் கொள்வதில்லை. தங்களின் நிகழ்காலப் பொன்னாடைகளால் பழைய கோவணங்களை மறைக்கவே நினைக்கிறார்கள். பாக்யராஜ் தன்னம்பிக்கை மிக்கவர். இன்று தங்கத்திரை போட்டுக்கொள்ள முடியும் என்பதற்காக - தன் இறந்த காலக் கந்தல்களை அவர் மறைக்கவில்லை.

"என் பாட்டி சாணி தட்டிக் கொண்டிருந்தபோது" என்று தான் தன் மலரும் நினைவுகளை அவர் ஆரம்பிக்கிறார். பாலுணர்ச்சிகள் பாதிக் கண் விழிக்கத் தொடங்கிய பருவத்தில் பள்ளி மாணவிக்கும் காதல் கடிதம் எழுதிக் கன்னம் கிழிந்த கதையைப் புன்னகையோடு புலப்படுத்துகிறார். விஜயவாடாவில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டிய சம்பவங்களை சபையில் அறிவிக்கிறார். அந்த இறந்த காலப் பக்கங்களை ஈரத்திலிருந்துதான் நிகழ்காலத்துக்கு நீர் கிடைக்கிறது என்பதை அவர் நினைத்துப் பார்க்கிறார்.

அவரிடம் நான் குறிப்பெடுத்துக் கொண்ட குணங்களுள் ஒன்று மிகையின்மை. கதை, நடிப்பு, கலைவாழ்க்கை, நடவடிக்கை இவற்றில் எதிலுமே ஒர மில்லிகிராம் கூட அவர் மிகை காட்டியதில்லை. தான் கதாசிரியன் மட்டுமில்லை. இயக்குநர் என்று நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது வென்றும் காட்டினார். யாரையும் சார்ந்திருப்பது ஒரு சாபம். சுயமாய் நிற்க முடியாதா என்று ஒரு சுடு கேள்வி பிறந்தபோது தான் தயாரிப்பாளராகவும் முடியும் என்று சாதித்துக் காட்டினார்.

முதல் மனைவி மறைந்தபோது பாக்யராஜின் இடம் வெற்றிடமாகி விடுமோ என்று காரணமுள்ள ஒரு கவலைப் பிறந்தபோது பூர்ணிமா என்ற அறிவார்ந்த பெண்மணியைத் துணைவியாக்கிக் கொண்டு நிரப்ப முடியாத இடத்தை நிரப்பிக் காட்டினார்.

தன் படத்துக்கு தானே இசையமைத்துக் கொள்ள வேண்டும் என்று தவிர்க்க முடியாத முடிவுக்கு அவர் தள்ளப்பட்ட போது அதுவரை தொட்டுப் பாத்திராத ஆர்மோனியத்தை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். இந்தியாவின் விலை உயர்ந்த தற்கொலை என்று கருதப்படுகிற பத்திரிகைத் துறையிலும் நுழைந்து தன்னையும் காப்பாற்றி தன் பத்திரிகையையும் காப்பாற்றி இரவு பகலாய் புத்தி தானமும், ரத்த தானமம் செய்து உழைக்கச் சலிக்காமல் நிலைக்கச் செய்திருக்கிறார்.

பயிற்சியும் முயற்சியும் இருந்தால் இந்த வானத்தின் கீழ் எதுவும் சாத்தியம் என்பதற்குத் தடுத்து விட முடியாத எடுத்துக்காட்டு என்றே பாக்யராஜை நான் பார்க்கிறேன். தான் பள்ளத்தில் கிடந்தபோது பரிமாறியவர்களுக்கெல்லாம் மேட்டுக்கு வந்த பிறகு கை கொடுத்திருக்கிறார். சிலர் இவரால் மேட்டுக்கு வந்திருக்கிறார்கள். சிலரால் இவர் பள்ளத்துக்கும் போயிருக்கிறார்.

ஒரு நாள் இரவு ஏழு மணிக்குப் போனவன் நள்ளிரவு ஒரு மணி வரைக்கும் அவரோடு உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் சொல்லிய கருத்து ஆட்டோ கிராபில் எழுதித் தர வேண்டிய அற்புதமான கருத்தாகப்பட்டது. "தொடர்ந்து வெற்றி மட்டும் போதாது. மனிதனுக்கு தோல்வியும் தேவை. தொடர்ந்து வெற்றியே வந்தால் அது அதிர்ஷ்டம் என்று கொச்சைப்டுத்தப்படும். தோல்வியும் வந்தால்தான் பெற்ற வெற்றி உழைப்பினால் வந்த ஊதியம் என்ற உண்மை விளங்கும்.

தோல்வி கூட வெற்றிக்குக் கிடைக்கிற வெளிச்சம் என்று புரிந்து வைத்திருக்கிற பக்குவம் கண்டு பூரித்துப் போனேன்.

அவர் அஸ்திவாரம் பெரிது; ஆற்றல் பெரிது; அனுபவம் பெரிது. அவர் ஒரு நாளும் ஓய்ந்து போக மாட்டார். அவர் அவ்வளவுதான் என்று யாரும் எப்போதும் முடிவுகட்டி விட முடியாது. ராத்திரி வந்தவுடன் நட்சத்திரங்களெல்லாம் கூடி 'சூரியன் அவ்வளவுதான்' என்று முடிவு கட்டி விட முடியுமா என்ன?

Relaxplzz


"சாதனையாளர்கள்"

"அப்பா வண்டு" கிடந்தது சுவரோரமாய் ஒரு கரு வண்டு . "எப்பப்பா போகும் இது அவுங்க வ...

Posted: 28 May 2015 01:50 AM PDT

"அப்பா வண்டு"

கிடந்தது
சுவரோரமாய்
ஒரு கரு வண்டு
.
"எப்பப்பா போகும்
இது
அவுங்க வீட்டுக்கு?"
.
எதையாவது கேட்பாள்
சின்ன மகள்
எப்போதும்
.
"எழுந்ததும் போகும்"
சமாளிப்பேன்
இப்படித்தான்
.
விடவில்லை
.
"இது
அப்பா வண்டா?
அம்மா வண்டா?"
.
"அப்பா வண்டு"
சொல்லி வைத்தேன் சும்மா
.
"அப்பா வண்டுன்னா சரி
எப்ப வேனாலும் போகலாம்
வீட்டுக்கு"

- இரா எட்வின்

Relaxplzz


"கவிதைச் சாலை" - 1

இப்படி மாடுகளை உருவாக்கிவிட்டால் பசுவதையைத் தடுத்துவிடலாம் Future of robotics...

Posted: 28 May 2015 01:43 AM PDT

இப்படி மாடுகளை உருவாக்கிவிட்டால் பசுவதையைத் தடுத்துவிடலாம்

Future of robotics - Boston Dynamics.



சரியான கோயில்க்கு போய் குழந்தை வரம் கேட்டுப்பாருங்க நிச்சயம் வரம் கிடைக்கும் அ...

Posted: 28 May 2015 01:34 AM PDT

சரியான கோயில்க்கு போய் குழந்தை வரம் கேட்டுப்பாருங்க நிச்சயம் வரம் கிடைக்கும்

அந்தக் கோயில்கள் - அனாதை இல்லங்கள்.. :)

- Kalimuthu


ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 3

0 comments:

Post a Comment