Monday, 18 May 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


தகவல் துணுக்குகள் 01. ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ 02. வேர் இல்லாத தாவரம் -...

Posted: 18 May 2015 03:10 AM PDT

தகவல் துணுக்குகள்

01. ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ

02. வேர் இல்லாத தாவரம் - இலுப்பை

03. உலகில் வறுமையான நாடு - ருவாண்டா

04. விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து

05. ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4

06. ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ

07. அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204

08. உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு – பனாமா

09. உலகில் மின் தடை இல்லாத நாடு - குவைத்

10. மூன்று அடிப்படை நிறங்கள் - சிவப்பு , மஞ்சள் , நீலம்

11. 365 நாட்கள் கொண்ட ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் - வாழசவா

12. உலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு - பராகுவே (தென்அமெரிக்கா )

13. பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - இந்தியா

14. சத்தில்லாத உணவு - நீர்

15. கலப்படம் செய்யமுடியாத உணவுப்பொருள் - கோழிமுட்டை

16. பசுமைப்புரட்சி ஏற்பட்ட வருடம் - 1960 தாயகம் - மெச்சிக்கோ

17. அமெரிக்க பசுமைப் புரட்சியின் பிறப்பிடம் - பொஸ்டன்

18. உலகில் மிக பிரபலமான பொழுதுபோக்கு - தபால் தலை சேகரிப்பு

19. சுத்தமான தங்கத்தின் கரட் - 24கரட்

20. கடல் நீர் நீலமாக இருக்கும் அளவு - 10 அடி

Relaxplzz

துருக்கி நாட்டில் நடந்த உண்மை சம்பவம். இரண்டு வயதே ஆன தங்கள் பெண் குழந்தைக்கு த...

Posted: 17 May 2015 06:00 PM PDT

துருக்கி நாட்டில் நடந்த உண்மை சம்பவம்.

இரண்டு வயதே ஆன தங்கள் பெண் குழந்தைக்கு திடீரென்று நோய் ஏற்பட்டதால் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தையை காப்பாற்றுவது சற்று கடினமே என்றனர்.
ஆனால் இதே நோயால் இதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட ஒருவரின் இரத்தம் பெறப்பட்டு குழந்தைக்கு ஏற்றப்பட வேண்டும் அப்படி செய்தால் குணமாவதற்கு வாய்ப்புகள் உண்டு.

இரத்தத்திற்கு நீங்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோரிடம் தெரிவித்தனர்.
பெற்றோர்களின் முகத்தில் உடனே ஒரு நம்பிக்கை ஒளி பிறந்தது.

தற்போது ஐந்து வயதிலுள்ள அவர்களது இன்னொரு மகன் குழந்தைப் பருவத்தில் அதே நோய்க்குள்ளாகி அபூர்வமாக குணமடைந்திருந்தான். இதை மருத்துவர்களிடம் சொன்ன போது மருத்துவர்களுக்கும் நம்பிக்கை அதிகரித்தது.

மருத்துவர்கள் சிறுவனை உட்கார வைத்துவிட்டு அன்பாக நிலமையை எடுத்து சொல்லி, "உனது தங்கையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரத்தம் வழங்க விருப்பமா" என்று கேட்டனர். சிறுவன் சிறிது நேரம் மௌனமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

பிறகு என் ரத்தம் எடுத்து அவளுக்கு கொடுப்பதின் மூலம் அவள் காப்பாற்றப்படுவாள் என்றால் தாராளமாக எடுத்து கொள்ளுங்கள் என்றான். சிறுவனிடமிருந்து இரத்தம் பெறப்பட்டு நேரடியாக குழந்தைக்கு ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

சிறுவனுக்குப் பக்கத்தில் பெற்றோரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பெற்றோர் சிறுவனைதைரியம் ஊட்டி கொண்டிருந்தனர். பின்னர் இரத்தப் பரிமாற்றம் ஆரம்பமானது.சிறுவன் புன்முறுவலுடன் தனது தங்கையுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

நேரம் செல்லச்செல்ல குழந்தையிடமிருந்து அசைவுகள் தெரிய ஆரம்பித்தன. ஆனால் சிறுவனது முகம் வாடிக்கொண்டே சென்றது. சிறுவன் மருத்துவரை பார்த்து,
"டாக்டர், இறக்கும் போது கஷ்டமாக இருக்குமா!?"
என்று சோகமான குரலில் கேட்டான்.

சிறுவனின் இந்த கேள்வியால் பெற்றோர்கள்மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே டாக்டர், 'ரத்தம் கொடுப்பதால் இறப்பதற்கு வாய்ப்பு இல்லை' என்பதை சிறுவனிடம் எடுத்துக் கூறினார்.

"சிறுவன், ஆரம்பத்தில் தனது உடம்பிலிருந்து முழு இரத்தத்தையும் எடுக்கப்போவதாக நிணைத்திருந்தான்.
தன் தங்கைக்காக தனது உயிரையே தியாகம் செய்ய முன்வந்திருந்தான் " யாருக்கு வரும் இந்த தியாக உணர்வு.."

அவன் தியாக உணர்வை கண்டு பெற்றோரும்,
செவிலியர்களும் மருத்துவரும் கண்ணீர் சிந்தினர்.

Relaxplzz

0 comments:

Post a Comment