Monday, 20 April 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Posted: 20 Apr 2015 08:10 AM PDT


இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்...

Posted: 20 Apr 2015 08:10 AM PDT

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்..!
ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.
சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.
இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும். அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள்.
இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம்.அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும். அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.
இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள். நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை.


ஓவரா போட்ட seen பெண்ணுக்கு நடந்த கதியை சிரிக்காமல் பாருங்கள் வீடியோ இணைப்பு

Posted: 20 Apr 2015 08:10 AM PDT

ஓவரா போட்ட seen பெண்ணுக்கு நடந்த கதியை சிரிக்காமல் பாருங்கள் வீடியோ இணைப்பு


ஓவரா போட்ட seen பெண்ணுக்கு நடந்த கதியை சிரிக்காமல் பாருங்கள் வீடியோ இணைப்பு
www.indiasian.com
new Worst Twerk Fail Ever

Posted: 20 Apr 2015 07:11 AM PDT


தீக்காயம் ஏற்பட்டு விட்டதா? மருந்தை தேடி அலைய வேண்டாம்...! தீக்காயம் பட்ட உடன்,...

Posted: 20 Apr 2015 06:10 AM PDT

தீக்காயம் ஏற்பட்டு விட்டதா? மருந்தை தேடி அலைய வேண்டாம்...! தீக்காயம் பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள்... பின்னர் ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மீது முழுவதும் படரும் படி தடவுங்கள்... சிறிது நேரத்தில் வெள்ளைக்கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது... சிறிது நேரத்தில் வலி முற்றிலும் குறைந்து விடும்... தொடர்ந்து செய்து வந்தால்..... அடுத்த 10 நாட்களில் காயத்தின் தடயம் மறைந்து விடும்.... {தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் பயன்படுத்தும் யுக்தியும் இதுவே....} நீங்கள் செய்யவேண்டியவை இந்த பதிவை உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் !! விழிப்புணர்வு செய்யுங்கள் !!! நன்றி


Posted: 20 Apr 2015 06:10 AM PDT


Posted: 20 Apr 2015 06:06 AM PDT


Posted: 20 Apr 2015 06:00 AM PDT


Posted: 20 Apr 2015 05:10 AM PDT


கரப்பான் பூச்சி பிறப்பதை நீங்கள் பார்த்ததுண்டா? பார்க்காதவர்கள் இந்த வீடியோவில்...

Posted: 20 Apr 2015 05:10 AM PDT

கரப்பான் பூச்சி பிறப்பதை நீங்கள் பார்த்ததுண்டா? பார்க்காதவர்கள் இந்த வீடியோவில் பாருங்கள்


கரப்பான் பூச்சி பிறப்பதை நீங்கள் பார்த்ததுண்டா? பார்க்காதவர்கள் இந்த வீடியோவில் பாருங்கள்
www.indiasian.com
Discovery Hissing Cockroach Birth

தான் எழுதிய கவிதையில் கையெழுத்திடுகிறாள் அன்னை... மழலையின் கன்னத்தில் திருஷ்டிப்...

Posted: 20 Apr 2015 04:11 AM PDT

தான் எழுதிய கவிதையில் கையெழுத்திடுகிறாள் அன்னை... மழலையின் கன்னத்தில் திருஷ்டிப்பொட்டு!


Posted: 20 Apr 2015 04:10 AM PDT


கோபத்தை கட்டுப்படுத்த எதற்கும் எப்போதும் கோபப்படுபவராநீங்கள், கோபம்வந்தால் செய்வ...

Posted: 20 Apr 2015 03:11 AM PDT

கோபத்தை கட்டுப்படுத்த
எதற்கும் எப்போதும் கோபப்படுபவராநீங்கள், கோபம்வந்தால் செய்வதையும், சொல்வதையும் கட்டுப்படுத்த முடியவில்லையா? கிடைத்ததை யெல்லாம் தூக்கிப்போட்டு உடைக்கிறீர்களா?
அப்படியெனில் நீங்கள் பலவிஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. கோபம் எல்லோருக்கும் வருவது இயற்கை, ஆனால் அளவுக்கு அதிகமானகோபம் கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம் என்பதில் சந்தேகம் இல்லை. அளவுக்கு அதிகமாக கோபம்வர பல்வேறு காரணங்கள் உண்டு.
இயலாமை, தாழ்வுமனப்பான்மை, தன்னம்பிக்கைகுறைவு, என்பது இவற்றில் ஒரு சில என்றாலும் கோபப்படுவதற்கு பலகாரணங்கள் இருக்கலாம். எனவே கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியவழிகளும் பல உள்ளன. அளவுக்கு அதிகமான கோபத்தை கட்டுப்படுத்த சிலவழிகளை இங்கு காணலாம்.
நாவடக்கம் அவசியம்:
வாயில் இருந்து சொற்கள் விழுந்து விட்டால், அவற்றை திரும்ப எடுக்க முடியாது என்பது மிகச்சரியான ஒன்றாகும். கோபப்பட்டு ஒருவரை ஒருவார்த்தை பேசிவிட்டால் அதனை சரி செய்வது இயலாத ஒன்று ஆகும். அப்போதைக்கு இதற்கு பரிகாரம் காணப்பட்டாலும் பின்னர் அந்தவார்த்தைகள் மனரீதியான உறுத்தலை அளிப்பது இயல்பு. நீண்டநெடிய சொந்தபந்தங்களையும் கோபத்தால் ஒரு சிலவார்த்தைகள் பேசிவிட்டால் அவை உடைந்து போக வழி வகுக்கும். எனவே கோபப்படும் போது அதிகபட்சம் பேசாமல் நாவடக்கத்துடன் இருப்பது நல்லது.
மனதையும் அடக்கலாம்
ஒருவர் தனது மனதைகட்டுப்படுத்த முயன்றால் எதனை வேண்டு மானாலும் சாதிக்கலாம். கோபப்படும் போதும் மனதைகட்டுப் படுத்துவது அவசியம். அவ்வாறு செய்தால் வாயில் இருந்து கண்டபடி வார்த்தைகள் உதிர்வது தடுக்கப்படும். நன்றாக யோசித்து பேச வேண்டியதை மட்டும் பேசலாம். இதனை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். கோபம்வரும் போது 6ல் இருந்து தலைகீழாக எண்ணுங்கள். கண்களை மூடியபடி உள்ளேயும், வெளியேயும் மூச்சுவிட்டு பாருங்கள், வாழ்க்கையில் கடந்து சென்ற நல்ல நிமிடங்களை எண்ணிப் பாருங்கள். இதன் மூலம் ஏற்படுகின்ற சிந்தனை யோட்டத்தில் வரும்மாற்றம் கோபத்தைகட்டுப் படுத்தும்.
சுயபரிசோதனை செய்யுங்கள்:
யாருக்காக, எதற்காக, எப்போது கோபப்பட்டோம்? கோபம்வரும் போது என்ன செய்தோம்? மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கோபம் நம்மைபாதிக்கிறதா? அளவுக்கு அதிகமான கோபத்தால் சொந்தபந்தங்கள் அகன்று போகிறார்களா? இது போன்ற கேள்விகளுக்கு விடைகளை அறியப்பாருங்கள், இதனை ஒரு வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், இது உங்கள் கோபத்தை குறைக்க செய்யும்.
உடல்மொழியும் அவசியம்:
கோபமாக பேசவில்லை என்பது மட்டுமில்லாமல் வேகமாக நடப்பது, கதவை இழுத்து மூடுவது, கிடைத்ததை தூக்கிப் போட்டு மிதிப்பது, மேல் நோக்கிபார்த்து முனங்குவது போன்ற செயல்பாடுகள் நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள் என்பதைசுட்டிக் காட்டும். எனவே இதனையும் செய்யாமல் தவிர்க்க வேண்டும். நாம் இவ்வளவு சொல்லியும் கோபப்பட வில்லை என்று மற்றவர்கள் மூக்கின் மீது விரல்வைக்க செய்வதும் ஒரு கலைதான்
.
சந்தோஷவழியை தேடுங்கள்:
மனதில் சந்தோஷம் வருகின்ற வழிகளை தேர்வு செய்வதன் மூலம் உங்களுக்கு கோபம் வருகின்ற வழிகளை மூடசெய்யலாம். வாழ்க்கையை அர்ப்பணிப்புடன் எதிர்கொள்பவர்களுக்கு இதுமிகவும் எளிமையான ஒன்றாகும். எத்தனை பெரியபிரச்னைகள் வந்தாலும் அதனை எளிமையாககையாள உங்களால் முடியும். சாதாரண விஷயங்களையும் கோபப்பட்டு பிரச்னையை பெரிதாக்குவதை விட்டுசந்தோஷ முள்ளமனதை உருவாக்க வேண்டும்.
கோபத்தோடுஇருக்கும்போதுஎடுக்கின்றமுடிவுகள்எப்போதும்சரியாகஇருக்காதுஎன்பதைஉணரவேண்டும். முன்கோபம் ஒன்றுக்கும் தீர்வு ஆகாது. அது மனதையும், உடலையும் நாளடைவில் பாதிக்கும் என்பதில்சந்தேகம் இல்லை. கோபத்தோடு எழுகிறவன் நஷ்டத்தோடு உட்காருவான் என்று ஒருபழ மொழி உண்டு. இன்னும் கோபத்தை கட்டுப்படுத்த முடிய வில்லை என்றால் நிபுணரின் ஆலோசனையை பெற்றுக் கொள்வது அவசியம்.

Posted: 20 Apr 2015 02:56 AM PDT


Posted: 20 Apr 2015 02:11 AM PDT


செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்; இனி கூகுளில் தேடலாம்: புதிய ஆப்ஸ் அறிமுகம் ம...

Posted: 20 Apr 2015 02:10 AM PDT

செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்; இனி கூகுளில் தேடலாம்: புதிய ஆப்ஸ் அறிமுகம்

மென்லோ பார்க்: ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் தொலைந்தால், இனி கூகுளில் தேடி கண்டுபிடிக்க முடியும். தற்போது ஸ்மார்ட் போன்கள் தொலைந்து போனால் கூகுளில் தேடி கண்டுபிடிக்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதற்கென அப்ளிகேசன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் செல்போனில் நிறுவிக்கொண்டு, அதில் கூகுள் கணக்கின் வழியே உங்கள் ஸ்மார்ட்போன், டேப்லட் அல்லது கணினி ஆகியவற்றின் தகவல்களை இதில் பதிவு செய்ய வேண்டும்.

கூகுளில் தேடுவது எப்படி?

கூகுள் தேடல் பக்கத்தில் Find My Android Phone! என்று டைப் செய்ததும் வரும் திரையில் தொலைந்து போன ஆண்ட்ராய்டு செல்போனின் தகவலை குறிப்பிட்டால் அது எங்கிருக்கிறது என்பது பற்றிய தகவல்கள் தெரிந்துவிடும். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வளவு தொலைவில் உங்கள் போன் இருக்கிறது என்பது உள்ளிட்ட தகவல்களை இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்வதன் மூலம் கண்டுபிடித்து விடலாம்.

மொபைல் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்தால் அதில் இருக்கும் 'ரிங்' என்ற வசதியை பயன்படுத்தி, உங்கள் மொபைலை செயல்படாமல் பூட்டி வைக்க முடியும். தேவைப்பட்டால் போனில் உள்ள தகவல்களை அழிக்கவும் முடியும். இந்த சேவை முன்னதாகவே ஆப்பிள் ஐபோனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


பாம்பிற்கு பால் ஊற்றுவதன், முட்டை வைப்பதன் காரணம் என்ன? அட கொக்கமக்காக்களா...? இ...

Posted: 20 Apr 2015 02:10 AM PDT

பாம்பிற்கு பால் ஊற்றுவதன், முட்டை வைப்பதன் காரணம் என்ன?
அட கொக்கமக்காக்களா...? இது தெரியாம பாம்பு புத்துக்க முட்டை பாலை ஊத்தியிருக்கேன் எண்டு நினைப்பீர்கள்..!
காலங்காலமாக பாம்புக்கு பால் மற்றும் முட்டை வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. விஞ்ஞான ரீதியாக பார்த்தால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது. பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?
ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள், அதாவது மனிதர்களை விட பாம்புகள் அதிகம் இருந்தது.
ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை. எனவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.
பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.
பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது, எனவே அதனால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இது தான் உண்மையான காரணம்.


என்னமா இப்படி ஆடுறிங்கள் ! பட்டையக் கிளப்பும் பிரான்ஸ் தமிழ் பெண்களின் டான்ஸ்

Posted: 20 Apr 2015 02:10 AM PDT

என்னமா இப்படி ஆடுறிங்கள் ! பட்டையக் கிளப்பும் பிரான்ஸ் தமிழ் பெண்களின் டான்ஸ்


என்னமா இப்படி ஆடுறிங்கள் ! பட்டையக் கிளப்பும் பிரான்ஸ் தமிழ் பெண்களின் டான்ஸ்
www.indiasian.com
france girls wedding small performance

கமலின் கடைசி புத்திரி பதித்திருக்கும் Tattoo வை பாருங்கள் வீடியோ

Posted: 20 Apr 2015 01:50 AM PDT

கமலின் கடைசி புத்திரி பதித்திருக்கும் Tattoo வை பாருங்கள் வீடியோ


கமலின் கடைசி புத்திரி பதித்திருக்கும் Tattoo வை பாருங்கள் வீடியோ
www.indiasian.com
10,781,214 views

Posted: 20 Apr 2015 01:10 AM PDT


Posted: 20 Apr 2015 12:11 AM PDT


"இலவச இணையம்" காத்திருக்கும் ஆபத்து.. விழித்துக்கொள்ளுங்கள்.. Net Neutrality - இ...

Posted: 20 Apr 2015 12:10 AM PDT

"இலவச இணையம்" காத்திருக்கும் ஆபத்து..
விழித்துக்கொள்ளுங்கள்..
Net Neutrality - இணைய நடுநிலை Net Neutrality என்றால் அனைத்து
இணையதளங்களும் நிலையான வேகம்
நிலையான கட்டணம் என்று இணையத்தில்
நடந்துகொள்ள ஒரு விதி.இது தான்
பொருள் ....
ஆனா உண்மை என்னன்னா முதலில் இதன் பயன்கள் என்ன ??? என்று பார்ப்போம் ....
இலவச இன்டர்நெட் !!!
வாயை பிளக்காதீர் ...
உண்மை தான் உங்க போனில் பத்து காசு
இல்லேன்னா கூட இலவசமா நீங்க இன்டர்நெட்
பயன்படுத்தலாம் !!!
அது எப்படி ஏர்டேல்லோ எந்த நெட்வொர்கோ
இலவசமா இன்டர்நெட் கொடுப்பான் ???
அதுக்கும் பதில் இருக்கு....
நீங்க TOLL FREE நம்பர் பயன்படுத்தி இருகிறீர்களா ???
அதாவது இலவசமா போன் பண்ணி பேசும்
எண் .. ..
அந்த TOLL FREE நம்பர் கான்செப்ட் என்னன்னா
நீங்க இலவசமா பேசிக்கலாம் நீங்க
பேசினதுக்கு அந்த கம்பெனிகாரன் உங்க
தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு
காசு கொடுத்துருவான் ...
அதே மாதிரி தான் நீங்க இலவசமா பயன்படுத்த போகும் இணையதளம் உங்க தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு
காசு கொடுத்துருவான் ...
சில மாதங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் கூட இப்படி ஒரு திட்டம் கொண்டுவந்தது
internet.org என்ற இணையத்துக்குள் சென்று நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் இலவசம்
என்று ..
அதே மாதிரி தான் இப்ப AIRTEL ZERO என்ற
ஒன்றின் மூலம் Net Neutrality யை கொண்டுவராங்க !!
ஏன் எல்லா வெப்சைட்டும் இலவசமா ????
அங்க தான ஆப்பு காத்து இருக்கு !!!
எந்த எந்த இணையதள கம்பெனி தொலைத்தொடர்பு நிறுவனத்துடன்
ஒப்பந்தம் செய்து இருக்கோ அது மட்டும்
தான் இலவசம் ....
எடுத்துக்காட்டுக்கு FLIPKART நிறுவனம் AIRTEL உடன் ஒப்பந்தம்
செய்துள்ளது - நீங்க FLIPKART தளத்தை
மட்டும் இலவசமா பயன்படுத்திக்கலாம் !!!
யார் யார் ஒப்பந்தம் செய்யறாங்களோ அதெல்லாம் இலவசம் !!
அப்ப மத்த இணைய சேவைக்கு பணம்
கட்டினா வேலை செய்யுமா ????
அங்கயும் ஒரு ஆப்பு இருக்கு - பணம் கட்டி
சேவையை பெறுவதா இருந்தாலும் (எ.க)
வாட்ஸ் அப் க்கு தனியாவும்,ஸ்கைப்க்கு
தனி வைபருக்கு
தனின்னு கலெக்ட் பண்ணுவாங்க அப்பு !!!
இல்லைனா PACKAGE மாதிரி பணம்
கட்டனும் !!!
நீங்க ஒரு வீடியோவ இலவசமா பார்க்கணும்னா கூட உங்க மொபைல்
ஆப்பரேட்டர் மனசு வைக்கணும் !!!
இல்லைனா
பணம் கட்டி தான் பார்க்கணும் !!!
பேஸ்புக் ,ட்விட்டர் போன்ற சமூக தளங்கள்
முதலில் ஒப்பந்தம் போட்டு இலவசமா நீங்க
பயன்படுத்தினாலும் நாளைக்கு அந்த
ஒப்பந்தத்தை ரத்து பண்ணினா ... அம்புட்டு
தான் தனித்தனியா காசு கட்டனும் !!!
அப்புறம் எதுக்கு இப்படி ஒரு திட்டம் ????
நல்ல கேள்வி !!! ஒரு தொலைத்தொடர்பு
நெட்வொர்க் எப்படி சம்பாரிக்கும் ??? - நாம
கால் பண்ணும் போது - ரெண்டாவது நாம
மெசேஜ் பண்ணும் போது பணம் அவர்கள்
சம்பாரிப்பார்கள் ....
இப்ப அப்புடியா ????
மெசேஜ்னா வாட்ஸ் அப்
- கால் பண்றதுனா வைபர் - வீடியோ
காலிங்க்கு ஸ்கைப் - பேஸ்புக் ட்விட்டர்ன்னு
அவன நஷ்டத்துக்கு கொண்டு போனா அவன்
சம்பாரிக்க இப்படி ட்ரிக் பண்ணினா தான்
உண்டு !!!!
இதை எப்படி விளம்பரம் பண்ணுவான்னா -
இலவச இன்டர்நெட் !!! நம்ம ஆளுங்களும்
வாயை பிளந்துட்டு பின்னாடி
போவாங்கோ !! அதான் விதி !!
இந்த Net Neutrality பற்றி உங்கள் கருத்துக்களை
TRAI கேட்டுள்ளது - advqos@trai.gov.in என்ற
இணைய முகவரிக்கு மே 15 /2015 க்குள்
அனுப்ப சொல்லி இருக்கு !!!
இந்த பதிவை முழுசா படிச்சவர்கள் - இதோட
ஆபத்து என்னன்னு புரிஞ்சு இருக்கும் -
முடிந்த அளவு பகிருங்கள் !!!

Posted: 19 Apr 2015 11:11 PM PDT


மணல் விரியன் பாம்பின் வேட்டையாடும் தந்திரத்தை பாருங்கள்

Posted: 19 Apr 2015 11:10 PM PDT

மணல் விரியன் பாம்பின் வேட்டையாடும் தந்திரத்தை பாருங்கள்


மணல் விரியன் பாம்பின் வேட்டையாடும் தந்திரத்தை பாருங்கள்
www.indiasian.com
Discovery Snake vs Lizard

ஒருவா்:- (போனில்) டாக்டர்! என் அப்பா இறந்து ஒரு மாசமாச்சு... நாளைக்கு அவருக்கு த...

Posted: 19 Apr 2015 10:11 PM PDT

ஒருவா்:- (போனில்) டாக்டர்! என் அப்பா இறந்து ஒரு மாசமாச்சு... நாளைக்கு அவருக்கு திவசம்!
டாக்டர்:- சரி! இதை ஏன் எங்கிட்ட சொல்றீங்க...?
ஒருவர்:- போன மாசம் அவருக்கு உடம்புக்கு முடியாம இருந்தப்போ நான்தான் உங்ககிட்ட கூட்டிகிட்டு வந்தேன்! நீங்கதான் மருந்து, மாத்திரை எல்லாம் கொடுத்துக்கிட்டு 15 நாள் கழிச்சு தகவல் சொல்ல சொன்னீங்க... அதான்!
டாக்டர்:- (பதறியபடி) அய்யய்யோ... இதை நான் குறிப்பிட்ட நேரத்திலேயே நீங்க சொல்லி இருக்கலாமே...!
ஒருவர்:- அப்ப சொல்லி இருந்தா மட்டும் பிழச்சுக்குவாராக்கும்..? அதான் மருந்து சாப்பிட்ட மூணாவது நாளே இறந்துட்டாரே..!
டாக்டர்:- அதுக்கில்லீங்க, நேரத்திற்கு தகவல் சொல்லாததனால மருந்து சக்ஸஸ்ன்னு நினச்சு மேலும் மூணு பேருக்கு கொடுத்திட்டேன்... அவங்க உயிர்களையாச்சும் காப்பாத்தி இருக்கலாமேன்னுதான்...!
ஒருவர்:-?

இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்..! தெரிந்துகொள்வதற்கு முன், இவருக்கு உங்க...

Posted: 19 Apr 2015 10:10 PM PDT

இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்..!
தெரிந்துகொள்வதற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் இன்று வாழ்வதற்கு முக்கிய காரணமே இவர்தான்.
Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு??
இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க மறுத்து விட்டார்(அதாவது கண்டுபிடிப்பு உரிமம். சினிமா படம் copyrights வாங்குவது போல்..) இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார். ஆனால் அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்! பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்!
பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை..!


இந்த பசுமை சூழலில் வாழ பிடிக்காத மனம் உண்டா.?

Posted: 19 Apr 2015 09:03 PM PDT

இந்த பசுமை சூழலில் வாழ பிடிக்காத மனம் உண்டா.?


கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் பெரும் பங...

Posted: 19 Apr 2015 08:10 PM PDT

கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் பெரும் பங்கு வகிக்கின்றது.
அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவு பிரியர்கள் என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது.
ஆனால் சைவ உணவு பிரியர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான்.
அதுபோல் ஒரு வகை தான் கொண்டைக்கடலை. இது பலருக்கு மிகவும் விருப்பமான ஒரு உணவுப் பொருள். பொதுவாக இதனை வைத்து பூரி மற்றும் சப்பாத்திக்கு சன்னா செய்து சாப்பிடுவோம்.
ஆனால் இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.
கொண்டைக்கடலை சுண்டல்
கடலையை 6 8 மணி நேரம் ஊற வைத்து, மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். கடாய் எண்ணெயில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். இத்துடன் பெருங்காயம் சேர்க்கவும். கறிவேப்பிலை, வெந்த கடலையையும் சேர்த்து வதக்கவும்.
தேங்காய் துருவல் சேர்த்து, ஒரு முறை வதக்கி இறக்கினால் கொண்டைக்கடலை சுண்டல் தயார்.
பயன்கள்
இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
இதில் புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரோட், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், அது கருப்பைக் குழாயில் பிரச்சினை ஏற்படுவதையும், ரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கும்.
கொண்டைக்கடலை குழம்பு
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொண்டைக்கடலையை போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 2-3 விசில் விட்டு, வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முதலில் துருவிய தேங்காயை லேசான பொன்னிறத்தில் வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மிளகு, சீரகம், மல்லி போன்றவற்றையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
இதன்பின் வறுத்தப் பொருட்களை குளிர வைத்து விட்டு, மிக்ஸியில் அவற்றைப் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு 5 நிமிடம் வதக்கிவிட்டு, வேக வைத்துள்ள கொண்டைக்கடலையைப் போட்டு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு, இறுதியில் கரம் மசாலாவைத் தூவி கிளறி, இறக்கி விட்டால் கொண்டைக்கடலை குழம்பு ரெடி.
பயன்கள்
இதை அடிக்கடி செய்து சாப்பிட்டால் மேலும் உடலின் ஆற்றலை அதிகரிக்கப்பதுடன் கொழுப்பும் குறையும்.
இந்த குழம்பு உடல் சோர்வை போக்கும் தன்மை கொண்டது.


Posted: 19 Apr 2015 08:02 PM PDT


நீங்கள் யாரும் பார்க்காத மிக பெரிய தப்பு கத்தி திரைபடத்தில் வீடியோ இணைப்பு

Posted: 19 Apr 2015 07:10 PM PDT

நீங்கள் யாரும் பார்க்காத மிக பெரிய தப்பு கத்தி திரைபடத்தில் வீடியோ இணைப்பு


நீங்கள் யாரும் பார்க்காத மிக பெரிய தப்பு கத்தி திரைபடத்தில் வீடியோ இணைப்பு
www.indiasian.com
kollywood movie Kaththi big Mistake

0 comments:

Post a Comment