Wednesday, 22 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


1984 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வராக இருந்த அமரர் எம்.ஜி.ஆர் அவர்களால் ஒரு கடும...

Posted: 22 Apr 2015 08:00 AM PDT

1984 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வராக இருந்த அமரர் எம்.ஜி.ஆர் அவர்களால் ஒரு கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டது..

"பெயர் பலகைகளில் தாய் மொழியான தமிழ் கட்டாயம், வேறு மொழியை இணைக்க விரும்பினால் அதன் எழுத்துரு இரண்டில் ஒரு பங்காகவோ அல்லது அதை விட குறைவாகவோ இருக்க வேண்டும், இல்லை எனில் உரிமம் ரத்து செய்யப்படும்" - என அறிவிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது..

அவரின் மறைவிற்கு பிறகு அதுவும் மறைந்து போனது... ஆனால் தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக மக்களே தமிழகத்தின் விதியை தீர்மானிக்கும் நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.. இப்பொழுது இருக்கும் சென்னை கோயம்பேடு மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் இந்தி கிடையாது.. மேலும் தமிழை விட சிறிய அளவில் மாற்று மொழி உள்ளது... இந்தி வரக்கூடாது, திருக்குறள் அவசியம் என தமிழ் தேசிய உணர்வாளர் திரு. இராச்குமார் பழனிசாமி உள்ளிட்டோர் ஒரு முறை முதல்வருக்கு கோரிக்கை வைத்தது குறிப்பிடதக்கது...

தமிழ் தேசிய கருத்தியல் பேசாமல் பேசவைக்கும்... தமிழ் தேசிய கருத்தியல் தமிழகத்தை தமிழகமாக வைத்திருக்கும்.. தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும், தமிழ் தேசிய கருத்தியல் ஆட்சியில் இல்லாத பொழுதே இவ்வளவு மாற்றங்கள் என்றால்???????

படம் உதவி: விக்னேஷ் ராஜ்


கர்நாடகம் VS தமிழகம் காவேரி போராட்டம்!! *கார்நாடக மாநிலத்தில் காவேரி போராட்டம்...

Posted: 22 Apr 2015 07:40 AM PDT

கர்நாடகம் VS தமிழகம் காவேரி போராட்டம்!!

*கார்நாடக மாநிலத்தில் காவேரி போராட்டம் அனைத்து தரப்பு மக்களாலும் செய்யப்பட்டது, தமிழகத்தில் அப்படி இல்லை

*பெங்களுருவில் அனைத்து கடைகளும், மால், பொட்டி கடை என அனைத்தும் மூட பட்டது, இயல்பு வாழ்கை பாதித்தது...சென்னையில் எப்பொழுதும் போல கடைகள் திறந்திருந்தன, இயல்பு வாழ்கை பாதிப்பு இல்லை

*கர்நாடக அரசு பேருந்துகள்(KSRTC, BMTC) நிறுத்தம், அரசு நேரடியாக போராட்டத்தை ஆதரித்தது....தமிழகதில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன...சில இடங்களில் தமிழக விவசாயிகள் சாலை மறியல் செய்தது இதற்கு சான்று

*கன்னட அமைப்பினர் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் உருவ படத்தை எரித்தனர், கர்நாடக காவல் துறை வேடிக்கை பார்த்தது...தமிழக விவசாயிகள் கர்நாடக அரசின் அணை கட்டும் ஆணையின் நகலை எரித்தனர் அதற்கு தமிழக காவல் துறை அவர்களை கைது செய்தது...

*போராட்டம் முடிந்து கன்னட அமைப்பினர் கர்நாடக முதல்வரை சந்தித்து மனு கொடுத்தனர்...தமிழகதில் விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்

*கன்னட சினிமா துறை போரட்டத்திற்கு துணை நின்று அணை கட்டுவோம் என்று சபதம் இட்டனர்.... தென்னிந்திய சினிமா துறை(தமிழக சினிமா துறை) விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என வெளிப்படையாக அறிவித்தது.

மொத்தத்தில் கர்நாடகாவில் அரசு, விவசாயிகள், கன்னட அமைப்பினர், வணிகர்கள் என அனைவரும் போராடினர்.... தமிழகதில் விவசாயிகள் மற்றும் சில தமிழக கட்சிகள் போராடினர்...

இதை எல்லாம் மறந்து கூத்தாடிக்கு போஸ்டர் ஒட்டும், பால் அபிஷேகம் செய்யும் வேலையை தமிழக முட்டாள்கள் சிறப்பாய் செய்து வருங்கின்றனர்!!!

#தமிழினம்_அழிவுப்பாதையில்!!!


இந்திய நாட்டின் தலைநகரம் அமைந்துள்ள மாநிலம் டெல்லி. அதன் மையப்பகுதியில் பட்டப்பக...

Posted: 22 Apr 2015 07:37 AM PDT

இந்திய நாட்டின் தலைநகரம் அமைந்துள்ள மாநிலம் டெல்லி. அதன் மையப்பகுதியில் பட்டப்பகலில், ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ள ஒரு இடத்தில் ஒரு விவசாயி ஒருவர் தன்னைத்தானே மாய்த்துக்கொள்கிறார்.

இதைவிட இந்திய விவசாயிகளின் நிலையை எடுத்துச் சொல்ல எந்த ஒரு சம்பவமும் தேவையில்லை. விடுதலை பெற்றதாகச் சொல்லப்பட்ட 68 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி ஆண்டவர்களின் சாதனைச்சோற்றுப்பானையின் ஒரு பருக்கை இறந்து போன அந்த விவசாயி...

நல்லவேளை நம்ம ஊர் பத்திரிகை ஜாம்பவான்கள் சிலர் அங்க இல்லை.. இருந்திருந்தா காதல் தோல்வில தற்கொலை செஞ்சுட்டான்னு சொல்லியிருப்பாங்க.. :)

@விஷ்வா விஸ்வநாத்

Posted: 22 Apr 2015 04:50 AM PDT


கருப்பு சட்டை அவிழ்ப்பு போராட்டம் - பொன்.ராதாகிருஷ்ணன். கருப்பு சட்டை அணியும் ப...

Posted: 22 Apr 2015 04:36 AM PDT

கருப்பு சட்டை அவிழ்ப்பு
போராட்டம் -
பொன்.ராதாகிருஷ்ணன்.

கருப்பு சட்டை அணியும்
போராட்டம் - வீரமணி

தக்காளி எங்களுக்கு
சட்டையே வேணாம்...
:(

@பூபதி


தற்போது பூணூல் அறுப்புக்கு பொங்குபவர்கள் கடந்த மாதம் கிருஷ்ணகிரி அருகே தெலுங்கர்...

Posted: 22 Apr 2015 04:26 AM PDT

தற்போது பூணூல் அறுப்புக்கு பொங்குபவர்கள் கடந்த மாதம் கிருஷ்ணகிரி அருகே
தெலுங்கர்கள்,
தலித் இளைஞர் மீது
சிறுநீர் கழித்து வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட போது ஏன் பொங்கவில்லை??

இந்துத்துவா பேசுறவங்களும், திராவிடம் பேசுறவங்களும் அப்போ எங்க போனீங்க??

பூணூல் அறுத்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயலாம்! ------தினதந்தி. உங்க...

Posted: 22 Apr 2015 04:14 AM PDT

பூணூல்
அறுத்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு
சட்டம் பாயலாம்!
------தினதந்தி.

உங்க தேசத்தோட பாதுகாப்பு
இதுலயாடா இருக்கு...

Posted: 22 Apr 2015 03:54 AM PDT


1945யில் பிரிட்டனை சேர்ந்த #ஜோசப்_சிறில்_ப ாம்ஃபோர்ட் என்பவர் கனரக தொழில்துறை...

Posted: 22 Apr 2015 01:58 AM PDT

1945யில் பிரிட்டனை
சேர்ந்த
#ஜோசப்_சிறில்_ப
ாம்ஃபோர்ட் என்பவர்
கனரக தொழில்துறை
வாகனங்களான
#டிராக்டர் #புல்டவ்சர்
ஆகியவற்றை உற்பத்தி
செய்தார்.

அவருடைய பெயர்
தான் அந்த
வாகனங்களில்
பொறிக்கப்பட்டு
இருக்கும்.

#JCB - Joseph Cyril Bamford

"ஓ.பி.எஸ் கார் முன்பு படுத்து போராடவும் நான் தயாராக இருக்கிறேன் - குஷ்பூ" குழாய...

Posted: 22 Apr 2015 01:25 AM PDT

"ஓ.பி.எஸ் கார் முன்பு
படுத்து போராடவும்
நான் தயாராக
இருக்கிறேன் - குஷ்பூ"

குழாயடில புரண்டு
என்ன பிரயோஜனம்?
கோயில் வாசல்ல இல்ல
புரளனும்..
:)

@சக்தி சரவணன்

அட்சய திருதியை அன்று 2000 கிலோ தங்கம் விற்பனை- செய்தி சரஸ்வதி பூஜை அன்று இந்தமா...

Posted: 21 Apr 2015 11:17 PM PDT

அட்சய திருதியை
அன்று 2000 கிலோ தங்கம்
விற்பனை- செய்தி

சரஸ்வதி பூஜை அன்று
இந்தமாதிரி ஏன் புத்தகம்
வாங்கமாட்டேங்கிறாங்க?

@மனுஷ்ய புத்திரன்

0 comments:

Post a Comment