Relax Please: FB page daily Posts |
- :) Relaxplzz
- உண்மை வரிகள்..... 1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக...
- சகித்துக் கொண்டு வாழ்வது வாழ்க்கை அல்ல ! ரசித்துக் கொண்டு வாழ்வதே வாழ்க்கை ! -...
- இன்றுகாலை எனது நண்பர் மணவிழாவிற்குச் சென்றிருந்தேன். திருமணத்தில் என்னை மிகவுங்...
- தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்..! 1. கோடை காலத்தில் மதிய உ...
- செம்பருத்தி டீ ..! குடிச்சா பி.பி. ஏறாது, கொழுப்பு கரையும்.! மருத்துவ குணமுள்ள...
- வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெ...
- சமையல் எரிவாயு மானியத்தை கை விட்டார் அனில் அம்பானி...!! #தக்காளி.... இத்தினி நா...
- என்னை கவர்ந்த பதிவு..... ரொம்ப நாளா என்னை உருத்திகொண்டிருந்த கேள்வி.... விஜய்...
- புத்தரின் புத்திசாலியான பதில்: "குருவே ,ஆசைக்கும் ,விருப்பத்துக்கும் உள்ள வித்த...
- அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள். அம்மா சுட்டு வந்த தோசை...
- பித்தளை பாத்திரங்களைத் தேய்ப்பதற்கு புளி,உப்பு சேர்தத சோப்புகளை இன்னும் தயாரிக்க...
- ரவீந்திரநாத் தாகூரின் சிந்தனை துளிகள் .... * தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்...
- 75,000 தீக்குச்சிகளை வைத்து..ஒரு வருட உழைப்பில்..ஒரு இந்தியரால் உருவாக்கப்பட்ட அ...
- இப்படியும் ஒரு கலெக்டர்! சிறந்த திட்டங்களை செயல்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கான ப...
- (y) Relaxplzz
- காதல் திருமணம் அழகானதுதான் பெற்றவர்களை அழ வைத்து விட்டு வாழாதவரை!!!
- பணம் பத்தும் செய்யும் :(
- நம்ம ஆசாமி ஒருத்தன் செத்து போய்ட்டான் வாழ்ந்த போது வசதியா வாழ்ந்தவன் அவன் உசுரு...
- பழைய கஞ்சியை உண்டு, பிரியாணி அரிசியை அறுவடை செய்கிறான் விவசாயி..
- இனிய காலை வணக்கம் நண்பர்களே... :)
Posted: 23 Apr 2015 09:17 AM PDT |
Posted: 23 Apr 2015 09:00 AM PDT உண்மை வரிகள்..... 1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை.. கைக்குழந்தையாக இருந்தாலே போதும் ! 2. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என எவரேனும் கேட்டால், நேர்மையாக இருப்பதே இங்கு சாதனை தான் எனசொல்ல வேண்டியுள்ளது.. 3. பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள் என்பதை ஔவையாரின் பெயரிலிருந்தே அறியலாம் = How ? Why ? யார் ? 4. பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள் "அகராதி" யில் திமிர் எனப் பெயருண்டு.. 5. ஸ்பென்சர் பிலாசா ல 1998ரூ பில்லுக்கு 2000ரூபாய் தருகிர நாம், பிச்சைகாரனுக்கு 1 ரூபாய் தர தயங்குகிரோம். 6. மெசேஜ் அனுப்பினா உடனே ரிப்ளை அனுப்புறது கஸ்டமர்கேர் மட்டும் தான்.. 7. காதலித்து பார்… கழிவறையில் கவிதை வரும்… காதலிக்காமல் இருந்து பார்… அங்கே வர வேண்டியது நிம்மதியாக வரும்…!! 8. இலங்கையில் எண்ணை கிணறு இருந்து இருந்தால் இன்று ராஜ பக்சே தூக்கில் போடபட்டு இருப்பார் அமெரிக்காவால்..! 9. இலவசத்தை நம்பி ஒட்டு போடும் மக்களுக்கு விலை ஏற்றத்தில் ரோஷம் வருவது என்பது பிச்சைகாரன் சுடுசோற்றை எதிர்பார்ப்பது போல….. Relaxplzz |
Posted: 23 Apr 2015 08:50 AM PDT |
Posted: 23 Apr 2015 08:02 AM PDT இன்றுகாலை எனது நண்பர் மணவிழாவிற்குச் சென்றிருந்தேன். திருமணத்தில் என்னை மிகவுங்கவர்ந்தது, மணவிழாவிற்குவந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட அன்பளிப்புதான். ஆம். எல்லோருக்கும் மரக்கன்றுகளை பரிசாயளித்தனர். மணவிழாக்களில் இதுபோல மரக்கன்றுபரிசளிப்பதுபற்றி கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், அப்படிப்பட்டமணவிழாக்களில் கலந்துகொண்டது இதுவேமுதன்முறை. நிச்சயமாய் இது மிகவும்பாராட்டத்தக்கது. பலருக்கும் இதுபோலச்செய்யவேண்டுமென எண்ணமிருந்தாலும் அதை அந்தநேரத்தில் செயல்படுத்துவதென்பது எளிதல்ல. எல்லோரதுவாழ்த்துகளுடன் நம் இயற்கையன்னையின்வாழ்த்துகளும் இவர்களைச்சேருமென்பதில் எள்ளளவுமையமில்லை. எனதுதிருமணத்திலும் இதுபோலச்செய்யவேண்டுமென திண்ணமாயுள்ளேன். படங்கள்: நண்பரின் பரிசு மற்றும் அதை எமது அலுவலகத்தில் சூட்டோடு சூடாக... ச்சா... குளிரோடு குளிராக நட்டுவைத்தபோது. - ஃபீனிக்ஸ் பாலா ![]() நெகிழ வைத்த நிஜங்கள் - 2 |
Posted: 23 Apr 2015 07:10 AM PDT தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்..! 1. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். 2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது. 3. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும். 4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது. 5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும். 6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம். 7. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்ப்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கருப்பாவதைத் தடுக்கலாம். 8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும். 9. எப்பொழுதாவது உபயோகிக்கும் "ஷூ"க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு "ஷூ"விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது. 10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி மணமாக இருக்கும். Relaxplzz |
Posted: 23 Apr 2015 04:10 AM PDT செம்பருத்தி டீ ..! குடிச்சா பி.பி. ஏறாது, கொழுப்பு கரையும்.! மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும். வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும். தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும். இங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்த தகவல்கள் இவை. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் கிடைக்கும் பலன் மற்றும் பயன்களை பட்டியலிட்டுள்ளனர். அதன் விவரம்: உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது. இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். பிற மருத்துவக் குணங்கள்: வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.) கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. (செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.) மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். (செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, மயக்கம் போன்றவை குறையும்.) வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். (செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.) செம்பருத்திபூ தங்கபஸ்பம் இதன் பூக்களில் தங்கச்சத்து நிறைந்துள்ளதால் பூவில் உள்ள மகரந்தத்தை நீக்கிவிட்டு சாப்பிடலாம். சர்க்கரை வியாதிக்கும் சிறந்த மருந்து. மாதவிடாய்த் தொல்லைகளையும், சிறுநீர் பிரச்சனைகளையும் குணப்படுத்தும், உடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளை (mucus membranes) பாதுகாக்கிறது. சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர்.. இருதய பலம் இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது. காலை_மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயம் பலம் பெறும். 250 கிராம் செம்பருத்திபூவை துண்டாக நறுக்கி ஒரு காண்ணாடி பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, அதை காலையில் வெயிலில் வைக்கவும் பின்னர் மாலையில் எடுத்து பிசையவும் சிவப்பான சாறுவரும் அந்த சாறை ஒரு பாத்திரத்தில் உற்றி அதற்கு தேவையான சர்க்க்ரை சேர்த்து காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் உற்றி வைத்துகொள்ளவும். இதில் இருந்து 2ஸ்புன் எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருகவும்,இது போல தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சிரான முறையில் பரவும் இருதயம் பலம்பெறும். உடல் உஷ்ணம் குறைய ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறையும். இந்தப் பூவினை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் குணமாகும். பேன், பொடுகு தொல்லை நீக்கும் இரவு படுக்கும் போது செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள், தவிர, பொடுகு, சுண்டுகளும் நீங்கிவிடும். பலகீனமான குழந்தைகளுக்கு சில குழந்தைகள் பலகீனத்துடன் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும். தலையில் பேன், பொடுகு நீங்க சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை. இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும். செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும். செம்பருத்தி டீ போடும் முறை : செம்பருத்தி இதழ் (காய்ந்தது )-5 இதழ் தண்ணீர் 1 கப் -150 ml சக்கரை -1 ஸ்பூன் ஒரு பாத்திரத்தில் 150ml தண்ணீர் வைத்து கொதிக்க விடவும் .பின் செம்பருத்தி இதழை போட்டு 5 mins கொதித்தபின் அடுப்பை அனைத்து வடிக்கட்டி சக்கரை போட்டு குடிக்கவும் . ஒரு நாளைக்கு 2 - 3 தடவை குடிக்கலாம் .காலை உணவுக்கு பின் குடிப்பது உடலுக்கு நல்லது . Relaxplzz |
Posted: 23 Apr 2015 03:50 AM PDT |
Posted: 22 Apr 2015 09:27 PM PDT சமையல் எரிவாயு மானியத்தை கை விட்டார் அனில் அம்பானி...!! #தக்காளி.... இத்தினி நாள் நீ அத வாங்கிக்கிட்டு தான் இருந்தியா???!! :O - கொக்கரக்கோ சௌம்யன் @ Relaxplzz |
Posted: 22 Apr 2015 09:10 PM PDT என்னை கவர்ந்த பதிவு..... ரொம்ப நாளா என்னை உருத்திகொண்டிருந்த கேள்வி.... விஜய் ஆலுக்காஸ் போய் நகை வாங்க சொல்லுறாரு... அர்ஜுன் ராம்ராஜ் பனியன் வாங்க சொல்லுறாரு.. கார்த்தி ப்ரு காபி குடிக்க சொல்லுறாரு... திரிஷா மேடம் ஏதோ ஒரு ஆயில்மேண்ட வாங்க சொல்லுது.. சூர்யா சிம்கார்டு வாங்க சொல்லுறாரு... அசின் தாயி மிரண்டா குடிக்க சொல்லுது... பிரபு அண்ணன் கல்யான் போய் நகை வாங்க சொல்லுறாரு... விக்ரம் அண்ணன் மனபுரம் போய் நகை அடகு வைக்க சொல்லுறாரு... ஏங்க நான் தெரியாமத்தான் கேக்குறேன் .... எல்லாரும் செலவு செய்யத்தான் யோசனை சொல்லுறீங்களே ஒழிய யாராவது ஒரு ஆள் இப்படிதாங்க சம்பாரிக்கனுமுன்னு வழி சொல்லுறிங்களா? முதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க ...அப்புறம் செலவு செய்வதற்கு வழி சொல்லலாம்... ;-) ;-) Relaxplzz |
Posted: 22 Apr 2015 08:15 PM PDT புத்தரின் புத்திசாலியான பதில்: "குருவே ,ஆசைக்கும் ,விருப்பத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று சொல்ல முடியுமா ?" புத்தருடைய அழகான ,மிக எளிமையான பதில் : "ஒரு மலரை நீ செடியில் இருந்து பார்த்த உடனே பறித்து விட்டாய் என்றால் அது ஆசை ... அதே மலருள்ள அந்த செடிக்கு நீ தினமும் நீர் விட்டால் அது விருப்பம் (காதல்)..!" Relaxplzz |
Posted: 22 Apr 2015 08:15 PM PDT அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள். அம்மா சுட்டு வந்த தோசை தீய்ந்திருந்தது. "நல்ல முறுகலா இருக்கே" என்று ரசித்துச் சாப்பிட்டார் அப்பா. அடுத்த தோசை சுட அம்மா அடுக்களைக்கு போனதும், மகள் கேட்டாள், "அப்பா தோசை தீய்ந்து போயிருக்கிறது, முறுகல் என்கிறீர்களே?". அப்பா சொன்னார், "உன் அம்மாவுக்கு இன்று களைப்பாக இருந்திருக்கும், கவனக்குறைவால் நிகழ்ந்திருக்கும். ஒரு தோசை தீய்ந்து போனதை சுட்டிக்காட்டி அவள் மனம் தீய்ந்து போவதை நான் விரும்பவில்லை". அடுத்த தோசை நிஜமாகவே முறுகலாக வந்தது. குறைகளை நிறைகளாய்க் கொள்ளும்போது குறைகள் தாமாகவே மறைகின்றன. ♥ ♥ Relaxplzz |
Posted: 22 Apr 2015 07:45 PM PDT பித்தளை பாத்திரங்களைத் தேய்ப்பதற்கு புளி,உப்பு சேர்தத சோப்புகளை இன்னும் தயாரிக்காத சோப்பு கம்பெனிக்கு கண்டனங்கள்..!! - BabyPriya |
Posted: 22 Apr 2015 07:10 PM PDT ரவீந்திரநாத் தாகூரின் சிந்தனை துளிகள் .... * தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடை போடுவார்கள். அவர்களால் மற்றவர்களுக்கும் வழிகாட்ட முடியும். * நாமோ கல்நெஞ்சம் கொண்டவர்களாக இருக்கிறோம். இறைவனோ, கருணை உள்ளம் கொண்டவனாக திகழ்கிறான். * பெண்கள் மகிழ்ச்சியோடு இருப்பதில் தான், ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியே அடங்கி இருக்கிறது. வாழ்வில் இசை என்பது, பெண்களின் சிரிப்பில் தான் புதைந்து கிடக்கிறது. * இறைவன் தனக்கான நண்பர்கள் கிடைப்பார்களா என்று தேடுகின்றான். மனித மனங்களில் அன்பு இருக்கிறதா என்று எதிர்பார்க்கிறான். * மனித உறவுகள் அன்பினால் பிணைக்கப்பட்டுள்ளன. அன்பு என்னும் பாலத்தின் வழியாகப் பயணம் செய்தால் தான், நம் வாழ்க்கை சுகமானதாக இருக்கும். * நிலத்தைப் பண்படுத்தும் உழவனிடமும், கல்லுடைக்கும் தொழிலாளியிடமும் இறைவன் இருக்கிறான். * உலகில் உள்ள அனைத்தும் இறைவனின் உறைவிடம் என்பதை உணருங்கள். அவன் அளிப்பதை அனுபவியுங்கள். - தாகூர் Relaxplzz |
Posted: 22 Apr 2015 07:00 PM PDT |
Posted: 22 Apr 2015 06:45 PM PDT இப்படியும் ஒரு கலெக்டர்! சிறந்த திட்டங்களை செயல்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கான பிரதமர் விருதை, பெரம்பலூர் கலெக்டர் தாரேஸ் அகமதுவிற்கு அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, தங்கள் மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்திருக்கும் பெருமைக்காக பெரம்பலூர் மாவட்டமே வாழ்த்துப்பா பாடுகிறார்கள். பெண் குழந்தைகளை காப்பாற்றும் திட்டங்களை செயல்படுத்திய சிறந்த மாவட்ட ஆட்சியர் என பிரதமர் விருதுக்கு தேர்வாகியுள்ள கலெக்டர் தாரேஸ் அகமதுவின் அணுகுமுறையும், திட்டங்களை செயல்படுத்தும் முறையும் ரொம்ப வித்தியாசமானது. பொதுவாக ஆட்சியர் வருகையென்றால் அதிகாரிகளும், மக்களும் பரபரப்பாகி விடுவார்கள். ஆனால், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமது வருகிறார் என்றால் பள்ளி குழந்தைகள் முதல் பாமர மக்கள் வரை எல்லோரும் அவருக்காக காத்து கிடப்பார்கள். மக்களின் மனதில் இடம்பிடித்து, விருதுக்கும் தேர்வாகியுள்ள தாரேஸ் அகமது அப்படி என்னதான் செய்தார் என அவரது பணிகளை அலசினோம். பெண் குழந்தைகளின் கல்வி கடந்த நான்கு வருடத்திற்கு முன் பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றதிலிருந்து, இன்று வரை துளியளவும் ஆர்வம் குறையாமல், எளிமையான அணுகுமுறையால் மக்களிடம் நல்ல பெயர் எடுத்துள்ள இவர், கிராமங்களிலும் சர்வசாதாரணமாக வலம் வருகின்றார். இவர் தலைமையிலான சமூக நலத்துறை அலுவலர் குழு, இதுவரை 450க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்களை தடுத்துள்ளது. இதில் ஒரு மதத்தைச் சேர்ந்த திருமணத்தை தடுத்ததற்காக தாரேஸ் அகமதுக்கு எதிராக தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தினர். அப்போதும் கூட, பெண் குழந்தை என்றால் எல்லா குழந்தைகளும் ஒன்றுதான் திருமண வயதை அடைந்த பிள்ளைகளுக்கு மட்டுமே திருமணம் செய்ய அனுமதி என மிக கடுமையாக நடந்துகொண்டார். குழந்தை திருமணங்களை தடுத்த கையோடு பெண் பிள்ளைகளை அழைத்து, அவர்களுக்காக சிறப்பு தங்கும் இடங்களை ஏற்படுத்தி, படிக்க ஏற்பாடுகள் செய்தார். இதில் சில பெண் குழந்தைகள் இப்போது பொறியியல் உள்ளிட்ட கல்லூரியில் சேர்ந்து கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்திலேயே முதன் முதலில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் எனும் வாசகங்களை ஓங்கி ஒலித்தபடி பல்லாயிரக்கணக்காணவர்கள் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டத்தை நடத்தியதோடு அந்த போட்டிகளில் இவரும் கலந்துகொண்டு ஓடியதை பெருமையாக சொல்கிறாரகள் இளைஞர்கள். அரசு பள்ளிகளின் வளர்ச்சி தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை வளர்த்தெடுக்க திட்டமிட்ட தாரேஸ் அகமது, சூப்பர் 30 எனும் திட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மிகசிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களைக்கொண்டு அந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த பயிற்சியில் படித்த மாணவர்கள், தற்போது மருத்துவக்கல்லூரி, அண்ணா பல்கலைகழகங்களில் படித்து வருகிறார்கள். இந்த சாதனைக்கு மக்களிடம் உண்டான வரவேற்பை அடுத்து சூப்பர் 30 திட்டத்தில், தற்போது 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கிறாரகள். அலட்சியமாக வேலை செய்யும் அரசு ஆசிரியர்களை அலர்ட் செய்ய வைத்திருக்கிறார் ஆட்சியர் தாரேஸ் அகமது. இதனால் பெரம்பலூரின் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம், ஒவ்வொரு வருடமும் 26 சதம் வரை அதிகரித்துள்ளது என்கிறார்கள் கல்வி அதிகாரிகள், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்க சிகரம் எனும் திட்டத்தையும் அரசு பள்ளிகளில் செயல்படுத்தும் இவர், பெரம்பலூர் மாவட்டத்தில் எங்கே சென்றாலும் ஒரு பள்ளியின் ஒட்டு மொத்தச் செயல்பாட்டை தெரியப்படுத்த பச்சை, மஞ்சள், சிவப்பு உள்ளிட்ட ஆறு நிறங்களில் பள்ளியின் செயல்பாட்டை வேறுபடுத்தி காட்டுகிறார். சில பள்ளிகளில் ஆய்வு செய்யுபோது இவரே பிள்ளைகளுக்கு பாடம் நடத்தி சோதனை செய்யும் சம்வங்களும், குழந்தைகளை அங்கன்வாடிகளில் சேர்க்க வேண்டும், அப்போதுதான் பிள்ளைகள் ஆரோக்கியமாக வளரும் என தான் சந்திப்பவர்களுக்கு பாடம் எடுக்கும் சம்பவமும் பாராட்டை பெற்று வருகிறது. இதுமட்டுமல்லாமல், மாவட்டத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் முறையாக நடத்தி, மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைக்கும் வரை கண்காணிக்க ஒரு குழு அமைத்திருக்கிறார். இந்த சீரிய முயற்சியில் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பலனடைந்துள்ளார்கள் என புள்ளிவிபரங்களை அடுக்குகிறார்கள். மாவட்டத்தில் போடப்பட்ட சத்துணவு பணியாளர்கள் தேர்வில் பணம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என முறையாக தேர்வு நடத்திய மாவட்ட ஆட்சியர்களில் தாரேஸ் அகமதுவும் ஒருவர். விவசாயிகளின் தோழன் பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் போராட்டம் அறிவிக்க, கொஞ்சம் பொறுங்க என போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தி, கோயமுத்தூர் பருத்தி ஆராய்ச்சி மையத்திலிருந்து அதிகாரிகளை அழைத்து வந்து, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் உரிய விலை கிடைக்க வைத்ததாக சந்தோசமாக பகிர்ந்துகொள்கிறார்கள் விவசாயிகள். இதுமட்டுமல்லாமல், விவசாய பிரச்னைகள் என தகவல் வந்தால் அதை தீர்த்தபிறகுதான் அடுத்த வேலை செய்வார். விசுவக்குடி நீர்தேக்க திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலை சம்பந்தப்பட்ட திட்டங்கள் தமிழக அரசிடம் இவர் பெற்றுக்கொடுத்த திட்டங்களே. மக்களின் உணர்வுகளை முழுமையாக உணர்ந்தவராகவும், மக்களோடு மக்களாக பேருந்து மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்து அவர்களின் தேவைகளை உணர்ந்து, அதற்கான தீர்வை உருவாக்கி வருகின்றார். ரேசன் கார்டு கிடைக்காமல் பலர் தடுமாறிக்கொண்டிருந்ததை கேள்விப்பட்டு மாதாமாதம் குடும்ப அட்டைகள் பெற முகாம் நடத்தி, அந்த பிரச்னைகளை தீர்க்க வழிவகை செய்தவர். மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கு சொந்த பணத்தில் பஞ்சு மெத்தை வழங்கியதும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்ததும் மாவட்டம் முழுக்க எதிரொலிக்கிறது. வருடாவருடம் பெரம்பலூரில் புத்தக கண்காட்சி நடத்த திட்டமிட்டு அதில் மக்கள் ஆர்வமாக பங்கேற்க இவர் செயல்பட்ட விதத்தை வாசகர்கள் சொல்லி சிலாகித்துபோகிறார்கள். தொடரும் விருதுகள் தமிழகத்தின் சிறந்த ஆட்சியர்களுக்கான தகுதியை, கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து தக்கவைத்த தாரேஸ் அகமது, கடந்த வருடமும் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் மின் ஆளுமை திறனுக்கான விருதும், மாற்றுத்திறனாளிகளை சிறப்பாக ஊக்கப்படுத்தியதற்காக 10 கிராம் தங்க நாணயமும், கலெக்டரின் விருப்ப நிதியாக ரூ.25 ஆயிரம் பரிசும் முன்னாள் முதல்வரிடம் பெற்றார். கடந்த டிசம்பர் இறுதியில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.களுக்கான மாநாடு நடந்திருந்தால் இந்த வருடமும் விருது கிடைத்திருக்கும். ஆனால், மாநாடு நடத்தப்படவில்லை. இந்நிலையில்தான் பெண் குழந்தைகளை பாதுகாத்த மாவட்ட ஆட்சியர் எனும் பிரதமர் விருதை டெல்லியில் இன்று பெறுகிறார் தாரேஸ் அகமது. 'இது தனிப்பட்ட நபரின் சாதனையல்ல, என்னோட உத்தரவை மதித்து பல அதிகாரிகளின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்' என மிக அடக்கமாக சொல்லிவிட்டு டெல்லி சென்றிருக்கிறார் தாரேஸ் அகமது. நாமும் வாழ்த்துக்கள் சொல்வோம்! Relaxplzz ![]() |
Posted: 22 Apr 2015 06:30 PM PDT |
Posted: 22 Apr 2015 06:20 PM PDT |
Posted: 22 Apr 2015 06:10 PM PDT |
Posted: 22 Apr 2015 06:00 PM PDT நம்ம ஆசாமி ஒருத்தன் செத்து போய்ட்டான் வாழ்ந்த போது வசதியா வாழ்ந்தவன் அவன் உசுரு கூட நச்சத்திர அந்தஸ்து பெற்ற ஆஸ்பத்திரியில் வைத்து தான் போச்சி சொகமா வாழ்ந்து பழக்கப்பட்டவன் மேலோகத்திலும் அதே சுகம் கிடைக்குமுன்னு எதிர்பார்த்து காத்திருந்தான் நம்ம ஊரு அரசாங்க ஆபிசா இருந்தா தள்ள வேண்டியத தள்ளி வாங்க வேண்டியத வாங்கிடலாம் எமலோகத்தில் அது நடக்குமா ஆசாமி கிங்கிதர்களிடம் தங்குறதுக்கு சின்ன ரூமா இருந்தா போதும் கண்டிப்பா ஏசி மாட்டுங்க ஒரு டிவி இருந்தா பொழுது போக்கா இருக்கும் சாப்பிட வேளைக்கு ஒன்னா விதவிதமா தாருங்க எல்லாத்துக்கும் பணத்த செட்டில்மென்ட் செய்யிறேன் என்று சொல்லி பார்த்தான் அவன் பேச்ச காதில் வாங்க அங்கு யாருமில்ல வரவே மாட்டேன் என்று அடம்பிடிச்சவனை இழுத்துக்கொண்டு எமதர்மன் முன்பு விட்டாங்க ஆசாமிக்கு எமனை பார்த்தவுடன் நடுக்கம் வந்திருச்சு ஐயா எசமானரே நான் தெரியா தனமா தப்புதண்டா பண்ணியிருக்கலாம் ஆனா கொடுமையான தப்பு ஏதும் நான் பண்ணவே இல்ல ஏன்னா நான் அமைச்சரோ அதிகாரியோ இல்ல ஒரு ரூபா பொருள இரண்டு ரூபாவுக்கு வித்த சாதரண வியாபாரி என்று சொல்லி அழுதே விட்டான் எமனுக்கு அவனை பார்த்ததும் பாவமா இருந்திச்சி ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடேசியில் மனுசனையே கடிச்ச எத்தனையோ பயல்கள் நான் செஞ்சது தப்பே இல்ல அத்தனையும் தர்மம்னு வாதாடுறான் இவன் பாவம் செய்த தப்ப ஒத்துகிட்டான் அதுக்காக இவனுக்கு எதாவது ஒரு சலுகை காட்டலாம் என்று சிந்திச்சான் சிந்தனை செஞ்சி கடேசியா ஒரு முடிவுக்கு வந்த எமன் எண்டா மனுஷ பயலே எதோ தெரியாத்தனமா உண்மைய பேசிபுட்டே அதனால தண்டனையா குறைக்க ஒரு வாய்ப்பு தாரேன் என்று சொன்னான் நம்மாளுக்கு ரொம்ப சந்தோசமா போச்சு அப்பாடா இந்த எமன் பாக்கத்தான் கொஞ்சம் கரடு முரடா தெரிறான் உண்மையிலே இவனுக்கு நிறைய இறக்க சுபாவம் இருக்கு அப்படின்னு மனசுல ஒரு கணக்கு போட்டு இன்னும் கொஞ்சம் செண்டிமெண்டா பேசி எமனோட மனசுல இடம்பிடிச்சிடலாம் என்று ஆசைப்பட்டு நீங்க நல்லா இருக்கணும் எசமானே என்றான் எமதர்மனும் தொண்டையை செருமி சரிபடுத்திக்கிட்டு நீ பூமில கொஞ்சமேனும் நிறைவா வாழ்ந்திருந்தால் நான் உனக்கு சலுகை காட்டுவேன் அப்படி நீ வாழ்ந்திய இல்லையா என்பததை தெரிஞ்சுக்க சில கேள்வி கேட்ப்பேன் என்றான் நம்மாளுக்கு பயம் ஜாஸ்தியா ஆயிடிச்சு பள்ளிக்கூடத்துல வாத்தியாருங்க கேள்வி கேட்கிறாங்க என்று அந்த பக்கமே போகாம இருந்த நாம இப்போ வகையா மாட்டிகிட்டோம் என்று திருதிருவென்று விழித்தான் எமனும் கேள்வி கேட்க ஆரம்பித்தான் நீ பூமில யார் மேலையாவது உண்மையான அன்பு வச்சிருந்தியா என்று கேட்டான் நம்ம ஊரு நீதிபதிங்க கேள்வி கேட்டா பொய்சொல்லி தப்பிக்கலாம் எமனிடம் அது நடக்குமா அதனால இவன் இல்லை சாமி அப்படின்னு உண்மைய சொன்னான் சரி போனா போகுது உனக்கு நெருங்கிய நட்புன்னு யாரிடமாவது சந்தேகமே படாமல் பழகி இருக்கியா மன்னிக்கவும் சுவாமி எங்க ஊருல சந்தேகப்படாம யார்கிட்டேயும் பழக முடியாது மீறி பழகினா தூங்கும் போது தலையில கல்லை தூக்கி போட்டுடுவாங்க சரி மனுசங்ககிட்டதான் அன்பு வைக்கல தோழமையா பழகல எதாவது மிறுகங்கள் கிட்டையாவது அன்பு வச்சிருந்தியா நாய் பூனகிட்ட பழகினா அலர்ஜி வந்திடும் எசமான் ஓ! அப்படியா சங்கதி இந்த விஷயம் எனக்கு தெரியாமல் போயிடிச்சே நாளைக்கு முதல் வேலையா எறும மாட்டை வித்துவிடுகிறேன் என்று சொன்ன எமதர்மன் அடுத்த கேள்விக்கு போனான் எதாவது அழகான ஓவியம் இனிமையான பாடல் இப்படி எதாவது ஒன்றையாவது ரசிச்சி இருக்கியா என்று கேட்டான் சும்மா பேப்பருல கிருக்குறதும் காட்டு கத்தலா கத்துறதும் எனக்கு சுத்தமா பிடிக்காது என்று இவன் பதில் சொன்னான் உங்க பூமியில ஆறு குளம் அறுவி மலை பறவை என்று ஏராளமான அழகுகள் உண்டே அதையாவது பார்த்து ரசிக்கும் பழக்கம் உண்டா டிவில காட்டினா பார்ப்பேன் அடப்பாவி நீ செத்து எத்தனையோ நாளாகி விட்டதே இப்போதுதான் இங்கு வந்தாயா உனக்கு சலுகை காட்டினால் எமதர்மன் என்ற பெயருக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று கோபமாக எழுந்து போய்விட்டானாம் எமன் நாமும் அந்த மனிதனை போலத்தான் வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கிறோம் கண்ணுக்கு எதிரே அழகான ரோஜா தோட்டம் இருந்தாலும் அதை ரசிக்காமல் ரசிக்க புத்தி இல்லாமல் வானத்தில் இருந்து ஒரு கந்தர்வ தோட்டம் குதிக்க போவதாக கற்பனையில் ஆழ்ந்து எதிர்பார்த்து அழுது கொண்டிருக்கிறோம் வாழ்க்கை அன்பில் இருக்கிறது வாழ்க்கை தோழமையில் இருக்கிறது வாழ்க்கை இறக்கத்தில் இருக்கிறது வாழ்க்கை ரசிப்பில் இருக்கிறது வாழ்க்கை நம்பிக்கையில் இருக்கிறது ஆனால் இது நம்மில் எத்தனை பேருக்கு தெரிகிறது. Relaxplzz |
Posted: 22 Apr 2015 05:45 PM PDT |
Posted: 22 Apr 2015 05:30 PM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment