Tuesday, 31 March 2015

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


அனல் மின்நிலையங்களால் எரிசாம்பலாகும் உயிர்வாழ்க்கை! (வீடியோ இணைப்பு) வடசென்னை...

Posted: 31 Mar 2015 05:29 AM PDT

அனல் மின்நிலையங்களால் எரிசாம்பலாகும் உயிர்வாழ்க்கை!
(வீடியோ இணைப்பு)

வடசென்னை அனல் மின்நிலையம், 190 ஏக்கர் நிலப்பரப்பு வனப்பகுதிகளை கையகப்படுத்தி விரிவுபடுத்த உள்ளது.

இதனால், தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, எண்ணூர் மற்றும் புழுதிவாக்கம், காட்டுப்பள்ளியில் தொடங்கி பழவேற்காடு வரையிலான பல கிராம மக்கள், காட்டுயிரிகள் மற்றும் பறவைகளின் வாழ்க்கை கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

எண்ணூர் அனல் மின்நிலையம். அத்திப்பட்டு வல்லூர் அனல் மின்நிலையம். வடசென்னை அனல் மின்நிலையம் என்று ஏற்கனவே நச்சு சாம்பலில் முக்குளித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

தற்போது விரிவுபடுத்தப்பட இருக்கும் வடசென்னை அனல் மின்நிலையத்தால்-

• சாம்பல் மயானமாகப் போகிறது மக்களின் வாழ்க்கை.

• கொள்ளையடிக்கப்படுகிறது அழகிய காட்டுப்பள்ளி வனங்கள்.

• சீரழிக்கப்படுகின்றன பழவேற்காடு போன்ற பறவைகளின் புகலிடங்கள்.

மின்சாரம் தேவைதான். ஆனால், அதைவிட முக்கியமானவை மனித உயிர்கள் மற்றும் மனித உரிமைகள்.

நம் குடியிருப்புகள், விளைநிலங்கள், வாழ்வாதாரங்கள், மீன்வளங்கள், பாரம்பர்ய உரிமைகள் அத்தனையும் பறிகொடுத்துவிட்டு மனித வாழ்க்கை சாம்பலானப்பின் மின்சாரம் யாருக்காக?

இந்த கேள்விகள், கவலைகள் இவற்றை தாங்கிக் கொண்டு சுற்றித் திரிந்து பல்வேறுபட்ட நபர்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை, கவலைகளை, கோபங்களை, மாற்று தீர்வுகளை தாங்கி நிற்கிறது இதோ விழிகளின்,'அனல் மின்நிலையங்களால் எரிசாம்பலாகும் உயிர்வாழ்க்கை!'

பாருங்கள்! பகிருங்கள்!!

சக மனிதர்களை வாழவிடுங்கள் என்று உரத்துக் குரல் எழுப்புங்கள்!

https://www.youtube.com/watch?v=1NrfuRgf8wg&feature=youtu.be


0 comments:

Post a Comment