Relax Please: FB page daily Posts |
- ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்...
- ஒரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான். ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொ...
- :) Relaxplzz
- இந்தியர்களின் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட சாதனை, புதைக்கப்பட்ட வரலாறு, திருடப...
- புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ...!! புற்ற...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- அடப்பாவீங்களா இப்படி கொல்றாய்ங்களே... :P :P டாக்டர்! எனக்கு பல் ஆடுது! ----எந்த...
- காமராஜரின் கரையை துடைத்த அந்த 67 ரூபாய் ...! காமராசர் இறந்தபோது அவர் வீட்டில் (...
- யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத ஏதோவொரு துயரம் எல்லோரது வாழ்க்கையிலும் உள்ளது. - Amb...
- கூழ் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
- :P Relaxplzz
- நீங்க தேங்காய் சட்னியா.....தக்காளி சட்னியா......??? இந்த தேங்காய் இருக்கே அது ச...
- முருங்கைக் கீரையின் பயன்கள்! • முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்த...
- வயதான முதியவர்களை சந்திக்க நேரும் போது, அவர்கள் கரங்களை ஆதரவாய் பிடித்து அவர்களி...
- :) Relaxplzz
- :P @relaxplz
- ✿•துணிந்து நில்•✿ ஒரு காட்டில் ஒரு ஆண், பெண் பறவைகள் சந்தோசமாக வாழ்ந்துவந்தன. ப...
- மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் 400 தடுப்பணைகள் கட்டி விவசாயி சாதனை தே...
- #இன்று_சிட்டுக்_குருவிகள்_தினம்.
- தமிழ்நாட்டு ஆறுகளில் தண்ணீரை விட மணல் லாரிகளே அதிக முறை ஓடி இருக்கும்.. - செங்க...
- வரிக்குதிரைகளுக்குள் மறைந்திருக்கும் மற்றொரு விலங்கை 5 வினாடிக்குள் கண்டுபிடித்த...
- :) Relaxplzz
- (y) Relaxplzz
- வாழ்வின் மொழி... :) அதிகம் அன்போடுநடந்து கொள்ளாதேஅடிமையாக்கி விடுவார்கள்.. அத...
- ரப்பர் பேண்டில் நானே செய்த குட்டி டிரஸ்......எப்புடி இருக்கு..... பிடித்தவர்கள்...
- Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? தெரிந்து கொள்வோம் // படித்து பகிருங...
- (y) Relaxplzz
Posted: 20 Mar 2015 09:10 AM PDT ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார். "இது எவ்வளவு வெயிட் இருக்கும்?" 100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள். "இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல" வாத்தியார் தொடர்ந்தார். "இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்ட ிருந்தேன்னா என்ன ஆகும்?" "ஒண்ணுமே ஆகாது சார்" "வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்ட ிருந்தேன்னா...?" "உங்க கை வலிக்கும் சார்" "ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா..." "உங்க கை அப்படியே மரத்துடும் சார்" "வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த டம்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?" "இல்லை சார். அது வந்து..." "எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?" "கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்" "எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும்." Relaxplzz |
Posted: 20 Mar 2015 09:10 AM PDT ஒரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான். ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுபாடு நிலவியது. அந்நேரம் அங்கு வந்த ஏழை நண்பன் அவன் எரிச்சலும், கவலையோடும் இருக்கும் தன் நண்பனை பார்த்து "எப்பிடி டா இருக்கே?" என்று வழக்கம் போல கேட்டான். "சும்மா இரு, எனக்கு உடனே இருபது லட்சம் ரூபாய் தேவை. உன்னால் முடியுமா?" என்று கோபமாக கேட்டு விட்டு தன் அறைக்குள் சென்றான் . அவன் பின்னால் சென்ற ஏழை நண்பன் "அரை மணி நேரத்தில் பணம் கிடைத்தால் பரவாயில்லையா?" என்று ஏழை நண்பன் நிதானமாக கேட்டான். பணக்கார நண்பனுக்கு ஒரே அதிர்ச்சி.ஏழை நண்பனை ஏளனமாக பார்த்தான். அரைமணி நேரத்தில் பணம் வந்தது. பணக்கார நண்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. பணத்தை கொடுத்தவாறு ஏழை நண்பன் சொன்னான். "நீ எப்போ பார்த்தாலும் அதிகமா பணத்தை தான் சேர்த்தாய் நண்பா..நல்ல நண்பர்களை சேர்க்க மறந்திட்டாய். நான் அவைகளை சம்பாதித்து கொண்டேன் டா" என்றான். இருவரும் ஆரத்தழுவி கட்டி கொண்டார்கள். இந்த உலகத்திலே எதை சேர்ப்பதை பார்க்கிலும் உண்மை பலமும், உயிருள்ள பலமும் கண்டிப்பாக நண்பர்களை சேர்ப்பது தான்.......... :) :) Relaxplzz |
Posted: 20 Mar 2015 08:30 AM PDT |
Posted: 20 Mar 2015 07:10 AM PDT இந்தியர்களின் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட சாதனை, புதைக்கப்பட்ட வரலாறு, திருடப்பட்ட அறிவு பல. வானொலி முதல் வானில் பறக்கும் விமானம் வரை. உண்மையில் ரேடியோவை கண்டு பிடித்தது யார்? கொஹரர் என்கிற கருவியை ஏற்கனவே பான்லி என்கிற அறிஞர் உருவாக்கி இருந்தார் அதன் மூலம் ரேடியோ அலைகளை கண்டறிய முடியும் என்று அதை செம்மைப்படுத்திய லாட்ஜ் சொன்னார். ஆனால், அந்தக்கருவி நிறைய குறைபாடுகளோடு இருந்தது. அதனால் சீராக எந்த ரேடியோ அலைகளையும் உணரமுடியவில்லை. போஸ் நிறைய மாற்றங்களை அந்த கருவியில் கொண்டுவந்தார் . இன்னமும் குறித்து சொல்வதென்றால் அதை முழுமையாக மாற்றியமைத்தார். பாதரசத்தை அதில் சேர்த்தார் ; சுருள் வடிவ ஸ்ப்ரிங்குகளை இணைத்தார். கூடவே டெலிபோனை பயன்படுத்தினார். கூடவே குறைகடத்தி படிகத்தை கருவியில் இணைத்து பார்த்தார். வெறுமனே அலைகள் இருக்கிறது என்று கண்டறிந்து கொண்டிருந்த கருவியானது அலைகளை உற்பத்தி செய்து,மீண்டும் அதை திரும்பப்பெறுகிற மாயத்தை செய்தது. அந்த அற்புதம் அப்பொழுது தான் நிகழ்ந்து. ஐந்து மில்லிமீட்டர் அளவில் அலைகள் உண்டானது. இவையே இன்றைக்கு மைக்ரோவேவ் என்று அறியப்படுகின்றன. மின்காந்த அலைகளின் எல்லா பண்பும் அவற்றிடம் இருப்பதை நிரூபித்தார் போஸ். கம்பியில்லா தகவல் தொடர்பை சாதித்த முதல் ஆளுமை ஆனார். அதைக்கொண்டு ஒரு பெல்லை ஒலிக்க வைத்து வெடிமருந்தை வெடிக்க வைத்தும் காண்பித்தார் போஸ். கூடவே அதைக்கொண்டு சில மைல் தூரத்துக்கு ரேடியோ கொண்டு சென்று மீண்டும் பெறவும் செய்து சாதித்து காண்பித்தார் போஸ். அதாவது உலகின் முதல் ரேடியோ எழுந்தது. இது நடந்து இரண்டு வருடங்கள் கழித்து மார்க்கோனி ரேடியோ பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுவதாக சொன்னார். ஜகதீஷ் சந்திர போஸ் பயன்படுத்திய கொஹரரை மார்க்கோனிக்கு இத்தாலிய கடற்படையில் இருந்த அவரின் நண்பர் சோலாரி அறிமுகப்படுத்தினார். அப்படியே அதை எடுத்து தன்னுடைய கருவியில் பொருத்தினார் மார்க்கோனி. ஒரே ஒரு மாற்றம் U வடிவத்தில் போஸ் அமைத்திருந்த பாதரச ட்யூபை நேராக மாற்றினார். S என்கிற மோர்ஸ் குறியீட்டை தான் அனுப்பியதாக வேறு அறிவித்தார். அதை பதிவு செய்த ஆவணங்கள் இல்லை என்பது தனிக்கதை. போஸ் செய்த ஒரு தவறு தான் கண்டுபிடித்த கொஹரர் கருவியை பேடன்ட் செய்ய மறுத்தார் ; "என் தந்தையைப்போல நானும் மக்களுக்கு சேவை செய்ய எண்ணுகிறேன் வணிக நோக்கங்கள் எனக்கில்லை" என்றார். அந்த போஸ் கண்டுபிடித்த கருவியை தான் கண்டுபிடித்தேன் என்று வெட்கமே இல்லாமல் பதிவும் செய்துகொண்டார் மார்க்கோனி. தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் போஸ் செய்த உதவி அளவில்லாதது என்று ஒன்றரை பக்கம் எழுதிவைத்த மார்க்கோனிதான் திருடியதை பற்றி ஒரு வரி கூட மறந்தும் சொல்லவில்லை. இந்த பாதரச கொஹரர் என்று யாரேனும் கேள்வி கேட்டாலே பேய் முழி முழித்தார் அவர். ஒரு காலத்துக்கு பிறகு அப்படியே ரேடியோவை தான் தான் கண்டுபிடித்தேன் என்று உலகம் ஏற்றுக்கொண்டு நோபல் பரிசு கொடுத்த பிறகு இரும்பு கொஹரர் என்று மாற்றிக்கொண்டு கச்சிதமாக சமாளித்தார். உண்மையில் அவருக்கு மின்காந்த அலைகளை பற்றி தெரிந்தே இருக்கவில்லை என்று அவரே ஒரு நேர்முகத்தில் ஒப்புக்கொண்டார். அறிவியல் அறிவே இல்லாமல் இருபத்தி இரண்டு வயதில் போஸின் படைப்பை அப்படியே திருடி அவர் ரேடியோவை உருவாக்கியதாக சொன்னார் . போஸ் பெயரை மறந்தும் கூட வெளியே விடவில்லை அவர்கள், போஸ் தான் அதைக்கண்டுபிடித்தார் என்று வருங்காலத்தில் வந்த அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தார்கள். மார்க்கோனி ஏமாற்றியது ஊர்ஜிதமானது. உலகின் முதல் ரேடியோவை உருவாக்கியவர் போஸ் என்று IEEE அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது. அதுமட்டும் அல்லாது அமெரிக்கா நாசா போல் லண்டன் ராயல் ஸொஸைடீ எனும் அமைப்பில் இதற்கான ஆதாரம் உள்ளது. மார்க்கோனி தான் ரேடியோவை கண்டுபிடித்தார் என்று இனிமேல் யாரவது சொன்னால் தலையில் கொட்டி அதை கண்டுபிடித்தது இந்தியன் போஸ் என்று சொல்லுங்கள். இந்த தகவல் 23/11/2011 விகடன் செய்தியில் போசின் நினைவு தின சிறப்பு பதிவாக வந்து உள்ளது. படித்து பகிருங்கள் நண்பர்களே... - H V krishnaprasad Relaxplzz |
Posted: 20 Mar 2015 06:10 AM PDT புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ...!! புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும், சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டு பிடித்து, குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும். எனக்கு தெரிந்து, மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது. அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம். இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் . **சோற்று கற்றாழை 400 கிராம் **சுத்தமான தேன் 500 கிராம் **whisky (or) brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக) தயாரிப்பு முறை ------------------------ சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கி விடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும் நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது. மருந்தை உட்கொள்ளும் விதம் ---------------------------------------------- இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ண வேண்டும். பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும். சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது . இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது. முடிந்தவரை இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் Relaxplzz |
Posted: 19 Mar 2015 10:30 PM PDT |
Posted: 19 Mar 2015 10:18 PM PDT |
Posted: 19 Mar 2015 10:10 PM PDT அடப்பாவீங்களா இப்படி கொல்றாய்ங்களே... :P :P டாக்டர்! எனக்கு பல் ஆடுது! ----எந்த பாட்டுக்கு? :P *ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்? நோயோடதான்! :P *தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்! அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா? :P *டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு! கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா? :P *டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய? :P *என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்! பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்? :P *படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே? புக்கை மூடிடுவேன்! :P *காலில் என்ன காயம்? செருப்பு கடித்து விட்டது! பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா? :P *குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்? தெரியல! குளிக்கும் போதே துவட்ட முடியாதே! :P *இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..!!? என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது! புட்டு புட்டுதான் சாப்பிடனும்! :P *டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு! என்னிடம் சுத்தமா இல்ல! பரவாயில்லை! கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்! :P *இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..? கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்! :P *சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க? பையன்: பி.எ. சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே! :P *சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா? இன்டெர்வியுக்கு சென்றவர்: ஒ! நிறைய! என் வீடு, கார் மற்றும் என்னுடைய மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்! :P *மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல! கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா? :P :P Relaxplzz |
Posted: 19 Mar 2015 09:59 PM PDT காமராஜரின் கரையை துடைத்த அந்த 67 ரூபாய் ...! காமராசர் இறந்தபோது அவர் வீட்டில் (சென்னையில்) இருந்த மொத்த பணம் வெறும் 67 ரூபாய் மட்டுமே. காமராசர் பல வங்கிகளில் பணம் போட்டு வைத்திருக்கிறார் என்று பலர் மேடைகளில் பேசியதுண்டு, எழுதிய துண்டு. அது பொய் என்று நிரூபித்தது இந்த 67 ரூபாய். ஒருமுறை முதல்-அமைச்சர் காமராசர் ரெயிலில் பகல் வேளையில் திருநெல்வேலிக்குப் பயணமானார். விருதுநகர் ரெயில் நிலையத்தில் வண்டி நின்றபோது நிறைய பிரமுகர்கள் காமராசரை சந்தித்தனர். காமராசரோ வண்டியில் இருந்து இறங்கவே இல்லை. ரயில் பெட்டியின் வாசலில் நின்று அவர்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். வண்டி நகரும் முன் ஒரு தொண்டர் காமராசரிடம் ஐயா அதோ அம்மா நிக்காங்க என்று காட்ட காமராசர் ஏறிட்டுப் பார்த்தார். கூட்டத்துக்கு அப்பால் அவரது தாயார் நின்று கொண்டு மகனைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார். வண்டி நகரத் தொடங்கியது காமராசர் ரெயில் பெட்டியின் வாசலில் நின்று கொண்டிருந்தார். பெட்டியின் வாசல் அவரது தாயாருக்கு நேர் எதிரே வந்த போது, "சௌக்கியமா அம்மா'' என்று காமராசர் கேட்டார். தாயாரின் முகம் மேலும் மலர்ந்தது. வண்டி மேலும் நகர்ந்தது. தனது தாயார் தன்னைக் காணவேண்டும் என்பதற்காக தனது முழு உருவமும் வெளியே தெரியும்படி காமராசர் ரெயில் பெட்டி வாசலில் நின்று கொண்டே இருந்தார். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்க ரெயில் தெற்கு நோக்கி வேகம் எடுத்தது. முதல்-அமைச்சர் பதவியை விட்டு விலகி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராகி, 1967 தேர்தலில் காமராசர் விருதுநகரிலேயே தோற்கடிக்கப்பட்டார். அதன்பின் நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினரானார். அப்போது சென்னையில் இருந்த காமராசருக்கு, சிவகாமி அம்மையாருக்கு உடல் நலமில்லை என்று சேதி சொன்னார்கள். உடனே புறப்பட்டு விருதுநகர் வந்தார். மதுரை நெடுமாறன் பெருந் தலைவருடன் வந்தார், தாயாரைக் கண்டார். மகனைக் கண்டவுடன் அந்த தாயின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.எனவே காமராசர் சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தார். தாயாரிடம் சொன்னார். போயிட்டு வாப்பா. ஆனால் நம் வீட்டில் சாப்பிட்டு விட்டுப் போ என்றார், அந்த தாயார் படுக்கையில் படுத்தபடி. சரி சொன்ன காமராசர் அன்று தன் வீட்டில் சாப்பிட்டார். தாயாருக்கு அது பரம திருப்தி. தாயிடம் விடை பெற்ற பின் சென்னைக்கு புறப்பட்டார். உடன் பயணம் செய்த நெடுமாறன் "நீங்கள் வீட்டில் சாப்பிட்டு எவ்வளவு காலம் ஆயிற்று?'' என்று கேட்டார். சற்றே கண்ணை மூடிக்கணக்கு போட்ட காமராசர் நான் என் வீட்டில் சாப்பிட்டு 25 வருஷமாவது இருக்கும் என்றார். 1937_ல் சட்டசபை தேர்தல் நடந்தது. விருதுநகரை உள்ளடக்கிய சாத்தூர் தொகுதியில் காமராஜர் வெற்றி பெற்றார். காமராஜரை சாரட்டு வண்டி யில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது, அக்கினித் திராவகம் நிரப்பப்பட்ட மின்சார பல்புகள் அவரை நோக்கி வீசப்பட்டன. நல்லவேளையாக அவை காமராஜர் மீது படாமல் குதிரைகளுக்கு முன்னால் விழுந்து உடைந்து சிதறின.இதனால் மிரண்டு ஓடிய குதிரைகளை, அருகில் இருந்தவர்கள் அடக்கினார்கள். Relaxplzz ![]() "காமராஜர் ஒரு சகாப்தம்" |
Posted: 19 Mar 2015 09:50 PM PDT |
Posted: 19 Mar 2015 09:40 PM PDT |
Posted: 19 Mar 2015 09:28 PM PDT |
Posted: 19 Mar 2015 09:17 PM PDT |
Posted: 19 Mar 2015 09:10 PM PDT நீங்க தேங்காய் சட்னியா.....தக்காளி சட்னியா......??? இந்த தேங்காய் இருக்கே அது சட்னி அரைக்கும்போது தன்னை விட்டுகொடுக்காது,அரைக்க கஷ்டமா இருக்கும். ஆனால் தக்காளி இருக்கே அது தன்னை எளிதில் விட்டு கொடுக்கும், ஈசியா சட்னி அரைக்கலாம். தேங்காய் சட்னி சீக்கிரம் கெட்டுபோகும், தக்காளி சட்னி சீக்கிரம் கெடாது. . . . . . . . . . . . . . நீதி: விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.. Relaxplzz |
Posted: 19 Mar 2015 08:58 PM PDT முருங்கைக் கீரையின் பயன்கள்! • முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும். • முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. • முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. • இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து. • முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. • கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். • ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு. முருங்கைக் கீரையில் உள்ள வைட்டமின்கள்..... முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது. புரதம் - 6.7% கொழுப்பு - 1.7% தாதுக்கள் - 2.3% கார்போஹைட்ரேட்கள் - 12.5% Relaxplzz ![]() "உணவே மருந்து" - 2 |
Posted: 19 Mar 2015 08:49 PM PDT வயதான முதியவர்களை சந்திக்க நேரும் போது, அவர்கள் கரங்களை ஆதரவாய் பிடித்து அவர்களிடம் அன்பாக பேசுங்கள், இந்த ஒன்று தான் அவர்களுக்கு ஆத்ம சந்தோஷத்தை தரும். ![]() #ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 5 |
Posted: 19 Mar 2015 08:40 PM PDT |
Posted: 19 Mar 2015 08:19 PM PDT |
Posted: 19 Mar 2015 08:15 PM PDT ✿•துணிந்து நில்•✿ ஒரு காட்டில் ஒரு ஆண், பெண் பறவைகள் சந்தோசமாக வாழ்ந்துவந்தன. பெண் பறவை கருதரித்து முட்டை இட ஆரம்பித்தது. இரு பறவைகளும் தாய் ,தந்தை ஆக போவதை நினைத்து மிகவும் ஆனந்தமாக இருந்தது. ஒரு நாள் இரையை தேடுவதற்க்காக இரு பறவைகளும் கூட்டை விட்டுவெளியே சென்றது. அந்த சமயம் மரத்தின் கீழ் ஒரு பாம்பு , இது தான் சமயம் என்று மரத்தின் மேல் ஏறி அனைத்து முட்டைகளையும் தின்றுவிட்டன. திரும்பி வந்த பறவைகள் கூட்டில் முட்டை இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தன பெண் பறவை கண்ணீர் வீட்டு அழுது புலம்பியது. ஆண் பறவை ஆறுதல் கூறி சமாதானம் செய்தது.... இப்படி முட்டைகளை பல முறை பறைவகள் இழந்தன.கடைசியாக அந்த பறைவகள் முட்டைகளை எடுத்து செல்வது மரத்தின் கீழ் உள்ள பாம்புதான் என்று கண்டுபிடித்தது, ஆனால் பாம்பை எதிர்த்து விரட்டும் அளவுக்கு நமக்கு சக்தி இல்லையே என்று பெண் பறவைஅழுதது. நாம் இங்கு இருந்து வெளியேறி வேறு இடத்திற்கு சென்று விடலாம் என்று ஆலோசனை கூறியது பெண்பறவை. அதற்கு ஆண் பறவை நாம் புதிதாக செல்லும் இடத்திலும் வேறு எதாவது துன்பம் நேரிட்டால் அங்கிருந்து வெளியேறுவாயா ? என்று கேள்வி எழுப்பியது. இங்கேயே இருந்து இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என்பதை யோசிப்போம் என்றது ஆண் பறவை. பிறகு ஆண் பறவை தன் நண்பனான நரியாரிடம் சென்று நண்பா நரியாரே என் மனைவி இடும் முட்டைகளை எல்லாம் ஒரு பாம்பு தனக்கு இரையாக்கிக் கொள்கிறது. நாங்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதற்கு ஒரு உபாயம் நீங்கள்தான் சொல்லவேண்டும் என்றது. நரி சிறிது நேரம் யோசித்து ஒரு யோசனை கூறியது. பறவையே., நீஅரசரின் மாளிகைக்கு சென்று அங்கு மாகராணி அனிந்திருக்கும் விலையுர்ந்த இரத்தின மாலை அல்லது வைரமாலையை கவர்ந்து கொண்டு ,இந்த பாம்பின் பொந்துக்குள் போட்டுவிடு என்றது. அதே போல் பறவை மாகராணியின் இரத்தின மாலையை கவர்ந்து பறந்தது, காவலாளிகள் அந்த பறவையை பின் தொடர்ந்து ஒடினர். பறவை பாம்பின் பொந்தை நெருங்கியவுடன் இரத்தின மாலையை பொந்திற்குள் போட்டுவிட்டு சென்றது. காவலாளிகள் பொந்தின் அருகே சென்று தன்கையில் உள்ள ஈட்டியால் பொந்திற்குள் விட்டு இரத்தினமாலையை எடுக்க முயற்ச்சி செய்தனர். அப்போது பொந்திற்குள் இருந்த பாம்பு கோபத்துடன் சீறி வெளியே வந்தது. பாம்பை கண்ட காவலாளிகள் தன்கையில் வைத்திருந்த ஈட்டியால் பாம்பினை தாக்கினர். பாம்பும் அங்கேயே இறந்து போனது. மரத்தின் மேலிருந்த பறவைகள் இந்த காட்சிகளை கண்டு ஆனந்தத்தில் திலைத்தது. சிறிது காலம் கழித்து அந்த பறவைகள் தன் சேய் பறவைகளோடு ஆனந்தமாக வாழ்ந்தது. கஷ்டத்தை கண்டு பயந்து ஒடினா பிரச்சனை தான் பெருசாகும். ஒரு சிலர் கடன் தொல்லைகளாலும் மற்ற குடும்ப பிரச்சனைகளாலும் ஊரை விட்டே சென்று விடுகிறார்கள். அப்படிபட்டவர்களுக்கு இக்கதை சமர்ப்பனம்.! Relaxplzz |
Posted: 19 Mar 2015 08:00 PM PDT மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் 400 தடுப்பணைகள் கட்டி விவசாயி சாதனை தேனி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர 400-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார். தேனி மாவட்டம், மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கோம்பை கிராமம். இந்த கிராமம் மலை அடிவாரத்தில் இருப்பதால், மழை மறைவு (மழை பெய்யாத) பிரதேசம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் பல இடங்கள் வானம் பார்த்த பூமியாக கிடந்தது. சில இடங்களில் சோளம், கம்பு, கேழ்வரகு என மானாவாரி சாகுபடி மட்டும் நடந்து வந்தது. இந்நிலையில், கோம்பை பேரூராட்சித் தலைவராக கடந்த 1996-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பி.ராமராஜ் என்ற விவசாயி, அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி மானாவாரி சாகுபடி தவிர, மற்ற காய்கறிகளை சாகுபடி செய்ய, தமிழக அரசுடன் இணைந்து தற்போது வரை சிறியதும், பெரியதுமான நானூறுக்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி சாதனை படைத்துள்ளார். தள்ளாத வயதிலும் சுறுசுறுப்பு 74 வயதானாலும் இளைஞரைப் போல சுறுசுறுப்புடன் வேலை செய்து வரும் பி. ராமராஜ் 'தி இந்து'விடம் கூறியதாவது: கோம்பை மேடான பகுதி என்பதால், முல்லை பெரியாறு அணையில் இருந்து 18-ம் கால்வாய் வழியாக தண்ணீரைக் கொண்டு வரமுடியில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது. பல விவசாயிகள் பிழைப்பு தேடி, வேறு மாவட்டங்களுக்குச் செல்லத் தொடங்கியது எனக்கு வேதனை அளித்தது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய நினைத்த நேரத்தில், அரசு 1997-ம் ஆண்டு நதி நீர் பள்ளத்தாக்கு திட்டத்தை, தேனி மாவட்டத்தில் கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் கோம்பை பேரூராட்சியையும் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டேன். இதனையடுத்து, செயற்கைக் கோள் மூலம் கோம்பை பகுதி வரைபடம் தயாரிக்கப்பட்டது. இதில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஓடைகளை கண்டறிந்து, அதன் குறுக்கே எனது பதவிக் காலத்திலேயே 240 தடுப்பணைகள் கட்டப்பட்டன. மானாவாரி காடுகளில் நீரை தேக்க 1500 ஏக்கருக்கு மண் கரைகள் அமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது. பின்னர், தேர்தலில் போட்டியிடாமல் மேற்குமலை தொடர்ச்சி மேம்பாட்டுத் திட்டம் என்ற சங்கத்தை தொடங்கி, அதன் தலைவராக இருந்துகொண்டு தோட்டக்கலை பொறியியல்துறை மூலம் ஆண்டுதோறும் 5 தடுப்பணைகள் வீதம் 10 ஆண்டுகளில் 50 தடுப்பணைகளும், வனத்துறை மூலமாக 48 தடுப்பணைகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் விவசாயிகள் பங்களிப்புடன் இரண்டு பெரிய தடுப்பணைகளும் என, இதுவரை 400-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 36 தடுப்பணைகள் தற்போது தோட்டக்கலை பொறியியல் துறை மூலம் 36 தடுப்பணைகள் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மழைநீர் சேமிப்பு, மண்வள பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் என்ற மற்றொரு புதிய சங்கத்தைத் தொடங்கி சேதமடைந்த தடுப்பணைகளை அரசு உதவியை எதிர்பார்க்காமல், இதுநாள் வரை விவசாயிகள் பங்களிப்புடன் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இப்பகுதியில் மானாவாரி விவசாயமே நடந்துவந்த நிலையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால், கடந்த சில ஆண்டுகளாக தென்னை, வாழை, கொத்தமல்லி என மற்ற பயிர்களும் விளைவிக்கப்பட்டு வருகின்றன. வெளியூர் சென்ற விவசாயிகளும் சொந்த ஊருக்குத் திரும்பிவந்து விவசாயத்தில் ஈடுபட தொடங்கி விட்டனர் என்றார். Thanks The HIndu. Relaxplzz ![]() |
Posted: 19 Mar 2015 07:50 PM PDT |
Posted: 19 Mar 2015 07:45 PM PDT தமிழ்நாட்டு ஆறுகளில் தண்ணீரை விட மணல் லாரிகளே அதிக முறை ஓடி இருக்கும்.. - செங்காந்தள் |
Posted: 19 Mar 2015 07:40 PM PDT |
Posted: 19 Mar 2015 07:32 PM PDT |
Posted: 19 Mar 2015 07:30 PM PDT |
Posted: 19 Mar 2015 07:20 PM PDT |
Posted: 19 Mar 2015 07:10 PM PDT வாழ்வின் மொழி... :) அதிகம் அன்போடுநடந்து கொள்ளாதேஅடிமையாக்கி விடுவார்கள்.. அதிகம் பொறுமையுடன் நடக்காதே பைத்தியம் ஆகும் வரை விட மாட்டார்கள்.. எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று நினைக்காதே பலர் உன்னை வெறுக்க நேரிடும்.... எல்லோரையும் நம்பி விடாதே ஏமாற்ற பலர் இருக்கிறார்கள். கோபப்டாமலே இருந்து விடாதே கோமாளியாக்கி விடுவார்கள்.. Relaxplzz |
Posted: 19 Mar 2015 07:00 PM PDT |
Posted: 19 Mar 2015 06:45 PM PDT Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? தெரிந்து கொள்வோம் // படித்து பகிருங்கள் // தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும். இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில் உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Create ஆகிவிடும். குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும். குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம். குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம். குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம். Renewal செய்வதற்கான குறிப்பு : உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும். Register Number : RPD2013M00007502 வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், RAMANATHAPURAM ) பதிவு செய்த ஆண்டு : 2013 ஆண் / பெண் : M பதிவு எண் : 7502 பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும். User ID : RPD2013M00007502 Password : dd / mm / yyyy கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும். உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்.. அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் திருத்தம் செய்து கொள்கிறேன்.. http://www.tnvelaivaaippu.gov.in/ www.tnvelaivaaippu.gov.in Thanks : Balaguru Sfl Relaxplzz ![]() |
Posted: 19 Mar 2015 06:30 PM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment