Relax Please: FB page daily Posts |
- Dhoni to Sangakkara: ஸ்ரீலங்கா போற வழில இந்த பங்ளாதேஷ் பசங்கள இறக்கி விடுறீங்ளா?...
- 1967 தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவ, திமுக அறியணை ஏறியது. அப்போது...
- பெண்கள் கொலுசு அணிவது ஏன்?. நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கிய...
- எங்க ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில்... ஒரு சின்ன குழந்தை(கையில் தூக்கு வாளியுட...
- கேடு கேட்ட சமுகம் 1.அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறைல தண்ணீர் ஊத்தாத சமூகம...
- :) Relaxplzz
- :P Relaxplzz
- பன்றிக் காய்ச்சல் பயம் வேண்டாம்... பதற்றம் வேண்டாம்! “இந்த நூற்றாண்டில், திட...
- ;) Relaxplzz
- வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா? உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன...
- ‘சிரஞ்சீவி’ என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அதாவது மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்...
- ருத்ராட்சத்தின் மருத்துவ குணங்கள்! READ FULLY ... . SHARE THIS TO EVERY ONE ர...
- 10 பைசா கொடுத்து, உங்களோட "பேனா"க்கு "இங்க்" ஊத்திய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ண...
- அப்ப கிட்ட தொப்பி கேட்டேன் வாங்கி தர மாட்டேன்னு சொல்லிடாரு... #எப்படி நம்ம தொப்...
- விமான நிலையத்தில் 36வது விபத்து ஒரே நாளில் அடுத்தடுத்து கண்ணாடிகள் நொறுங்கின #ச...
- சப்போட்டா பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :O:O Relaxplzz
- எப்ப பாரு என் மனைவி திட்டிக்கிட்டே இருக்காடா.. ஆமா உங்க வீட்ல உன் மனைவி திட்டவே...
- தனது குழந்தையின் பாத சுவடை தன் கையில் பச்சை குத்தி கெண்ட தந்தை. இந்த பாசத்திற்கு...
- "யாரோ, ஊர் பேர் தெரியாத பெண்ணோட சுத்தறியாமே..?." . . . . . . . . . . . . . . "யா...
- இது ஒரு பென்சில் ஓவியம் என்றால் நம்ப சற்று கஷ்டமே..... (Y)
- :) Relaxplzz
- ஒரு மாணவன் நல்ல ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கணம்னு ஶோரூம்க்கு போனான். அவன் எந்த ஷூ வாங்கனம...
- :P Relaxplzz
- டிராபிக் ராமசாமி - 14 வயதில் பற்றிய 'தீ' ! (y) (y) 1949 ஆம் ஆண்டு. எனக்கு அப்போ...
- அழகு தமிழ்நாடு! கங்கைகொண்டசோழபுரம்!
- பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! . . . . . . அப்ப... பீட் ரூட்...
- 10 வினாடிக்குள் இங்கே ஒளிந்திருக்கும் ஒரு மிருகத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிந்...
- :) Relaxplzz
Posted: 18 Mar 2015 08:45 AM PDT |
Posted: 18 Mar 2015 07:10 AM PDT 1967 தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவ, திமுக அறியணை ஏறியது. அப்போது ஒரு காங்கிரஸ்காரர் காமராஜரிடம் சொன்னார், "மக்களுக்காக நீங்கள் எவ்வளவோ செய்திருக்கிறீர்கள். அப்படியும் நீங்கள் ஜெயிப்பதற்குத் தேவையான வாக்குகள் விழவில்லை. என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தீர்களா? எதிர்க்கட்சிக்காரர்கள் ஓயாத பிரசாரத்தின் மூலம் நம்மை வீழ்த்திவிட்டார்கள். நீங்களோ நாம் மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் செய்தோம் என்பதைக் கூடப் பிரசாரத்தில் விவரமாய்த் தெரிவிக்கவே இல்லை. நீங்கள் தோற்றதற்கு அதுதான் காரணம்!" அதற்கு காமராஜர் சொன்ன பதில், "அட, போய்யா! பெத்த தாய்க்குச் சேலை வாங்கிக் குடுக்கிற மகன், 'எங்கம்மாவுக்கு நான் சேலை வாங்கிக் குடுத்தேன், எங்கம்மாவுக்குச் சேலை வாங்கிக்க குடுத்தேன்னு தம்பட்டம் அடிக்கலாமான்னேன்! நம்ம கடமையைத்தானேய்யா நாம செஞ்சோம்? அதில பீத்திக்கிறதுக்கு என்ன இருக்குன்னேன்?" Relaxplzz |
Posted: 18 Mar 2015 06:44 AM PDT பெண்கள் கொலுசு அணிவது ஏன்?. நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. வெப்பத்தை குறைத்து ,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும். தங்கத்தில் என்று இல்லாமல் (முத்து, வெள்ளி போன்றவற்றில்) நாம் நகை அணிதல் நல்லது. பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்து விடுகின்றோம். குழந்தைக்கு நடக்கும்போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதாலும் குடும்பத்தினருக்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்கும் கொலுசு அணிவிக்கப்படுகிறது. உணர்ச்சி வசப்படுதல் என்பது எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை ஸ்திரப்படுத்தவும் கொலுசு பயன்படுகிறது. Relaxplzz ![]() "தெரிந்து கொள்வோம்" - 1 |
Posted: 18 Mar 2015 04:10 AM PDT எங்க ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில்... ஒரு சின்ன குழந்தை(கையில் தூக்கு வாளியுடன்): அண்ணா...! அம்மா பத்து இட்லி வாங்கி வர சொன்னாங்க...!காசு நாளைக்கு தராங்களாம்... ஹோட்டல் நடத்துபவர்: ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா....தூக்கு வாளியை தா சாம்பார் ஊத்தி தாரேன்.... (இட்லி பார்சலையும்,சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்). குழந்தை:சரி...அம்மாட்ட சொல்றேன்...போயிட்டு வரேன் அண்ணே.... (குழந்தை கிளம்பிவிட்டாள்) அந்த கடையில் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம் ஆதலால் நான் கேட்டே விட்டேன்... நான்:நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க.... ஹோட்டல் நடத்துபவர்:அட சாப்பாடுதானே சார்....நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன்.இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல சார்...அதெல்லாம் குடுத்துடுவாங்க...என்ன கொஞ்சம் லேட் ஆகும்....எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது.... நான்: வீட்டுலயே சமைச்சி சாப்பிடலாம்ல ஹோட்டல் நடத்துபவர்: குழந்தை கேட்டிருக்கும்.. அதான் சார் அனுப்பி இருக்காங்க.. நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல சார்.... நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு ...வந்துடும் சார்....ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்டுதுல அதுதான் சார் முக்கியம் கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது... - Vijay Sivanandam Relaxplzz |
Posted: 18 Mar 2015 02:10 AM PDT கேடு கேட்ட சமுகம் 1.அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறைல தண்ணீர் ஊத்தாத சமூகம்தான் அடுத்த தலைமுறைக்காக இயற்கைய காப்பாத்த போகுதா? 2. மெதுவடைல இருக்கிற மொளகாவ தூக்கி எறியுற அதே சமூகம் தான் மொளகால பஜ்ஜி போட்டும் சாப்பிடுது 3.எல்லா பண்டிகையையும் சிறப்புநிகழ்ச்சினு டிவில நாள்புல்லா விளம்பரங்களை பாத்து கொண்டாடுற ஒரு மாதிரியான சமூகம் நம்மளோட சமூகம் தான் 4.சக மனிதன் சீக்குல இருந்தா கூட கவலைப்படாத இந்த சமூகம்தான் சிட்டுக்குருவியின் அழிவைப்பத்தி கவலைப்படுது 5.பணக்காரன் தப்பு செய்து மாட்டிக்கொண்டால் கடந்துவிடும் இதேசமுகம்தான் ஏழையாக இருந்தால் பேசியே அவனை தற்கொலையீன் விளிம்புவரை தள்ளிவிடும் 6.டவுசர் மட்டும் போட்டு நடிச்ச காரணத்துக்காக சமந்தாவை கொண்டாடுற இந்த சமூகம்தான் பட்டா பட்டியை போட்டு போற கிராமத்தான கிண்டல் செய்யுது 7.வத்தல் காய வைக்கும் போது காக்காவ தொரத்துற இதே சமூகம்தான், சாமிக்கு படைச்சா காக்காவ முதல்ல திங்க சொல்லி கத்துத்து. 8.ஆணும் பெண்ணும் நெருங்கி பழகினா அதை நட்புன்னு நினைக்கும் கேடுகெட்ட சமூகம் தான் இது. 9.வெளிநாட்டில் தமிழ் பேசுவதை கௌரவமாக நினைக்கும் அதே சமூகம்தான் தமிழ்நாட்டில் தமிழ் பேசுவதை கேவலமாக நினைக்கிறது 10.பவர்ஸ்டாரின் டோப்பாவை பரிகாசம் செய்யும் இதே சமூகம் தான், ரஜினியின் அனிமேட்டட் சிக்ஸ் பேக்கை புல்லரித்து ரசிக்கிறது... 11.குளிரும் போது ஸ்வெட்டர் போட்டுக்க சொல்லி கொடுத்த இதே சமுகம் தான் வெயிலில் சட்டை பட்டனை திறந்து விட்டு போகும் போது பொறுக்கினும் சொல்லுது... 12.ஒரு ஏழையின் நேர்மையை அவன் இயலாமையாகப்பார்க்கும் அதே சமூகம் தான் ஒரு பணக்காரனின் போலியான பணிவை சிலாகிக்கும் 13.ஒருவனை வசைபாடும் போது சற்றும் சம்மந்தமே இல்லாமல் அவனது அம்மாவை ஒழுக்கத்தை சாடும் கேடுகெட்ட சமூகம் தானே இது.. 14.தெருக்கூத்து நடிகர்களை கூத்தாடிகள் என்று கேலி பேசிய சமூகம் தான், சினிமா நடிகர்களை ஸ்டார்களாக்கி உச்சந்தலையில் வைத்து கொண்டாடுகிறது. 15.கத்தி படம் பார்க்கும் போது விவாசாயிகாக உச்சு கொட்டுற சமுகம் தான் படம் முடிஞ்சி வெளிய வந்ததும் கோக்க கோலா வாங்கி குடிக்குது . #களவாணி பய Relaxplzz |
Posted: 18 Mar 2015 01:48 AM PDT |
Posted: 18 Mar 2015 01:26 AM PDT |
Posted: 18 Mar 2015 01:25 AM PDT பன்றிக் காய்ச்சல் பயம் வேண்டாம்... பதற்றம் வேண்டாம்! "இந்த நூற்றாண்டில், திடீர் திடீரென நோய்கள் பரவி, பதற்றத்தை உருவாக்கி வருகின்றன. நம் முன்னோர்கள், பல காய்ச்சல்களுக்கும் கண்டறிந்துவைத்துள்ள மருந்துகளை நாம்தான் கண்டுகொள்வதும் இல்லை. உபயோகிப்பதும் இல்லை. வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடிய காய்ச்சல்களை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே `கபசுரம்' என்று வகை பிரித்து, மருந்தும் சொல்லியிருக்கிறார் யூகி முனி என்ற மாமுனிவர். இப்போது மக்களை பீதிக்கு உள்ளாக்கியிருக்கும் பன்றிக் காய்ச்சலும் இந்த கபசுரத்துக்குள் அடங்கும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள். "பன்றிக்காய்ச்சல் வரக் காரணம் என்ன?" "எச்1என்1 (H1N1) வைரஸ் என்று அழைக்கப்படும் ஒரு கலப்பின நுண்ணுயிரிதான் (Mutated virus) இந்தக் காய்ச்சலுக்குக் காரணம். மெக்சிகோ, கனடா போன்ற நாடுகளில் குப்பையில் கொட்டப்படும் பன்றி இறைச்சி, கோழி இறைச்சி போன்றவை அழுகிய நிலையில் இருக்கும்போது, அதில் இருந்து உருவாகும் நுண்ணுயிரி இது. அங்கிருந்துதான் நம் நாட்டுக்குப் பரவியிருக்கிறது. அந்த நாடுகளின் சீதோஷ்ண நிலையில் இது வேகமாகப் பரவக்கூடியது. ஆனால், நம் நாட்டின் சீதோஷ்ண நிலையில் அவ்வளவு வேகமாகப் பரவாது." "எப்போது இந்த வைரஸ் பரவும்? எல்லோருக்கும் தொற்றுமா?" "பொதுவாக, குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் காலத்தில்தான், எல்லா வைரஸ்களின் தாக்கமும் அதிகமாக இருக்கும். இந்த வைரஸும் அப்படித்தான் பரவும். காற்று மூலம் பரவக்கூடியது. நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்களை இந்த வைரஸ் எளிதில் தாக்கி, கபத்தை உண்டாக்கும். முக்கியமாக, காசநோய் இருப்பவர்களுக்கு உடனடியாகத் தொற்றி, நோயை இன்னும் தீவிரமாக்கிவிடும்." "கபசுரக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?" "மூக்கு, தொண்டை போன்ற மேல் சுவாசப் பாதை (Upper respiratory tract) உறுப்புகளைத்தான் இந்தக் கிருமி முதலில் தாக்கும். எனவே, மூக்கு எரிச்சல், மூக்கில் நீர் வழிதல், மூக்கடைப்பு, தொண்டையில் தொற்று, தொண்டை வலி எனக் காய்ச்சல் வரை போய் நிற்கும்." "சித்த மருத்துவத்தில் இதற்கு மருந்து உள்ளதா?" "யூகி முனி என்ற சித்தர், காய்ச்சலை 64 வகைகளாகப் பிரித்துள்ளார். உலகிலேயே வேறு எங்கும், இத்தகைய பகுப்பு கிடையாது. இப்போது பன்றிக் காய்ச்சல் என்று சொல்லப்படும் காய்ச்சலுக்கு உரிய தன்மையையும் அதைக் குணப்படுத்துவதற்கு மருந்தையும் கூறியிருக்கிறார். 'கபசுரக் குடிநீர்' என்னும் மருந்து, இந்தக் காய்ச்சலைப் போக்கும் என்பது, அவருடைய 'யூகி வைத்திய சிந்தாமணி' என்னும் நூலில் விளக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் வராமல் தடுக்கும் தடுப்பு மருந்தாகவும், வந்த பின் குணமளிக்கும் மருந்தாகவும் இதைப் பயன்படுத்தலாம்." "கபசுரக் குடிநீர் என்றால் என்ன?" "நிலவேம்புக் கஷாயம் போலவே, இதுவும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். இந்த மருந்தில் நிலவேம்பும் ஓர் உட்பொருளாகக் கலந்துள்ளது. நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, அக்ரஹாரம், கண்டுபாரங்கி (சிறு தேக்கு), ஆடாதொடை வேர், சீந்தில், கோஷ்டம், கற்பூரவள்ளி, கோரைக் கிழங்கு உள்ளிட்ட 15 மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துதான் கபசுரக் குடிநீர். இந்தத் தூளை 10 கிராம் (2 டீஸ்பூன்) எடுத்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து கொதிக்கவைக்க வேண்டும். நன்றாகக் கொதித்து, அரை டம்ளராக வற்றியதும், இறக்கி, வடிகட்டி, காலையிலும் மாலையிலும் உணவுக்கு முன் அருந்த வேண்டும். ஒரு முறை செய்துவைத்த மருந்தை, அடுத்த வேளைக்குப் பயன்படுத்தாமல், அவ்வப்போது புதிதாகத் தயாரித்துக்கொள்ள வேண்டும். நோய் வருவதற்கு முன் தடுப்பு மருந்தாகக் குடிக்க நினைப்பவர்கள், 30 மி.லி எடுத்தால் போதும். தடுப்பு மருந்தாக எடுத்துக்கொள்வதென்றால் மூன்று நாட்களும், சிகிச்சையாக எடுத்துக்கொள்வதென்றால் நோயின் தன்மைக்கும் நோயாளியின் தன்மைக்கும் ஏற்ப 15 நாட்கள் வரையிலும் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கபசுரக் குடிநீர், சித்த மருந்துக் கடைகளிலும் அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும். டெங்குக் காய்ச்சல் பரவியபோது, நிலவேம்புக் குடிநீர் பற்றிய தீவிர பிரசாரத்தை முடுக்கிவிட்டு, ஊடகங்களில் விளம்பரப்படுத்தியதன் விளைவாக, மக்களுக்கு நல்ல விழிப்புஉணர்வு ஏற்பட்டது. அதேபோல இந்தக் கபசுரக் குடிநீர் பற்றியும் அரசு தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு, ஊடகங்களில் பெரிய அளவு விளம்பரப்படுத்தி, மக்களிடையே பன்றிக் காய்ச்சல் குறித்துப் பரவியுள்ள பீதியைக் குறைக்கவேண்டும். இந்த மருந்தைப் பயன்படுத்தி நோயைத் தடுத்துக்கொள்ள, அரசு முயற்சி எடுக்க வேண்டும்." பன்றிக் காய்ச்சல்... என்ன டயட்? 1.வறுத்த அரிசி அல்லது வறுத்த நொய்யில் கஞ்சி செய்து அருந்தலாம். தொட்டுக்கொள்ள, தூதுவளை அல்லது இஞ்சித் துவையல் நல்லது. 2.வடித்த சோற்றில், மீண்டும் ஒரு முறை தண்ணீர் ஊற்றி, அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வேகவைத்து, அந்தத் தண்ணீரை வடித்து அருந்தலாம். 3.குழைய வடித்த சுடு சோற்றில், சுண்டை வற்றல் பொடி சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். இட்லிக்கும் இந்தப் பொடியைத் தொட்டுக்கொள்ளலாம். சுண்டை வற்றலைக் குழம்பாகச் செய்து சாப்பிடலாம். 4.அன்னாசிப் பழம் மிகவும் நல்லது. உணவில் சேர்க்கலாம். பன்றிக் காய்ச்சலுக்கு அரசு வழங்கும் 'டேமிஃப்ளூ' மாத்திரைகளில் அன்னாசி கலந்துள்ளது. 5.பால், தயிர் தவிர்க்க வேண்டும். விருப்பப்பட்டால், மோர் குடிக்கலாம். எளிய - வலிய சில மருந்துகள்! தொண்டையில் தொற்று, வலி மற்றும் கரகரப்பு ஆரம்பிக்கும்போதே, முன்னெச்சரிக்கையாகத் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சித்த மருந்துக் கடையில், தாளிசாதி வடகம் என்ற மருந்து கிடைக்கும். இதை வாயில் போட்டு, உமிழ்நீருடன் மென்று, தொண்டையில் படும்படி விழுங்கினால், தொண்டைப் பாதிப்பு குறையும். மூக்கு எரிச்சல், மூக்கில் நீர் வடிதல் மற்றும் மூக்கடைப்பு இருப்பவர்கள், சிறிது ஓமம், சிறு துண்டு பச்சைக் கற்பூரம், ஒரு சிட்டிகை சுத்தமான மஞ்சள் தூள் ஆகிய மூன்றையும் நசுக்கி, ஒரு தூய வெள்ளைத் துணியில் முடிந்து, அவ்வப்போது மூக்கில்வைத்து முகர்ந்துகொண்டே இருந்தால், மேலே சொன்ன மூக்குப் பிரச்னைகள் அண்டாது. சுவாசப்பாதையில் நோய்க் கிருமிகள் தொற்றாமல், கவசம் போல காக்கும் Relaxplzz ![]() "நலமுடன் வாழ" - 3 |
Posted: 18 Mar 2015 12:14 AM PDT |
Posted: 17 Mar 2015 11:59 PM PDT வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா? உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள் தொடர்ந்து செய்து வந்தால் குடல்புண்கள் ஆறிவிடும். கடுமையான வயிற்றுவலி, உள்ளவர்கள் கொதிக்கும் தண்ணீர் ஒரு கப் எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து ஆற்றவேண்டும். குடிப்பதற்கு போதுமான அளவு சூட்டுடன் அந்த நீரை குடிக்கவேண்டும். இவ்வாறு குடிப்பதனால் வயிற்றுவலி, நின்றுவிடும், ஜீரணக்கோளாறுகளும் குணமாகும். வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல் இருந்தால் உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியன குணமாகிவிடும். இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து சிவக்கும்படி வறுக்கவேண்டும். அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்சவேண்டும். சுண்டக்காய்ந்ததும் இறக்கி வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி இருவேளை அருந்தினால் செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட பேதி நின்றுவிடும். ஒரு டீஸ்பூன் மிளகைத் தூள் செய்து மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீஸ்பூன் தூள் எடுத்து அதனுடன் தேன் கலந்து உட்கொள்ளவேண்டும். செரிமாக்கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்றுநோய் குணமாகும். அகத்திக்கீரையைக் காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் வேகவைக்கவேண்டும். அதை சாறுபிழிந்து எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தினால் எல்லாவித வயிற்றுக்கோளாறுகளும் குணமாகும். ஆலமரத்திலிருந்து ஒரு டீஸ்பூன் பால் எடுத்து அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும், வயிற்றிலுள்ள புண்களும் குணமாகும். குப்பை மேனி செடியின் வேரை இடித்து கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்று புழுக்கள் வெளியாகும். பத்து கொன்றை மரப்பூக்களை 100மில்லி பசும்பாலில் இட்டு காய்ச்சி பூ நன்றாக வெந்ததும் வடிகட்டி அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்தலாம். இதனால் வயிற்றுக்கோளாறுகள், வயிற்றுபுண், குடற்புண் ஆகியன குணமாகும். சீதளபேதியை குணப்படுத்த 100மில்லி ஆட்டுபாலை ஒரு டீஸ்பூன் தேன் கலந்து அருந்தவேண்டும். 1தம்ளர் வெந்நீரில் 1 டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலுமிச்சைபழ சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்த்துள்ள சளி எல்லாம் கண் காணத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும் அதிகாலையிலும், படுக்கச்செல்வதற்கு முன்பும் பருகவேண்டும். நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காயவைக்கவேண்டும். பின்பு 1டீஸ்பூன் வீதம் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும். என்றும் இளமையுடன் இருக்கவேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்த வேண்டும். நாற்பது வயதை கடந்தவர்கள் தினனும் தேனை அருந்தலாம். ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்கு கை, கால்கள், விரல்கள், மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும் இவர்கள் தினமும் ஒரு தம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள். ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும் போது உண்டு வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத்தளர்ச்சிக்குத் தேனைவிட சிறந்த மருந்து இல்லை. தேனை துளசி சாறில் கலந்து உபயோகிப்பது சளி தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத்தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது. Relaxplzz ![]() "நலமுடன் வாழ" - 2 |
Posted: 17 Mar 2015 11:15 PM PDT 'சிரஞ்சீவி' என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அதாவது மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்பவர்களை 'சிரஞ்சீவி' என்பர். அஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரி, பரசுராமன், மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் எனப்படுவர். மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்கள் பூதவுடலுடன் இல்லையென்றாலும் இன்னும் தங்கள் ஆன்மாவுடன் இங்கு உலவிக்கொண்டு தானிருக்கிறார்கள். இந்த சிரஞ்சீவிகளில் மிகவும் பிரபலம் நமது மார்கண்டேயன். பின்னே இவனை காப்பாற்ற வேண்டி தானே சிவபெருமான் காலனையே காலால் உதைத்தார்? எமனுக்கு பயந்து 12 வயதே நிரம்பிய இந்த பாலகன் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்ததும், பின்னர் சிவபெருமான் பிரத்யட்சமாகி காலனை காலால் உதைத்து இவனை காத்தருளியதும் உங்களுக்கு தெரிந்திருக்கும். மார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று என்று தெரியுமா? இதன் பின்னணியில் நமக்கெல்லாம் மிகப் பெரிய செய்தி அடங்கியிருக்கிறது. மார்கண்டேயனுக்கு 12 ஆவது வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும் அவனுக்கு அல்பாயுசு தான் என்றும் அவன் தந்தையான மிருகண்ட மகரிஷிக்கும் தெரியும். ஆகையால் மகனை காக்க விரும்பிய மிருகண்ட முனிவர், அவனுக்கு உபநயனம் செய்வித்த பின்னர், "பெரியோர்கள் எவரை சந்தித்தாலும் தயங்காது அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களது ஆசிகளை பெற்று வருவாயாக" என்று பணித்தார். மார்கண்டேயனும் அதே போல தான் பார்க்கும் பெரியவர்கள் காலில் விழுந்து விழுந்து ஆசி பெற்று வந்தான். சப்த ரிஷிகள் ஒருமுறை மிருகண்ட முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்தபோது, மார்கண்டேயன் இவ்வாறு அவர்களிடம் வீழ்ந்து ஆசி பெற, அவர்களும், "தீர்க்கா யுஷ்மான் பவ" என்று வாழ்த்திவிட்டார்கள். பிறகு தான் தெரிந்துகொள்கிறார்கள் அவனுக்கு 12 வது வயதில் மரணம் சம்பவிக்கும் என்று. என்றும் சத்தியத்தையே பேசும் சப்தரிஷிகளின் வாக்கு பொய்க்குமா? இருப்பினும் இந்தப் பிரச்னையை பிரம்மாவிடம் கொண்டு செல்கிறார்கள். அவரிடமும் விழுந்து ஆசி பெறுகிறான் மார்கண்டேயன். அவரும் அதே போல ஆசி வழங்கிவிடுகிறார். இப்படி பார்க்கும் பெரிவர்கள் எல்லாம் அவனுக்கு ஆசி வழங்கவே அவர்கள் ஆசி அனைத்தும் சேர்ந்து அவனது தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது. பெரியவர்களின் ஆசியை நிறைவேற்றுவது பரம்பொருளின் கடமையல்லவா? ஆகவே தான் சிவபெருமான் தோன்றி மார்கண்டேயனை காத்ததோடு மட்டுமல்லாமல் அவன் என்றும் 16 அதாவது சிரஞ்சீவியாக இருப்பான் என்று வரமும் தருகிறார். பெரியோர்களை விழுந்து வணங்குவது என்பது நமது பாரம்பரியங்களில் ஒன்று. பகவான் கிருஷ்ணர் தம்மினும் பெரியோர்களை கண்டால் தவறாது விழுந்து வணங்குவார். எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியை பெறவேண்டும். அது உங்களை காக்கும் அரண் மட்டுமல்ல… உங்களது தலையெழுத்தையே மாற்றவல்லது. Relaxplzz |
Posted: 17 Mar 2015 11:10 PM PDT ருத்ராட்சத்தின் மருத்துவ குணங்கள்! READ FULLY ... . SHARE THIS TO EVERY ONE ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பித்தம், தாகம், விக்கல் போன்வற்றிற்கு இது மிகவும் நல்லது. கபம், வாதம், தலைவலி போன்ற நோய்களுக்கு ருத்ராட்சம் சிறந்த மருந்தாகும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. ருசியை விருத்தி அடையச் செய்யும். மன நோய்களுக்கு சாந்தம் அளிக்கும். கண்டகாரி, திப்பிலி என்பவற்றுடன் இதைச் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும். ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறு விட்டு இழைத்து, அந்தச் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். இந்த ருத்ராட்சம் துõக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி. இதை பால்விட்டு இழைத்து அந்தச் சாற்றை கண் இமைகள் மீது தடவிக் கொண்டால் நிம்மதியான உறக்கம் வரும். இந்த ருத்ராட்சத்தை தூளாக்கி துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும். தண்ணீரில் இதைப் போட்டு சில மணி நேரம் ஊற வைத்து, பிறகு ருத்ராட்சத்தை எடுத்துவிட்டு தண்ணீரை உட்கொண்டால் ரத்த அழுத்த உபாதைகள் நிவாரணம் ஆகும். ஒரு முக ருத்ராட்சம் மிகவும் அரிதாகக் கிடைக்கிறது. ஒரு முக ருத்ராட்சத்தை சன்யாசிகள் மட்டுமே அணிய வேண்டும். பிறர், வீட்டில் உள்ள சாளக்கிராமம் மற்றும் விக்ரகங்களுடன் வைத்துப் பூஜை செய்யலாம். ருத்ராட்சத்தைக் கழுத்தில் மாலையாக 32ம், கை மணிக்கட்டில் 12ம், மேல் கையில் 16ம், மார்பில் 108ம் ஆக தரிக்கலாம். ஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பரமசிவன். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். இரண்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இதை அணிவதால் பசுவைக் கொன்ற பாவம் விலகும். பொருட் செல்வம் பெருகும். மூன்று முக ருத்ராட்சத்தின் அதி தேவதை அக்னி தேவன். மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைவர். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும். நான்கு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பிரம்மா. மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும். ஐந்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும். ஆறு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியர். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும். ஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிசேஷன். களவு தோஷமும் கோபத்தீயும் விலகும். எட்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விநாயகப் பெருமான். பாவங்கள் விலகும். ஒன்பது முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பைரவர். இதை அணிவதால் நவ தீர்த்தங்களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும். பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும். பத்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விஷ்ணு. நாக தோஷமும், பைசாச தோஷமும் விலகும். பதினோரு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள்ளது. பல அஸ்வமேத யாகம் செய்த பலன்களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்.. . ருத்ராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும், நன்மைகளும் கிடைக்கும். அத்தகைய ருத்ராட்சத்தை அணிந்து வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று உய்வோம்... Relaxplzz |
Posted: 17 Mar 2015 10:40 PM PDT |
Posted: 17 Mar 2015 09:50 PM PDT |
Posted: 17 Mar 2015 09:45 PM PDT விமான நிலையத்தில் 36வது விபத்து ஒரே நாளில் அடுத்தடுத்து கண்ணாடிகள் நொறுங்கின #சரிசரி...இப்ப கலாய்க்க மூடு இல்ல...அடுத்த தடவ பார்த்துக்குவோம்.. :P :P - விவிகா சுரேஷ் |
Posted: 17 Mar 2015 09:40 PM PDT |
Posted: 17 Mar 2015 09:20 PM PDT |
Posted: 17 Mar 2015 09:10 PM PDT எப்ப பாரு என் மனைவி திட்டிக்கிட்டே இருக்காடா.. ஆமா உங்க வீட்ல உன் மனைவி திட்டவே மாட்டாங்கலாடா.. யாரு சொன்னா எல்லா மனைவியும் திட்டுவாங்கதான் .. என் மனைவி திட்டும்போது ஒன்னே ஒன்னுதான் சொல்லுவேன் சிரிச்சிகிட்டே போயிடுவா.. அப்படியா என்னடா அது சொல்லு.. . . . . . . . . . . . . . SAME TO YOUUUU... :P :P Relaxplzz |
Posted: 17 Mar 2015 08:50 PM PDT |
Posted: 17 Mar 2015 08:45 PM PDT "யாரோ, ஊர் பேர் தெரியாத பெண்ணோட சுத்தறியாமே..?." . . . . . . . . . . . . . . "யாருப்பா சொன்னது...அவ பேரு சீமா..நம்ம ஊருதான்...பக்கத்து தெரு மாளிகை கடைக்காரர் பொண்ணு..!.." :O :O |
Posted: 17 Mar 2015 08:40 PM PDT |
Posted: 17 Mar 2015 08:31 PM PDT |
Posted: 17 Mar 2015 08:15 PM PDT ஒரு மாணவன் நல்ல ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கணம்னு ஶோரூம்க்கு போனான். அவன் எந்த ஷூ வாங்கனம்னு நினைத்தானோ அதை வாங்க அவன் கைல காசு இல்ல. வேறு வழியின்றி அவன் பட்ஜெட்க்கு தகுந்த மாதிரி ஒரு ஷூ வாங்கிண்டு வெறுப்போடு வெளியே வந்தான். அப்பொழுது அவன் எதிரிலே அவனை விட சின்ன பையன். அவனுக்கு ஒரு காலே இல்லை. அருகில் இருக்கும் தனது நண்பனுடன் சிரித்து பேசியபடி ஊன்றுகோல் உதவியுடன் நடந்து கொண்டிருந்தான். கேவலம். தான் எதிர்பார்த்த ஷு வாங்கமுடியாத காரணத்தால் நான் வருத்தப்படுகிறேன். ஆனால் ஒரு காலே இல்லாத இவன் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி, ஆனந்தம். காலில் போடும் அந்த ஷு நமது மகிழ்ச்சியை விட உயர்வானதா. ஒரு ஷுக்காக போய் நமது விலை மதிக்க முடியாத நமது மன மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் சில நிமிடங்கள் இழந்து விட்டோமே என்று அவன் உணர்ந்த அந்த நொடியில். அவன் இழந்த பேரானந்தம் மீண்டும் அவனுக்கு கிடைத்தது. நமக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உருவாகும் துன்பங்களை விட இதுபோல் நமக்கு நாமே சிறு, சிறு அற்ப்ப விசயங்களுக்காக உருவாக்கி கொள்ளும் துன்பங்கள் தான் அதிகம். நம்மை நாம் உணர்ந்து சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதை நாம் முறையாக செய்தால் இடுக்கண் வறுகால் நகுக என்னும் குறளுக்கு ஏற்ப்ப நமது மனம் பக்குவப்பட்டு விடும். Relaxplzz |
Posted: 17 Mar 2015 08:08 PM PDT |
Posted: 17 Mar 2015 07:56 PM PDT டிராபிக் ராமசாமி - 14 வயதில் பற்றிய 'தீ' ! (y) (y) 1949 ஆம் ஆண்டு. எனக்கு அப்போது வயது 14. நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அம்மா என்னை அரிசி எடுத்து வருவதற்காக சென்னையில் இருந்து காஞ்சிபுரம் அனுப்பி இருந்தார். நான் காஞ்சிபுரத் தில் இருந்து 10 கிலோ அரிசியை எடுத்துக் கொண்டு பஸ்ஸில் வந்தேன். அதற்கான அனுமதியையும் பெற்று இருந்தேன். அப்போதையக் காலத்தில் குறிப்பிட்ட எடைக்கு மேல் அரிசி மற்றும் நெல்லை அனுமதி இல்லாமல் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. (அப்போது சென்னையில் இருந்து காஞ்சி புரத்துக்கு பஸ் கட்டணம் 1 ரூபாய் 25 காசுகள்) சென்னையை நோக்கி வந்துகொண்டு இருந்தது பஸ். ஆற்காடு செக்போஸ்ட்டில் வந்தபோது பஸ்ஸை நிறுத்தி அவரவர் கைகளில் இருந்தப் பொருட்களை அதிகாரிகள் பரிசோதனை செய்துகொண்டு இருந்தனர். என்னைப் பரிசோதித்த ஓர் அதிகாரி என் மடியில் இருந்த அரிசிப் பையைப் பார்த்துவிட்டு, 'பத்து கிலோ அரிசியைக் கொண்டு செல்ல அனுமதி வாங்கி இருக்கிறாயா?' என்றார். நான் அனுமதி வாங்கிய விவரத்தைச் சொன்னேன். ஆனாலும், அந்த தாசில்தார் நான் கொண்டுவந்த அரிசிப் பையைப் பிடுங்கிக் கொண்டார். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் அரிசிப் பையைக் கொடுக்கவில்லை. 'எங்கள் வயலில் விளைந்த அரிசி இது. பத்து கிலோ எடுத்துச் செல்ல உரிய அனுமதி வாங்கி இருக்கிறேன். அப்படியும் நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்?' எனக் குரலை உயர்த்தி நியாயம் கேட்டேன். அதில், அந்த தாசில்தாருக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. 'என்னிடமே நியாயம் பேசுகிறாயா? உன்னால் முடிந்ததைச் செய்துகொள். அரிசியைத் தர முடியாது. மீறிப் பேசினால் போலீஸுக்குத் தகவல் சொல்ல வேண்டி இருக்கும்!' என மிரட்டி அனுப்பிவிட்டார். எங்கள் குடும்பத்தில் அப்போது 11 பிள்ளைகள். நான் கொண்டுபோகும் அரிசியில்தான் சாப்பாடு செய்ய வேண்டிய நிலை. சில நேரங்களில் அப்பா ஓவர் டியூட்டி பார்த்தாலும் பார்ப்பார். வெறும் கையோடு போனால் அம்மா என்ன செய்வாள்? பலவித வேதனைகளும் மனதைக் குழப்ப, அரிசிப் பையை இழந்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். தாசில்தார் அரிசிப் பையைப் பிடுங்கிக்கொண்ட விஷயத்தைச் சொன்னேன். சொல்லும்போதே எனக்கு அழுகை பொங்கியது. அப்போது வீட்டுக்கு வந்த என் தந்தை, 'சரி, விடு. அதிகாரிகள் ஏதோ தவறான அரிசின்னு நினைச்சுப் பிடிச்சிருப்பாங்க. அதை விட்டுத்தள்ளு. நான் கடைக்குப்போய் அரிசி வாங்கி வருகிறேன்' என எனக்கு ஆறுதல் சொல்லிக் கிளம்பிவிட்டார். ஆனால், என்னால் என்னை சமாதானம் செய்துகொள்ள முடியவில்லை. 'ஏதோ ஓரளவுக்கு சமாளித்துக் கொள்ளும் குடும்பம் என்பதால் சிக்கல் இல்லாமல் போய்விட்டது. இதேபோல் ஒரு அன்றாடங்காய்ச்சியின் குடும்பத்துக்கு நேர்ந்து இருந்தால் என்னாகி இருக்கும்?' என்கிற எண்ணம் அன்று முழுக்க என்னைத் தூங்கவிடவில்லை. தவறாக நடந்துகொள்வது எத்தகையக் கண்டனத்துக்கு உரியதோ... அதேபோல்தான் தவறைத் தட்டிக் கேட்காமல் அலட்சியம் காட்டுவதும். அந்த ஆவேசம் எனக்குள் அடங்காதத் தீயாகத் தகிக்கத் தொடங்கியது. 'ஒரு தனி நபர் ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு எத்தனை கிலோ அரிசியை எடுத்துச் செல்லலாம்? அதற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டும்?' என்கிற விவரங்களை எல்லாம் மறுபடியும் படித்துப் பார்த்து தெரிந்துகொண்டேன். சட்டப்படி நான் 10 கிலோ அரிசியைக் கொண்டு வந்ததில் எந்தத் தவறும் இல்லை என்கிற நிறைவு எனக்கு நிம்மதியைக் கொடுத்தது. நியாயமாக நடந்தும் அரிசியைப் பறித்துக்கொண்ட அந்த தாசில்தாரை நிச்சயம் சும்மா விடக்கூடாது என்கிற ஆவேசமும் எனக்குள் அடங்கிவிடவில்லை. 'எப்போதடா விடியும்?' எனப் புரண்டு புரண்டுப் படுத்தேன். காலையில் எழுந்த உடன் தபால் ஆபீஸுக்குப் போனேன். மூன்று பைசாவுக்கு ஒரு போஸ்ட் கார்ட் வாங்கினேன். எனக்கு நடந்த அநீதியை அப்படியே எழுதி அப்போதையக் காஞ்சிபுரம் கலெக்டருக்கு அனுப்பினேன். 'நிச்சயம் எனக்கான நியாயம் கிடைக்கும்' என்கிற நம்பிக்கையோடு பள்ளிக்கூடம் சென்று விட்டேன். நான்கு நாட்கள் கழித்து, ஆற்காடு சிக்னலில் என் அரிசியைப் பிடுங்கி வைத்துக்கொண்ட அதே தாசில்தார் எங்கள் வீட்டுக்கு முன், கையில் அரிசிப் பையோடு நின்றுகொண்டு இருந்தார். நான் அவரை பார்க்காதது போல் வீட்டுக்குள் சென்றுவிட்டேன். 'தம்பி... தம்பி...' என்றபடியே பதறிய அவர், மாவட்ட ஆட்சியர் தன்னை சஸ்பெண்ட் செய்துவிட்டதாகக் கூறினார். ''உங்களோட அரிசிப்பை ஒரு அரிசிகூடக் குறையாமல் இதோ இருக்கு. நடந்தது தவறுதான். என்னைவிட எத்தனையோ வயசு சின்னப் பையனான உங்ககிட்ட மனசு வருந்தி மன்னிப்புக் கேட்டுக்கிறேன்'' என்றார் கண்ணீரோடு. அரிசிப் பையை என்னிடம் கொடுத்து, ''நடந்த சம்பவத்தை மறந்து என்னை மன்னிச்சிட்டதா நீங்க ஒரு கடிதம் கொடுத்தாத்தான் மறுபடியும் நான் தாசில்தார் உத்தியோகம் பார்க்க முடியும். தயவு பண்ணி என்னை மன்னிச்சிட்டதா ஒரு கடிதம் எழுதிக் கொடுங்க தம்பி'' என அவர் இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டபடி சொல்ல... எனக்கே ஒரு மாதிரியாகிவிட்டது. இது என் நியாயத்துக்கான வெற்றி என சத்தம் போட்டுக் கத்த வேண்டும்போல் இருந்தது. வயதில் சிறுவனாக இருந்தாலும், எனக்கு நடந்த அநீதியை யாருடைய துணையும் இல்லாமல் என்னால் தட்டிக் கேட்க முடியும். அதற்கான நியாயத்தைப் பெற முடியும் என்கிற துணிச்சல் எனக்குள் முதல் முறையாகப் பூத்தது. யாரையும் அழவைத்து ரசிக்கும் குரூரம் எனக்கு ஒருபோதும் இருந்தது இல்லை. அதனால், 'நடந்த தவறை தாசில்தார் ஒப்புக்கொண்டார். என் அரிசிப் பையையும் முறைப்படி திருப்பிக் கொடுத்தார். இனி இதுபோல் அவர் யாரிடமும் நடந்துகொள்ள மாட்டார் என நம்புகிறேன். திருந்திய மனநிலையில் இருக்கும் இவரை சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து விடுவித்து உரிய பணியில் அமர வைக்கலாம்!' எனக் கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பினேன். அறிந்தோ அறியாமலோ தவறு நிகழ்ந்துவிடுகிறது. அதன் பாதிப்பு அறிந்து ஒருவர் மன்னிப்புக் கேட்கும்போது, தவறைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக அவரை மன்னிப்பதில் தவறே இல்லை. மன்னிப்புதான் மனிதகுலத்தின் மைய விளக்கு. அது தரும் சுடரில்தான் இந்தப் பூமிப் பந்து சுற்றுகிறது. தவறு செய்தவர்களைத் திருந்தச் செய்வது மட்டுமே நம் கடமை. 14 வயதில் ஒரு தாசில்தாரையே சஸ்பெண்ட் ஆக வைத்திருக்கிறேன் என்றால், நியாயத்தின் அடிப்படை யில் என்னால் எதையும் தைரியமாகச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை அப்போதுதான் பிறந்தது. மனதுக் குள் புது வெள்ளம் பாய்ந்ததுபோல் ஓர் உற்சாகம். ஒரு சிறு எறும்பு யானையின் காதுக்குள் புகுந்து யானையைக் குப்புற சாய்த்தது போன்ற நிறைவு. மூன்று பைசா போஸ்ட் கார்டில் எழுதப்பட்ட விஷயத்தை அக்கறையோடு படித்து, உரியபடி விசாரித்து, தவறு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த அந்தக் கலெக்டர்தான் 'அநியாயமாக நடக்கும் எதையும் தட்டிக் கேட்கலாம்' என்கிற துணிச்சலை எனக்குள் வார்த்தவர். இன்றைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மீது வழக்குப்போட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன் என்றால்... அதற்கான தைரியம் அந்த 14 வயதில் உருவானது. - வசந்தன் காரைக்கால் Relaxplzz ![]() "முகங்கள்" |
Posted: 17 Mar 2015 07:50 PM PDT |
Posted: 17 Mar 2015 07:45 PM PDT பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! . . . . . . அப்ப... பீட் ரூட்ல............. என்ன போகும்? தெரிஞ்சவங்க சொல்லுங்களேன் ...???? |
Posted: 17 Mar 2015 07:40 PM PDT |
Posted: 17 Mar 2015 07:31 PM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment