Friday, 6 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 06 Mar 2015 05:30 PM PST


"வட வேங்கடம்(திருப்பதி) முதல் தென் குமரி வரை தமிழ் கூறும் நல் உலகம்" என்று 2500...

Posted: 06 Mar 2015 11:03 AM PST

"வட வேங்கடம்(திருப்பதி) முதல் தென்
குமரி வரை தமிழ் கூறும்
நல் உலகம்"

என்று 2500 வருடங்கள் முன்பே தொல்காப்பியத்தில்
சொல்லப்பட்டுள்ளது நம்
தமிழகத்தின் எல்லை.


அழகியல்!

Posted: 06 Mar 2015 08:50 AM PST

அழகியல்!


2, 3, 4, 5 வயசுனு பிஞ்சு குழந்தைகள் பட்டப்பகலில் பள்ளிகளில் கற்பழிக்கப்படுகிற நா...

Posted: 06 Mar 2015 07:51 AM PST

2, 3, 4, 5
வயசுனு பிஞ்சு குழந்தைகள்
பட்டப்பகலில்
பள்ளிகளில்
கற்பழிக்கப்படுகிற
நாட்டுல,
பெண்களின் ஆடையும்
அவர்கள் இரவு ஒன்பது
மணிக்கு மேல்
வெளியில்
நடமாடுவதும் தான்
பாலியல்
வன்முறைக்கு காரணம்
என்று உளறும்
மனநோயாளிகள்
டெல்லி பாலியல்
குற்றவாளிகளை
விட கொடூரமானவர்கள்.

@Sumi sumaa

தி மெக்கானிக்:- அந்த ரோட்டோர கரும்பு ஜூஸ் பிழிபவர், இது போன்ற வெயில் நாள் ஒன்று...

Posted: 06 Mar 2015 04:56 AM PST

தி மெக்கானிக்:-

அந்த ரோட்டோர கரும்பு ஜூஸ் பிழிபவர், இது போன்ற வெயில் நாள் ஒன்றுக்குதான் காத்திருந்தார். பனிகாலம் முழ்வதும் அவர் தொழில் படுத்து விட்டது. சுட்டெரிக்கும் சூரியன் எப்போது எட்டி பார்க்கும் என்று கிழக்கு திசையை பார்க்காத நாளில்லை. காட்டுவா மரத்தடியில் ஆயில் இஞ்சின் போட்டு கரும்பு ஜூஸ் ஏவாரம் பெரிய லாபகரமில்லை என்றாலும் எந்த வேலையாவது செய்யணுமில்ல! வீட்ல யாருக்கும் பாரமா இருக்க கூடாதுல்ல என்பார்.

நான் அவருக்கு வழக்கமான கஸ்டமர். அவர் எனக்கொரு நல்ல வெகுஜன தொடர்பாளர், பிறகுதான் ஜூஸ் ஏவாரி. என்னை பார்க்கும் போது அவர் கண்களில் சினேகம் வழியும். ஒரு நலம் விசாரிப்பு எப்போதும் அவரிடத்தில் இருக்கும். வார கணக்கில் என்னை பார்க்க முடியவில்லை என்றால் என்னப்பா வேலை அதிகமா என்பார்! வேறு எங்கோ அலைந்து திரிந்து பைக்ல அவரை கடக்கும்போது வெயிலில் ஏன்பா இப்படி திரியறே என்பார்.

சாலையில் தெருநாய் அடிப்பட்டு செத்தது முதல் காலேஜ் பையன் வண்டியோடு சறுக்கி விழுந்தது வரை என்னிடம் பேசுவார். மற்றவர்களிடத்தில் காசை வாங்கி கொண்டு கல்லா கட்டுபவர், என்னிடத்தில் நிதானம் காட்டி ஏதாவது பேச்ச் தொடருவார். கரும்பு பால் உடம்புக்கு எவ்வளவு சுகம் கொடுக்கிறது தெரியுமா என்பார். தொடர்ந்து சாப்பிட்டால் கிட்னியில் கல் கட்டாது. மஞ்சள் காமாலைக்கு குடிக்கலாம். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் வராது. இஞ்சி உடன் வைத்து நசுக்குவதால் ஜீரண சக்தி தூண்டி விடும். மலச்சிக்கல் அண்டாது. இப்படி நாட்டுப்புற வைத்தியர் போல பெரிய பட்டியல் போடுவார். இது தெரியாமல் நம்மாளுங்க கூல்டிரிக்ஸ் குடிச்சிட்டு சுத்தறாங்க என்று அலுத்துக் கொள்வார்.

அவர் சொல்வது அவர் தொழிலுக்கான மார்க்கெட்டிங் போல தெரிந்தாலும், நான் தொடர்ந்து கரும்பு பால் அருந்துவதால் எனக்கு உடலில் சில அனுகூலங்கள் தெரிவதால், அவர் தொழிலை அதிகம் சந்தேகம் பட முடியவில்லை. வியாபாரம் இல்லாத நாளில் என்ன பண்ணுவீங்க என்பேன்! ஆயில் எஞ்சினை நானே கழற்றி சர்வீஸ் பண்ணுவேன் என்பார். இதுக்கு மெக்கானிங் பிராட்வே போய் அழைச்சிட்டு வரணும். அவனுங்களை தேடி பிடிப்பது குதிரை கொம்பா இருக்கும். நானே இதை பிரிச்சு மேய்ந்து என்னானு ஒரு கை பார்த்துட்டேன் என்றார்.

தினமும் இது மூஞ்சில தான் முழிக்கிறோம். இதையே தான் பார்த்துட்டு இருக்கோம் . இது மேல தான் சாய்ஞ்சு கிடக்கேன். இதை பார்த்த படியேதான் சோறு தின்றேன். இது ஜாதகத்தை கத்துக்க முடியாதா என்று மெஷின் கண்டு பிடிச்ச விஞ்சானி மாதிரி பேசுவார். நம்ம எந்த தொழில் பண்ணாலும் எந்த மெஷிசனை ஓட்டினாலும் அதன் ஆழம் வரை தேடி பிடிச்சு கத்துக்கணும் என்று சொல்லும் போது போன வாரம் கார் பஞ்சருக்கு ஸ்டெப்னி மாற்ற நான் ஆள் தேடி அலுத்துக் கொண்டது நினைவுக்கு வந்தது. இவருக்குள்ளே இருக்கின்ற மெக்கானிசம் எனக்குள்ளே ஏன் இல்லை! நான் ஏன் கத்துக்கலைனு தோணுச்சி. ஸ்பிலிட் ஏசி பில்டர் கிளின் பண்ண வேற ஒருத்தனுக்கு ஏன் நூறு ரூபாய் தரணும்! அதை நம்மளே பண்ண முடியாதா?

பயன்படுத்துபவரே ஒரு இயந்திரத்தின் முதல் மெக்கானிங் ஏதோ ஒரு பாட திட்டத்தில் நான் படித்தது இப்போதுதான் நினைவுக்கு வந்து தொலைகிறது.

@பா. வெங்கடேசன்


0 comments:

Post a Comment