Friday, 6 March 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


என்னிக்கு நாம முறுக்கு முட்டபோண்டா கம்மர்கட்டு கம்மங்கூழ் கடைகள எல்லாம் தவிர்த...

Posted: 06 Mar 2015 08:02 AM PST

என்னிக்கு நாம

முறுக்கு முட்டபோண்டா கம்மர்கட்டு கம்மங்கூழ் கடைகள எல்லாம் தவிர்த்துட்டு

பெப்சி பர்கர் கடைகளத்தேடி போனோமோ

அன்னிக்கு ஆரம்பிச்சது பொருளாதார வீழ்ச்சி ...

இத நான் சொன்ன இந்த புள்ள உளருதும்பாங்க...
...
@ Indupriya MP
...


முதலமைச்சர் காமராஜரும்.. பிரதமர் நேருவும்.. கூட்டமொன்றில் பங்கேற்க.. மதுரை அரு...

Posted: 06 Mar 2015 03:05 AM PST

முதலமைச்சர் காமராஜரும்.. பிரதமர் நேருவும்..

கூட்டமொன்றில் பங்கேற்க.. மதுரை அருகே.. காரில் சென்று கொண்டிருந்தார்கள்..!!
உரையாடலின் நடுவே.. நினைவு வந்தவரான. நேரு. " மிஸ்டர் காமராஜ் உங்கள் சொந்த ஊர் இந்த பக்கம் தானே..? என்று கேட்கிறார்..!!
"ஆமாங்க இன்னும் கொஞ்சம் தூரத்தில் தான் இருக்கிறது..!!என்கிறார் காமராஜர்..!!
"அப்படியானால் உங்கள் தாயாரை பார்த்து விட்டு.. நலம் விசாரித்து விட்டு செல்ல வேண்டும் அல்லவா..? என்று நேரு அவர்கள் கேட்க..
"இப்பவே கூட்டத்திற்கு நேரம் ஆகி விட்டதே..?" என்று காமராஜர் மறுக்கிறார்..!!
அதற்கு நேரு அவர்கள்...
"இவ்வளவு தூரம் வந்து விட்டு.. உங்கள் தாயாரை பார்க்காமல் சென்றால்.. நன்றாக இருக்காது.. நான் பார்த்தே ஆக வேண்டும்.. என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்..!!" என்று அன்பு கட்டளையிடுகிறார்
ஆமோதித்த காமராஜர்..
வண்டி சற்று தூரம் சென்றதும்.. ஓட்டுனரிடம்.." தம்பி வண்டியை இப்படி ஓரங்கட்டு..!!" என்று வண்டியை நிறுத்த சொல்கிறார்..!!
அது வீடுகளே இல்லாத பகுதி.. இரு புறங்களிலும் விவசாய நிலங்கள் பகுதி..!!
அந்த நிலங்களில் பெண்கள் களை பறித்து கொண்டிருந்தனர்..!!
தாயாரை பார்க்க வீட்டுக்கு அழைத்து.. செல்ல சொன்னால் இப்படி அத்துவான வெயிலில்.. வண்டியை நிறுத்தியிருக்கிறாரே..! என்ற வினாவுடன் வண்டியை விட்டு இறங்குகிறார் நேரு..
காமராஜர்
களை பறித்து கொண்டிருக்கும் பெண்கள்.. கூட்டத்திலிருந்து வயதான பெண்மணி.. ஒருவரை அழைக்கிறார்...
"ஆத்தா நான் காமராசு வந்து இருக்கிறேன்.."!! என்று கூவுகிறார்..!!
வயலில் உழைத்து வியர்வை முகத்துடன்.. "காமராசு வந்திட்டியாப்பா.. நல்லாயிருக்கியா..?" என்று தன் மகனை கண்ட மகிழ்ச்சியில்.. உள்ளம் நெகிழ.. அருகில் வருகிறார்.. காமராஜரின் தாயார்..!!
தாயும் மகனும் அளவளாவிக் கொள்கிறார்கள்..!!
பிறகு நேரு அவர்களை காட்டி.. அறிமுக படுத்துகிறார் காமராஜர்..!!
நேருவால்
தன் முன்னால் நடப்பதை பார்த்து.. நம்ப முடியாமல் சிலையாக நிற்கிறார்..!!
அவர் தான் காமராஜர்..!!!!!
இப்போதெல்லாம் கஞ்சிக்கு வழி.. இல்லாமல் அரசியலுக்கு வருகிறவன்..
பொண்டாட்டிக்கு.. BMW car..
அவனுக்கு audi...

நன்றி : அனிஷா ராஜா

பா விவேக்


வெளிநாடுத் தமிழ்: மலேசிய போலீஸ் ஒருவர் பாடிய தமிழ் பாடல்.... நன்றி : ரமேஷ் உ...

Posted: 06 Mar 2015 02:06 AM PST

வெளிநாடுத் தமிழ்:

மலேசிய போலீஸ் ஒருவர் பாடிய தமிழ் பாடல்....

நன்றி : ரமேஷ்

உங்களிடம் கிடைக்கும் தமிழ் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அனுப்பவும்.... உலகறியச் செய்ய காத்திருக்கிறோம்....

பா விவேக்



நன்றி : சுதா தமிழ் பா விவேக்

Posted: 05 Mar 2015 10:11 PM PST

நன்றி : சுதா தமிழ்

பா விவேக்


தமிழ் மொழியின் முதிர்ச்சி.... மொழி ஆராய்ச்சி மற்றும் அதன் முதிர்ச்சி அளவுகளில்...

Posted: 05 Mar 2015 06:42 PM PST

தமிழ் மொழியின் முதிர்ச்சி....

மொழி ஆராய்ச்சி மற்றும் அதன் முதிர்ச்சி அளவுகளில் பார்த்தால்...

தமிழின் முதல் பிள்ளை கன்னட மொழி.
தமிழின் இரண்டாம் பிள்ளை தெலுங்கு மொழி.
மூன்றாம் பிள்ளை மலையாள மொழி.
இது இல்லாமல் மராட்டிய மொழி தமிழுடன் ஒத்து இருக்கும்...
இது போல தமிழுக்கு ஏகப்பட்ட பிள்ளைகள் இருக்கிறார்கள்.....
இன்று தாயை எட்டி உதைக்கும் இந்தி மொழியின் தாய் வேண்டுமெனில் சமஸ்கிருத மொழியாக இருக்கலாம்.
ஆனால் இந்தி தமிழின் கொள்ளு பேரன்.. எவ்வாறு?

இந்தி > சமஸ்கிருதம் > இந்தோ இரானி > இரானி > சுமரு மொழி..

மொழி அறிவு உள்ளவர்கள் அறிவார் சுமரு மொழியும் தமிழும் ஒத்த மொழிகள் என்று.

இவ்வாறு பார்க்கையில்...
இன்று நாம் பேசும் ஆங்கிலம் முதற்கொண்டு அனைத்து மொழிகளும் தமிழின் பிள்ளையோ அல்லது பேரனோ தான்.

நன்றி : தியாபாரதி அனலிக்கா கவிதைகள்

பா விவேக்

0 comments:

Post a Comment