Thursday, 5 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 05 Mar 2015 05:30 PM PST


அதிகாலையில் கஷ்டப்பட்டு எந்திரிச்சி கூவுறது சேவல் பேரு வாங்குறது கோழி.. "கோழி க...

Posted: 05 Mar 2015 09:42 AM PST

அதிகாலையில்
கஷ்டப்பட்டு எந்திரிச்சி கூவுறது சேவல்
பேரு வாங்குறது கோழி..

"கோழி கூவுது "

@களவாணி பய

பல தலைமுறைகளை அவமானப் படுத்தி அப்பாவிகளின் குடும்பங்களை சீரழிக்கும் சொல்வதெல்லாம...

Posted: 05 Mar 2015 05:56 AM PST

பல தலைமுறைகளை அவமானப் படுத்தி அப்பாவிகளின் குடும்பங்களை சீரழிக்கும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி. அதிர்ச்சி ரிப்போர்ட்.

தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் Z தமிழ்' சேனலில`சொல்வதெல்லாம் உண்மை'னு ஒரு நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருகிறது இதில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார்..

ஏற்கனவே விஜய் டிவியில் லட்சுமி அரைத்த `கதையல்ல நிஜம்' என்ற மாவு தான் இதுவும்.

இப்போது நமக்கு பிரச்னை அந்த மாவு அல்ல.. அதில் வந்து சிக்கும் அப்பாவி மக்கள். அதிகமாக கள்ளத்தொடர்பு பஞ்சாயத்துகளே அந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது.

பெருவாரியாக வர்க்கரீதியாகவும் கல்வியிலும் சமூக அந்தஸ்த்திலும் கீழ் நிலையில் இருக்கும் அப்பாவி மக்களே சேனல்காரர்களின் டார்கெட்.

அப்படி அழைத்து வரப்படும் நபர்களுக்கு தங்களின் குடும்பத்தின் அந்தரங்க கதைகளை இப்படி பொதுவெளியில் பகிர்ந்து கொள்வது சரியா.. நாம் வீடியோ வடிவில் கொடுக்கும் வாக்குமூலங்கள் பல தலைமுறைகளாக நமது சந்ததிகளை அவமானத்திற்குள்ளாக்குமே என்பது குறித்த எந்த தெளிவுமற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

மிகச்சாதாரணமாக இரு வீட்டாரும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு பிரச்னையை ஒரு சேனலில் பதிவு செய்து ஒளிபரப்புவது மட்டுமல்லாமல் அதை இணையத்திலும் ஏற்றுகிறார்கள்.

இன்று விவரம் தெரியாமல் டிவியில் வாக்குமூலம் கொடுத்தவர்களின் அடுத்த தலைமுறைக் குழந்தைகள் இதை காண நேர்ந்தால் எவ்வளவு அவமானத்திற்குள்ளாகும். பேசினால் தீர்த்துவிடக்கூடிய பிரச்னையை டிவியில் ஒளிபரப்பி பின் எப்போதும் அந்த குடும்பம் ஒன்று சேரவே முடியாதபடி செய்துவிடுகிறார்கள்.

அதோடு நிகழ்ச்சியில் திடீர் என்று அடிதடியெல்லாம் நடக்கிறது. விசாரித்ததில் திட்டமிட்டே அப்படியான சூழலை டிவி நிர்வாகமே உருவாக்குவதாக தெரிகிறது.

அதாவது ஸ்டூடியோவுக்குள் ஒரு தரப்பு கதை சொல்லிக்கொண்டிருக்கும். மறு தரப்புக்கு பக்கத்து அறையில் பெரிய டிவியில் அங்கு நடப்பதை ஒளிபரப்பி அவர்களுக்கு வெறியேற்றுவார்களாம். அப்புறமென்ன உள்ளரங்கில் கதை சொல்பவர்கள் மீது கோபத்தில் பாய அதை சேனல் ஆட்கள் சூட் பண்ணி குஷியாகிவிடுவார்களாம்..

ஏன் `அவன் பொண்டாட்டிய இவன் கரெக்ட் பண்றது.. இவ புருசனை அவ கரெக்ட் பண்றது' போன்ற சம்பவங்கள் எல்லாம் பிரபலமான நடிகர்கள் நடிகைகள் தொழிலதிபர்கள் வீட்டில் நடப்பதில்லையா என்ன.. ?திறமையிருந்தால் அப்படிப்பட்ட பிரபலங்கள் அல்லது பணக்காரர்களின் ஒரு குடும்பத்தை கூட்டி வந்து இப்படி சந்தி சிரிக்க வைக்க முடியுமா.. ?

முடியாதென்பதால் விபரமில்லாத அப்பாவிகளின் குடும்பத்தை இப்படி டிஆர்பி ரேட்டிங்கிற்காக சீரழிப்பது அசிங்கமாக இல்லையா..

முதல் வேலையாக இந்தமாதிரியான நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும்.

@Jagan G Kalpakkam


சோழநாட்டு முத்திரை!

Posted: 05 Mar 2015 03:37 AM PST

சோழநாட்டு முத்திரை!


Posted: 05 Mar 2015 03:05 AM PST


பாகிஸ்தானை புகழ்ந்து பேசும் இந்தியர்களை செருப்பால் அடிக்க வேண்டும்.- பாஜக பெண் ச...

Posted: 05 Mar 2015 12:32 AM PST

பாகிஸ்தானை புகழ்ந்து பேசும்
இந்தியர்களை செருப்பால்
அடிக்க வேண்டும்.-
பாஜக பெண் சாமியார்
சாத்வி பேச்சு.
------------------------------
--------------------------------
பாகிஸ்தான் கிரிகெட்
அணிக்கு வாழ்த்து தெரிவித்த
மோடியிடமிருந்து
ஆரம்பிக்கலாமா ?

@கிஷோர்

மோடியைப் போல அனைவரும் வாழ வேண்டும்- தமிழிசை சவுந்தர்ராஜன் # 10 இலட்ச ரூபா சட்டை...

Posted: 05 Mar 2015 12:31 AM PST

மோடியைப் போல
அனைவரும் வாழ
வேண்டும்-
தமிழிசை சவுந்தர்ராஜன்

# 10 இலட்ச
ரூபா சட்டைக்கு நாங்க
எங்கப் போறது மேடம்?

@கார்த்திக்

மீன் அவதாரம் எடுத்தார் திருமால். அவர் நினைவாக மீன் இறைச்சிக்கு தடை விதிக்க வேண்...

Posted: 04 Mar 2015 10:44 PM PST

மீன் அவதாரம் எடுத்தார்
திருமால்.

அவர் நினைவாக
மீன் இறைச்சிக்கு
தடை விதிக்க வேண்டும்.

# கிளப்பி விடுவோம்
நாமளும்...


0 comments:

Post a Comment