ஒரு லட்சம் உறவுகள்
கொல்லப்பட்ட எதுவும்
செய்யவில்லை,
800 மீனவர்கள் இலங்கை
கடற்படையால் கொல்லப்பட்ட
போது வீதிக்கு வரவில்லை,
அணு உலைகள், மீத்தேன்
திட்டம், கெயில் குழாய் பதிப்பு
என மண்ணை நாசமாக்கிய
திட்டங்கள் வரும் போது
போராடவில்லை,
காவிரி நீர், முல்லைப்பெரியாற
ு நீர் உரிமை மறுக்கப்பட்ட
போது குரல் கொடுக்க
வில்லை,
தமிழ் மொழியை காலில் போட்டு
மிதித்து இந்தியை தமிழர்களின்
மேல் திணிக்கும் போது கோபம்
வரவில்லை,
பண்பாட்டு உரிமை உட்பட
தமிழகத்தின் எல்லா
உரிமைகளும் இந்திய அரசால்
பறிக்கப்பட்ட போது ஒரு
வார்த்தை சொல்லவில்லை ,
ஆனால் தனியார் நிறுவனமான
இந்திய அணி வெற்றி பெற
வேண்டும் என தனது நாக்கை
அறுத்து அதை கடவுளுக்கு
காணிக்கையாக்கியுள்ளார்
தமிழகத்தை சேர்ந்த இளைஞர்
சுதாகர். இனி இவரால்
வாழ்கையில் பேசவே முடியாதாம்.
இந்திய கிரிக்கெட்
ஆட்டக்காரர்கள்
விளையாடினாலும்
அவர்களுக்கு காசு , விளையாட
விட்டாலும் அவர்களுக்கு காசு .
இப்படிப்பட்ட உல்லாச
நாயகர்களை நம்பி தனது
வாழ்க்கையை
தொலைத்துள்ளார் சுதாகர்.
இதற்கு போலியாக
கட்டமைக்கப்பட்ட இந்திய தேசப்
பற்று காரணமாக
அமைந்துள்ளது என்பது தான்
வேதனையான செய்தி.
பன்னாட்டு வணிகர்கள் நடத்தும்
கிரிக்கெட் போதையில் இருந்து
மக்களை காக்க வேண்டிய
பொறுப்பு நம் அனைவருக்கும்
இருக்கிறது ! via-rasakumar

0 comments:
Post a Comment