Relax Please: FB page daily Posts |
- 1பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பலாயிடும் 1கட்டை 10நிமிஷம் எரிஞ்சா சாம்பலாயிடும்...
- ஒரு மீன் கூட கிடைக்கலப்பா... யாரச்சு help பண்ணுங்க ப்ளீஸ்ஸ்ஸ்.. (y)
- :) Relaxplzz
- கண்ணை நம்பாதே.. !! இது முகத்தின் எந்த பாகம்..??? Zoom பண்ணி பாருங்க..தெரியும்..!...
- பேஸ்புக் பிரபலம் ஆவது எப்படி? 1. பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல அதிக பேர சேர்த்துக்கனும்! (...
- #பல்லாங்குழி: கொஞ்சம் நிதானமா படிங்க. எம்புட்டு பெரிய சொத்த எழந்துருக்கோம்னு...
- <3 காதல் <3 என்னவன் பெயரை யார் சொன்னாலும்.. என்னை அறியாமல் வெட்கமும்.. புன்னகையு...
- தில்லி தேர்தலில் AAP சாதித்ததை, அடுத்த ஆண்டு தமிழக தேர்தலில் பாமக சாதிக்கும். -ர...
- அழகு குட்டி செல்லம்... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
- :) Relaxplzz
- கையகலக் கண்ணாடியில்... அவ்வ்ளோ பெரிய கோவிலைப் புடிச்சுட்டேன்... இடம்.. மருதமலை.....
- மூலிகை நீர் சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள்...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- மனைவியை தாயாக நினைத்து பார்த்து கொள்ளும் ஆண்களும்....! கணவனை பிள்ளையாக நினைத்த...
- "கடந்த சில நாட்களாக எனக்கு மிரட்டல் வருகிறது சார்..." "மொட்டை கடிதமா...?" "இல்ல...
- மீண்டும் கிராமத்திற்கு போகலாம்
- :) Relaxplzz
- இரு மனம் Vs திருமணம்: 20 சீக்ரெட்ஸ்! ‘‘வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் திர...
- அன்னாசி தாழை இலை போன்ற நீண்ட அடுக்கான மடல்களை உடைய செடி. கொல்லிமலை போன்ற இடங்கள...
- :) Relaxplzz
- ஒரு ஆணின் புலம்பல்... "நான் பெண்ணாக பிறந்து இருந்தால்" 1.தோசை , இட்லி, சப்பாத்...
- தஞ்சை பெரியகோயில்...
- பல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத...
- அ - அயல் நாட்டுக்கு போகாதே ஆ - ஆடு மேய்க்க விடுவாங்க இ - இந்தியாவில் வேலை செய்...
- பாப்கான் பற்றி அறிந்து கொள்வோமா? தியேட்டர்ல இன்டர்வெல் விட்டா நம்மாளுங்க நேரா...
- பலருக்கு பெரிய விஷயமாகாக தோணுவது... சிலருக்கு சின்ன விஷயமாக தோன்றுகின்றது...!!!...
- டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மு...
- உங்கள் மேல் அன்பாக இருக்கிறவர்களை தூக்கி எறியும் போது நினையுங்கள் அதே உறவு பழ...
Posted: 10 Feb 2015 08:50 AM PST 1பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பலாயிடும் 1கட்டை 10நிமிஷம் எரிஞ்சா சாம்பலாயிடும் 1மரம் 2மணிநேரம் எரிஞ்சா சாம்பலாயிடும் ஆனா எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாதது எது தெரியுமா???? . . . . . . . . வாங்க சொல்றேன் . . . . . . . . . . . . . . . . . . . . . . . பல்புதான் :P :P |
Posted: 10 Feb 2015 08:40 AM PST |
Posted: 10 Feb 2015 08:30 AM PST |
Posted: 10 Feb 2015 08:20 AM PST |
Posted: 10 Feb 2015 08:10 AM PST பேஸ்புக் பிரபலம் ஆவது எப்படி? 1. பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல அதிக பேர சேர்த்துக்கனும்! (5000 பிரென்ஸ் இருத்தா 100ல ஒருத்தர் லைக் பன்னாலும் 50 லைக் கிடைக்குமே) 2. ஸ்டேட்டஸ் சிரிக்கற மாதிரியும் சிந்திக்கிற மாதிரியும் இருக்கனும்! (தத்துவம் ஒருநாளைக்கு ஒன்றிரண்டு தடவதான் போடனும். அடிக்கடி இம்ச படுத்தபடாது) 3. பிரபலமா இருக்கனும்னா அடிக்கடி யார்கூடயாவது வம்பிழுக்கனும்! அப்பதான் பேமஸ் ஆகமுடியும்! (பல்லு ஒடஞ்சி ரத்தம் வந்தா நிர்வாகம் பொறுப்பல்ல) 4. மத்தவங்க எவ்வளவு கலாய்சாலும் வலிக்காத மாதிரியே இருக்கனும்! (சிலசமயம் செத்துபோன பாட்டியகூட கின்டல் பன்னுவானுக) 5. உங்க ஸ்டேட்ஸ்கு பொண்ணுங்க லைக்போட்டா, கைய வெச்சிகிட்டு சும்மா இருக்கனும்! (இன்பாக்ஸ்கு போயி ஊத்த கூடாது) 6. பதிலுக்கு நீங்களும் அப்பப்ப லைக் போடனும்! (ஏங்க.. இத எனக்காக சொல்லலங்க) ஆனா பொன்னுங்களா இருந்தா கஸ்டமே இல்ல.. சும்மா hi friends.. அப்டினு போட்டா போதும்.. ஈஸியா 100 லைக் 50 காமென்ட் விழும்! Relaxplzz |
Posted: 10 Feb 2015 08:04 AM PST #பல்லாங்குழி: கொஞ்சம் நிதானமா படிங்க. எம்புட்டு பெரிய சொத்த எழந்துருக்கோம்னு புரியும்.. பல்லாங்குழிங்குறது வெளையாட்டா சொல்லிக் குடுத்த குடும்ப நிர்வாகம். மொதல்ல எப்படி வெளையாடணும்னு பாப்போம். ஒரு பக்கத்துக்கு ஏழு குழி. குழிக்கு அஞ்சு முத்து (பண்ணெண்டு முத்து போட்டும் வெளையாடுவாக)ஒரு குழில இருந்து எடுத்து அடுத்து வார குழிக்கு ஒன்னொன்னா போடுவாக. முத்து முடிஞ்சதும் அடுத்த குழில இருந்து முத்துகள எடுத்து அதே மாதிரி போடணும். ஒரு வேள, அடுத்த குழி காலியா. இருந்தா, அதுக்கு அடுத்த குழில எம்புட்டு முத்து இருக்கோ அம்புட்டும் முத்தும் போட்டு வந்தவுகளுக்குச் சொந்தம். (செல சமயம் அது நெறையாவும் இருக்கும் செல சமயம் ஒன்னுமில்லாமையும் கூட போகலாம்.) காலியான குழியில, அடுத்து சேந்து வார முத்துகள் மொத்தமா நாலு சேந்துருச்சுனா, அதுக்குப் பேரு "பசு" அது ஆரு பக்கம் இருக்கோ அவுகளுக்குச் சொந்தம். வெளையாட்டுல ஒரு பக்கம் செயிக்கச் செயிக்க இன்னொரு பக்கம் தெக்கம்(தொக்கம், தக்கம், பற்று) விழும். கடைசில தோத்தவுகட்ட அஞ்சு முத்துக்கும் கொறவா இருந்தா, அஞ்சு முத்துக்குப் பதிலா, ஒரு ஒரு முத்தா போட்டு கஞ்சி காச்சி வெளயாடுவாக. சரி இத எதுக்கு வெளையாண்டாக? தன்கிட்ட இருக்குற பொருள எப்படி பெருக்கணுங்குறதுதேன் இந்த வெளையாட்டோட சூச்சுமம். எந்தக் குழில ஆரம்பிச்சா எந்தக் குழில எம்புட்டு சேருங்குறது, வெளையாட வெளையாட நெனவுல சேத்துக்கிட்டே போகணும். "பசு" சேர்க்கணும் (அதுக்கேத்தாப்ல வெளையாடணும்) பசுங்குறது நாலு முத்துதேன்னு சாதாரணமா நெனைக்கக் கூடாது. "பசு"னா செல்வம்னு அர்த்தம். அதச் சிறுகச் சிறுக சேர்த்துப் பழக்குறதுதேன் நோக்கம். கடைசில கஞ்சி காச்சுறதுனு ஒரு வாய்ப்பிருக்கு. தான் செயிச்சா எதிராளிக்கு கஞ்சி காச்சுற வாய்ப்பு குடுக்கணும். எல்லாம் தோத்துப்புட்டானு மிதப்பா வெளையாண்டா, அடி மட்டத்துல இருந்து கூட எதிராளி செயிச்சு வந்துரலாம். ஒரு வேள நம்ம கஞ்சி காச்சுற நெலைக்கு வந்துட்டாலும் சோர்ந்து போயிறக் கூடாது. அங்கன இருந்து கூட (வறுமையில இருந்து கூட) மேடேறிடலாம். மேடேறிடணும். அதேன் ஒரு குடும்பத்தக் காக்கப் போறவளுக்கு அழகு. இது வாழ்க்கைக்கான வெளையாட்டு. அதுனாலதேன். சடங்குக்குச் சீரா, தன் வீட்டுக்கு வரப் போற பொண்ணுக்கு பல்லாங்குழி வாங்கிக் குடுக்குறது தாய்மாமன் வழமையா வச்சிருந்தாக. கல்யாணம் பண்ணி அடுத்த வீட்டுக்குப் போறப்ப கட்டாயம் பல்லாங்குழிய சீர் வரிசைல சேத்துக் குடுத்தாக. ஒன்னொன்னா தொலைச்சுக்கிட்டு வாரோம். - மந்தை ![]() வாழ்வியல் |
Posted: 10 Feb 2015 07:50 AM PST |
Posted: 10 Feb 2015 07:45 AM PST தில்லி தேர்தலில் AAP சாதித்ததை, அடுத்த ஆண்டு தமிழக தேர்தலில் பாமக சாதிக்கும். -ராமாதாஸ் # இதுல எப்டிண்ணே லைட் எரியும்? :P Tamil keechu |
Posted: 10 Feb 2015 07:40 AM PST |
Posted: 10 Feb 2015 07:30 AM PST |
Posted: 10 Feb 2015 07:28 AM PST |
Posted: 10 Feb 2015 07:20 AM PST |
Posted: 10 Feb 2015 07:12 AM PST மூலிகை நீர் சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள் நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன. உணவுக்கு உணவாகவும், மருந்துக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது. ஆவாரம்பூ நீர் "ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ" என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும். கரிசாலை நீர் சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும். செம்பருத்தி நீர் செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது. காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும். நன்னாரி நீர் "தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்" என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும். துளசி நீர் குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து, தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம். வல்லாரை நீர் யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். "காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை" என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம். Relaxplzz ![]() "நலமுடன் வாழ" - 2 |
Posted: 10 Feb 2015 06:49 AM PST |
Posted: 10 Feb 2015 05:30 AM PST |
Posted: 10 Feb 2015 05:15 AM PST மனைவியை தாயாக நினைத்து பார்த்து கொள்ளும் ஆண்களும்....! கணவனை பிள்ளையாக நினைத்து பார்த்து கொள்ளும் பெண்களும்...! இருக்கும் வரை உண்மை காதலுக்கு என்றும். மரணமில்லை ..! Relaxplzz |
Posted: 10 Feb 2015 05:00 AM PST |
Posted: 10 Feb 2015 04:45 AM PST |
Posted: 10 Feb 2015 04:30 AM PST |
Posted: 10 Feb 2015 04:15 AM PST இரு மனம் Vs திருமணம்: 20 சீக்ரெட்ஸ்! ''வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் திருமணம் குறித்து ஒவ்வொருவருக்கும் பல கனவுகள் உண்டு. அந்தக் கனவுகள் நிறைவேறுவதற்கான தருணம் திருமணத்தில்தான் தொடங்குகிறது. "ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு வழக்கமிருக்கும். ஆனால் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய 'ப்ரீ மெரைட்டல் கவுன்சலிங்' எடுத்துக் கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியான அனுபவங்களாக மாறும். வாழும் காலம் வரை சிறந்த ஆதர்ச தம்பதிகளாக வலம் வரமுடியும்" என்கிற மனநல ஆலோசகரான வாசுகி சிதம்பரம் சொல்லும், மேரேஜ் சீக்ரெட்ஸ் இங்கே... 1. காதலை விட மரியாதைக்கு அதிகம் முக்கியத்துவம் தருவதே வாழ்க்கை பயணத்துக்கான சிறந்த பாதையாக மாறும். 2. ஒரு பெண் திருமணத்துக்கு எப்படி அறிவுரைகளால் தயாராகுகிறாளோ அதுபோல் ஆணையும் தயார் செய்ய வேண்டும். 3. இருபாலினருக்கும் ஆசை, கனவு, உரிமை, தேர்வு, எண்ணம் அனைத்துக்கும் சமத்துவ உரிமை அளிக்க வேண்டும். 4. வீட்டு வேலையைப் பகிர்ந்துக் கொள்வதில் கூட அந்யோன்யம் அதிகரிக்கும். இது இழிவான செயலல்ல. 5. உன் சம்பளம் 'உனக்கு, எனக்கு' எனப் பிரித்துக் கொள்ளாமல் 'நான் இவற்றுக்கெல்லாம் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன். நீ இதற்கெல்லாம் பொறுப்பெடுத்துக்கொள்கிறாயா?' என அன்போடு பொறுப்புகளைப் பட்டியலிடலாம். 6. வன்முறையால் எவற்றையுமே கட்டுப்படுத்த முடியாது. அன்பு ஒன்றே அனைத்துக்குமான அடிப்படை புரிதல். 7. தன் துணைக்கும், பெற்றோருக்கும் எப்போதும் சம உரிமை தருவதென உறுதிமொழி எடுங்கள். 8. குடும்ப அமைதி, நிம்மதியான சூழல், குறையாத அன்பு போன்றவற்றை நிலைநாட்ட தகுந்த பொறுப்பாளராக இருபாலினரும் மாற வேண்டும். 9. உயர் படிப்புப் படித்திருந்தாலும், உயர் பதவியில் இருந்தாலும் 'குடும்பக் கல்வி' என்பது இருவருக்குமே பொதுவானது. 10. பாசிடிவ்ஸ் பகிர்ந்து கொள்வதோடு, நெகடிவ் குணங்களையும் தெரியப்படுத்துங்கள். இதனால் திடீரென்று நெகடிவ் குணங்கள் வெளிப்படும்போது அதிர்ச்சியாகாமலும், பிரச்னை பெரிதாகாமலும் தடுக்க முடியும். 11. திருமணத்துக்கு முன்பு இருபாலினரும் தொலைபேசியில் அதிகம் பேசுவது தவறில்லை என்றாலும், அதற்கான வரைமுறைகளை மீறி பேசுவது பின்னாளில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். 12. சமூக வளைத்தளங்களில் உள்ள நட்பு, அதில் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களை விமர்சிப்பதோ லைக், ஷேர் போன்ற எதிர்பார்ப்புகள் உறவில் சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு. 13. கடந்து வந்த காதல், அதன் பிண்ணனி போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளுதல்கூடச் சில நேரங்களில் தவறான மதிப்பை தரும். கவனம்! 14. தீய / நெகடிவ்வான குணங்களை ஒரு தாளில் எழுதி அதை முடிந்தவரை திருத்திக் கொள்ள முயற்சிக்கலாம். 15. திருமணத்துக்குப் பிறகு வேலைக்குச் செல்லுதல், உயர்படிப்பு படிக்கும் வாய்ப்புகள், வேலையில் ஏற்படும் டிரான்ஸ்பர்கள் போன்றவற்றைத் திருமணத்துக்கு முன் தெளிவாகப் பேசி முடிவுகள் எடுப்பது இருதரப்பினருக்கும் இடையே பிரச்னைகளையும், மனகசப்பையும் ஏற்படுத்தாது. 16. திருமணத்துக்கு முன் பழகும் போதே இருவருக்குமான கருத்து வேறுபாடுகள் அதிகமாக இருந்தால் உதாரணத்துக்கு அதீத சந்தேகம், வன்முறை குணம், ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை போன்ற மாற்றங்கள் தெரிந்தால், பெற்றோருக்கு புரிய வைத்துச் சிக்கல் இல்லாமல் திருமணத்துக்கு முன்பே பிரிந்துவிடுவது நல்லது. இந்த முடிவு இருவருடைய வாழ்க்கைக்கும் நல்லதாக அமையும். 17. வாழ்க்கை முறை, மன பக்குவம், பிரச்னைகளைக் கையாளுதல், பாலுணர்வு சந்தேகங்கள் போன்றவற்றுக்கு ஆலோசகர் மூலம் தெளிவடையலாம். 18. இருபாலினரும் தங்களின் நிஜத்தை ஏற்றுக் கொள்வதே நல்லது. அதாவது இயல்பை ஏற்க பழக வேண்டும். 19. ஆரோக்கியமான இடைவெளியை அமைத்துக் கொள்ளுங்கள். பேச்சில் மரியாதையை தெரியப்படுத்துங்கள். பிரச்னைகளில் வளைந்து கொடுங்கள். 20. எந்தத் தருணத்திலும் துணையின்றிச் செயல்படக் கூடாது என உறுதிமொழி எடுத்துக் கொள்வதே இனிய வாழ்வுக்கான அச்சாரம். நன்றி விகடன்/சாம் மகேந்திரன் Relaxplzz |
Posted: 10 Feb 2015 04:00 AM PST அன்னாசி தாழை இலை போன்ற நீண்ட அடுக்கான மடல்களை உடைய செடி. கொல்லிமலை போன்ற இடங்களில் பேரளவில் பயிரிடப் பெற்றுப் பழமாக விலைக்குக் கிடைக்கும். இப்பழம் பூந்தாழம் பழம் எனவும் வழங்கப்பெறும். இலை பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. நுண்புழுக் கொல்லுதல், வியர்வை சிறுநீர் பெருக்குதல், மலமிளக்குதல், குருதிப்பெருக்கைத் தணித்தல், மாதவிலக்கைத் தூண்டுதல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது. இப்பழம் மாதவிலக்கைத் தூண்டும் ஆகையால் கருவுற்றவர் உண்ணாதிருத்தல் நலம். அதிக அளவில் உண்டால் தொண்டைக் கட்டும். 1. இலைச்சாறு 10 மி.லி. யில் சிறிது சர்க்கரைக் கலந்து கொடுக்க விக்கல் நிற்கும். 2. பழச்சாற்றைச் சற்று சூடுசெய்து குடித்து வர வாந்தி, வயிற்றுக் கடுப்பு காமாலை ஆகியவை தீரும். 3. பழச்சாற்றுடன் சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி நாள்தோறும் இருவேளை 10&15 மி.லி. உண்டு வரத் தாகம், வாந்தி, வெள்ளை, வெட்டை, சுவையின்மை ஆகியவை தீரும். Relaxplzz ![]() |
Posted: 10 Feb 2015 03:30 AM PST |
Posted: 10 Feb 2015 03:15 AM PST ஒரு ஆணின் புலம்பல்... "நான் பெண்ணாக பிறந்து இருந்தால்" 1.தோசை , இட்லி, சப்பாத்திய ஸ்பூனால குத்தி குத்தி சாப்பிட்டிருப்பேன் 2.முப்பது நாளும் ப்யூட்டி பார்லர் போவேன். யாராச்சும் கேட்டா பயத்த மாவும், கடல மாவும் மட்டுந்தான் யூஸ் பண்றேன்னு பீலா விடுவேன்.. 3.இன்டிகேட்டர்னா என்னன்னு கேட்டிருப்பேன் 4.பசங்கள அண்ணானு கூப்பிடுற பொண்ணுகள ஆன்ட்டி கூப்டு கடுப்பேத்தியிருப்பேன்..! 5.எல்லா நேரமும் பெண்ணியம் பேசுவேன்.. பெண்களுக்காக வீட்லஇருந்தபடியே டிவி பாத்துட்டே போராடுவேன் 6.ரீ சார்ஜே பண்ன மாட்டேன் 7.எரும மாடு ரோட்டுல நின்னாலும் , excuse me ன்னு இங்லீஸ்ல தான் வழிவிடச் சொல்லுவேன் 8.அமெரிக்கா மாப்பிளையா பாத்து செட்டில் ஆயிருப்பேன்..! 9.யார்னா தமிழ்ல பேசுனா.... இங்க்லீஷ்ல பதில் சொல்லி கடுப்பேத்தி இருப்பேன்.. 10.வீட்ல பழயசோரு துன்ட்டு ' பீட்சா வித் ஃப்ரென்ட்ஸ்'னு ஸ்டேடஸ் போட்டுருப்பேன் 11.மேக்கப் போடாம Selfi எடுத்து என் கண்றாவி மூஞ்ச காட்டி உங்கள எல்லாம் பயமுறுத்தி இருப்பேன் 12.செவுத்துக்கு சுண்ணாம்பு அடிக்குற மாதிரி மேக்கப் போட்டு இருப்பேன் 13.லெக்கின்ஸ கைல மாட்டிக்கிட்டு ஸ்கூட்டி ஓட்டிட்டு போக மாட்டேன் 14.சத்தியமா எந்த பையனையும் அண்ணா'னு கூப்டிருக்க மாட்டேன் ! 15.நான் இதுவரை யாரையும் love பன்னல என்று சொல்லிருப்பேன்.. 16.லவ் பண்ணவனயே கல்யாணம் பண்ணிருப்பேன்.. * நீங்கள் பெண்ணாக பிறந்திருந்தால்... என்ன செய்வீர்கள்...? கமண்டில் பதியுங்கள் பார்க்கலாம்.... Relaxplzz |
Posted: 10 Feb 2015 02:45 AM PST |
Posted: 10 Feb 2015 02:29 AM PST பல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம். பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும். கடுகு எண்ணை, பல் வலியைக் குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணெயுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும். எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம். வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும். சாமந்தி, வேலம், போன்ற மூலிகை மருந்துகளை கொண்டு நீங்கள் வீட்டிலேயே பல் வலியை சரியாக்க வாய் கொப்பளிக்கும் நீரை தயாரிக்கலாம். துளசி, மற்றும் பெருங்காயம் போன்றவையும் உபயோகமான மருத்துவ மூலிகைகள். பல் வலியை சற்று குறைக்க வெளிபுறமாக சாதாரன ஐஸ் கட்டிகளை உபயோகிக்கலாம். திடீரென்று நீங்கள் பல் வலியால் பாதிக்கப்பட்டால், மிகவும் சூடான, மிகவும் குளிர்ச்சியான, மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்கவும். இவைகள் வலிக்கும் பல்களை மேலும் பாதிக்கும் நீங்கள் உங்கள் உணவை பற்றி கவனமாக இருக்கவேண்டும். அதிகமாக காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவைகளை சாப்பிட வேண்டும். மாவு உணவுகளை தவிர்க்க வேண்டும். Relaxplzz ![]() இயற்கை வைத்தியம் |
Posted: 10 Feb 2015 02:20 AM PST அ - அயல் நாட்டுக்கு போகாதே ஆ - ஆடு மேய்க்க விடுவாங்க இ - இந்தியாவில் வேலை செய் ஈ - ஈசியா இருக்கும் உ - உண்மையை சொல்றேன் ஊ - ஊரை விட்டுப் போகாதே எ - எப்படா ஊருக்கு வருவோம்னு நினைப்பே. ஏ -ஏ ன்டா வந்தோம்னு நினைப்பே ஐ - ஐயோ விடுங்கடானு சொல்லுவ ஒ - ஒப்பாரி வச்சு அழ தோனும் ஓ - ஓலமிட்டு கத்த தோனும் ஔ - ஔவளவுதான் சொல்லிப்புட்டேன் ஃ - அஃகடானு இந்தியாவில் கெட!! # படித்ததில் பிடித்தது # Relaxplzz |
Posted: 10 Feb 2015 02:04 AM PST பாப்கான் பற்றி அறிந்து கொள்வோமா? தியேட்டர்ல இன்டர்வெல் விட்டா நம்மாளுங்க நேரா பாப்கான் ஸ்டாலுக் குத்தான் போறாங்க.. இந்த பாப்கார்ன் எவ்வளவு ஆபத்தானது என்று யாருக்கும் தெரியறது இல்ல. பாப் கார்ன் கொறிப்பது ஒரு நல்ல யோசனை தான் என்றால் கூட இந்த பாப்கார்னுக்கு மறுபக்கமும் உள்ளது. இந்த பாப்கார்ன் எனும் சோளப் பொரி மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளத்தில் இருந்து தயார் செய்யப் பட்டவை. அதுமட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட உப்பு, பதப்பொருட்கள் போன்றவை சோளப்பொரியின் சுவையை அதிகப்படுத்துவதற்காக சேர்க்கப்படுகின்றன. மேலும் அதிக அளவில் சோடியம் மற்றும் பிற வேதிப் பொருட்கள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை. வெண்ணெய் சேர்த்த சுவையூட்டப்பட்ட சோளப்பொரி மேலும் மோசமான விளைவுகளைத் தருபவை. சின்னப் பசங்க தியேட்டர்ல கேக்கிற முதல் ஐயிட்டமே இந்த பாப்கார்ன் தான்.. அதுவும் சில பேரு அடம்பிடிச்சு பட்டர் பாப்கார்ன் தான் வேனும்னு சொல்வாங்க. ஆனா இதுல சேர்க்கற வெண்ணைய் எங்கிருந்து வருதுன்னு கொஞ்சம் பார்த்தோமுன்னா பாப்கார்ன் வாங்கிக் கொடுக்கறதையே விட்டுடத்தோணும். பெரும்பாலான தனியார் வெண்ணைய் தயாரிப்பு நிறுவனங்கள் அசல் பாலில் தான் வெண்ணையை பிரித்தெடுத்து நமக்கு வழங்குகின்றார்கள் என நாம் இதுவரை நினைத்துக்கொண்டிருந்தால் நாம் உண்மையிலேயே ஏமாளிகள் தான். நமக்கு வருகின்ற பெரும்பாலான தனியார் நிறுவனங்களின் வெண்ணைய் பாக்கெட்டுகள் Margarine எனப்படும் செயற்கை வெண்ணெய் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு சின்ன பரிசோதனையைக் கொண்டு நாம் வாங்கியது ஒரிஜினல் பட்டரா அல்லது Margarine பட்டரா என்பதை தெரிந்து கொள்ளமுடியும் . ஒரிஜினல் பட்டர் என்றால் அது கீழே சிந்தினால் உடனே எரும்புகள் வந்து மொய்க்கும். இந்த செயற்கை பட்டரில் எரும்புகள் மொய்க்காது.. எரும்புக்கு தெரிந்தது கூட நமக்குக் தெரியவில்லையே.. பாலில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய்க்கு பதிலாக மார்க்ரைன் எனப்படும் செயற்கை வெண்ணெய் ஹைட்ரஜனேற்றப்பட்ட டிரான்ஸ் கொழுப்பு நிறைந்தது ஆகும். இது உடலில் கொழுப்பு அளவுகளை கணிசமாக அதிகப்படுத்தி, நோய் எதிர்ப்பு திறனை மட்டுப்படுத்துகிறது. பிரபல நிறுவனங்கள் கூட பட்டர் பிஸ்கெட் தயாரிக்கும்போது இந்த Margarine கொழுப்பைத்தான் பயன்படுத்துகின்றன என்பது கூடுதல் அதிர்ச்சித் தகவல். குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது நாளடைவில் இந்த கொழுப்பானது உடலில் படர்ந்து கேன்சர் செல்களை உற்பத்தி செய்யவும் வாய்ப்புண்டு சில மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த Margraine கொழுப்பினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு எல்.டி.எல். கொழுப்பானது உடலில் அதிகமாகச் சேர்ந்து இரத்த நாளங்களில் படிந்து அளவுக்கு அதிகமான எடை மற்றும் இதயம் சம்மந்தமான நோய்களை இந்த செயற்கை வெண்ணைய் நமக்கு பரிசாகத் தருகின்றது.. இதய நாளங்களில் இது படிவதால் இரத்தம் சீராக செல்வது கொஞ்சம் கொஞ்சமாக தடை படுகிறது.. இப்போது இந்தியச் சந்தையில் பெரும்பாலும் மரபணுமாற்றம் செய்யப் பட்ட உணவுப் பொருட்கள், செயற்கையாக இரசாயணம் கலந்து தயாரிக்கும் உணவுப்பொருட்கள் எவ்வித கட்டுபாடுமின்றி தாராளமாக புழக்த்தில் விடப்பட்டுவிட்டன. இவற்றை நாம் நம்மையறியாமலேயே வாங்கி உண்கின்றோம். கூடுமானவரை இந்த டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளையும் இப்படி இயற்கைக்கு மாறாக செயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கும் உணவுப்பொருட்களை வாங்கி உண்பதை தவிர்த்தாலே பல இனம் புரியாத நோய்கள் நம்மை தாக்குவதிலிருந்து தடுத்துக்கொள்ள முடியும்.. Relaxplzz ![]() "விழிப்புணர்வு" |
Posted: 10 Feb 2015 01:50 AM PST |
Posted: 10 Feb 2015 01:44 AM PST |
Posted: 10 Feb 2015 01:31 AM PST உங்கள் மேல் அன்பாக இருக்கிறவர்களை தூக்கி எறியும் போது நினையுங்கள் அதே உறவு பழைய அன்புடன் திரும்பவும் உங்களிடம் வராது என்று ... ![]() "சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 3 |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment