Relax Please: FB page daily Posts |
- :D Relaxplzz
- :) Relaxplzz
- :) Relaxplzz
- :) Relaxplzz
- 'கத்தி' திரைப்பட பாணியில் போராடிய மக்களுக்கு முதற்கட்ட வெற்றி! 'கத்தி' திரைப்பட...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- :) Relaxplzz
- :P Relaxplzz
- தெரிந்துகொள்வோம்! ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவ...
- ஒரு வேலையை சரியான நேரத்தில் செய்யவில்லை என்றால் நான் "ஒரு சோம்பேறி".. அதே வேலை...
- ஆப்பிளில் செய்த அழகிய வாத்து.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- பழனிமலை ஆண்டவா.... "வர்ற பிப்ரவரி 14க்குள்ள...எனக்கு ஒரு நல்ல லவ்வர் கிடைச்சா இ...
- ;-) Relaxplzz
- வாழ்வியல் உண்மைகள்... 1. வணங்கத்தகுந்தவர்கள் - தாயும், தந்தையும் 2. வந்தால் போக...
- நம் செயல்களிலும், எண்ணங்களிலும் மட்டுமே வாழ்கிறான்.....இறைவன்....!!!
- காய்கறியில் செய்த மனித முகம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- ;-) Relaxplzz
- :) Relaxplzz
- (எப்போது நினைவுக்கு வந்தாலும் சரி ..சிரிப்பு வரும்) அந்த அரசனுக்கு தீடிர் ஆசை.....
- பழைய சோத்துல இவ்வளவு விஷயமா? உணவே மருந்து மருந்தே உணவு திரைப்படங்களில் கிராமத்...
- கடவுள் ஜெராகஸ் மிஷின் வைத்திருக்கவில்லை படைப்பதற்கு.. ஒவ்வொருவரையும் தனித்தனமைய...
- அருமை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- மனம் தொடும் படம்.. நாளை நாமும் இது போன்று நீருக்காக ஓடக்கூடும்... நீரை சேமிப்போ...
- ஒரு கோழிப்பண்ணை முதலாளியை பேட்டி எடுக்க வந்திருந்தார்கள். உங்கள் கோழிகள் எல்லாம...
- காமத்திற்கு மத்தியில் வாழும் காதல்! உலகிற்கு ஓர் எடுத்துக்காட்டு டெல்லியில் ஆசி...
Posted: 01 Feb 2015 09:10 AM PST |
Posted: 01 Feb 2015 09:05 AM PST |
Posted: 01 Feb 2015 08:55 AM PST |
Posted: 01 Feb 2015 08:52 AM PST |
Posted: 01 Feb 2015 02:30 AM PST 'கத்தி' திரைப்பட பாணியில் போராடிய மக்களுக்கு முதற்கட்ட வெற்றி! 'கத்தி' திரைப்படத்தில், எம்.என்.சி நிறுவனங்கள் குளிர்பான தயாரிப்பிற்காக நிலத்தடி நீரை உறிஞ்சுவதை எதிர்த்து, தன்னூத்து எனும் கிராம மக்கள் போராடுவதாக காட்டப்பட்டிருக்கும். அதேபோல். நிஜத்தில் திருச்சி அருகே சூரியூர் என்ற கிராம மக்கள், திருச்சி எல்.ஏ. பாட்டிலர்ஸ் எனும் பெப்சிக்கான தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக பல வருடங்களாக போராடி வருகின்றனர். திருச்சி, பாரதிதாசன் பல்கலைகழக வளாகத்தின் பின்புறம், சூரியூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது எல்.ஏ.பாட்டிலர்ஸ் எனும் பெப்சிக்கான நிறுவனம். முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அடைக்கலராஜுக்கு சொந்தமான இந்த நிறுவனத்தை, தற்போது அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸ் மற்றும் அவரது சகோதரர்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்த நிறுவனம் விவசாய நிலத்தில் ராட்சச போர் போட்டு தினமும் 90 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டத்துடன், இங்கு ஆரம்பித்தது. அப்போது மக்களிடம் கருத்துகேட்கும் கூட்டமோ, அறிவிப்போ எதுவும் நடத்தாமல் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது என்றும், இந்த நிறுவனம் சூரியூர் எல்லைக்குட்பட்ட கம்பெனி வளாகத்திற்குள் 6 போர்வெல்களையும், அதே வளாகத்தில் கும்பக்குடி எல்லையில் 5 போர்வெல்களையும் போட்டு ராட்சத போர்கள் மூலம் 24 மணி நேரமும் கணக்கில்லாமல் தண்ணீரை உறிஞ்சி எடுத்துக்கிட்டே இருப்பதாகவும், இதனால் அந்த பகுதி நிலத்தடி நீர் கிடைக்காமல் மக்கள் அவதிபடுவதாகவும், சூரியூர் மட்டுமல்லாமல் அந்த கிராமத்தை சுற்றியுள்ள சின்ன சூரியூர், கும்பகுடி, வீரம்பட்டி, காந்தலூர், எலந்தப்பட்டி, பட்டவெளி உள்ளிட்ட கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு காரணமான கம்பெனியை மூடக்கோரி கடந்த 3 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் மூலம் போராடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று எல்.ஏ. பாட்டிலர்ஸ் நிறுவனத்தை மூடமறுப்பதை கண்டித்து, அந்த கிராம பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைகளை திருப்பி ஒப்படைக்க வந்தபோது போராட்டக்காரர்கள், தண்ணீர் இயக்கத்தின் அமைப்பாளர் வினோத் சேஷன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து சூரியூரில் போராட்டங்கள், தொடர்ந்தது, இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், வழக்கறிஞர் பானுமதி உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இப்படி அடுத்தடுத்து போராட்டங்கள் தொடரவே, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பேச்சுவார்த்தையின்போது போராட்டக்காரர்கள், ''2000 சதுர அடிக்கு மேல் கட்டப்படும் வணிக கட்டடங்களுக்கு தேவையான கட்டட வரைபட அனுமதி மற்றும் கட்டடம் கட்ட அனுமதி நகர் ஊரமைப்பு துறையிடம் (DTCP) பெற வேண்டும். ஆனால் எல்.ஏ. பாட்டிலர்ஸ் நிறுவனம் சுமார் 1,00,000 சதுர அடி வரை தொழிற்சாலையை நிறுவியுள்ளது. ஆனால், நகர் ஊரமைப்பு துறையிடம் (DTCP) இதுவரை எவ்வித அனுமதியும் பெறவில்லை. எல்.ஏ. பாட்டிலர்ஸ் நிறுவனம் முழுக்க சட்டவிரோதமாக செயல்படுகிறது. மேலும், இந்நிறுவனம் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 160ன்படி ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கோ, இயந்திரங்கள், தளவாடங்கள் நிறுவுவதற்கோ ஊராட்சி ஒன்றிய கவுன்சில் அனுமதி பெறப்படவில்லை. அதனை முன்னிட்டு திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மான எண். 194 நாள்: 06.05.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்ட நிறுவனத்தை தடை செய்ய சொல்லி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் தமிழக அரசால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்திடமிருந்து பெப்சி (PEPSI) குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையான எல்.ஏ. பாட்டிலர்ஸ் நிறுவனத்தின் உரிமம் புதுபிப்பதற்கான காலக்கெடு 31.03.2014 அன்றுடன் முடிந்துவிட்டது. இத்துறையிடமிருந்து இன்றுவரை உரிமம் புதுப்பித்து நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இப்பகுதியில் விவசாயம்தான் பிரதான தொழில். பெப்சி கம்பெனி வந்த பிறகு, சுற்றுவட்டாரத்துல் இருக்கிற 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் படுபாதாளத்துக்குப் போய் விவசாயம் அழிந்தது வருகிறது. இந்த நிறுவனத்தால் பல கோடி ரூபாய் அரசுக்கு வரி ஏய்ப்பும், மக்களின் வாழ்வாதாரமான நிலத்தடி நீர் சுரண்டப்படுவதும் அதனால் விவசாயம் அழிந்தும் வருகிறது. இந்த நிறுவனத்தால் சூரியூர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரத்தில் உள்ள சின்ன சூரியூர், கும்பகுடி. வீரம்பட்டி, காந்தலூர், எலந்தப்பட்டி, பட்டவெளி உள்ளிட்ட பல கிராமங்களும் பாதிக்கப்படைந்துள்ளன. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இப்பகுதிகளில், அதற்கு ஆதாரமாக விளங்கும் கிணற்று பாசனம் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது . இப்படி எந்த அனுமதியும் பெறாத ஒரு நிறுவனம் இயங்கிக் கொண்டு இருக்க, அதே நேரம் இந்த மண்ணில் பிறந்து வாழ்ந்து வரும் விவசாயிகளும் பொது மக்களும், தண்ணீருக்காக தவிக்கிறோம்'' என்றார்கள். மேலும், ''கடந்த சில மாதங்களுக்கு முன் அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டுப் பொறியாளர், நிலத்தடி நீர் செயற்பொறியாளர், தீயணைப்பு கோட்ட அலுவலர், உள்ளாட்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட 10 அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்து கம்பெனியை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளர், நிலத்தடி நீர் செயற்பொறியாளர் உள்ளிட்ட 10 அதிகாரிகள் கொண்ட இக்குழு, 24 ஏக்கரிலான இந்த இடத்தில் பெப்சி கம்பெனி அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து அறிக்கை வழங்கியது. ஆனாலும் அதிகாரிகள் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்றும் கூறினர். இதையடுத்து, அதிகாரிகள் நேற்று மாலை எல்.ஏ.பாட்டிலர்ஸ் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தற்பொழுது ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால், ஆலையை நிரந்தரமாக மூடும் விசயத்தை தேர்தல் முடிந்து வைத்துக்கொள்ளலாம் என்றும், தற்போதைக்கு நீர் உறிஞ்சப்படும் போர் வெல் கிணறுகளை மட்டும் செயல்படாவண்ணம் சீல் வைத்தனர். மேலும் அந்த நிறுவனத்துக்கு செல்லும் மின்சாரமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இனிப்பு வழங்கி கொண்டாடிய தண்ணீர் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் ''இது முதல்கட்ட வெற்றிதான், அந்த பெப்சி நிறுவனத்தையும், அந்த நிறுவனத்தைச் சுற்றியுள்ள மற்ற தண்ணீரை விற்பனை செய்யும் கம்பெனிகளையும் நிரந்தரமாக மூடும் வரை விடமாட்டோம்'' என்கிறார்கள். ![]() |
Posted: 01 Feb 2015 02:00 AM PST |
Posted: 01 Feb 2015 01:46 AM PST |
Posted: 01 Feb 2015 01:30 AM PST |
Posted: 01 Feb 2015 01:20 AM PST |
Posted: 01 Feb 2015 01:10 AM PST தெரிந்துகொள்வோம்! ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்., ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது., ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது., இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது... அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்., மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்...., இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காப்போம் நண்பர்களே வீட்டுமனை approval வாங்கும் போது அரசு கட்டாயம் 2 மரங்கள் இருந்தால் தான் approval என்று சட்டம் இயற்றிநால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் Relaxplzz |
Posted: 01 Feb 2015 12:50 AM PST |
Posted: 01 Feb 2015 12:40 AM PST |
Posted: 01 Feb 2015 12:31 AM PST |
Posted: 01 Feb 2015 12:28 AM PST |
Posted: 01 Feb 2015 12:21 AM PST |
Posted: 01 Feb 2015 12:12 AM PST |
Posted: 01 Feb 2015 12:00 AM PST வாழ்வியல் உண்மைகள்... 1. வணங்கத்தகுந்தவர்கள் - தாயும், தந்தையும் 2. வந்தால் போகாதது - புகழ், பழி 3. போனால் வராதது - மானம்,உயிர் 4. தானாக வருவது - இளமை, முதுமை 5. நம்முடன் வருவது - புண்ணியம், பாவம், 6. அடக்க முடியாதது - ஆசை, துக்கம் 7. தவிர்க்க முடியாதது - பசி, தாகம் 8. நம்மால் பிரிக்க முடியாதது - பந்தம், பாசம் 9. அழிவை தருவது - பொறாமை, கோபம் 10. எல்லோருக்கும் சமமானது - பிறப்பு, இறப்பு 11. கடைத்தேற வழி - உண்மையும்,உழைப்பும் 12. ஒருவன் கெடுவது - பொய் சாட்சி, செய் நன்றி மறப்பது 13. வருவதும் போவதும் - இன்பம், துன்பம் 14. மிக மிக ந்ல்ல நாள் - இன்று 15. மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு 16. மிகவும் வேண்டாதது - வெறுப்பு 17. மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி 18. மிகக் கொடிய நோய் - பேராசை 19. மிகவும் சுலபமானது - குற்றம் காணல் 20. கீழ்தரமான விஷயம் - பொறாமை 21. நம்பக்கூடாதது - வதந்தி 22. ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு 23. செய்யக்கூடாதது - தவறுகள் 24. செய்ய வேண்டியது - உதவி 25. விலக்க வேண்டியது - விவாதம் 26. உயர்வுக்கு வழி - உழைப்பு 27. நழுவ விடக்கூடாதது - வாய்ப்பு. Relaxplzz ![]() |
Posted: 31 Jan 2015 11:50 PM PST |
Posted: 31 Jan 2015 11:40 PM PST |
Posted: 31 Jan 2015 11:30 PM PST |
Posted: 31 Jan 2015 11:20 PM PST |
Posted: 31 Jan 2015 11:16 PM PST |
Posted: 31 Jan 2015 11:10 PM PST (எப்போது நினைவுக்கு வந்தாலும் சரி ..சிரிப்பு வரும்) அந்த அரசனுக்கு தீடிர் ஆசை.. பழச்சுவையின் மீது தீடிர் மோகம்.. தான் சுவைக்காத அரிய பழத்தை கொண்டு வந்தால் ஆயிரம் பவுன் பரிசு.. மக்கள் முன் அறிவித்தான்.. மக்கள் தங்களுக்கு கிடைத்த பழங்களை எடுத்து கொண்டு வரிசையில் நின்றனர்.. ஆனால் அதில் ''கண்டிஷன் அப்ளை'' இருந்தது.. இம்சை அரசர்களும் உண்டல்லாவா.. அரசருக்கு தெரிந்த பழமாக இருந்தால் அவர் வாயிலே திணித்து அனுப்பிவைக்கப் படுவாகள்.. ஒருவன்அன்னாசி எடுத்து வந்தான்...அது அரசனுக்கு தெரிந்த பழாமாய் இருந்த்தால் வாயில் திணித்து அனுப்ப வீரர்களுக்கு உத்திரவிடப்பட்டது.. அவன்சிரிக்க ஆரம்பித்தான் வீரர்களுக்கு புரியவில்லை..''ஏன் சிரிக்கிறாய்'' என்றார்கள்.. ''பின்னாடி ஒருவன் பலா பழத்தை தூக்கிவருகிறான்..அவனுக்கு எற்ப்படும் கதியை நினைத்து சிரித்தேன்'' என்றான் அவன் நீதி... இங்கே மனிதர்களுக்கு அடுத்தவன் துன்பபடுவதை பார்த்தால் எந்தநிலையிலும் சிரிப்பு வரும்.. Relaxplzz |
Posted: 31 Jan 2015 11:03 PM PST பழைய சோத்துல இவ்வளவு விஷயமா? உணவே மருந்து மருந்தே உணவு திரைப்படங்களில் கிராமத்து சீன் கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் கொண்டு போய் கதாநாயகனுக்குத்தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான். இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது. ஆனால் முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் வைட்டமின் பி6 வைட்டமின் பி12 ✅ ஏராளமாக இருக்கிறது என்கிறது புது ஆய்வு தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள் : 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்! ⏩ கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது ! பழைய சாதத்தின் நன்மைகள் சில 1. ⛅ "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. 2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. 3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும். 4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது. 5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும், உடல் எடையும் குறையும். 6. ✅ மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது. 7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். ![]() "நலமுடன் வாழ" - 2 |
Posted: 31 Jan 2015 10:50 PM PST |
Posted: 31 Jan 2015 10:40 PM PST |
Posted: 31 Jan 2015 10:30 PM PST |
Posted: 31 Jan 2015 10:20 PM PST |
Posted: 31 Jan 2015 10:10 PM PST ஒரு கோழிப்பண்ணை முதலாளியை பேட்டி எடுக்க வந்திருந்தார்கள். உங்கள் கோழிகள் எல்லாம் கொழு கொழுவென்று இருக்கிறதே? அதற்குக் காரணம் என்ன என்று கேட்டனர்.. பண்ணைக்காரர், அதெல்லாம் ஒன்னுமில்லீங்க, நான் அவைகளுக்கு, பாதாம், பிஸ்தா எல்லாம் கொடுக்குறேன், அதனாலத்தான் இப்படி இருக்கு என்றார். வந்தவர்கள், அதைக் கேள்விப்பட்டுத்தான் நாங்கள் இங்கே வந்தோம். நான்கள் எல்லாம் வருமானத்துறை அதிகாரிகள், எடு கணக்கு நோட்டை என்று சொல்லி 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.. பண்ணைக்காரர், தலையில் கையைவைத்துக் கொண்டு வருத்தமாக இரண்டு நாள் சாப்பிடவில்லை. ஒருவாரம் கழித்து, ஒரு கும்பல் வேனில் வந்திறங்கியது. உங்கள் கோழிக்கெல்லாம் என்ன தீனி போடுகிறீர்கள் என்று கேட்டனர். பண்ணைக்காரர் சுதாரித்துக் கொண்டு, இந்தமுறை வந்தவர்கள் மூக்கை அறுக்கிறமாதிரி ஏதாவது பதில் சொல்லனும்னு, நான் ஒன்றுமே போடுவதில்லை என்றார். வந்தவர்கள் நாங்கள் ஜீவ காருண்ய சங்கத்திலிருந்து வந்துள்ளோம்.. நீங்கள் கோழிகளை பட்டினி போட்டதற்காக உங்களுக்கு ரூபாய் 50,000 அபராதம் என்று பணத்தைப் பிடுங்கிக்கொண்டு, ரசீது கொடுத்தனர். பண்ணையார் நிலைமை கேட்கணுமா? என்னடாயிது, எதைச் சொன்னாலும் பணம் பிடுங்குரானுங்க... என்றிருந்த நிலையில்... மூன்றாவது அணி ஒன்று வந்து, அதே போல உங்கள் கோழிகளுக்கு என்ன சாப்பாடு போடுறீங்க என்றனர். பண்ணையார் பாதி பயத்துடன், அதுங்க கிட்ட ஆளுக்கு ஒருஅனா கொடுத்துடுறேன்.அதுங்க எதையோ வாங்கித்தின்னுட்டு வந்திடுது.. என்னா திங்குதுனு எனக்குத் தெறியாது என்று சொல்லி ஒருவழியாக தப்பித்தார்... :P :P Relaxplzz |
Posted: 31 Jan 2015 10:00 PM PST காமத்திற்கு மத்தியில் வாழும் காதல்! உலகிற்கு ஓர் எடுத்துக்காட்டு டெல்லியில் ஆசிட் வீச்சால் வாழ்க்கையை இழந்த பெண்ணுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் மறுவாழ்வு கொடுத்துள்ளார். இந்தியாவின் தலைநகரம் டெல்லியை சேர்ந்தவர் லஷ்மி, வயது 24. 9 ஆண்டுகளாக தைரியமாக வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அழகு பெண், பார்ப்பவர்களுக்கு வினோத பொருளாய் தென்படுகிறார். இதற்கெல்லாம் என்ன காரணம்? யாரால் நேர்ந்தது? என்று ஆராய்ந்தால் மிக கொடுமையான சம்பவம் அவளது வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது என்பது தான் உண்மை. பள்ளிப்பருவ காலத்தில் குடும்பம்- நண்பர்கள் என அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு பட்டாம்பூச்சி போன்று சிறகடித்து கொண்டிருந்த காலம் அது. 15 வயதான போது, பக்கத்து வீட்டு தோழியின் சகோதரன் காதலிப்பதாய் கூறியுள்ளார். அத்தருணத்தில் காதலையும், காதலிப்பதாய் சொன்ன நபரையும் வெறுத்து ஒதுக்கியுள்ளார், பல்வேறு முயற்சிகள் செய்தும் அவ்விளைஞனின் முயற்சிகள் தோல்வியில் முடிந்து போனது. இதனால் கோபமடைந்த அவ்விளைஞன், லஷ்மியின் மீது ஆசிட்டை ஊற்றியுள்ளான், துடிதுடித்துப் போனாள், இதன்பின் பத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டும் பலனில்லாமல் போனது. எந்தவொரு ஆண்மகனும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. காலங்கள் கடந்து போக, அலுவலகம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தாள். அங்கு தான் அவளுக்கு அலோக் தீக்ஷித் என்ற சமூக ஆர்வலரின் நட்பு கிடைத்தது. லஷ்மியின் வாழ்க்கையில் நடந்த சோகம், அலோக் மனதில் நீங்கா வடுவாய் இருந்தது. அவளை தனது துணைவியாக ஏற்றுக்கொள்ள தீர்மானித்தார், லஷ்மியின் சம்மதத்தை கேட்டுள்ளார். ஆனால் லஷ்மியோ தன்னைவிட அழகிலும், அறிவிலும் உயர்ந்தவர் என்ற காரணத்தால் திருமணத்திற்கு மறுத்துவிடுகிறார். உடனே சமூகத்தின் பார்வையில் கணவன்- மனைவி என்ற கோட்பாட்டிற்குள் நாம் நுழையாமல் நம் வாழ்க்கையை தொடருவோம் என்று அலோக் கூறவே, பச்சைக் கொடி காட்டியுள்ளார் லஷ்மி. இருவரும் மிக சந்தோஷமாக தங்களது இல்லற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் காதல் என்ற பெயரில் அரங்கேறிவரும் கொடூரங்களுக்கு மத்தியில் இப்படியான காதலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன..... Relaxplzz ![]() |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment