யணிகளைக்
காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்!
==============================
==============
கடந்த 22-ம் தேதி (22-01-2015) ,
மறைமலை நகரில்
இருந்து பொறியாளர்களை ஏற்றிக்
கொண்டு தரமணியில் உள்ள
சாஃப்ட்வேர் நிறுவனம்
நோக்கி சென்று பேருந்தை ஓட்டிக்கொண்டிரு
ந்தார் ஆனந்தன்(31).
அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட,
வலி சிறிது அதிகம்
ஆனதுமே பேருந்தை இரும்புலியூரில்
சாலை ஓரம் நிறுத்தி விட்டார்.
அது குளிர்சாதன
பேருந்து என்பதால் பின்னால்
அமர்ந்திருக்கும்
ஊழியர்களுக்கு எதுவும்
தெரியவில்லை .சிறிது நேரம்
கழித்து அந்த வழியாக வந்த
ஒரு நபர் ஆனந்தன்
உயிருக்கு போராடுவதை அந்த
பஸ்சில் அமர்ந்திருந்த
ஊழியர்களுக்கு தெரிவித்திருக்க
ிறார். அங்கு இருந்த
போக்குவரத்து காவல்துறையினர்
வேறு ஓட்டுனர் முலம்
பேருந்தை மருத்துவமனைக்கு
எடுத்து செல்ல
ஏற்பாடு செய்தனர். ஆனால்
ஆனந்தன் மருத்துவமனைக்கு
செலும் வழியில்
உயிரிழந்து விட்டார். உயிரிழந்த
ஆனந்தனுக்கு, மனைவியும், 9
வயது பெண் குழந்தையும்
இருக்கிறார்கள்.
இந்த சம்பவத்தில் மிக
முக்கியமான விஷயம்
என்னவென்றால், ஆனந்தன்
பேருந்தை நிறுத்திய இடத்தில்
இருந்து வெறும் 5
நிமிடங்களுக்கும் குறைவான
நேரத்தில் செல்லக்கூடிய
தொலைவில்தான்
மருத்துவமனை அமைந்துள்ளது.
அது மட்டும் இன்றி ஆனந்தன்
பேருந்தை மிக கவனமாக
சாலை ஓரம் நிறுத்தியதால் தான்
அதில் பயணம் செய்த அனைவரும்
சிறு காயங்கள் இல்லாமல் உயிர்
தப்பி இருகின்றனர் .
ஆனந்தன்
சிறிது முயற்சி செய்திருந்தால்
கூட அருகில் இருந்த
மருத்துவமனைக்கு
பஸ்சை ஓட்டி சென்று இருந்திருக்கலாம
். ஆனால்
தன்னை நம்பி அமர்ந்திருக்கும்
நபர்களை எண்ணியதால்தான்
பேருந்தை சாலை ஓரம் பத்திரமாக
நிறுத்தி உள்ளார்.
இதில் ஒரு சோகமான விஷயம்
என்னவென்றால் இதை விபத்தாக
பதிவு செய்யமுடியாது. அதனால்
ஆனந்தனின் குடும்ப
உறுப்பினர்களுக்
கு காப்பீடு வழங்கப்பட
வாய்ப்பில்லை .
அனந்தன் மட்டுமல்ல,
இதே போல் கும்மிடிப்பூண்ட
ியில் இருந்து சென்ட்ரல்
நோக்கி வந்து கொண்டிருந்த
ரயிலின் ஓட்டுனர் மனோகர் (48),
தனக்கு மார்பில்
வலி ஏற்படுகிறது என்று தெரிந்ததும்
ரயிலை மெயின் லைனில்
இருந்து கொண்டு வந்து நிறுத்தி விட்டு,
அவர்
இருக்கையிலே இறந்து போனார்.
தங்களுக்கு என்று ஒரு குழந்தை,
மனைவி, அப்பா,
அம்மா என்று ஒரு உலகம்
இருந்தாலும். அந்த ஓட்டுனர்
இருக்கையில் அமர்ந்த பிறகு,
அவர்களை நம்பி வந்திருக்கும்
பயணிகள் தான் உலகம் என்ற
கடமை உணர்வினால் தான் பல
இக்கட்டான சூழ்நிலையிலும்,
தங்களைப் பற்றி கவலைப்படாமல்
பல உயிர்களைக்
காப்பாற்றி உள்ளனர் .
ஆனந்தன் ஒரு ஹீரோ இல்லை.
அவர் அப்போது அந்த வழியாய்
சென்று கொண்டிருந்த
அனைவரையும் ஆபத்தில்
இருந்து காப்பாற்றிய தேவதூதர்!
உயிர்போகும் நிலையிலும்
பயணிகளைக் காக்க வேண்டும்
என்று நினைத்த, டிரைவர்
ஆனந்தனுக்கு சல்யூட்!
இவரின் குடும்பத்தை தமிழக
அரசு பொறுப்பேற்க வேண்டும்
என்பதே எங்கள் பணிவான
வேண்டுகோள் #Aminu

0 comments:
Post a Comment