Wednesday, 18 February 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


சட்டிஸ்கார் மாநிலத்தில், மாவோயிஸ்டுகளுடன் நடந்த மோதலில் காயமுற்ற பெண் போராளிகளை...

Posted: 18 Feb 2015 08:55 AM PST

சட்டிஸ்கார் மாநிலத்தில், மாவோயிஸ்டுகளுடன் நடந்த மோதலில் காயமுற்ற பெண் போராளிகளை வல்லுறவு செய்த இந்திய பொலிஸ் படையினர், பின்னர் அவர்களை கொன்று படமெடுத்துள்ளனர். நிர்வாணமான பெண் போராளிகளின் சடலங்களை காட்டும் படங்கள், சட்டிஸ்காரில் வெளியாகும் ஹிந்தி சஞ்சிகை ஒன்றில் பிரசுரமாகி உள்ளன.

அது குறித்து மாவோயிஸ்ட் ஆதரவு தகவல் மையம் வெளியிட்ட விரிவான அறிக்கை:

Condemn the murders of women guerillas by the paramilitary and Chhattisgarh police forces

Punish the police who raped the injured women guerillas and murdered them

On October 8, the central paramilitary forces and the Chhattisgarh police forces, district police forces and Koya
commandos attacked our guerilla squad at Pottem (Pottenar) village in Bijapur district. In this firing three women comrades Punem Jamili, Madkam Rambatti and Madkam Lakshmi were martyred. Madkam Rambatti was killed on the spot in the firing.

Madkam Lakshmi was seriously injured while Punem Jamili was also injured. The jawans raped the injured women guerillas and
killed them. The police took photos of the naked body of Punem Jamili and released those to the press. A Hindi magazine of
Chhattisgarh published those photos.

Pottem incident is one more incident in the innumerable murders, rapes and destruction perpetrated by the CRPF and Chhattisgarh and Maharashtra police forces as part of Operation Green Hunt (OGH), now in its third phase. In June 2012 C-60 commandos attacked women guerillas near Medri village in Etapalli taluq of Gadchiroli district, caught six women comrades who were injured, raped them and murdered them in cold blood. Then they behaved obscenely with the dead bodies.

In the Pottem incident, the jawans have suppressed with their iron boots all rights to the women guaranteed by the Constitution and perpetrated these atrocities which are against the Constitution and the law. They displayed their shamelessness by throwing to winds every civilized norm of the civil society.

They horribly violated the values of a civil society and rules of war which stipulate that injured soldiers and captives should be treated with respect and that too when women insurgents are in an injured state, they should be treated more sensitively.

This is not only a violation of human rights according to the international human rights law but would also constitute a war crime. According to the Geneva Convention persons perpetrating such war crimes should be tried by international courts. Raping and murdering injured women guerillas denotes the brutal and criminal character of the police forces and their criminal nature.

The media and the newspaper industry, instead of raising questions on such brutal, criminal and illegal acts of the government forces, is violating its own ethics by publishing the naked photos of the women guerilla. This is highly objectionable.

Whether during the Salwa Judum that was carried on by the central and state governments to suppress the Dandakaranya
movement or during the OGH, ongoing since the past five years, countless such atrocities and murders were perpetrated and still
being perpetrated. The police goons taking photos of their inhuman and criminal activities by challenging the civil society and
displaying them is violating all limits and callous beyond words.

We are appealing to the people, democrats, civil rights and human rights organizations to condemn such obscene, criminal, inhuman, illegal acts that violate the Constitution too. We appeal to the civil and human rights organizations to build movements to demand the booking of cases on jawans who perpetrated the Pottem atrocities and punish them.

We are appealing to the all India journalists' unions and editors' guilds to condemn the act of the Chhattisgarh Hindi magazine that published the photo released by the police after perpetrating such an obscene, inhuman and illegal human rights violation.


பெண்களை திட்டும் போது 'மா' அறிவுரை கூறும் போது 'டா' ரசிக்கும்போதும் கொஞ்சும் போத...

Posted: 18 Feb 2015 06:54 AM PST

பெண்களை திட்டும்
போது 'மா'
அறிவுரை கூறும்
போது 'டா'
ரசிக்கும்போதும்
கொஞ்சும் போதும் 'டி'
உபயோகித்து பாருங்கள்
வாழ்க்கை சிறக்கும். :)

@காளிமுத்து

தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்ட மலாய் மொழி 1920-ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட கெடு...

Posted: 18 Feb 2015 04:38 AM PST

தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்ட மலாய் மொழி

1920-ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட கெடுக்கான் மலை கல்வெட்டு தமிழ் எழுத்துகளால் எழுதப்பட்ட மலாய்-சமஸ்கிருத மொழி வாசகங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த கல்வெட்டு தான் மலாய் மொழியின் மிகப் பழைமையான கல்வெட்டு ஆகும். 45 முதல் 80 செ.மி. அளவு கொண்ட அந்த சிறு கல், இந்தோனேசியா தத்தாங் ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டது. 683-ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த கல்வெட்டு மிகுதியான வடமொழிச் சொற்களையும் கொண்டிருக்கிறது.

Tamil letters were used to write Malay language

The Kedukan Bukit Inscription was discovered by the Dutchman M. Batenburg on 29 November 1920 at Kedukan Bukit, South Sumatra, Indonesia on the banks of the River Tatang, a tributary of the River Musi. It is the oldest surviving specimen of the Malay language, in a form known as Old Malay. It is a small stone of 45 by 80 cm. This inscription is dated the year 605 Saka (683 AD) and contains numerous Sanskrit words.

All these inscriptions were written in Pallava script, a form of ancient script used in Tamil kingdoms of ancient India.

Source: http://books.google.co.id/books?id=vO_-AgAAQBAJ&printsec=frontcover&hl=id#v=one


தமிழ் சினிமாவின் விதிகள்தமிழ் சினிமாவின் விதிகள்-(பகுதி -2) 1.ஹீரோ Opening song...

Posted: 18 Feb 2015 04:25 AM PST

தமிழ் சினிமாவின் விதிகள்தமிழ் சினிமாவின் விதிகள்-(பகுதி -2)

1.ஹீரோ Opening song இல்லாமல் வெளியே வரமாட்டார்கள்.

2.பிச்சை எடுத்தாலும் கனவுப் பாடலை சுவிட்சர்லான்டிலோ, அமெரிக்காவிலோ தான் வைத்துக் கொள்ளவார்கள்

3.நாயகி குளிக்கையில் பல்லியோ, கரப்பான் பூச்சியோ நிச்சயம் வரும்.

4.ஹீரோ 60 வயதானால் கூட 18 வயது பெண்ணோடு தான் ஜோடி சேருவார்கள்.

5.மார்க்கெட்ல பத்து ரூவா மாமுல் கேட்டதுக்கு ஹீரோ வில்லன அடிப்பாரு , வில்லன் குறிதவறாமல் பறந்து போய் காய்கறி கூடையில் தான் விழுந்து கடையையே நாசம் பண்ணுவாங்க ..

6.தீர்ப்பு எழுதறதுக்கு முன்னாடி நொடி ஹிரோ கொலகாரன ஜட்ஜுக்கு முன்னாடி நிறுத்தி,தீர்ப்பை மாத்தி எழுத சொல்றது.

7.கோயில் மணி அடிச்சதும் புறா எல்லாம் பறக்கும்

8.ஹீரோயின் வழுக்கி விழறப்போ ஹீரோ தாங்கி பிடிச்சு தரையில உருளுறது.

9.ஹீரோயின் குளிச்சிட்டு வர்ர நேரமா பாத்து ஹீரோ கட்டிலுக்கு அடில ஒளிஞ்சிருக்குறது.

10.பாகிஸ்தான் காஷ்மீர் தீவிரவாதிக்கு எல்லாம் தமிழ் தெரியறது

11.பாலத்தில் இருந்து, வைக்கோல் நிறைந்த லாரியில் பத்திரமாக குதிப்பது

12.முதல் இரவு காட்சியில் ஹீரோயின் சொம்பு கொண்டுவருவது

13.ஹீரோயினை குழந்தைத்தனமாக காண்பிப்பது, அதைப் பார்த்து ஊருல பாதிப்பொண்ணுங்க லூசு மாதிரி இமிட்டேட் பன்றது

14.ஒரே பாட்டுல அம்பானி ஆவுறது

15.தண்ணிகுள்ளேர்ந்து ஹீரோயின் எந்திருக்கும்போது முடியால தண்ணிய வாரி அடிக்கிறது

16.முதலிரவுல லைட்ட அமத்துறது. விடிஞ்சதும் சூரியன காட்டுறது.

17.யதார்த்தப்பட இயக்குனர்கள் தாடி வளர்த்திருப்பது அவசியம். கண்ணாடியும் இருந்தால் கூடுதல் அழகு. தொலைக்காட்சி பேட்டிகளின்போது பதில் சொல்லமுதல் தாடியை சொறிபவரே அறிவுஜீவி.

18.கிளைமாக்ஸ் க்ரூப் போட்டோ வித் அசட்டு சிரிப்பு சிரிப்பாங்க

@களவாணி பய

முதுமையில் தன் துணையை இழந்தவர்களின் வலி, தன் கூட்டை தொலைத்த குருவியின் வலிக்கு ஈ...

Posted: 18 Feb 2015 01:59 AM PST

முதுமையில் தன்
துணையை இழந்தவர்களின்
வலி, தன்
கூட்டை தொலைத்த
குருவியின்
வலிக்கு ஈடானது..

@காளிமுத்து


Ancient Tamil Civilization: Karur is one of the oldest towns in Tamil Nadu an...

Posted: 18 Feb 2015 12:55 AM PST

Ancient Tamil Civilization:


Karur is one of the oldest towns in Tamil Nadu and has played a very significant role in the history and culture of the Tamils. Its history dates back over 2000 years, and has been a flourishing trading center in the early Sangam days. It was ruled by the Cheras, Gangas, Cholas, the Vijayanagara Nayaks, Mysore and the British successively.

Karur was built on the banks of river Amaravathi which was called Aanporunai during the Sangam days. According to the Hindu mythology, Brahma began the work of creation here, which is referred to as the "place of the sacred cow." The names of the early Chera kings who ruled from Karur, have been found in the rock inscriptions in Aaru Nattar Malai close to Karur. The Tamil epic Silapathikaram mentions that the famous Chera King Senguttuvan ruled from Karur.

Epigraphical, numismatic, archaeological and literary evidence have proved beyond doubt that Karur was the capital of early Chera kings of Sangam age. It was called Karuvoor or Vanji during Sangam days. There has been a plethora of rare findings during the archaeological excavations undertaken in Karur. These include mat-designed pottery, bricks, mud-toys, Roman coins, Chera Coins, Pallava Coins, Roman Amphorae, Rasset coated ware, rare rings, etc. Karur may have been the center for old jewelry-making and gem setting (with the gold imported mainly from Rome), as seen from various excavations. In 150 Greek scholar Ptolemy mentioned "Korevora" (Karur) as a very famous inland trading center in Tamil Nadu.

https://docs.google.com/document/d/1EnoLAy1bKEITHsrWkSBMsJZEQL9nx32drsNUZ_7r5Bk/edit?pli=1

Karur is situated about 70 km from Tiruchirappalli town and is a District headquarters. The excavation results have thrown valuable light on the identification of this place as an important trade centre.

The important findings are several potsherds with Tamil-Brahmi inscriptions assignable to the beginning of the Common era. The inscribed potsherds were found along with Roman Amphorae and rouletted ware of Mediterranean origin.

http://www.tnarch.gov.in/excavation/kar.htm

Karur coins of Greeks, Romans and Phoenicians

Tamil literature has profuse quotes about the presence of Romans. All referred to them as Yavanas.

The famous Pattu-pattu and Ettu-thokai; Silappadhikaram and Manimekhalai; and the Jivaka-Cintamani and Perum-kathai give several references to the Roman trade, their gifts and articles to the local kings.

When we collate and read them simultaneously, we feel proud to know that Tamil Nadu's trade and culture is as old as its 3000-year old history.

The spot that attracted the Romans is Karur which is in the Tiruchi district of Tamil Nadu.

The astonishing number of coins and inscribed objects unearthed from the Amaravathi River bed, and their study by scholars like Iravatham Mahadevan, R. Nagaswamy and R. Krishnamurthy, (Editor, Dinamalar), prove beyond doubt that the Greeks, Roman and Phoenicians were here to trade.

According to Dr. Nagaswamy, Tamil scholar Francois Gros of the Ecole Francais Extreme Orient, Pondicherry, suggested the study of all the Karur finds and assessment of their archaeological significance, along with the role of Karur in the history of Tamil civilisation. The studies clearly proved that the presence of these foreigners had left a far deeper impact on the economy, defence, arts and architecture than imagined earlier.

The Tamil literature makes it abundantly clear that the Tamils admired the work and products of the Romans for their quality and in a number of cases started imitating them. The issue of portrait coins with the legend and head of the local Kings (Makkothai) is clearly a point in this direction.

According to Dr. Nagaswamy, the portrayal of men and animals on the local coins suggest a Roman hand.

Dr. Krishnamurthy's interest in the field of numismatics has, in fact, led to the first paper on the coins of foreign rulers in 1993. It was on Seleucid coins from Karur (Studies in South Indian Coins - SSIC).

In his book, the Ancient Greek and Phoenician Coins from Karur, he says, "the world of Greeks spread from Spain to India and from Russia to Egypt. In this wide geographical span coins were issued by Empires, minor monarchies and by large and small city-states. As a result, we have a bewildering array of coins in a variety of metals and sizes."

He got a number of Greek coins from Karur in recent years and reported about these and he was able to identify them with the help of Andrew Burnett, keeper of coins and medals, and Deputy Director of the British Museum, who is an expert on the Roman coins and author of several books on subject related to Roman period.

http://www.thehindu.com/life-and-style/leisure/karur-coins-of-greeks-romans-and-phoenicians/article28504.ece

கரூர் - கருவூர் - வஞ்சி - கோருவூரா

கரூரில் கிரேக்கக் காசு:

தமிழகத்தில் கிடைத்த கிரேக்கக் காசுகளின் பழமை பொ.மு. 300 வரை செல்லும். மேலும், கிடைத்துள்ள காசுகள் பல எந்த நகரத்தில் அச்சிட்டது என்பதைக் கூட அறிய முடிகிறது. கரூர் நகரிலே அதிகக் காசுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இக்காசுகளைக் கொண்டு கிரேக்கத் தீவுகளான ரோட்சு, கிறீட்சு, திரேசு, தெசிசு போன்றவற்றுக்கும் தமிழகத்துக்கும் இருந்த வணிகத்தொடர்புகளையும் கிரேக்க நாகரிக கடவுளர்களையும் அறிய முடிகிறது. மேலும், கிரேக்க மன்னர் அலெக்சாண்டர் மரணத்துக்குப்பின் டைகிரிசு நதியில் ஆதிக்கம் செலுத்திய செலியூசிட் வம்சத்தவர் வெளியிட்ட பத்து காசுகள் கரூர் நகர அமராவதி ஆற்றங்கரையில் கிடைத்துளன . இவற்றைக் கொண்டு கரூர் நகரை மையமாக கொண்ட வர்த்தகத்தில் கரூரிலிருந்து சேரர் துறைமுகம் முசிறிக்கு பொருட்கள் கொண்டு சென்று பின் மெசொப்பொத்தேமியா நகரங்களுக்கு எடுத்துச் சென்றனர் என்ற கருதுகோளை உறுதிப்படுத்தினர்

.....

தமிழகத்தில் கிடைத்துள்ள ரோமானியர்காசுகள் - ரோமானியர்கள் (பொ.ஆ.மு. 1 ஆம் நூ. – பொ.ஆ. 3 ஆம் நூ):

பொ.ஆ.மு. 1-3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானியர் காசுகள் தமிழகத்தில் பரவலாக்க் கிடைக்கின்றன. இது சங்ககாலத் தமிழருக்கும் ரோமானியருக்கும் இடையே நிலவிய கடல் சார் வணிகத்திற்கு மிகச் சிறந்த சான்று ஆகும். தமிழர்கள் கடல் சார் வணிகத்தில் சிறந்து விளங்க தமிழ் நாட்டின் இயற்கையமைப்பும் ஒரு முக்கிய காரணி என்பது நாம் அறிந்ததே. தொன்மைக் காலந்தொட்டே இவர்கள் கடலின் வலிமையை உணர்ந்து அதை அடக்கி ஆண்டுள்ளனர் என்பதற்கு "நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி" என்ற புறப்பாடல் வரிகளே சான்றாக உள்ளன. தமிழர்கள் கடலோரங்களில் மட்டுமின்றி நடுக்கடலிலும் பயணம் செய்துள்ளனர். 'நாவாய்' என்ற இந்த லத்தீனிய சொல்லே தமிழருடன் யவனர்கள் கொண்டுள்ள கடல் வாணிகத் தொடர்பினை விளக்கும் சான்றாக உள்ளது. "யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்" என்று சங்க இலக்கியமான புறநானூறும் சான்று பகர்கிறது. யவனர்கள் என்ற சொல் பொதுவாக அந்நியர்களைக் குறித்தாலும் பெரும்பாலும் அது கிரேக்க, ரோமானியர்களையே குறித்து நின்றது. ரோமானியரது கலமானது தமிழ்நாட்டின் மிளகை எடுத்துச் சென்று ரோம நாட்டின் பொன்னை இங்கு கொண்டு வந்து சேர்த்ததை மேற்சுட்டிய புறநானூற்றுப் பாடல் சுட்டுகிறது.

மிளகு வணிகமே முற்காலத் தமிழ் வணிகர்களுக்குப் பெருஞ் செல்வத்தைக் கொடுத்துள்ளது. ரோமப் பேரரசிற்கும் இந்தியாவிற்கும் இடையே சென்ற கப்பல்களின் சரக்கில் முக்கால் பகுதி மிளகும் வாசனைத் திரவியங்களும், அரிய கல்மணிகளுமாகவே இருந்தன. இவை தென்னிந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. இம்மிளகு மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தப்பட்டதால் ரோம் நகரில் ஒரு பவுண்டு 15 தினாரி வரை விற்கப்பட்டது.

தமிழகத்துடனான ரோமானிய வணிகம் பொ.ஆ.மு. 1 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் செழிக்கவில்லை. இக்கால வரம்புக்கு முற்பட்ட ரோம மன்னர்களின் நாணயங்கள் தமிழ்நாட்டில் இதுவரையில் கிடைக்கவில்லை. ரோமாபுரியின் அகஸ்டஸ் மன்னன் (பொ.ஆ.மு. 34) காலத்திலிருந்தே தமிழகத்துடனான நேர்முக ரோமானிய வணிகத் தொடர்பு கிட்டியுள்ளது. ரோமானிய நாட்டுடனான தமிழரது வாணிகம் பேரரசின் ஆதரவின் கீழ் செழித்து வளர்ந்தது. ரோமிற்கு பாண்டிய மன்னனின் தூதுவன் சென்றுள்ளான். மதுரையிலும் யவனர்களுக்கான தனிச்சேரி இருந்துள்ளது. ரோமாபுரி வணிகம் சிறந்து விளங்கிய காலத்தில் அரிக்கமேட்டில் பண்டகச் சாலையொன்றும், விற்பனைச் சாலையொன்றும் நடைபெற்றுதையும், ரோம மட்கலங்கள் இங்கு கிடைப்பதையும் அகழாய்வுகள் மெய்பித்துள்ளன. ரோமிலிருந்து ஆண்டுதோறும் 6,00,000 பவுன் மதிப்புள்ள தங்கம் தமிழரின் வாணிகத்திற்காகச் செலவானது. இவ்விதம் ரோமாபுரியின் செல்வம் தமிழகத்திற்குச் சென்றதையும் தமிழகப் பண்டங்களில் ரோமருக்கிருந்த ஆரா வேட்கையையும் மக்கள் சிலரால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.

ரோம பேரரசன் நீரே (பொ.ஆ. 68) காலமான பிறகு வெஸ்பேசியன் அரசேற்றான். இவன் எளிமை விரும்பி. அதனைத் தொடர்ந்து நிலவிய அரசியல் குழப்பங்கள் போன்ற பல காரணங்களால் தமிழக ரோமானிய வணிகம் சிறிது காலம் குன்றியது. பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு வெளியிடப் பெற்ற நாணயங்கள் தமிழகத்தில் கிடைக்கவில்லையென கே.கே.பிள்ளை குறிப்பிடுவதுடன் இந்த ஒரு காரணத்தை மட்டுமே கொண்டு வாணிகம் அறவே அற்றுவிட்டது என்றும் கூற இயலாது. பேரரசன் கான்ஸ்டன்டைன் (பொ.ஆ. 324-337) காலத்தில் மீண்டும் தமிழகத்துடனான வணிகம் தொடர்ந்து வந்துள்ளது என்றும் உரைக்கின்றார். இக்கருத்தை உறுதி செய்யும் சான்றாக பிற்காலத்தைச் சேர்ந்த ரோமானிய செப்புக் காசுகளை ஆர்.கிருஷ்ணமூர்த்தி கண்டறிந்து தெளிவுற விளக்கியுள்ளார். இவை மதுரை, திருக்கோயிலூர், கரூர் போன்ற ஊர்களிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன.

காசுகள்:

ரோமானியர்களது காசுகளைக் குடியரசு காசுகள், பேரரசுக் காசுகள் என இரு வகைப்படுத்தலாம்.

குடியரசு காசுகள்:

குடியரசு காசுகளில் தொன்மையானதாக்க் கிடைக்கப் பெறுவது சி.நேவியஸ் பல்புஸ் (C.NAEVIOUS BALBUS) என்ற வெளியீட்டாளரின் பெயர் பொறித்த காசுகளாகும். இவ்வகைக் காசுகளில் பெரும்பாலும் ஒருபுறம் வீனஸ், புவன் போன்ற கிரேக்க கடவுளர்களின் தலையும், பின்புறம் ஒரு சில காசுகளில் நின்ற நிலையிலுள்ள பருந்து, அதன் கீழே அரசனின் பெயர் பொறிக்கப் பெற்றுள்ளது. கரண்டி, ஜாடி, மந்திரக்கோல் போன்றவையும் காணப்பெறுகின்றன. இக்காசுகளில் DICTITER COSTER, CASSIVS, MAXIM PONTIF, AVGVR இது போன்ற வாசகங்கள் இடம்பெறுகின்றன.

பேரரசு காசுகள்:

ரோமானியப் பேரரசு காலக் காசுகளில் அகஸ்டஸ், டைபீரியஸ் ஆகியோரின் காசுகளே அதிகம் கிடைத்துள்ளன. டைபீரியஸின் காசுகள் மக்ஸிம் பாண்டிஃப் (maxim pontiff) வகைக் காசுகள் என்றழைக்கப் பெறுகின்றன. மற்ற அரசர்களில் கயஸ் (Gaius) கிளாடியஸ் நீரோ வெஸ்பேசியன், டோமிதியன் (Domitian) அந்டோநியஸ் பயஸ் (antoninus pius) மார்க்கஸ் ஆரேலியஸ் (marcus aurelius) செப்திமியஸ் செவெரெஸ் (septimius severus) கரகல்லா ஆகியோரது காசுகள் குறைந்த அளவிலும் கிடைத்துள்ளன. பொ.ஆ.மு. 100லிருந்து பொ.ஆ. 300 வரைக் கிடைக்கும் ரோமானியர்களது காசுகள் தங்கம், வெள்ளி உலோகத்தாலானதாகவே உள்ளன. குறிப்பாகத் தங்க்க்காசுகளே அதிகம் கிடைத்துள்ளன. இவை உலோக மதிப்புக் கருதி தமிழக வணிகர்களால் வரவேற்கப் பெற்றுள்ளன. ஆனால் பொ.ஆ. 300க்குப் பிறகு தமிழகத்தில் கிடைக்கும் (கரூர், திருக்கோயிலூர் போன்ற இடங்களில்) ரோமானியர்களது காசுகள் செப்பு உலோகத்தாலான குவியல்களாகவே கிடைத்துள்ளன. இது கொண்டு ரோமானியர்களது குடியிருப்புகள் தமிழகத்தில் இக்காலக் கட்டத்தில் நிகழ்ந்துள்ளதாகக் கருதலாம்.

சின்னங்கள்:

ரோமானியர்களது காசுகளில் வீனஸ், புவன் போன்ற அவர்களது தெய்வங்களோ அல்லது அந்தந்த அரசர்களின் தலை உருவத்துடன் எழுத்துப்பொறிப்புகளும் இடம்பெறுகின்றன.

தமிழகத்தில் ரோமானியக் காசுகள் கிடைக்கும் இடங்கள்:

தமிழகத்தில் அகிலாண்டபுரம், ஆனைமலை, கல்லகிணர், சாவடிப்பாளையம், திருப்பூர், பூதி நத்தம், பெண்ணார், பொள்ளாச்சி, வெள்ளலூர் (கோயமுத்தூர்), உத்தமபுரம் (மதுரை), கத்தாங்கண்ணி (ஈரோடு), கரிவலம் வந்த நல்லூர் (திருநெல்வேலி), கரூர், கலையம்பத்தூர் (திண்டுக்கல்), காருகாக்குரிச்சி (புதுக்கோட்டை), கிருஷ்ணகிரி (தருமபுரி), கோனேரிப்பட்டி (சேலம்), சொறையப்பட்டு, தொண்டைமாநத்தம் (கடலூர்), பிஷப்டவுன் (உதகமண்டலம்), , மாம்பலம் (சென்னை), மதுரை போன்ற இடங்களில் ரோமானியக் காசுகள் கிடைக்கின்றன.

ரோமானிய போலிக் காசுகளும் வெட்டுக் காசுகளும்: (Imitaiton & slash coins)

ரோமானியர்களது காசுகளைப் போல் போலியாகச் செய்யப் பெற்ற காசுகள் இந்தியா முழுவதும் தமிழகத்திலும் காணப்பெறுகின்றன. அரசனின் காசின் பின் பக்கத்தில் மற்றொரு அரசனின் உருவம் பொறிக்கப் பெற்ற காசுகளும், சரியாக அரசனின் முகப்பகுதியில் வெட்டுக் குறியுள்ள காசுகளும் தமிழகத்தில் கிடைக்கின்றன. இவ்விதக் காசுகள் ரோமானிய காசுகளின் உலோக மதிப்புக்கருதி, குறைந்த மாற்றுள்ள காசுகள் புழகத்தில் விடுவதற்காக அச்சிடப் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. அந்நியரது காசுகளைப் புழகத்திலிருந்து நிறுத்துவதற்காக இவ்விதம் வெட்டுக்குறிகள் இடம்பெற்றுள்ளதாக ஒரு சிலரும், தங்கத்தின் மதிப்பை சோதிக்கவே இவ்விதம் இடம்பெற்றுள்ளது என ஒரு சிலரும் கருதுகின்றனர்.

http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/roman_coins.htm

கருவூரை 150 கிரேக்க புலவர்கள் தங்கள் பாடல்களில் "கோருவூரா (Korevora)" என்று குறிப்பிட்டு தமிழகத்தின் சிறந்த வாணிப மையம் என்று குறிப்பிட்டுள்ளனர்.


Posted: 17 Feb 2015 09:35 PM PST


டிவிட்டரில் பறக்கும் தமிழ் கொடி #தமிழ்வாழ்க ! ஆதலினால் தமிழர்களே இனி தமிழில் ஹே...

Posted: 17 Feb 2015 09:33 PM PST

டிவிட்டரில் பறக்கும் தமிழ் கொடி #தமிழ்வாழ்க !

ஆதலினால் தமிழர்களே இனி தமிழில் ஹேஷ்டேக் செய்க என உற்சாகமாக சொல்லும் அளவுக்கு குறும்பதிவு சேவையான டிவிட்டரில் #தமிழ்வாழ்க எனும் ஹேஷ்டேக் முன்னிலை பெற்றுள்ளது. தமிழில் முன்னிலை பெற்ற முதல் ஹேஷ்டேக் எனும் பெருமித்ததுடன் இந்த அடையாளம் மூலம் கீச்சர்கள் தமிழ் குறித்த குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றானர்.


140 எழுத்து வரம்பு கொண்ட குறும்பதிவுகளாக வெளிப்படும் டிவிட்டர் சமூக வலைப்பின்னல் சேவைகளில் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. டிவிட்டரில் வெளியாகும் குறும்பதிவுகளில் உள்ள பல்வேறு அம்சங்களில் ஹேஷ்டேக் அதன் ஆதார சிறப்பம்சமாக கருதப்படுகிறது. # எனும் குறியுடன் குறிப்பிட்ட பதமே ஹேஷ்டேக் என சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட தலைப்பிலான குறும்பதிவுகளை அடையாளம் காண இந்த ஹேஷ்டேக் பயன்படுகிறது. பல நேரங்களில் ஒரு அலையென் குறும்பதிவுகள் வெளியாகி குறிப்பிட்ட உணர்வை வெளிப்படுத்த அல்லது கருத்தை உணர்த்த ஹேஷ்டேக் கைகொடுக்கிறது.

டிவிட்டர் சேவையின் முக்கிய ஆயுதமாக ஹேஷ்டேக் அமைந்துள்ளது. ஆனால் இதுவரை ஆங்கிலத்திலேயே ஹேஷ்டேக் செல்லுபடியாக வந்தது. தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் ஹேஷ்டே உருவாக்கி பகிரப்பட்டாலும் அதிகாரபூர்வமாக டிவிட்டர் ஏற்று தனது டைம்லைனில் பட்டியலிடும் அங்கீகாரம் ஆங்கிலத்திற்கு மட்டுமே இருந்தது இதுவரை. ஆனால் இப்போது இந்த நிலை மாறியிருக்கிறது. தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஹேஷ்டேக் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

டிவிட்டருக்கு வளர்ச்சி வரைபடத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சமூக ஊடகங்களில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் டிவிட்டர் இந்தி , தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஹேஷ்டேக் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இதனை கொண்டு இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வென்ற பிறகு ஜெய்ஹிந்த் எனும் ஹேஷ்டேக் இந்தி மொழியில் முன்னிலை பெற்றது. இப்போது #தமிழ்வாழ்க எனும் ஹேஷ்டேக் டிவிட்டரில் முன்னிலை பெற்றுள்ளது.

ஏற்கனவே தமிழில் குறும்பதிவு செய்பவர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்நிலையில் தமிழ் பற்றும் நேசமும் கொண்டவர்கள் தங்கள் குறும்பதிவுகளால் டிவிட்டரில் தமிழ் கொடியை உயர பறக்க விட்டுள்ளனர். #தமிழ்வாழ்க எனும் ஹேஷ்டேகுடன் தொடர்ந்து குறும்பதிவுகள் அலையென திரள்கின்றன.

இந்த குறும்பதிவுகள் தமிழ் பெருமையையும், தமிழ் மீதான பற்றையும் எண்ணற்ற விதங்களில் வெளிப்படுத்துகின்றன.

தமிச் கொடி பறக்கும் சில குறும்பதிவுகள் :

* நம் குழந்தைகளுக்கு தமிழை எப்படியாவது பிறமொழி கலப்பின்றி பேச எழுத சொல்லித்தந்துட்டா அதே நம் மொழிக்கு நாம் செய்யும் தொண்டு #தமிழ்வாழ்க; @mpgiri

@nkprabu தமிழ் உலகின் பழமையான வாழும் மொழி என்று குறிப்பிட்டுள்ளதுடன் தமிழ் மொழி தொடர்பான வரைபட சித்திரத்தையும் பகிர்ந்துள்ளார். :

* @MissLoochu (அனாமிகா) மொழியறியா ஊரில் "நீங்க தமிழா" என்று கேட்க ஓர் ஜீவன் கிடைக்கும் நேரம் தமிழ் இனிது இனிது #தமிழ்வாழ்க, என குறிப்பிட்டுள்ளார்.

* @Sricalifornia தில்லையாடி டி.சுப்பிரமணிய ஆச்சாரிக்கு மகாத்மா காந்தி எழுதிய தமிழ் கடிதம் எனும் தகவலுடன் அந்த கடித்ததை பகிர்ந்துள்ளார்.

* @priya1subramani தமிழ்ல எழுதறவங்க ஸ்கூல் பசங்க தான். டிவிட்டரில் ஸ்கூல் பசங்க மாதிரி எங்களையும் எழுத வைத்து மகிழ்வித்த டிவிட்டர் வாழ்க #தமிழ்வாழ்க, என மகிழ்ந்துள்ளார்.

* @karunaiimalar தமிழில் பேசுபவனை சாதாரணமாகவும் ஆங்கிலத்தில் பேசுபவனை மரியாதையாகவும் பார்ப்பதை நிறுத்திவிட்டு பெருமையுடன் சொல்வோம் #தமிழ்வாழ்க என்று சொல்வோம் என கூறியுள்ளார்.

* @JAnbazhagan கல் தோன்றா மண் தோன்றா காலத்து முன் இருந்த மூத்த மொழி தமிழ் மொழி, அத் தமிழ் செம் மொழியானது .தமிழ் வாழ்க ! செம்மொழி வாழ்க ! #தமிழ்வாழ்க என குறிப்பிட்டுள்ளார்.

* @sindhutalks விளக்கம் தேவையில்லை #தமிழ்வாழ்க என உற்சாகம் தெரிவித்துள்ளார்.

* @Premgiamaren டிவிட்டரில் இந்திய அளவில் #தமிழ்வாழ்க முதலிடம் என குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த போக்கு குறித்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

பலர், தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் ஆலையம் உள்ளிட்ட தமிழர்களின் சாதனையை சுட்டிக்காட்டி தமிழ்வாழ்க என பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து தமிழ் ஆர்வலர்கள் தமிழ் மீதான பற்றையும், நேசத்தையும் டிவிட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ் அலையில் திளைக்க: #தமிழ்வாழ்க

- சைபர்சிம்மன்


புறநகர் சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தேன். வீட்டில் கூலிங் கிளாசை மறந்துவைத...

Posted: 17 Feb 2015 09:32 PM PST

புறநகர் சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தேன். வீட்டில் கூலிங் கிளாசை மறந்துவைத்து விட்டதால் கண்களில் தூசு படக்கூடாது என தற்காலிக பயன்பாட்டுக்கு ஒரு கண்ணாடி வாங்க போனேன்.அது சாலையோரத்தில் உள்ள ஒரு கடை.

உள்ளே இரண்டு சிறுவர்கள்,ஒருவனுக்கு 12 வயது இருக்கும், இன்னொருவன் 10 வயது."கடையில் பெரியவங்க யாருமில்லையா?" என்றேன்."அப்பா சாப்பிட போயிருக்காங்க" என்று கோரசாக பதில் வந்தது.என்னிடம் ஒரு கண்ணாடியை விற்று திறமையை தந்தையிடம் நிரூபிக்க முனைப்பாக இருந்தனர்.

நான் கேட்காமலேயே "டேய் அதை எடுடா,டேய் இதை எடுடா" என்று அவர்களுக்குள் பேசி அனைத்து கண்ணாடிகளையும் காட்டினர்.நான் கடைசியாக ஒன்றை தேர்ந்தெடுத்து விலை கேட்டேன்."120 ரூபாய்" என்று உடனே பதில் வந்தது.அந்த கண்ணாடி 100 ரூபாய் தான்.

நான் விலையை மீண்டும் உறுதிபடுத்தினேன்."120 ரூபாய் தான்" என்று கோரசாக பதில் வந்தது.கறாரா இருக்காங்கலாமாம்.சரி ஒரு பீர் பாட்டிலை 150 சொன்னாலும் வாங்கி குடிக்கிறோம், சின்ன பசங்க முதல் வியாபாரம் பேரம் பேசாமல் வாங்கினால் அவர்கள் மனது சந்தோசப்படும் என்று சிரித்துக்கொண்டே 120 ரூபாய் கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

அவர்களுக்குள் எதோ பேசி "அண்ணா" என்று அழைத்தனர். திரும்பி பார்த்தேன்."கண்ணாடி 100 ரூபாய் தான்,அப்பா தான் 120 சொல்லி 100 ரூபாய்க்கு விற்க சொன்னார்" என்று சொல்லி 20 ரூபாயை அப்பாவி தனமாக திரும்ப கொடுத்தனர்.அது வெகுளித்தனமாக இருந்தாலும் இந்த நேர்மை அவர்களை வியாபாரத்தில் இன்னும் உயரத்திற்கு அழைத்து செல்லும்.

@பூபதி

விஜய் தொலைக்காட்சியின் தமிழ் வர்ணனையை சிலர் சரியில்லை என்று சுட்டிக்காட்டியிருந்...

Posted: 17 Feb 2015 09:14 PM PST

விஜய் தொலைக்காட்சியின் தமிழ் வர்ணனையை சிலர் சரியில்லை என்று சுட்டிக்காட்டியிருந்தனர். கிண்டல் அடிப்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும் சிலர் நேரான அக்கறையுடன் வர்ணனை சரியில்லை என்று சுட்டிக்காட்டி இருந்தனர்.

வர்ணனையாளர்களுக்கு ஆதரவாக பலர் களத்தில் குதித்தனர். மகிழ்ச்சி.

நமது ஊரு Reality show க்களில் குழந்தைகள் அவ்வப்போது சம்ஸ்கிருத ச்லோககங்களை அடங்கிய பாடல்கள், கீர்த்தனைகள் பாடுவதுண்டு. அதில் தவறு ஏற்படும்பட்சத்தில் உடனே அதில் பாண்டித்தியம் பெற்ற ஒரு நடுவர் உச்சரிப்பை சீர்படுத்துவார். அந்த "Nuanaces and Phonetics" சரியா வருனும்டா கொழந்தே என்று கொஞ்சு தமிழில் செம்மைபடுத்துவார். அரங்கு நிறைந்த கரோகோஷம் வெளிப்படும்.

தங்களுக்குத் நன்றாகத் தெரிந்த / பிடித்த /புரிந்த மொழியை மிகச்சிறிய அளவில் பாழ் உச்சரிப்பில் பாடும்போதுகூட அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதற்கான காரணம் அது தெய்வீகமொழி என்றொரு ஆழ்ந்த நம்பிக்கை.

ஒருமணி நேரம் மட்டும் ஓடப்போகும் ஒரு நிகழ்ச்சியில், 5 நிமிடத்தில் மூன்று நான்கு இடங்களில் ஏற்படும் தவறுகளைப் பற்றி மணிக்கணக்கில் பாடம் எடுப்பது சரியென்றால்,
நாள் முழுவதும் மொழியை "வச்சி செய்யும் " ஆட்களிடம் நீங்கள் பேசுவது /உச்சரிப்பது தவறு என்று சொல்வது மட்டும் எப்படி தவறாகும் ?

ஒருவர் சொல்லியிருந்தார் " நெல்லை, மதுரை, கோவை பேச்சுவழக்கு போல் இதையும் ஏற்றுக்கொள்வோம் " என்று. நல்லது.

சங்கரா டிவி, ஜெயா டிவி , குடமுழுக்கு ( கும்பாபிஷேகம் ), திருப்பதி நிகழ்ச்சிகள், ஆண்டாள் - ரெங்கமன்னர் திருமணம், போன்ற ஆன்மீக நிகழ்வுகளை நேரடியாக ஒலிபரப்பு செய்யும் இன்னப்பிற தொலைக்காட்சி நிறுவனம் என எவற்றை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.

"பட்டர் வந்துகினி கீறார். சோக்கா தூக்க்னாறுபா கொட்த்த , அப்டியே கபால்னு கவுத்தார் பாரு.தொர் தொர் தொர்னு தண்ணி ஊத்துது கும்பத்து மேல. "
என எங்க ஊரு மக்களின் வர்ணனை வரும்போது,

" அங்க போட்றா. அவுட் ஃபீல்ட் ல பால் ஓடிண்டுருக்கு " என்பதையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

அவர்களுக்கு கோயில் திருவிழா என்றால், மற்றவர்களுக்கு கிரிக்கெட் திருவிழா. ஆன்மீக நிகழ்வுகளில் "ஓம் " என்ற BGM கிளப்பி " அடிகினு வரார் அம்பலவாணர் டோய் " என்று ஜனரஞ்சகமாக வர்ணனையை அவர்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்போது நெல்லை, மதுரை, கோவை பேச்சுவழக்கு போல் "பால் போட்டுண்டு இருக்கா". வையும் ஏற்றுக்கொள்வோம் .

If the prior is considered a taboo, then the latter can very well be coined as taboo too.

கிரிக்கெட் வருணனைக்கு பிராமணர்களின் உடைந்த தமிழ் தவறில்லை என்று வக்காலத்து வாங்கும் ஆட்கள் கோயில் நிகழ்வுகளுக்கும் உடைந்த தமிழ் பேசும் வருணனைக்கு வக்காலத்து வாங்கலாமே?.சென்னை 600028 படவா கோபி மிகவும் ஜனரஞ்சகமா கொடுக்கும் வர்ணனை எப்படி வரவேற்புபெற்றது ? அவரை சங்கரா டிவி நிகழ்வுகளுக்கு அனுப்பினால் அவர்கள் கம்மென்று இருப்ப்பார்களா ?

அவர்கள் எல்லாம் யாதை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் நக்கலடிக்கும்/விமர்சிக்கும் மக்களும் மனமுவந்து " பால் போடர்ர்து, ஒடர்ர்து " பதங்களை வரவேற்ப்பார்கள். அதுவரை விமர்சனம் தவறென்று சொல்லி கிச்சுக்கிச்சு மூட்டாதீர்கள்.

பிற்சேர்க்கை :
தெரிந்தோ தெரியாமலோ, பிராமணர்களின் பேச்சுவழக்கு என்பது ஜாதிய கண்ணோட்டத்தில் தான் பார்க்கப்படுகிறது.காரணம் சாதி வைத்து பாகுபாடு காட்டும்/பேசும்/நிறுவும் பிராமணர்களின் பேச்சு வழக்காக அது முன்பு இருந்திருக்கிறது. இன்னமும் சில இடங்களில் இருக்கிறது. அதன்பால் வரும் ஒவ்வாமை , அவ்வழக்கை பேசுபவர்கள் கீழானவர் என்று கற்பிதத்தில் இல்லை. அவ்வழக்கை பேசும் ஆட்கள் பிறரை கீழானவர்களாக நினைக்கிறார்களோ என்ற எண்ணம் . Having said this, I completely agree that each sect have their own way of Phonetics. ஆனால் கோயில் , கடவுள் என வரும்போது ஏனைய பேச்சுவழக்கை கீழ்மை என்று அவர்கள் எண்ணும்போது , தங்கள் பேச்சு வழக்கு தான் உயர்வானது என்று அவர்கள் எண்ணுகிறார்களோ என்ற சந்தேகம் வரவே செய்யும்.சிதம்பரத்தில் தமிழில் பாட முற்பட்டபோது ஏற்பட்ட கலாட்டாக்கள் உங்களுக்குத் தெரியும்தானே. அப்படி தங்கள் பேச்சுவழக்கை உயர்வாக எண்ணிக்கொள்ளும் ஆட்கள் பொதுவெளியில் அதைப் பயன்படுத்தும்போது "இங்கேயும் இதை பேசவேண்டுமா ?" என்று ஐயம் வருவது இயல்பு. ஒருவேளை , யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம், எந்த மொழி, எத்தகைய பேச்சுவழக்கு உள்ளவரும் அர்ச்சகராகலாம் என்று பிராமணர்கள் மனமுவந்து ஏற்றுக்கொள்ளும்போது இது மறைய வாய்ப்புண்டு. அதுவரை, எனது பேச்சுவழக்கை, மொழியைக் கொச்சையாகப் பார்க்கும் பிரிவினரின் பேச்சுவழக்கை மக்கள் ஏற்றுக்கொள்ள தயங்கியே தீருவர்.

எங்க அடிச்சா எங்க வலிக்கும் concept எல்லாம் இல்ல .ஆனா கிரிக்கெட், கோயில் எல்லாமே பொது தானே. சமநிலை ஏற்படாதவரை உனக்கு ஆதிக்கம் இருக்கும் இடத்தில் உன்னுடைய ஜித்தை நீ காட்டு, எனக்கு முடிஞ்ச எடத்துல நான் காட்டிக்கிக்றேன் என்ற மனப்போக்கு தொடரவே செய்யும்.

நாயக்கர் காலத்தில் வந்து குடியேறிய சவுராஷ்ட்ர மக்களை அந்நிய மக்களாக யாரும் பார்ப்பதில்லை. அவர்கள் அட்சர சுத்தமாக தமிழ் பேசுவார்கள்.அன்பானவர்கள். மதுரை சென்றால் சவுராஷ்ட்ர மக்களும், தமிழர்களும் இன்னப்பிற மக்களும் ஒத்திசைவுடன் சேர்ந்து வாழ்வதைப் பார்க்கலாம். யாரும் அவர்களை வந்தேறி என்றோ, அந்நியர்கள் என்றோ சொல்வதில்லை ( சீமான் மாதிரியான கூறுகெட்ட குக்கர் களைத் தவிர ) . அவர்கள் தமிழை எளிதாகக் கற்றுக்கொண்டு, ஏற்றுக்கொண்டு தமிழர்களாக தம்மை உணரவும் செய்கிறார்கள். முக்கியமாக அவர்கள் தமிழை நீச பாஷை என்று இயம்புவதில்லை. பிராமணர்கள் இந்த சமநிலையை விரும்புகிறார்களா ?. ஒருசிலரை விடுத்து பெரும்பான்மையான ஆட்கள் அதை விரும்புவது இல்லை.சங்கர மடத்தில் பிராமணரல்லாத தலைவர்கள் வரும்போது தரையில் உட்காரவைக்கப்படுகிறார்கள். அத்தகைய சங்கர மடத்தைக் கொண்டாடும் யாரையும் ஜாதியை தூக்கிப் பிடிப்பவர்கலாகத்தான் ஏனையோர் பார்ப்பார்கள்.ஒருவேளை அங்கெல்லாம் இந்த ஏற்றத்தாழ்வு களையும்பட்சத்தில் இந்த பிராமண பேச்சுவழக்கு எல்லாம் ஒரு விஷயமாகவே பார்க்கப்படாது. மொழி என்பது மொழியாக மட்டுமே இருந்துவிட்டால் பரவாயில்லையே, மொழி என்பது பல வேளைகளில் ஆயுதமாகவும், அதிகாரத்தின் கூர்பற்களின் கருவியாகவும் இருக்கின்றவரையில் மொழி அரசியல் தவிர்க்க இயலாததே.

@உமாமகேஷ்வரன்

இந்தியர்களின் பல மணி நேர உழைப்பையும்,பணத்தையும் பிடுங்கிக்கொள்ளும் BCCI ( Board...

Posted: 17 Feb 2015 09:07 PM PST

இந்தியர்களின் பல மணி நேர உழைப்பையும்,பணத்தையும் பிடுங்கிக்கொள்ளும் BCCI ( Board of Control for Cricket in India) என்ற தனியார் அமைப்பு அரசாங்கத்திற்கு வருமான வரியை கட்டாமல் வரி ஏய்ப்பு செய்து வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியுமா?

2003-2006 வரை BCCI இந்திய அரசாங்கத்திற்கு ₹ 2300 கோடியை வருமான வரியாக கட்டியிருக்க வேண்டும்.ஆனால் கட்டவில்லை.

BCCI தலைவராக இருந்த சீனிவாசன் நீதி மன்றத்திற்கு போய் BCCI ஒரு அறக்கட்டளை நிறுவனம் (Trust) அதனால் வருமான வரி செலுத்த முடியாது என தடை ஆனை பெற்று விட்டார். The assessee (BCCI) used to claim exemption under Section 11 of the I-T Act 1961, available for charitable organisations. The department has withdrawn registration under Section 12 of the IT Act 1961 and rejected assessee's claim for exemption under Section 11 of the I-T Act 1961.

Trust என்பது Non profitable organization. ஆனால் BCCI Non Profitable organizationனா?

2008-09ல் BCCIன் வருமானம் ₹608 கோடி
அதற்கு அவர்கள் கட்டியிருக்க வேண்டிய வருமான வரி ₹257 கோடி (கட்டப்படவில்லை)

2009-2010ல் BCCIன் வருமானம் -₹964கோடி
அதற்கு அவர்கள் கட்டியிருக்க வேண்டிய வரி ₹413 கோடி
ஆனால் BCCI கட்டியதோ வெறும் ₹41.91 கோடி மட்டுமே

உலகின் மிக பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பான BCCI நாட்டுக்கு செலுத்த வேண்டிய பல ஆயிரம் கோடி வருமான வரியை செலுத்தாமல் ஏமாற்றிக்கொண்டே இருக்கும்.
(உபயம் சட்டத்திலுள்ள ஓட்டை - Trust Act)

இது எதையுமே தெரியாமல் இந்த தனியார் அமைப்பை தன் தேசத்தின் அங்கீகாரமாக ஏமாளி ரசிகன் நினைத்துக்கொண்டிருப்பான்.

@நம்பிக்கை ராஜ்


0 comments:

Post a Comment