தமிழ் மொழிக்கு கிடைத்த
மாபெரும்
அங்கீகாரத்தை நமது வெற்றியாகுவோம் !!
நேற்று முதன் முறையாக இந்திய
ட்விட்டர் வலைத்தளத்தில்
#தமிழ்வாழ்க என்ற
குறியீடு இந்திய அளவில் முதல்
நிலை பெற்றது. ட்விட்டர்
வலைத்தளம் ஆங்கிலம் அல்லாத
பிற மொழிக்களுக்கும்
இடமளிக்க தொடங்கிய
நிலையில் தமிழ் ஆர்வலர்களின்
அயராத முயற்சியால் தமிழ்
மொழி முதல்
இடத்தை வெகு விரைவாக
பெற்றுள்ளது. 'ஜெய்கிந்த்',
உலகக் கோப்பை கிரிக்கெட்
போன்ற
சொற்களை பின்னுக்கு தள்ளியது 'தமிழ்வாழ்க'
என்ற முழக்கம். இந்தக்
குறியீட்டை பார்த்த பிற
இந்தியர்கள் தமிழ் மொழியின்
பெருமையை உணரத்
தொடங்கியுள்ளனர். தமிழ்
மொழி இந்தியாவின்
தொன்மை மொழி என்ற
செய்தியும்
அவர்களை சென்று சேர்ந்துள்ளது.
இதுவே இந்திய அரசின்
கவனத்தையும் நாம் ஈர்க்க
வேண்டிய சரியான தருணமாகும்.
இந்தியாவில்
இந்திக்கு மட்டுமே ஆட்சி மொழி அதிகாரம்
கொடுத்து தமிழ்
மொழியை இந்திய
அரசு புறக்கணித்து வருகிறது.
இந்த நிலையை மாற்ற நாம்
அனைவரும் சமூக
வலைத்தளங்களில் இன்னும்
அதிகமாக குரல் எழுப்ப
வேண்டும். தமிழ் மொழியை 2015
ஆம் ஆண்டில்
ஆட்சி மொழியாக்குவோம்
என்று உறுதியேற்று நாம்
பணிசெய்ய வேண்டும்.
அதற்கு நாம் இந்திய
அரசுக்கு அழுத்தம் கொடுக்க
வேண்டும்.
நாம் அனைவரும்
நமது பதிவுகளில் #தமிழ்வாழ்க
என்ற
குறியீட்டை தொடர்ந்து பயன்படுத்தி தமிழ்
மொழியை ஆட்சி மொழியாக்கும்
கோரிக்கையை வலுப்படுத்துவோம
். ஒவ்வொரு முறையும்
இக்குறியீட்டை நாம்
பயன்படுத்தும்
போது #தமிழ்வாழ்க என்ற
குறியீடு இந்திய அளவில்
முன்னுக்கு நிற்கும்.
அத்தோடு நாம்
தமிழை ஆட்சி மொழியாக்குக
என்ற முழக்கத்தையும்
முன்வைக்க வேண்டும்.
இது விவாதப் பொருளாக மாறும்
நிலையில் தான் இந்திய அரசின்
கவனத்தை அது ஈர்க்கும்.
நமது இனம் வாழ வேண்டும்
என்றால் நமது மொழி வாழ
வேண்டும். நமது மொழி வாழ
வேண்டும் என்றால் தமிழ்
ஆட்சி மொழியாக வேண்டும்.
இதை கருத்தில்
கொண்டு வரும்காலத்தில்
விழிப்புடன் செயல்படுவோம்.
வென்றெடுப்போம் தமிழ்
மொழியுரிமையை. #தமிழ்வாழ்க
- இராச்குமார் பழனிசாமி & கிரிஷ்
சாம

0 comments:
Post a Comment