Relax Please: FB page daily Posts |
- *ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமு...
- கண்தானம் செய்வது எப்படி? 1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும். 2. மின்வி...
- ப்ரு விளம்பரத்தில் கார்த்தி காஜல் அகர்வாலுக்கு காபி போட்டு கொடுத்து ,"உன் ப்ரெண்...
- மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
- அருமையான ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- உலகின் மிகப்பெரிய நூலகங்களை பற்றி தெரிந்துகொள்வோம்:- * லைப்ரரி ஆப் காங்கிரஸ்...
- சொத்தைப் பிரித்துக்கொள்வதில் அந்த சகோதரர் களிடம் விசித்திரமான சண்டை வந்தது. தம்...
- ;-) Relaxplzz
- #தமிழ்வாழ்க
- தம்பி :- ரேஷனுக்கும் பேஷனுக்கும் என்ன ஒற்றுமை? அண்ணன் :- தெரியலியே * * * * * * த...
- நம் சிறு வயது நினைவுகளை தூண்டும் இதை நினைவிருந்தால் லைக் பண்ணுங்க.. (y)
- :) Relaxplzz
- :P Relaxplzz
- ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர். ஊரில் ஏதாவது காணாமல் போன...
- :) Relaxplzz
- குற்றம் சொல்ல ஆயிரம் காரணம் இருக்கலாம், மன்னிக்கவும் மறக்கவும் ஒரே காரணம்தான்,...
- “மேடம்.. நாங்க சோப்பு கம்பெனியிலிருந்து வர்றோம். நீங்க உங்க துணிகளைத் தோய்க்க எத...
- இந்த சாலையில் வண்டி ஓட்ட விருப்பமுள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- :) Relaxplzz
- "டேய் மாச்சான் , நம்ம கவுருமென்ட்டு சரி இல்லைடா " "ஏன்டா மச்சி? " "இல்லை மச்சா...
- அஜினமோட்டோ உடம்புக்கு நல்லதா? சாம்பார், மீன் குழம்பு, ஃபிரைடு ரைஸ் என்று எல்...
- ஊனம்என்பது வார்த்தையில் தான் வாழ்கையில்அல்ல...
- “பொண்ணைப் பிடிச்சிருந்தாதான் நாங்க கையையே நனைப்போம்” “”நாங்களும் அப்படித்தான்....
- :P Relaxplzz
- எது #காதல் காதலை பற்றி என்னயா தெரியும் உங்களுக்கு, காதல்ன என்ன தெரியுமா, , கடல...
- (y) Relaxplzz
Posted: 20 Feb 2015 09:10 AM PST *ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான *செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...! *கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும *கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *10th 12th ரிசல்ட் பேப்பர் ல பார்த்த கடைசி தலாமுறை நாம தான் *கதவு வச்ச டிவி ய பாத்த கடைசி தலைமுற நாம தான் *ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான். *சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான். *போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான் *ஜவ்வுமிட்டாயில் வாட்ச் கட்டினது *நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது, கோனார் தமிழ் உரை,வெற்றி அறிவியல் உரை இதெல்லாம் போச்சு. *நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி cf c பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்... *5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான், *மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை இதையெல்லாம் படிக்கும்போது சிறுதுளி கண்ணில். எட்டி பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான். நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...! :) :) Relaxplzz |
Posted: 20 Feb 2015 09:00 AM PST கண்தானம் செய்வது எப்படி? 1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும். 2. மின்விசிறியை இயக்கக்கூடாது. 3. இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி படுக்க வைக்க வேண்டும். 4. அருகில் இருக்கும் கண் வங்கிக்கு உடனடியாக தொடர்பு கொண்டு விரைவாகவும், எளிதாகவும் வந்து சேரும் வகையில் தகவல் தெரிவிக்க வேண்டும். 5. இறந்த நபரின் மகன்/மகள் ஒப்புதல் மற்றும் இரண்டு பேரின் சாட்சி இருந்தால் மட்டும் கண்தானம் செய்ய முடியும். யார் கண்தானம் செய்ய முடியாது? நாய் கடியால் இறந்தவர்கள், டெட்டானஸ், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, புற்றுநோய், மூளைக்கட்டி, உணவு விஷத்தினால் இறந்தவர்களிடம் இருந்து கண்களை தானமாக பெற முடியாது. கண்தானம் குறித்து மேலும் தகவல்கள்: 1. ஒருவர் இறந்த 4&6 மணி நேரத்துக்குள் கண்தானம் செய்ய வேண்டும். 2. அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்கலாம். 3. கண் வங்கிக்குழு இறந்த நபரின் விழிகளை வீட்டிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ வந்து பெற்றுக்கொள்ளும். 4. கண்தானம் செய்ய 20&30 நிமிடங்கள் போதும். இதனால், இறுதிச்சடங்கு எதுவும் பாதிக்காது. 5. இறந்த நபரிடம் இருந்து சிறிதளவு ரத்தம் சேகரிக்கப்படும். இதனால், அவருக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை அறியமுடியும். 6. கண் புரைக்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள், குளுக்கோமா மற்றும் மூக்குக் கண்ணாடி அணிந்தவர்கள் கண்தானம் செய்யலாம். 7. ஒரு நபரின் கண்தானம் இருநபர்களுக்கு கண் ஒளியை தரும். >>சுபா<< Relaxplzz ![]() |
Posted: 20 Feb 2015 08:50 AM PST ப்ரு விளம்பரத்தில் கார்த்தி காஜல் அகர்வாலுக்கு காபி போட்டு கொடுத்து ,"உன் ப்ரெண்ட் ஹஸ்பண்ட் இவ்ளோ நல்லா காபி போடுவாரா?"ன்னு கேக்குறாரு. அவங்க "நீ தான் பெஸ்ட்"ன்னு சொல்றாங்க. இந்த இடத்துல "உன் ப்ரெண்ட் புருஷன் காபி போட்டு கொடுத்து நீ எப்படீ குடிச்ச?"ன்னு கேட்டு ஒரு அறை உட்ருக்கணும் கார்த்தி சார்.. -குடும்பத்தில் குண்டு வைப்போர் சங்கம் ;-) ;-) - பூபதி |
Posted: 20 Feb 2015 08:45 AM PST |
Posted: 20 Feb 2015 08:35 AM PST |
Posted: 20 Feb 2015 08:30 AM PST |
Posted: 20 Feb 2015 08:15 AM PST உலகின் மிகப்பெரிய நூலகங்களை பற்றி தெரிந்துகொள்வோம்:- * லைப்ரரி ஆப் காங்கிரஸ் வாஷிங்டனில் (அமெரிக்கா) உள்ள இந்தூலம் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய நூலகமாகவும் செயல்படுகிறது. அமெரிக்க காங்கிரசால் 1800ம் ஆண்டில் நிறுவப்பட்டது. அமெரிக்க உள்நாட்டு போருக்குப் பின்னர் இந்தூலகம் அளவிலும் முக்கியத்துவத்திலும் விரைவாக வளர்ச்சியடைந்தது. தற்போது ஏறத்தாழ 3,21,24,001 புத்தங்கள் இடம் பெற்றுள்ளன. உலகிலேயே மிகப்பெரிய நூலகமாக கருதப்படுகிறது. * லைப்ரபி ஆப் ரஷ்யன் அகாடமி ஆப் சயின்ஸ் ரஷ்யாவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் என்றுமிடத்தில் இந்நூலகம் அமைந்துள்ளது. 1714ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான இந்தூலகம் உலகின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும். இதில் 2,05,00,000 நூல்கள் இடம் பெற்றுள்ளன. * ரஷ்யன் ஸ்டேட் நூலகம் ரஷ்யாவி, மாஸ்கோவில் அமைந்துள்ளது இந்த நூலகம். 1862ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதில் 1,70,00,000 நூல்கள் இடம் பெற்றுள்ளன. 247 மொழிகளில் உள்ள புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல இசை மற்றும் பல வசதிகளைக் கொண்டுள்ளது. * பிரிட்டிஷ் நூலகம் லண்டனின் (பிரிட்டன்) உள்ள இந்த நூலகம் 1753ம் ஆண்டு கட்டப்பட்டது. மிகப்பெரிய நுலகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு ஏறத்தாழ 2,90,00,000 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. * ரஷ்ய தேசிய நூலகம் ரஷ்யாவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் என்னுமிடத்தில் உள்ள இந்த நூலகம் 1795ல் கட்டப்பட்டது. உலகின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான இதில் 1,47,99,267 நூல்கள் இடம் பெற்றுள்ளன. * வெர்நாட்ஸ்கி தேசிய அறிவியல் நூலகம் உக்ரைனின் தலைநகரமான கீவ்-ல் அமைந்துள்ள இந்நூலகம் 1919ல் கட்டப்பட்டது. 1,50,00,000 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. அறிவியல் சம்மந்தப்பட்ட அதிகமான தகவல்களை இங்கு அறிந்து கொள்ளலாம். இது மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும். * பூஸ்டன் பொது நூலகம் அமெரிக்காவில் உள்ள பூஸ்டர் நகரில் அமைந்துள்ளதால் இதற்கு பூஸ்டன் பொது நூலகம் என்று பெயர் வந்தது. 1895ல் கட்டப்பட்ட இந்நூலகத்தில் 1,57,60,879 நூல்கள் இடம் பெற்றுள்ளன. * கனடா தேசிய நூலகம் கனடாவில் உள்ள ஒட்டவா என்ற இடத்தில் இந்நூலகம் அமைந்துள்ளது. 1953-ல் கட்டப்பட்ட இந்நூலகம் உலகின் மிகப்பெரிய நூலகங்களின் ஒன்றாகும். இதில் 1,95,00,000 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. * தேசிய நூலகம் ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் பகுதியில் அமைந்துள்ள இந்நூலகம் 1990ல் கட்டப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும். இதில் 2,22,00,000 நூல்கள் இடம் பெற்றுள்ளன. * ஹார்வார்டு பல்கலைக்கழக நூலகம் அமெரிக்காவில் உள்ள கேம்பிரிட்ஜில் அமைந்துள்ள இந்த நூலகம் 1638-ல் கட்டப்பட்டுள்ளது. பழைய கட்டிட அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. 16 மில்லியன் பதிப்புகள் இடம் பெற்றுள்ளன. 1,58,26,570 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இது உலகின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும். Relaxplzz ![]() தகவல் துணுக்குகள் |
Posted: 20 Feb 2015 08:10 AM PST சொத்தைப் பிரித்துக்கொள்வதில் அந்த சகோதரர் களிடம் விசித்திரமான சண்டை வந்தது. தம்பிக்குத் தான் அதிக சொத்து சேரவேண்டுமென அண்ணன் வாதாடினார். அண்ணனுக்குத்தான் அதிக சொத்து தர வேண்டுமென்று தம்பி வாதாடினார். தம்பி சொன்ன காரணம், "இளமையில் நாங்கள் வறுமையில் இருந்தபோது ஆளுக்கு நான்கு ரொட்டித்துண்டுகள் கிடைக்கும். அண்ணன் அதிலிருந்து ஒன்றை எனக்குத் தருவார்" என்று. அண்ணன் சொன்னார், "உண்மைதான். ஆனால் தம்பி, தனக்கு வயிற்றுவலி என்று பொய்சொல்லி அந்தத் துண்டை திரும்பத் தருவான்" என்று. பரஸ்பர அன்பே சகோதரத்துவத்தின் நிலையான சொத்து. :) :) Relaxplzz |
Posted: 20 Feb 2015 07:55 AM PST |
#தமிழ்வாழ்க Posted: 20 Feb 2015 07:50 AM PST |
Posted: 20 Feb 2015 07:45 AM PST தம்பி :- ரேஷனுக்கும் பேஷனுக்கும் என்ன ஒற்றுமை? அண்ணன் :- தெரியலியே * * * * * * தம்பி :- ரேஷனில் எடை குறையும் .. பேஷனில் உடை குறையும் ... ;-) ;-) |
Posted: 20 Feb 2015 07:40 AM PST |
Posted: 20 Feb 2015 07:30 AM PST |
Posted: 20 Feb 2015 07:20 AM PST |
Posted: 20 Feb 2015 07:19 AM PST |
Posted: 20 Feb 2015 07:10 AM PST ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர். ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில் விசாரிப்பார்கள். பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை. ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார்.... பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர். அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார். ஒரு பையன் அனுப்பப்பட்டான். துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார். பின்னர் கேட்டார், ''தம்பி,உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும்.கடவுள் எங்கே? சொல், கடவுள் எங்கே இருக்கிறார்.?'' அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான். அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான். அவன் சொன்னான், ''நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம். இப்ப கடவுளைக் காணோமாம். அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான். ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள். இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது.'' :P :P Relaxplzz |
Posted: 20 Feb 2015 07:08 AM PST |
Posted: 20 Feb 2015 06:50 AM PST |
Posted: 20 Feb 2015 06:45 AM PST "மேடம்.. நாங்க சோப்பு கம்பெனியிலிருந்து வர்றோம். நீங்க உங்க துணிகளைத் தோய்க்க எதைப் பயன்படுத்துறீங்க?" ""என் கணவரை" :O :O |
Posted: 20 Feb 2015 06:40 AM PST |
Posted: 20 Feb 2015 06:30 AM PST |
Posted: 20 Feb 2015 06:23 AM PST |
Posted: 20 Feb 2015 06:10 AM PST "டேய் மாச்சான் , நம்ம கவுருமென்ட்டு சரி இல்லைடா " "ஏன்டா மச்சி? " "இல்லை மச்சான் நேத்து ஊருக்கு போயிட்டு வரும்போது வழியில பார்த்தேன் ஒரு இடத்துல விபத்துப்பகுதி , மெதுவாக செல்லவும்ன்னு போர்டு வச்சு இருந்தானுக " "சரிடா நல்ல விஷயம் தானே " "ங்கொய்யாலே அதான் விபத்துப் பகுதின்னு தெரியுதுல்ல , அப்புறம் எதுக்கு அங்க போயி ஏன் ரோடு போடனும் , அப்புறம் போர்டு வககனும்? " "@#@#@#%%%.........." :O :O Relaxplzz |
Posted: 20 Feb 2015 06:00 AM PST அஜினமோட்டோ உடம்புக்கு நல்லதா? சாம்பார், மீன் குழம்பு, ஃபிரைடு ரைஸ் என்று எல்லா உணவுகளின் ருசியையும், வாசனையையும் அதிகரிக்கப் பயன்படும் ஒரு டேஸ்ட் மேக்கர் அஜினமோட்டோ.. இன்று ஹோட்டல் உணவு மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் தன் ராஜ்ஜியத்தை விரித்திருக்கிறது அஜினமோட்டோ. தொடர்ந்து அஜினமோட்டோ எடுத்துக்கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இந்த அஜினமோட்டோவால் உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்னை? வியாபார ரீதியான அஜினமோட்டோவில் என்னவெல்லாம் இருக்கிறது? இதில் 78% குளுடாமிக் அமிலமும் 22% சோடியமும் உள்ளது. இந்த குளுடோமேட் என்பது பால், பால் பொருள்கள், கறி, மீன் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்ற ஒரு அமினோ அமிலம். நமது உடலில் கூட இந்த அமினோ அமிலம் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. அதென்ன அஜினமோட்டோ? உணவில் வாசனையை அதிகப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் ஒருவித வேதிப்பொருள் தான் இந்த அஜினமோட்டோ (Ajinomoto). உங்களுக்கொன்று தெரியுமா? அந்தக் காலத்திலெல்லாம், சீனர்களும் ஜப்பானியர்களும் உணவில் வாசனையை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு வகையான கடல்பாசியை உபயோகித்தார்கள். இந்தக் கடல் பாசியில் தான் வாசனையை மேம்படுத்த உதவும் மோனோஸோடியம் குளுட்டோமேட் அதாவது M.S.G. என்ற வேதிப்பொருள் இருப்பது தெரியவந்தது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அஜினமோட்டோ(Ajinomoto) என்ற கம்பெனி இதை வியாபார ரீதியாக தயாரிக்க ஆரம்பித்தது. நாளடைவில் அஜினமோட்டோ என்ற பெயரே இந்த வேதிப்பொருளுக்கும் நிலைத்து விட்டது. இந்த குளுட்டோமேட்டை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். நமது மூளை வளர்ச்சிக்குத் தேவையான குளுட்டோதயான் மற்றும் காமா அமினோ புட்ரிக் அமிலம் போன்றவற்றைத் தயாரிக்க இது உதவுகிறது. அதே போல் இது, மூளை நரம்புகள் வேலை செய்யவும் ஓரளவு உதவுகிறது. அப்புறம் என்ன? அஜினமோட்டோவிலும் இந்த மோனோ சோடியம் குளுட்டோமேட் இருக்கிறது. அது உடலுக்கும் நல்லதுதானே என்கிறீர்களா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே... அதிக அளவில் இந்த எம்.எஸ்.ஜி. நம் உடலில் சேர்ந்தால் அது மூளையின் ஹைப்போ தலாமஸ் என்ற முக்கியமான ஒரு பகுதியைப் பாதித்து விடும்! MSG அதிகமானால் நம் உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் வரலாம்? நமது உணவுப் பழக்க வழக்கங்களின் கட்டுப்பாடு நமது மூளையில் உள்ள ஹைபோ தாலமஸ் என்ற பகுதியில் உள்ளது. MSGன் வாசனையால் ஹைபோதாலமஸ் தூண்டப்படுகிறது. இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது. இவை அதிகமாக உணவு சாப்பிடத் தூண்டுபவை. எனவே அதிக உணவால் முதலில் நம் எடைதான் கூடும்! மூளையில் சிரோடோனின் என்ற பொருளின் அளவு குறைந்து, தலைவலி, மனச்சோர்வு, டிப்ரஷன், உடல் சோர்வு, உணவுக்கு ஏங்குதல் போன்றவை ஏற்படுகிறது. MSG நமது உணவில் உள்ள துத்தநாகம் நம் உடலில் சேர்வதைக்குறைக்கிறது. தூக்க குறைபாடு ஏற்படுகிறது. தூக்கக் குறைவால்-மூளையில் டோபாமின் (Dopamine) அளவு குறைந்து, அதன் விளைவாக ஞாபக சக்தி குறைந்து, கவனக்குறைவும், திட்டமிட்டு செயல்படும் திறனும் குறைகிறது. அதிகமான குளுடாமிக் அமிலம் (Glutamic acid) உயிரின் முக்கிய அணுவான DNA (Deoxyribonucleic acid) என்ற மூலப் பொருளையே பாதிக்கிறது என்கிறார்கள். இது உடனடியாக நடப்பதில்லை. பாதிப்பின் அறிகுறிகளும் உடனே வெளிப்படுவதில்லை. மெது மெதுவாக தொடர் பாதிப்பு ஏற்படுகிறது. உடல் எடை அதிகரிப்பு, நடத்தை விபரீதங்கள், கவனக்குறைவு போன்றவை அதிகரிப்பதே இதன் சில அறிகுறிகள். சோதனைச் சாலை எலி போன்றவற்றை விட MSG ஏற்படுத்தும் தாக்கம் மனிதர்களுக்கு சுமார் 5-மடங்கு அதிகம்! அதிலும் கருவில் உள்ள சிசுக்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு மிக அதிகம். தாயின் ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் மூளையைத் தாக்கி மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது. தீவிரவாதச் செயல்கள், உணர்ச்சிகள் நிலையில்லாமை, கவனக் குறைவு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதன் பாதிப்பு வேறுபடுகிறது. பாதிக்கும் அளவு, நேரம் போன்றவையும் வேறுபடுகிறது. MSG கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்கள் முதல் 2-3 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் ஏற்படலாம். உடனே தெரியும் அறிகுறிகள் எனில், வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் போன்றவை நரம்பு செல்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அமெரிக்காவின் உணவு மருந்து கட்டுப்பாடு நிறுவனம் தினம் 3 கிராம் வரை MSG பாதுகாப்பானது என்று நிர்ணயித்துள்ளது. ஆனால் சிலருக்கு ஒரு கிராமுக்கு குறைவாக உணவில் சேர்த்தாலே நச்சு அறிகுறிகள் வெளிப்படுகின்றன. தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்து குழந்தைகள் ஆசையாக வாங்கி சாப்பிடும் ரெடிகுக் நூடுல்ஸில் மிகவும் அதிகமாக MSG உள்ளது. எனவே குழந்தைகள்தான் இதன் தாக்கத்திற்கு மறைமுகமாக ஆளாகிறார்கள். ஃபாஸ்ட் புட் (Fast Food) மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG உள்ளது. வாசனை மற்றும் ருசிக்காக அந்த உணவு சாப்பிடும் இன்றைய டீன் ஏஜ் பருவத்தினர் தங்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உணராமல் ஆடிப்பாடிக் கொண்டு உண்டு களித்துக் கொண்டிருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம். எந்தெந்த பொருட்களில் எம்.எஸ்.ஜி. அதிகமிருக்கிறது? பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் சோயா புரதத்தால் தயாரிக்கப்படும் பொருள்கள். (உதாரணத்திற்கு சோயா சாஸ்) கார்ன் மால்ட், ஈஸ்ட், பார்லி மால்ட். சூப் பவுடர்கள். நன்றி டாக்டர் கங்கா Relaxplzz ![]() "விழிப்புணர்வு" |
Posted: 20 Feb 2015 05:58 AM PST |
Posted: 20 Feb 2015 05:50 AM PST |
Posted: 20 Feb 2015 05:45 AM PST "பொண்ணைப் பிடிச்சிருந்தாதான் நாங்க கையையே நனைப்போம்" ""நாங்களும் அப்படித்தான். உங்களுக்குப் பொண்ணைப் பிடிச்சிருந்தாதான் குடிக்க தண்ணியே கொடுப்போம்" :P :P |
Posted: 20 Feb 2015 05:41 AM PST |
Posted: 20 Feb 2015 05:31 AM PST எது #காதல் காதலை பற்றி என்னயா தெரியும் உங்களுக்கு, காதல்ன என்ன தெரியுமா, , கடல் கடந்து போனாலும் மனைவி படத்தை பர்சுக்குள்ள வச்சு பதுக்கி பதுக்கி பாக்குறானே அதுதான #காதல் குடும்பத்துல சண்டையாவே இருந்தாலும் அந்த மனுசனுக்கு புடிக்கும்னு நெஞ்செலும்பை மட்டும் தனியா எடுத்துவைப்பாளே மனைவி அதுதான #காதல், ஏர் புடிச்சதுபோதும் வெரசா வந்து சாப்பிட்டு போய்யான்னு வரப்புல ஒக்காந்து தூக்குவாளிய முந்தானையால விசிறிக்கிட்டு பட்டினியோட ஒக்காந்துருப்பாளே மனைவி அதுதான #காதல், ஃபங்சனுக்கு இந்த ட்ரெஸ்ஸ போட்டுட்டு போகச் சொல்லுடான்னு புள்ளைகிட்ட சொல்லுவாளே கோவத்தல பேசாத மனைவி அதுதான #காதல், ஜம்பது வயசுலயும் கெழவிக்கி சளிபுடிச்சுருக்குன்னு சிரிச்சிக்கிட்டே பொண்டாட்டி மூக்கை சிந்திவிடுவானே கெழவன் அதுதான #காதல், மத்ததெல்லாம், #காதலா,,,,, ♥ ♥ Relaxplzz ![]() குடும்பஸ்தன்_பாடசாலை |
Posted: 20 Feb 2015 05:20 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment