Thursday, 19 February 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


Posted: 19 Feb 2015 09:43 AM PST


படிக்காத பாமரன் முட்டாளும் அல்ல..... படித்தவர்கள் அனைவரும் அறிவாளிகளும் அல்ல.......

Posted: 18 Feb 2015 10:13 PM PST

படிக்காத பாமரன் முட்டாளும்
அல்ல.....
படித்தவர்கள் அனைவரும்
அறிவாளிகளும் அல்ல....
நான் காய்கறி வாங்க
கடைக்கு சென்றேன்.. அங்க
எனக்கு முன் ஒரு பெரியவர்
வாங்கி கொண்டிருந்தார்....
வெள்ளை வேட்டி(பளுப்பு நிறமாக
மாறியது).. சந்தனகலர் கட்டம்
போட்ட சட்டை... கையில்
ஒரு கருப்பு குடை... காலில்
இப்பவோ அப்பவோ என உயிர்
ஊசலாடி கொண்டிருக்கும்
செருப்பு....
சில காய்கறிகளை வாங்கினார்..
கடையில் இருப்பவர்
விலை சொன்னதும் இடுப்பில்
கட்டி இருந்த பெல்ட்டிலிருந்த
ு பணத்தை எடுத்து இருமுறை எண்ணி கொடுத்தார்....
கடைக்காரர் பாலிதீன்
பை எடுத்தார்...
பெரியவர்:
வேண்டாம்பா எங்கிட்டயே இருக்கு...
கடைக்காரர்: பழைய பாலீத்தின்
பைய ஏன்
தூக்கிட்டு திரியுறிக்க?.....
உங்களுக்கு கொடுக்கிற
ஒரு பையில் நான்
கொறஞ்சிடமாட்டேன்...
பெரியவர்: நீ பெரிய
கர்ணபிரபுன்னு எனக்கு தெரியும்...
இந்த கருமத்தல(பாலிதீன்)
வீடு குப்பையாச்சி...
ஊரு குப்பையச்சி...
நாடு குப்பையாச்சி... இந்த
உலகமே குப்பையாச்சி...
மண்ணுல போட்டா மண்ண
கெடுத்துடுது...
எரிச்சிவிட்டா காத்த
கெடுத்துடுது...
இலவசமா கிடைக்குது.. பாவிக்க
(பயன்படுத்த)
சுலபமா இருக்கு... அதுக்காக
ஏன் நல்லா இருக்குறத குப்பைல
போடனும்.... அந்த
பை எவ்வளவு காலம்
உழைக்குதோ அதுவரைக்கும்
பாவிச்சிட்டு இனி முடியாங்கும்
போது தூக்கி குப்பைல
போடு....
இப்படி செஞ்சாலே கொட்டுற
முக்காவாசி குப்பைங்க
கொறஞ்சிடும்...
பயன்படுத்திய
பொருளை எடுத்துவச்சி திரும்ப
பயன்ப்டுத்துவதில் என்ன
வெட்டம்?...(முன
ுமுனுத்து கொண்டே சென்றார்...)
சுட்டிவிரலில் ஊசியால்
குத்தியதுபோல் சுள்
என்று இதயத்தில் ஒரு வலி....
படித்தவர்கள்.....
பட்டத்துக்கு மேல் பட்டம்
வாங்கி குவித்தவர்கள்....
நுனிநாக்கில் ஆங்கிலம்
பேசுபவர்கள்...
அனைத்து மொழி செய்திதாளையும்
தினந்தோறும் தவராமல்
படித்து பொதுஅறிவை வளர்ப்பவர்கள்..
..
இதில் எத்தனை பேர்
இதை யோசிச்சிருப்பாங்க.....
எத்தனை பேர் பின்பற்றுவாங்க.....
பயன்படக்கூடிய பொருள்
குப்பைக்கு போவதை தடுத்தாலே...
சுற்றுசூழல் பிரச்சனை பாதியாக
குறையும்
என்று அவருக்கு தெரிந்திருக்கிற
து....
5 நிமிடத்திற்கு முன் சாதாரண
பாமரனாக தெரிந்த அவர்...
5
நிமிடத்திற்கு பிறகு மாமனிதராக
தெரிந்தார்..
அன்றிலிருந்து நானும்
அதனை பின்பற்ற
முயலுகிறேன்...
- துரை.அதிரதன

*அன்பு மகள் அனுப்பும் மடல் ....* ''ஒவ்வொரு பெண் பிள்ளைக்கும் அவர்கள் தந்தைக்கும்...

Posted: 18 Feb 2015 04:06 PM PST

*அன்பு மகள் அனுப்பும்
மடல் ....*
''ஒவ்வொரு
பெண் பிள்ளைக்கும் அவர்கள்
தந்தைக்கும் சமர்ப்பணம்'' !!!!!!!!
உறவில் தந்தையாய்
உணர்வில் அன்னையாய்
உயிரில் கலந்தாய் அப்பா _ நான்
இரவில் தனியாக
தெருவில் வரும் போது
மழையில் நனைந்தாய் அப்பா..
குடையில் இடமிருந்தும்
நடுவில் எனை நிறுத்தி
மழையில் நனைந்தாய் அப்பா -
தினம்
மனதில் எனை நிறுத்தி
உடலில் தளர்ந்தாலும்
உழைத்து களைத்தாய் அப்பா..
தஞ்சை பெருங்கோயில்
தலைய சிற்பி போல்
என்னை வளர்த்தாய் அப்பா _
தினம்
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை செதுக்க நீ
உன்னை வருத்தாய் அப்பா..
பணியில் இருந்து நீ
திரும்பி வரும் வரையில்
பசியில் இருப்பேன் அப்பா _ உன்
மடியில் அமர்த்தி என்
இதழில் உட்டியதை
நினைத்து அழுதேன் அப்பா..
கல்வி கற்க நான்
பள்ளி சென்ற தினம்
இன்றும் நினைப்பேன் அப்பா -
உன்
கையை இழந்து நான்
உள்ளே போகும் போது
கண்கள் நனைத்தேன் அப்பா..
என்னை கரை சேர்க்க
உன்னை அலையாக்கி
அலைந்து உழைத்தாய் அப்பா
விண்ணை அழகாக்கும்
வெள்ளி மலர் போல
என்னை வளர்த்தாய் அப்பா..
உடலில் நலமின்றி
உறைந்த பனி போல
படுத்து சாய்ந்தேன் அப்பா _ என்
தலையில் வருடி நீ
உணவு ஏதுமின்றி
இரவை கழித்தாய் அப்பா..
கழுத்தில் மணி வைரம்
காலில் புது வெள்ளி
போட்டு ரசித்தாய் அப்பா _
கோயில்
குளத்தில் மீன் உண்ணும்
அழகை பொறி போட்டு
படியில் ரசிப்போம் அப்பா..
நிலத்தில் விளைந்த அந்த
நெடிய கரும்பை
கடித்து ருசித்தோம் அப்பா
படிக்க உன்னை பிரிந்து
வசிக்க நேர்ந்தும் நம்
அகத்தில் வசித்தோம் அப்பா..
கொடுத்த வாழ்விற்கு
கோடி நன்றிகள்
கொடுத்த இறைவா அப்பா _ நீ
இருக்கும் இடத்தில் தான்
இறைவன் இருக்கிறான்
கோயில் வேண்டாம் அப்பா..
அடுத்த பிறவியில்
அன்னையாக நான்
இருக்க நேர்ந்தால் அப்பா - இனி
எடுக்கும் பிறவியெல்லாம்
உன்னை குழந்தையாய்
சுமக்க வேண்டும் அப்பா ;-(:-* #Aminu

0 comments:

Post a Comment