Friday, 9 January 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


காட்டில் வேலை செய்வதை கேவலமாகவும் கணிணியில் வேலை செய்வதை கௌரவமாகவும் நினைப்ப...

Posted: 09 Jan 2015 08:01 AM PST

காட்டில் வேலை செய்வதை கேவலமாகவும்

கணிணியில் வேலை செய்வதை கௌரவமாகவும்

நினைப்பவர்களுக்கு தெரிவதில்லை

அரிசியை இன்டர்நெட்டில் download செய்ய முடியாதென்று...

இனிய இரவாகட்டும்

@ Indupriya MP
...


@ Indupriya MP ...

Posted: 09 Jan 2015 06:35 AM PST

1850யில் குற்றாலம் ஓவியமாக.... பா விவேக்

Posted: 09 Jan 2015 05:30 AM PST

1850யில் குற்றாலம் ஓவியமாக....

பா விவேக்


தமிழர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்...

Posted: 09 Jan 2015 03:46 AM PST

தமிழர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்திருந்தனர்என்பதை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன.மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர்.

தமிழர் வாழ்வை அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டாக இலக்கணம் வகுத்து வாழ்ந்தமை பண்பாட்டின் சிகரமாகக் கருதப்படுகிறது..தான் தோன்றிய கால மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, அரசு, அமைச்சுர், ஆட்சிமுறை, போர், வீரம், காதல் போன்றவற்றை நமக்குக் காட்டி நிற்கின்றன. நமக்குக் கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்களிலிருந்து தமிழர் பண்பாட்டை நன்கு அறிகிறோம். பண்பாட்டின் கூறுகள் சிலவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

வீரம்:
பண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது. பெரும்பாலும் தற்காப்பு முறையில் தான் போர் நடைபெற்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன. வெட்சி, வஞ்சி, உழிகை, தும்பை என்ற நான்கு புறத்திணை பகுதிகளிலும் தமிழர்களின் போர்முறைகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. மேலும் வீரர் அல்லாதவர்கள், புறங்காட்ட ஓடுவார், புண்பட்டார், முதியோர், இளையோர், இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகிறது.

காதல்:-
தமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர். இஃது ஒருவனும் ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூயகாதல் வாழ்க்கையாகும்.இது களவு, கற்பு என இரண்டாக அமையும். ஐந்திணை ஒழுக்கத்தில் தலைமக்களாக விளங்குபவர்கள்.அறிவும், செல்வமும் உடைய நல்லகுலத்தில் பிறந்தவர்கள். இக்காதல் நாடகத்தில் தலைவன், தலைவி நற்றாய், செவிலித்தாய், தோழி, பாணன், பாடினி போன்றோரும் ஊர் மக்களும் பாத்திரங்களாக வருவர். இக்காதல் வாழ்வு அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வழிப்பாட்டாக அமையும்.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
என்று வள்ளுவரும் காதல்வழிவந்த மனை மாட்சியைச் சிறப்பிக்கின்றார்.

நட்பு
சங்ககாலத் தமிழர் நட்பினை பெரிதும் மதித்து வாழ்ந்தனர். திருவள்ளுவரும் உண்மையான நட்புக்கு இலக்கணம் கூறியுள்ளார்.
முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
உள்ளன்புடன் மனம் மகிழ்ந்து நட்பு கொள்வதே உண்மையான நட்பாகுமென்றார்.

விருந்தோம்பல்
'விருந்து' என்ற சொல்லுக்குப் 'புதுமை' என்பது பொருள். உறவினரும் நண்பரும் அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை 'விருந்து' என்றனர் தமிழர். அறியாதவர்களையும் அழைத்து உணவளித்து இடமளித்து உபசரித்து மகிழ்ந்தனர் தமிழர்.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு'
" என்கிறார் திருவள்ளுவர். விருந்தினர்களை வெளியில் இருக்கச் செய்து தான் மட்டும் வீட்டின் உள்ளே உண்ணுதல் சாவாமைக்கு மருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும் வேண்டப்படுவதில்லை என்பதை வள்ளுவர்,
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
" என்று கூறுவதிலிருந்துவிருந்தோம்பல் சங்க கால மக்களின் பண்பாக இருந்தமை அறிய முடிகிறது.

இவை மட்டுமன்றி ஈகை,கொடை,கற்புடைமை,உலக ஒருமைப்பாடு ஆகியவற்றையும் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளாகக் கொள்ளலாம்.


திருமயம் மலைக்கோட்டை 1676 ஆம் வருடம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் ரகுநாத சேதுபதி...

Posted: 09 Jan 2015 12:46 AM PST

திருமயம் மலைக்கோட்டை 1676 ஆம் வருடம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் ரகுநாத சேதுபதி என்னும் கிழவன் சேதுபதியின் (கிபி 1671-1710) காலத்தில் கட்டப்பட்டது.
வரலாறு
திருமயம் என்ற இந்த சிறு நகரம் பழமையும் நெடிய வரலாற்றையும் கொண்டு திகழ்கிறது. முத்தரையர்கள் கி.பி. 8-9-ஆம் நூற்றாண்டுகளில் திருமயம் உள்ளடக்கிய பகுதிகளை அரசாண்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். தொடர்ந்து சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள்,பல்லவர் , விஜயநகர அரசர்கள், பராக்கிரம பாண்டிய விஜயாலயத் தேவர், சுந்தரபாண்டிய விஜயாலயத் தேவர் போன்ற பாண்டிய குறுநில மன்னர்கள் என்று பலராலும் ஆளப்பட்டுள்ளது.

இந்த ஊர். இராமநாதபுரம் சேதுபதிகள் 16 - 17 நூற்றாண்டுகளில்திருமயம் உள்ளடக்கிய பகுதிகளை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். அடுத்து புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களாலும் ஆளப்பட்டுள்ளது இவ்வூர். கிழவன் சேதுபதியின் காலத்தில் இவ்வூர் சேதுபதி நாட்டின் வட எல்லையாகத் திகழ்ந்ததாம்.
மலைக்கோட்டை அமைப்பு
திருமயம் மலைக்கோட்டை ஒரு வட்ட வடிவில் அமைந்துள்ள கோட்டையாகும். கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காண முடிகிறது. எனினும் இந்த அகழிகள் பல இடங்களில் தூர்ந்து போய்க் காணப்படுகின்றன.பாதுகாப்பு அரணாக அமைந்த வெளிச்சுற்று மதிகள் சிதைந்த நிலையில் உள்ளன. உள்சுற்று மதிகள் இன்றும் கட்டுக்கோப்பாக உள்ளன. ஏழு சுற்று மதில்கள் இருந்ததாக இங்கே காணப்படும் தொல்லியல் வரலாற்று அறிவிப்பு பலகைகள் சொல்கின்றன. திருமயம் மலைக்கோட்டைக்கு மூன்று நுழைவாயிகள் முறையே தெற்கு, தென் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் உள்ளன.
மலைக்கோட்டையின் உச்சியில் ஒரு பீரங்கி மேடையில் கிழக்கு நோக்கி ஒரு பீரங்கி
ஒரு உயர்ந்த குன்றின் உச்சியில் இயற்கை அரண்களுடனும் கலை நேர்த்தியுடனும்அமைந்துள்ள திருமயம் மலைக்கோட்டையின் உள்கோட்டையைச் சுற்றி உயரமான மதிற்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இன்றும் இந்தச் சுற்று மதில்கள் கட்டுக் கோப்பகத் திகழ்கின்றன. உள்கோட்டைக்கு ஊரின் மேற்குப் பகுதியிலிருந்து தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்ற நுழைவாயில்கள் உள்ளன. மலைக்கோட்டையின் உச்சியில் ஒரு பீரங்கி மேடையில் கிழக்கு நோக்கி ஒரு பீரங்கி நிறுவப்பட்டுள்ளது. இது போல கோட்டையின் தெற்கு நுழைவாயில் அருகே இரண்டு பீரங்கிகள் உள்ளன. இவற்றைத் தவிர மலைக் கோட்டையில் வேறு பாதுகாக்கப்பட்ட கட்டடங்கள் ஏதுமில்லை. எனினும் இக்கோட்டையிலிருந்து சேகரிக்கப்பட்ட உடை வாள்கள், பீரங்கிக் குண்டுகள், பீரங்கிகள், பூட்டுகள், சங்கிலிப் போர் உடைகள் போன்ற அரிய பல பொருட்கள் புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

-குழந்தைவேலு


பாண்டியர்களுக்கு தலை வணங்குவோம் !! பாண்டிய மன்னர்கள் இல்லையென்றால் இன்று நாம் ப...

Posted: 08 Jan 2015 09:46 PM PST

பாண்டியர்களுக்கு தலை வணங்குவோம் !!

பாண்டிய மன்னர்கள் இல்லையென்றால் இன்று நாம் பேசுவதற்கு தாய் மொழி தமிழ் மொழி இருந்திருக்காது.
தமிழுக்கு அழிவு வரும் போதெல்லாம் தங்கள் பலத்தால் தடுத்து நிறுத்தினர். எப்பொழுதும் ஆட்சியை விட தமிழ் மொழியே பெரியது என வாழ்ந்தனர். பாண்டிய மன்னர்கள் பலரும் தமிழில் புலமையும் உடையவர்கள்.

கடைசங்க காலத்தில் ஆரியர்கள் தமிழையும் தமிழ் நாட்டையும் அழிக்க படையெடுத்து வந்த போது அவர்களை சினம் கொண்டு அடக்கி வடக்கிலும் ஆட்சியை நிறுவியவன் ஆரியபடை கடந்த நெடுஞ்செழியன். நெடுஞ்செழியன் இல்லயென்றால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் அழிந்திருக்கும்.

தமிழகத்தின் இருண்ட காலமாக இருந்த களப்பிரர்கள் காலத்தில் (கிபி 3-7ம் நூற்றாண்டு) கடுங்கோன் பாண்டியன் களப்பிரர்களை விரட்டி கிபி575ல் மதுரையில் முடி சூடினான். கடுங்கோன் இல்லையென்றால் 6ம் நூற்றாண்டிலயே தமிழ் அழிந்திருக்கும்.

2 முதல் 9ம் நூற்றாண்டு வரை சோழர்களை சிற்றரசர்களாக மாற்றி வைத்திருந்த பல்லவர்களையும் பண்டிய நாட்டுக்குள் விட வில்லை.
பல்லவர்களை தமிழ்நாட்டை விட்டு விரட்ட 850ல் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையில் நடந்த போரில் சிற்றரசர்களான சோழர்கள் பல்லவனுடன் இணைந்ததால் வெற்றி விளிம்பில் இருந்த பாண்டியர்கள் தோற்றனர். தமிழில் வடமொழி கலப்பு ஆரம்பித்தது. இல்லையென்றால் செந்தமிழ் இன்றும் இருந்திருக்கும்.

1216ல் சுந்தரபாண்டியன் மதுரையை மீட்டு மீண்டும் தமிழை நிலை பெறச் செய்தான். சுந்தரபாண்டியன்வரவில்லையென்றால் முழுக்க வடமொழி கலப்புதான்.

இன்றளவும் தமிழ் மொழி இருக்க காரணம் பாண்டியர்கள். தங்கள் பெயரை நிலைபெறச் செய்ய போரிட்டதை விட தமிழுக்காகவே போரிட்டனர். ஆட்சியை தக்க வைக்க சிற்றரசர்களாக இருந்ததும் இல்லை. பல்லவர் களப்பிரர்களுடன்கூட்டு சேர்ந்ததும் இல்லை. குப்தர்கள், மௌரியர்கள், சாளுக்கியர்கள் யாரையும் தமிழ்நாட்டுக்குள் விட்டதில்லை.

வி. ராஜமருதவேல்
source -Veeram Velanja Madurai


நான் தமிழனாக பிறந்ததில் பெருமைப்படுகிறேன். நீங்கள்??? பா விவேக்

Posted: 08 Jan 2015 05:30 PM PST

நான் தமிழனாக பிறந்ததில் பெருமைப்படுகிறேன்.

நீங்கள்???

பா விவேக்


0 comments:

Post a Comment