Relax Please: FB page daily Posts |
- செம்ம அழகு
- :) Relaxplzz
- இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதவை...!! 1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்த...
- பகல் கொள்ளையா? தயவு செய்து முடிந்தவரை ஷேர் செய்யவும் அரசியல்வாதிகள், மக்கள் நலம...
- :) Relaxplzz
- பெண் முதலில் பார்க்கிறாள், பிறகு சிரிக்கிறாள், பிறகு பேசுகிறாள். இந்த மூன்றை...
- ராஜபக்சே தோல்வி :P :P
- மூளைக்கொரு வேலை..???
- :) Relaxplzz
- அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- 2100யில் உலகம் எப்படி ஒரு சிரிய கற்பனை.. 1.ஈரோடு அருகில் மிக பழமையான 80 வருடங்க...
- கல்வி இனி என்ன செய்ய வேண்டும் நாம்? தமிழ்நாட்டில் மட்டும் ஒரு வருடத்திற்கு ஒரு...
- பொறுப்புக்கள் எதுவும் இல்லாத வயதில் வாழ்க்கையில் சந்தோசம் இருந்தது... பொறுப்புக...
- இந்திய வளா்ச்சி இல்லாமைக்கு உங்கள் கருத்து என்ன ? 1. ஊழல் காரணமமா? 2. அரசியல்...
- கொய்யாப்பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- (y) Relaxplzz
- :P Relaxplzz
- அந்த காலம் தான் நன்றாக இருந்தது....! பேருந்துகுள் கொண்டுவந்து மாலைமுரசு விற்பா...
- ப்பா.. என்ன யாழி? நீ இன்னும் தூங்கலையா? ஒரு கதைசொல்லுப்பா.. அப்பாவுக்கு தூக்க...
- எதை இழந்தோம் என்பது அல்ல விஷயம் ? எது மிச்சமிருக்கிறது என்பதே முக்கியம் ! வாழ்க்...
- அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- (y) Relaxplzz
- ;-) Relaxplzz
- (சாப்ட்டு முடிச்சிட்டு இலையை மடிக்க போகிறார்) சர்வர் - சார் இலையை மடிக்கதீங்க...
- FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க நமது கணிணியில் பல கோப்புகள...
- இன்றைய மனிதர்களிடம் தேடித் தேடி கலைத்து தான் போகின்றோம்.... இது போன்ற ஒப்பனை...
- இந்த தாத்தாவ தெரிந்தவங்க லைக் பண்ணுங்க... ;-) (y)
- :) Relaxplzz
- குண்டு போட உலக நாடுகள் வந்தாலும் ஓட்டு போட உள்ளூர் மக்கள்தான் வேணும்னு தெரியாம...
செம்ம அழகு Posted: 09 Jan 2015 09:38 AM PST |
Posted: 09 Jan 2015 09:30 AM PST |
Posted: 09 Jan 2015 09:20 AM PST |
Posted: 09 Jan 2015 09:10 AM PST குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதவை...!! 1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம். 3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். 5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும். 6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும். 7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர். 8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும். 9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும். 10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது. 11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள் Relaxplzz |
Posted: 09 Jan 2015 09:00 AM PST பகல் கொள்ளையா? தயவு செய்து முடிந்தவரை ஷேர் செய்யவும் அரசியல்வாதிகள், மக்கள் நலம் கருதுபவர்கள், சமூகசீர்த்திருத்தவாதிகள் மற்றும் அனைவரது கண்ணில் படும்வரை.... LPG GAS மானியத்தொகை பெற நமது அரசங்கம் பயனாளிகள் அனைவரையும் அவர்களது வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி கூறியது. இதனால் அனைத்து மக்களும் தங்களுடைய வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்... நான் எனது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க (STATE BANK OF INDIA திருப்பனந்தாள் கிளை) சென்றேன். அங்கு வங்கி ஊழியர் மற்றும் மேனேஜர் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க ரூ.113(நபர் 1 க்கு) வசூல் செய்தனர். ஆனால் இதற்கான receipt யாருக்கும் வழங்கப்படவில்லை இதனால் சந்தேகம் அடைந்த நான் எதற்காக இந்த பணம் வசூல் செய்கீறிர்கள் என்று கேட்டேன் அதற்கு மேனேஜர் அவர்கள் வங்கிகணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சர்வீஸ் ஜார்ஜ் என்று கூறினார். அப்பெடியென்றால்க அதற்கான receipt தாருங்கள் என்று கேட்டேன். உடனே மேனேஜர் தன் கையால் எழுதி (பணம் பெற்றுக்கொண்டு) கீழே காணப்படும் ரசீதை கொடுத்தார. நானும் பெற்றுக்கொண்டு வந்துவிட்டேன்.. அதிர்ச்சி தகவல்கள்.... 1. ஆதார்கணக்கை வங்கிக்கணக்குடன் இணைக்க ரூ.113 (நபர் 1 க்கு) பணம் செலுத்திய யாருக்கும் பணம் பெற்றதற்கான ரசீது வழங்கப்படவில்லை... 2. இந்தியன் வங்கி மற்றும் CUB வங்கிகளில் இது போன்று பணம் வசூலிக்கப்படவில்லை.. 3. STATE BANK OF INDIA Toll Free No 1800 425 3800 ஐ தொடர்பு கொண்டு கேட்டபோது. ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க பணம் ஏதும் செலுத்தப்படவேண்டியது இல்லை என்று கூறினர். 4. மறுபடியும் மேனேஜர் என்னை போனில் தொடர்பு கொண்டு பேசிய போது வேண்டும் என்றால் வந்து உங்கள் பணத்தை திரும்ப வாங்கி கொள்ளுங்கள் என்று கூறினார். என்னுடைய கேள்வி... 1. அப்படியென்றால் மக்களிடம் வாங்கிய பணம் யாருக்கு போய் சேருகின்றது? 2.ஒருவேளை அதற்கான ஜார்ஜ் இந்திய அரசாங்கத்தால் வசூலிக்கப்படுவது உண்மையெனில் (ரூ.113) இவ்வளவு தொகை எதற்கு? 3. என்னிடம் போனில் தொடர்பு கொண்டு திரும்ப பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறிய மேனேஜர் பணத்தை வசூல் செய்த அனைத்து மக்களிடம் போன்பண்ணி பெற்றுக்கொள்ள சொல்வாரா? அப்படி சொல்லி அனைத்து மக்களுக்கும் பணத்தை திரும்ப கொடுப்பாரா? 4. ஒரு நபருக்கு ரூ.113 வீதம் வசூலித்தால் மொத்த வசூல் பணம் இந்த கிளையில் மட்டும் எவ்வளவு? 5.வங்கி கணக்கு எண் நிரப்பாமல் தேதி, ரூபாய் மற்றும் எனது பெயர் எழுதி கையெழுத்து போட்டு சீல் வைத்து கொடுத்த அவசரம் என்ன? தயவு செய்து ஷேர் செய்யவும் நன்றி:- ராஜா Relaxplzz ![]() |
Posted: 09 Jan 2015 08:55 AM PST |
Posted: 09 Jan 2015 08:50 AM PST பெண் முதலில் பார்க்கிறாள், பிறகு சிரிக்கிறாள், பிறகு பேசுகிறாள். இந்த மூன்றையும் தாண்டி, அவளது இதயம் நாலாவது வேலையொன்றை செய்து கொண்டிருக்கிறது. அது என்னவென்று தெரிந்தவர் இரண்டு பேர்.. அவளும் ஆண்டவனும். :) -கவிஞர் கண்ணதாசன் Relaxplzz |
Posted: 09 Jan 2015 08:45 AM PST |
Posted: 09 Jan 2015 08:40 AM PST |
Posted: 09 Jan 2015 08:30 AM PST |
Posted: 09 Jan 2015 08:20 AM PST |
Posted: 09 Jan 2015 08:10 AM PST 2100யில் உலகம் எப்படி ஒரு சிரிய கற்பனை.. 1.ஈரோடு அருகில் மிக பழமையான 80 வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனம் கண்டுபிடிக்கப்ப ட்டது அதற்கு சைக்கிள் என்று கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளன. 2.தன் வீட்டு மொட்டை. மாடியில் பழங்கால பயிர்களை. பயிரிட்டு இளைஞர் சாதனை .(அரிசி. கம்பு. சோளம். ) 3.செவ்வாய் கிரகத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் குண்டம்இறங்கி அழகு திருவிழாவை கொண்டாடினர். 4.இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாக்கித்தான் ரோபோக்களை இந்திய ரோபோக்கள். சுட்டதில் ஐந்து ரோபோக்கள் பழதடைந்தன. 5.உலகத்தில் 50வருடம் உயிர்வாழ்ந்த பழமையான மனிதர் கின்னஸ் சாதனை . 6.நேற்று இரவு திடிரென்று விண்ணில் இருந்து பொழிந்த நீர் துளிகளாள் மக்கள் அஞ்சி நடிங்கினர் பிறகு விஞ்ஞானிகள் அதற்கு மழை என்றும் 10ஆண்டுகளுக்கு ஒரு முறை பொழியும் என்று கூறினர் . 8.புளூட்டோவில் இருந்து பூமிக்கு பனி நீர் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு முடிவு செய்தனர் . 9.80வருடங்களுக்கு முன் வாழ்ந்த பறவையின் எழம்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது .. (கிளி.காகம்.மயில்.கழகு). 10. செவ்வாய் கிரகத்துக்கும் பூமிக்கும் இடையே ரயில் பாலங்கள் கட்ட உலக நாடுகள் முடிவு செய்தனர்... Relaxplzz |
Posted: 09 Jan 2015 08:00 AM PST கல்வி இனி என்ன செய்ய வேண்டும் நாம்? தமிழ்நாட்டில் மட்டும் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழில்நுட்ப மாணவர்கள் (Engineers) தொழில்நுட்ப்பக்கல்லூரிகள்ல இருந்து வெளிய வர்றாங்க. அப்படி வருபவர்களில் பாதிக்கும் மேல் வேலை கிடைக்காமல் ஒரு வருடமோ இரண்டு வருடமோ தேடல்லயே தொலைக்க வேண்டி இருக்கு. இதுக்கு என்ன காரணம்ணு என்னைக்காவது யோசித்துப்பார்த்தோமா? அப்படியே வேலை கிடைச்சாலும் சம்பளமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்குறது இல்லை. அதில் பாதிபேர் படிச்ச பாதையை விட்டுட்டு வேற பாதைல போயிடுறாங்க. இதெல்லாம் ஏன் நடக்குது? இதை எப்படி மாற்றலாம்னு என்னைக்காவது யோசிச்சு பாத்துருக்கோமா? இதை மாணவர்களிடம் கேட்டா சொல்ற பதில் 'Education System' சரி இல்லை..நான் படிச்ச காலேஜ் சரி இல்லை அப்படி இப்படீனு சில காரணங்கள் சொல்லுவாங்க... கல்லூரிகளிடம் கேட்டால்...சரிவிடுங்க அவங்க கேக்குறதே தேவையில்லாத்துதான் ஏன்னா பெரும்பாலும் அவங்க செயல்படும் விதமே கல்லூரிகளெல்லாம் வியாபாரமாகி விட்ட விஷயம்தான் அப்படீன்னு சொல்லாமல் சொல்லுது... அதுவே சமூக ஆர்வலரிடம் கேட்டால்..இந்த அரசு சரி இல்லை...கல்லூரிகளை சரிய கட்டுப்படுத்துவது இல்லை என்று பதில் வரும்... சரிங்க இவங்க சொல்றது எல்லாமே சரிதான் ஆனா அதுக்காக நாம இதெல்லாம் சரியாகும் வரை காத்துக்கொண்டே இருக்க முடியுமா? கட்டாயம் முடியாதுதானே. சரி என்ன பண்ணலாம்? உலகம் உங்கள் வீட்டு வரவேற்பறைக்கு வரும் காலம் இது. அந்த வளர்ச்சியை சரியாக உபயோகப்படுத்தினால் சரியாக முன்னேறமுடியும். ஆனால் அந்த முன்னேற்றங்களுக்கெல்லாம் தடையாக நிறைய விஷயங்கள் நமக்கு முன்னே முன்னிருத்தப்பட்டிருக்கின்றன. சரி முதலில் மாணவர்களிடமிருந்தே தொடங்குவோம்.. எந்த கல்லூரியில் படித்தாலும் உலக அறிவை வளர்த்துக்கொண்டால் போதும்...உலக அறிவை வளர்ப்பது என்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை பன்னிடன்டாம் வகுப்பு கணித பாடத்தைவிட இது எளிதுதான்... அதற்காக கல்லூரி வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்காமல் சதா சர்வகாலமும் படித்துக்கொண்டே இப்படிஅறிவை வளர்த்துக்கொண்டே இருங்கள் என்று கூறவில்லை அப்படி நான் கூறினால் அதைவிட முட்டள்தனமான விஷயம் வேறு இருக்கவே முடியாது.. கல்லூரியில் நல்லா Enjoy பண்ணுங்க. ஆனா ஒரு நாளைக்கு ஒரே ஒரு மணி நேரம் மட்டும் உங்கள் அறிவை வளர்க்க செலவழித்துப்பாடுங்கள் அப்போ தெரியும் அதொட வலிமை என்ன என்று. அதேபோல் இந்த அறிவுத்தேடலையும் உங்கள் பொழுதுபோக்கிலேயே வைத்துப்பாருங்கள்...அதுதான் முக்கியம் நீங்கள் செய்வதை ரசித்து செய்யுங்கள்... வாருங்கள் ஒரு எடுத்துக்காட்டை பார்ப்போம்... நீங்கள் கணினி பயிலும் மாணவர் என வைத்துக்கொள்வோம் உங்களுக்கு 'சி' நிரலாக்கம் (C Programming) இருக்கிறது என்றால் முதலில் 'சி' நிரலை எங்கு உபயோகப்படுத்துவார்கள் என்பதைப்படியுங்கள்...பின் உங்களின் எதாவது ஒரு நிஜ உலகத்துடன் தொடர்பு படுத்திப்பாருங்கள்....உங்கள் அம்மாவின் மாதாந்திர பட்ஜெட்டை 'சி' இல் ஒரு நிரலில் எழுதிக் கொடுங்கள்...'LOVE METER' நிரல் எழுதி நண்பர்களுடன் ஜாலியாய் அரட்டை அடியுங்கள்... இது போல் செய்தால் நீங்கள் படித்தது மிக அதிகமாய் இருக்கும் ஆனால் படிக்கிறோம் என்ற சோம்பல் இல்லாமலே படித்து முடித்திருப்போம்... இதேபோல் ஒவ்வொரு துறைக்கும் REAL WORLD உடன் தொடர்புபடுத்தி படியுங்கள்..உங்களால் எளிதாக படிக்க முடியும்...மேலும் இணையத்தில் முகப்புத்தகம் தவிரவும் நிறைய நல்ல இணையதளங்கள் உள்ளது. அவற்றிற்கு வாருங்கள். நிறைய உங்களை வலைப்பூ எழுத உதவுகின்றது.. அவற்றை தேடுங்கள்... நிறைய நிறையயயயய வாய்ப்புகள் உள்ளன நண்பர்களே...வாருங்கள் சேர்ந்தே கலக்குவோம் இணையத்தை... உங்களுக்குள் தேடல் என்ற ஒன்று மட்டும் இருந்தால் உங்களால் இந்த உலகை வெல்ல முடியும். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், நானும் இப்படிப்பட்ட சூழலில் தான் படித்து வந்தேன்...நம் கல்வி தொடர்பான பல கேள்விகள் கோபங்கள் என்னுள் இருந்தது யாராவது கல்விமுறையை மாற்ற மாட்டர்களா? என என்னினேன் ஆனால் நாம் முதலில் மாறுவோம் என்ற முடிவுக்கு வந்து பின் மாறினேன்.. உங்களுக்கும் அதே மாதிரியான கேள்விகள் நியாயமான கோபங்கள் இருப்பது சரிதான்... ஆனால் வெறும் கோபம் எதற்கும் உதவாது....கோபத்தை நாம் நேர்மறையான விசயங்களாக மாற்றவேண்டும்..அதுதான் நம் வெற்றியின் வழி.. வாருங்கள் எல்லாவற்றையும் கற்கலாம்... அடுத்தபதிவில் மேலும் தெரிந்து கொள்ளலாம் காத்திருங்கள்... பசித்திருங்கள் அப்போதுதான் உணவு சுவைத்திருக்கும்... --"ரெளத்ரம் பழகுவோம்" இப்பதிவை பகிருங்கள் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவுங்கள். Relaxplzz ![]() |
Posted: 09 Jan 2015 07:50 AM PST |
Posted: 09 Jan 2015 07:45 AM PST இந்திய வளா்ச்சி இல்லாமைக்கு உங்கள் கருத்து என்ன ? 1. ஊழல் காரணமமா? 2. அரசியல் காரணம்மா? 3. அரசங்கம் காரணம்மா? 4. இவை அனைத்தும்மா? Relaxplzz |
Posted: 09 Jan 2015 07:40 AM PST |
Posted: 09 Jan 2015 07:30 AM PST |
Posted: 09 Jan 2015 07:20 AM PST |
Posted: 09 Jan 2015 07:10 AM PST அந்த காலம் தான் நன்றாக இருந்தது....! பேருந்துகுள் கொண்டுவந்து மாலைமுரசு விற்பார்கள் ., . எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் பேருந்தில் உட்கார இடம் கிடைக்கும் .., . மிதி வண்டி வைத்திருந்தோம்., . எல்லா வீடுகளிலும் முதல் மரியாதை பாடல் ஒலித்தது., . வானொலி நாடகங்களை ரசித்து கேட்டோம்., . எல்லோரும் அரசு பள்ளிகளில் படித்தோம்., . சாலையில் எப்போதாவது வண்டி வரும்., . மழை நின்று நிதானமாக பொழியும் , . சாராய கடைகள் இருந்தன.,ஆனால் இன்றைய கூட்டம் அன்று என்றுமே இருந்ததில்லை., . தமிழ் ஆசிரியர்கள் தந்நிகரற்று விளங்கினர்., . வேலைக்கு போகாதவன் எந்த குடும்பத்திற்க்கும் பாரமாயில்லை., . எளிதில் மணப்பெண் கிடைத்தாள்., . வெஸ்ட் இன்டீசை வெல்லவே முடியாது., . சந்தைக்கு போக பத்து ரூபாய் போதும்., . முடி வெட்ட இரண்டு ரூபாய்தான்., . பருவ பெண்கள் பாவாடை தாவணி உடுத்தினர்., சிலின்டர் மூடுதுணி போல் யாரும் நைட்டி அணிய வில்லை., . சுவாசிக்க காற்று இருந்தது., . குடிதண்ணீரை யாரும் விலைக்கு வாங்க வில்லை., . தெருவில் சிருமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள். அவர்களை கலாய்த்து கொண்டே நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்., . மயில் இறகுகள் குட்டி போட்டன,புத்தகத்தில்., . ஐந்து ரூபாய் தொலைத்ததற்க்கு அப்பாவிடம் அடி வாங்கினேன் .., . மூன்றாம் வகுப்பிலிருந்துமட்டுமே,ஆங்கிலம்., . ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர்., . கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்.., நம்பிக்கைகளும்தான்...... - கவிஞர் மகுடேஸ்வரன் Relaxplzz |
Posted: 09 Jan 2015 07:00 AM PST ப்பா.. என்ன யாழி? நீ இன்னும் தூங்கலையா? ஒரு கதைசொல்லுப்பா.. அப்பாவுக்கு தூக்கம்வருது யாழி.. எனக்குவரலேயேப்பா... அம்மாசொல்லுவாங்க. அம்மாகிட்டகேளு பாப்பா. அம்மா தூங்கிட்டாங்கப்பா. நீ சொல்லு. ஆனா காக்காகத வேணாம். சரி... ஒரு ஊர்ல.. எந்தவூர்லப்பா...? என்னையமாதிரியேயிருக்கியே நீயும். சரி. ஒரு காட்டுல.. எந்தக்காட்டுலப்பா? ம்ம்ம்ம்.. முன்னாடி ஒரு ஊர்சொன்னேனே.. ஆமா. அந்தவூரோடக்காட்டுல.. ம்ம்ம். சரிப்பா. தூங்குமா பாப்பா? கதைய சொல்லுப்பா.. அந்தக்காட்டுல ஒரு வீடு இருந்துச்சாம். ஏம்ப்பா காட்டுலபோயி வீடுகட்டுனாங்க? கதைகேக்குறியா இல்ல கேள்விகேக்குறியா பாப்பா? கத.. கேளு. அந்தவீட்டுல ஒரு தாத்தாவும் பேரனும் இருந்தாங்களாம். பாட்டிலாம் எங்கப்பா? இப்பதான சொன்னேன்.. சரிப்பா. நீ சொல்லு. எங்கவிட்டேன்? வீட்டுல. யார்வீட்டுல? இல்லப்பா. அந்தக்காட்டுலவுள்ள வீட்டுல. ஆங்.. அந்த தாத்தா ஒரு வெறகுவெட்டியாம். அவருக்கு ரொம்பவயசாகிட்டாம். வயசானதானப்பா தாத்தா? "....." சரி. நீ கதசொல்லுப்பா இனுமே எதுங்கேக்கல. ம்ம்ம்ம். அந்த தாத்தாவுக்கு வயசாயிட்டதால அவரால வேலசெய்யமுடியலையாம் பாப்பா. பாவம்ப்பா.. யாரு நாந்தானே? இல்லப்பா அந்த தாத்தா. சரி. கதைய கேளு. தாத்தாவுக்கு வயசாயிட்டதால வெறகுவெட்டமுடியாம கஷ்டப்பட்டாராம். ம்ம்ம்ம்.. சரினு ஒருநாள் அந்த பேரன் தாத்தாகிட்டசொன்னானாம். என்னா சொன்னானாம்ப்பா? இரு யோசிக்கிறேன். ஆங்.. தாத்தா..தாத்தா.. உன்னாலதான் வெறகுவெட்டமுடியலயே.. நா பட்டணம்போயி வேலபார்த்து பணங்கொண்டுவர்றேன் தாத்தா..னு சொன்னானாம். பட்டணம்னா என்னப்பா? சோறுகட்டித்தருவாங்களே அதாப்பா? இல்ல பாப்பா. அது பொட்டலம். பட்டணம்னா பெரியவூரு. ம்ம்ம். உடனே தாத்தா சொன்னாராம். பட்டணம்போறதுக்கு நெறையா செலவாகும்டா ராஜா..னு. ராஜா..னா? அதாம்பாப்பா அந்த பேரனோடபேரு. அன்னிக்கு ஒரு மாமா நம்மவீட்டுக்குவந்தாங்களே! அவங்கபேரும் ராஜாமாமா தானப்பா..? ஆமா பாப்பா. சரி. தூங்கூமா? வேணாம்ப்பா. கதைய சொல்லுப்பா. ம்ம்ம்ம்.. அதுக்கு பேரன்சொன்னானாம்.... இல்ல தாத்தா நீ யார்கிட்டயாச்சும் காசுவாங்கிக்கொடு. நா சம்பாரிச்சிட்டு வந்து அந்தக்கடனையெல்லாம் அடச்சிடலாம்..னு சொன்னானாம். சரினு அந்த தாத்தா, அந்த காட்டுல இருந்த இன்னொருத்தருகிட்ட கடனா பணம்வாங்குனாராம். அவருயாருப்பா? அவருதான் பெரியமனுஷன் அந்தக்காட்டுல. காட்டுல யாம்ப்பா இவ்வளோ மனுஷங்க? சிங்கம் புலியெல்லாம் எங்கப்பா? அதுங்கள்லாம் பின்னாடிவருது. யார்பின்னாடிப்பா? ஐயோ பாப்பா.. கதையிலபின்னாடி வரும் பாப்பா. ஐய்..சூப்பருப்பா. ஏ பாப்பா சத்தம்போடாத. அம்மா முழிச்சிப்பாங்க. "...." சரி. கதைய கேளு. பேரன் பணத்தைவாங்கிகிட்டு பட்டணம்போயிட்டானாம். ம்ம்ம்.. போயி ரொம்பநாளாகிட்டாம். ஆளும் வரல.. பணமும் வரலையாம் பாப்பா. பாவம்ப்பா தாத்தா. ம்ம்ம்.. பணங்கொடுத்தவரு அடிக்கடி அந்த தாத்தாவீட்டுக்குவந்து எப்போடா பணந்தருவேனு கேட்டுட்டுப்போவாறாம். ப்பா.. தாத்தாவ டாபோட்டுக்கூப்பிட்டாரா அவரு? ஆமா பாப்பா. பணக்காரங்க அப்படித்தாங்கூப்புடுவாங்க. ம்ம்ம்ம்.. ஒருநாளு, அந்த தாத்தாவப்போட்டு செம்மையா அடிச்சிட்டாராம் அவரு. அவர நீயி போயி அடிச்சிடுப்பா.. பாப்பா.. இது கததானே.. கதையிலலாம் நாம போயி அடிக்கமுடியாது பாப்பா. "..." சரி அடிச்சிடுவோம். ஐய்...சூப்பரப்பா.. இதுபோல நெதமும் அவருவந்து தாத்தாகிட்ட பணங்கேப்பாறாம்.. பேரன்வந்ததும் வட்டியோடத்தந்துடுறேன்னு தாத்தா சொல்வாராம். ஆனா அதெல்லாந்தெரியாதுனு அடிப்பாராம். பாவம்ப்பா.. ம்ம்ம். ஒருநாளு அவரு அடிச்சிட்டுப்போனதும் தாத்தாவூட்ல இருந்த பூனைக்குட்டிக்கு கோவம் வந்துட்டாம்.. ஐய்... பூனக்குட்டி பூனக்குட்டி... ஜாலி..ஜாலி.. சூ... அம்மா தூங்குறாங்கள்ல.. "..." பூனக்குட்டி, தாத்தாகிட்ட சொன்னுச்சாம். தாத்தா தாத்தா.. நீ அழாத. நா போயி அந்தாள ரெண்டுலவொன்னுபார்த்துட்டுவர்றேன்னு.. தாத்தா அழுதுகிட்டே தரையில கெடந்தாராம். போப்பா... நீ போயி மொதல்ல அவர அடிச்சிட்டுவந்து கதசொல்லு போப்பா.. அதான் பூனக்குட்டிய அனுப்பிட்டோம்ல பாப்பா. இனிமே பாரு. அவன் பூனக்குட்டியயும் அடிச்சிடுவாம்ப்பா. பெரியவங்கள அவன் இவன்னு சொல்லக்கூடாது பாப்பா. பாவம். போப்பா... சரி. பூனக்குட்டி வேகவேகமா அந்தாளு வீட்டுக்குப்போனுச்சாம். போறவழியில யானவொன்னு வந்துச்சாம். ஐய்..யான..யான.. அன்னிக்கி கோயில்லபார்த்தோமே அதாப்பா? இது அதில்ல. வேறயான. ம்ம்ம்ம்.. யான கேட்டுச்சாம்.. பூனக்குட்டி பூனக்குட்டி.. எங்க இவ்வளோ வேகமாப்போறேனு.. யான பேசுமாப்பா? முன்னாடி பூனக்குட்டி தாத்தாகிட்ட பேசுச்சுல.. ஆமா.. அதுமாதிரி எல்லாமிருகமும் பேசும் பாப்பா. ம்ம்ம்ம்.. பூனக்குட்டி எல்லாத்தையுஞ்சொன்னுச்சாம். ஒடனே யான, அப்படியா சரிசரி.. நானும் வர்றேன்னு சொன்னுச்சாம்.. சரிண்ணேனு சொல்லிட்டு பூனக்குட்டி முன்னாடி போச்சாம். பின்னாடி யான. ஐய்... கொஞ்சதூரம்போனதும் சிங்கம் வந்துச்சாம். அது கேட்டுச்சாம் ரெண்டுபேரும் எங்கபோறீங்கனு. யான சொன்னுச்சாம். ராஜா..ராஜா.. இந்தப்பூனக்குட்டியோட தாத்தாவ அந்தாளு அடிச்சிட்டானாம். அவன ஒருவழிபண்ணப்போறேன்னு சொன்னுச்சாம். ராஜா வந்துட்டானாப்பா? எந்தராஜா? பொட்டணம்போன ராஜா. ஐயோ... அது பட்டணம் பாப்பா. அவந்தான் பட்டணத்துல இருக்கானே. சிங்கந்தான் ராஜா. காட்டுக்கு ராஜா சிங்கம் பாப்பா.. சரிப்பா.. சரினு சிங்கமும் அதுங்களோட சேர்ந்துச்சாம். கொஞ்சநேரத்துல புலி, நரி, கரடி.. மூனும் இதுங்களோட சேர்ந்துக்குச்சுங்களாம். ம்ம்ம்ம்.. யார்யார்போறாங்கனு சொல்லு பாப்பும். பூனக்குட்டி ம்ம்ம்.. யான.. ம்ம்ம்.. சிங்கம்.. ம்ம்ம்.. நரி.. ம்ம்ம்.. புலி.... ம்ம்ம்.. அப்புறம்? அப்புறம்... மறந்துட்டம்ப்பா. கரடி.. ஆங்.. கரடி கரடி.. ம்ம்ம். எல்லாம் வரிசையா போச்சாம். இதுங்களோட பாம்பு, தேளு, பூரான்லாம் சேர்ந்துக்குச்சுங்களாம். எல்லாம் அந்தாளோடவீட்டுக்குப்போச்சுங்களாம். ம்ம்ம்ம்.. யான வாசல்ல நின்னுகிட்டாம். யாம்ப்பா? யான பெருசுல.. அதால உள்ள போகமுடியலியாம். அதாம்பாப்பா. ம்ம்ம்ம்.. புலி வீட்டுக்குப்பின்னாடி ஒளிஞ்சிக்கிச்சாம். அன்னிக்கி நீ போயி ஒளிஞ்சிக்கிட்டியே.. அதுமாதிரியாப்பா? ம்ம்ம்.. நரியும் கரடியும் கதவை தொறந்துகிட்டு உள்ளபோனுச்சுங்களாம். ம்ம்ம்ம்.. உடனே பாம்பு, தேளு, பூரான்லாம் உள்ளபோயிட்டுங்களாம். போயி? போயி, பூரான் அடுப்புல புகுந்துகிட்டாம். ம்ம்ம்ம்.. தேளு சட்டையில புகுந்துகிட்டாம். ம்ம்ம்ம்.. பாம்பு கதவுமேல உக்காந்துகிச்சாம். ம்ம்ம்ம்.. பூனக்குட்டி, அந்தாளு படுத்துதூங்குன கட்டில்மேல ஏறுனுச்சாம். ப்பா... என்ன பாப்பா...? சிங்கம் எங்கப்பா..? அதவிட்டுட்டேனா? அது கட்டிலுக்கு அடியில படுத்துகிச்சாம். ம்ம்ம்ம்.. பூனக்குட்டி, அந்தாள எழுப்புச்சாம். ஏம்ப்பா..? ஏம்ப்பாவா? எல்லாம் எதுக்கு வந்திருக்கு இங்க? அடிக்க. அதுக்குதான். பூனக்குட்டி அந்தாள பிறாண்டிச்சாம். ம்ம்ம்ம்.. அவரு கடுப்பாயிட்டாராம். ஒன்ன என்ன பண்றேம்பாருனு அடுப்புகிட்ட இருக்குற வெறகையெடுக்க எந்திரிச்சாராம். பாவம்ப்பா பூனக்குட்டி. சரி. அடுப்புல இப்போ என்னா இருக்கும்? நெருப்பு. அது இப்போ இருக்காது பாப்பா. அங்க என்னா ஒளிஞ்சிகிட்டுருக்கு? பூக்கான். பூக்கானில்ல பாப்பா. பூரான். ம்ம்ம்ம்.. அடுப்புக்கு போறதுக்காக கீழயெறங்குனாராம். கட்டில்கீழ என்னாருக்கு? சிங்கம். ம்ம்ம்..சூப்பரு பாப்பா. அது அவருகாலை கடிச்சுதாம். ஐய்..ஜாலி..ஜாலி.. அவரு உடனே பயந்துபோயி சட்டையயெடுத்துப்போட்டுகிட்டு வெளிய ஓடலாம்னு பார்த்தாராம். சட்டையில என்னாருக்கு? பட்டன். இல்லபாப்பா. சட்டையில என்னாவொளிஞ்சிருக்கு? பாம்பு.. இல்லபாப்பா. பாம்பு, கதவுல.... ஆங்.. தேளு..தேளு.. ம்ம்ம். சட்டையிலருந்த தேளு கொட்டுச்சாம். ஐய்... சட்டைய தூக்கிப்போட்டுட்டு வாசலுக்கு ஓடுனாராம். ஒடனே, கரடியும் நரியும் வெரட்டுச்சுங்களாம். ம்ம்ம்ம்.. கதவைத்தொறக்க கைவச்சாராம். பாம்பு முழுங்கிட்டாப்பா? ஐயோ இல்ல பாப்பா.. படமெடுத்துச்சாம். ம்ம்ம்ம்.. கதவ தொறந்தா என்னா நிக்கும்...? யான.. ம்ம்ம். அதுக்கு பயந்துகிட்டு கொல்லப்பக்கம் ஓடுனாராம்.. கொல்லையில என்னாருக்கு? புலியாப்பா? ம்ம்ம்.. புலிதான். எல்லாம் ஒன்னுகூடிட்டாம். ஜாலி..ஜாலி.. ம்ம்ம்.. எல்லாம் ஒன்னுகூடவும் அவரு பயந்துபோயி அதுங்ககிட்ட மன்னிப்புகேட்டாராம். இனிமே தாத்தாவ அடிக்கமாட்டேன்னு சத்தியம்பண்ணிக்கொடுத்தாராம். ம்ம்ம்ம்.. ஒடனே சிங்கம் சொன்னுச்சாம்.. எங்ககிட்ட மன்னிப்புகேட்டா பத்தாது. தாத்தாகிட்டவந்துகேளுனு தறதறன்னு இழுத்துட்டுப்போச்சாம். ப்பா.. வேணாம் பா.. அவருதான் மன்னிப்புகேட்டாருல.. இனிமே கடிக்கவேணாம்னு அதுங்ககிட்ட சொல்லுப்பா. சரி. அவர யானமேல உட்காரவச்சி தாத்தாவீட்டுக்கு எல்லாம் அழச்சிட்டுவந்துச்சுங்களாம். அவரு, தாத்தாகிட்ட மன்னிப்புகேட்டாராம். பேரன்வந்ததும் காசு வாங்கிக்கிறேன்னு சொன்னாராம். ஐய்.. சூப்பருப்பா.. அப்புறம், கொஞ்சநாள்ல ராஜா வந்தானாம். நெறையா பணம்சம்பாரிச்சிட்டுவந்தானாம். கடனையெல்லாங்கொடுத்துட்டு தாத்தாவும் பேரனும் சந்தோஷமாவாழ்ந்தாங்களாம். அப்புறம்..? அப்புறமா? அவ்வளோதாம்பாப்பா. கத முடிஞ்சிட்டு. முடிஞ்சிட்டா? அந்த யான சிங்கமெல்லாம் எங்கப்பா? அதெல்லாம் காட்டுக்குப்போயிட்டு பாப்பா. போயி..? ஐயோ பாப்பா.. கதமுடிஞ்சிட்டு பாப்பா. நீ தூங்கு. வேறகதசொல்லுப்பா.. சொன்னா கேக்கமாட்டே நீ? தூங்கு பாப்பா. ரோ..ரோ...ரோ... போப்பா.. வேற கத சொல்லு. "..." சொல்லுப்பா. ஒரு ஊர்ல ஒரு அப்பாஅம்மாவாம்.. ம்ம்ம்ம்.. அவங்களுக்கு யாழினு ஒரு பாப்பாவாம். ஐய்..நானு.. ம்க்கும்.. அந்த பாப்பா ஒருநாள் அவங்கப்பாகிட்ட, கதசொல்லுப்பா.. கதசொல்லுப்பா..னு சொல்லுச்சாம். ம்ம்ம்ம்.. அவங்கப்பாவும் கதசொன்னாங்களாம். ம்ம்ம்ம்.. என்னகதப்பா? ஐயோ.. நீ முதல்ல இந்தக்கதய கேளு. சரிப்பா. சொல்லுப்பா. கதய சொல்லிமுடிச்சதும், இன்னோரு கதசொல்லுப்பானு அடம்புடிச்சுதாம். அவங்கப்பா கடுப்பாயி ரெண்டு சாத்துசாத்தி படுக்கவச்சாங்களாம். அப்புறம்..? ஐயோ பாப்பா.. உனக்கு புரியலயா? புரியுதுப்பா.. நீ வேறகதசொல்லுப்பா.. "..." ப்பா.. "..." ஏய் பாப்பா.. அப்பா தூங்கிட்டாங்கடி.. ஐய்..அம்மா.. நீ தூங்கலையாம்மா? இல்ல பாப்பா.. நானும் உங்கூடசேர்ந்து அப்பாசொன்னகதையக்கேட்டேன்டி. ம்ம்ம்ம்.. சரி பாப்பா.. தூங்கலாமா? ம்மா.. ஏம்மா..? நீயொரு கதசொல்லுமா.. அம்மாவுக்கு தூக்கம்வருதுடா செல்லம். எனக்கு வரலியேம்மா.. சரி. ஒரு ஊர்ல... எந்தவூர்லம்மா? . . . . . பொழுது இனிதாய்ப்புலர்ந்தது. சமர்ப்பணம்: எல்லாப்பெற்றோர்களுக்கும். #பாலா ஃபீனிக்ஸ். Relaxplzz ![]() |
Posted: 09 Jan 2015 06:50 AM PST |
Posted: 09 Jan 2015 06:40 AM PST |
Posted: 09 Jan 2015 06:30 AM PST |
Posted: 09 Jan 2015 06:20 AM PST |
Posted: 09 Jan 2015 06:10 AM PST (சாப்ட்டு முடிச்சிட்டு இலையை மடிக்க போகிறார்) சர்வர் - சார் இலையை மடிக்கதீங்க ஆள் - எதுக்குயா மடிக்க வேணாம்னு சொல்ற நா(சாப்ட்டு முடிச்சிட்டு இலையை மடிக்க போகிறார்) சர்வர் - சார் இலையை மடிக்கதீங்க ஆள் - எதுக்குயா மடிக்க வேணாம்னு சொல்ற நான் சாப்ட்டு முடிச்சிட்டேன் சர்வர் - இதே இலையை தான் அடுத்த ஆளுக்கு போடணும் அதான் சொல்றேன் அப்படியே வைங்க ஆள் - என்னது இதே இலையை போடுவியா?. அவரு சங்கட பட மாட்டாரா? சர்வர் - நீங்க என்ன என்ன இப்ப சங்கட பட்டீங்களா? #### ஆள் 1 - என்னைய இது டீல ஈ இருக்கு? ஆள் 2 - அது வைட்டமின் ஈ அதனால சாப்புடுங்க உடம்புக்கு நல்லது #### ஆள் 1 - சர்கரை போடாம ஒரு காபி சர்வர் - ஓகே சார் ஆள் 2 - எனக்கு பில் போடாம ஒரு "டீ" சர்வர் - என்ன சார் இப்படி கேக்குறீங்க? ஆள் 2 - அவருக்கு மட்டும் சர்க்கரை போடாம தரீங்க அப்ப எனக்கு தர மாட்டீங்களா? சர்வர் - ??? #### ஆள் - சர்வர் சாப்பாடுல கரப்பான்பூச்சி கடக்குங்க. சர்வர் - பரவால சாப்புடுங்க நாங்க அதுக்கெல்லாம் பில் போட மாட்டோம் :P :P Relaxplzz |
Posted: 09 Jan 2015 06:00 AM PST FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட image "1" தோன்றும். இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தேர்வு செய்து கொள்க. தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.பின் கீழ்க்கண்ட image 2 தோன்றும். இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.image "3" உள்ள படத்தை பார்க்க. உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால் போதும்.அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும். தற்போது நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க முடியும். இந்த மென்பொருளை தரவிறக்க https://www.dropbox.com/s/8mjxj7pzt2oshzw/Prevent.rar?dl=0 இதை நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்... Relaxplzz ![]() |
Posted: 09 Jan 2015 05:50 AM PST |
Posted: 09 Jan 2015 05:40 AM PST |
Posted: 09 Jan 2015 05:30 AM PST |
Posted: 09 Jan 2015 05:20 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment