Friday, 9 January 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அழகிய ஈழம்! நல்லூர் கந்தசுவாமி கோயில்!

Posted: 09 Jan 2015 07:38 AM PST

அழகிய ஈழம்!

நல்லூர் கந்தசுவாமி கோயில்!


'தெரிந்த பிசாசு' ராஜபக்சேவை ஓட ஓட "வாக்குகளால்" விரட்டியடித்த ஈழத் தமிழர்கள்!!

Posted: 09 Jan 2015 07:35 AM PST

'தெரிந்த பிசாசு'
ராஜபக்சேவை ஓட ஓட
"வாக்குகளால்"
விரட்டியடித்த ஈழத்
தமிழர்கள்!!


காலை வேளைகளிலும், மாலை வேளைகளிலும் வாக்கிங் செல்லும் நிறைய நண்பர்கள் காலில் ஷூ அ...

Posted: 09 Jan 2015 05:54 AM PST

காலை வேளைகளிலும், மாலை வேளைகளிலும்
வாக்கிங் செல்லும்
நிறைய நண்பர்கள்
காலில் ஷூ அணியாமல்
செருப்புடனே வாக்கிங்
செல்கின்றனர். வாக்கிங்
அல்லது ஜாகிங் இதில்
எதுவாக இருந்தாலும்
ஷூ அணிந்து செல்வதே நல்லது.அவ்வாறு அணியவில்லை என்றால்
கால் மூட்டுகளில்
தேய்மானம் ஏற்படும்
வாய்ப்பு அதிகமாகிறது....
அதனால் உங்கள்
கால்களுக்கு நன்றாகப்
பொருந்தும்
ஷூக்களை அணிந்து வாக்கிங்
செல்வதே சரியான
முறையாம்....!

ஏன் மீத்தேன் வரக்கூடாதுனே சொல்லுறியே நீ தஞ்சாவூரானு நண்பர் ஒருவர் கேட்டார்!! #இ...

Posted: 09 Jan 2015 05:42 AM PST

ஏன் மீத்தேன்
வரக்கூடாதுனே சொல்லுறியே நீ
தஞ்சாவூரானு நண்பர்
ஒருவர் கேட்டார்!!

#இல்ல சார்
பசிச்சா டெய்லி சோறு தான்
சாப்பிடுறேனு சொன்னேன்.

@காளிமுத்து

பெரும் காட்டை அழித்து பயண தூரத்தை குறைத்து விட்டோமென திரும்பி பார்த்தால், நீண்ட...

Posted: 09 Jan 2015 05:39 AM PST

பெரும்
காட்டை அழித்து பயண
தூரத்தை குறைத்து விட்டோமென
திரும்பி பார்த்தால், நீண்ட
தூரத்திற்கு அறுந்து கிடக்கிறது உணவுச்சங்கிலி!!

@காளிமுத்து


அந்த காலத்தில பொழுது போகவில்லை என்றால் பாட்டிகள் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி மே...

Posted: 09 Jan 2015 05:36 AM PST

அந்த காலத்தில
பொழுது போகவில்லை என்றால்
பாட்டிகள்
வெற்றிலையில்
சுண்ணாம்பு தடவி மேலும் கீழும்
தடவுவாங்க, நாம
ஸ்மார்ட் போன் டச்
ஸ்கிரீனில்
மேலும் கீழும்
தடவுகிறோம்...

@காளிமுத்து

'Prepared by bramins'. அந்த அப்பளம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களையும...

Posted: 09 Jan 2015 05:30 AM PST

'Prepared by bramins'. அந்த அப்பளம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களையும் பிராமணர்கள் தான் உற்பத்தி செய்தனரா??


Ancient Tamil Civilization: During the chola period, Perumukkal was known as...

Posted: 09 Jan 2015 05:04 AM PST

Ancient Tamil Civilization:


During the chola period, Perumukkal was known as "Perumukkilaana Gangai Konda Nalloor"

Perumukkal is located 12 kilometres east of Tindivanam.

Perumukkal village has 6000 years old heritage. The historical importance of the village is the presence of 4000 B.C.E. Petroglyph, 7th century Mukthialeeswarar Temple, ruined Kamatchiamman temple and a Dargah.

Petroglyph

On the top of the hill, petroglyphs are found in a cave namely, Sita Cave. Local people believe Sita lived in this cave. This is the only petroglyph found in Tamil Nadu and also it is one among the four in India. These petroglyphs are similar to the Egyptian Hieroglyphics letters and hence it is dated to 4000 B.C. But some researchers dated to megalithic.

Mukthialeeswarar Temple

This temple is located atop of the perumukkal hillock. which had originally been built in brick, was converted into a stone temple during the period of Vikrama Chola (1118-35 CE). The deity of the temple is known as Tiruvanmikai Eswaramudayar as well as Perumukkal Udayar in Tamil (பெருமுக்கல் உடையார்) and Mukthiyaleeswarar in Sanskrit.The donations made by the Chola, Pandya, Sambuvaraya, Vijayanagara rulers have been recorded in more than 60 inscriptions found on the temple walls and vatteluthu inscription dating back to 7th century C.E.

Video:- Perumukkal Petroglyph

https://www.youtube.com/watch?v=gUxVwZXf6rQ&list=UUppaK1uqALtjRqhta8L0EKw&index=5&feature=plcp

http://www.mashpedia.com/Perumukkal

https://www.facebook.com/perumukkal/photos_stream

பெருமுக்கல் (பெருமுக்கிலான கங்கை கொண்ட நல்லூர்)

வரலாற்று காலத்திற்கு முந்தைய பாறைக் கீறல்கள் (கற்பாறைச் செதுக்குவேலை)

பெருமுக்கல் என்பது தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஓர் சிற்றூர் ஆகும். திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இங்குள்ள குன்று வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். இயற்கை வளமும் அழகியல் சூழலும் நிறைந்த இவ்வூரின் முக்கிய தொழில் விவசாயம்.

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் பேருந்துச் சாலையில் இக்குன்று அமைந்துள்ளது. புதுவையிலிருந்து கிளியனூர் வழியாகவும் இவ்விடத்திற்குச் செல்லலாம்.

பாறைக் கீறல் எழுத்துகள்

இங்குள்ள பாறைக்குகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பான பாறைக் கீறல் எழுத்துகள் காணப்பெறுகின்றன. அவை உருவங்களாக இல்லாமல் குறியீடுகளாக அமைந்துள்ளன. இவற்றை ஆசிவக சமயத்தின் குறியீடுகள் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். பறவையின் நகத்தினைக் கொண்டு ஒரு இளக்கமான பொருளில் கீறல் ஏற்படுத்தினால் எவ்வாறு அந்த வடு அமையுமோ அதனை ஒத்த வடிவம் கொண்ட குறியீடு இது. ஏர்க்கலப்பை கொண்டு நிலத்தில் உழும் போது ஏற்படும் சால் உழவின் வடிவையும் ஒத்தது. இருபுறப் பட்டைகளிலும் வழவழப்பும் ஆழ்ந்த கூர்முனைப் பள்ளம் கீறல் தெளிவாகவும் அமைந்திருக்கும். ஆசீவகத் துறவு நிலைப் புகும் மாணவர்கள் உயிர்நூல் அறியும் முகத்தான் குறிஞ்சி, முல்லை, மருதம் எனும் மூவகை நிலங்களிலும் பயணிக்கும்போது அவர்தம் ஆய்வுக்காக எவ்விடம் செம்மையான நடுவமாக அமையுமோ, அங்குள்ள கற்பாறைகளில் இவ்வடிவம் செதுக்கப்பட்டது. சிற்சில இடங்களில் புள்நகக் கீற்று இரண்டு அல்லது மூன்றாகவும், முக்கோணம் சேர்த்தும் வரையப்படுவதுண்டு. இத்தகைய கற்பாறைகளிலிருந்து சேய்மைத்தான உயிரியக்கங்களையும் ஆயும் ஏந்து இருந்ததாலே இவ்விடங்கள் இக்குறியீட்டால் அடையாளப்படுத்தப்பட்டன.

சோழர் காலக் கோயில்கள்

பெருமுக்கலில் குன்றின்மீது ஒரு கோயிலும் அடிவாரத்தில் மற்றொரு கோயிலும் உள்ளது. குன்றின்மீது உள்ள கோயில் "முதலில் செங்கல்கோயிலாக இருந்து, விக்கிரம சோழன் காலத்தில் (கி.பி. 1118-35) கற்கோயிலாக மாற்றப்பட்டது. இக்கோயிலின் இறைவன் பெயர் தமிழில் திருவான்மிகை ஈஸ்வரமுடையார் என்றும், பெருமுக்கல் உடையார் என்றும், வடமொழியில் "முக்கயாசலேஸ்வரர்' என்றும் வழங்கப்படுகிறது. பாறைகளில் 60-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழ, பாண்டிய, சம்புவரைய, விசயநகரமன்னர்கள், கோயிலுக்கு வழங்கிய நன்கொடைகளைக் குறிக்கின்றன என அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

சோழர் காலத்தில் மிக சிறப்பான ஊர். இந்த ஊர் 6000 வருடம் பழமையானது, இந்த ஓவியம் வரையப்பட்டு 6000 ஆம் ஆண்டுகள் ஆகிறது.

அங்கு இருக்கும் கோவில் முதிலேஸ்வரர் கோவில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.


தமிழரின் மறைந்த இசைக்கருவி! தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி! இசை இனிமை பயப்பது...

Posted: 09 Jan 2015 05:04 AM PST

தமிழரின் மறைந்த இசைக்கருவி!

தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி!

இசை இனிமை பயப்பது, கேட்பவரைத் தன் வயப்படுத்தும் இயல்புடையது. பண்டைத் தமிழகத்தில் வேட்டைச் சமூகத்திலேயே இசை தோன்றியிருந்தாலும் உற்பத்திச் சமூகமே இசையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்தியுள்ளனர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது. இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது. இந்த நிலையில் யாழினை மீட்டுருவாக்கம் செய்தல் அவசியமான ஒன்று. எனவே, யாழின் தோற்றம், வடிவம் - வகை அதன் பரிணாமம் அது அழிந்ததற்கான சமூகப் பின்புலம் முதலியவற்றை காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.யாழின் தோற்றம்:வேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையோ யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம்.

இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது. பதிற்றுப்பத்து, வில்யாழ் முல்லை நிலத்திலேயே முதலில் தோன்றியது என்று கூறினாலும், குறிஞ்சி நிலத்தில்தோன்றியது என்பதே பொருத்தமுடையது. ஏனெனில் குறிஞ்சி நிலத்தில் தான் வேட்டைத் தொழில் மிகுதியாக நடைபெற்றது. இந்த வில்யாழ் மனிதனின் முயற்சியால், உழைப்பால் பல்வகை யாழாக மலர்ந்தது.வடிவம் வகை:யாழின் வடிவத்தைத் துல்லியமாக அறியப் போதிய சிற்பங்களோ, ஓவியங்களோ இன்று நம்மிடம் இல்லை. சங்க இலக்கியங்களான புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் பக்தியிலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ன. என்றாலும் யாழின் வகைகளைப் பேரியாழ், சீறியாழ், மகரயாழ், சகோடயாழ் என்று அறிய முடிகிறதே ஒழிய அதன் வடிவினை அறிய முடியவில்லை. பெரும்பாணாற்றுப்படை (3-16 அடிகள்) 'பூவை இரண்டாகப் பிளந்தது போன்ற உட்பக்கம், பாக்கு மரப்பாளையிலுள்ள கண்களைப் போன்ற துளை, இணைத்த வேறுபாடு தெரியாதபடி உருக்கி ஒன்றாய்ச் சேர்த்தது போன்ற போர்வை, நீர் வற்றிய சுனை உள் இருண்டிருப்பது போன்ற உட்பாகம், நாவில்லாத வாய்ப்பகுதி பிறைநிலவு போலப் பிளவுப்பட்ட பகுதி, வளைசோர்ந்த பெண்களின் முன்கையைப் போன்ற வார்க்கட்டு, நீலமணி போலும் நீண்ட தண்டு, பொன்னுருக்கிச் செய்தது போன்ற நரம்புகள் கொண்ட யாழ்' என்று கூறுவதை வைத்து யாழின் தோற்றத்தை ஓரளவு மனக்கண்ணில் காண முடிகிறது.

யாழின் வகைகள் என்று பார்க்கும் பொழுது வில்யாழ், பேரியாழ் (21 நரம்புகள்), சீறியாழ் (9 நரம்புகள்), என்பன சங்ககாலத்திலும், மகரயாழ் (17 (அ) 19 நரம்புகள்), சகோடயாழ் (14(அ) 16 நரம்புகள்), செங்கோட்டு யாழ் (7 நரம்புகள்) என்பன காப்பியக் காலங்களிலும் இருந்திருக்கின்றன. கல்லாடர் (கி.பி.9-ஆம் நூற்றாண்டு) தமது நூலில் நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், மருத்துவயாழ் (தேவயாழ்) முதலியவற்றைக் குறித்துள்ளார். சாத்தான் குளம் அ.இராகவன் தமது 'இசையும் யாழும்' என்னும் நூலின் யாழின் 24 வகைகளைக் குறித்துள்ளார்.யாழின் பரிணாமம்:வில்லின் அடியாகத் தோன்றிய வில்யாழ் முதலில் குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்றாலும் நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நான்கு நிலங்களுக்கும் உரியதாக அமைந்தது. யாழினை இசைப்பதற்கென்றே 'பாணர்' என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டுள்ளார்.தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர். அதனாலேயே ஒரு நரம்பில் தொடங்கி மூன்று, ஐந்து, ஏழு..... என்று ஆயிரம் நரம்புகள் கொண்ட யாழ் உருவாகியது. தொடக்கத்தில் வடிவம் பற்றிய சிரத்தை இல்லையென்றாலும் சில காலங்களின் மகரம், செங்கோடு எனப் பல வகையான யாழ்கள் தோன்றின. இவ்வாறாக யாழ் கி.பி.9-ஆம் நூற்றாண்டுவரை பலவகையாக வளர்ந்தது. இதற்குப் பிறகு வடிவில் ஓரிரு வேறுபாடுகள் கொண்டு வீணையாக பரிணாமம் கொண்டது. அந்த வீணையே இசையுலகில் இன்றளவும் முதலிடம் வகிக்கிறது.
யாழ் மறைந்ததற்கான சமூக பின்புலம்:யாழ் இசைக்கலைஞர்களான பாணர்கள் பெயரிலேயே இரண்டு சங்கநூல்கள் தோன்றியுள்ளதில் இருந்து யாழ் மற்றும் பாணர்களின் மதிப்பை அறியமுடிகிறது.

அந்நூல்கள், மன்னர்கள் பாணர்களைப் போற்றியும், புரந்தும் வந்தள்ளமையைக் காட்டுகின்றன. யாழ் பாடிக் கொண்டே இசைக்கும் கருவியாக இருந்துள்ளது. சாதாரண மக்களிடம் புழக்கத்தில் இருந்த யாழ் ஒரு காலக்கட்டத்தில் தெய்வத்தன்மை பெற்று வணக்கத்திற்கு உரியதாக மாறியது. சங்க இலக்கியம் மற்றும் முற்காலக் காப்பியங்களில் இசைக் கருவியாக யாழ் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால் பக்தியிலக்கிய காலத்தில் யாழும் அதன் பரிணாமமான வீணையும் ஒருங்கே காணப்பட்டன என்பதை 'ஏழிசை யாழ், வீனை முரலக்கண்டேன்' 'பண்ணோடி யா' வீணை பயின்றாய் போற்றி' என்ற மாணிக்க வாசகரின் பாடல்கள் பிரதிபலிக்கின்றன. ஆனால் கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீவக சிந்தாமணியின் 'வீணை என்ற யாழையும் பாட்டையும் (730அடி)' என்ற அடி யாழும், மிடறும் உடன்நிகழ்ந்த இசையே வீணை என்ற பொருள் தருகிறது. மேலும், 'வெள்ளிமலை வேற்கண்ணாளைச் சீவகன் வீணை வென்றான் (730 அடி)' என்ற அடிக்கு உரை எழுதிய ஆசிரியர், சீவகன் காந்தர்வ தத்தையை யாழும், பாட்டும் வென்றான் என்று குறித்துள்ளார்.எனவே, யாழே வீணை என்று குறிக்கப்பட்டு பிற்காலத்தில் தனி இசைக்கருவியாக வளர்ந்தது என்பதை அறிய முடிகிறது. மேலும், யாழ் என்ற இசைக்கருவி மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த காலகட்டத்தில் அதிலிருந்த வேறொரு இசைக் கருவியான வீணை தோன்றியதற்கான காரணம் ஆய்விற்கு உரியது. சங்க காலத்திலேயே ஆரியர்களின் ஆதிக்கம் தொடங்கியது.

ஆரியர்கள் தங்களுக்கான மொழியை, நூல்களை, தெய்வங்களை, பழக்கவழக்கங்களை, கலைகளை உருவாக்கிக் கொண்டனர். தமிழரின் பண்பாட்டினை உள்வாங்கி, அவற்றை தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டனர். அதற்குச் சரியான சான்று பரதநாட்டியம், கணிகையர் வீட்டில் வளர்ந்த பரதநாட்டியம், ஒரு காலகட்டத்தில் ஆரியர்களின் கலை ஆசிரியர்களுக்கே உரிய கலையாக மாற்றப்பட்டது. வீணையும் அவ்வாறு உருவாக்கப்பெற்றதே. தமிழரின் ஆதி கருவியாக யாழின் வடிவிலிருந்து வீணை என்ற ஒரு இசைக்கருவியை உருவாக்கித் தங்களுக்குரியதாக அமைத்துக் கொண்டனர். அதனைத் தென்னிந்தியா முழுவதும் பரப்பினர்.வீணையின் மீது தெய்வத்தன்மையை ஏற்றி அதனைத் தெய்வங்களுக்கு உரியதாக அமைத்தனர். வீணையை ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே வாசிக்கும் நிலையினை உருவாக்கினர். ஆரியர்களின் ஆதிக்கமும் விணையின் வளர்ச்சியும் தமிழர்களின் இசைக்கருவிகளின் முதன்மையான யாழினை முற்றிலுமாக அழித்துவிட்டன. இந்த நிலையில் நமது இசைக் கருவியான யாழினை இலக்கியங்கள் வாயிலாக மீட்டெடுப்பது அல்லது நினைவுபடுத்துவது தேவையான ஒன்று.

நன்றி : Ancient Tamil Civilisation


Ancient Tamil Civilization : Megalithic burials found at Thandikudi Excavati...

Posted: 09 Jan 2015 02:53 AM PST

Ancient Tamil Civilization :


Megalithic burials found at Thandikudi

Excavations conducted by Tamil University research scholars at Thandikudi in Dindigul district indicate the importance of lower Palani hills during the Sangam age, according to E. Sundaramurthy, Vice-Chancellor, Tamil University.

Sharing with presspersons here on Thursday the findings of the excavations carried out by the department of Epigraphy and Archaeology in May, he said the region was associated with two Sangam age chieftains, Thondrikon and Kodaiporunan. In `Purananooru' (399), Sangam poet Aiyyur Mudavanar spoke about one chieftain, who ruled over the Thondri region, which might be identified with Thandikudi.

Another poet, Perundalaisattanar, recorded (`Purananooru' 205 and `Ahananooru' 13) that Kodaiporunan performed a `velvi'. `Kodai' was identified with present Kodaikanal area.

Thandikudi is situated about 47 km mortheast of Batlagundu in Lower Palani hills in Kodaikanal taluk. It is on the left bank of Marudanadi, about 4,400 feet above mean sea level. The serene location of Thandikudi had remained an important archaeological site since megalithic times.

The first cist, on the coffee board campus at Thandikudi in the northern part of the burial complex, yielded the earliest form of burial. The simple cist with a passage in the east had a trapeze-shaped porthole. It is covered with a capstone weighing more than three tonnes. The important ritual for the departed soul was performed on the floor slab. Nearly 50 pots such as ring stands, plates, bowls, four-legged jars and carinated pots were placed either below or on the sides of the four urns kept facing one another in the four corners of the cist.

http://www.thehindu.com/2004/06/28/stories/2004062803680600.htm

Thandikudi inscription of Kulasekhara Pandya

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=727

Archaeological Investigations at Thandikudi

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=727

கொடைக்கானல் அருகில் உள்ள ஊர் தாண்டிக்குடி ஆகும். இது தான்றிக்குடி என முன்பு அழைக்கப்பட்டது. தான்றி என்பது மரமாகும். தான்றி மரத்தின் அனைத்துப் பகுதிகளும் மருத்துவக்குணம் கொண்டவை.

தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினர் கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள தாண்டிக்குடி எனும் சிற்றூரில் நடத்திய அகழாய்வில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமச்சின்னங்கள், பானைகள், பவளமணிகளையும் கண்டெடுத்துள்ளனர். தாண்டிக்குடி மலைப்பகுதியில் மிகப் பெரும் மக்கள் வாழிடம் இருந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

தாண்டிக்குடி பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளுகு முற்பட்ட ஈமச்சின்னங்கள் இருப்பதை 1928ல் முதன்முதலாக கண்டறிந்தவர் ஆங்கிலேடு என்று ஆங்கிலேயர் ஆவார். இவர் அக்காலத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தவர். அதற்குப் பின்னர் தமிழப் பல்கலைக்கழத்தினரே இதில் முழுமையாக ஆய்வு செய்தனர். இப்பகுதி மக்கள் இந்த சின்னங்களை வாலியர்வீடு, பேத்து, குகை என்று அழைக்கின்றனர்.

கற்பதுக்கைகளில் செய்யப்பட்ட ஆகழாய்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பளிங்கு, சூதுபவளம், அஸ்டியடைட் போன்ற அரிய கல்மணிகள் அகழந்தெடுக்கபட்டன. இவற்றில் எண்ணூறுக்கும் மேற்பட்டவை ஸ்டியடைட் மணிகளாகும். இவை 5 மி,மி அளவுடையன, தமிழகத்தில் முதன்முதலில் உவை தாண்டிக்குடி கற்பதுக்கைகளிலே கண்டறியப்பட்டுள்ளன. ஸ்டியடைட் சிந்துவெளி மக்கள் அதிக அளவில் பயண்படுத்தியுள்ளனர் என்பது இங்கு குறுப்பிடதக்கது. தாண்டிக்குடி பகுதியில் கற்பதுக்கைகளில் கிண்ணங்கள், பிரிமணைகள், பானைகள் போன்ற மட்கலன்களும் கண்டெடுக்கபட்டன.

http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20607077&edition_id=20060707&format=html


0 comments:

Post a Comment