Sunday, 4 January 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 04 Jan 2015 09:20 AM PST

அழகு

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


தகவல் துணுக்குகள் * படிப்பதும் கனவு காண்பதும் மூளையின் வெவ்வேறு பகுதிகளில் தூண்...

Posted: 04 Jan 2015 09:10 AM PST

தகவல் துணுக்குகள்

* படிப்பதும் கனவு காண்பதும் மூளையின் வெவ்வேறு பகுதிகளில் தூண்டப்படும் செயல்களாகும். அதனாலேயே நாம் கனவு காணும்போது படிக்க முடிவதில்லை!

* சராசரியாக நம் தும்மலின் வேகம் மணிக்கு 96 கிலோ மீட்டர்!

* நம் கண்களால் பழுப்பு நிறத்தின் 500 ஷேடுகளைக் கூட பிரித்து அறிய முடியும்.

* மலேசியாவிலுள்ள 'நைக்' தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களின் மொத்த வருமானத்தை விடவும், 'நைக்' அம்பாசிடராக உள்ள மைக்கேல் ஜோர்டான் அதிக பணம் சம்பாதிக்கிறார்.

* எரேசர் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் பென்சில் எழுத்துகளை அழிக்க ரொட்டிதான் பயன்படுத்தப்பட்டது.

* உலக மக்கள் தினமும் 5 லட்சம் மணி நேரங்களை இன்டர்நெட் செக்யூரிட்டி பாஸ்வேர்டுகளை அடிக்க மட்டுமே செலவழிக்கின்றனர்.

* அனைத்து துருவக்கரடிகளும் ஆழ்துயில் கொள்வதில்லை. கர்ப்பிணியாக இருப்பவை மட்டுமே அப்படி உறங்குகின்றன.

* தேனீயால் தேன் ஏற்கனவே ஜீரணம் செய்யப்பட்டிருப்பதால், நம் உடலிலும் எளிதில் ஜீரணமாகும்.

* ட்விட்டர் இணையதளத்தில் ஒரு நாளில் எழுதப்படுபவற்றை மட்டும் புத்தகமாக ஆக்கினாலே, ஒரு கோடி பக்கங்கள் தேவைப்படும்!

* நூலகங்களில் அதிகம் திருடப்பட்டவை என்ற சாதனையை படைத்திருப்பது கின்னஸ் சாதனைப் புத்தகமே!

Relaxplzz

உனக்கான விலை பொருட்களை உருவாக்கியவனின் சாதியை கேட்காத நீ.. உனக்காக வீடு வாடகைக்க...

Posted: 04 Jan 2015 09:01 AM PST

உனக்கான விலை பொருட்களை உருவாக்கியவனின் சாதியை கேட்காத நீ..
உனக்காக வீடு வாடகைக்கு கேட்கும் பொழுது
உன் விக்கலுக்கு தண்ணீர் தருபவனிடம்
உன்னை விழுந்ததும் தூக்கிவிடுபவனிடம்
உனக்காக விட்டுக்கொடுப்பவனிடம்
உன்னை வாழவைக்கும் மருத்துவரிடம்
உனக்காக வாதாடும் வக்கீலிடம்

உனக்கான வாழ்விற்கு மட்டும் ஏன் கேட்கிறாய் சாதியை...

உன் இரத்தப் பிரிவை ஊரெங்கும் சொல்லிவை..
உன் சாதிப் பிரிவை உனக்குள் மூடிவை..

Relaxplzz


"மனம் தொட்ட வரிகள்" - 1

உண்மையான நேசம் சொல்லும் அருமையான ஓவியம்... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 04 Jan 2015 08:56 AM PST

உண்மையான நேசம் சொல்லும் அருமையான ஓவியம்...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


ஓவியங்கள் - 2

கவுண்டர் சத்தியராஜிடம் : மாப்ள பேசாமா நீ MLA ஆகிடு.. வடிவுக்கரசி : அதுக்கு பெரி...

Posted: 04 Jan 2015 08:45 AM PST

கவுண்டர் சத்தியராஜிடம் : மாப்ள பேசாமா நீ MLA ஆகிடு..

வடிவுக்கரசி : அதுக்கு பெரிய
படிப்புலாம் படிச்சியிருக்னும்.

கவுண்டர் : எதுக்கு, அந்த
கருமத்துக்கு படிப்பே தேவயில்லை க்கா..

வடிவுக்கரசி : என்ன சொல்லுற நீ?

கவுண்டர் : 'ஊறு-ல நொண்டி நொசக்கன், வெந்தது வேகாதது, பெட்டி கடையில
கடன் சொன்னது, பீடி-யை கிள்ளி குடிச்சது, சந்தை கடையில கருப்பெட்டி திருடிட்டு ஓடுனது'..
இந்த மொத்த கும்பலும் அங்க
தான்க்கா இருக்குது..!

#கவுண்டர்_டயலாக்ஸ் @ Relaxplzz


உடம்புக்கு நல்லது!!!

Posted: 04 Jan 2015 08:40 AM PST

உடம்புக்கு நல்லது!!!


உடற்பயிற்சி செய்ற நேரத்துல, எவன்டா வண்டிய குறுக்கால விட்டது.. ;-) ;-)

Posted: 04 Jan 2015 08:35 AM PST

உடற்பயிற்சி செய்ற நேரத்துல, எவன்டா வண்டிய குறுக்கால விட்டது.. ;-) ;-)


"அனிமல் ஸ்டோரி"

:) Relaxplzz

Posted: 04 Jan 2015 08:31 AM PST

செய்யும் வேலையில் விருப்பமில்லை என்பவர்கள் இவர்களைப் பார்த்து திருந்தலாம்.. (y) (y)

Posted: 04 Jan 2015 08:25 AM PST

செய்யும் வேலையில் விருப்பமில்லை என்பவர்கள் இவர்களைப் பார்த்து திருந்தலாம்.. (y) (y)


சும்மா... சும்மா... 1

:) Relaxplzz

Posted: 04 Jan 2015 08:18 AM PST

# படித்ததில் பிடித்தது # என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர...

Posted: 04 Jan 2015 08:10 AM PST

# படித்ததில் பிடித்தது #

என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா கில்லாடி. கொடிய காட்டுமிருகங்களைக் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள்.

''தாத்தா... கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா?'' என்று சிறுவனாக இருந்த நான் அவரிடம் ஒரு முறை கேட்டேன்.

''அடே பையா... வேட்டைக்குப் போவதே அந்த த்ரில்லுக்காகத்தானே!'' சிரித்தார் தாத்தா.

ஆமாம். வேட்டைக்குப் போவதென்பது அவருக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது. காடு என்பது பயங்கரமான பிரதேசம். எந்தப் புதரிலிருந்து எந்தக் காட்டுமிருகம் பாயுமோ... எதுவுமே தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடப் போவது திகிலான விஷயம். என்றாலும், ஏன் வேட்டையாடப் போகிறார்கள்?

எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதுமே ஓர் அலாதியான இன்பம். மகாராஜா தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ, சிங்கத்தையோ பிடித்து வந்து மரத்தில் கட்டி வைக்கச் சொல்லி அதை அம்பு எய்து கொல்லமுடியும். ஆனால், அதில் என்ன பெரிய சந்தோஷமோ, த்ரில்லோ இருக்கிறது? எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையில் இருந்து வரும் தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில்தானே முழுமையான சந்தோஷ மும் திருப்தியும் கிடைக்கும்?

அப்படிப் பார்த்தால் நம் வாழ்க்கையும் ஒரு மாய வேட்டைதானே? எதிர்பாராத நபர்களிட மிருந்து எதிர்பாராத நேரத்தில் சோதனைகள், நெருக்கடிகள் வரும். தாக்குதல்கள் வரும். அதை எதிர்கொள்வதில்தான் சந்தோஷம் இருக்கிறது. 'ஐயோ.. என் ஆருயிர் நண்பன் இப்படி என்னை ஏமாற்று வான் என்று கனவிலும் நினைக்கவில்லையே! செழிப்பாக ஓடும் என்று நினைத்துத் தொடங்கிய வியாபாரம் இப்படி ஒரேயடியாகப் படுத்துவிட்டதே!' என்றெல்லாம் வருத்தப்பட்டுப் புலம்புவதில் அர்த்தம் இல்லை.

வேட்டைக்குப் போகும் யாரும் ''இந்தப் புலி நான் ஏமாந்த நேரம் பார்த்து என் மீது பாய்ந்துவிட்டது. இது நீதியில்லை''என்று புலம்பியதுண்டா?

வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள். போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகமும் கிடைக்கும். ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்!

Relaxplzz

(ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்)" அடிமையாகாதே! ! ! போதைக்கு அடிமையாகாத...

Posted: 04 Jan 2015 08:00 AM PST

(ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்)"

அடிமையாகாதே! ! !

போதைக்கு அடிமையாகாதே; புதை குழியில் வீழ்ந்திடுவாய்!

மாதுக்கு அடிமையாகாதே; மதிகெட்டு அலைந்திடுவாய்!

சூதுக்கு அடிமையாகாதே; சுற்றத்தை இழந்திடுவாய்!

பணத்திற்கு அடிமையாகாதே; குணத்தை இழந்திடுவாய்!

புகழ்ச்சிக்கு அடிமையாகாதே; மகிழ்ச்சியை
இழந்திடுவாய்!

தூண்டுதலுக்கு அடிமையாகாதே; தூண்டிலில் மாட்டிக்கொள்வாய்!

புலன்களுக்கு அடிமையாகாதே; பலன்களை இழந்திடுவாய்!

கோபத்திற்கு அடிமையாகாதே; ஆபத்தில் வீழ்ந்திடுவாய்!

உணர்ச்சிக்கு அடிமையாகாதே; உன்னையே நீ இழந்திடுவாய்!

அன்பிற்கு அடங்கு, அறிவுக்கு அடிபணி அத்தனையும் பெற்றிடுவாய்!!!

Relaxplzz


"சிந்தனைகள்"

இப்படியும் ஒரு காலம் வரலாம்... :P :P

Posted: 04 Jan 2015 07:50 AM PST

இப்படியும் ஒரு காலம் வரலாம்... :P :P


மார்கழிமாதத்துக்கோலத்தைவிட கோலம்போட்டுமுடித்ததும் அந்த கோலத்தைப்பார்த்து பெண்கள...

Posted: 04 Jan 2015 07:45 AM PST

மார்கழிமாதத்துக்கோலத்தைவிட
கோலம்போட்டுமுடித்ததும்
அந்த கோலத்தைப்பார்த்து
பெண்கள் விடும் புன்னகை
பேரழகு..!

(இதுக்குதான் விடியக்காலையில ஜாகிங்பண்றியா நீயி..?) ;-)

- ஃபீனிக்ஸ் பாலா

பெர்னாட்ஷா பள்ளிச் சிறுவனாக இருந்த போது, ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து, " உங்களி...

Posted: 04 Jan 2015 07:36 AM PST

பெர்னாட்ஷா பள்ளிச் சிறுவனாக இருந்த போது, ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து, " உங்களில் சொர்க்கம் போக விரும்புகிறவர்கள் எழுந்து நில்லுங்கள் " என்று கூறியுள்ளார்.

பெர்னாட்ஷா தவிர அனைத்து மாணவர்களும் எழுந்தனர்.

வியப்படைந்த ஆசிரியர், " உனக்குச் சொர்க்கம் செல்ல ஆசை இல்லையா? " என்று பெர்னாட்ஷாவைப் பார்த்துக் கேட்டதும், " எனக்கும் சொர்க்கம் செல்லும் ஆசை உள்ளது. ஆனால், இவர்கள் எல்லோரும் சொர்க்கம் சென்றபின் அது சொர்க்கமாகவா இருக்கும் ? "என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தாராம்..

:D :D

Relaxplzz


"மேதைகளின் நகைச்சுவை"

:) Relaxplzz

Posted: 04 Jan 2015 07:30 AM PST

:) Relaxplzz

Posted: 04 Jan 2015 07:20 AM PST

(கணவன் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும்...) மனைவி : வந்துட்டீங்களா...! உங்களைத்தா...

Posted: 04 Jan 2015 07:10 AM PST

(கணவன் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும்...)

மனைவி : வந்துட்டீங்களா...! உங்களைத்தான் தேடிக்கிட்டே இருந்தேன்!

கணவன் : ஏன்? என்னாச்சு..?

மனைவி : இன்னைக்கி ஒருத்தன் எங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசிட்டான்,நானும் அவங்கப்பனை நல்லா திட்டிட்டேன்!

கணவன் : சரி...!

மனைவி : இருந்தாலும் ஆத்திரம் அடங்க மாட்டேங்குது...!அவன் அப்பனோட மண்டைய உடைச்சாத்தான் நிம்மதி!

கணவன் : (கலவரப் பீதியில்...) நமக்கெதுக்கும்மா இந்த வம்பு?மன்னிச்சுவிட்டுட வேண்டியதுதானே!

மனைவி : மன்னிக்கிறதா?அந்தப் பேச்சுக்கே இடமில்ல.எங்க அந்த உருட்டுக்கட்டை.....(என்று தேடிக் கொண்டே செல்ல...)

(வாசலிலிருந்து வந்த மகன்...)

மகன் : யப்பா...சீக்கிரம் ஓடிடுப்பா!

அப்பா : ஏண்டா..?

மகன் : நான்தான் கோவத்துல தாத்தாவ திட்டிட்டேன்பா!!

அப்பா : அடப்பாவி மகனே! வீட்டுக்குள்ள வந்தாலே உசுர கையில பிடிச்சிகிட்டு அலைய வேண்டியதா இருக்கே., அய்யய்யோ ... இப்ப நான் என்ன செய்வேன்..! எங்க போவேன்..! செய்யாத குத்தத்துக்கு நாயா, பேயா அலைய வெக்கிறாங்களே..... இத கேட்க நாதியில்லையா....

:P :P

Relaxplzz

#2014_Kekepeke_Awards கெக்கேபிக்கே விருதுகள்'14 வழங்குவோர்:நாமதான் பாஸ்:) #மொ...

Posted: 04 Jan 2015 07:00 AM PST

#2014_Kekepeke_Awards
கெக்கேபிக்கே விருதுகள்'14
வழங்குவோர்:நாமதான் பாஸ்:)

#மொத்த வித்தை Award 2014 லிங்குசாமி

#கேஸ் மேல கேஸ் போடு...கதை என்னோடது' விருது: கத்தி,லிங்கா

#சிறந்த பேயோட்டி விருது: சுந்தர்.C for அரண்மனை & மிஷ்கின் for பிசாசு

#ராமராஜன் பிராண்ட் டிரவுசர் அழகி: சமந்தா (EkDho Teen Char...பாடல் )

மம்மி டம்மி அவார்ட்: ஓ.பன்னீர்செல்வம் (கும்பிடு குருசாமி)

#சுற்றுலாப்பயணி'14 விருது: மோடிஜி (உலக வலம்)

மொக்கை மியூசிக் விருது: லிங்கா (Music AR ரஹ்மான்னு சொன்னாய்ங்க

#Floptucker விருது: யான்,அஞ்சான்

#க்ளீன்_இந்தியா விருது: காங்கிரஸை மொத்தமாக துடைத்தெரிந்த மோடி

#அம்மா விரும்பாத 2014 படம் :பேங்களுர் டேஸ்

#ட்ரெண்டிங்14: ஹரஹரமகா தேவகீ
லிங்கு memes

#கூகுள்_தேடல் விருது: விஜய்(இவர ஏன்பா தேடுனீங்க...),சன்னி லியோன்(தேவுடா)

#டிவிட்டர் பின்தொடர் நாயகன் : விராட் கோலி (அனுஷ்காசர்மா இவர பின் தொடர்றது தனிக்கதை )

#செம்ம்ம தமிழ் மூவீஸ்: சதுரங்கவேட்டை,மெட்ராஸ்,ஜிகர்தண்டா.

'அடுத்தவன் வீட்ட எட்டிப்பாரு' விருது: சொல்வதெல்லாம் உண்மை

#மக்கள்_முதல்வர் எனும் புது கண்டுபிடிப்பு விருது: அதிமுக அடிமைஸ்

#ஹிட்_பாய் 2014: Ro'hit'Sharma (மரண அடி மாவீரன்)

#சினிப்பெயர்ச்சி: குஷ்பூ,கங்கை அமரன்,நெப்போலியன்.

- SureshAdithya @ Relaxplzz


ப்ரியத்தைச் சுமந்து சுமந்து கை வலிக்கிறது.. மனம் இனிக்கிறது # மகளெனும் தேவதை #...

Posted: 04 Jan 2015 06:51 AM PST

ப்ரியத்தைச்
சுமந்து சுமந்து
கை வலிக்கிறது..
மனம் இனிக்கிறது

# மகளெனும் தேவதை #

♥ ♥


# மகளெனும் தேவதை #

வாழ்கையில் எது இல்லை என்றால் போர் அடிக்கும்.???

Posted: 04 Jan 2015 06:45 AM PST

வாழ்கையில் எது இல்லை என்றால் போர் அடிக்கும்.???


:) Relaxplzz

Posted: 04 Jan 2015 06:42 AM PST

விலங்குகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் அநேகம் உள்ளது... :)

Posted: 04 Jan 2015 06:36 AM PST

விலங்குகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் அநேகம் உள்ளது... :)


சும்மா... சும்மா... 4

:) Relaxplzz

Posted: 04 Jan 2015 06:31 AM PST

அழகு

Posted: 04 Jan 2015 06:26 AM PST

அழகு


;-) Relaxplzz

Posted: 04 Jan 2015 06:20 AM PST

இந்தக் காலக் குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைப்பற்றி என்ன நினைத்தாலு...

Posted: 04 Jan 2015 06:10 AM PST

இந்தக் காலக் குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைப்பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டக்காரர்களே...

• தனிப் படுக்கையில் அல்ல அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்.

• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள் நாங்கள்.

• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்.

• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

• நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

• இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

• இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.

படித்ததில் பிடித்தது...

Relaxplzz

சிறிது நாட்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது....கிருஷ்ணக ிரி ஆவின் மேம்பாலம் அரு...

Posted: 04 Jan 2015 06:00 AM PST

சிறிது நாட்களுக்கு முன்னர் நடந்த
சம்பவம் இது....கிருஷ்ணக
ிரி ஆவின் மேம்பாலம் அருகே,
சென்னை தேசிய நெடுஞ்சாலையில்
இரண்டு காளை மாடுகள் ரோட்டில்
முட்டி மோதி விளையாடித்திரிநதன.

அப்போது, பெங்களூருவில்
இருந்து விழுப்புரம் நோக்கி வந்த
அரசு பஸ் சாலையில் ஓடி திரிந்த
மாடுகளில்,
ஒரு காளை மாடு மீது மோதியது.
இதில், தலையில் பலத்த காயமடைந்த
மாடு, சாலையில் விழுந்து ரத்த
வெள்ளத்தில்
உயிருக்கு போராடியது. உடன்
இருந்த மாடு பெரும் சத்தத்துடன்
சாலையில் விழுந்த
மாட்டை தலையில்
முட்டி எழுப்பியது.

தொடர்ந்து, விபத்தில் காயமடைந்த
மாட்டை மற்றொரு மாடு சுற்றி சுற்றி வந்து தலையால்
முட்டி எழுப்பியது.மனிதர்கள்
விபத்தில்
சிக்கி உயிருக்கு போராடிக்
கொண்டிருந்தாலும், அந்த
வழியே செல்வோர் பார்த்தும்
பார்க்காமல் போகும் இந்தக் காலத்தில்,
கால்நடைகள் மனிதாபிமானத்துடன்
உடன் வந்த
மாடு இறந்ததை அறியாமல்
முட்டி எழுப்பியதை பார்த்தவர்கள்
நெஞ்சம் நெகிழந்தனர்.

விபத்தில் சிக்கிய மாடு இறந்ததால்,
உடன் வந்த காளை மாடு பெரும் சத்தம்
போட்டு அந்த பகுதியில்
வேடிக்கை பார்க்க குவிந்த
பொதுமக்களை துரத்தியது. இதனால்,
அந்த பகுதியில்
நின்று வேடிக்கை பார்த்த
பொதுமக்கள், நாலாபுறமும்
சிதறி ஓடினர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில்
சிறிது நேரம்
போக்குவரத்து பாதித்தது.பொதும
க்கள் ஒன்று சேர்ந்து அந்த இடத்தில்
இருந்து,
காளை மாட்டை விரட்டி அடித்தனர்.
ஆனால், மாடு சிறிது தூரம்
ஓடி சென்று அந்த
பகுதியையே சுற்றி சுற்றி வந்துகொண்டு இருந்தது.

ஐந்தறிவு ஜீவன்கள் மனிதனைவிட
பாசத்தில்
ஒருபடி உயர்ந்தவை என்பது உண்மைதான்.

Thanks Dinamalar.

Relaxplzz


நீ ரசிக்க என்னிடம் அழகு இல்லை... ஆனால் நீ வசிக்க என்னிடம் அழகான இதயம் இருக்கிறத...

Posted: 04 Jan 2015 05:50 AM PST

நீ ரசிக்க என்னிடம் அழகு இல்லை...

ஆனால் நீ வசிக்க என்னிடம் அழகான இதயம் இருக்கிறது....

அடடா ;-)

#ப.பி


லீவு லெட்டர் to எச்.ஒ.டி இப்படி ஒரு லீவ் லெட்டர் எழத முடியுமா...? உங்களால்..?....

Posted: 04 Jan 2015 05:45 AM PST

லீவு லெட்டர் to எச்.ஒ.டி

இப்படி ஒரு லீவ் லெட்டர்
எழத முடியுமா...? உங்களால்..?.

From
நான் தான்,
உன் டிபார்ட்மென்ட் தான்,
உன் காலேஜ் தான்,
உன் சிட்டி தான்,

To,
உனக்கு தான்,
இந்த டிபார்ட்மென்ட் தான்,
இந்த காலேஜ் தான்,
இந்த சிட்டி தான்.

Respected Sir,

என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ, நான் இன்னிக்கு வர மாட்டேன் ....

Thanking you

Date: இன்னிக்கு தான்
Place : இந்த ஊர் தான்

Yours sincerely
நான்ந்தேன்..

Mudiumma?

:P :P

Relaxplzz

0 comments:

Post a Comment