Thursday, 22 January 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


அருமை...

Posted: 22 Jan 2015 09:53 AM PST

அருமை...


:) Relaxplzz

Posted: 22 Jan 2015 09:45 AM PST

மலர் மற்றும் இலைகளால் ஆன பெண்கள் ஹேண்ட் பேக் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 22 Jan 2015 09:38 AM PST

மலர் மற்றும் இலைகளால் ஆன பெண்கள் ஹேண்ட் பேக்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 22 Jan 2015 09:30 AM PST

:) Relaxplzz

Posted: 22 Jan 2015 09:26 AM PST

நெல்லிக்காய் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 22 Jan 2015 09:20 AM PST

நெல்லிக்காய் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


மூன்று பேருக்கு 15 வருட சிறைத்தண்டனை தரப்பட்டது. ஆனால் தன்னோடு வைத்துக்கொள்ள ஏதா...

Posted: 22 Jan 2015 09:10 AM PST

மூன்று பேருக்கு 15 வருட
சிறைத்தண்டனை தரப்பட்டது.
ஆனால் தன்னோடு வைத்துக்கொள்ள
ஏதாவது அவர்கள் கேட்கலாம்..
முதல் ஆள்,"எனக்கு 500 புத்தகங்கள் வேண்டும்"
என்றான்.

இரண்டாம் ஆள், "எனக்கு சிறையில்
உடற்பயிற்சி செய்ய உபகரணங்கள் வேண்டும்"
மூன்றாவது ஆள்,"எனக்கு ஒரு லட்சம்
சிகரெட்கள் வேண்டும்"
15 வருடம் கழித்து மூன்று பேரும்
விடுதலை செய்யப்பட்டனர்..

முதல் ஆள்," நான் நிறைய தெரிந்து கொண்டேன்
ஒரு லைப்ரரி அமைப்பேன்"

இரண்டாம் ஆள்,"நான் உடலை வலுவாக்கினேன்
ஜிம் வைப்பேன்"

மூன்றாம் ஆள், நான் சிகரெட்
பிடிப்பதை விட்டு விட்டேன்"என்றான்
எல்லோருக்கும் ஆச்சர்யம் போகும்போது லட்சம்
சிகரெட் கேட்டவன் எப்படி திருந்தினான்
என்று.

அவன் சொன்னான், "தீப்பெட்டி கேக்க
மறந்துட்டேன்ப்பா..

:P :P

Relaxplzz

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியவைகள்....!! 1. பெண் குழந்தைகள் ய...

Posted: 22 Jan 2015 09:00 AM PST

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியவைகள்....!!

1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும்அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்கவேண்டும்.

2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள்முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத்தவிர்க்க வேண்டும்.

3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடையகணவன் என்றோ,மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில்பதிய வைப்பதோ தவறு.

4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள்பார்வை அவர்கள்மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும்அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும்கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல்துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

5. உங்கள் குழந்தையால் சரியாகபொருந்தியிருக்க முடியாதநபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள்அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.

6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடியஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போதுபொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக்கேட்டு அவர்களின்பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.

7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும்அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.இல்லையென்றால், சமுதாயம்அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக்கற்றுக் கொடுத்துவிடும்.

8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாகநாம் அறிந்து கொண்டு அவர்கள்கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக்கொடுத்துவிட வேண்டும்.

9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும்இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்றசேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம்செயலிழக்கச்செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள்அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும்இதை செய்து வைக்கஅறிவுருத்துவது நல்லது.

10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள்உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்யகற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப்பகுதிகளை பிறர் யாரும்தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது எனஎச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும்அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால்,அவசியமற்ற உதவிகளை செய்யும்போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது.

11. குழந்தையை அச்சுறுத்தக் கூடியஅல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக்கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில்இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும்அடங்கும்.

12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள்குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித்திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.

13. குழந்தை ஒருவரைப்பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே,அதை கவனிக்கத் தொடங்குங்கள்.கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம்.நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள்என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்;அது நாம் பெற்றோராக இருந்தாலும்சரி அல்லது பெற்றோராகப் போகிறவராகஇருந்தாலும் சரி!

Relaxplzz


(y) Relaxplzz

Posted: 22 Jan 2015 08:55 AM PST

ஒரு லேட் நைட்லே மனைவியோட மொபைல்லே 'பீப்' சத்தம் கேக்குது. கணவன் எழுந்து, அந்த...

Posted: 22 Jan 2015 08:50 AM PST

ஒரு லேட் நைட்லே மனைவியோட மொபைல்லே
'பீப்' சத்தம் கேக்குது.

கணவன் எழுந்து, அந்த மொபைலைப் பாத்துட்டு, கோபமா மனைவிகிட்ட..

" யார் இது ..இந்த நேரத்திலே உன்னை பியூட்டிஃபுல் ( beautiful ) ன்னு சொல்றது...? " ன்னு கேக்கறான் .

மனைவி 'அட...! யாருடா அது....!! நம்மளையும் யாரோ அழகு. ன்னு சொல்ல்றாங்களே..' ன்னு ரொம்ப ஆச்சர்யமாய் (!!!!) எந்திரிச்சு மொபைலைப் பாத்துட்டு....
அவரை விடக் கோபமாய்க் கத்தினாங்க ...

"அட லூஸுப் புருஷா ... மொதல்ல உன் கண்ணாடியை எடுத்து மாட்டிட்டுப் பாரு...

அது பியூட்டிஃபுல் ( beautiful ) இல்லே... பேட்டரிஃபுல் ( battery full)

:P :P

Relaxplzz

:P Relaxplzz

Posted: 22 Jan 2015 08:43 AM PST

அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 22 Jan 2015 08:38 AM PST

அழகு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 22 Jan 2015 08:30 AM PST

;-) Relaxplzz

Posted: 22 Jan 2015 08:20 AM PST

ஆபிரஹாம் லிங்கன் முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிரா...

Posted: 22 Jan 2015 08:10 AM PST

ஆபிரஹாம் லிங்கன்

முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த
நேரத்தில், பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில்
கலந்து கொண்டார் ஆபிரஹாம்
லிங்கன்.

கூட்டம் முடிந்ததும், "உங்களில்
சொர்க்கத்துக்குச் செல்ல
விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்"
என்றார் பாதிரியார்.

எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரஹாம் லிங்கன்
மட்டும் பேசாமல் நின்றார். "ஆபிரஹாம்! நீ
எங்கே போவதாக உத்தேசம்?" என பாதிரியார்
கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும்,
"நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்"
என்று உறுதியான குரலில் சொன்னார்
அபிரஹாம்.

"நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக
மாறுவாய்" என புன்னகையுடன்
ஆசி வழங்கினார் பாதிரியார்.

1809ம் வருடம் அமெரிக்காவின்
சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை,
"தோல்விகளின் செல்லக் குழந்தை"
என்றே சொல்லலாம். அந்த
அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத்
துரத்திக் கொண்டே இருந்தன.

பிறந்த சில
வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில்
எடுபிடி வேலை பார்த்துக்
கொண்டே இரவு நேரங்களில் மட்டும்
பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார்.
இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது,
அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும்
மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர்
கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல
மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம்
சூடேற, லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தான்
இந்த அவலத்தை அகற்ற முடியும்
என்று தெரிந்தும், அவசரமாக
தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல்
வேட்பாளராக களம் இறங்கி,
படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில்,
சொந்தமாகத் தொழில்
தொடங்கி, அதில் பெரும்
கடனாளியாக மாறியிருந்தார்.

சோர்ந்து போயிருந்த லிங்கனை ஒரு போராளியாக
மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய்
சாராபுஷ். 'ஆட்சிப்
பொறுப்புக்கு வரவேண்டும் என்றால்,
ஆசைப்படுவதைப் பெறுவதற்கான
தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்'. "நீ
எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக
மாறுவாய்!" என்றார் சாரா புஷ்.

பாதிரியார் சொன்ன
அதே வார்த்தைகள்!

இப்போது லிங்கனுக்குத் தன் இலக்குப் புரிந்தது.
மனதில் தெளிவு பிறந்தது.
அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க
முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத்
தொடங்கினார் லிங்கன். மக்கள்
மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக
அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன்
பேச்சுத் திறமையையும் வளர்த்துக்
கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர்
ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார்.

ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக்
கொண்டு, 1834ல் நடந்த
நகராட்சி உறுப்பினர் தேர்தலில்
போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற
உறுப்பினர், செனட் உறுப்பினர்,
உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப்
போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல
தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்
நின்று வெற்றி பெற்றார். ஆம்,
எதுவாக மாற நினைத்தாரோ,
அதுவாகவே ஆனார் லிங்கன்!.

இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்!

1835ல் அவரின் காதலி 'ஆனி' விஷக்
காய்ச்சலால் மரணம் அடைந்தார்.
33வது வயதில் மேரியுடன் திருமணம்
முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தன.
மூன்று குழந்தைகள்
சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள்.

மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத்
தோல்விகளையும் மன
உறுதியோடு எதிர்கொண்டதால் தான்,
லிங்கன் வெற்றி பெற முடிந்தது.
அமெரிக்க ஜனாதிபதி ஆனதும்,
அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்து,
மாகாணங்களை ஒன்று சேர்த்து,
அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன்.

அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும்
அவரே மீண்டும் ஜனாதிபதியாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம்
பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு
நிறவெறியனால் சுடப்பட்டு மரணம்
அடைந்தார் லிங்கன்.

மணவாழ்க்கை பற்றி லிங்கன் கூறியது -

மணவாழ்க்கை லிங்கனுக்கு அவ்வளவு உவப்பாக
இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற
வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது "மண
வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல; போர்க்களம்"
என்று குறிப்பிட்டார்.

"நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக
மாறுவாய்" என்பது ஆபிரஹாம்
லிங்கனுக்கு மட்டுமல்ல…

நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக
விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற
ஒவ்வொருவருக்கும்
அது வெற்றி திருமந்திரம்.

(y) (y)

Relaxplzz

நேர்மையற்ற பணம் வேண்டாம்: ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர் தன...

Posted: 22 Jan 2015 08:00 AM PST

நேர்மையற்ற பணம் வேண்டாம்: ரூ. 1.9 கோடி செக்கை திருப்பியனுப்பிய ஆட்டோ டிரைவர்

தனக்கு சொந்தமில்லாத நிலத்திற்கு நஷ்டஈடாக அளிக்கப்பட்ட ரூ. 1.9 கோடி பணத்தை, வழங்கியவர்களிடமே திருப்பி அளித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் குஜராத் ஆட்டோ டிரைவர் ராஜூ.

குஜராத் மாநிலம் சனாந்த் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ பர்வாத். ஆட்டோ டிரைவர். மேற்கு வங்க மாநிலத்தில் டாடா நானோ தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு கிளம்பிய போது, அங்கிருந்து கிளம்பிய அந்த நிறுவனம் தற்போது சனாந்த் பகுதியில் தனது தொழிற்சாலையை அமைத்துள்ளது. இதற்காக அப்பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணியை, குஜராத் தொழில் வளர்ச்சி கழகம் செய்து வருகிறது. தற்போது ஒரு பிகா நிலத்திற்கு குறிப்பிட்ட தொகை வீதம் டாடா நிறுவனம் நஷ்ட ஈடு வழங்கி வருகிறது. பிகா என்பது வட இந்தியாவில் நிலத்தின் அளவை குறிக்கும் ஒரு சொல்லாகும். இப்பகுதியில் ராஜூவின் முன்னோர்களுக்கு 10 பிகா நிலம் இருந்தது. இதில் 3 பிகா நிலத்தை ராஜூவின் தாத்தா வேறொருவக்கு விற்று விட்டார். தற்போது அந்த இடத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ராஜூவின் தாத்தாவிடமிருந்து நிலத்தை வாங்கியவர், அதை பெயர் மாற்றம் செய்யவில்லை.

தற்போது, அந்த 3 பிகா நிலத்திற்கான நஷ்ட ஈடான ரூ. 1.9 கோடி ராஜூவின் பெயருக்கு செக்காக வந்துள்ளது. இதையடுத்து தனக்கு வந்த செக்கை டாடா நிறுவன அதிகாரிகளிடமே திருப்பி அளித்துள்ளார் ராஜூ. அவர் கூறுகையில், "எனது பெற்றோர் எனக்கு கற்பித்த சில விஷயங்களில் நேர்மையும் ஒன்று. நேர்மையற்ற வழியில், எனக்கு சொந்தமில்லாத வழியில் வந்த பணத்தைக் கொண்டு எனது வாழ்க்கையை நடத்த எனக்கு விருப்பமில்லை. எனக்கு மேலும் 4 பிகா நிலங்கள் உள்ளன. அது எனக்கும் எனது குடும்பத்தாரின் எதிர்கால வாழ்விற்கும் போதும்" என்று கூறியுள்ளார்.

ராஜூவின் இந்த செயலால் குஜராத் தொழில் வளர்ச்சிக்கழக அதிகாரிகள் திகைப்படைந்துள்ளனர். தங்களது வாழ்வில் இவ்வளவு பெரிய தொகை திரும்ப வந்துள்ளது இதுவே முதல் முறை என்று தெரிவித்துள்ள அவர்கள், வெறும் ரூ. 6 ஆயிரம் சம்பளத்தில் ஆட்டோ டிரைவர் வாழ்க்கையை நடத்தும் ராஜூ, இவ்வளவு பெரிய தொகைக்கு ஆசைப்படாதது தங்களுக்கு மிகவும் ஆச்சர்யமளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்குத் தெரியாது நேர்மையின் விலை ரூ. 1.9 கோடியை விட அதிகம் என்று....
Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=713890

Relaxplzz


பணக்காரனாக வேண்டுமானால் உழைப்பாளியாய் இரு! புகழ் பெற வேண்டுமானால் உண்மையாய் இ...

Posted: 22 Jan 2015 07:50 AM PST

பணக்காரனாக வேண்டுமானால்
உழைப்பாளியாய் இரு!
புகழ் பெற வேண்டுமானால்
உண்மையாய் இரு!
நண்பர்களை பெற வேண்டுமானால்
தாராள மனப்பான்மையுடன் இரு!
மெய்யறிவு பெறவேண்டுமானால்
தர்ம சிந்தனையுடன் இரு!
வேதனை அடையாமல் இருக்க வேண்டுமானால்
தன்னடக்கத்தோடு இரு!

- [புத்தர்]


அருமையான ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 22 Jan 2015 07:40 AM PST

அருமையான ஓவியம்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 22 Jan 2015 07:30 AM PST

;-) Relaxplzz

Posted: 22 Jan 2015 07:20 AM PST

பையன்: எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் சாப்பிடலமா? பொண்ணு: உன் இஷ்டம் பையன்: சரவணபவ...

Posted: 22 Jan 2015 07:10 AM PST

பையன்: எங்கேயாவது நல்ல
ஹோட்டலா போய் சாப்பிடலமா?
பொண்ணு: உன் இஷ்டம்
பையன்: சரவணபவன்?
பொண்ணு: போன மாசம்
அங்கதானே சாப்பிட்டோம்...?
பையன்: அப்போ செட்டிநாடு...?
பொண்ணு: எனக்கு புடிக்கல..
காரமா இருக்கும்
பையன்: ம்ம் கேஎஃப்சி....?
பொண்ணு: நேத்துதான்
ஃப்ரெண்ட்ஸ்
கூட அங்க சாப்பிட்டேன்..
பையன்: அப்போ வேற எங்க
போலாம்னு நீயே சொல்லு
பொண்ணு: உன் இஷ்டம்...
.
.
பையன்: சரி சாப்பாட்ட விடு, வேற
எங்கயாவது போலாமா?
பொண்ணு: உன் இஷ்டம்...
பையன்: படத்துக்கு போலாமா....?
பொண்ணு: இப்போ வந்திருக்க
எல்லா படமும் பாத்தாச்சு...
பையன்: அப்போ ஏதாச்சும்
மாலுக்கு போலாமா?
பொண்ணு: வேணாம்...
பையன்: காஃபி ஷாப்....?
பொண்ணு: நான் டயட்ல
இருக்கேன்...
பையன்: அப்போ வேற என்னதான்
செய்யறது....?
பொண்ணு: நீயே சொல்லு...
.
.
பையன்:
சரி எனக்கு டைமாகுது கெளம்பறேன்....
பொண்ணு: என்னை ஹாஸ்டல்ல
போய் விட்டுட்டு போ..
பையன்: ஓ... நான் இன்னிக்கு பைக்
எடுத்துட்டு வரல... பஸ்லதான்
போகனும்
பொண்ணு: நோ பஸ்ல வேணாம்.
ட்ரெஸ் அழுக்காகிடும்
பையன்: அப்போ ஆட்டோ..?
பொண்ணு: வேணாம்,
பக்கத்துலதானே இருக்கு எதுக்கு ஆட்டோ?
பையன்: அப்போ நடந்து போகலாம்..
பொண்ணு: என்னால முடியாது,
எனக்கு பசிக்குது....
பையன்:
அப்போ சாப்பிட்டே போவோம்?
பொண்ணு: உன் இஷ்டம்...
பையன்:......
இதுக்கு மேல அந்த பையன்
நெலமைய
யோசிச்சுபார்க்கவே முடியல....
இப்படியெல்லாம் லவ்
பண்றதுக்கு பேசாம.............

Relaxplzz

ஒரு காலத்தில் நான் தூங்கும்போது என் காதில் வந்து இருமி சத்தம் எழுப்பி சிரித்து வ...

Posted: 22 Jan 2015 07:02 AM PST

ஒரு காலத்தில் நான் தூங்கும்போது என் காதில் வந்து இருமி சத்தம் எழுப்பி சிரித்து விளையாடிய என் மனைவி, இப்போது எங்கள் குழந்தை தூங்கும்போது சத்தமே இல்லாமல் சிரித்து, சிறு தும்மலோ அல்லது இருமலோ வந்தால் கூட அதை கஷ்டப்பட்டு அடக்கிவிட்டு அல்லது துணி வைத்து அது சத்தம் கேட்காத விதத்தில் வெளிப்படுத்துவதை கண்கூடாகப் பார்க்கும் போது ஒரு தாய் உருவாவதை ரசிக்கின்றேன்..

தாய்மை அனைத்திலும் அழகே.. ♥ ♥

- Melvinsathya.


விடுமுறைக்கு கிராமத்து பக்கம் மட்டும் வந்துவிடாதீங்க அப்புறமா திரும்பி போகமாட்ட...

Posted: 22 Jan 2015 06:50 AM PST

விடுமுறைக்கு கிராமத்து பக்கம் மட்டும் வந்துவிடாதீங்க

அப்புறமா திரும்பி போகமாட்டீங்க...


நல்ல துவக்கம் என்பது எப்போதும் நம்மிலிருந்தே தொடங்குவதே என்றும் சிறந்தது! ஒன்றே...

Posted: 22 Jan 2015 06:50 AM PST

நல்ல துவக்கம் என்பது எப்போதும் நம்மிலிருந்தே தொடங்குவதே என்றும் சிறந்தது!

ஒன்றே செய்வோம்! அதை
இன்றே செய்வோம்- அதுகூட
நன்றே செய்தோம்
என்றே அமையட்டும்!

Relaxplzz


சங்குபுஷ்பம் தெரிந்தவர்கள் ஒரு லைக் போடுங்க. (y)

Posted: 22 Jan 2015 06:40 AM PST

சங்குபுஷ்பம் தெரிந்தவர்கள் ஒரு லைக் போடுங்க. (y)


:) Relaxplzz

Posted: 22 Jan 2015 06:30 AM PST

அத்தை ஆளாக்கு அாிசிக்கு அல்லாடுது ஆட்டக்காாிக்கு ஐநுாறு ரூபாய்யா :O :O

Posted: 22 Jan 2015 06:20 AM PST

அத்தை ஆளாக்கு அாிசிக்கு அல்லாடுது

ஆட்டக்காாிக்கு ஐநுாறு ரூபாய்யா :O :O


:: தகவல் துணுக்குகள் :: எடிசனின் உயிர் பிரியும்போது கடைசியாக 'விளக்கை எரியவிடுங...

Posted: 22 Jan 2015 06:10 AM PST

:: தகவல் துணுக்குகள் ::

எடிசனின் உயிர் பிரியும்போது கடைசியாக 'விளக்கை எரியவிடுங்கள் என் ஆவி பிரியும்போது வெளிச்சமாக இருக்கட்டும்!' என்றாராம்!!.

ஆண்களாக பிறந்து பெண்ணாக உணருபவர்கள் 'திருநங்கை' பெண்ணாக பிறந்து ஆணாக உணருபவர்கள் 'திருநம்பி'!.

தலைவா படத்துக்காக தற்கொல பண்ணிக்கிறது ரஜினி படத்துக்காக மண்சோறு திங்கிறது போன்றவை Celebrity Worship Syndrome என்ற மனநோய் வகையறாக்கள்!!.

பறவை இனங்களில் ஆந்தை மட்டுமே கண் சிமிட்டும் போது மேல் இமையை மூடுகிறது மற்ற அனைத்து பறவைகளும் கண்களை சிமிட்டுவது கீழ் இமையால்தான்!.

கூகுள் என்ற சொல் ஒரு கோடி பூஜ்ஜியங்களைக் கொண்ட எண்களுக்கான பொதுவான பெயர் ஆகும்!.

உங்களுடைய கை நகங்கள் 24 மணி நேரத்தில் 0.00007 அங்குலம் வளர்கின்றன!.

மொகலாயப் பேரரசர் பாபர் உயிரிழக்கும் போது தன் மகன் ஹுமாயூனிடம் "இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே!" என்றாராம்!.

ஹிட்லர் ஒரு சைவ விரும்பி! மேலும் மிருகவதையை தீவிரமாக எதிர்ப்பவர்!!.

இங்கிலாந்தைச் சேர்ந்த மாத்யூ கிரீன் என்பவர் இதயமேயில்லாமல் இயந்திரங்களின் உதவியால் 2 வருடங்கள் வரை வாழ்ந்திருக்கிறார்!.

15.23 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் 8 வயது கோவை சிறுமி இடம் பிடித்துள்ளார்!.

கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்!.

ஐன்ஸ்டீனின் கணிப்புப்படி உலகில் தேனீ இனம் முற்றிலும் அழிந்து போனால் அன்றிலிருந்து 4 வருடத்திற்குள் மனித இனம்அழிந்து போகுமாம்!!.

தோல்விகளைக் கண்டு துவளாதீர்! மில்லியன் கணக்கான விந்தணுக்களின் வெற்றி பெற்றது நீங்கள் ஒருவரே! பயாலஜிப்படி சாதிக்கப் பிறந்தவர் நீங்கள்!.

Relaxplzz

108 ஆம்புலன்ஸ் தொடர்புக்கு புதிய கருவி கண்டுபிடிப்பு: வாலிபர் சாதனை! விபத்துகளை...

Posted: 22 Jan 2015 06:00 AM PST

108 ஆம்புலன்ஸ் தொடர்புக்கு புதிய கருவி கண்டுபிடிப்பு: வாலிபர் சாதனை!

விபத்துகளை தடுக்க அரசு மற்றும் போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும், குறையவில்லை. இதனால், அரசு சார்பில் 108 ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த 108 ஆம்புலன்சுக்கான எண்ணுக்கு தொடர்பு கொண்டால், சில நேரங்களில் ஆம்புலன்ஸ் வருவதில்லை. சில நேரங்களில் தாமதம் ஆகிறது. இதனாலும் உயிர்ப்பலி அதிகரிக்கிறது. இதற்கு காரணம், 108 எண்ணுக்கு தொடர்பு கொண்டால், சென்னையில் உள்ள தலைமை இடத்துக்கு செல்லும். பின்னர், அங்கிருந்து சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகம் சென்று, பிறகு ஆம்புலன்ஸ் டிரைவர் அல்லது ஆம்புலன்சில் உள்ள மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதன்பின்னர், அந்த குழுவினர் செல்வார்கள்.

இதற்கு குறைந்தது 1 முதல் 3 மணிநேரம் ஆகிறது.இதுபோன்ற சிரமங்களை தவிர்த்து, புகார் தெரிவித்த சில நிமிடங்களில் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு சென்று, விபத்தில் சிக்கியவரை மீட்டு சிகிச்சை அளிக்கவும், உயிரை காப்பாற்றும் விதமாக கம்பியில்லா கருவி ஒன்றை காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு காவல் படையில் பணிபுரியும் உத்திரமேரூர் ஒன்றியம், மலையான்குளம் கிராமத்தை சேர்ந்த பாரத் (23) என்பவர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 36 உள்பட தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 800 செயல்படுகிறது. இந்த வாகனங்களில் நான் கண்டுபிடித்துள்ள கருவியை பொருத்தினால், விபத்து நடந்த பகுதியில் இருந்து தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் தெரிவிக்கப்படும். இதற்காக ஒரு சிறிய அறை இருந்தால் போதும். அரசு மருத்துவமனையில் ஒரு அறையை ஒதுக்கி கொடுத்தாலும் சரிதான்.

இந்த கருவியின் விலை ரூ.500ல் அடக்கமாகும். கருவியின் விலை ரூ.400, ஸ்பீக்கர் ரூ.100 மட்டுமே. இந்த கருவி மூலம் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும்போது 2 நொடிகள் எச்சரிக்கை மணி எழுப்பும். அதை யாரும் எடுக்காத பட்சத்தில், பொதுமக்களின் புகார், பதிவு செய்யப்பட்டு, உடனடியாக ஆம்புலன்சில் உள்ள கருவியில் ஒலிக்கும். இதை வைத்து, சம்பவ இடத்துக்கு சென்று, பாதிக்கப்பட்டவரை மீட்கலாம். உயிரிழப்பை தடுக்கலாம்.அதேபோல் சம்பந்தம் இல்லாமல் சிலர், 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து, மருத்துவ குழுவினரின் நேரத்தை வீணடிப்பார்கள். அதுபோன்ற சம்பவங்களை தடுப்பதுடன், அவர்களை பிடித்து எச்சரிக்கவும் செய்யலாம். மேலும் மின்வாரியத்துக்கான புகார், தீயணைப்பு நிலையத்துக்கான புகார்களையும் இந்த கருவி மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த கருவியை பயன்படுத்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், எனக்கு வாய்ப்பு அளித்தால், இந்த கருவியை இலவசமாக பொருத்துவேன்.இவ்வாறு கூறினார்.

Relaxplzz


0 comments:

Post a Comment