ilovemynative: Facebook page wall posts in Tamil |
- “உனக்கும் எனக்கும் சொந்தமான நம் தமிழுக்கு வருகின்ற கேட்டை எதிர்த்து இந்த கொளுத்த...
- அழகியல்! நுங்கம்பாக்கம்! படம் - ஹரி பிரகாஷ்
- என்னை எதிர்த்து பேச என் மனைவி பயப்பட மாட்டார் -ஒபாமா #எங்கூர்ல ஏறிமிதிக்கவே பயப...
- தேவைகள் தீர்க்கப்பட்டுக்கொண்டே இருக்கும் வரையில் சுமூகமாகவே இருக்கிறது எந்தவொரு...
- அம்மா அடிக்கிதாம் மக என் கிட்ட கம்ளைண்டு பண்ணுது... . . . என் கஷ்டத்த.. யாருகிட்...
- சில சமயம் மிச்செல்ஒபாமா என்னை கண்டிப்பார்-ஒபாமா. மன்னர் மன்னா (மோடி) பொண்டாட்டி...
- பசங்க குடிச்சுட்டு "மச்சி ஸ்மெல் வருதா?"ன்னு ஊதி காட்டுற மாதிரி, பொண்ணுங்க மேக்க...
- அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்த அரசுக்கு சொன்ன அறிவுரை இது தான் "UPHOLD RELIGI...
- அடையாளத் திருட்டுக்கு மன்னிப்பு கேட்ட மலேசிய நிறுவனம் ! தமிழகத் தமிழர்களின் கவனத...
- அழகு தமிழ்நாடு! மயிலை! படம் :Melissa Freitas
- அறுக்கலாம்.. ஆனால் வீரத்துடன் விளையாடக்கூடாதா?
- Indian media Vs American Media report on Obama's statement.... same news but how...
Posted: 30 Jan 2015 06:10 AM PST "உனக்கும் எனக்கும் சொந்தமான நம் தமிழுக்கு வருகின்ற கேட்டை எதிர்த்து இந்த கொளுத்துகிற வெயிலில் பாதங்கள் கொப்பளிக்க நாங்கள் நடக்கிறோம். தோழனே! நீ தோரணமாய் கட்டியிருக்கின்ற செருப்புக்களை எங்கள் மீது தூக்கி வீசியிருந்தால் அதை எங்கள் காலில் போட்டுக் கொண்டாவது நடந்திருப்போம்" என்று தன்னுடைய பேச்சைத் துவக்கிய அழகிரி மேடை, ஒலிப்பெருக்கி இல்லாமல் அங்கே ஒரு உணர்வு பெருவெள்ளமாய் உரையாற்றினார். சிறிய கூட்டம் பெருங்கடலாயிற்று. அழகிரி தன் பேச்சை இப்படி முடித்தாராம். "இன்னும் சில காலம் கழித்து தோரணம் கட்டியவனும் நானும் செத்துப் போவோம். வருங்கால சந்ததிகள் எங்கள் சமாதிகளையெல்லாம் பார்த்து எங்கள் மான வாழ்வுக்கு வழி வகுத்த தொண்டர்கள் என்று மலர் மாரி தூவுவார்கள்..... ஆனால் எங்களை இழிவு செய்கிற தோழனே! உன்னுடைய சமாதிக்கு உன்னுடைய சந்ததிகள் கூட வர மாட்டார்கள். காக்கையும் கழுகும் தான் எச்சமிட்டு விட்டுப் போகும்" என்றாராம். தோரணம் கட்டியவர்கள் கண்ணீர் மல்க வந்து அவர்கள் கையாலேயே செருப்புத் தோரணத்தை அவிழ்த்து எறிந்து விட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்களாம். அழகிரியின் வாழ்க்கையில் இப்படி நெஞ்சை நெகிழ வைத்த சம்பவங்கள் எத்தனையோ..... #பட்டுக்கோட்டை_அழகிரி ![]() |
Posted: 30 Jan 2015 04:59 AM PST |
Posted: 29 Jan 2015 10:27 AM PST என்னை எதிர்த்து பேச என் மனைவி பயப்பட மாட்டார் -ஒபாமா #எங்கூர்ல ஏறிமிதிக்கவே பயப்பட மாட்டாய்ங்க! @காளிமுத்து |
Posted: 29 Jan 2015 10:26 AM PST தேவைகள் தீர்க்கப்பட்டுக்கொண்டே இருக்கும் வரையில் சுமூகமாகவே இருக்கிறது எந்தவொரு உறவும்!. @காளிமுத்து |
Posted: 28 Jan 2015 10:39 AM PST அம்மா அடிக்கிதாம் மக என் கிட்ட கம்ளைண்டு பண்ணுது... . . . என் கஷ்டத்த.. யாருகிட்ட போயி சொல்றதுன்னுதான் தெரில.. @ரிட்டயர்டு ரவுடி |
Posted: 28 Jan 2015 10:25 AM PST சில சமயம் மிச்செல்ஒபாமா என்னை கண்டிப்பார்-ஒபாமா. மன்னர் மன்னா (மோடி) பொண்டாட்டியின் பெருமை பற்றிபேசுகிறான் அந்த லகுடபாண்டி. @இளமாறன் வேங்கை |
Posted: 28 Jan 2015 10:09 AM PST பசங்க குடிச்சுட்டு "மச்சி ஸ்மெல் வருதா?"ன்னு ஊதி காட்டுற மாதிரி, பொண்ணுங்க மேக்கப் போட்டுட்டு "கொஞ்சம் ஓவரா இருக்கா?"ன்னு கேட்கிறாங்க... @காளிமுத்து |
Posted: 28 Jan 2015 09:30 AM PST அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்த அரசுக்கு சொன்ன அறிவுரை இது தான் "UPHOLD RELIGIOUS FREEDOM, OBAMA URGES INDIA" "MAKES A STRONG STATEMENT AGAINST FUNDAMENTALISM AND EXTREMISM" இதற்கு முன் எந்த நாடாவது அல்லது அதிபராவது இப்படிப்பட்ட கருத்தை இந்தியாவை பற்றி கூறி இருக்கிறதா? ஒபாமாவுக்கும் உங்க லட்சணம் தெரிஞ்சிருக்குது. |
Posted: 28 Jan 2015 06:10 AM PST அடையாளத் திருட்டுக்கு மன்னிப்பு கேட்ட மலேசிய நிறுவனம் ! தமிழகத் தமிழர்களின் கவனத்திற்கு ! வடை என்னும் தமிழர்களின் திண்பண்டத்தை மலாய் மொழியில் அடையாளப்படுத்தியது மலேசியாவில் உள்ள திண்பண்ட நிறுவனம். இந்த பெயர் மாற்றதிற்கு மலேசிய தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த மலேசிய நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளது. வடையின் பெயரை இனி மாற்ற மாட்டோம் என்று அறிவிப்பும் வெளியிட்டுள்ளது. இப்படித் தான் தமிழர்களின் பல அடையாளங்கள் அந்நியர்களால் திருடப்படுகிறது. தமிழர்களின் படைப்பை இந்தியப் படைப்பு என்றும், தமிழர்கள் கட்டிய கோவில்களை சிற்பக் கலைகளை இந்திய கோவில் சிற்பக் கலைகள் என்றும் திருடப்படுகிறது. ஆனால் சல்லிக்கட்டு விளையாட்டு மட்டும் இந்திய விளையாட்டு அல்ல, அது மேற்கத்திய விளையாட்டு என்று பாஜகவின் அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார், அதற்கு பாஜக அரசு இதுவரை மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. மேலும் தமிழர்கள் வழங்கிய கொடைகளை இந்தியாவின் படைப்புகள் என்று கூறும் இந்திய அரசு , தமிழ் மொழியை மட்டும் இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க மறுத்து வருகிறது. தமிழர்கள் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலை கூசாமல் பிரகதீசுவரர் ஆலயம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அந்தப் பெயரிலேயே அஞ்சல் தலை நாணயம் வெளியிட்டுள்ளது இந்திய அரசு. இது எவ்வளவு பெரிய அடையாளத்திருட்டு மற்றும் மோசடி. ஒரு வடையின் பெயரை மாற்றம் செய்யப்பட்டதற்கு மலேசிய தமிழர்கள் எதிர்வினை ஆற்றியுள்ளனர் . ஆனால் தமிழகத்தின் பெருமை மிக்க பல கோவில்கள் ஊர்களின் பெயர்களை ஆரியப் பெயர்களாக சத்தமில்லாமல் மாற்றியுள்ளனர் . இதற்கு எந்த விதமான எதிர்வினையும் தமிழகத்தை ஆண்ட திராவிட அரசுகள் ஆற்றவில்லை. இப்படியான அடையாளத் திருட்டுக்கு திராவிடமும் துணை போயுள்ளது என்பது தான் வேதனை. தமிழர் திருநாளை திராவிடத் திருநாளாக கொண்டாடும் அமைப்புகளை தமிழக அரசு கண்டிக்கவில்லை. இது போல ஆரியமும் திராவிடமும் செய்த அடையாளத் திருட்டுப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். எதிர்வினையாற்றி வடையின் பெயரை மீட்ட மலேசிய தமிழர்களுக்கு பாராட்டுகள். முதல்கட்டமாக தஞ்சை பெரிய கோவிலின் பெயரை பெருவுடையார் கோவில் என்று உலகம் முழுவதும் அடையாளப்படுத்த தமிழக அனைத்து ஆவணங்களிலும் திருத்தம் கொண்டு வரவேண்டும். இனியும் அடையாளத் திருட்டை தமிழர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. ![]() |
Posted: 28 Jan 2015 04:59 AM PST |
Posted: 28 Jan 2015 03:19 AM PST |
Indian media Vs American Media report on Obama's statement.... same news but how... Posted: 28 Jan 2015 01:30 AM PST |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment