Relax Please: FB page daily Posts |
- ஆட்டோவில் பயணம் செய்யும் பெண்களுக்கான அவசியமான பதிவு. கண்டிப்பாக ஷேர் செய்யவும்...
- :) Relaxplzz
- பேப்பரில் செய்த தாமரை ...எப்படி இருக்கு... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- மெமரி அளவுகள் - பிட் முதல் யோட்டா வரை ======================================= 1...
- " வான் கோழிக்கு 2 கால்கள் என்றால், 'ORDINARY கோழி' க்கு எத்தனை கால்" ?. " 2 கால...
- "புரட்சி வேற்றுமை பாராமல், மனித இனத்திற்கு உழைக்கும் உணர்ச்சி வராத வரையில் நாம்...
- படம் புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- பித்தப்பை கற்களை நாமாகவே அகற்றலாம்..! புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை...
- :) Relaxplzz
- முன்னொரு காலத்தில் கோணங்கி பட்டினம் என்ற ஊரில் மந்தை மேய்ப்பன் ஒருவன் வாழ்ந்து வ...
- பிறந்த குழந்தைகள் பற்றிய ஆச்சரியமான விடயங்கள்..! பொதுவாக ஒரு குழந்தையின் பிறப்ப...
- அறிவியல் உலகைக் கட்டமைத்த 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானிகள்.. நன்றி;பழங்...
- :) Relaxplzz
- :) Relaxplzz
- ;-) Relaxplzz
- அன்பே நீ வட, நான் தான் சட்னி தொட, அன்பே நீ பஜ்ஜி, பண்ணவா நான் எச்சி, அன்பே நீ...
- :) Relaxplzz
- (y) Relaxplzz
- :) Relaxplzz
- உண்மைய சொன்னா நம்பல பைத்தியக்காரணு சொல்லவாங்க...! 1.காதலை விலை கொடுத்து வாங்க ம...
- தேசியக் கொடி ஏற்றும்போது அதில் பூக்கள் வைப்பது ஏன்? படத்தில் இருப்பது காஷ்மீரி...
- உன் கன்னக்குழியில் தடுக்கி விழுந்தேன். அன்றிலிருந்து எழவே முடியவில்லை # பெ. கரு...
- நூபாய் நாணயத்தின் மேல் பேப்பர் வைத்து பென்சிலால் இப்படி தடம் எடுத்து விளையாடுய அ...
- வைரம் மண்ணில் உருவாக பல ஆண்டுகள் ஆகுமே!!!... என்ன விந்தை இது, நீ..... என்னில் உர...
- :) Relaxplzz
- அனுபவமே கடவுள் பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்...
- ஞாபகம் இருக்கா ................ டிக்கி டிக்கி டிக்கி டிக்கி டிக்கி ...... ;-)
- அவ்வா.. அவ்வா... அவ்வா.. அவ்வாஆஆஆ.. ;-) இந்த காமெடிய ரசிச்சவங்க லைக் பண்ணுங்க.....
Posted: 31 Jan 2015 09:00 AM PST ஆட்டோவில் பயணம் செய்யும் பெண்களுக்கான அவசியமான பதிவு. கண்டிப்பாக ஷேர் செய்யவும்.. இரவு நேரங்களில் தன்னந்தனியாக பயனம் செய்ய நேர்ந்தால்... * உங்கள் கைபையில் மிளகாய் தூள்,பெப்பர் ஸ்பெரே, குண்டூசி இவைகளில் ஒன்றை மறக்காமல் எடுத்துகொள்ளுங்கள். * ஏய் ஆட்டோ என்றோ நீ,வா,போ என்றோ ஓட்டுனரை அழைக்காதீர். (இதனால் உங்கள் மீது வெறுப்பு ஏற்படலாம்). அண்ணா,தம்பி என்றோ முடிந்தால் ஸார் என்றோ அழைக்கவும். (இதனால் உங்கள் மீது நல்ல அபிப்பிராயமும் உடன் பிறந்த சகோதரி என்ற எண்ணம் ஏற்படலாம்) * ஆட்டோவில் ஏறும் முன் நாம் போகும் இடத்தை தெளிவாக கூறி அதற்கான வாடகை பேசி கொள்ள வேண்டும். (இதனால் பிறகு வாடகை தகராறு ஏற்படாமல் தவிர்க்கலாம்). * நீங்கள் ஏறும் முன் ஆட்டோவின் பெயரையோ அல்லது பதிவு நம்பரையோ குறித்து வைத்துகொள்ளுங்கள். (இதனால் நாம் ஏதாவது பொருளை விட்டு சென்றால் பிறகு அந்த ஆட்டோவின் நம்பரை வைத்து கண்டு பிடித்துவிடலாம்) *ஆட்டோவில் ஏறிய பிறகு ஓட்டுனரின் காது கேட்கும் படி சத்தமாக உங்கள் உறவினருக்கோ (உறவினர் இல்லாத பட்சத்தில் சும்மா டயல் பன்னாமல்) போனில் "நான் இந்த பெயர் கொண்ட ஆட்டோவில் ஏறிவிட்டேன் இன்னும் குறிப்பிட்ட நேரத்தில் வந்துவிடுவேன்"என்று கூறவும். * பயனம் செய்யும் போது ஓட்டுனரிடம் குழைந்தோ அல்லது தேவையற்ற விசயமோ அல்லது ஏதும் பேசாமல் இருப்பது நல்லது. * ஆட்டோவின் இரு ஓரங்களில் இருக்காமல் நடு பகுதியில் இருக்கவேண்டும். * உங்கள் அரைகுறை ஆடையே உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆதலால் ஆடைகள் ஒழுங்கான முறையில் உடுத்திகொள்ளுங்கள். * புடவை உடுத்திய பெண்கள் முந்தானையை சரிசெய்து காற்றில் பறக்காதவாறு கவனமாக இருக்கவேண்டும். (ஏனெனில் ஓட்டுனர் கண்ணாடி வழியாக பின்னால் வரும் வாகனத்தை பார்க்க முயற்சிக்கும் போது புடவை காற்றில் பறந்தால் அவரின் கவனம் திசைதிருப்பும் அதுவே மிக பெரிய பிரச்சினை ஆகிவிடும். * நீங்கள் போய் சேரும்வரை உங்கள் கவனம் எப்போதும் ஓட்டுனரை நோக்கியே இருக்கவேண்டும்.அவரின் சிறு சிறு நடவடிக்கை கண்காணிக்க வேண்டும். * முதல் தடவையாக போகும்போது நமக்கு அதன் வழி தெரியாது ஆதலால் செல்போன் எடுத்து நான் இந்த இடம் வந்தாகி விட்டது என்று ஓட்டுனரின் காதில் விழும்படி உறவினரிடம் பேச வேண்டும் அல்லது பேசுவது போல் பாவலா காட்டவேண்டும். * நாம் போகும் வழி சரியாக தான் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.அவ்வாறு தவறான வழியில் போகிறது என்றால் பதட்டபடாமல் நிதானமாக ஏன் என்று காரணம் கேட்க வேண்டும்.ஓட்டுனர் கூறும் காரணம்(சாலை வேலை,சாலை மூடல்) சரியாக இருக்கும் என்று நம்பிக்கை வந்தாலோ அல்லது வராவிட்டாலோ மறுபடியும் செல்போன் எடுத்து இந்த ரூட் சரியில்லை வேறு வழியாக வருகிறேன் என்று உறவினருக்கு பேசுவதுபோல் பாவலா காட்டவேண்டும். * அதையும் மீறி தவறான பாதையில் போகிறது என்றால் எந்த காரணம் கொண்டும் பதட்டபடாமல் சமயோஜித புத்தியை கொண்டு சில வழிமுறையை கையாளவேண்டும். * தங்கள் இருக்கையின் கீழ்தான் பெட்ரோல் திறக்க,மூட,ரிசர்வ் செய்ய பைக்கில் இருப்பது போல் "நாப்"இருக்கும் (பார்க்க படம்-1)அதை அடைத்து விட்டால் போதும் சிறிது தூரம் சென்றவுடன் அதுவே தானாகவே ஆஃப்பாகிவிடும்.மீண்டும் ஸ்டாட் செய்வதற்குள் நம்மை பாதுகாத்து கொள்ளலாம். * அது டீசல் ஆட்டோவாக இருக்கும் பட்சத்தில் ஓட்டுனரின் வலது பக்கத்தில் சிகப்பு கலரில் ஆஃப் சோக் உள்ளது(பார்க்க படம் -2) அதை இழுத்தால் ஆஃப்பாகிவிடும். * சில ஆட்டோக்களில் ஓட்டுனரின் முன் பகுதியில் சிகப்பு கலரில் லிவர் உள்ளது (பார்க்க படம் -3) அதை இழுத்தால் ஆஃப்பாகி விடும். *இதற்கு ஒன்றும் வழியில்லை என்றால் உங்கள் துப்பட்டாவோ புடவையின் முந்தானையோ கொண்டு ஓட்டுனரின் கழுத்தில் போட்டு பின்னால் இழுத்தால் நிச்சயமாக ஆட்டோவை நிறுத்துவது அவருக்கு பாதுகாப்பு இல்லையெனில் ஆட்டோ நிலைதடுமாறி கவிழும் வாய்ப்புள்ளது. * அவ்வாறு ஆட்டோ கவிழ போகும் என்று தெரிந்தால் தப்பிக்க முயற்சி எடுக்க வேண்டாம்.நடு பகுதியில் இறுக்கமாக பிடித்து கொண்டு இருங்கள்.அடி ஒன்றும் படாது காயங்கள் இல்லாமல் உங்களால் எழமுடியும். இறுதியாக.. இன்று ஆட்டோ ஓட்டுனர்கள் பெரும்பாலானவர்கள் படித்தவர்களாகவும் ஒழுக்கமானவர்களாகவும் குடும்ப வறுமை காரனமாகவும் இத்தொழிலுக்கு வருவதால் பெண்களிடம் வரம்பு மீறாமல் கண்ணியமாக நடக்கின்றனர்.மேலும் போலிசாரின் வாகன சோதனைகள் அதிகம் நடப்பதால் மது அருந்தும் ஓட்டுனர்கூட பணி நேரத்தில் அருந்துவதில்லை.ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த ஓட்டுனரும் குற்றவாளி இல்லை.அவர்களுக்கும் குடும்பம் உள்ளது.உங்களை நம்பி தான் அவர்கள் வாழுகிறார்கள். இப்படிக்கு தக்கலை ஆட்டோ கபீர் ![]() |
Posted: 31 Jan 2015 08:30 AM PST |
Posted: 31 Jan 2015 08:20 AM PST |
Posted: 31 Jan 2015 08:10 AM PST மெமரி அளவுகள் - பிட் முதல் யோட்டா வரை ======================================= 1 பைட்(1 byte ) = 8 பிட்ஸ்(bits( 0 & 1's)) ஒரு கிலோ பைட் ( 1 KiloByte) = 1,024 பைட்ஸ் (1024 bytes) ஒரு மெகா பைட் (1 megabyte) =1,024 கிலோ பைட்ஸ் (1024 KB) ஒரு கிகா பைட் (1 gigabyte) =1,024 மெகா பைட்ஸ்( 1024 MB) ஒரு டெரா பைட் (1 terabyte) = 1, 024 கிகா பைட்ஸ்(1024 GB) ஒரு பெட்டா பைட் (1 petta byte) = 1,024 டெரா பைட்ஸ்(1024 TB) ஒரு எக்ஸா பைட் (1 exa byte) =1,024 பெட்டா பைட்ஸ் (1024 PB) ஒரு ஸெட்டா பைட் (1 zetta byte) =1,024 எக்ஸா பைட் ஸ்(1024 EB) ஒரு யோட்டா பைட் (1 yotta byte(YB)) = 1,024 ஸெட்டா பைட்ஸ்( 1024 ZB) எந்திரனில் ரஜினி ரோபோ 1 ஸெட்டா பைட் மெமரியை கொண்டுள்ளதாக காட்டப்பட்டது. அதையும் தாண்டி யோட்டோபைட் உள்ளது. Relaxplzz ![]() |
Posted: 31 Jan 2015 08:00 AM PST " வான் கோழிக்கு 2 கால்கள் என்றால், 'ORDINARY கோழி' க்கு எத்தனை கால்" ?. " 2 கால்கள்தான்" !... " மக்கு, 10 கால்கள்" !. " எப்படி" ?.. . . . . . . . . . . . . " ஆடு (4) + நரி (4) + கோழி (2)= 10 கால்கள். சரிதானே" !?.... :P :P Relaxplzz |
Posted: 31 Jan 2015 07:50 AM PST |
Posted: 31 Jan 2015 07:40 AM PST |
Posted: 31 Jan 2015 07:30 AM PST |
Posted: 31 Jan 2015 07:23 AM PST பித்தப்பை கற்களை நாமாகவே அகற்றலாம்..! புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது. ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும். ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும். எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும். இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும். அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும். மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம். Relaxplzz ![]() இயற்கை வைத்தியம் |
Posted: 31 Jan 2015 07:20 AM PST |
Posted: 31 Jan 2015 07:10 AM PST முன்னொரு காலத்தில் கோணங்கி பட்டினம் என்ற ஊரில் மந்தை மேய்ப்பன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அவற்றை அவனால் காவல்காக்க முடியவில்லை. தினமும் ஒவ்வொரு ஆட்டை ஓநாய்கள் கவர்ந்து சென்றன. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வேட்டை நாய் இரண்டை வாங்கி காவலுக்கு வைத்தான். அவற்றிற்கு தினமும் மாமிச உணவு கொடுக்க வேண்டுமே... இதற்காக தினமும் இரண்டு எலிகளை அடித்து உணவாக கொடுத்தான். அப்படி இருந்தும் தினமும் ஒரு ஆடு காணாமல் போனது. இதனால் மேய்ப்பனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேட்டை நாய்கள் மீது கோபம் கோபமாக வந்தது.. ஒரு நாள் என்ன நடக்கிறது என்பதை மறைந்திருந்து கவனித்தான். அப்பொழுது ஓநாய் ஒன்று வந்து ஆட்டை கொன்று இழுத்து சென்றது. அது சாப்பிட்டுவிட்டு போடும் மீதி ஆட்டை இந்த வேட்டை நாய்கள் இன்பமாக தின்றன. இப்படி நடப்பதை கண்ட அவன் திடுக்கிட்டான். மிகவும் சோகமாக உட்கார்ந்தான். அப்பொழுது அந்த வழியாக முனிவர் ஒருவர் வந்தார். அவரிடம் தன் கஷ்டத்தை சொல்லி அழுதான் மந்தை மேய்ப்பவன். அதற்கு முனிவர், ""மகனே யாருக்கும் வயிறார உணவு கொடுத்தால் தான் வேலை செய்வர். நீயோ இரண்டு எலிகளை மாத்திரம் நாய்களுக்கு உணவாக கொடுக்கிறாய். இது அவைகளுக்கு பத்தாது. ""நீ அவ்வப்போது உன் வீட்டிற்காக ஆட்டை வெட்டுகிறாய் அல்லவா? அந்த மாமிசத்திலிருந்து சிறு துண்டுகளையாவது எடுத்து இந்த நாய்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் அவைகள் உனக்காக நன்கு வேலை செய்யும்,'' என்றார். அதன்படியே செய்வதாக ஒப்பு கொண்டான் மேய்ப்பன். அப்படியே செய்து வந்தான். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அன்றிலிருந்து மந்தையில் ஆடுகள் குறையவில்லை. மறுநாள் ஓநாய்கள் ஆட்டை திண்ண வந்தன. அதை கண்ட வேட்டை நாய்கள் அவைகளை விரட்டின. ""என்ன இத்தனை நாட்களாக நாங்கள் விட்டு சென்ற மாமிசத்தை தின்றீர்கள். இப்பொழுது உங்களுக்கு என்னவாயிற்று?'' என்றன. ""உங்களது எச்சில் மாமிசம் எங்களுக்கு வேண்டாம். எங்கள் தலைவர் வயிறு நிறைய எங்களுக்கு மாமிசம் கொடுக்கிறார்,'' என்றன. அவற்றை மீறி ஓநாய்கள் மந்தைக்குள் நுழைந்தன. அவைகள் மீது பாய்ந்து கிழித்து கொன்றன வேட்டை நாய்கள். மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் மந்தை மேய்ப்பன். நீதி: நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு நாம் வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க வேண்டும். தகுதியான சம்பளம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு உண்மையாக உழைப்பர். Relaxplzz |
Posted: 31 Jan 2015 07:03 AM PST பிறந்த குழந்தைகள் பற்றிய ஆச்சரியமான விடயங்கள்..! பொதுவாக ஒரு குழந்தையின் பிறப்பு என்பது தாயின் மறுபிறவி என கூறுவோம். ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை பெற்றெடுக்கும் போது ஏற்படும் உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தையே இல்லை. குழந்தை வளர்ப்பு பற்றி பெற்றோருக்கு தெரிந்திருப்பது அவசியம். ஆனால் புதிதாக பிறந்த குழந்தைகள் பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள சில ஆச்சரியமான விடயங்கள் உள்ளது. கொழு கொழு "மே" குழந்தை பிற மாதங்களில் பிறந்த குழந்தைகளை விட, மே மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிக எடையுடன் இருக்கும். தாயின் வாசனை பிறந்த நொடியிலிருந்தே தன் தாயின் வாசனையைக் குழந்தைகள் அறிந்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி பிறந்த சில வாரங்களில், தம் தாயை அவை அடையாளமும் கண்டு கொள்ளும். கருவில் கேட்கும் திறமை தாயின் கருவில் இருக்கும் குழந்தையால் வெளியே ஒலித்துக் கொண்டிருக்கும் பல விஷயங்களைக் கேட்க முடியும். நல்ல விடயங்களை சத்தமாகப் படித்துக் காண்பிப்பது, மெல்லிசை கேட்பது இவையெல்லாமே குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் விடயங்களாகும். சுவை தெரியாது பிறந்த குழந்தைக்கு நான்கு மாதங்கள் ஆகும் வரை உப்பின் சுவை தெரியாது. இதற்கு சோடியத்தை உருவாக்கும் சிறுநீரகங்கள் முழு வளர்ச்சியடையாமல் இருப்பது தான் காரணம். அகச் செவி நல்லா கேட்கும் பிறந்த குழந்தையிடம் உள்ள உறுப்புக்களில், அகச் செவி என்று அழைக்கப்படும் உள்புறக் காது மட்டுமே முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்கும். இளம் நீச்சல் வீரர்கள் பிறந்த குழந்தைகள் இயற்கையிலேயே நீச்சல் வித்தைகளைப் பெற்றிருக்குமாம்! தண்ணீருக்கு அடியில் குழந்தைகளால் மூச்சை அடக்க முடியும். சுமார் பத்து மாதங்கள் கருவில் மிதந்து கொண்டிருந்த அனுபவம் தான் அது! Relaxplzz ![]() தகவல் துணுக்குகள் |
Posted: 31 Jan 2015 06:51 AM PST அறிவியல் உலகைக் கட்டமைத்த 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானிகள்.. நன்றி;பழங்கால புகைப்படங்கள் ![]() "அரிய புகைப்படங்கள்" |
Posted: 31 Jan 2015 06:43 AM PST |
Posted: 31 Jan 2015 06:25 AM PST |
Posted: 31 Jan 2015 06:10 AM PST |
Posted: 31 Jan 2015 06:04 AM PST அன்பே நீ வட, நான் தான் சட்னி தொட, அன்பே நீ பஜ்ஜி, பண்ணவா நான் எச்சி, அன்பே நீ முறுக்கு, எனக்கு உன் மேல கிறுக்கு. அன்பே நீ போண்டா, ஆகாத காண்டா. அன்பே நீ மசால் டீ, எப்போ என் பொண்டாட்டி? அன்பே நீ இட்லி, உன் அண்ணன் தான் ஜெட்லி, அன்பே நீ தோசை, இது அடங்காத ஆசை, அன்பே நீ ஆப்பம், ஒன்னா வாழ்ந்து பாப்போம், அன்பே நீ பரோட்டா, பொண்ணு கேட்டு வரட்டா? அன்பே நீ பூரி, இத படிச்சுட்டு துப்பாத காரி, மொத்தத்தில் நீ கையேந்தி பவன், நான் உனக்காக கையேந்துபவன்...! ;-) (பூபதியின் 'காதல் பசி' என்னும் கவிதை தொகுப்பிலிருந்து) - Boopathy Murugesh Relaxplzz ![]() அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா... |
Posted: 31 Jan 2015 05:55 AM PST |
Posted: 31 Jan 2015 04:30 AM PST |
Posted: 31 Jan 2015 04:20 AM PST |
Posted: 31 Jan 2015 04:10 AM PST உண்மைய சொன்னா நம்பல பைத்தியக்காரணு சொல்லவாங்க...! 1.காதலை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனா, அதை மெய்ன்ட்டெய்ன் பண்ண நெறயா செலவு செய்ய வேண்டியிருக்கும்... 2.சாப்பிடுகையில் கடைசியாய் ஒன்று என்றதும் இருப்பதில் பெரிய தோசையை தேடுபவள் - அம்மா. 3.இந்தியாவில் வரிசைகள் மிக நீளமாக இருப்பதற்கு தொப்பையும் ஒரு காரணம் .. 4.Facebook-ல நல்லவனாநடிப்பது வேஸ்ட். இங்க யாரும் உங்களுக்கு பொண்ணோ , கடனோ கொடுக்கப் போவதில்லை ... 5.சென்னை மாவட்ட எல்லை ஆரம்பம் என்ற எழுதியுள்ள தட்டிகளுக்கு பதிலாக போக்குவரத்து நெரிசல் ஆரம்பம் என எழுதி வைக்கலாம்... 6.காதல் தோல்வியை கொண்டாடவும் ஒருநாள் இருந்தால் மொத்த உலகமும் அதை கொண்டாடித் தீர்க்கும் நாளாக அது இருக்கும்.... 7.தான் அழகாக இல்லை என்று நினைக்கும் ஒரு ஆணின் தாழ்வு மனப்பான்மையை நீக்குவது ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வையே 8.என் பட்டினியை தவிர, எந்த தவறையும், மன்னித்துவிடுகி றாள் என் தாய். 9.கண்ணுக்கு தெரியாத கடவுளை வேண்டிக்கொண்டு, அம்மா விபூதி வைத்துவிடும் போது, அருகிலேயே தெரிகிறது கடவுள்... 10.எந்த பெண்ணும் நீ கட்டுன வேட்டி சட்டையோட வா உன்ன நான் காப்பாத்துறேன் என்று சொல்வதில்லை.. # பிடிச்சா லைக் பண்ணுங்கள்... - Solai vaithees Relaxplzz |
Posted: 31 Jan 2015 04:00 AM PST தேசியக் கொடி ஏற்றும்போது அதில் பூக்கள் வைப்பது ஏன்? படத்தில் இருப்பது காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லபட்ட கர்னல் முனிந்திர நாத் ராய் அவர்களின் மனைவி- நம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன் அதில் வைக்க பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்து கை தட்டுகிறோம். ஆனால் அதற்குள் அடங்கியுள்ள உண்மை எத்தனை பேருக்கு தெரியும்.. இந்த கொடி மேலே ஏற அதாவது நாம் சுதந்திரம் பெறுவதற்கும் பெற்ற சுதந்திரத்தை பேணிகாக்கவும் நடந்த போர்களில் எண்ணற்ற தாய் மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்து இருக்கிறது என்பதைத்தான் இந்த கொடி மேலே ஏறும் போது அதிலிருந்து மலர்கள் கீழே விழுந்து அதனை ஞாபகப்படுத்துகிறது. நம் தேசிய கொடி பட்டொளி வீசி பறக்கவும் நம்முடைய சுக போக வாழ்விற்காகவும் எங்கோ ஒரு மூலையில் தினமும் எல்லையில் நம் வீரர்கள் தங்களின் இன்னுயிரை இழந்து கொண்டு இருக்கிறார்கள்.அவர்களின் மனைவிகளின் கூந்தலில் இருந்து பூக்கள் உதிர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இனி ஒவ்வொரு முறையும் கொடியேற்றத்தைக் காணும்போதும் இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.தேசத்திற்கு இன்னுயிர் கொடுக்கும் தியாக தீபங்களின் நினைவுகளைஇதயத்தில் என்றும் சுமப்போம்.. Relaxplzz ![]() |
Posted: 31 Jan 2015 03:50 AM PST |
Posted: 31 Jan 2015 03:39 AM PST நூபாய் நாணயத்தின் மேல் பேப்பர் வைத்து பென்சிலால் இப்படி தடம் எடுத்து விளையாடுய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y) ![]() ஞாபகம், அனுபவம் இருக்கா..? |
Posted: 31 Jan 2015 03:30 AM PST வைரம் மண்ணில் உருவாக பல ஆண்டுகள் ஆகுமே!!!... என்ன விந்தை இது, நீ..... என்னில் உருவாக, வெறும் பத்து மாதங்கள்??? ![]() "ரசனை துளிகள்" - 1 |
Posted: 31 Jan 2015 03:21 AM PST |
Posted: 31 Jan 2015 03:00 AM PST அனுபவமே கடவுள் பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் அறிந்து பாரென இறைவன் பணித்தான்! அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! பாசம் என்பது யாதெனக் கேட்டேன் பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் மணந்து பாரென இறைவன் பணித்தான்! பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! முதுமை என்பது யாதெனக் கேட்டேன் முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! வறுமை என்பது என்னெனக் கேட்டேன் வாடிப் பாரென இறைவன் பணித்தான்! இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் இறந்து பாரென இறைவன் பணித்தான்! 'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில் ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்! ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி 'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்! கவிஞர் : கண்ணதாசன் Relaxplzz ![]() |
Posted: 31 Jan 2015 02:50 AM PST |
Posted: 31 Jan 2015 02:40 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment