Relax Please: FB page daily Posts |
- :) Relaxplzz
- பணம் சம்பாதிக்க ஆயிரம் தொழில் இருக்கு உணவைச் சம்பாதிக்க விவசாயம் மட்டும்தாேன...
- "குட்டி குட்டி ஐடியாஸ்" பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- ஒரு பிளாட்டில் ஒருவர் பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார். வேறு ஒருவர் வந்...
- முதுகுவலி ஏன் வருகிறது..? எப்படிப் போக்குவது..?! முதுகுவலி முதியவர்களுக்கு மட்ட...
- (y) Relaxplzz
- எல்லா ஆணுக்குள்ளும் ஒரு சிறுவன் ஒளிந்திருக்கிறான்.. அதை தெரிந்து கொண்ட பெண்கள்...
- :P :P Relaxplzz
- பணம் என்ற காகிதத்தை பெற... சிலர் அன்பை இழக்கின்றனர். சிலர் பண்பை இழக்கின்றனர்.....
- :( Relaxplzz
- செம அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- "ரிலாக்ஸ் ப்ளீஸ்" உங்கள் ஆதரவுடன் 2,50,000 வாசக நண்பர்களை கடந்து பயணிக்கின்றது.....
- :P :P
- இந்த கொடுமைய எங்க போய் சொல்ல?...... ;-) கணவன் தொலைபேசியில்: நான் இன்னைக்கு மதி...
- சாலையில் போகும்போது மகனின் கண் போகின்ற திசையை பார்த்ததும் வேணுமா என்று கேட்காமல்...
- மனதைத் தொட்ட வரிகள் 1. பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்...
- வளைந்து வளைந்து வளம் கொடுப்பதில் தான் ஆறுக்கு அழகு, வளைந்து கொடுப்பது தான் மனித...
- :) Relaxplzz
- குழந்தைங்ககிட்ட இதப் போல பல்லால கடி வாங்கிட்டு அய்யோ வலிக்கிதேனு குழந்தைகிட்ட சொ...
- புது சிஸ்டம் வாங்கி இருக்கேன் , நல்லா இருக்கா பாருங்க :) :P :P
- :) Relaxplzz
- ;-) Relaxplzz
- சினிமாகாரன் தொல்ல தாங்க முடியலப்பா..!! TOILET போன.. "அப்பாஸ்" ஹார்பிக் வச்சுக்க...
- Better ரை தேடி Perfect டை இழக்காதீர்கள்... கழுதை தெஞ்சி கட்டெறும்பான கதை இது தா...
- திரு நெப்போலியன் அவர்கள் உலகின் தசை சிதைவு நோயிக்கான தனிப்பட்ட முதல் மருத்துவமன...
- "நான் படித்த தமிழ் புத்தகங்களில் இருந்து" பொறியுள்ள எலி அகப்பட்ட பிறகு, கதவைத்...
- பெட்ரோல் தீர்ந்து காரை ரோட்டில் தள்ளிக்கொண்டு யாரனும் சென்றால் அரபு நாட்டில் ஐநூ...
- :P :P Relaxplzz
- நம்ப முடிகிறதா நண்பர்களே.........? இது ஒரு ஓவியம்
- :) Relaxplzz
Posted: 03 Dec 2014 09:30 AM PST |
Posted: 03 Dec 2014 09:20 AM PST |
Posted: 03 Dec 2014 09:15 AM PST |
Posted: 03 Dec 2014 09:10 AM PST ஒரு பிளாட்டில் ஒருவர் பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார். வேறு ஒருவர் வந்து தடுத்தார் ஏன் சார் அடிக்கீறிங்க? நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன்...கேள்வி கேட்டால் இவனுக்கு 'சந்திரனுக்கும். சூரியனுக்கும்' வித்தியாசம் தெரியலை என்றார். ... யோவ்.. அவனுக்காவது சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் பையனுக்கும். என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே? என்றாராம் டென்ஷனாக. :O :O Relaxplzz |
Posted: 03 Dec 2014 09:00 AM PST முதுகுவலி ஏன் வருகிறது..? எப்படிப் போக்குவது..?! முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர் களையும் இப்போது பாடாய்படுத்திக்கொண்டிருக்கிறது. பெண்களும் முதுகுவலி, கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப்படுத்துவது எப்படி? என்பதை விளக்கும் கேள்வி- பதில் பகுதி இது! * தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப்படியாக வளரும்? முதுகெலும்பின் டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன? "முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம், இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும். முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்), 12 எலும்புகள் மார்பு பகுதியிலும் (தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (லம்பார்), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக் கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது. இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது." * எத்தனை வயது வரை முதுகெலும்பு வளரும்? வேகமாக வளரும் காலகட்டம் எது? "குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும் இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25 வயது வரை மிதமாகவும் இருக்கும்." * முதுகெலும்பின் அமைப்பில் ஆண்-பெண்ணுக்கு வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா? "முதுகெலும்பின் அமைப்பிலோ, செயல்பாட்டிலோ ஆணுக்கும்- பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் முதுகெலும்பின் வளைவுகளில் சிறு வித்தியாசம் இருக்கும். வளைவு ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்." * பெண்கள் கோலம் போடுதல், வீடு பெருக்குதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு முதுகு வலி ஏற்படுமா? "பெண்கள் 45-50 வயது வரை வீட்டு வேலைகளை செய்வது நல்லது. வீட்டு வேலைகளால் முதுகெலும்பிற்கோ, எலும்புகளின் நடுவில் உள்ள டிஸ்கிற்கோ எந்த பாதிப்பும் வராது. ஆனால் முதுகெலும்பில் ஏதாவது பிரச்சினையோ, நோயோ ஏற்பட்டிருந்தால் கடினமான வேலைகளை செய்யாமல் இருக்கவேண்டும். இடுப்பில் தண்ணீர் குடத்தை தூக்குவதாலும், குழந்தைகளை இடுப்பில் தூக்குவதாலும் பெண்களின் முதுகெலும்பில் பொதுவாக பாதிப்பு ஏற்படுவதில்லை." * கர்ப்பம், பிரசவத்திற்கு தக்கபடி பெண்களின் முதுகெலும்பு கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா? "பெண்களின் அடி முதுகு வளைவு அவர்களது கர்ப்ப காலத்தில் வயிற்றின் முன் பக்க வளர்ச்சிக்கு ஏற்ப, பின்பக்கம் சாய்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இதனால் வயிற்றில் குழந்தை வளர வளர முன்பக்க பாரத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில், பின்புறமாக சாய்ந்துகொண்டு கர்ப்பிணிகளால் அன்றாட வேலைகளை செய்ய முடியும். இதற்கு கர்ப்ப காலத்தில் சுரக்கும் ஹார்மோன்களும் உதவி புரிகின்றன." * முதுகுவலி தோன்ற எத்தனை விதமான காரணங்கள் இருக்கின்றன? "முதுகுவலி தோன்ற கீழ்க்கண்டவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன. டிஸ்க் ப்ரொலாப்ஸ்: முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல் இயங்கும் `டிஸ்க்' என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ, காயம் பட்டதினாலோ அல்லது அழற்சியினாலோ தேய்ந்து விடும். அப்போது 2 எலும்புகளுக்கிடையே போதிய இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன் அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி வலியை உண்டு பண்ணும். ஸ்பாண்டிலோசிஸ்: வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும், எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளுக்கிடையே உராய்வு ஏற்படும். இதனால் அழற்சியோ, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும். ஆஸ்டியோபொரோஸிஸ்: உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம். இதனால் எலும்புகளில் போதிய அளவு சுண்ணாம்பு சத்து இல்லாததால் எலும்புகள் வலுவிழந்து, அடர்த்தி குறைவாகிவிடும். இதனாலும் எலும்புகளில் வலியும், எலும்பு முறிவும் ஏற்படலாம். ஸ்பான்டிலோலிஸ்தஸிஸ்: முதுகெலும்பு வலுவிழக்கும்போது வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து முன்புறமோ பின்புறமோ விலகி விடும். இதனாலும் முதுகுவலியோ, முதுகு தசை பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. ஆர்த்ரைட்டிஸ்: மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே ஆர்த்ரைட்டிஸ். இது ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஆன்க்கிலோசில் ஸ்பான்டிலோசிஸ் போன்ற நோய்களின் விளைவால் ஏற்படக்கூடியதாக இருக்கும்." * மேடு, பள்ளம் நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன பயணம் மேற்கொள்வது முதுகுவலியை ஏற்படுத்துமா? "முதுகெலும்புகளுக்கு நடுவில் உள்ள டிஸ்க் ஷாக் அப்சர்வர் போல் செயல்பட்டு அதிக பளு தூக்குதல், குனிதல், குதித்தல் போன்ற சமயங்களில் அதிர்வுகளை தாங்கி கொள்ளும். ஆனால் டிஸ்க் தேய்ந்து விட்டாலோ அல்லது எலும்புகளில் வேறு பிரச்சினை இருந்தாலோ மேடு, பள்ளம் நிறைந்த சாலையில் செல்லும்போது டிஸ்க் அழுத்தப்பட்டு, அழுத்தம் தாளாமல் வெளியே பிதுங்கி பக்கத்தில் உள்ள நரம்புகளை அழுத்தும். இதனால் வலி ஏற்படும்." * முதுகுவலி என்பது கழுத்து வலியும் சேர்ந்ததா? முதுகு வலிக்கும்போது கழுத்தும் சேர்ந்து வலிக்குமா? "முதுகெலும்பில் எங்கு வேண்டுமானாலும் எலும்பு தேய்மானமோ, அழற்சியோ, டிஸ்க் ப்ரொலாப்ஸோ ஏற்படலாம். இதனால் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். பொதுவாக கழுத்து எலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்றால் கழுத்து, தோள்பட்டை, கைகளில் வலி பரவலாம். அதே போல் அடி முதுகில் ப்ரொலாப்ஸ் என்றால் அடிமுதுகு, இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். இரண்டு வித வலியும் சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை." * முதுகெலும்பின் அடர்த்தி குறைவு மற்றும் பிரச்சினைகளை வலி வரும் முன்பே கண்டுபிடிக்க முடியுமா? "வலியின் அறிகுறி தெரியும் வரை முதுகெலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் பிரச்சினையை கண்டுபிடிக்க முடியாது." * கழுத்து வலி மற்றும் முதுகுவலிக்கு இருக்கும் நவீன சிகிச்சை என்ன? "பேக் அண்ட் நெக் கட்டமைப்பு மருத்துவத்தில், டிஸ்க் ப்ரொலாப்ஸை அறுவை சிகிச்சையின்றி கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட DRX 9000 என்ற கருவி முதுகுவலிக்கும், DRX 9000C என்ற கருவி கழுத்து வலிக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறை கிட்டத்தட்ட 86 சதவீதம் வரை வலியை குறைத்து நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும்." * உறுப்பு மாற்று ஆபரேஷன் இப்போது பரவலாக இருக்கிறதே. முதுகெலும்புகளை எடுத்து எலும்பு வங்கிகளில் சேகரிக்க முடியுமா? அதை மாற்று ஆபரேஷன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்த முடியுமா? "எலும்பு வங்கியில் எலும்புகள் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் முதுகெலும்புகள் சேமிக்கப்படுவதில்லை. மேலும் செயற்கை டிஸ்க்குகளை பயன்படுத்தி டிஸ்க் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை இதுவரை செய்யப்படவில்லை. அதேபோல் தண்டுவட பாதையோ, தண்டு வடமோ வேறொருவரிடம் இருந்து மாற்றாக எடுத்து வைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் கிடையாது. இனி எதிர்காலத்தில் இதற்கான புது சிகிச்சை முறைகள் வரலாம்." விளக்கம்: டாக்டர் ஜெ.ஹரிகரன் ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz ![]() |
Posted: 03 Dec 2014 08:55 AM PST |
Posted: 03 Dec 2014 08:50 AM PST எல்லா ஆணுக்குள்ளும் ஒரு சிறுவன் ஒளிந்திருக்கிறான்.. அதை தெரிந்து கொண்ட பெண்கள் . .. . . . . . . . . . . .. . . . . . மளிகைக் கடைக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.. :P :P Relaxplzz |
Posted: 03 Dec 2014 08:45 AM PST |
Posted: 03 Dec 2014 08:40 AM PST பணம் என்ற காகிதத்தை பெற... சிலர் அன்பை இழக்கின்றனர். சிலர் பண்பை இழக்கின்றனர்... சிலர் நட்புகளை இழக்கின்றனர். சிலர் உறவுகளை இழக்கின்றனர்... சிலர் கற்பை இழக்கின்றனர்... சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர். சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர். சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்.. சிலர் வாலிபத்தை இழக்கின்றனர். சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்.. Relaxplzz ![]() |
Posted: 03 Dec 2014 08:30 AM PST |
Posted: 03 Dec 2014 08:25 AM PST |
Posted: 03 Dec 2014 08:21 AM PST |
Posted: 03 Dec 2014 08:20 AM PST |
Posted: 03 Dec 2014 08:11 AM PST இந்த கொடுமைய எங்க போய் சொல்ல?...... ;-) கணவன் தொலைபேசியில்: நான் இன்னைக்கு மதியம் வீட்டுக்கு ஒரு பிரண்டோட வரேன்... லஞ்ச் ரெடி பண்ணிடு... மனைவியின் பதில்: இருங்க இருங்க... என்னோட காலேஜ்மெட் என்னை லஞ்சுக்கு கூப்பிட்டிருக்கா... அதுனாலே... நீங்களே வந்து சமைச்சு சாப்பிட்டுக்கோங்க..... கணவனின் பல்டி: ம்... ஓஹோ அப்படியா.. சரி சரி லஞ்சுக்கு நான் மட்டும் வரேன்... என்னையும் உன் பிரண்டு வீட்டுக்கே கூட்டிட்டு போயிடு.. Relaxplzz ![]() குசும்பு... 2 |
Posted: 03 Dec 2014 08:06 AM PST சாலையில் போகும்போது மகனின் கண் போகின்ற திசையை பார்த்ததும் வேணுமா என்று கேட்காமல் வாங்கி தருபவர் அப்பா!! ♥ ♥ ![]() ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 1 |
Posted: 03 Dec 2014 08:01 AM PST மனதைத் தொட்ட வரிகள் 1. பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம். 2. துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். 3. உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது. 4. ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கி விடுகிறாள். 5. பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள். 6. அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. (யாருங்க அது 7. பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!!!!! 8. ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. 9. நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள். 10. தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான். 11. குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும் 12. சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான் 13. வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல். 14. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது. 15. மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது. நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே! 16. அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே! 17. செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை! 18. நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை! 19. பறக்க விரும்புபவனால் படர முடியாது. 20. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை. 21. ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம் மனதைத் தொட்ட வரிகள் Relaxplzz ![]() "மனம் தொட்ட வரிகள்" - 2 |
Posted: 03 Dec 2014 07:52 AM PST வளைந்து வளைந்து வளம் கொடுப்பதில் தான் ஆறுக்கு அழகு, வளைந்து கொடுப்பது தான் மனித வாழ்க்கைக்கு அழகு...!! ![]() "யதார்த்தங்கள் - தத்துவங்கள்" |
Posted: 03 Dec 2014 07:47 AM PST |
Posted: 03 Dec 2014 07:40 AM PST குழந்தைங்ககிட்ட இதப் போல பல்லால கடி வாங்கிட்டு அய்யோ வலிக்கிதேனு குழந்தைகிட்ட சொல்லிருக்கீங்களா கடி வாங்கியவங்க லைக் பண்ணுங்க... (y) ![]() ஞாபகம், அனுபவம் இருக்கா..? |
Posted: 03 Dec 2014 07:35 AM PST |
Posted: 03 Dec 2014 07:30 AM PST |
Posted: 03 Dec 2014 07:25 AM PST |
Posted: 03 Dec 2014 07:16 AM PST சினிமாகாரன் தொல்ல தாங்க முடியலப்பா..!! TOILET போன.. "அப்பாஸ்" ஹார்பிக் வச்சுக்கிட்டு நிக்கிறார்..!! டீ கடைக்கு போனா.. கார்த்தியும்,, சூர்யா'வும் நிக்கிறாங்க.. sunrise வேணுமா.. Brue வேணுமானு கேட்குறாங்க..!! குளிக்கலாம்னு பாத்ரூம் போனா.. உள்ளே கரீனா கபூரும்,, தீபிகா படுகோனும் நிக்கிறாங்க.. LUX soap வேணுமா.. Dove soap வேணுமானு கேட்குறாங்க..!! சாப்பிடலாம்னு உட்காந்திருந்தா.. சினேகா அக்கா ஆசீர்வாத் சப்பாத்திய எடுத்துக்கிட்டு வாராங்க..!! ஆபீஸ்'க்கு போகலாம்னு.. பைக்க ஸ்டாட் பன்னுனா.. உடனே ஷாருக்கான் வந்து.. Honda பைக் வாங்குங்க.. மைலேஜ் கொடுக்கும்'னு சொல்றாரு..!! பிஸ்கட் வாங்கலாம்னு கடைக்கு போனா.. அங்கே அமிதாப் பச்சன் நிக்கிறாரு.. Kukies பிஸ்கட் வாங்குங்கனு சொல்றாரு..!! மனைக்கு Dress எடுக்கலாம்னு போனா.. அங்கே அனுஷ்கா,, திரிஷா,, ராதிகா தொல்லை தாங்க முடியல..!! வேட்டி சட்டை வாங்கலாம்னா.. சரத்குமார்,, ஜெயராம்,, மம்முட்டி நம்ம முன்னாடி வந்து நிக்கிறாங்க..!! கோல்டு வாங்கலாம்னு கடைக்கு போனா.. மொத்த சினிமாகாரங்களும் நம்ம பின்னாலயே வர்ராங்க..!! இதை வாங்குங்க.. அதை வாங்குங்கனு சொல்றதுக்கு முன்னாடி.. இப்படி சம்பாதிங்க.. அப்படி சம்பாதிங்க'னு.. நல்ல ஐடியா குடுங்கையா.. மொதல்ல..!! உங்க தொல்ல தாங்க முடியல சாமி :O :O Relaxplzz ![]() குசும்பு... 3 |
Posted: 03 Dec 2014 07:09 AM PST Better ரை தேடி Perfect டை இழக்காதீர்கள்... கழுதை தெஞ்சி கட்டெறும்பான கதை இது தானோ... :P :P ![]() சும்மா... சும்மா... 1 |
Posted: 03 Dec 2014 07:00 AM PST திரு நெப்போலியன் அவர்கள் உலகின் தசை சிதைவு நோயிக்கான தனிப்பட்ட முதல் மருத்துவமனையின் நிறுவனதலைவர். நான் அறிந்து தனக்கு வந்த துயரத்திற்கு மட்டும் விடைதேடாமல் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் வழிதேடும் மனிதநேயம் படைத்தவர். விரைவில் உலகின் மிகபெரிய உடல் ஊனமுற்றோருக்கான காப்பகம் மறுவாழ்வு மையத்தின் உருவாக்க பணியில் முனைப்பாக செயல்பட்டு வரும் உன்னதர் . அது தமிழகத்தில் அமையபோவதால் நம் எல்லோருக்கும் பெருமை. எல்லாம் நிறைவாகவே கண்டோம் உம்மிடம் என்றும் எங்கள் வேண்டுதலும் வாழ்த்தும் உமக்காக .. வாழவேண்டும் பல்லாண்டு. மருத்துவமனை விவரங்களுக்கு Dr.அஜய் 9884323123. Dr.டேனியல் 7373706003 http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=98177 https://www.facebook.com/jeevanfoundations.mayopathy?fref=photo Relaxplzz ![]() |
Posted: 03 Dec 2014 06:10 AM PST "நான் படித்த தமிழ் புத்தகங்களில் இருந்து" பொறியுள்ள எலி அகப்பட்ட பிறகு, கதவைத் திறந்து வைத்தாலும், அது பொறிக்குள்ளேயேதான் சுற்றிக் கொண்டிருக்கும். அகப்பட்டுக் கொண்ட பிறகு அது விடுதலைக்கூட பயப்படுகிறது. -லா.ச.ரா(ஜனனி) ***** கத்தியை தூக்கிட்டே நிக்கிறதுதான் வீரம்னு நினைக்கக்கூடாது. வீரத்துக்குப் பல ரூபங்கள் உண்டு. -வாஸந்தி(துணைவி) **** "நாம்ப மறுபடியும் பாப்போம்ங்கிற நம்பிக்கையிலே எத்தனை நாள் வேணாலும் பார்க்காமல் இருக்கலாம். ஆனால் இனிமே பார்க்க மாட்டோம்ங்கிற முடிவிலே ஒரு நிமிஷம்கூட இருக்க முடியலையே!" -ஜெயகாந்தன்(சில நேரங்களில் சில மனிதர்கள்) ***** வெறுப்பு நம்மையே சாப்பிட்டுவிடும் ரொம்ப ஆபத்தான விரோதி. -தி.ஜானகிராமன்(செம்பருத்தி) ***** திருப்பித் திருப்பி பாக்க வைக்கிறதுக்குப் பெயர் அழகா? ஒரு தடவை பார்த்தால் இரண்டாவது தடவை பார்க்க முடியாமல் அப்படியே திகைக்க வைத்துவிட வேண்டும். அதுதான் அழகு -வண்ணதாசன்(கல்பனா ஸ்டூடியோவில் ஒரு ஃபோட்டோ) ***** நம்மை மீறின விஷயங்கள் எத்தனையோ இருக்கிறது தான் இந்த உலகத்தோட சுவாரஸ்யம். சந்தோஷத்தை மட்டும் சுமந்துட்டு, கஷ்டங்கள் வரும்போது பகவான் மேல தள்றது என்ன நியாயம்? சாமின்னு ஒருத்தர் இருந்தார்னா நம்மைப் படைச்சதோட அவர் வேலை ஓவர். நமக்கு ஏற்படற பிரச்சனையெல்லாம் நாமதான் சமாளிக்கனும். -வாஸந்தி(துணைவி) ***** கேட்கிறவனுக்கு மட்டுமல்ல சொல்கிறவனுக்கும் பழைய ஞாபகங்கள் இடைஞ்சல். -வண்ணதாசன்(அந்தப் பன்னீர்மரம் இப்போது இல்லை) ***** லிமிட்ன்னு ஒண்ணு இருக்கோ இல்லையோ, லட்சுமண ரேகை மாதிரி ஒண்ணை நாமா வச்சுக்கணும். இல்லேன்னா விவஸ்தை இல்லாம போயிடும். -வாஸந்தி(துணைவி) Relaxplzz |
Posted: 03 Dec 2014 06:00 AM PST பெட்ரோல் தீர்ந்து காரை ரோட்டில் தள்ளிக்கொண்டு யாரனும் சென்றால் அரபு நாட்டில் ஐநூறு திர்ஹாமம் அபதாரம் விதிப்பார்கள், காரணம் பெட்ரோல் உற்பத்தியாகும் நாட்டில், பெட்ரோல் இன்றி காரை தள்ளக்கூடாது என்பதாகும். அரிசி உற்பத்தியாகும் நம்ம நாட்டில் உண்ண சோறு இன்றி ரோட்டில் பட்டினியாக நடக்கும் நபர்களுக்காக அபராதம் யாருக்கு விதிப்பது? பட்டினியாக இருப்பவருக்கா?? அரசிற்கா?? Relaxplzz ![]() |
Posted: 03 Dec 2014 05:50 AM PST |
Posted: 03 Dec 2014 05:40 AM PST |
Posted: 03 Dec 2014 05:30 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment