Relax Please: FB page daily Posts |
- :) Relaxplzz
- அருமையான க்ளிக்..
- க்யூட் <3
- எப்படி இரகசிய கேமராவை தெரிந்துகொள்வது? பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க...
- தமிழக அரசின் அவசர உதவி எண் "104" திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா.??? 104‘‘நா...
- (y) Relaxplzz
- மனைவி: நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க? கணவன்: அவன் என்ன வேணும்னாலும்...
- தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உலக காஸ்மெடிக் நிறுவனங்கள் இந்தியாவைக்குறிவைத்தன - உட...
- ;-) Relaxplzz
- அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- :P :P
- :P :P @relaxplzz
- பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி வ...
- ஒரு தந்தையின் கதறல் : பத்திரிகையாளர் மெஹர் தரார் *******************************...
- :) Relaxplzz
- நடைபயிலத்தொடங்கிய குழந்தைக்கு தொடக்கத்தில் ஓடத்தெரியாது! ஆனால், அப்படி நடைபயிலு...
- ஒரு சர்வே:- 500 பக்கம் உள்ள ஒரு புத்தகத்தை எத்தனை நாளில் படிக்க முடியும்? எழுத...
- இப்படி ரோட்டுக் கடையில் கல் தோசை சாப்பிட்ட அனுபவம் உங்களுக்கு உண்டா..? இருந்தால்...
- :) Relaxplzz
- :P :P Relaxplzz
- ;-) Relaxplzz
- எந்த ஒரு விஷயத்திலும் மனிதன் வெற்றியைப் பெறுவதற்கு சில வழிகளை பின்பற்ற வேண்டும்...
- “நீங்கள் செய்த அறிவிப்பால் பாவம் பெருகப்போகிறது. ஏன் இப்படி ஓர் அறிவிப்பை செய்தீ...
- :( Relaxplzz
- உனக்காக யாருமில்லை என்று கவலைப்படுவதைவிட, நீ யாருக்கும் பாரமில்லை என்று சந்தோசப்...
- ;-) Relaxplzz
- இந்த மாதிரி கல் எறிந்து மாங்காய் , கொய்யா பறிந்து அனுபவம் உள்ளவங்க லைக் பண்ணுங்க...
- :) Relaxplzz
- நண்பேண்டா... :) ‘‘மச்சான், நீ முன்னால தியேட்டருக்குப் போ... நான் பின்னாலயே தண்...
Posted: 17 Dec 2014 09:30 AM PST |
Posted: 17 Dec 2014 09:25 AM PST |
க்யூட் <3 Posted: 17 Dec 2014 09:20 AM PST |
Posted: 17 Dec 2014 09:10 AM PST எப்படி இரகசிய கேமராவை தெரிந்துகொள்வது? பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும்போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப்புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை எளிதாக கண்டறியலாம்.... முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு,சன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் மொபைலில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள், மேலும் மொபைலில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப் செய்துவிட்டு அறையில்லுள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்படம் எடுங்கள்.... இப்போது புகைப்படத்தை கவனியுங்கள்.... ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும்.... இதைவைத்து அறையினுள் இரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை அறியலாம்.... பயனுள்ள இத்தகவலை பகிருங்கள் நண்பர்களே.... Relaxplzz |
Posted: 17 Dec 2014 09:00 AM PST தமிழக அரசின் அவசர உதவி எண் "104" திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா.??? 104''நாங்க இருக்கோம்''இலவச அழைப்பு உதவி மையம் 104 மருத்துவ உதவி மையத்துக்கு ஓர் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர், 'நான் ஒரு விவசாயி... எனக்கு கடன் தொல்லை தாங்கலை, நான் ரயில் தண்டவாளத்தில் தலைவைச்சு சாகப்போகிறேன்...' என்றார். அந்த அழைப்பை எதிர்கொண்ட தகவல் மைய அலுவலர் பதற்றம் அடையாமல், அவரிடம் ஆறுதலாகப் பேச்சுக் கொடுத்தபடியே அவரது வயது, குடும்பத்தைப் பற்றி நிறையக் கேட்டார். பின்னர், 'கண்ணை மூடி ரெண்டு நிமிஷம் அமைதியா இருங்க... நீங்க, இப்போ இறந்துட்டதா நினைச்சுக்குங்க... உங்க குடும்பம் என்ன செய்யும்? உங்க பசங்க நிலைமை என்ன ஆகும்?' என்றார். எதிர்த்தரப்பில் அமைதி. சிறிது நேரத்தில் அந்த விவசாயி அழ ஆரம்பிக்க, அவரை ஆறுதல்படுத்தி, தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்டது 104 சேவை. இரண்டு நாட்கள் கழித்து, 'நான் மிகப் பெரிய தவறு செய்ய இருந்தேன். நல்ல வேளையாக என் மனதை மாற்றி உண்மை நிலையைப் புரியவைத்தீர்கள்' என்று நன்றி தெரிவித்தார் அந்த விவசாயி. 100, 101, 108 என பல்வேறு சேவைகளைப் பற்றி நமக்குத் தெரியும். போலீஸ், தீ விபத்து, மருத்துவ உதவி போன்றவைகளுக்கு இந்த எண்களைத் தொடர்புகொண்டு உதவிகளைப் பெறலாம். அதில் புதிதாக இணைந்திருப்பதுதான் 104 சேவை. பலரது பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்டு, அதற்கான தீர்வைச் சொல்லும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த அற்புத சேவை மையம். அரசு உதவியோடு, எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஜி.வி.கே (Emergency Management and Research Institute & GVK) என்ற நிறுவனம் இந்தச் சேவையை இயக்குகிறது. தமிழ்நாட்டு மக்கள் எந்த பகுதியிலிருந்தும், வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் (24/7) இந்தச் சேவையை இலவசமாகப் பெறலாம். இந்த மையத்தின் மேலாளர் பிரபுதாஸிடம் பேசினோம். '104க்கு அழைப்பு வந்ததும், உடனடியாக தகவல் சேகரிக்கப்பட்டு, அது மனநல ஆலோசனைக்கா, மருத்துவ ஆலோசனைக்கா, அரசு மருத்துவ சேவைகளுக்கா என்று அழைப்புகளைத் தனித்தனியே பிரித்து, அதற்கான வல்லுநர்களிடம் அழைப்பை மாற்றி விடுவோம். பிறகு, தொடர்பு கொண்டவரின் பிரச்னைகளைக் கேட்டறிந்து அவருக்கான முதலுதவியும், ஆலோசனைகளும் வழங்கப்படும். உடல்நலப் பிரச்னைக்கான முதலுதவி மற்றும் ஆலோசனை காய்ச்சல், சளி, இருமல், வயிற்று வலி, வலிப்பு, வயிற்றுப் போக்கு, மாதவிலக்கு பிரச்னை, பிரசவ வலி, நாய்க்கடி, பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துகளின் கடிக்கான முதலுதவி, இரவில் திடீரெனத் தோன்றும் உடல் உபாதைகள், குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், விபத்துகள் போன்ற அனைத்துப் பிரச்னைகளுக்கும் முதலுதவிகளையும், மருத்துவ ஆலோசனைகளையும் பெறலாம். * மனநல ஆலோசனை சோர்வு, பயம், கோபம், தேர்வு பயம், மன அழுத்தம், மனச் சோர்வு, தற்கொலை எண்ணம், குடி மற்றும் புகைப் பழக்கத்துக்கு அடிமையானோருக்கான ஆலோசனை, தீய பழக்கத்தில் இருந்து தன் துணையைச் சரிசெய்வதற்கான ஆலோசனை, தாம்பத்ய உறவில் சிக்கல், துணையின் தவறான போக்கு, டென்ஷன், தம்பதியர்களின் உறவில் பிரச்னை, தூக்கமின்மை, குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் போன்ற அனைத்து மனப் பிரச்னைகளுக்கும் மனநல ஆலோசகர்கள் ஆலோசனைகளை வழங்குவர். * தகவல் மற்றும் விளக்கங்கள் முதலுதவி பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம், ப்ளூ கிராஸ் குறித்த உதவிகள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள், சந்தேகங்கள், லேப் ரிப்போர்ட் விளக்கங்கள், மருந்்தகச் சீட்டிலுள்ள மருந்துகளின் தகவல்கள், மருத்துவமனைகள் அதைச் சார்ந்த சிறப்பு வல்லுநர்கள் போன்ற அனைத்துக்குமே 104 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். *அரசு தொடர்பான புகார் அரசு மருத்துவமனைகளில் ஏதேனும் சேவையில் பிரச்னையோ, குறையோ என்றால்கூட, 104க்கு அழைக் கலாம். அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை, மருத்துவ வசதிகள் இல்லை, மருந்துகள் இல்லை போன்ற அனைத்துப் புகார்களுக்கும் இந்த 104ஐ தொடர்பு கொள்ளலாம். பிரச்னைகளைப் பதிவு செய்ததும், உடனடியாக அந்தப் பிரச்னைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இங்கு வரும் அழைப்புகளில் 90 சதவிகிதம் குடிப்பழக்கம் மற்றும் தாம்பத்ய உறவு சார்ந்த பிரச்னைகளே. மாணவர்கள் சிலர் பரீட்சை குறித்த பயத்துக்கும் அழைப்பது உண்டு. இந்த இலவச அழைப்பு உதவித் திட்டத்தினால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. மருத்துவத் தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதால், மக்களுக்கு உடல் மற்றும் மனநலப் பிரச்னைகளிலிருந்து தீர்வுகள் கிடைக்கின்றன. *சேவை அலுவலகம் 104 அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் அனைவரும் டாக்டர் கோட், தலையில் ஹெட்போனுடனேயே தொலை பேசியில் அழைத்தோருக்கு ஆலோசனைகளை வழங்கி கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மருத்துவம் தொடர்பான அனுபவத்தைப் பெற்றவர்கள்.. Relaxplzz ![]() |
Posted: 17 Dec 2014 08:55 AM PST |
Posted: 17 Dec 2014 08:50 AM PST மனைவி: நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க? கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்… ஆனா * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது… நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்…!! :P :P Relaxplzz |
Posted: 17 Dec 2014 08:45 AM PST தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உலக காஸ்மெடிக் நிறுவனங்கள் இந்தியாவைக்குறிவைத்தன - உடனே 1994ல் ஐஸ்வர்யாவுக்கும், சுஸ்மிதாவுக்கும் உலக அழகி பட்டங்கள் கொடுத்து இந்தியப்பெண்களை கவிழ்த்தன. 1994, 1996, 1997, 1999, 2000 ம் என தொடர்ந்து லாரா தத்தா, டயான ஹெய்டன், யுக்தா, பிரியங்கா என தேர்வு செய்து இந்தியாவில் அழகுசாதனப்பொருட்களை ஆழமாக கால் ஊன்றச்செய்து இந்தியப்பெண்களை மயக்கி கோடிகளை குவித்தது. 2000த்திற்க்குப்பிறகு முதல் 20 இடங்களில் கூட இந்திய அழகிகள் வந்ததில்லை. காரணம் இனி இந்தியப்பெண்கள் அழகு சாதனப்பொருட்களை கைவிடமாட்டார்கள் என்று புரிந்துக்கொண்டதால் மற்ற நாட்டுப்பெண்களை கவர சென்றுவிட்டார்கள். ஆனால் தொண்ணூறுகளிலிருந்து நாம் இன்னும் ஏமாந்துக்கொண்டிருக்கிறோம். இதுவும் ஒரு உலக அரசியல் என்பதை எப்போதுதான் புரிந்துக்கொள்ளப்போகிறோம்??? Relaxplzz ![]() |
Posted: 17 Dec 2014 08:39 AM PST |
Posted: 17 Dec 2014 08:35 AM PST |
Posted: 17 Dec 2014 08:30 AM PST |
Posted: 17 Dec 2014 08:25 AM PST |
Posted: 17 Dec 2014 08:20 AM PST |
Posted: 17 Dec 2014 08:10 AM PST பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."... அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது. அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்பு இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரையும் நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனமும் நிறைந்திருந்தது. நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா? Relaxplzz |
Posted: 17 Dec 2014 08:00 AM PST ஒரு தந்தையின் கதறல் : பத்திரிகையாளர் மெஹர் தரார் ***************************************************************************** "நான் எனது மகனை தினசரி காலை பள்ளிக்குக் கொண்டு சென்று விட்டு வருவேன். இதை கடந்த 13 வருடமாக செய்து வருகிறேன். இப்போது அவனுக்கு 15 வயதாகி விட்ட போதிலும் கூட நான் அதைத் தொடர்ந்து வருகிறேன். அவன் காரிலிருந்து புன்னகையுடன் கீழே இறங்கி பள்ளிக் செல்வதற்காக எத்தனிக்கும்போது நான் அவனுக்கு பறக்கும் முத்தம் கொடுத்து வழியனுப்புவேன். அவன் பள்ளிக்குள் நுழையும் வரை காத்திருப்பேன். அவன் பாதுகாப்பாக செல்கிறானா என்பதை அவனுக்குத் தெரியாமலேயே நான் உறுதி செய்து கொள்வேன். அவன் பாகி்ஸ்தானில் இருப்பதால் அவனது பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படவில்லை. மாறாக, என்னைப் பொறுத்தவரை, உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த பொக்கிஷம் அவன்தான் என்பதால். அவனைக் காக்க வேண்டியது எனத கடமை. அவன் மீண்டும் வீடு திரும்பும் வரை நான் பாதுகாப்பு குறித்த கவலையில்தான் இருப்பேன். ஆனால் இன்று எனது வயிற்றில் பெரும் குத்து விழுந்ததைப் போல துடித்துப் போயிருக்கிறேன். எனது இதயம், எனது ஆத்மா பெரிய இரும்புக் கம்பியால் அடிக்கப்பட்டதை போல உணர்கிறேன். பெஷாவர் ராணுப் பள்ளியில் பல குழந்தைகள் குரூரமாக கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டதும் எனது இதயமே நின்று போய் விட்டது. குழந்தைகளை முகத்தில் சுட்டிருக்கிறார்கள், தலையில் சுட்டிருக்கிறார்கள், அவர்கள் உட்கார்ந்திருந்த டேபிள், சேர்களிலிருந்து இழுத்துச் சென்று சுட்டிருக்கிறார்கள். மிக மிக நெருக்கமாக சுட்டிருக்கிறார்கள். மிக மோசமான படுகொலை இது. ரத்தம் துடிக்கிறது. தெஹ்ரிக் தலிபான் பாகிஸ்தான் என்ற பெயரிலான அவர்கள், ராணுவத்திற்கு எதிராக பழிவாங்குவதாக இதைச் சொல்லியிருக்கிறார்கள். ராணுவம் எங்களுக்குக் கொடுத்ததை நாங்கள் அவர்களுக்குக் கொடுத்துள்ளோம் என்று கூறியுள்ளனர். நான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நீங்கள் உங்களை முஸ்லீம் என்று சொல்லிக் கொள்ளலாம், ஜிஹாதில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறிக் கொள்ளலாம், அல்லாவின் பாதையில் செல்வதாக கூறிக் கொள்ளலாம், ஆனால் அல்லா எதையெல்லாம் செய்யக் கூடாது என்று சொன்னாரோ அதை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள். அவரது பெயரால் பல குழந்தைகளைக் கொன்று குவித்துள்ளீர்கள். யாரெல்லாம் உங்களை எதுவுமே செய்யவில்லையோ அவர்களைக் கொன்றுள்ளீர்கள். நீங்கள் பாகிஸ்தானுக்கு மட்டும் எதிரி அல்ல, மாறாக உங்களுக்கும் நீங்களே எதிரிகளாகியுள்ளீர்கள். நீங்கள் தண்டிக்கப்படுவதற்கு முன்பு, ஏதாவது ஒரு ராணுவ வீரரின் புல்லட் உங்களைக் கொல்வதற்கு முன்பு, நீங்கள் பல ஆயிரம் முறை செத்துப் போவீர்கள். உயிர் பிரிந்த வேளையில் கதறிய குழந்தைகளின் கதறல் உங்களை தினசரி கொல்லும். குழந்தைகளை இழந்து பரிதவிக்கும் பெற்றோர்களின் கண்ணீர் உங்களைக் கொல்லும். நாட்டின் வலி உங்களைக் கொல்லும். நீங்கள் சாகும் வரை உங்களிடம் அமைதி இருக்காது" Relaxplzz ![]() |
Posted: 17 Dec 2014 07:52 AM PST |
Posted: 17 Dec 2014 07:46 AM PST நடைபயிலத்தொடங்கிய குழந்தைக்கு தொடக்கத்தில் ஓடத்தெரியாது! ஆனால், அப்படி நடைபயிலும்போது நாம் ஓடிச்சென்று பிடிக்கநினைத்தால் என்னசெய்யுந்தெரியுமா? இவ்வளவுநாளாய் தான் பழகியிருந்த முட்டிபோட்டுதவழ்ந்துசெல்கிறமுறையையே கடைபிடித்து வேகவேகமாய் தவழ்ந்தோடி நம்மிலிருந்து தப்பிக்கப்பார்க்கும். ஆனாலும் நாம் பிடித்துவிடுவோம். இப்படி அடிக்கடி குழந்தை பிடிபடுவதே அக்குழந்தை ஓடுவதற்கு பயிற்சியாக அமையும். வாழ்க்கையிலும் இப்படித்தான். புதிதாக பிரச்சனையொன்றை எதிர்கொள்ளும்போது அப்படியே நின்றுவிடாமல் முந்தையப்பிரச்சனையின்போது நாம் எப்படி அதை எதிர்கொண்டோமோ அதையே இப்போதும் முயன்றால், புதியவழி தானாகவேகிடைக்கும். - ஃபீனிக்ஸ் பாலா. ![]() # படித்ததில் பிடித்தது # - 5 |
Posted: 17 Dec 2014 07:45 AM PST ஒரு சர்வே:- 500 பக்கம் உள்ள ஒரு புத்தகத்தை எத்தனை நாளில் படிக்க முடியும்? எழுத்தாளர்: ஒரு வாரம். டாக்டர்: இரண்டு வாரம். வக்கீல்: ஒரு மாதம். ஸ்டுடன்ட்: தேர்வுக்கு முதல் நாள் இரவு மட்டும் போதும்!! இதுதான் ஸ்டுடன்ட் பவர் :P :P Relaxplzz |
Posted: 17 Dec 2014 07:38 AM PST |
Posted: 17 Dec 2014 07:30 AM PST |
Posted: 17 Dec 2014 07:25 AM PST |
Posted: 17 Dec 2014 07:20 AM PST |
Posted: 17 Dec 2014 07:10 AM PST எந்த ஒரு விஷயத்திலும் மனிதன் வெற்றியைப் பெறுவதற்கு சில வழிகளை பின்பற்ற வேண்டும் என்று விவேகானந்தர் கூறியிருக்கிறார். அவர் போதித்த வெற்றிக்கான வழியை இங்கு பார்க்கலாம். * பட்டினி கிடக்காதீர்கள். * மிக அதிகமாக உணவு உண்ணாதீர்கள். * சோம்பலை துரத்தி அடியுங்கள். * சந்தேகமும், சஞ்சலமும் எதிரிகள், அவற்றை அண்ட விடாதீர்கள். * அதிக நேரம் உறங்காதீர்கள். * மிக குறைவாகவும் உறங்காதீர்கள். * பொறாமை அறவே இருக்கக் கூடாது. * உடல் தூய்மை அவசியம், ஆகையால் தினமும் நீராடுங்கள். * பேராசை படாதீர்கள். * மகிழ்ச்சியாக இருங்கள். * நல்லதையே நினைத்து வாருங்கள். நல்லவையே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடம் உண்டு. * தைரியமாக இருங்கள். * பொறுமையும், விடாமுயற்சியும் நல்ல நண்பர்கள். எப்போதும் இவர்களுடனே இணைந்திருக்க பழகுங்கள். Relaxplzz |
Posted: 17 Dec 2014 07:01 AM PST "நீங்கள் செய்த அறிவிப்பால் பாவம் பெருகப்போகிறது. ஏன் இப்படி ஓர் அறிவிப்பை செய்தீர்கள்" என்று பரமசிவனிடம் பார்வதி கோபித்துக்கொண்டார். சிவனே என்றிருந்த சிவனுக்கு ஒன்றும் புரியவில்லை. "நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்று அறிவித்து விட்டீர்கள். இதனால் நாட்டில் பாவம் பெருகிவிடாதா? " என்றார். நியாயம்தானே. கங்கையில் குளித்தால் பாவம் போய்விடும் என்ற தைரியத்தில் இனி பயமே இல்லாமல் பாவம் செய்வார்களே.. பரமசிவன் சிரித்துக்கொண்டே, "உன் கேள்விக்கு பதிலை கங்கைக்கரையில் சொல்கிறேன்" என்று பார்வதியை அழைத்துக்கொண்டு கங்கைக்கரைக்கு வந்தார். இருவரும் மாறுவேடத்தில் இருந்தார்கள். இருவரும் பேசி வைத்தபடி சிவன் மயக்கம் வந்தவர் மாதிரி நடித்து மயங்கி விழுந்தார். பார்வதி உதவி கேட்டு கூச்சலிட்டார். எல்லோரும் கூடிவிட்டனர். யாராவது ஒருவர் கங்கையிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து தெளித்தால் மயக்கம் தெளியும். உதவி செய்யுங்கள் என்றார் பார்வதி. எல்லோரும் ஓடினர். "ஒரு நிமிஷம். உங்களில் யார் பாவம் செய்யாதவரோ அவர்கள் தண்ணீர் கொண்டு வந்து தெளித்தால்தான் மயக்கம் தெளியும்" என்றார் பார்வதி எல்லோரும் சட்டென்று பிரேக் போட்டது போல நின்று விட்டார்கள். காரணம் எல்லோரும் பாவம் செய்திருக்கிறார்கள். பத்து நிமிடம் ஆயிற்று. இருபது நிமிடம் ஆயிற்று. ஒருவர் கூட அசையவில்லை. திடீரென்று கூட்டத்திலிருந்த ஒருவன் ஓடிப்போய் கங்கையில் குதித்தான். முங்கிக் குளித்தான். தண்ணீர் அள்ளிக்கொண்டு வந்து சிவன் முகத்தில் தெளித்தான். சிவன் மயக்கம் தெளிந்ததுபோல எழுந்திருக்க, கூட்டம் கலைந்தது. சிவன் சொன்னார், "கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒருவன் மட்டுமே நம்பினான். கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்று தெரிந்தவனுக்கு எல்லாம் பாவம் போகாது. கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்று நம்பியவனுக்கு மட்டும்தான் போகும்" என்றார். நம்பிக்கையாய் இருந்தால் முடியும் என்பதே முதல் வெற்றி. என்றும் நம்பிக்கையுடன்.. Relaxplzz ![]() "நீதி கதை" |
Posted: 17 Dec 2014 06:55 AM PST |
Posted: 17 Dec 2014 06:50 AM PST |
Posted: 17 Dec 2014 06:45 AM PST |
Posted: 17 Dec 2014 06:40 AM PST |
Posted: 17 Dec 2014 06:31 AM PST |
Posted: 17 Dec 2014 06:25 AM PST நண்பேண்டா... :) ''மச்சான், நீ முன்னால தியேட்டருக்குப் போ... நான் பின்னாலயே தண்ணி பாட்டில் வாங்கிட்டு வந்துடுறேன்''னு நண்பன் சொன்னா, நாம சினிமா டிக்கெட் எடுக்கணும்னு அர்த்தம். * ''மாப்ள, கிளம்பிட்டேன். உங்க தெரு முக்குலதான் இருக்கேன்''னு நண்பன் சொன்னா, அந்த டபேரா தலையன் இன்னமும் அவன் வீட்ட விட்டுக் கிளம்பலன்னு அர்த்தம். * ''மச்சி, ஃப்ரீயா இருக்கியா? ஒரு முக்கியமான விஷயம்''னு நண்பன் பேச்சை ஆரம்பிச்சா, ஏதோ ஒரு அமவுன்ட் கடன் கேட்கப் போறான்னு அர்த்தம். * ''பங்காளி, வாடா சரக்கடிப்போம்''னு தின்ன வடையில இருக்கிற எண்ணெய தலையில தேய்க்கிற கஞ்சப் பிசினாரி நண்பன் பாசமா கூப்பிட்டா, அவன் காதல் கதைய சொல்லப் போறான்னு அர்த்தம். * ''மச்சான், உன் போனக் கொடு... ஒரு கால் பேசிட்டுத் தர்றேன். என் நம்பர்ல இருந்து கூப்ட்டா ஃப்ரெண்டு போன எடுக்க மாட்டேங்கறான்''னு நண்பன் நம்ம போன வாங்குனா, நம்ம பேலன்ஸ கழுவி கவுத்தப்போறான்னு அர்த்தம். * ''பங்கு, உன் பைக்க கொடுடா, அம்மாவ ரேஷன் கடையில விட்டுட்டு வந்துடுறேன்''னு நண்பன் சொன்னா, அவன் ஆளோட எங்கயாவது ஊர் சுத்தப் போறான்னு அர்த்தம். * ''மச்சி, இதெல்லாம் ஒரு பாரா? நான் உனக்கு ஒரு நாள் வைக்கறேன் பாரு ட்ரீட்டு''ன்னு பில்லு வர்றப்ப நண்பன் சொன்னா, இன்னைக்கு செலவு நம்மோடதுன்னு அர்த்தம். * ''பரவாயில்ல மச்சான்... நான் வெளியவே நிக்கிறேன். நீ சொல்லிட்டு வா''ன்னு நம்ம வீட்டுக்கு வெளிய நின்னுக்கிட்டு நண்பன் சொன்னா, நம்ம வீட்டுல அவனுக்கு பூசை நடந்திருக்குன்னு அர்த்தம். * ''அவ ரொம்ப திமிர் பிடிச்சவ மச்சி, ரொம்ப ஹெட்வெயிட்டு''ன்னு ஒரு பொண்ணப் பத்தி நண்பன் சொன்னா, அந்தப் பொண்ணுகிட்ட ஏற்கனவே லவ் லெட்டர் கொடுத்து திட்டு வாங்கியிருக்கான்னு அர்த்தம். * ''மாப்ள, இது ரொம்ப ஷார்ட் கட்டுடா''ன்னு சந்து சந்தா நண்பன் நம்மளக் கூட்டிட்டுப் போனா, அந்த சந்துல ஏதோ ஒரு பொந்துல அவன் ஆளு இருக்குன்னு அர்த்தம். Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment