Tuesday, 16 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


ஈழத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் குழந்தைகளை படுகொலை செய்த ராஜபக்சே அடுத்த முறையும் இ...

Posted: 16 Dec 2014 08:54 PM PST

ஈழத்தில்
ஆயிரக்கணக்கான தமிழ்
குழந்தைகளை படுகொலை செய்த
ராஜபக்சே அடுத்த
முறையும்
இலங்கை அதிபராக வர
வேண்டும்
என்று வாழ்த்து தெரிவித்துள்ளார் மோடி.

உலகில் எங்கு மனிதர்கள்
கொல்லப்பட்டாலும்
கண்டனம் தெரிவிக்கும்
மோடி அரசு, தமிழர்கள்
கொல்லப்பட்டதை மட்டும்
மறந்து வாழ்த்து தெரிவிப்பது ஏன் ?


Posted: 16 Dec 2014 05:51 PM PST


அனேகமாக இரக்கம் உள்ளவனின் வாழ்க்கையில் ஏற்றம் இருப்பதில்லை. @களவாணி பய

Posted: 16 Dec 2014 07:17 AM PST

அனேகமாக இரக்கம்
உள்ளவனின்
வாழ்க்கையில் ஏற்றம்
இருப்பதில்லை.

@களவாணி பய

மண் பாண்டத்தின் மகிமை மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூ...

Posted: 16 Dec 2014 06:58 AM PST

மண் பாண்டத்தின் மகிமை

மண் பாண்ட சமையல்,
ஆரோக்கியத்தையும் நீண்ட
ஆயுளையும்
தரக்கூடியது.
உணவில் சுவையைக்
கூட்டக்கூடியது.
நீண்ட நேரத்துக்குக்
கெடாமலும்
சுவை மாறாமலும்
இருக்கும்.
உணவும் எளிதில்
செரிமானம் ஆகும்.
மண் பாத்திரத்தில்
தயிரை ஊற்றிவைத்தால்
புளிக்காமல் இருக்கும்.
தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும்
இருக்கும்.

#பாரம்பரியம்

@தஞ்சை தேவா


செஞ்சோலைக் குழந்தைகள் 61 பேரை (ஆகஸ்ட் 14, 2006) விமானத் தாக்குதலில் கொன்ற ராஜபக்...

Posted: 16 Dec 2014 06:53 AM PST

செஞ்சோலைக்
குழந்தைகள் 61
பேரை (ஆகஸ்ட் 14, 2006)
விமானத் தாக்குதலில்
கொன்ற ராஜபக்சவும்
தலிபானின்
பாகிஸ்தான்
குழந்தைகள் மீதான
தாக்குதலைக்
கண்டித்திருக்கிறார்

1970-களில் நான்கு மூட்டை நெல் விற்று ஒரு பவுன் தங்கம் வாங்கினோம். இன்று ஒரு மூட்...

Posted: 16 Dec 2014 04:20 AM PST

1970-களில் நான்கு மூட்டை நெல் விற்று ஒரு பவுன் தங்கம் வாங்கினோம். இன்று ஒரு மூட்டை நெல் 6,000 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே, நான்கு மூட்டை நெல்லைப் போட்டு பவுன் தங்கம் வாங்க முடியும். ஆனால், ஒரு மூட்டை நெல் 1,000 ரூபாய்கூட விற்பது இல்லை. அன்று ஒரு தேங்காய் விற்று ஒரு லிட்டர் டீசல் வாங்கினோம். இன்று டீசல் விலை 50 ரூபாய். ஆனால், தேங்காய் விலையோ அதே 5 ரூபாய்தான். விவசாயப் பொருட்களின் விலையை யாரும் கண்டுகொள்வதே இல்லை. கட்டுப்படியாகாத விலை, ஆட்கள் பற்றாக்குறை, காணாமல்போன மானாவாரி விவசாயம் போன்ற பல காரணங்கள்தான் விவசாயிகளை 'டவுன் பஸ்' ஏறவைத்தது''

- அய்யா நம்மாழ்வார்.


ஒரு நேர்மையான அதிகாரிக்கு நாம் தரும் பரிசு இது தானா ???...சகாயம் அவர்களுக்கு நம்...

Posted: 16 Dec 2014 03:07 AM PST

ஒரு நேர்மையான அதிகாரிக்கு நாம் தரும் பரிசு இது தானா ???...சகாயம் அவர்களுக்கு நம் ஆதரவை கொடுப்போம்

மதுரை கிரானைட் முறைகேடு குறித்து தொடர்ந்து விசாரணை செய்தால், கிரானைட் குவாரியில் போட்டு சமாதி ஆக்கி விடுவோம் என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இன்று 2வது நாளாக பொதுமக்களிடம் இருந்து கிராணைட் புகார் குறித்த மனுக்களை ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பெற்றார். இதில், நேரடியாக 53 மனுக்களும், அஞ்சல் மூலமாக 31 மனுக்களும் பெறப்பட்டது.

இதில், அஞ்சல் மூலம் வந்த கடிதம் ஒன்றை பிரித்து பார்த்தபோது, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டிருந்தது.

'உ' ஊஞ்சனை காளியம்மன் துணை என ஆரம்பிக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில், ''உயர்திரு. சட்டப்பணி ஆணையர் சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு, குமார் எழுதும் கடிதம். கிரானைட் குவாரி என்னுடைய உறவினர்களும் மற்றும் எனக்கு வேண்டப்பட்டவர்களும் கனிம வள குவாரி நடத்துகிறார்கள். அவர்களிடம் எந்தவித விசாரணையும் நடத்தக்கூடாது. எந்தவித இடையூறும் கொடுக்கக்கூடாது.
உடனே மதுரையை விட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால் நீங்கள் உயிருடன் திரும்ப முடியாது. அதையும் மீறி தொந்தரவு கொடுத்தால், இங்குள்ள குவாரியில் போட்டு சமாதி ஆக்கிவிடுவோம். சகாயம் உடம்பிலுள்ள கறி கூறுபோட்டு விற்கப்படும்.

என் மனைவி பிரேமா ராணி நெடுஞ்சாலைத் துறையில் ஈரோடு மாவட்டத்தில் வேலை செய்கிறார். இவருக்கு பதவி உயர்வும், சேலத்திற்கு பணியிட மாற்றமும் செய்ய நீங்கள் உதவி செய்ய வேண்டும்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் அவர் உதவி செயற்பொறியாளராக உள்ளார். இவருக்கு பணி உயர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நீங்கள் மதுரையில் தங்கி விசாரணை நடத்தக்கூடாது. விசாரணையை விலக்கிக் கொள்ள வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.

இதனால், தமிழக அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.

- விகடன்


டெல்டா மாவட்டம்னா என்னன்னு தெரியுமா? எங்க தெரிய போவுது..அதுதான் பாதி இடத்தை பிளா...

Posted: 16 Dec 2014 01:03 AM PST

டெல்டா மாவட்டம்னா என்னன்னு தெரியுமா? எங்க தெரிய போவுது..அதுதான் பாதி இடத்தை பிளாட்டு போட்டு வித்தாத்சே!

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய நெற்பயிர் பாசனத்திற்கு டெல்டா மாவட்டம்னு பேரு.

அங்க 6000 அடி ஆழத்திற்கு 2000 இடத்தில துளைய போட்டு, பைப்பை செருகி, அதுக்குள்ள வெடி மருந்த போட்டு கீழே இருக்கிற பாறய எல்லாம் வெடிக்க வச்சி மீதேன் என்கிற கேஸ் எடுக்க போறாங்களாம்?

அவனுங்க கேஸ் எடுத்தா உனக்கு என்னாடா கிருக்கு பயலேன்னு கேட்குறீங்களா? எனக்கு மட்டும் அல்ல நம்ம அடுத்த தலைமுறைக்கே தண்ணி இல்லாம போயிடும்டா பாவியலா?

எப்படி தண்ணியில்லாமா போவுன்னு கேட்குறீங்களா?
இவனுங்க ஓட்டய போட்டு கீழே இருக்குற தண்ணிய எல்லாம் உறிஞ்சின பொறவு என்னாகும், கீழே எம்ட்டியாகி போகும், அப்புறம் என்ன, ஆஹா..ஜாலின்னு கடல்தண்ணி உள்ளே புகுந்து இதெலாம் என்னோட ஏரியான்னு சொந்தம்கொண்ட ஆரம்பிச்சிடும், அப்புறம் குடிக்க கூட தண்ணி கிடைக்காம போயிடும்...நம்ம பேரம் பேத்திகளுக்கு நாம செஞ்சிட்டு போற நன்மை இதுதானா? அவங்கள அல்லாட வைக்கனுமா?

அதுக்கு நாங்க என்னா செய்யனும்னு நீங்க கேட்கிரது காதில விழுது. வேற ஒன்னும் பெரிசா செய்ய வாணாம், கீழே இருக்குற லிங்கை லைட்டா ஒரு கிளிக் கிளிக்கி இந்த போராட்டதில ஐக்கியமாகுங்க.

தீமை வரும் முன் காப்போம்!

https://www.facebook.com/pages/மீத்தேன்-எதிர்ப்பு-கூட்டமைப்பு-முகநூல்/938983476131399?fref=nf


0 comments:

Post a Comment