Friday, 26 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 26 Dec 2014 05:53 PM PST


பேச்சுலர் டூ குடும்பஸ்தன்.. 1. இரவு ஒரு மணிக்கு வந்த வீட்டுக்கு இப்போதெல்லாம் 9...

Posted: 26 Dec 2014 04:13 AM PST

பேச்சுலர் டூ குடும்பஸ்தன்..

1. இரவு ஒரு மணிக்கு வந்த வீட்டுக்கு இப்போதெல்லாம் 9 மணிக்குள் வந்துவிடுவீர்கள்.

2. ஆறு மாதம் துவைக்காமல் இருந்த ஜீன்ஸ் ஆறு நாளுக்கு ஒரு முறையேனும் துவைக்கப் பட்டிருக்கும்.

3. அப்பா கேட்ட நாலு கேள்விக்கு ஒரு வார்த்தைல பதில் சொல்லி இருப்பீர்கள். இப்ப மனைவி கேட்கற ஒரு கேள்விக்கு குறைந்த பட்சம் நான்கு பதிலேனும் சொல்வீர்கள்.

4. நண்பர்களுடன் செலவழித்த பல மணி நேரம் இனி சிலமணி நேரங்களாகக் குறையும்.

5. எங்க டா போறேன்னு அம்மா கேட்டப்ப, வந்து சொல்லறேன்னு சொன்ன பதிலை இனி சொல்ல முடியாது.

6. ஒட்டிக் கொண்டே இருந்த உடன் பிறப்புகள் சற்று தூரம் சென்றதாய் உணர்வீர்கள்.

7. அடிக்கடி கைபேசியை வீட்டில் மறந்து விட்டுச் செல்வீர்கள்.

8. நான் வருகிறேன் என்று சொல்லாமல், நான் வரட்டுமா? என்று உங்கள் வீட்டுக்கு வர உங்கள் தந்தையே அனுமதி கேட்கும் நிலைமை வந்திருக்கும்.

9. எல்லாப் பக்கமும் பிரச்சனை என்ற போதும் அலுவலக வேலைகள் தடையில்லாமல் நடந்திருக்கும். இப்ப காலைல காபி போடறப்ப வந்த சண்டைக்கே வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பீர்கள்.

10. திருமணத்திற்கு பின், இழப்புகள் ஆண்களுக்கும் தான் என்றுச் சொன்னால் இங்கு யாரும் நம்பப்போவதில்லை என்பதை உங்கள் மனம் அடிக்கடி உங்களிடம் சொல்லிச் செல்லும்.

@கனா காண்கிறேன்


தஞ்சை கோயில் விமானத்தில் இருக்கும் ஒரு ஐரோப்பியரின் உருவத்தை குறித்த காணொளி ஒன்ற...

Posted: 26 Dec 2014 03:12 AM PST

தஞ்சை கோயில் விமானத்தில் இருக்கும் ஒரு ஐரோப்பியரின் உருவத்தை குறித்த காணொளி ஒன்றை எனக்கு What's app ல் அனுப்பி இது உண்மையா என்று நிறைய நண்பர்கள் வினவுகின்றனர். "இந்த உடல் அந்த தலையோடு சேர்ந்த பின் புலிகேசி வீரனாக நினைக்கும் உலகம்" என்பது போல் சில திரிபான தகவல் பலரை திசைமாற்றும். இப்போது தான் தஞ்சை கோயிலின் விமானத்தில் மேல் "அது 80 டன் ஒரே கல் என்ற கற்பிதம் (Myth) தகர்ந்தது. இப்போது இன்னொரு தொழில்நுட்ப மயக்கமாய் ஒரு தகவல் உலா வந்து கொண்டுள்ளது. அந்த கானொளியில் ராஜ ராஜன் காலத்தில் ஐரோப்பியருடன் சோழர்களுக்கு தொடர்பு இருந்ததாகவும் அதனால் தான் ஒரு ஐரோப்பியரின் சிலையை தஞ்சை கோயில் விமானத்தில் அவர்கள் வடித்து வைத்திருக்கிறார்கள் என்பது போன்ற செய்தி அதில் கூறப்பட்டுள்ளது. அது முழுக்க முழுக்க தவறு.

இப்போது நாம் பார்க்கும் தஞ்சை கோயில் ராஜ ராஜனே பார்த்திருக்க மாட்டார். அது பல்வேறு காலங்களில் பல்வேறு மன்னர்களால் நிறைய மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டு இன்று காணும் வடிவில் வந்து நிற்கிறது. அந்த ஐரோப்பியரின் உருவமும் இடையில் ஆண்ட மன்னர்களின் ஆட்சி காலத்தில் உண்டான இடைச் சொருகல் தான். இது நாயக்க மன்னர்கள் காலத்திலோ, சரபோஜி மன்னர்கள் காலத்திலோ உருவாக்கபட்டிருக்க வேண்டும். ஆகையால் யாரேனும் அந்த கனொளியை உங்களுக்கு அனுப்பினால் அவருக்கு இதை தெரியப்படுத்துங்கள். அதை வேறு யாருக்கும் பகிர வேண்டாம்.

@ சசிதரன்


உயிர்களுக்கு தாகம் வந்தால் நீரருந்தும்! நீருக்கு தாகம் வந்து உயிர்களையருந்திய ந...

Posted: 25 Dec 2014 11:00 PM PST

உயிர்களுக்கு
தாகம் வந்தால்
நீரருந்தும்!

நீருக்கு
தாகம் வந்து
உயிர்களையருந்திய
நாள் இன்று..!

#டிசம்பர் 26: (சுனாமி)..


0 comments:

Post a Comment