Relax Please: FB page daily Posts |
- :) Relaxplzz
- பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..! பொட்டு : பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு...
- :) Relaxplzz
- கண்ணதாசனின் பொன்மொழிகள் 1) அறிவாளிகளின் குழந்தைகள் பெரும்பாலும் முட்டாளாகவே வளர...
- # படித்ததில் பிடித்தது # வீர சிவாஜி ஒரு முறை முகலாய மன்னனிடம் இருந்து தப்பித்து...
- "முகங்கள்" - டாக்டர் ராதாகிருஷ்ணனை சூப்பர் ஐஏஎஸ் அதிகாரி... டாக்டர் ராதாகிருஷ்...
- சில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்...! முடிந்த வரையில் நண்பர்கள் அனைவர...
- :) Relaxplzz
- ஒரு மனிதன் தெருவில் நடந்து கொண்டிருந்தான். திடீரென ஒரு குரல் ‘அங்கேயே நில். இன்...
- 18 புராணம்: ¤அக்னி புராணம் ¤கந்த புராணம் ¤கருட புராணம் ¤சிவமகா புராணம் ¤சூ...
- அக்காக்கள் இன்னொரு அம்மாக்கள் !!! உனக்கு நினைவில் இருக்கிறதா என்று தெரியவில்லை...
- :) Relaxplzz
- இதயம் பலகீனமானவர்கள் இதை படிக்க வேண்டாம்... நான் மறக்க நினைத்தும் மறக்க முடியாத...
- குட்டிக்கதை: பாழடைந்த பங்களா வாசலில் நின்றிருந்த அவளை, விசித்திரமான வடிவத்தில்...
- பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள் பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொர...
- :) Relaxplzz
- ""நீங்களும் ஆகலாம் இந்தி பண்டிட் in just 5 minutes...... முப்பது நாள்ல இந்தி பா...
- தமிழர் பெருமை... விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை க...
- மாவீரன் "சேகுவேரா" இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு... சாவைப் பற்றி எனக்குக் கவ...
- :) Relaxplzz
- ஒரு கணவர் கூறுகிறார்: முந்தைய நாள் அதிகம் குடித்ததால், பயங்கரத் தலைவலியுடன் ஒரு...
- பணக்காரனாக வேண்டுமானால், உழைப்பாளியாய் இரு........! புகழ் பெற வேண்டுமானால், உண்...
- வாழ்வின் மொழி... பெற்றோரின் கோபத்தால் உள்ளொடுங்கி நடைப்பிணங்களாக வாழ்கின்றன பல...
- :) Relaxplzz
- மீண்டுமோர் காத்திருப்பு!!! காத்திருக்கின்றேன் அந்தப் பொழுதுகளுக்காய், அலுவலகம்...
- 1977-ல் M.G.R.முதலமைச்சர் ஆன அன்று அவரது இல்லத்தில் நிறையக் கூட்டம். அப்போது மால...
- கவனம் அவசியம்..
- :) Relaxplzz
- குசும்பு... கல்யாண வீட்டில் ரொம்பவே அழகாய் இருந்த அந்த பெண் அடிக்கடி அவனது கண்ண...
- பஸ்சில் தவறிய ரூ.9 லட்சம் நகை, பணம்: டைம்கீப்பர், கண்டக்டர் தந்த இன்பஅதிர்ச்சி...
Posted: 26 Dec 2014 09:30 AM PST |
Posted: 26 Dec 2014 09:00 AM PST பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..! பொட்டு : பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது. தோடு : மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் . நெற்றிச்சுட்டி : நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது. மோதிரம் : பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது..ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும். செயின் , நெக்லஸ் : கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும் . வங்கி : கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம்படபடப்பு ,பயம் குறைகிறது .மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உருதிபடுதப்படிருகிரதுலம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை.கரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல் வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரேத ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது. வளையல் : வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது.முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும். ஒட்டியாணம் : ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.வயிற்று பகுதிகள் வலு வடையும். மூக்குத்தி : மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்னு உண்டு.அந்த புள்ளிகள் தூண்டப்படும் பொது அது சமந்தமான நோய்கள் குணமாகும் .மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் . கொலுசு : கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம், சிறுநீர்ப்பை,வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு.கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம் . மெட்டி : மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும் .செக்ஸுவல் ஹார்மோன்கள் தூண்டும். பில்லாலி என்பது குழந்தை பிறந்தவுடன் 3வது விரலில் அணியும்போது சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும் . Relaxplzz ![]() |
Posted: 26 Dec 2014 08:30 AM PST |
Posted: 26 Dec 2014 08:15 AM PST கண்ணதாசனின் பொன்மொழிகள் 1) அறிவாளிகளின் குழந்தைகள் பெரும்பாலும் முட்டாளாகவே வளர்கிறார்கள், நிழலிலே வளரும் செடி சோகையாக இருப்பது போல 2) பெர்னாட்ஷா வை நினைத்து கொண்டு தன்னை கண்ணாடியில் பார்ப்பவர்கள், நடிகையை நினைத்து கொண்டு மனைவியை கட்டிபிடிப்பவர்கள் ஆவர் 3) கண்களை மூடுங்கள், காதுகளை அடைத்து கொள்ளுங்கள் இதயத்தையும் மூடுங்கள், செய்துவிட்டீர்களா? சபாஷ், நீங்கள் அரசியல் வாதியாகிவிட்டீர்கள் 4) ஒரெ ஒரு அற்பனை சமாளிப்பது - சர்வாதிகாரம் ஒவ்வொரு அற்பனையும் சமாளிப்பதுதான் ஜனநாயகம் 5) விளக்கமாக பேசு, முடிவில் சிந்திக்கும் போது உனக்கே குழப்பம் வரவேண்டும் அதுவே சிறந்த பேச்சு 6) அன்பிலே நணபனை வெல்லுங்கள் களத்திலே எதிரியை வெல்லுங்கள் பண்பிலே சபையை வெல்லுங்கள் மஞ்சதிலே மனைவியை வெல்லுங்கள் 7) மூட்டையை கொடுத்து காசு வாங்குவான் சம்சாரி காசு கொடுத்து மூட்டையை வாங்குவான் வியாபாரி எதையுமே கொடுக்காமால் எல்லாத்தையும் வாங்குவான் அரசியல்வாதி 8) தனியாக அழுங்கள், கூட்டத்தோடு சிரியுங்கள் கூட்டத்தோடு அழுதால் நடிப்பு என்பார்கள் தனியாக சிரித்தால் பைத்தியம் என்பார்கள் 9) உலகத்திலுள்ள எல்லோருமே யோக்கியர்தான் தூங்கும்போது மட்டும் 10) காதலிக்கும் போது குழந்தையாயிரு அப்போதுதான் அவள் ஏமாற்றும் போதும் சிரித்துகொண்டே இருப்பாய் 11) கட்டாயம் காதல் செய்யுங்கள் - ஏனெனில் சந்தோசம் மட்டுமே வாழ்க்கையல்ல 12) விதியையும் மதியால் வெல்லலாம் என்று உன் விதியில் எழுதியிருந்தால் 13) யார் என்ன நினைக்கிறார்களோ என்று நினைத்து கொண்டே இருந்தால், நாம் என்ன நினைக்கிறோம் என்பதற்கு மரியாதையே இல்லாமல் போகும் Relaxplzz |
Posted: 26 Dec 2014 08:00 AM PST # படித்ததில் பிடித்தது # வீர சிவாஜி ஒரு முறை முகலாய மன்னனிடம் இருந்து தப்பித்து மாறு வேடத்தில் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தார் . ரொம்பப் பசி எடுத்ததும் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று தனக்கு உணவளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த வீட்டிலிருந்த வயதான பாட்டி அப்போது தான் சமைத்து முடித்திருந்தது."வாப்பா" என்றழைத்து சுட சுட சோற்றைப் பரிமாறியது. அவசரக் குடுக்கையான சிவாஜி பசி தாளாமல் வேகவேகமாய் சுடு சோற்றின் நடுவே கைவைத்துச் சாப்பிட ஆரம்பித்தார்.அதிக சூட்டினால் சாப்பிட முடியாமல் தவித்தார். உடனே குறுக்கிட்ட பாட்டி... ஏம்ப்பா .. நீயும் நம்ம சிவாஜி மாதிரி விவரம் புரியாத ஆளா இருக்கியே .. முதல்ல சுற்றி இருக்க சின்ன சின்ன கோட்டைகளை கவர்ந்துவிட்டு அப்பறமா பெரிய கோட்டைய ஆக்கிரமிக்கணும்... எடுத்ததுமே மிகப் பெரிய விஷயத்துக்கு ஆச மட்டும் பட கூடாது.. அது போல நீ ஓரத்துல இருக்க சோற்றை முதலில் சாப்பிட்டு முடி... அதற்குள் நடுவில் இருக்கும் மலைக்குவியல் சோறு ஆறியிருக்கும்... பின் அதை சாப்பிடலாம் " என்றது ... சிவாஜிக்குத் தூக்கி வாரிப் போட்டது... இருந்தும் பாட்டியின் சொல்லில் இருக்கும் நிஜத்தை புரிந்து கொண்ட சிவாஜி போர் நுணுக்கத்தை தனக்குச் சொல்லிக் கொடுத்த பாட்டியிடம் தான் தான் சிவாஜி என்று சொல்லாமலேயே, உணவளித்தமைக்கு நன்றி சொல்லி அந்த இடத்தை விட்டு வெளியே வந்தார்.. # உங்களுக்கான பாடம் மதகுருக்களிடமோ , போதகர்களிடமோ , பேச்சாளர்களிடமோ , பெரிய எழுத்தாளர்களிடமோ மட்டும் இருப்பதில்லை.... நீங்கள் கடந்து செல்லும் ரோட்டில் எதிர் வரும் காலில்லாத மனிதனிடம் கூட இருக்கலாம்.... யாரையும் துச்சமாய் நினைக்காமல் எல்லோரிடமிருந்தும் எதைக் கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்ளுங்கள்... நல்லதைப் பிறர்க்கு செய்யுங்கள்... கெட்டதா .? அதையும் பிறரை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள் , நீங்களும் பின் பற்றுங்கள் ! via பிரபாகரன் சேரவஞ்சி Relaxplzz ![]() |
Posted: 26 Dec 2014 07:45 AM PST "முகங்கள்" - டாக்டர் ராதாகிருஷ்ணனை சூப்பர் ஐஏஎஸ் அதிகாரி... டாக்டர் ராதாகிருஷ்ணனை தமிழக மக்கள் குறிப்பாக, நாகை, தஞ்சை, சேலம் மற்றும் சிவகங்கை மாவட்ட மக்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. அந்த அளவுக்கு அந்த மாவட்டங்களில் தனது திறமையான, மென்மையான, நேர்மையான அணுகுமுறைகளால் மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது நாகை, தஞ்சை, சேலம் மற்றும் சிவகங்கை சந்தித்த நன்மைகள் அந்த மக்களால் இன்று வரை பேசப்படுகிறது. இவரே நிரந்தரமாக எங்களுக்கு கலெக்டராக இருக்க வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் கூறினர். அதேபோல தஞ்சை மாவட்டத்தில் இவர் ஆட்சியராக இருந்த போது தான் கும்பகோணம் பள்ளிக்கூடத்தில் பெரும் தீவிபத்துத் துயரம் ஏற்பட்டு 90 சிறார்கள் கருகிப் பலியாயினர். அப்போது இவர் படு துரிதமாக செயல்பட்ட விதம் அனைவரையும் கவர்ந்தது. அப்போது இவருடன் இவரது மனைவி கிருத்திகா ராதாகிருஷ்ணனும் இணைந்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தும், கவுன்சிலிங் செய்தும் நேரத்தை செலவிட்டு அனைவரையும் வியக்க வைத்தார். தஞ்சை மாவட்ட ஆட்சியராக ராதாகிருஷ்ணன் இருந்த சமயத்தில்தான் தமிழகத்தை சுனாமி தாக்கியது. அப்போது நாகை மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த வீரசண்முகமணி திறமையாக செயல்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நாகைக்கு மாற்றப்பட்டார் ராதாகிருஷ்ணன். பின்னர் அங்கு சுனாமி வேகத்தில் இவர் செயல்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கிடைப்பதற்கும், தேடுதல் வேட்டையை முடுக்கி விடுவதற்கும் கடுமையாக உழைத்தார். இவரது திறமையான செயல்பாடுகள் அப்போது அனைவராலும் பாராட்டப்பட்டது. 2000 முதல் 2001 வரை சென்னை மாநகராட்சி ஆணையராகவும் செயல்பட்டார். பின்னர் நிதித்துறையிலும், கல்வித்துறையிலும் துணைச் செயலாளர், இணைச் செயலாளர், கூடுதல் செயலாளர், சிறப்புச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 2009ம் ஆண்டு டெல்லியில் உள்ள ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் இயற்கைப் பேரிடர் நிர்வாகப் பிரிவின் இந்தியப் பிரிவு உதவி இயக்குநராகவும், தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். பின்னர் கடந்த ஆண்டு மீண்டும் தமிழக அரசுப் பணிக்குத் திரும்பினார் ராதாகிருஷ்ணன். முதல்வர் ஜெயலலிதாவால் புதிதாக உருவாக்கப்பட்ட திட்ட அமலாக்கத்துறையின் செயலாளராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார். இந்தத் துறை மூலம்தான் தமிழக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவச திட்டங்களையும், இன்ன பிற முக்கியத் திட்டங்களையும் அமல்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.. Relaxplzz ![]() |
Posted: 26 Dec 2014 07:45 AM PST சில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்...! முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை அனைவருக்கும் பகிரவும் ! 1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள். 2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும். 3. விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள். 4.மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். 5.வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும். 6.அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே! அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம். 7.இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை வளர்க்க முற்படலாமே 8.கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும்.http://ruraleye.org/ 9.பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471 10.இரத்தப் புற்று நோய்: "Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது. மேலும் விபரங்களுக்கு வகை : புற்றுநோய் முகவரி: East Canal Bank Road, Gandhi Nagar,Adyar Chennai - 600020 Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில் தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241 முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை அனைவருக்கும் பகிரவும் ! நன்றி ! வாழ்க வளமுடன் ! Relaxplzz ![]() |
Posted: 26 Dec 2014 07:30 AM PST |
Posted: 26 Dec 2014 07:15 AM PST ஒரு மனிதன் தெருவில் நடந்து கொண்டிருந்தான். திடீரென ஒரு குரல் 'அங்கேயே நில். இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் ஒரு செங்கல் உன் தலையில் விழும்' அவன் நின்றான். அடுத்த வினாடி ஒரு பெரிய செங்கல் அவனுக்கு முன்னால் விழுந்து அவனை நடு நடுங்க வைத்தது. இன்னும் சற்று தூரம் நடந்தான். மீண்டும் அதே குரல் 'அங்கேயே நில். இல்லையேல் பிரேக் பிடிக்காமல் வரும் ஒரு கார் உன்னை மோதி நீ சமாதியாவாய்'. அவன் நின்றான். அடுத்த வினாடி ஒரு கார் படு வேகமாக அவனைக் கடந்து போனது. அவன் வெலவெலத்தான். 'நீ யார்… ' பயந்த அவன் கேட்டான். 'நான் உன்னைக் காப்பாற்ற கடவுளினால் அனுப்பப்பட்டவன்' குரல் சொன்னது. எரிச்சலடைந்த் மனிதன் கேட்டான்… 'இப்போ எல்லாம் ஓடி ஓடி வந்து காப்பாத்தறியே.. நான் கல்யாணம் கட்டிகிட்டப்போ எங்கே போய் தொலஞ்சே…' :P :P Relaxplzz |
Posted: 26 Dec 2014 07:00 AM PST 18 புராணம்: ¤அக்னி புராணம் ¤கந்த புராணம் ¤கருட புராணம் ¤சிவமகா புராணம் ¤சூர்ய புராணம் ¤பிரம்ம புராணம் ¤பாகவத புராணம் ¤பத்ம புராணம் ¤பவிஷ்ய புராணம் ¤பிரம வைவர்த்த புராணம் ¤மார்க்கண்டேய புராணம் ¤வாமன புராணம் ¤வராக புராணம் ¤மச்ச புராணம் ¤கூர்ம புராணம் ¤பிரம்மாண்ட புராணம் ¤வாயு புராணம் ¤விஷ்ணு புராணம் ¤லிங்க புராணம் ¤நாரத புராணம் -வி. ராஜமருதவேல் ![]() |
Posted: 26 Dec 2014 06:45 AM PST அக்காக்கள் இன்னொரு அம்மாக்கள் !!! உனக்கு நினைவில் இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் எனக்கு நன்கு நினைவில் உள்ளது நீ சிறுவயதில் கைகளில் பிரில் வைத்த ரோஸ் கலர் பாவாடை சட்டை அணிந்து வளைய வந்த நாட்கள். நீ வாசலில் கூட்டி பெருக்கி கோலம் போட எத்தனிக்கையில் அதற்கு இடைஞ்சலாக மட்டுமே நானிருப்பேன் உன்னை பெருக்க விடாமல் உன் கழுத்தை கட்டிக்கொண்டோ அல்லது நீ கோலம் போட வைக்கும் புள்ளிகளுக்கு இணையாக நானும் எதாவது புள்ளிகளை வைத்துக்கொண்டோ இருப்பேன். உன் வயதையொத்த தோழிகள் என்னை ஏதாவது சொன்னாலும் அதை சிரித்துக் கொண்டே தவிர்த்துவிட்டு "என் தம்பி " இவன் என்ற வாத்சல்யத்தோடு பார்ப்பாய் என்னை . எவ்வளவு தான் உன்னை தொந்தரவு செய்தாலும் அம்மா இவனைப் பாருங்கம்மா என்றதொரு செல்ல சிணுங்கலுடன் நிறுத்தி விடுவாய் !!! அந்த சிணுங்களுக்காகவே உன்னை மீண்டும் மீண்டும் சீண்டுவேன் நான். பள்ளியில் இருந்து நீ நடந்து வந்ததால் கால் வலிக்கிறது என்றவுடன் தினமும் உன்னை தூக்கி கொண்டு போய் விட்டுவிட்டு வந்த தாத்தாவும், என் பேத்தி ,என் பேத்தி என எங்கு போனாலும் உன்னை கூட்டி திரிந்த ஆயாவும் , மகளுக்கென்று அப்பாவால் ஸ்பெஷலாக வாங்கி வரப்படும் கோலாலம்பூர் லக்ஸ் சோப்பும் , டீச்சர் ஒருமுறை உன்னை கிள்ளியதால் அந்த டீச்சருடன் சண்டைக்கு போன அம்மாவும் என எல்லோருக்கும் செல்லமாக நீ இருந்தாலும், உனக்கு செல்லமாக நான்தான் இருந்தேன். பள்ளிகளில் நல்லவை எல்லாவற்றிற்கும் முன்னுதாரணம் நீயாகத்தான் இருப்பாய். நான் உனக்கு நேரெதிர் . பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி, நான் எந்த தப்பு செய்தாலும் அது உன்னையே சுட்டும். எல்லாவற்றிர்க்கும் நீதான் நீதிபதி அது பெரும்பாலும் என்னை காப்பதாகவே இருக்கும். பத்தாவதில் கணக்கில் எனக்கு சென்டம் வருமென்று கணித்தது தவறாய் போக, அதை ஏற்றுக்கொள்ள இயலாத நீ சிறுபிள்ளை போல அழுததை நினைத்து நான் மனங்கசிந்த நாட்கள் ... திருமணம் முடிந்து கணவன் வீடு செல்கையில் துணைக்கு யாரை அனுப்பலாம் என்று பேசுகையில், இடைபுகுந்த நீ தம்பியை அனுப்புங்கள் அவன் பார்த்து கொள்வான் என்று எனக்கே இல்லாத ஆளுமையை, தன்னம்பிக்கையை நீ ஊட்டிய நாள் ... சென்னையில் இருந்து கொண்டு வாரம் ஒருமுறைகூட உங்களால் வந்து போக முடியாதோ என்று ஆதங்கப்பட்ட நாள்... நீ கர்ப்பம் தரித்த காலத்தில் வந்த டைபாயிடும், உன்னை அழைத்து செல்ல அம்மா அப்பா வந்த போதும் நீயும் வாயேண்டா என்று உன் கண்கள் உரைத்ததை உணர்ந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நீ ஊருக்கு செல்லும் நாளில் வந்ததும், நானும் உன்னுடன் ஊருக்குதான் வருகிறேன் என்று நீ அறிந்தவுடன் உன் விழிகளில் கண்ணீர் துளிர்த்த நாட்களும் ..... ஸ்லேட்டு குச்சி முதல் பாரின் சாக்லேட் வரை உனக்கான பங்கை எனக்கு விட்டு தந்திருக்கிறாய் . ஆனால் நான் மட்டும் நமது அம்மாவின் பாசத்தில் உனக்குரிய பங்கை விட்டு தரவே இல்லை . அது எல்லாம் எனக்கு மட்டுமே வேண்டும் என்று சுயநலமாக நடந்து கொண்ட பின்னும் , என்றும் மாறா அதே புன்னகையுடன் நீ சிரித்த நாட்கள், நீ எல்லாமுமானவள் என்பதை எனக்கு உணர்த்திய நாட்கள் !!! அக்காக்கள் இன்னொரு அம்மாக்கள் !!! - Robert. ![]() |
Posted: 26 Dec 2014 06:30 AM PST |
Posted: 26 Dec 2014 06:15 AM PST இதயம் பலகீனமானவர்கள் இதை படிக்க வேண்டாம்... நான் மறக்க நினைத்தும் மறக்க முடியாத கதை. எனது தூரத்து உறவுக்கரரான பிரகாஷ் என்பவரின் குடும்பத்தில் நடந்த ஒரு சொக சம்பவம். பிரகாஷ் சென்னை அடுத்து ஆவடியில் வசித்து வந்தார், அம்பாத்தூரில் உள்ள ஒரு சைக்கிள் கம்பணியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்,அவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையொடு தன் மனைவி நளினியின் உறவினர்கள் வீட்டு விருந்தையும் முடித்துகொண்டு,நான்கே நாட்களில் பணிக்கு திரும்பி விட்டார்,அதை பார்த்த அனைவரும் குழப்பத்தில் இருந்தனர் கம்பணியில் இருந்தவர்கள் கூட "ஏன்?இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட "என்று கேட்டு இருக்கிறார்கள்.அதற்கு அவர் இந்த லீவ்வே பொதும் என்று கூறிவிட்டார்.அந்த அளவிற்கு தொழில் மீது அவருக்கு பக்தி.இதை அவர் மனைவியும் புரிந்துக்கொண்டு அவரின் விருப்படியே நடந்துக்கொண்டார்,அவர் குடுத்து வைத்தவர் என்று அனைவரும் புகழ்ந்து தள்ளினார்கள்.தினமும் வேலைக்கு செல்லும் பொது தன் மனைவிக்கு ஆசையாக முத்தம் கொடுத்து விட்டு தான் போவார்.மாலை சரியாக ஆறு மணிக்கு எல்லாம் கையில் 'பூ'வுடன் வந்து இருப்பார்.இப்படி சந்தோஷமாக போயிக்கொண்டிருந்த வேளையில் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை அந்த சொகம் நடந்து விட்டது. ஒரு நாள் வழக்கம்பொல் தன் மனைவிக்கு முத்தம் குடுத்து விட்டு,வேலைக்கு புதியதாக வாங்கிய பைக்கிள் கிளம்பினார்.அவர் போன அடுத்த இருபது நிமிடத்தில் அவர் வீட்டு ஃபோன் அடித்தது அவர் மனைவி நளினி தான் ஃபோனை எடுக்கிறாள்.எதிர்முனையில் கூறிய விஷயத்தை கேட்டு "அய்யோ" என்று கத்தியபடி வேளியே ஒடினாள், மற்றவர்களும் ஒன்னும் புரியாமல் அவளுடன் ஒடினார்கள்.அவர்கள் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் தான் மெயின் ரோடு அங்கே ஒடிப்பொயி அவர்கள் கண்ட காட்சி .... பிரகாஷ் பைக்கிள் ரோட்டை க்ராஸ் பண்ணுவதருக்கு வண்டியின் வேகத்தை அதிக படுத்திய அதே நேரம் ஒரு நாய் குறுக்கே வந்ததால் அதன் மீது மொதி நிலைத்தடுமாறி கீழே விழ அப்பொழுது அங்கு வேகமாக வந்த லாரி ஒன்று பிரகாஷ் மீது மோதி அவர் மேல் ஏறிவிட்டது.இதைத்தான் நளினியும் மற்றவர்களும் கண்ட காட்சி.. அதற்குள் போலீஷ் வந்து இவர்களுக்கு தகவல் கொடுத்து இருக்கிறது.பிரகாஷின் உடலை 'பொஸ்ட் மார்டம்'பண்ணுவதருக்கு போலீஸ் அம்புலன்சு முலமாக அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றுவிட்டனர்.எல்லாம் முடிந்து விட்ட நிலையில்...! ஒரு வாரம் கழித்து போலீஸ் நளினியை தேடி வந்து பிரகாஷ் விபத்தின்பொது அணிந்து இருந்த ரத்தகறை படிந்த அந்த துணியை கொடுத்தனர்.அதுவரை பிரமைபிடித்தவள்போல் இருந்த நளினி அந்த துணியை பார்த்ததும் 'ஓ'வென்று கதறினாள்.அன்றிலிருந்து அந்த துணியை பார்த்துகொண்டு பிரமைபிடித்தவள்ப்போல் வேறித்து பார்த்துகொண்டே இருந்தாள்.இரண்டு மாதங்கள் ஒடிவிட்டன எல்லாம் சகஜ நிலைக்கு திரும்பின.ஆனால் நளினி மட்டும் மாறாமல் அப்படியே இருந்தாள்!வீட்டிலிருந்தவர்களும் அக்கம்பக்கத்தினரும் அந்த துணியை தூக்கி போடு அது இருக்கும்வரை உனக்கு அந்த ஞாபகம் வந்துக்கிட்டே இருக்கும் என்று கூறியும்,நளினி அதை தூக்கி போடவில்லை. ஒரு நாள் துணித்துவைப்பதற்காக எல்லா துணியையும் எடுத்து கொண்டு நளினி அங்கிருந்த குளக்கரைக்கு தனியாக வந்தாள் யாரும் இல்லை அங்கே.மதியம் 12.00 மணி இருக்கும்.எல்லத்துணிகளையும் துவைப்பதற்கு எடுத்தபொழுது அந்த ரத்தகரை படிந்த துணியும் இருந்தது அதை எடுத்து தண்ணியில் அமுக்கினாள்,திடிரேன்று பயங்கர இடி சத்தம்,திடுக்கிட்டுப்போனாள் நளினி மேலை பார்த்தாள் வானம் இருட்டிக்கொண்டு வந்தது.சுற்றும்முற்றும் பார்த்தாள் ஆள் நடமாட்டமே இல்லை,சரி மழை வருவதற்குள் துவைத்து கிளம்பிட நினைத்து அந்த துணியை மீண்டும் குளத்தில் அமுக்கினாள் மறுபடியும் பயங்கர இடி சத்தம்! இந்த முறை நளினி பயந்து விட்டாள்,ஏதோ நடக்கப்போகிறது என்பதை அவள் உள் மனம் சொல்லிற்று. இருந்தும் அந்த துணியை துவைக்கமால் போவதில்லை என்று துவைக்க அரம்பித்தாள்.என்ன?ஆச்சாரியம் அந்த துணியிலிருந்த ரத்தகரை சற்றும் போகவில்லை !மீண்டும் மீண்டும் அந்த துணியை அடித்து துவைக்க முயன்றாள் துளிகறையும் போகவில்லை.நளினி புரியாமல் முழித்தாள் அந்த நேரம் மேகம் மேலும் இருட்டிக்கொண்டு இருந்தது, அப்போழுது மேலிருந்து ஒரு 'ஒளிக்கீற்று' குளத்தின் நடுவே இறங்கி புகை போன்று ஒரு உருவம் தெரிந்தது,அதை பார்த்த நளினியாள் கத்தவும் முடியவில்லை ஒடவும் முடியவில்லை அதே நேரம் அந்த உருவம் அவளை நோக்கி வேகமாக வந்தது, அது அருகில் வர வர பார்த்த உருவம் போல் தொன்ற அமைதியாக நின்றுவிட்டாள்,அந்த உருவம் அருகில் வந்ததும் அது யார்? என்று பார்ப்பதர்க்குள் அந்த உருவம் ஒரு பேப்பரில் சுருட்டி எதோ ஒன்றை நளினியிடம் குடுத்து மறைந்து விட்டது. உருவம் மறைந்து போனதால் கையிலிருந்த பொருளை உற்று நோக்கினாள் நளினி அப்பொழுது மேலிருந்து ஒரு 'அசீரிரி குரல்' கேட்டது "எந்த கரையாக இருந்தாலும் அதனை அகற்றி பளீச்சிடும் வேண்மைக்கு உபயோகிப்பீர் RIN RIN RIN(echo voice). நளினி கையை பார்த்தாள் அவள் கையில் இருந்தது புத்தம் புதிய "RIN SOAP". (ஆமாங்க இது மொக்க போஸ்ட் தான் ) :P :P Relaxplzz |
Posted: 26 Dec 2014 06:00 AM PST குட்டிக்கதை: பாழடைந்த பங்களா வாசலில் நின்றிருந்த அவளை, விசித்திரமான வடிவத்தில் இருந்த மிருகம் ஒன்று துரத்துவதுபோல கனவு கண்டாள்.. தினந்தோறும் இந்தக் கனவு தொடர்ந்து வர, அவள் பயந்து நடுங்கினாள்.. நிம்மதி இன்றித் தவித்தாள்.. அன்றைக்கும் அதே கனவு.. அதே பங்களா.. அதே மிருகம் துரத்த.. மூச்சு இரைக்க ஓடினாள்... ஒரு மூலையில் அவள் ஒடுங்கிக்கொள்ள அந்த மிருகம் அவளுக்கு அருகில் வந்து உற்றுப் பார்த்தது.. பயத்தில் உறைந்துபோன அவள், அந்த மிருகத்திடம் கேட்டாள்… யார் நீ..? உனக்கு என்ன வேண்டும்..? என்னை எதற்காகத் துரத்துகிறாய்..? இப்போது என்னை என்ன செய்யப் போகிறாய்..? அந்த மிருகம் அவளிடம் அமைதியாகச் சொன்னது… எனக்கெப்படித் தெரியும்..? இது உன் கனவு..! கருத்து: கண்ணுக்குத்தெரியாத எதிர்காலத்தை கவலையுடன் எதிர்நோக்குவதைவிட எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடவேண்டும் என்ற துணிச்சலுடன் வாழந்தால், வாழ்க்கை பிரகாசிக்கும் . Relaxplzz ![]() |
Posted: 26 Dec 2014 05:45 AM PST பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள் பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம். அது போன்ற போருட்களின் பட்டியலை பார்க்கலாம். வெங்காயம் வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும். பூண்டு பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம். உருளைக் கிழங்கு உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது. தேன் உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுமை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது. வாழைப்பழம் வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. பூசணிக்காய் பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். மெலாம்பழம் கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த மெலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், மெலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய மெலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம். இதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது. Relaxplzz ![]() |
Posted: 26 Dec 2014 05:30 AM PST |
Posted: 26 Dec 2014 05:15 AM PST ""நீங்களும் ஆகலாம் இந்தி பண்டிட் in just 5 minutes...... முப்பது நாள்ல இந்தி பாஷை ங்கற புத்தகம் எல்லாம் வேணாம்..இங்க பாருங்க அஞ்சே நிமிஷத்துல ஹிந்தி கத்துக்க ஒரு அருமையான வழி.. உங்களுக்கு சில இந்தி படங்கள் பேர் தெரிஞிருக்கலாம் .அதை அப்படியே தமிஷ்ல (மொழி) முழி போற அளவுக்கு பேர்த்து(பெயர்த்து) எடுங்க.. ஹம் கிஸீசே கம் நஹி – எங்களுக்கு கிஸ் அடிக்க வரல்லை தோ ரஹா – ரெண்டு ரவா ரொட்டி கப்டா அவுர் மக்கான் – ரொட்டியிலே கப்பு வருதுடா மாக்கான் ஆப் கி கசம் – உங்க மேலே (காக்கா) ஆய் (போயிருக்கு) சோட்டிசி பாத் – சின்னதா ஒரு குளியல் காலா பத்தர் – கால் பண்ணனுமா? பத்தர் கடைக்கு போங்க கூன் பெசீனா – கூலி பேசினியா? படோசன் – பெரிய பையன் அமர் பிரேம் – உட்காரு பிரேம் அந்தா கானூன் – அந்தால போச்சு-காணூம் ஏக் தூஜே கேலியே – ஏக தூசியா இருக்குன்னா கேளேன் பிரேம் நகர் – பிரேம் (கொஞ்சம்) நகர்ந்துக்க கட்டி பத்தங் - கட்டி வந்தா (வெளில போகாதெ) பதுங்கிக்கோ என்ன, நல்லா புரிஞ்சிகிட்டீங்களா? சரி, அப்ப சொல்லுங்க… குச் குச் ஹோத்தாஹே ன்ன என்ன அர்த்தம்? - Chelli Sreenivasan |
Posted: 26 Dec 2014 05:00 AM PST தமிழர் பெருமை... விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், அதன் பின்பே ஸ்கேன் செய்து பார்க்க முடியும், மனிதன் செய்யும் சில தவறுகளால் அரசு அதையும் தடை செய்து விட்டது. ஆனால் அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்திலேயே கரு உண்டான கணத்தில் இருந்தே குழந்தையின் பாலினத்தை துல்லியமாக கண்டறியும் முறையை நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்துள்ளனர். ஒரு பெண் மூச்சு விடும் நாசியின் பக்கங்களை வைத்தும், அந்த பெண் குழந்தையை சுமக்கும் போது எந்த கையை ஊன்றி மேலே எழுகிறார் என்பதை வைத்தும் இன்னும் இது போன்று நிறைய முறைகளில் இதற்கு முன் இருந்தவர்கள் கணித்தனர். "கெற்பதானங்கள் பண்ணக் கிணர்தனிட் சரணங்கணாசி வற்பணப் பிராணவாய்வு வலத்திலே யோடி லாணாஞ் சிற்பன விடத்திலோடிற் சிறந்தது பெண்ணதாகும் பிற்கர வுதயமாகிற் பிலமில்லாக் குருடு வூமை" என்ற அகத்தியர் அருளிய இந்த பாடலில் கரு உண்டான காலத்தில் நாசியில் ஓடும் மூச்சுக் காற்றை வைத்தே குழந்தையின் பாலினத்தை நம்மால் கணிக்க முடியும் என்பது தான் இந்த பாடலின் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் செய்தி. அதாவது மூச்சுக் காற்றானது வலது புற நாசியில் ஓடினால் ஆண் குழந்தை எனவும், இடது புற நாசியில் ஓடினால் பெண் குழந்தை எனவும், மூச்சுக்காற்று சீராக இல்லாமல் இருப்பின் பிறக்கும் குழந்தை குருடு, ஊமை போன்ற குறைபாட்டுடன் பிறக்கும் என்பதே இதன் விளக்கம். இதே போன்று குழந்தை கருவில் உண்டான தேதியில் இருந்து என்னென்ன உறுப்புகள் எந்தெந்த மாதங்களில் உருவாகும்,கருவில் குழந்தை உருவான தேதில் இருந்து பிறக்கும் நாள், குழந்தை குறைபாடு, கருச் சிதைவு, மூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது, திருநங்கையாக பிறப்பது போன்ற எண்ணற்ற செய்திகளை துல்லியமாக கொடுத்துச் சென்றுள்ளனர், மேற்கத்திய மோகத்தினாலும், தமிழை தாழ்வாக நினைப்பதாலும், கடவுள் மறுப்பு கொள்கைகளினால் சித்தர் பாடல்களை நாம் புறக்கணிப்பதாலும் இது போன்ற அறிய விடயங்களை நாம் தவற விடுகின்றோம். இவை அனைத்தும் அவர்களின் மெய்ஞானத்தால் தோன்றியவையே, சித்தர் பாடல்களை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்தால் உலக அளவில் தமிழ் மக்களுக்கு மேலும் அங்கிகாரம் கிடைக்கும் என்பதே என் கருத்து. -Sasi Dharan ![]() |
Posted: 26 Dec 2014 04:45 AM PST மாவீரன் "சேகுவேரா" இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு... சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக்கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும். பலப்பல கேள்விகள் அவரது வானத்தில் வல்லூறுகளாய்ப் பறந்தன. இந்தக் குழப்பமான சூழ்நிலையில்தான் 'சே' & காஸ்ட்ரோ சந்திப்பு! ஒரு மகத்தான வீரனை தனக்குள் இணைத்துக் கொண்ட தருணத்திலிருந்து கியூபா அரசியலில் எவருக்கும் அறியாத பரிணாம மாற்றங்கள் நிகழத்துவங்கின. வரைபடங்கள் விரிக்கப்பட்டன. புரட்சிக்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டன. பயிற்சி முழுவதுமாக முடிவடைந்த வீரர்கள் முழுமையாக கெரில்லாக்களாக மாறியிருந்தனர். புரட்சிக்கான நாள் குறிக்கப்பட்டது. இம்முறை காஸ்ட்ரோவின் கண்களில் நம்பிக்கை ஒளி தெரிந்தது. தனது கனவுகளை நிறைவேற்ற காலம் ஒரு மகத்தான வீரனைப் பரிசளித்திருக்கிறது எனும் நம்பிக்கை. அப்போது 'சே'வுக்கு வயது 27. காஸ்ட்ரோவுக்கு 32. காஸ்ட்ரோவுக்காவது கியூபா தன் சொந்த நாடு. போராடிய வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால் 'சே'வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தில், அம்மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து ஆயுதம் எடுப்பதென்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந் திராத ஒன்று. இதனால்தான் 'சே' மனிதருள் மாமனிதராக அடையாளம் காணப்பட்டார். 'கால்கள்தான் என் உலகம்' என 'சே' ஒருமுறை தன் நண்பர் ஆல்பர்ட்டோவிடம் கூறியிருந்தார். 'என் கால்கள் பதியக்கூடிய பெருவெளி அனைத்தும் எனது! அதில் வாழும் அனைவரும் என் சகோதரர்கள்' எனும் பேருண்மையை அர்த்தப்படுத்தும் வாசகம் இது. இதனால்தான் காஸ்ட்ரோவிடம், 'கியூபாவுக்கு விடுதலை கிடைக்கும் வரைதான் நான் உங்களுடன் இருப்பேன். அதன்பின் நான் என் பயணத்தைத் தொடர்ந்து, வெவ் வேறு இடங்களுக்குச் சென்றுவிடுவேன்' என அழுத்தமாகக் கூறியிருந்தார் 'சே'. காஸ்ட் ரோவும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஏறக்குறைய ஒன்றரை வருட கடுமையான ஆயுதப் பயிற்சிக்குப் பிறகு 1956, நவம்பர் 26&ம் தேதி இரவு மெக்ஸிகோ கடற்கரையில், 82 போராளிகள் ஒருவர் பின் ஒருவராக ஏறிக்கொண்டபின், விடுதலையின் பாடலை முழங்கியபடி, கிரான்மா எனும் படகு கியூபாவை நோக்கிப் பயணித்தது. 1957, ஜனவரி 17&ம் தேதி, தளபதி லா பிளாட்டோ கொல்லப்பட்டதன் மூலம் புரட்சியாளர்களின் முதல் வெற்றிச் சங்கொலி கியூபாவில் எதிரொலித்தது. அன்று துவங்கி மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக நடந்தது கெரில்லா யுத்தம். துவக்கத்தில் குழுவில் மருத்து வராகவும் லெஃப்டினென்ட்டாகவும் இடம்பெற்ற 'சே', தன் திறமை, துணிச்சல், மதிநுட்பம் ஆகியவற்றால் காஸ்ட்ரோவுக்கு அடுத்த நிலையிலிருந்து படைகளை வழி நடத்தினார். அவரது திறமை கண்டு வியந்த சக கியூபா வீரர் கள் அவரை பிரியத்துடன் 'சே' என அழைத்தனர். கடுமை யான ஆஸ்துமா துன்புறுத் தியபோதிலும், அடர்வனங் களிலும் மலைகளிலும் சளைக்காமல் வீரர்களுக்குத் தெம்பூட்டியபடி படையை வழி நடத்தினார் 'சே'. ''சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்'' போன்ற அவரது வாசகங்கள், களத்தில் வீரர்களுக்கு மில்லியன் மெகா வாட் மின்சாரத்தைப் பாய்ச்சி சீற்றம் கொள்ளவைத்தன. யுவேராவில் நடைபெற்ற யுத்தத்தில், 53 ராணுவத்தினரை வெறும் 18 கெரில் லாக்களைக் கொண்டு வீழ்த்தியதுதான் 'சே'வின் வீரத்தை கியூபாவுக்கு வெளிச்சமிட்டது. பின் தொடர்ந்த ஆண்டுகளில் வெவ்வேறு நிலைகளில் புரட்சிப்படை, பாடிஸ்டா அரசை முழுவதுமாக விரட்டியடித்தது. 1958 ஆகஸ்ட் மாதத்தில், புரட்சிப் படை தலைநகர் ஹவானாவுக்குள் ஊடுருவியது. கியூபா முழுவதும் காஸ்ட்ரோவின் வசமானது. வரலாற் றுச் சிறப்புமிக்க இந்தக் கெரில்லா யுத்த வெற்றி, உலகின் அனைத்து நாடு களையும் வியப்பில் ஆழ்த் தியது. 'டைம்' இதழ் 'சே' அட்டைப்படத்துடன் 'புரட்சி யின் மூளை'யென கட்டுரை எழுதியது. 1959, பிப்ரவரி 16&ல் கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றவுடன், விவசாயத் துறையில் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார் 'சே'. தேசிய வங்கியின் தலைவராக கியூபா ரூபாய் நோட்டுகளில் 'சே' என கையெ ழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். பின் தொழிற்துறை அமைச் சராகவும் 'சே' பதவி வகித்தார். இருந்தாலும் 'சே' தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். விவசாயக் கூலிகளுடன் சேர்ந்து கரும்பு வெட்டுவதும், தொழிற் சாலைகளில் இதர பணியாளர்களுடன் சேர்ந்து மூட்டை சுமப்பதுமாகவே வாழ்ந்தார். 'சே' மற்றும் காஸ்ட்ரோ இருவருக்குமிடையே யுத்தத்துக்கு முன்பும் பின்புமான உறவுகளில் வேறுபாடுகள் இருந்தது என்றாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்ததில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதி யாக, ஒற்றை மனிதனாகத் தன்னால் வேரறுக்க முடியும் என 'சே' திடமாக நம்பினார். கியூபாவுக்கு ஏவுகணைகள் இறக்குமதி செய்ய ரஷ்யா வாக்குறுதி தந்தபோது, ''ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும்'' எனத் தைரியமாகக் குரல் கொடுத்தார். அமெரிக்கா, கியூபாவின் மீது விதித்த பொருளாதாரத் தடைதான் அவரது இந்தக் கட்டற்ற கோபத்துக்குக் காரணம். அமெரிக்காவின் சி.பி.என். தொலைக்காட்சி, ஒரு நேர்காணலுக்காக சேகுவேராவை நியூயார்க்குக்கு அழைத் தது. ''அமெரிக்கா ஒரு கழுதைப் புலி. அதன் ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப் பேன்'' என அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலாகப் பேட்டி தந்தார் 'சே'. சே குவேராவுக்கு முடிவுரை எழுதக் களத்தில் இறங்கியது அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ! சி.ஐ.ஏ... உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் சுடப்பட்டு கீழே விழுவான். அவனை யார், எங்கிருந்து, எதற்காகச் சுட்டார்கள் என எதுவும் தெரியாது. ஆனால், அவனைச் சுட்ட துப்பாக்கியின் மிச்ச புகை, அமெரிக்காவில் கசியும். உலக வரைபடத்தில் இந்த ஓநாயின் காலடி படாத இடமே இல்லை. 'சே'வின் அமெரிக்கப் பயணமும், அமெரிக்க எதிர்ப்புப் பேச்சும் சி.ஐ.ஏ&வுக்கு சினமூட்டின. அதுவரை காஸ்ட்ரோவை குறிவைத்து இயங்கிய சி.ஐ.ஏ. தன் முழு எரிச்சலையும் 'சே'வின் பக்கம் திருப்பியது. காஸ்ட்ரோவைக் காட்டிலும் 'சே'தான் மிகவும் ஆபத்தானவர் என இலக்கு தீர்மானிக்கப்பட்டது. விழும் இடமெல்லாம் விதைபோல விழுவதும், எழும் இடமெல்லாம் மலை போல எழுவதுமாக இருந்த 'சே', சதித் திட்டம் குறித்து அறிந்தும் புன்னகைத்தார். தொடர்ந்து சீனாவுக்கும் அல்ஜீரியாவுக்குமாக தன் பயணங்களைத் தொடங்கினார். சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். ரஷ்யாவையும் ஒரு பிடி பிடித்தார். அமெரிக்காவால் பாதிக்கப்படும் மூன்றாம் உலகக் குட்டி நாடுகளுக்கு ரஷ்யா பொருளா- தாரரீதியாகப் பாதுகாப்-பளிக்க வேண்டி-யது அதன் தார்மிகக் கடமை என முழங்கினார். தொடர்ந்து தான்சானியா, கானா, காங்கோ போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பயணம் தொடர்ந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் அடக்குமுறை சர்வாதி-காரத்தாலும் ஆப்பிரிக்க மக்கள் அவதிப்படுவதை நேரடியாக உணர்ந்தார். குறிப்பாக காங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. மூன்று மாத & கியூபா அரசால் அங்கீ-கரிக்கப்படாத &பயணத்துக்குப் பிறகு, 'சே' 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை ஃபிடல் காஸ்ட்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான் வெளியுலகுக்கு 'சே' நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன் பிறகு 'சே'வைக் காணவில்லை. எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை. அன்றிரவு ஒரு சந்திப்பில், காஸ்ட் ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ, 'சே'வை டிராஸ்கியிஸ்ட் என சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது 'சே'வின் மனதை மிகவும் காயப் படுத்தியதாகவும், அதுதான் 'சே' கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப் படுவதுண்டு. 'சே எங்கே?' பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ட்ரோ பக்கம் திரும்பியது. 'சே'வை சுட்டுக் -கொன்றுவிட்டார் காஸ்ட்ரோ எனுமளவு கோபம் கிளம்பியது. காஸ்ட்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. சே காஸ்ட்ரோ இருவருக்கு-மிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியது உண்மை. அடிப்படை-யில் 'சே' ஒரு யதார்த்தவாதி. உள்ளது உள்ளபடியே போட்டு உடைக்கிற செயல் புயல். காஸ்ட்ரோ ஒரு ராஜதந்திரி. அரசியல்பூர்வமாகக் காய்களை நகர்த்துபவர். 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்பது 'சே'வின் உலகம். ஆனால், கியூபாவையும் அதன் மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு காஸ்ட்ரோவுக்கு. இருவருக்கு மிடையிலான முரண்கள் அனைத்துக்கும் இந்த வேறுபாடுகளே அடிப்படை! உண்மையில் 'சே' அப்போது காஸ்ட்ரோவுக்கும், அவரது தாய்க்-கும் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பி-விட்டு தனது அடுத்த புரட்சிக்காக காங்கோ கிளம்பி இருந்தார். காஸ்ட்ரோ எவ்வளவோ முயற்சித்தும் 'சே'வை நிறுத்த முடியவில்லை. 'மக்களுக்கான பணியில் தனது பாதை தொடர்ந்து நீளும். அதனை ஒருபோதும் தடுக்கக் கூடாது' என 'சே' காஸ்ட்ரோவிடம் உறுதிமொழி வாங்கியிருந்ததும் அதற்கு ஒரு காரணம். 'சே எங்கே?' எனக் கேட்ட யாருக்கும் காஸ்ட்ரோவால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம், சி.ஐ.ஏ! 'சே'வை அழித்தொழிக்கத் தேடி வரும் சி.ஐ.ஏ&வுக்கு துப்பு கிடைத்து விடக்கூடும் என காஸ்ட்ரோ அஞ்சியதே காரணம். வியட்நாமுக்கு 'சே' சென்று விட்டதாக காஸ்ட்ரோ சொன் னதை நம்பி, வியட்நாம் காடுகளில் 'சே'வை சி.ஐ.ஏ தேடி அலைந்து ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்தது. அந்தக் கடுப்பில், 'சே'வை காஸ்ட்ரோ சுட்டுக் கொன்றதற்கு தங்களிடம் ஆதா ரங்கள் இருப்பதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பத் தொடங்கியது. இது காஸ்ட்ரோவுக்கு மிகவும் நெருக்கடியை உருவாக்க, வேறு வழி இல்லாமல் அக்டோபர் 3, 1965&ல், பொதுமக்கள் முன்னிலையில் 'சே' தனக்கு எழுதிய கடிதத்தை அவரது அனுமதியுடன் பகிரங்கமாக வெளியிட்டார் காஸ்ட்ரோ. கடிதத்தில் 'சே' கியூபாவை விட்டு தான் வெளியேறியதற்கான காரணத்தையும், காங்கோ புரட்சிக்குச் செல்வதையும் குறிப்பிட்டி ருந்தார். 'சே', காங்கோ காடுகளில் துப்பாக்கியுடன் களத்தில் இருந்தார். கியூபா வீரர்கள் மற்றும் கறுப்பினப் போராளிகளுடன் காங்கோவின் சர்வாதிகார அரசை வேரறுக்கும் பணியில் இறங்கியிருந்தார். ஆனால் அவர் நினைத்ததுபோல், அந்த புரட்சி 'சே'வுக்கு வெற்றி தேடித் தரவில்லை. காங்கோ நாட்குறிப்புகள் எனும் டைரியில் எழுதியிருந்தது போல, அது ஒரு தோல்வியின் வரலாறாக முடிந்தது. அமெரிக்க சி.ஐ.ஏ. கழுகுகள் அவரைத் தேடி காங்கோ காடுகளுக்குள் புகுந்தபோது, 'சே' தன் பட்டாளத்துடன் செக்கோஸ் லோவியாவுக்கு இடம்பெயர்ந் திருந்தார். 'சே'வுக்கு மீண்டும் கியூபா செல்ல விருப்பம் இல்லை. பொலிவிய மாவோயிஸ்ட் தலைவரான மோஞ்சேவின் அழைப் பின் பேரில், தன் அடுத்த இலக்கான பொலிவியாவுக்குள் 1966 இறுதிவாக்கில் மாறுவேடத்தில் நுழைந்தார். அவருடன் 50 பேர் கொண்ட கெரில்லாப் படையும் புனிதப் பணியில் ஈடுபட்டது. ஆனால், அங்கேயும் அவருக்கு காங்கோவைப் போல தோல்வியே காத்திருந்தது. தட்பவெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாசாரப் புரிதலின்மை போன்றவையே அவரது திட்டங்களின் தோல்விகளுக்குக் காரணம். இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தன் அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மௌனமாகக் கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. இந்த மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து 'சே'வை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்னைகளுடன் 'சே' காடுகளில் அலைந்தார். சி.ஐ.ஏ. பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது. பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவர் தலைமையில்வேட்டையாடத் தொடங்கியது. 1967 அக்டோபர் 8.... தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம். காலை 10.30... யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் 'சே' கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார். நண்பகல் 1.30... அந்தக் குண்டுப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு 'சே'வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர். பிற்பகல் 3.30... காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ''நான்தான் 'சே'. நான் இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்'' என்கிறார். மாலை 5.30... அருகிலிருந்த லா ஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலாக 'சே'வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் 'சே' கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார். இரவு 7.00... 'சே பிடிபட்டார்' என சி.ஐ.ஏ&வுக்குத் தகவல் பறக்கிறது. அதே சமயம், 'சே' உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது. தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ''இது என்ன இடம்?'' என்று 'சே' கேட்கிறார். பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ''பள்ளிக்கூடமா... ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது?'' என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பிலும் 'சே'வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார். அக்டோபர் 9... அதிகாலை 6.00... லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார். கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் 'சே'வைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது 'சே'தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக் கிறது. 'சே'வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் 'சே'வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் 'சே'வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள். காலை 10.00... 'சே'வை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால், அது உலகம் முழுக்க அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத் தன்மையையும் உருவாக்கிவிடும் என்பதால், அவரை உடனடியாகத் தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏ&விடம் இருந்து தகவல் வருகிறது. வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500, 600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் 'சே'... 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள். காலை 11.00... 'சே'வைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. 'மரியோ ஜேமி' என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அக்காரியத்துக்காகப் பணியமர்த்தப்படுகிறார். நண்பகல் 1.00... கைகள் கட்டப்பட்ட நிலையில், 'சே'வை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு மரியோ அழைத்துச் செல்கிறார். ''முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!'' என்பார் 'சே'. ஆனால், மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாராகிறார். தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு 'சே' கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார். ''கோழையே, சுடு! நீ சுடுவது 'சே'வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!'' இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம் இதுதான்! மணி 1.10... மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான். 'சே' இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது. அக்டோபர் 18.... கியூபா... ஹவானா-வில் வரலாறு காணாத கூட்டம் 'சே'வின் அஞ்சலிக்காக காஸ்ட்ரோவின் தலைமையில் கூடியிருந்தது. அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ட்ரோ. ''வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்றுவிட்ட 'சே' நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூபா மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்'' என வேண்டுகோள் விடுக்கிறார். இறந்தபோது 'சே'வுக்கு வயது 40. உலகம் முழுக்க 'சே'வின் புகழ் இன்னும் இன்னும் பரவியது. உலகின் அனைத்து இதழ்களிலும் 'சே' குறித்துக் கட்டுரைகள் எழுதப்பட்டன. உலகின் பெரும் கவிகளான ஆக்-டோவியா பாஸ், ஹ¨லியா கொத்சார் போன்றவர்கள் 'சே' குறித்து கவிதைகள் எழுதினர். பிரெஞ்சு அறிஞர் ழான் போல் சார்த்தர், 'பூமியில் வந்துபோன முழுமையான மாமனிதர் சே!' என மகுடம் சூட்டினார். நிகரகுவாவில் புரட்சி ஏற்பட்டு குவேராயிசம் எனும் கொள்கைகொண்ட சான்டனி ஸ்டாஸ் அரசு, ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் வெற்றி ஊர்வலத்தின்போது ஏசுவைப் போன்ற 'சே'வின் உருவம் கொண்ட அட்டைகளை அனைவரும் தாங்கிப் பிடித்தி ருந்தனர். கியூபா அரசாங்கம் 'சே'வின் நினைவைத் தொடர்ந்து சமூகத்தின் ஞாபகத்தில் பதியவைக்கும் விதமாக தனது கட்டடங்கள் மற்றும் பூங்காக்களில் சித்திரங்களாகவும், சிலைகளா கவும், பல்வேறு உருவ வேலைப்பாடு களாகவும் நிர்மாணித்து பெருமைப்படுத் தியது. சான்டா கிளாரா எனும் நகரில் 'சே'வின் மியூஸியம் ஒன்றும் உள்ளது. வருடந்தோறும் மில்லியன் கணக்கில் பயணிகள் வெளிநாடுகளிலிருந்து இந்த மியூஸியத்தைப் பார்ப்பதற்காக மட்டுமே கியூபாவுக்கு வந்து செல்கின்றனர். கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலைகளில் வகுப்பறைகளுக்குச் செல்லும் முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த குரலில் முழங்குகிற வாசகம் என்ன தெரியுமா? ''ஆம், எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தனர். நாங்கள் 'சே'வைப் போல இருப்போம்!'' ![]() |
Posted: 26 Dec 2014 04:30 AM PST |
Posted: 26 Dec 2014 04:15 AM PST ஒரு கணவர் கூறுகிறார்: முந்தைய நாள் அதிகம் குடித்ததால், பயங்கரத் தலைவலியுடன் ஒரு நாள் காலை கண் விழித்தேன். படுக்கைக்கு அருகே, 2 ஆஸ்பிரின் மாத்திரைகளும், குளிர்ந்த நீரும் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன்! அத்துடன், சலவை செய்யப்பட்ட எனது மாற்றுத் துணிகள் டேபிளில் இருப்பதையும் கண்டேன்! எனது அறையும் ஒழுங்காக்கப்பட்டு மிக சுத்தமாக இருந்தது! மொத்த வீடுமே படு சுத்தமாக இருந்தது! மாத்திரைகளை விழுங்கும்போது, டேபிளில் ஒரு குறிப்பைப் பார்த்தேன்: "டார்லிங், உங்கள் காலை உணவு அடுப்பின் மேல் சூடாகவே இருக்கும், சாப்பிடுங்கள், நான் ஷாப்பிங் செல்கிறேன், ஐ லவ் யூ" சமையலறைக்குச் சென்றால், என் மனைவியின் குறிப்பு சொன்னது போலவே, சூடான காலை உணவோடு, பத்திரிகையும் தயாராகவே இருந்தது. என் மகன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். என் மகனைப் பார்த்து, "நேற்று இரவு என்ன தான் நடந்தது?" என்று வினவினேன். என் மகன், "அப்பா, நீங்கள் அதிகாலை 3 மணிக்கு மிக அதிகமான போதையில் வீட்டுக்கு வந்தீர்கள், நாற்காலியை உடைத்தீர்கள், கூடத்திலேயே வாந்தி எடுத்தீர்கள், தடுமாறி கதவின் மீது மோதி நெற்றியில் அடிபட்டுக் கொண்டீர்கள்!" என்றான். குழப்பத்தின் உச்சத்துக்குச் சென்ற நான், "பின் எப்படி வீடே அலம்பி விட்டது போல சுத்தமாகவும், என் காலை உணவு தயாராகவும் உள்ளது ? நியாயமாக, என்னுடன் பெரிய சச்சரவுக்கு அல்லவா உன் அம்மா தயாராக இருந்திருக்க வேண்டும் ?" என்றேன். என் மகன் அமைதியாக, "அப்பா, நேற்றிரவு அம்மா உங்களை தரதரவென்று படுக்கையறைக்கு அழைத்துச் சென்று, உங்கள் உடைகளையும், காலணிகளையும் களைந்தபோது, நீங்கள், 'விடு என்னை, நான் திருமணமானவன், என் மனைவியை மிகவும் நேசிப்பவன்' என்றீர்கள்" என்றான் !!!!!!!! Relaxplzz |
Posted: 26 Dec 2014 04:00 AM PST பணக்காரனாக வேண்டுமானால், உழைப்பாளியாய் இரு........! புகழ் பெற வேண்டுமானால், உண்மையாய் இரு........!! நண்பர்களை பெற வேண்டுமானால், தாராள மனப்பான்மையுடன் இரு...!!! மெய்யறிவு பெறவேண்டுமானால், தர்ம சிந்தனையுடன் இரு....!!!! வேதனை அடையாமல் இருக்க வேண்டுமானால், நாவடகத்தோடு இரு......!!! Relaxplzz ![]() |
Posted: 26 Dec 2014 03:45 AM PST வாழ்வின் மொழி... பெற்றோரின் கோபத்தால் உள்ளொடுங்கி நடைப்பிணங்களாக வாழ்கின்றன பல குழந்தைகள். உங்களிடம் ஒருவர் கடுமையாக கோபப்படுகிறார். அந்த நேரம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று யோசித்துப்பாருங்கள்? பதட்டமாகி படபடப்பில் ஒன்றும் ஓடாமல் செயலற்று போய்விடுகிறீர்கள். கோபம் என்பது விஷம். விஷம் என்ன செய்யும் ஒருவரை முற்றிலுமாக கொன்றுவிடும். பிறகேன் கோபப்படுகிறார்கள்? கோபம் விஷம் என்பது ஏன் தெரியவில்லை? கோபம் விஷம்தான். ஆனால் ஸ்லோ பாய்சன் அதாவது மெல்ல கொல்லும் விஷம். அதனால்தான் நாம் கொடுத்தது விஷமென்றே தெரியவில்லை. வீட்டில் எல்லோரும் உங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்பது தவிர, கோபத்தால் நீங்கள் சம்பாதித்தது என்ன? நீங்கள் எதற்காக கோபப்பட்டீர்களோ, அதெல்லாம் அதன் பிறகு நீங்கள் நினைத்தது போல் மாறிவிட்டதா என்ன? இத்தனை வருடத்தில் எதுவும் மாறவில்லை என்பதிலிருந்தே தெரியவில்லையா! கோபத்தால் எந்த விஷயத்தையும் மாற்றிவிட முடியாது என்று. - Hifs Ur Rahman. ![]() |
Posted: 26 Dec 2014 03:30 AM PST |
Posted: 26 Dec 2014 03:15 AM PST மீண்டுமோர் காத்திருப்பு!!! காத்திருக்கின்றேன் அந்தப் பொழுதுகளுக்காய், அலுவலகம் விட்டு வீடு வரும் உன்னை, அள்ளியெடுத்துப் பூசிக் கொள்வதற்காய், காலை முதல் மாலை வரை காத்திருந்து, சேர்த்து வைத்த கதைகளெல்லாம், காதோரம் சொல்லிவிட்டு உன் கைவிரல்கள் சொடுக்கெடுத்து, சூடாய் ஒரு தேநீர் சுடு நீரில் ஓர் குளியல், வாகாய் உன் மார்பில் பொருந்தி வக்கணையாய்க் கதை பேசி, வறுத்த மீன் நீ ருசிக்க என் வயிற்றின் பசியடங்க, குழந்தையாய் நீயுறங்க கண்விழித்தே நான் ரசிக்க, விடிந்திடும் ஓர் பொழுதில் விருட்டென நீயணைக்க, வெட்கியே நான் விலக விடாமல் நீ துரத்த, சிரிப்புடன் விரைந்துமே நொடிகளும் கடந்துவிட, அலுவலகம் செல்லுமுன்னை வழியனுப்பி விட்டு விட்டு, கண்ணோரம் நீர் கரிக்க உன் கண் மறைவில் துடைத்துவிட்டு, நீ திரும்பும் வேளைக்காய் மீண்டுமோர் காத்திருப்பு!!! - ஜானு ![]() |
Posted: 26 Dec 2014 03:00 AM PST 1977-ல் M.G.R.முதலமைச்சர் ஆன அன்று அவரது இல்லத்தில் நிறையக் கூட்டம். அப்போது மாலை போட வந்த , கவிஞர். நா. காமராசனிடம் மக்கள் திலகம் எம்.ஜி ஆர் . சொன்னது... தம்பி, பார்த்தாயா நான் பதவிக்கு வரவேண்டும் என்று பாடு பட்ட தொண்டர்கள் என் வீட்டிற்கு வெளியே நிற்கிறார்கள். ஆனால் தங்களுக்குப் பதவி வேண்டும் என்று கேட்க வந்தவர்கள் எல்லாம் , என் வீட்டிற்குள், எனக்குப் பக்கத்தில் நிற்கிறார்கள். இதுதான் அரசியல்...! Relaxplzz ![]() |
கவனம் அவசியம்.. Posted: 26 Dec 2014 02:45 AM PST |
Posted: 26 Dec 2014 02:30 AM PST |
Posted: 26 Dec 2014 02:15 AM PST குசும்பு... கல்யாண வீட்டில் ரொம்பவே அழகாய் இருந்த அந்த பெண் அடிக்கடி அவனது கண்ணில்பட்டாள். ஓரிரு முறை அவனை பார்த்து மெலிதாய் சிரிக்கக்கூட செய்தாள். 'போறதுக்குள்ள அவளை எப்படியாவது தூக்கிற(?) வேண்டியது தான்' என்று முடிவுசெய்தான் அவன் ... பந்தி முடிந்து வரும் வழியில் தனியே மாட்டினாள் அந்த பெண் அவனிடம் . "ஹாய்.. ஐ ம் அருண்.." என்றபடி அவளிடம் கையை நீட்டினான் .. "ம்.." என்றாள் கேள்வித் தோரணையில். " ஓ.. இங்கிலீஷ் தெரியாதா.. உன் பேரு என்னன்னு கேட்டேன்" " அதற்கும் "ம்.." என்றே பதில் தந்தாள்.. "ச்.. தமிழுமா.. ஆப்கா... நாம்..க்யா ஹே.." என்ரான் அவனது ப்ராத்மிக் ஹிந்தியை மனதில் கொண்டு வந்து... " ஹிந்தியும் இல்லைனா என்ன... தெலுங்கா..." எனக்கு தெலுங்கெல்லாம் தெரியாது.. டி.வி.டியில படம் பாக்குறதோட சரி... இதற்கு அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.. தலையை திருப்பி யாரையோ தேடினாள்.. கொஞ்ச நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன் .. "ஆங்.. கண்டுபிடிச்சுட்டேன்.. கேரளா... மலையாளம்.. கலரா இருக்கும் போதே நினைச்சேன்... இப்போ சொல்லு.. நிண்ட பேரு எந்தா?" இப்போது அவள் மெதுவாய் அவனைப்பார்த்துப் புன்னகைத்தாள்.. "என் நிலைமை சிரிப்பா இருக்குதா.. இதப்பாரு எனக்கு வேற மொழியெல்லாம் தெரியாது அதனால நீயே சொல்லிடு.. அட்லீஸ்ட் ஏதாவது பேசு அதவச்சாது நீ எந்த மாநிலம்னு தெரிஞ்சுக்கறேன்" என்ரான் ".............." அப்போது அங்கு வந்த அவனது மனைவி "ஐயோ.. அருண்.. அவளுக்கு இன்னும் ஒரு வயசு கூட ஆகலை. பேச்சு வராத குழந்தைய கேட்டா எப்படி பதில் சொல்லுவா? அவ பேரு சுபா" என்றபடி அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே போனாள். எங்க கொண்டு வச்சான் பாருங்க டிவிஸ்ட... அவ்வ்வ்வ் :P :P Relaxplzz |
Posted: 26 Dec 2014 02:00 AM PST பஸ்சில் தவறிய ரூ.9 லட்சம் நகை, பணம்: டைம்கீப்பர், கண்டக்டர் தந்த இன்பஅதிர்ச்சி இந்த நல்ல உள்ளங்களுக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்.. (y) மதுரையில் பஸ்சில் தவற விட்ட ரூ.9 லட்சம் நகை, பணம் அரசு போக்குவரத்துக் கழக டைம் கீப்பர் கனகராஜ், பி.எம்.டி., என்ற தனியார் பஸ் கண்டக்டர் இளங்கோவன் முயற்சியால், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திண்டுக்கல் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., அலுவலர் ஜெயராமன், 62. இவரது மனைவி ஜீவா, 52. சர்க்கரை நோயாளியான ஜெயராமன், மனைவியுடன் அக்.,19ல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு வந்தார். சிகிச்சை முடிந்து, திண்டுக்கல் செல்ல ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தனர்.பி.எம்.டி., பஸ்சில் ஏறினர். இருக்கைகளில் இடம் கிடைக்காததால், 2 பேரும் இறங்கி, மற்றொரு பஸ்சில் அமர்ந்தபோது தான், ஜீவா தன் கைப்பையை தவற விட்டது தெரிந்தது. அதில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகள், கிரடிட் கார்டு, ரூ.25 ஆயிரம், மொபைல் போன் இருந்தன. அதிர்ச்சியில், இறங்கி தேட துவங்கினர். அவர்களிடம் அரசு போக்குவரத்து கழக டைம்கீப்பர் கனகராஜ் விசாரித்தார்.பி.எம்.டி., பஸ்சில் பையை தவற விட்டிருக்கலாம் என கருதிய கனகராஜ், அதன் மேலாளரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, கண்டக்டர் இளங்கோவனின் மொபைல் போன் எண்ணை பெற்றார். பின், திண்டுக்கல் சென்று கொண்டிருந்த இளங்கோவனிடம் தகவல் தெரிவிக்க, அவரும் பஸ்சில் தேடி, அனாதையாக கிடந்த பையை எடுத்து வைத்துக்கொண்டார்.அந்த பஸ் மதுரை திரும்பியதும், ஜெயராமனிடம் பை ஒப்படைக்கப்பட்டது. நெகிழ்ச்சி அடைந்த ஜெயராமன், ""என் பணிக்காலத்தில் நேர்மையாக உழைத்தேன். அதன் பயன்தான் டைம்கீப்பர், நடத்துனர் ரூபத்தில் பணம், நகைகள் திரும்ப கிடைத்தது'' என்றார். டைம் கீப்பர் கனகராஜ்,""முதியவர் பதறியதை பார்த்து விசாரித்தேன். முதலில் ஏறிய பஸ்சில் பையை தவற விட்டிருக்கலாம் என கணித்து, விசாரணையில் இறங்கினேன்.அதன்படி, அந்த பஸ்சில் பையிருந்தது. கண்டக்டர் இளங்கோவனும், அதை எடுத்து விட்டார்,'' என்றார். # இந்த நல்ல உள்ளங்களுக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்.. Thanks dhinamalar Relaxplzz ![]() |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment