Saturday, 27 December 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்... 1. சாலையில் எச்சில் துப்புதல். கண்ட...

Posted: 27 Dec 2014 07:15 AM PST

நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்...

1. சாலையில் எச்சில் துப்புதல். கண்ட கண்ட இடத்தில் சிறுநீர் கழித்தல். அது சூவிங் கம் முதல் குட்கா வரை. இவற்றை கணக்கெடுத்தால் நான்கு ஜென்மம் எடுக்கும்.

{இதில் கண்டிப்பாக பெரும்பாலானோருக்கு பங்கு உண்டு.}

2. சிக்னலை மீறுவது, தவறான பாதையில் ஓட்டுவது :

{இது இந்தியாவை பொறுத்தவரை மிக சர்வ சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. இவற்றை தடுக்க கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். தேவையில்லாமல் ஒலி எழுப்புவதுமே தவறான ஒன்று. போக்குவரத்து நெரிசல் தான் இங்கே மோசமான ஒன்று.}

3. குப்பைகளை கொட்டுவது :

{நம்மவர்களுக்கு அழகான இடத்தை பார்த்தாலே குப்பை கொட்ட தோன்றுகிறது. இதற்கு படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடே இல்லை. இதனாலே பல கலைகளையும், நிலைகளையும் இழந்து நிற்கிறோம்.}

4. வரிசையை முந்தியடித்தல் :

{இந்த இடத்தில வீரத்தை சிலர் தப்பாக புரிந்துவிட்டனர் போலும். எதற்கு எடுத்தாலும் அவசரம். பொறுமை என்பது எள்ளளவும் இங்கே இல்லை. நிற்கிற ஒருவனும் முன்னும் பின்னுமாய் தள்ளிக்கொண்டு தான் நிற்கிறான்.}

5. விட்டு கொடுக்காத பழக்கம் :

{அனைத்திற்கும் விட்டுகொடுக்க சொல்லவில்லை, சில காரணங்களுக்கு மட்டும் கூட இங்கே இறங்க மறுக்கின்றனர். ஒரு பொது மின்தூக்கியில் ஒரே முறையில் முன்னூறு பேர் ஏற நினைத்தால் அது எப்படி...? அவசர ஊர்தி கூட சாலைகளில் வழிக்காக பிச்சை எடுக்கின்றன.}

6. நடுத்தர நிலையை ஏற்றுகொள்வது :

நடுத்தர நிலையில் இருந்து முன்னேற நினைப்பது சரியான விஷயம் தான், ஆனால் அதற்காக இங்கே எவ்வளவு பொய் புரளிகள், பித்தலாட்டங்கள், லஞ்சம், ஊழல், Etc... Etc.... Etc.....

இங்கே சகிப்புத்தன்மை தண்ணீரில் கரையும் உப்பு தான்.

இங்கே உண்மை தொண்டனாய் இருக்க யாருக்கும் ஆசை இல்லை, தலைவன் பதவிக்கே முந்தியடிகின்றனர்.

7. மனிதனை மனிதன் மதிப்பது இல்லை:

{முன்னுக்கு வருபவனை அழிக்க மட்டுமே நினைப்பது. நம் மக்களை நாமே மதிக்காத போது எப்படி முன்னேற முடியும்.}

8. ஜாதி வெறி - மத வெறி – இன வெறி:

நம் நாட்டின் சாபக்கேடு என்றே இதனை சொல்லலாம்......!!

குறிப்பு:- இதை பதிவதன் நோக்கம், நம்முடைய அவலங்களை நாமே பதிந்து, நமது மேல் நாமே அசிங்கத்தை பூசிக்கொள்வதர்க்காக அல்ல....

தனி மனிதன் திருந்தினால் தான், நாடு திருந்தும். இதை படித்த பிறகு ஓரிருவர் திருந்தினால் கூட போதும்... இந்த பதிவின் நோக்கம் முழுமை பெரும்.

Relaxplzz

A for Apple B for Big Apple C for Chinna Apple D for Double Apple E for Ennoru A...

Posted: 27 Dec 2014 07:15 AM PST

A for Apple
B for Big Apple
C for Chinna Apple
D for Double Apple
E for Ennoru Apple
F for First sonna Apple...

by

எல்கேஜி அரியர் குரூப்ஸ்... .

Relaxplzz

கேட்டால் டிரென்டிங் என்கிறான்! படம் சூப்பராக இருக்கிறதென்று என்னோடு பேசிக் கொண்...

Posted: 27 Dec 2014 07:10 AM PST

கேட்டால் டிரென்டிங் என்கிறான்!

படம் சூப்பராக இருக்கிறதென்று என்னோடு பேசிக் கொண்டு வந்தவன் மொக்கை என்று ஸ்டேடஸ் போடுகிறான் ,கேட்டால் டிரென்டிங் என்கிறான் .

யாரோ இறந்துவிட்டார்கள் என்று சொல்லி யாராவது புகழ்ந்தால் , கூகுளில் கூட தேடாமல் Rip போடுகிறான் .

அரைக்கால் ஆடை அணிந்த கவிதாயினியின் புகைப்படத்தை நண்பன் ப்ரொபைல் பிக்சராக வைத்தான் என்பதால் நடிகையென்று எண்ணி அவனும் மாற்றுகிறான் .
ஓர் ஆனந்த விகடன் பேட்டியை ஒரு பிரபலம் சிலாகித்தால் என்னவென்று படிக்காமலேயே ஷேர் செய்கிறான் .

அறிவுபூர்வமான பதிவொன்றின் , ஒரு அரைவேக்காட்டு கமெண்டிற்கு லைக்கிட்டு பாசிச கும்பலோடு தன்னையும் ஐக்கியப்படுத்திக் கொள்கிறான் .

அவரை எழுத்தளாரென்றே அறியாமல், அவரை காரி துப்பும் பதிவொன்றை நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறான்.

அந்த புத்தகத்தை திறந்தால் விஞ்ஞானியாகிவிடலாம் என்று யாரோ சொன்னதை நம்பி ஆன்லைனில் பணம் கட்டி காத்திருக்கிறான் .

பதிவிட்டவனின் குடும்பத்தை வீதிக்கு கொண்டுவந்துவிட்டு, Sarcastic Status என்றால் என்னவென்று நண்பனின் இன்பாக்சில் கேட்கிறான் .

ஊரே கொண்டாடும் ஒரு நடிகனின் டீசரில் ஒன்றுமே இல்லாவிட்டாலும் திட்டித் தீர்ப்பார்கள் என பயந்து Awesome என்று கமெண்டிவிட்டு ஓடுகிறான் .

டைரக்டரோ, நடிகரோ ,எழுத்தாளரோ தன் பட்டியலில் இருந்தால், தான் பார்க்காத அவர்களின் படைப்பை பற்றி பக்கம் பக்கமாய் எழுதி அவரையும் டேக் செய்து பாராட்டுகிறான் .

செய்யும் எல்லாவகை ப்ராடுதனங்களையும் மறைக்க , ஒரு குழந்தையின் போட்டோ , ஒரு சாமி போட்டோ , ஒரு புரட்சியாளன் போட்டோ போதும் என்கிறான் அவன் .

அவன் என்பது நீங்களும் நானும்தான் ... !

- Nelson Xavier.

Relaxplzz

உலகத்தின் கடைசி நாள் அனைத்து மக்களும் எமலோகம் சென்று சொர்க்கத்தை அடைந்தனர். அப்ப...

Posted: 27 Dec 2014 06:15 AM PST

உலகத்தின் கடைசி நாள் அனைத்து மக்களும் எமலோகம் சென்று சொர்க்கத்தை அடைந்தனர். அப்போது அவர்களின் முன்னே கடவுள் காட்சி அளித்தார்... உரத்த குரலில் இங்கு நிற்கும் அனைத்து ஆண்களும் இரண்டு வரிசையாக பிரிந்து நில்லுங்கள் என்று ஆணையிட்டார்..

முதல் வரிசை : பெண்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்கும் ஆண்கள்..

இரண்டாம் வரிசை : பெண்கள் எதை சொன்னாலும் எடுத்துக் கொள்ளாத ஆண்கள்...

இரண்டு வரிசைகளையும் பார்வை இட்ட கடவுள் ஒரு நிமிடம் உறைந்து போனார்...

முதல் வரிசையில் பல மைல் தொலைவிற்கு ஆண்கள் வரிசை

இரண்டாம் வரிசையில் ஒரே ஒரு ஆண் மகன்..

கடுப்படைந்த கடவுள் கொஞ்சம் கோபத்துடன்...
"பாருங்கடா என் சிங்கத்த ஆண் வர்க்கத்தின் பெருமையை உங்களுக்கு புரிய வைக்கிற இவரைப் பார்த்தா உங்களுக்கு எல்லாம் வெட்கமா இல்ல?
உன்னை நினைச்சு நான் பெருமைப் படுறேன்...மத்த ஆண்கள் எல்லாம் இவரை பார்த்து கத்துக்குங்க.
எப்படி நீ மட்டும் இவ்ளோ தைரியமா பொண்டாட்டிய ஒரு வகைல எடுத்துக்காம இருக்கே...நீ மத்தவங்களுக்கு எடுத்து சொல்லு என் சிங்கக்குட்டி"..

சிங்கக்குட்டி அற்புதமா ஒரு சில
வார்த்தைல விளக்கம் சொன்னாரு..

"அதெல்லாம் எனக்கு தெரியாது கடவுளே, என் பொண்டாட்டி இரண்டாவது வரிசைல தான் நிக்கணும் என்று சொன்னா நான் நின்னேன் அவ்ளோ தான்"

:P :P

Relaxplzz

அப்புறம் நியு இயர் எல்லாம் வருது.. கலாச்சார காவலர்கள் எல்லாம் என்ன ப்ளான் வச்சிர...

Posted: 27 Dec 2014 04:15 AM PST

அப்புறம் நியு இயர் எல்லாம் வருது..
கலாச்சார காவலர்கள் எல்லாம் என்ன ப்ளான் வச்சிருக்காங்க?

மெரினா, ப்ளாசாக்கள் அங்க இங்கனு கலர் கலர் துண்டு, கலர் கலர் பொட்டுனு கெளம்பனுமே..

வருஷத்துல மத்த எந்த நாளும் red light area பத்தி எல்லாம் எதிர்த்து கேக்க மாட்டானுங்க, ஆனா நியு இயர், காதலர் தினம் அன்னைக்கு இவனுங்களுக்கு வரும் பாரு ஒரு கலாச்சார பாசம்....

- உமா மகேஷ்வரன்

எம்.ஆர்.ராதா எழுதிய ஒரு கட்டுரையில் இருந்து.... ஜெயில்லே நானே சமைச்சுக்குவேன்....

Posted: 26 Dec 2014 07:15 PM PST

எம்.ஆர்.ராதா எழுதிய ஒரு கட்டுரையில் இருந்து....

ஜெயில்லே நானே சமைச்சுக்குவேன். குலாப்ஜாமூன், ஜாங்கிரி, இட்லி எல்லாம் செய்துக்குவேன். என் கூட வெள்ளைக்கார கைதி இருந்தார். இட்லியை மட்டும் அவருக்குக் கொடுப்பேன். நான் செய்து கொடுத்த இட்லியை புகழ்ந்து, அவருடைய சம்சாரத்துக்குக் கூட லெட்டர் போட்டார் அவர்.

என் இட்லிக்குக் கூலியா, திட்டுறதுக்கு சில வார்த்தைகளை மட்டும் அவர்கிட்டே கேட்டு கத்துக்கிட்டேன். அவங்க நாட்டை பத்தியெல்லாம் கேட்கும் போது, பொறுமையா பதில் சொல்வார்.

"வக்கீல்களே ஜட்ஜா வர்றது சரியா?'ன்னு அவர்கிட்டே கேட்டேன்.

"அதுதானே வழக்கம்?' என்றார் அவர்.

"உங்க நாட்டிலேயும் அப்படித்தானா?' என்றேன்.
"ஆமா!'ன்னார்.

"முப்பது வருஷமா பொய் சொல்றதையே பிழைப்பாக கொண்ட ஒரு வக்கீல், பதவி உயர்வுங்கிற பேரிலே ஜட்ஜ் ஆனதும், எல்லாரும் அவரை கடவுளுக்கு சமம்ன்னு சொல்றாங்களே... இது நியாயமா?'ன்னு கேட்டேன்.

அதுக்கு அவர் பதில் பேசவேயில்லை.

======ராதா கேட்பதில் நியாயம் இருக்கா?

Relaxplzz

வாழ்வின் மொழி... என்னை வெறுப்பவர்களுக்கு நன்றி -> நீங்கள் என்னை வலிமையடையச் செய...

Posted: 26 Dec 2014 06:10 PM PST

வாழ்வின் மொழி...

என்னை வெறுப்பவர்களுக்கு நன்றி -> நீங்கள் என்னை வலிமையடையச் செய்தீர்கள்.......
_

என்னை நேசிப்பவர்களுக்கு நன்றி -> உங்களால் என்னுடைய இதயம் விசாலமடைந்தது.......
_

என்னைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு நன்றி -> யார் உண்மையான அக்கறை உள்ளவர்கள் என்பதை எனக்கு புரியவைத்தீர்கள்........
_

என்னை விட்டுச் சென்றவர்களுக்கு நன்றி -> எதுவுமே நிலைப்பதில்லை என்று காட்டுவித்தீர்கள்..

இப்படி வாழ்ந்து பழகலாமே :)

Relaxplzz

ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர். அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவ...

Posted: 26 Dec 2014 05:00 PM PST

ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர்.
அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவருக்கு வெகுவாக சந்தேகம்.

தன்னை அவர் ஏமாற்றுவதாக வருத்தம் இருந்தது. அரை கிலோ வெண்ணெய் என்று அவர் தருவது அரை கிலோவே இல்லை. எடை குறைவாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

சண்டை முற்றி ஒரு நாள் நீதிபதி முன் வழக்கு வந்தது.
வெண்ணெய் வியாபாரி தன்னிடம் கொடுத்த வெண்ணெய் பொட்டலத்தை நீதிபதி முன் நிறுத்துக் காட்டிய ரொட்டிக் கடைக்காரர்,

"பாருங்கள் 450 கிராம் தான் இருக்கிறது. இப்படித்தான் என்னை பலமுறை ஏமாற்றி இருக்கிறார். இவரை தண்டியுங்கள்" என்று கூச்சலிட்டார்.

நீதிபதி வெண்ணெய் வியாபாரியை பார்த்து "என்ன சொல்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் 50 கிராம் குறைவாகத் தரலாமா? அது குற்றமில்லையா?" என்று கேட்டார்.

"ஐயா.. என்னிடம் எடைக்கல் கிடையாது. அதனால் 500 கிராம் எடையுள்ள பொருள் ஏதேனும் ஒன்றை எடைக் கல்லுக்குப் பதிலாக பயன்படுத்துவது வழக்கம். பெரும்பாலும் இவரது கடை ரொட்டியைத் தான் வாங்குகிறேன். அதையே அவ்வாறு பயன்படுதுவேன்.

பாக்கெட் மீது எடை 500கிராம் என்று எழுதப்பட்டிருப்பதை நம்பி இவரது ரொட்டியை எடைக் கல்லுக்குப் பதிலாக தராசில் பயன்படுத்துவேன். இப்போது பாருங்கள் என் வெண்ணெயும் அவரது ரொட்டியும் சம எடையாக இருக்கும்." என்று தராசில் இரண்டையும் எதிர் எதிராக வைத்தார். சமமாக இருந்தது.

நீதி: எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக் கூடாது என்று நினைக்கிறார்களே ஒழிய தானும் பிறரை ஏமாற்றக் கூடாது என்று ஏன் நினைப்பதில்லை.

Relaxplzz

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாத...

Posted: 26 Dec 2014 10:00 AM PST

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!

ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான்.
இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்"
என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது

Relaxplzz


0 comments:

Post a Comment