Relax Please: FB page daily Posts |
- ‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’ அது 2005-...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் பேசத் தெரியுமுன்பே நம் தேவையைப் புரிந்து நிறைவேற்றிய அம்மாவிட...
- :)
- இரவில் தாயின் அருகில் படுத்திருந்த அந்த சிறுவனுக்கு ஏனோ தூக்கம் வரவில்லை. படுக்...
- 50 சென்ட்... மாதம் ரூ.30 ஆயிரம்... பட்டதாரி இளைஞர்களின் பலே விவசாயம்..! (y) (y)...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் மனிதன் பணத்தை சம்பாரிக்க ஆரோக்கியத்தை தியாகம் செய்கிறான்......
- எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய்ங்க பயபுள்ளைக :P
- :)
- பெற்றோர்களுக்கோர் எச்சரிக்கை: இப்போது பள்ளி கல்லூரி மாணவமாணவியரிடையே வித்தியாசம...
- தோளில் தன் மகனை தூக்கிக்கொண்டு பேருந்தில் சென்றார் அவர். முகத்தில் ஏனோ ஒரு கவலை....
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் இருப்பதை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பவர்கள் அனைவரும் நம...
- அருமை
- :)
- உங்களுக்கு தெரியுமா...? உலகில், * 460 கோடி மக்கள் மொபைல் போன் பயன்படுத்துகிறார...
- * ஒரு சினிமா தியேட்டர்ல மூன்று மணி நேரம் உட்கார்ந்திருக்கும் நம்மளால, ஒரு உறவினர...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் கோபத்தை வெளியே காட்டினால் மன்னிப்பும் கேட்க வேண்டி வரும்..!...
- பெண் நாணத்தோடு அழகை மறைக்கும் போது தான் தன் அழகை மேலும் அழகாக்கிறாள் - Laksh...
- :)
- ஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் என் மனைவிக்கு காது சரியா கேக்கறதில்லை. நீங்க தான...
- விரல்பிடித்து கடைவீதி வந்த மகன், கடையை வேடிக்கை பார்க்கும் சுவாரஸ்யத்தில் பிடியை...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் எப்பவுமே உன்ன பத்தி பேச்சு ஓடிட்டே இருந்தா, அது உன் பலம்.. அத...
- கொல்லாம்பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- <3
- ஒரு மனிதன் கடவுளுடன் பேசுகிறான் மனிதன் - கடவுளுக்கு ஒரு மில்லியன் ஆண்டுகள் என்ப...
- செவ்வாழை... திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவ...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் வீடுகளைக் கட்டுபவர்கள் ஆண்கள் அதை வீடாக வைத்திருப்பவர்கள் பெ...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் பெண்கள் தலைகுனிந்து நடப்பதாலேயே ஆண்கள் தலை நிமிர்ந்து நடக்கும...
- இந்த அழகு தேவதையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... :)
- :)
- அமெரிக்க நகர் ஒன்றில், நம்ம நாராயணசாமி காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென...
Posted: 01 Nov 2014 09:00 AM PDT 'எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!' அது 2005-ம் ஆண்டு. வீல் சேரில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்துக்கு செவிலியர்கள் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாக்கிங். கை, கால், வயிறு, தலை என உடலின் எந்தப்பாகமுமே செயல்படாத நிலை. அவரது வீல் சேரில், வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கம்ப்யூட்டரும், வாய்ஸ்ஸின்தைசரும் இருந்தது. பிரிட்டிஷ் டே டைம் டாக் ஷோ நிகழ்ச்சி நடத்திய ரிச்சர்ட் மற்றும் ஜூடி கேட்ட கேள்விகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் எளிதாகப் பதில் சொன்னார் ஸ்டீபன். ''பெருவெடிப்பு எனப்படும் 'பிக் பாங்' ஏற்படும் முன்னர், அண்ட வெளியில் என்ன இருந்தது?'' என்று கேட்டார் ரிச்சர்ட். ''வட துருவத்தின் வடக்கில் என்ன இருக்குமோ அது!'' என்று சாதுர்யமாகப் பதில் சொல்லி அனைவரையும் அசத்தினார் ஸ்டீபன். கை தட்டிப் பாராட்டியவர்கள், ''வாழ்க்கை எப்படி இருக்கிறது?'' எனக் கேட்டார்கள். ''முன்னைவிட சுவாரஸ் யமாகவும், சவால் நிறைந்ததாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது'' என்றார். ''இந்த உடல்நிலையுடன் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியுமா?'' என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்கள். ''எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'' என்றார் ஸ்டீபன் ஹாக்கிங். பிரிட்டனில் 1942-ம் வருடம் பிறந்த ஸ்டீபன், படிப்பில் படு சுட்டியாக இருந்தார். ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் மூன்றாவது வருடம் படித்துக்கொண்டு இ-ருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார். 21-வது வயதில் உடலெங்கும் தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும், மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள். துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர் வார்டில் ஒரு சிறுவன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டான். சில நாட்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின் மரணம், ஸ்டீபனுக்கு பயம் தருவதற்குப் பதிலாகத் தைரியம் கொடுத்தது. அந்தச் சிறுவனைவிட தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தார். உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் மூளையும் சிந்தனையும் முழு உற்சாகத்துடன் இருப்பதை உணர்ந்தார். வீல் சேரில் இருந்தபடியே பல்கலைக் கழக ஆய்-வினை முடித்துப் பேராசிரியர் ஆனார். திருமணம் முடிந்து, இரண்டு குழந்தைகளும் பிறந்தன. ஏ.எல்.எஸ். எனக் கண்டறியப்பட்ட நரம்பு நோய் முற்றியதால், 1985ம் வருடம் அவரது உடல் முழுமையாகச் செயலிழந்தது. ஆனாலும், நம்பிக்கை இழக்காமல் வலக்கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டிப் பாடம் நடத்தியதுடன், வரலாற்றுத் திருப்புமுனையான புத்தகம் ஒன்றும் எழுதினார். 'எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்' என்கிற அந்தப் புத்தகம் ஸ்டீபனின் புகழை உச்சிக்கு உயர்த்தியது. கலிபோர்னியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் ஒருவர் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கும் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கண்டு-பிடித்து, வீல் சேரில் பொருத்தித் தர, சிரமம் குறைந்து அதிகமாகச் சிந்தித்து நிறைய எழுதிக் குவித்தார் ஸ்டீபன். 'காலம் எப்போது தொடங்கியது? எப்போது முடியும்? காலத்தை பின்னோக்கிச் சென்று காண முடியுமா? விண்வெளிக்கு எல்லை உண்டா?' என எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாகப் பதில் சொல்லி மலைக்கவைத்த ஸ்டீபன் ஹாக்கின் ஸின் வாழ்வு, மருத்துவர்களுக்கு இன்றும் ஒரு புதிர்தான். உடல் நிலை மோசமான காலகட்டத்தில் மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டுப் பிரிந்தனர். ஸ்டீபன் அப்போதும் மனம் தளராமல், தன்னை அன்புடன் கவனித்துக்கொண்ட செவிலியை இரண்டாவதாகத் திரு மணம் முடித்தார். ''இந்த நோயால் பாதிக்கப்பட்டதால்தான் வெளி உலக கவனச் சிதறல்கள் இல்லாமல், முழுக் கவனமும் செலுத்தி என்னால் புத்தகங்கள் எழுத முடிகிறது. உண்மையில் நான் அதிர்ஷ்டம் செய்தவன்'' என்று ஸ்டீபன் நம்பிக்கையுடன் பேசக் காரணம், 'எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!' என்கிற மந்திரச் சொல்லின் மகத்துவம்தான்! Relaxplzz ![]() |
Posted: 01 Nov 2014 08:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் பேசத் தெரியுமுன்பே நம் தேவையைப் புரிந்து நிறைவேற்றிய அம்மாவிடம் நிறைய பேசக் கற்றுக் கொண்ட பின் நாம் சொல்வது சொன்னா புரியாதும்மா உனக்கு.... - திவ்யா ராஜன் |
Posted: 01 Nov 2014 08:30 AM PDT |
Posted: 01 Nov 2014 08:15 AM PDT இரவில் தாயின் அருகில் படுத்திருந்த அந்த சிறுவனுக்கு ஏனோ தூக்கம் வரவில்லை. படுக்கையை விட்டு எழுந்தவன் கதவை திறந்து வெளியே வந்தான். வீட்டின் அருகிலேயே குளம் இருந்தது பௌர்ணமி நிலவும் அதன் ஒளியில் ரம்மியமாக காட்சி தரும் குளத்தின் நீர்ப்பரப்பும் அவன் மனதை கவர்ந்தன. அச்சிறுவன் குளக்கரையில் அமர்ந்து கொண்டு சிறுகற்களை நீரில் போட்டு அதன் மூலம் எழும் அலைகளை ரசித்தபடி இருந்தான். வீட்டில் திடுமென கண்விழித்த தாய் அருகில் படுத்திருந்த மகனை காணமல் பதறிப்போனாள். கதவு திறந்திருப்பது கண்டு பதை பதைப்புடன் வெளியே ஓடி வந்தாள். தன்மகன் குளக்கரையிலே அமர்ந்திருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சுவிட்டாள். அவன் அருகில் சென்று "மகனே நள்ளிரவு வேளையில் இங்கு வந்து தனியாக இருக்கிறாயே… உனக்கு பயம் இல்லையா?" என்று கேட்டாள். உடனே அந்த சிறுவன் "பயமா? பயம் என்றால் என்னம்மா?" என்று கேட்டான் அதற்கு பதில் சொல்ல தெரியாமல் திகைத்தாள் அந்த தாய். இளம் வயதில் பயம் என்றாலே என்னவென்று அறியாத அந்தச் சிறுவன் யார் தெரியுமா? பல நாடுகளை வென்று வெற்றிகளை அள்ளிக்குவித்த மாவீரன் நெப்போலியன் தான் அவன். Relaxplzz |
Posted: 01 Nov 2014 08:00 AM PDT 50 சென்ட்... மாதம் ரூ.30 ஆயிரம்... பட்டதாரி இளைஞர்களின் பலே விவசாயம்..! (y) (y) விவசாயிகளின் பிள்ளைகளே விவசாயத்தை மறந்து அல்லது துறை மாற நினைத்து... பன்னாட்டு நிறுவனங்களை நோக்கி படையெடுத்திருக்கும் நவீன யுகம் இது! இதற்கு நடுவே, விவசாயமே தெரியாத சிலர்... பன்னாட்டு நிறுவன வேலைகளை உதறிவிட்டு, விவசாயத்தைக் கையிலெடுக்கிறார்கள் என்றால்... ஆச்சர்யம்தானே! சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள், விஞ்ஞானி, கல்லூரிப் பேராசிரியர், வழக்கறிஞர், ஆடிட்டர், பொறியாளர்கள் என பல துறையைச் சேர்ந்த இவர்களை ஒன்று சேர்த்திருக்கிறது, இயற்கை விவசாயம். 'நல்ல கீரை' என்கிற பெயரில் அமைப்பை உருவாக்கி, பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்... -பசுமை விகடன், 25.01.2013 Relaxplzz ![]() |
Posted: 01 Nov 2014 07:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் மனிதன் பணத்தை சம்பாரிக்க ஆரோக்கியத்தை தியாகம் செய்கிறான்... இழந்த ஆரோக்கியத்தை சம்பாரிக்க பணத்தை தியாகம் செய்கிறான்...! - Sheila Chowdry |
Posted: 01 Nov 2014 07:40 AM PDT |
Posted: 01 Nov 2014 07:30 AM PDT |
Posted: 01 Nov 2014 07:15 AM PDT பெற்றோர்களுக்கோர் எச்சரிக்கை: இப்போது பள்ளி கல்லூரி மாணவமாணவியரிடையே வித்தியாசமானதொரு போதைப்பழக்கம் பரவிவருகிறது. ஃபெவி க்விக் போன்ற Instant Stickகளை இப்போது போதைப்பொருளாகப்பயன்படுத்துகிறபழக்கம் அதிகமாகியுள்ளது. ஐந்துரூபாய்க்கு அதைவாங்கி, காலி பால்பாக்கெட்டில் காற்றைநிரப்பி, அதன் ஓட்டைவழியாக இந்த பேஸ்ட்டை பிதுக்கிவிட்டு அந்தக்காற்றை இழுத்துப்பிடிக்கிறார்களாம். அப்படிச்செய்தால், அந்த பேஸ்ட்டிலுள்ள வேதிப்பொருளானது பால்பாக்கெட்டிலுள்ள காற்றுடன் கலந்து நெடியேறச்செய்து அது போதையுணர்வைத்தருகிறதாம். பெரும்பாலும் டீனேஜ்பருவத்தினரே இதற்கு பலியாகத்தொடங்கியுள்ளனராம். சிலவருடங்களுக்குமுன், Correction Penஇல் பயன்படுத்தப்படுகிற Thinnerஐ இதற்குப்பயன்படுத்தினார்கள். அரசாங்கம் மெதுவாகவிழித்து அந்த Whitener மற்றும் Thinnerஐ ஒன்றாக்கி பேனாவடிவில் கொண்டுவந்தது. இப்போது இந்தப்பழக்கம் மாணாக்கர்களிடையே புழக்கத்திலுள்ளது. விலைகுறைவென்பதாலும், ஒரேயொருமுறை இழுத்துப்பார்க்கலாமென்ற தவறானவெண்ணத்தாலும் இதற்கு அடிமையாகத்தொடங்கியுள்ளது இன்றைய இளையசமுதாயம். ஊடங்களுக்கு இதெல்லாம் எப்போது தெரிந்து, அந்தநிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைநடந்து பேரம் படியாமற்போய் அதன்பிறகு இதுபற்றி கட்டுரையெழுதி... மக்களுக்கு விழிப்புணர்வுவந்து...? நடக்கிறகாரியமா? பெற்றோர்களே... கடைக்காரர்களே.. இளையசமுதாயம் உங்கள்கையில். - பாலா ஃபீனிக்ஸ் Relaxplzz |
Posted: 01 Nov 2014 07:00 AM PDT தோளில் தன் மகனை தூக்கிக்கொண்டு பேருந்தில் சென்றார் அவர். முகத்தில் ஏனோ ஒரு கவலை. டிக்கெட் என்று நடத்துனர் கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை. யோவ் எங்கயா போகணும்?? பதில் சொல்லு என்று சொல்ல, நடுங்கிக் கொண்டிருந்த அவரின் கைகள் பயணச்சீட்டு எடுக்க முற்பட்டது. நடுங்கும் கைகளில் இருந்த காசினை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு காலங்காத்தால வந்துட்டாணுக என் கழுத்தறுக்க என்று முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார் நடத்துனர். ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ காற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண் கலங்கினார். தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு தொடர்ந்து மௌனமாகவே பயணித்துக்கொண்டிருந்தார். அவரோடு வந்திருந்த மற்றொரு நபர் ஆவர்களை இருக்க பற்றிக்கொண்டிருந்தார். ஏதோ ஒரு துயர சம்பவம் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது என்று தெரிந்தது. நான் இறங்கும் இடம் வந்துவிட்டது. பேருந்தை விட்டு இறங்க மனமில்லை. அவர்கள் வாழ்வில் என்ன நடந்திருக்கும். ஏன் இப்படி சோகம் சூழ்ந்த படி இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே பேருந்தை விட்டு இறங்கினேன். நான் இறங்கிய அதே பேருந்து நிறுத்தத்தில் அவர்களும் இறங்கினார்கள். மனம் சற்று நிம்மதி அடைந்தது. அவர்கள் பற்றி எதையேனும் தெரிந்து கொள்ளலாம் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். தோளில் பிள்ளையை சுமந்து கொண்டு நடக்கத்துடங்கினர் இருவரம். சிறிது தூரம் அவர்கள் பின்னால் சென்ற எனக்கு கிடைத்தது மனம் நிம்மதி அல்ல ஆழ்ந்த துயரமும், அதிர்ச்சியும். தன் மகனை தோளில் தூக்கிகொண்டு அவர்கள் சென்ற இடம் சுடுகாடு. சில நெருங்கிய சொந்தங்கள் அங்கு கூடி இருந்தனர். அவர்களை பார்த்ததும் தூக்கி வந்த தன் மகனை கீழ போட்டுவிட்டு தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதார். எதனால் அந்த நபரின் மகன் இறந்தார். என்ன காரணம் என்று எனக்கு எதுவும் தெரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. இறுதி சடங்கை கூட திருவிழா போல் கொண்டாடும் இந்த காலத்தில் இறந்து போன தன் மகனை பச்சை ஓலை பாடை கட்டி தூக்கி வரும் அளவுக்கு கூட அவரிடம் பணம் இல்லை என்று. உயிருக்கு உயிரான தன் மகனை தோளில் சுமந்துகொண்டு, துக்கத்தை நெஞ்சில் புதைத்துக்கொண்டு. நடத்துனருக்கு தெரியாமல் இறந்து போன தன் மகனை மயானம் வரை தன் தோளில் சுமந்து வந்த அந்த தந்தையின் வலி இன்னமும் என் மனதில் நீங்காமல் இருக்கிறது. உயிரோடு இருக்கும் வரை தான் பணம் தேவை என்று நினைத்தேன், மரணித்த பின்னரும் பணம் தேவைப்படுகிறது இந்த உலகத்தில். படித்ததில் வலித்தது. :( Relaxplzz ![]() |
Posted: 01 Nov 2014 06:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் இருப்பதை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பவர்கள் அனைவரும் நம்மால் 'இல்லாதவர்கள்' என்று நினைக்கப்படுபவர்களே! - திவ்யா ராஜன் |
அருமை Posted: 01 Nov 2014 06:40 AM PDT |
Posted: 01 Nov 2014 06:30 AM PDT |
Posted: 01 Nov 2014 06:15 AM PDT உங்களுக்கு தெரியுமா...? உலகில், * 460 கோடி மக்கள் மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள். * 3 கோடி மக்கள், இரண்டாம் உலகப்போரின் போது அகதிகள் ஆக்கப்பட்டார்கள் (1939 முதல் 1945 வரை). * 170 கோடி மக்கள் ஏதேனும் ஒரு வகையில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். * 250 கோடி மக்கள் தொலைக்காட்சியில் டயானா இறுதி யாத்திரையைக் கண்டார்கள் (1997). * 470 கோடி மக்கள் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கின்றனர். * 20 கோடி மக்கள் தாய்நாட்டுக்கு வெளியே வாழ்கின்றனர். * இப்போது 713 கோடி மக்கள் வாழ்கின்றனர். * 250 கோடி மக்களுக்கு அடிப்படைத் துப்புரவு வசதிகள் இல்லை. * 90 கோடி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது இல்லை. Relaxplzz |
Posted: 01 Nov 2014 06:00 AM PDT * ஒரு சினிமா தியேட்டர்ல மூன்று மணி நேரம் உட்கார்ந்திருக்கும் நம்மளால, ஒரு உறவினர் அல்லது நண்பரின் வீட்டு துக்க காரியத்தில் அரை மணி நேரம் உட்கார்ந்திருக்க முடியல. சாவுன்னா பயம் ல? * ஹோட்டல்ல ஆர்டர் பண்ணின சாப்பாட்டு அயிட்டம் வரும் வரை பொறுமையா அடுத்தவன் தட்டை வேடிக்கை பார்க்கும் நம்மளால, ரோட்டுல நடந்த சின்ன ஆக்சிடென்ட்டுக்கு வண்டிய விட்டு கீழ இறங்கி உதவத் தோணல. அவ்ளோ தைரியசாலி ல ? * யாரோ கல்யாணம் செஞ்சு நமக்கு புண்ணியம் தரப் போற இந்நாள் காதலி கூட காபி ஷாப்ல ரெண்டு மணி நேரம் பேசுனதையே திரும்பத் திரும்பப் பேச முடியற நம்மளால, ஹாஸ்பிட்டல்ல ஒருத்தர் கூட பத்து நிமிஷம் பொறுமையாவும் அன்பாவும் பேச முடியல. எப்பவும் ஜாலியா தான் இருக்கணும் ல? * ஒரு பெரிய சாமியாருக்காக மணிக்கணக்குல காத்திருந்து தவம் செஞ்சு பார்க்கத் துடிக்கும் நம்மளால, நம்ம குழந்தைங்க கூட கொஞ்ச நேரம் கூட விளையாட முடியல... அவங்கள கொஞ்ச முடியல. அவங்க கேட்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது ல? * மொபைல் ஸ்கிரீன், கம்ப்யூட்டர் ஸ்கிரீன், சினிமா ஸ்கிரீன், டி.வி ஸ்கிரீன்னு பார்க்கும் நம்மள்ல எத்தனை பேரு, சக மனிதனின் முக ஸ்கிரீனைப் பார்த்து புன்னகையும், பதிலும் சொல்லுறோம்? புன்னகை செய்யறது அவ்ளோ கஷ்டம் ல ? * காலையில் எந்திருச்சு வாக்கிங் போகணும்னு அக்கறை காட்டுற நம்மில் எத்தனை பேரு வீட்டுல அம்மா / அப்பா / மனைவிகிட்ட டாக்கிங் செய்யணும்னும் நினைக்கிறோம்? நிறைய உண்மைகள் பேசவேணும் ல? Relaxplzz ![]() |
Posted: 01 Nov 2014 05:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் கோபத்தை வெளியே காட்டினால் மன்னிப்பும் கேட்க வேண்டி வரும்..! - Sheila. |
Posted: 01 Nov 2014 05:40 AM PDT |
Posted: 01 Nov 2014 05:30 AM PDT |
Posted: 01 Nov 2014 05:15 AM PDT ஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் என் மனைவிக்கு காது சரியா கேக்கறதில்லை. நீங்க தான் வைத்தியம் பார்க்கணும் டாக்டர்: எவ்வளவு தூரத்திலிருந்து பேசினா கேக்க மாட்டேங்கறதுன்னு சொல்லுங்க. அதுக்கு தகுந்த மாதிரி வைத்தியம் பார்க்கலாம. வீடு திரும்பிய அவன் மனைவிக்கு பின்னால் 50 அடி தள்ளி நின்று "டார்லிங் ராத்திரி டின்னருக்கு என்ன சமைக்கற" என்று கேட்டான். மனைவியிடமிரந்து பதில் வராமல் போகவே 40 அடி தள்ளி அதே கேள்வியை கேட்டான். அப்படியும் பதில் வராததால் 30 அடி 20 அடி என்று நகர்ந்து கேட்டபின் மனைவியின் மிக அருகில் நெருங்கி அதே கேள்வியை கேட்டான். மனைவி திரும்பி " இதோட ஐந்தாவது தடவையா சொல்லிட்டேன் ராத்திரிக்கு சிக்கன் சமைச்சுக்கிட்டு இருக்கேன்" என்றாள். :P :P Relaxplzz |
Posted: 01 Nov 2014 05:00 AM PDT விரல்பிடித்து கடைவீதி வந்த மகன், கடையை வேடிக்கை பார்க்கும் சுவாரஸ்யத்தில் பிடியை நழுவ விட்டான். அப்பா ஒளிந்து கொண்டார். அப்பாவைத் தேடினான். சிறிது நேரம் கழித்து உதடுகள் பிதுங்க, விசும்பத் தொடங்கிய போது அப்பா வந்து அள்ளிக் கொண்டார். மகன் தந்தையை மறந்திருந்தபோது தந்தை ஒளிந்திருந்தார். ஆனால் மகனைக் கண் காணித்துக் கொண்டிருந்தார். கடவுளும் அப்படித்தான் நாம் தேடாத போது தென் படுவதில்லை. ஆனால் நம்மைப் பார்த்துக் கொள்கிறார். :) ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz ![]() |
Posted: 01 Nov 2014 04:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் எப்பவுமே உன்ன பத்தி பேச்சு ஓடிட்டே இருந்தா, அது உன் பலம்.. அதுவே நீ ஒருத்தங்கள குறைசொல்லி,அவங்க கண்டுக்காம இருந்தா, நீ அவ்ளோ வொர்த் இல்லனு அர்த்தம் :) |
Posted: 01 Nov 2014 04:40 AM PDT |
Posted: 01 Nov 2014 04:30 AM PDT |
Posted: 01 Nov 2014 04:15 AM PDT ஒரு மனிதன் கடவுளுடன் பேசுகிறான் மனிதன் - கடவுளுக்கு ஒரு மில்லியன் ஆண்டுகள் என்பது எவ்வளவு காலம்? கடவுள் - என்னை போறுத்த வரை சுமார் அது ஒரு நிமிடம் தான் மனிதன் - கடவுளுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் என்பது எவ்வளவு? கடவுள் - எனக்கு அது ஒரு பைசா தான். மனிதன் - கடவுளே எனக்கு ஒரு பைசா வேண்டும் கடவுள் - ஒரு நிமிடம் பொறு. மனிதன் -?????? :O #ஆருகிட்ட :P :P Relaxplzz |
Posted: 01 Nov 2014 04:00 AM PDT செவ்வாழை... திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது. கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும் பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும். நீங்கள் தெரிந்துகொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்.... பகிருங்கள்... Relaxplzz ![]() |
Posted: 01 Nov 2014 03:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் வீடுகளைக் கட்டுபவர்கள் ஆண்கள் அதை வீடாக வைத்திருப்பவர்கள் பெண்கள். - Kali Muthu |
Posted: 01 Nov 2014 03:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் பெண்கள் தலைகுனிந்து நடப்பதாலேயே ஆண்கள் தலை நிமிர்ந்து நடக்கும் வல்லமை பெற்றவர்களாக உள்ளனர் நினைவில் கொள்ள வேண்டிய நிதர்சனம்.. - கவிஞர் புரட்டா |
Posted: 01 Nov 2014 03:40 AM PDT |
Posted: 01 Nov 2014 03:30 AM PDT |
Posted: 01 Nov 2014 03:15 AM PDT அமெரிக்க நகர் ஒன்றில், நம்ம நாராயணசாமி காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. நாராயணசாமியும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் நாராயணசாமி காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ்காரார் நாராயணசாமியிடம், "குட் வ்னிங் சார்..' என்றார் "குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?" என்றார் நாராயணசாமி அதற்கு போலிஸ்காரர், "நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'. என்றார் நாராயணசாமி சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், "இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே நாராயணசாமியின் மனைவி, "சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நாராயணசாமியின் காது கேட்காத அம்மா சொன்னார், "நான் அப்பவே சொன்னேன் கேட்டியா....திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்." Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment