Saturday, 8 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அழகு தமிழ்நாடு! சேரன்மாதேவி!

Posted: 08 Nov 2014 10:29 AM PST

அழகு தமிழ்நாடு! சேரன்மாதேவி!


பில் கேட்சுக்கு நாராயணசாமி எழுதிய கடிதம் ***************************************...

Posted: 08 Nov 2014 07:42 AM PST

பில் கேட்சுக்கு நாராயணசாமி எழுதிய கடிதம்
****************************************

புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய நாராயணசாமி, சிறிது நாட்களில் பில் கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில்:

அன்பிற்குரிய பில் கேட்ஸ்,

சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக்கொண்டு வர விரும்புகிறேன்.

1. கம்ப்யூட்டரில் 'Start' பட்டன் உள்ளது. ஆனால், 'Stop' பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.

2. 'Run' என்ற மெனு உள்ளது. எனது நண்பர் 'Run' ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ்பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு 'Sit' மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.

3. உங்க விண்டோஸில் நான் 'Recycle bin'ஐ மட்டும்தான் பார்த்தேன். 'Re-scooter bin' இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில்ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.

4. 'Find' பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத்தொலைத்தபோது, 'Find' பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.

5. என்னுடைய பையன் 'Microsoft word' கற்றுக் கொண்டான். இப்போது 'Microsoft sentence' கற்றுக்கொள்ள விரும்புகிறான்.அதை எப்போது வழங்குவீர்கள்?

6. விண்டோஸில் 'My Pictures' உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோஒன்றை அதில் போடவும்.

7. 'Microsoft office' உள்ளது. சரி, 'Microsoft Home' எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.

8. 'My Network Places' கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, 'My Secret Places' கொடுக்கவில்லை. அதை இனிமேலும்தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை.

9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் 'Windows' விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் 'Gates' உள்ளது ஏன்?

இப்படிக்கு,
நாராயணசாமி

சமைக்கத் தெரியாதுன்னு சொல்ற மார்டன் கேர்ல்ஸ் யாராச்சும் அழுகத் தெரியாதுன்னு சொல்...

Posted: 08 Nov 2014 07:28 AM PST

சமைக்கத்
தெரியாதுன்னு சொல்ற
மார்டன் கேர்ல்ஸ்
யாராச்சும் அழுகத்
தெரியாதுன்னு சொல்றிங்களா...

எம்புட்டு மார்டன்
ஆனாலும் இந்த
அழுகையை மட்டும்
விட மாட்டேங்கிறிங்களேம்மா...

@சதீஷ் குமார்
தேவகோட்டை

நொடிப்பொழுதில் நாம் வீணாக்கும் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையும், ஏதோ ஒரு விவசாயின் 9...

Posted: 08 Nov 2014 07:16 AM PST

நொடிப்பொழுதில் நாம்
வீணாக்கும்
ஒவ்வொரு சோற்றுப்
பருக்கையும்,
ஏதோ ஒரு விவசாயின் 90
நாள்
உழைப்பு என்பதை மறந்துவிடக்கூடாது..


வீட்டுக்கு மளிகை சாமானோட 'கெல்லாக்ஸ் சாக்கோஸ்' வாங்கிட்டு வந்துருந்தேன். "தம்பி...

Posted: 08 Nov 2014 06:58 AM PST

வீட்டுக்கு மளிகை சாமானோட
'கெல்லாக்ஸ் சாக்கோஸ்'
வாங்கிட்டு வந்துருந்தேன்.

"தம்பி புளிக்குழம்புக்
கு அந்த
வடகத்தை பொரிக்கவா?"ன்னு

எங்க
அம்மா கேக்குறாங்க.
ம்ம்கும்..

இவிங்கள
வச்சுட்டு என்னைக்கு அமெரிக்கா போக...

@பூபதி

"சின்ன வயசுல நீ எப்படி சேட்ட பண்ணுவன்னு தெரியுமா?" என்று நம் குழந்தைகளின் சுட்டி...

Posted: 08 Nov 2014 03:12 AM PST

"சின்ன வயசுல நீ எப்படி சேட்ட பண்ணுவன்னு தெரியுமா?" என்று நம் குழந்தைகளின் சுட்டித் தனத்தை வருங்காலத்தில் சொல்லப் போவது, நம்ம பக்கத்து வீட்டு பாட்டிகள் அல்ல,

அம்மா அப்பாக்களின் ட்வீட்டுகளும், facebook status களுமே...

@Jaishna MX

இந்த நூற்றாண்டின் இணையற்ற ஒரு தமிழன்!!35 ஆண்டு காலம் நூலகராகஅரசு பணியாற்றி தன் ச...

Posted: 08 Nov 2014 03:11 AM PST

இந்த நூற்றாண்டின் இணையற்ற ஒரு தமிழன்!!35 ஆண்டு காலம் நூலகராகஅரசு பணியாற்றி தன் சம்பளம் முழுதும்அநாதை குழந்தைகளுக்கு வழங்கி விட்டு தன் தேவைகளுக்காக மாலை நேரங்களில்ஒரு உணவு விடுதியில் பணியாற்றிய மாபெரும்ம னித நேயர் திரு கல்யாண சுந்தரம்.! அரசு ஒய்வு ஊதியமாக கிடைத்த பத்து லட்சம் ரூபாவையும் ஏழைகளுக்கு
ழங்கியமாமனிதன்..!!

தன் இறப்புக்கு பின் உடல் மற்றும்கண்களை திருநெல்வேலி மருத்துவகல்லூரிக்கு தானம் செய்ய முன்வந்த மனிதர்.! உலகிலேயே தன் வாழ்நாள் வருமானம்முழுதும்தானமாக வழங்கிய ஒரே மனிதன் என்றபெயர் பெற்றவர்.! இந்திய அரசின் சிறந்த நூலகர் பரிசு பெற்றவர்.! இத்த மாமனிதர் ஓரு தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.!

இவரின் சேவை மனப்பான்மையை ஒரு முன்னுதாரணமாக அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.!- தமிழர்கள்


Posted: 08 Nov 2014 02:14 AM PST


Posted: 08 Nov 2014 02:14 AM PST


கோயில்'ல பிச்சை எடுக்குரவன்! உன் ஜாதி'காரன்னு தெரிஞ்சா! கூட்டுட்டு போய் சொத்துல...

Posted: 08 Nov 2014 01:59 AM PST

கோயில்'ல பிச்சை எடுக்குரவன்!
உன் ஜாதி'காரன்னு தெரிஞ்சா!

கூட்டுட்டு போய் சொத்துல பாதி'ய எழுதியா தர போறீங்க!
அப்புறம் எதுக்கு ஜாதி வெறி!

@சுமன் தளபதி

ஐந்திறம் எனும் தமிழ் நூல்... ஐந்திறம் கூறும் தமிழ் மொழியியல் தமிழர்களுக்கு இரண...

Posted: 08 Nov 2014 01:17 AM PST

ஐந்திறம் எனும் தமிழ் நூல்...

ஐந்திறம் கூறும் தமிழ் மொழியியல்

தமிழர்களுக்கு இரண்டு வரலாறுகள் உண்டு. ஒன்று குமரிக்கண்டத்தின் கடல்கோளுக்கு முன்பு உள்ளது (க.மு). மற்றொன்று கடல்கோளுக்கு பின்பு உள்ளது (க.பி).

பஃறுளி யாற்றுடன் பல் மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள
வட திசைக் கங்கையும் இமயமும் கொண்டு,
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி!
-சிலப்பதிகாரம் -மதுரை காண்டம் – காடுகாண் காதை
சந்திரவம்சத்து பாண்டியனின் (தென்னன்) சிறப்பை விளக்கும் இந்த சிலப்பதிகாரப்பாடல் பாண்டியன் ஆண்ட தெற்கு பகுதியில் குமரிக்கோடு என்னும் பகுதி பஃறுளி ஆற்றுடன் கடல்கோள் கொண்ட விவரத்தை தெரிவிக்கிறது. குமரிக்கண்டத்திற்கு ஜம்புத்வீபம் அல்லது நாவலந்தீவு என்ற பெயரும் உள்ளது. நாவல் மரம் அடர்ந்த பகுதி என்று பொருள். குமரிக்கண்டத்தில் கடல்கோளுக்கு முன்பு எழுதப்பட்டது "ஐந்திறம்" என்ற நூல். 15,000 ஆண்டுகளுக்கு முன் மயன் எழுதிய நூல்தான் ஐந்திறம். கடல்கோளுக்கு முன்பு இருந்த நமது ஆன்மீகம், பண்பாடு மற்றும் அறிவியலின் உச்சகட்டத்தை காட்டுகின்ற நூல் ஐந்திறம். தொல்காப்பியமே தமிழரின் மூல நூல் என்று கூறி வருகிறோம். ஆனால், தொல்காப்பியத்தின் சிறப்புப்பாயிரத்தில் "ஐந்திறம்" நிறைந்த தொல்காப்பியம் என்ற பனம்பரனார் வரிகள் முகவும் குறிப்பிடத்தக்கதாகும். ஐந்திறம் என்ற நூல் முதல் சங்க காலத்தில் நிலத்தரு திருவிற் பாண்புயன் என்ற அரசனின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது.
"ஐந்திறம் காட்டும் விண் மண்ணாகும் விஞ்ஞான நிகழ்வு." "விண்" முதற்பூதமாகவும், சிருஷ்டிகளுக்கெல்லாம் ஆதார இடமென்றும் ஐந்திறம் கூறுகிறது. அது மட்டுமின்றி இந்த வெளியே "ஒளிவெளி" என்றும் "வெளிஒளி" என்றும் கூறுகிறது. வெளியில் உள்ள ஆகாசத்தை போலவே, நமது உடலுக்கு உள்ளும் ஓர் ஆகாசம் இருக்கிறது. என்கிறது ஐந்திறம். இதனை மற்றொரு ஒளி (ஒளிரும் ஒளி, ஒளியினை உமிழும் ஒளி) என்றும் கூறுகிறது.
ஒளிபரம் பொருளே யாகி ஒளிமுதற் பொருளேயாகி
ஒளிக்கலைப் பொருளே யாகி ஒளிநிலைப் பொருளேயாகி
ஒளியெழில் ஆற்றலாயே ஒளிஒளி நிலையினாலே
ஒளி ஒளியாய் விளங்கும் ஒளியொளிர் ஒளியே போற்றி.
-மயன் உரைப்பாடல்

மேலும், ஒளியே ஒலியாகவும் வெளிபடுகிறது. ஐந்திறம் கூற்றுப்படி இந்த ஒளி, ஒலி அணுக்களே இப்பிரபஞ்ச உற்பத்திக்குக் காரணம். மேலும், இந்த மூல ஒளி அணுக்கள் சிதாகாயத்திலும், பேராகாயத்திலும் ஒருங்கே இருக்கிறதாக ஐந்திறம் கூறுகிறது. இந்தத் துடிப்பைத்தான் காலம் என்ற பெயரில் ஐந்திறம் குறிப்பிடுகிறது. இந்த அணுக்களின் துடிப்பே இயல், இசை, நடம் , கட்டிடம் மற்றும் சிற்பம் முதலிய ஐங்கலைகளாக வெளிப்படுகின்றன. இதையே ஐந்தியல் என்றும் ஐந்திறம் கூறுகிறது.

அருவநிலையில் ஒளியாக உள்ள மூலப்பொருள் உருவநிலையில் கனசதுர வடிவமாக மாறிவிடுகிறது. "கரு" உடலாகும். உள்ளிருக்கும் ஒளி உயிராகும். ஐந்திறநூலில் இக்கனசதுர வடிவத்தை "நாற்புறத்தியல்" என்று சொல்லுவதை காணமுடிகிறது. ஒளியாக உள்ள மூலபொருளைத்தான் "மூலக்கனல்" என்றும் "மூலச்சூடு" என்றும் "பிரணவச்சூடு" என்றும் ஐந்திறம் கூறுகிறது. (ஒளிவளர் உயிரே; உயிர்வளர் ஒளியே; ஒளியுயிர் வளர்தரும் உணர்வே -வள்ளலார்). ஆகையால், கடவுளின் மூல வடிவம் சதுரமே. இக்கருத்தை முதலில் கூறிய விஞ்ஞான நூல் ஐந்திறம். (சதுர பேரருள் தனிப்பெரும் தலைவனென்று எதிரற்று ஓங்கியே என்னுடைத் தந்தையே – திருவருட்பா ; பிரணாயாமம் செய்யும்போது இதயவெளி எனும் தாமரை விரிகிறது. அப்போது தோன்றும் அக்கினியின் உச்சியில் பொன்னிறத்தில் கனசதுரவடிவில் ஒரு பிந்து தோன்றுகிறது – மரீசி சம்ஹிதை). இக்கனசதுர கருவானது 64 சதுர ஒளி அணுக்களால் ஆனது என்றும் ஐந்திறம் கூறுகிறது.
அறுபான் நான்கியல் அமைவுறக் கண்டே
உறுநிலை நாற்புறத் தியலைத் தியல்வெளி
கணக்கியல் மாநெறி கலைநெறித் தேர்நிலை
பினக்கரும் தூநெறி பெருநெறி தேர்ந்தே
பெருவளியியலும் கருவெளி திறனும்
உருவெளி ஆக்கம் ஒளிநிலை தேர்ந்தே - ஐந்திறம் – 856

ஒளியும், வெளியும் சேர்ந்தசைவதனால் "ஓம்" என்ற மூல ஒலி பிறக்கிறது. ஒளியணு வும், ஒலியணுவும் மேலும் எழுச்சியும் சூழற்சியும் கொள்வதால் மூல ஒலிகளான அ, இ, உ, எ ஆகியவை தோன்றுகின்றன. இம்மூலவொளிகள் விண்ணிலும் சிதாகா யத்திலும் தோன்றுவது. இயற்கையின் இயல்பு என ஐந்திறம் கூறுகிறது. எனவே "இயல்மொழி" – இயற்கை முதன் முதலில் பேசிய மொழி தமிழாயிற்று. இது விண்பேசிய மொழி. இன்றும் சொல்லப்போனால் இது ஒளி பேசிய முதல்மொழி.
விண்ணொளித் தமிழாய் விளங்குறு முன்மை
என்னோளித் திறனுறும் எண் விளக்கும்மே – ஐந்திறம் 463

மேலும், விண்ணில் "ஓம்" எனும் ஒலியை தோன்றுவித்தல் "விண்ணொளி" என்றும் அதுவெளியில் படர்ந்து எதிரொலித்ததால் "வெளிமொழி" என்றும், நிறையொலி என்றும், தேரொலி என்றும் கூறப்படுகிறது.
ஒளிமுதல் கண்ட விண்ணொலி ஓசை
வெளிமொழி ஓமென விளம்பற் பாற்றே – ஐந்திறம்!
இவ்வாறு ஒலியணுக்கள் ஒன்று கூடி எழுத்தொலிகளை வெளியில் உமிழ்கிறது.
("அணத்திரன் ஒளியே எழுத்தொலிச் சிறப்பாம்" – ஐந்திறம்)அதாவது அ,இ,உ,எ வுடன் ஓ மையும் சேர்த்து ஐந்தொலிகளாகத் தோற்றம் கொள்கிறது. இதுதான் உயிர் + ஒலிகள் என இலக்கணத்தில் ஏற்றுகொள்ளப்படுகின்றன. ஒளியின் அசைவுகள் அமிழ்தல், இமிழ்தல், குமிழ்தல், உமிழ்தல் இறுதியில் எல்லாம் சேர்ந்து தமிழ்ந்து தமிழாகும் என்பது ஐந்திற விஞ்ஞானம்.

சதுரத்திலிருந்து எழும் ஒளி மற்றும் ஒலி மேலே வரவரக் குறுகி "பிரமிட்" வடிவத்தை பெறுகிறது. நம் உடலுள் தோன்றிய அனுபவமே இந்தப் பிரமிடாகிய சிற்ப வடிவம். இதன் பொருட்டே தமிழையும் சிற்பம் என்ற சொல்லால் ஐந்திறம் அழைக்கிறது.
சிற்பச் செந்தமிழ் சிற்றவை எண்தமிழ்
பொற்புற்றாய்தல் பெருநெறி மரபே – ஐந்திறம் 1818
"தவளை மாநெறி" அதாவது 8 x 8 = 64 சதுரங்கள் கொண்ட மண்டலமாகிய தவள மாடத்து உச்சிதான் (பிரமிட்) அயனும், மயனும் காணமுடியாத மெய்ப்பொருள் என்பதாகும் என ஐந்திறம் குறிக்கிறது.

அதையேதான் வள்ளலாரும்
அயனும் மாலும் தேடித்தேடி அலைந்து போயினர்
அந்தோ இவன் முன் செய்த்தவம்யா தென்பராயினர்
மயனும் கருதமாட்டாத் தவள மாடத்துச்சியே – திருவருட்பா – 1818


ஒருமுறை பணக்கார நண்பர் ஒருவருடன் காரில் சென்றேன்,அவருடன் அவர் நண்பர்கள் சிலரும்...

Posted: 08 Nov 2014 12:12 AM PST

ஒருமுறை பணக்கார நண்பர் ஒருவருடன் காரில் சென்றேன்,அவருடன் அவர் நண்பர்கள் சிலரும் வந்திருந்தார்கள்.ஒரு சமயத்தில் அவரின் கார் டிரைவர் மிக நகைச்சுவையாக ஏதோ சொல்ல நான் பலமாக சிரித்துவிட்டேன்.பார்த்தால் அந்த காரில் என்னை தவிர யாரும் சிரித்ததாய் தெரியவில்லை.

சிறிதுநேரம் கழித்து காரிலிருந்தவர்களில் ஒருவர் செம மொக்கையாக ஏதோ சொல்ல எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.எனக்கு சுத்தமாக சிரிப்பு வரவில்லை.அவர்கள் தொடர்ந்து சிரித்துகொண்டு இருந்தனர்,"இது அவ்ளோ பெரிய காமெடி இல்ல" என்று சொல்ல நினைத்தேன்.

பிறகு தான் தெரிந்தது அந்த மொக்க ஜோக் சொன்னவர் அவர்களை விட அந்தஸ்த்தில் உயர்ந்தவர்,முன்பு நல்ல ஜோக் சொன்னவர் சாதாரண டிரைவர் என்பது.சிரிப்பு மனித இனத்திற்கு இறைவன் தந்த வரம்,அதில் கூடவா அந்தஸ்து,அடையாளமெல்லாம் பார்ப்பீர்கள்?

- பூபதி

தமிழகத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் கட்டாயம் தமிழில் பெயர் பலகை வைக்க வே...

Posted: 07 Nov 2014 11:42 PM PST

தமிழகத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் கட்டாயம் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்பதை தமிழக அரசு உறுதி செய்துள்ளது !

சென்னையில் உள்ள பல வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைப்பதில்லை. தமிழர் பண்பாட்டு நடுவம் உட்பட பல தமிழ் அமைப்புகள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று வணிக நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதன் காரணமாக பல கடைகள் தமிழில் பெயர் பலகை வைப்பதற்கு ஒத்துக் கொண்டனர். இருப்பினும் சில கடைகள் தமிழில் பெயர் பலகை வைக்க எந்த ஆணையும் இல்லை, திமுக ஆட்சியோடு அந்த சட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்று சாக்குபோக்கு சொல்லி வருகிறார்கள்.

இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக நாம் அரசுக்கு விண்ணப்பம் அளித்தோம். அதில் தமிழில் வணிக நிறுவனங்கள் கட்டாயம் பெயர் பலகை வைக்க மறு ஆணை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டோம். இந்த விண்ணப்பத்திற்கு பதில் அளித்த தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, தமிழில் பெயர் வைப்பது கட்டாயம் என்றும், அதை ஏற்கனவே மாநகராட்சி அலுவலகம் உறுதி செய்து வருகிறது என்றும் அதனால் மறு ஆணை தேவையில்லை என்றும் பதில் கூறியுள்ளது. இதனால் அனைவருக்கும் நாம் அறிவிப்பது என்னவெனில், தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் கட்டாயம் தமிழில் பெயர்வைக்க வேண்டும். அவ்வாறு தமிழில் பெயர் இல்லாத கடைகளின் பெயர் பலகைகளை மாநகராட்சியிடம் புகார் அளித்து நாம் அகற்றலாம் அல்லது தமிழ் அமைப்புகள் தாங்களாகவே முன்வந்தும் அகற்றலாம்.

இனியும் தமிழில் பெயர் பலகை வைப்பது சட்டமில்லை என்று எவரும் கூற இயலாது. அதற்கான ஆவணத்தை தான் நாம் இங்கு இணைத்துள்ளோம். தமிழகத்தில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் எந்த வணிக நிறுவனங்களும் இயங்க முடியாத நிலையை நாம் உருவாக்குவோம்!


பத்தாயம்... குதிர்... கோட்டை- ஏங்கித் தவிக்கும் நெல்மணிகள்! கண்ணும் கருத்துமாக...

Posted: 07 Nov 2014 10:14 PM PST

பத்தாயம்... குதிர்... கோட்டை- ஏங்கித் தவிக்கும் நெல்மணிகள்!

கண்ணும் கருத்துமாக விவசாயிகளின் நெல்மணிகளை நீண்ட நாட்களுக்கு தரம் குறையாமல் பாதுகாத்து கொடுக்கும் பெட்டகமாகவும், கருவூலமாகவும் விளங்கியவை குதிர், பத்தாயம் போன்றவை.

தமிழர்களின் வாழ்வில் நீண்டநெடுங்காலமாக உணர்வுப்பூர்வமாகவும் விஞ்ஞான பூர்வமாகவும் தொன்றுதொட்டு அங்கம் வகித்து வந்தன. நமது முன்னோர்களின் தொழில்நுட்ப அறிவும், தொலைநோக்குப் பார்வையும் இவற்றில் மிளிர்கிறது.

உணவின் மகத்துவம் கருதி, அதை எந்த அளவிற்கு முன்னெச்சரிக்கையோடும், மரியாதையோடும் பாதுகாத்தார்கள் என்பதற்கான பளிச்சிடும் வெளிப்பாடு இவை.

25 ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமப்புறங்களில் மட்டுமிலலாது டெல்டா மாவட்ட நகரங்களில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பத்தாயம், குதிர் உள்ளிட்டவைகள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால், இன்று இவை இருக்கும் இடங்களை தேடி அலையும் நிலை உருவாகியுள்ளது. இவற்றின் மகத்துவம் அறிந்த சில விவசாயிகள், இப்பொழுதும் கூட இதனை பராமரித்தும், பாதுகாத்தும், பயன்படுத்தி வருகிறார்கள்.

பெரும் செல்வந்தர்கள் மட்டுமல்ல... நிரந்தர வருமானம் ஈட்டக்கூடிய நடுத்தர வர்க்கத்தினரும், ஓரளவுக்கு வசதி படைத்தவர்களுமே கூட, கடைகளில் அரிசி வாங்குவதையே கவுர குறைவாக கருதிய கால கட்டம் அது. நெல்லை வாங்கி பத்தாயம், குதிர் உள்ளிட்டவைகளில் கொட்டி வைத்து, அவ்வப்போது தேவைக்கேற்ப, ஆலைகளில் அரிசியாக அரைத்து பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

காலப்போக்கில் நவநாகரீக வாழ்க்கை முறையால் பத்தாயமும், குதிரும் விரட்டியடிக்கப்பட்டன. "இடத்தை அடைச்சிக்கிட்டு இருந்துச்சு... அதான் வேண்டாம்னு எடுத்துட்டோம்" என சொல்பவர்களின் வாழ்விலும் பொருளாதாரத்திலும் பெரிய அளவில் வெற்றிடம் உருவானது. அதிக விலை கொடுத்து அரிசி வாங்கத் தொடங்கினர்.

அடுத்தக் கட்டமாக, வெளிமாநிலங்களில் பணவெறியோடு அளவுக்கதிகமான ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் கொட்டி வியாபாரிகளே முன் நின்று உற்பத்தி செய்யக்கூடிய, பாலீஸ் செய்யப்பட்ட, சத்து இல்லாத சக்கை அரிசி தமிழ்நாட்டுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி, தற்போது முழுமையாக எல்லோருடைய வீடுகளிலும் உலா வருகிறது. கிராமப்புறங்களிலும் கூட மைசூர் பொன்னிக்குதான் முழுமையான முதல் மரியாதை.

இதெல்லாம் ஒருபுறமிருக்க... பத்தாயம், குதிர் இல்லாத விவசாயிகள், தங்களுடைய நெல்லை சாக்கு மூட்டைகளில் வைப்பதால் பனி மற்றும் மழைக்காலங்களில் ஈரப்பதம் ஊடுருவி நெல்லின் தரத்தை சீர்குலைக்கிறது. கடுமையான கோடைகாலங்களில் வெப்பத்தின் தாக்கத்தால் கட்டு விடுதல் என்ற பிரச்னை உருவெடுத்து, நெல்லில் கோடுகள் உருவாகும். இதுபோன்ற நெல்லை அரைக்கும் போது குருணை அதிகரித்து, அரிசியின் அளவு குறையும். இதையெல்லாம் விட உச்சக்கட்ட பிரச்னை எலி தொந்தரவு. சாக்கு மூடடைகளை ஓட்டைப் போட்டு, ருசி பார்த்து வேட்டையாடிவிடுகிறது.

சாக்கு மூட்டைகளில் உள்ள நெல்மணிகள், அந்துப்பூச்சி களின் தாக்குதலுக்கும் ஆளாகிறது. இதுபோன்ற காரணங்களால் விவசாயிகள் தங்களுடைய உற்பத்தி நெல்லை இருப்பு வைத்துக் கொள்ள முடியாமல், அவசர கதியில் விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலை, வியாபாரிகள் குறுக்கு வழியில் பயன்படுத்தி, விவசாயிகளை சுரண்டுகிறார்கள். நெல் மணிகளை சேமித்து வைக்க முடியாததால், விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைநெல்லை, பல மடங்கு கூடுதல் விலை கொடுத்து வெளியில் வாங்குகிறார்கள். உதாரணமாக, 60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல்லை சுமார் 900 ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு, தரம் குறைவான 30 கிலோ விதை நெல்லை 900 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி விதைப்பு செய்கிறார்கள்.

பூச்சி, பூஞ்சாணம், எலி, பனி, மழை, வெயில் உள்ளிட்ட அனைத்துப் பிரசனைகளில் இருந்தும் விவசாயிகளை கைத்தூக்கி விடக்கூடிய உதவும் கரங்களாக... பத்தாயம், குதிர், கோட்டை உள்ளிட்டவைகளை திகழ்கின்றன. பத்தாயம், குதிர் இந்த இரண்டுமே பல அடுக்குகளாக அமைக்கப்பட்டிருக்கும். இதற்கான காரணம், நம்மை வியக்க வைக்கிறது. பல அடி உயரம் கொண்ட பத்தாயம் அல்லது குதிரின் உச்சத்திற்கு சென்று அனைத்து மூட்டைகளையும் அவிழ்த்து நெல்லை கொட்டுவதென்பது அத்தனை எளிதான காரியமல்ல. ஒவ்வொரு அடுக்காக வைத்து நெல்லை நிரப்பிக் கொண்டே வந்தால் மிக எளிதாக வேலை முடியும். மரத்தால் செய்யப்பட்டவை பத்தாயம். விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ப, குறைந்தபட்சம் 10, 20 மூட்டைகள் முதல் அதிகபட்சம் 100, 200 மூட்டைகளுக்கு மேல் கொள்ளளவு கொண்ட பத்தாயம் வைத்திருந்தார்கள்.

மண்ணால் ஆன உறைகளை [உருளை} கொண்டு செய்யப்பட்டவை குதிர். ஒரு உருளைக்கும் அதன் மீதுள்ள இன்னொரு உருளைக்கும் இடையே உள்ள இடுக்குகளில் சேறு பூசப்படும். அனைத்து உருளை களும் அமைக்கப்பட்ட பிறகு இதன் மீது முழுமையாக சாணம் பூசப்படும். இதனால் எலி கடிக்காது. அவ்வபோது தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக நெல்லை வெளியில் எடுக்க, குதிரின் கீழ் பகுதியில் திறந்து மூடும் அமைப்பு இருக்கும்.

முழுமையாக நெல் வெளியில் எடுக்கப்பட்ட பிறகு, உறைகளை லேசாக அசைத்தாலே தனிதனியாக பிரித்து எடுத்து விட்டு, நெல்லை நிரப்பி மறுபடியும் அமைத்துக் கொள்ளலாம். குதிர், பத்தாயம் இவைகளில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை 3,5,7,9,12 என ஒற்றைப்படையில் தான் அமைப்பார்கள்.

விதைநெல்லின் முளைப்புத்திறன் நீண்டகாலத்திற்கு நீடித்து நிலைக்க, வைக்கோலை தரையில் பரப்பி, அதனை சுற்றிலும் வைக்கோல் பிரிகளை கொண்டு கோபுரம் போல் கோட்டை கட்டப்படும். இதன் மீது முழுமையாக சாணம் பூசப்படும். விதைநெல் தேவைப்படும்போது, இந்த கோட்டையை தண்ணீரில் மூழ்க வைத்து, நன்கு ஊறியதும், அதனை அப்படியே நாற்றங்காலில் போடுவார்கள். வைக்கோல், சாணம் இரண்டு மே உரமாக கைக்கொடுக்கும்.

இது எல்லாமே பழங்கதையாகி, அருங்காட்சியக பொருட்களாக மாறி வருகின்றன... புதிதாய் பிறப்பெடுக்கும் நெல்மணிகளோ, பாதுகாப்பான சூழல் தேடி ஏக்கத்தில் தவிக்கின்றன. குதிர், பத்தாயம், கோட்டையின் தேவை இன்று அவசியமாகிறது.

-கு. ராமகிருஷ்ணன்
படங்கள்: க. சதீஸ்குமார்


0 comments:

Post a Comment