Sunday, 9 November 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


ஒரு முறை ஜப்பானிய ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து, போருக்க...

Posted: 09 Nov 2014 09:03 AM PST

ஒரு முறை ஜப்பானிய
ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து,
போருக்கு தயாரானார். அவர் "எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம்" என்று நம்பிக்கையுடன் இருந்தார்.

ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு துறவியைப் பார்த்துக் கேட்கச் சென்றார்.

அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்தார்.

அது என்னவென்றால், அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் குல தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து, ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் "நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல்
போரில் தோற்போம்" என்று துறவி சொன்னதைச் சொல்லி, பின் அவர்களிடம் "நம் தலை விதியை இந்த நாணயம் சொல்லும்" என்று கூறியபடி நாணயத்தைச் சுழற்றினார்.

அனைவரும் அதைக் கூர்ந்து கவனித்தனர். அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்கி வெற்றிப் பெற்றனர்.

யுத்தத்திற்கு பின்னர்,
துணை மந்திரி "விதியை யாராலும் மாற்ற முடியாது." என்று ராஜாவிடம் சொல்ல "ஆம், என்று ராஜா சொல்லி இது விதியல்ல
மந்திரியாரே மதி அந்த
நாணயத்தின் இரு பக்கத்திலும்
தலை இருப்பதை" காண்பித்தார்.

நம்பிக்கையுடன் செயல்பட்டால்
எத்தகைய காரியத்தையும் எளிதில்
வெல்லலாம், விதியையும்
மாற்றி அமைக்கலாம் என்றார்.

நம்பிக்கையுடன் செயல்படுங்கள்
வெற்றி கிட்டும் ..

(y) (y)

Relaxplzz


"தன்னம்பிக்கை கதை"

ஒழுக்கம் இல்லா உடை அணியும் சிலருக்காக மட்டும்...! தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்...!

Posted: 09 Nov 2014 08:50 AM PST

ஒழுக்கம் இல்லா உடை அணியும் சிலருக்காக மட்டும்...! தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்...!


நீங்கள் கணிதத்தில் வல்லவரா விடை சொல்லுங்களேன் 5 + 3 = 28 9 + 1 = 810 8 + 6 = 2...

Posted: 09 Nov 2014 08:40 AM PST

நீங்கள் கணிதத்தில் வல்லவரா விடை சொல்லுங்களேன்

5 + 3 = 28
9 + 1 = 810
8 + 6 = 214
5 + 4 = 19

22+5=???

:)

Posted: 09 Nov 2014 08:30 AM PST

:)


ஒரு குட்டிக்கதை . ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடையே வருங்காலத்தில் நீ...

Posted: 09 Nov 2014 08:15 AM PST

ஒரு குட்டிக்கதை .

ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடையே வருங்காலத்தில் நீங்கள் என்னவாக போகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்....

ஒரு மாணவன் தான் மருத்துவராக வேண்டும் என்றான் , இன்னொரு மாணவர் வக்கீல் ஆக வேண்டும் என்றான் ,,, இப்படி ஒவ்வொரு மாணவரும் தன்னுடைய ஆசைகளை சொல்லி வந்தனர்.

ஒரு மாணவன் மட்டும் நான் ஒரு குதிரைவண்டிக்காரனாக ஆக வேண்டும் என்றான் , இதனை கேட்ட ஆசிரியருக்கோ அதிர்ச்சி ,,,
என்ன உளறுகிறாய் என்று கேட்டு திட்டிவிட்டார்,

மாலை பள்ளி முடிந்ததும் அந்த மாணவனின் தாயார் அவனை அழைத்து செல்ல வந்தார், ஆசிரியர் நடந்தவற்றை மாணவனின் தாயாரிடம் கூறினார், அவன் தாயாரோ அதை கேட்டுவிட்டு அமைதியாக இருந்தார் ...

வீட்டுக்கு செல்லும் வழியில் அந்த மகனிடம் எதனால் நீ குதிரைவண்டிக்காரனாக ஆக வேண்டும் என்று சொன்னாய் என கேட்க்க ... அந்த மகனோ குதிரைவண்டி ஓட்டும் போது நல்லா வேகமாக வண்டி போகும் ,வண்டி போகும் போது குச்சியை சக்கரத்தில் விட்டால் நல்ல சத்தம் வரும் என்றான் ,தாய் அதை கேட்டுவிட்டு அமைதியாக இருந்தார் ...

பிறகு மகனுக்கு உணவு கொடுத்துவிட்டு மறுபடியும் கேட்டால் ,"நீ
குதிரைவண்டிக்காரனாக தான் ஆகப்போகிறாயா ?" என்று மகன் "ஆம்" என்று பதில் சொல்ல ...

நேராக பூஜை அறைக்கு அழைத்து சென்று அங்கு மகாபாரதத்தில் கிருஷ்ணன் தேரோட்டியாக இருந்த காட்சியை காட்டி, மகனே கிருஷ்ணன் குதிரைவண்டிக்காரராக மாறியதால் ஒரு போரே முடிவுக்கு வந்தது ,,,, ஆகவே இவரை போல ஒரு குதிரைவண்டிக்கார ஆக நீ வர வேண்டும் என்றார் அவன் தாயார் ....
அதற்க்கு அந்த மகனும் சரி, என்று சொல்லி தாயிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டானாம் ...

* அந்த குதிரைவண்டிக்காரனாக ஆசைப்பட்ட சிறுவன் வேறு யாரும் அல்ல அவர் தான் பின்னாளில் சுவாமி விவேகானந்தர் என்று அழைக்கப்பட்ட நரேந்திரர்...

Relaxplzz

ஏடிஎம் சேவைக்கு வசூல்: வங்கிகளை வழிக்கு கொண்டு வர வாட்ஸ்அப்பில் பரவும் ஐடியா...!...

Posted: 09 Nov 2014 08:00 AM PST

ஏடிஎம் சேவைக்கு வசூல்: வங்கிகளை வழிக்கு கொண்டு வர வாட்ஸ்அப்பில் பரவும் ஐடியா...!

//பகிருங்கள் நண்பர்களே Share plzz //

ஏ.டி.எம் மையத்தில்
பணம் எடுக்க கட்டணம் விதித்த வங்கிகளை வழிக்கு கொண்டுவர
என்ன செய்யலாம் என்ற
ஐடியாவுடன் வாட்ஸ்-அப்பில் மெசேஜ் ஒன்று தீயாய் பரவி வருகிறது.

கணக்கு வைத்துள்ள ஏடிஎம் மையங்களில்
மாதத்துக்கு ஐந்து முறை பணம் எடுத்துக்கொள்ளலாம்;
அதற்கு மேல் எடுக்கும்
ஒவ்வொரு முறைக்கும்
தலா ரூ.20 கட்டணமாக
பிடித்தம் செய்யப்படும் என்ற நடைமுறை இம்மாதம் 1ம்தேதி முதல் சென்னை, பெங்களூர் உட்பட
ஆறு பெருநகரங்களில்
அமலுக்கு வந்துள்ளது. பணம் எடுப்பது மட்டுமின்றி பண
இருப்பை சோதித்து பார்க்க ஏ.டி.எம் மையத்திற்குள்
சென்றாலும் இந்த
விதிமுறை பொருந்தும்
என்பது கூடுதல்
அதிர்ச்சியாகும். ரிசர்வ்
வங்கியின்
வழிகாட்டுதலின்படி இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

பிற வங்கிகளின் ஏ.டி.எம் மையங்களையும்
கட்டணமின்றி மாதம் 3
முறைதான் பயன்படுத்தமுடியும். இதனால் ஏ.டி.எம்
மையங்களை பயன்படுத்தும்
கோடிக்கணக்கான நடுத்தர வர்க்கத்து வாடிக்கையாளர்கள்
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ.20 என்பது நடுத்தர
குடும்பங்களுக்கு
முக்கியமான ஒரு தொகையாகவே உள்ளது.

இந்நிலையில்,
வங்கிகளை பழையபடி வழிக்கு கொண்டுவர வேண்டுமானால்
வங்கிகளுக்கே சென்று
பணத்தை எடுக்குமாறு
வாட்ஸ்-அப்பில் ஒரு, வாய்ஸ் மெசேஜ், தீயாய்
பரவி வருகிறது.

அந்த மெசேஜில் "அனைத்து பகுதிகளிலும் வங்கிகளை திறக்க முடியாது என்பதால் தான் ஏடிஎம் மையங்களை வங்கிகள்
திறந்தன.

இப்போது நம்மிடமிருந்தே
பணத்தை பறிக்கும்
செயலிலும் வங்கிகள்
இறங்கியுள்ளன.

இதற்கு பதிலடியாக, நாம் வங்கிகளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.

வங்கி கணக்கு வைத்திருக்கும்
நண்பர்கள் குரூப்பாக
வங்கிக்கு சென்று,
ஆளுக்கு ரூ.100 மட்டும்
சலானை நிரப்பி எடுக்க
வேண்டும். இப்படி நண்பர்கள் ஐந்து பேர், பத்து பேர் என
தினமும்போய் பணத்தை எடுக்க
வேண்டும். ஊருக்கு ஊர்
இதேபோல செய்ய வேண்டும்.

அப்படி பணம் எடுப்பதில் எந்த தவறும் கிடையாது. ஏன்
இப்படி குறைந்த
பணத்தை எடுக்கிறீர்கள்
என்று கேட்டால்,
இப்படி ஏ.டி.எம்மில்
எடுத்து எங்களுக்கு பழக்கம் என்று கூறிவிடுங்கள்.

இவ்வாறு நாம் பணம் எடுக்க சென்று தொல்லை தந்தால்,
வங்கி ஊழியர்கள்
அதை மேலிடத்துக்கு
எடுத்துச் சொல்வார்கள்.
ஒரே மாதத்தில் புதிய
நடைமுறையை வங்கிகள் திரும்ப பெறும்"

இவ்வாறு அந்த வாய்ஸ்
மெசேஜில் ஒரு நபர்
பேசுகிறார். இந்த மெசேஜ் வாட்ஸ்-அப் குரூப்புகளில் வேகமாக பரவி வருகிறது.

Relaxplzz


S'HE' FE'MALE' WO'MAN' (பெ)ஆண் பெண்ணுக்குள் ஆண் அடக்கம். ஆனா அதே நேரத்துல ஆண்...

Posted: 09 Nov 2014 07:50 AM PST

S'HE'
FE'MALE'
WO'MAN'
(பெ)ஆண்

பெண்ணுக்குள் ஆண்
அடக்கம்.

ஆனா அதே நேரத்துல ஆண் இல்லாமல் பெண்ணால் முழுமை அடைய முடியாது ..

Relaxplzz

இன்றும் பள்ளிக் குழந்தைகளைப் பார்கையில் நான் ஸ்கூலுக்கு போகல என்று அழுதபடி அம்மா...

Posted: 09 Nov 2014 07:40 AM PST

இன்றும் பள்ளிக் குழந்தைகளைப் பார்கையில் நான் ஸ்கூலுக்கு போகல என்று அழுதபடி அம்மா கதற கதற
பள்ளியில் விட்டு வரும் நியாபகத்தை ஏற்படுத்துகிறது
இப்புகைப்படம்..

நீங்கள் அழுததுண்டா ? அழுதவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


(y) (y)

Posted: 09 Nov 2014 07:30 AM PST

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..! பொட்டு : பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு...

Posted: 09 Nov 2014 07:15 AM PST

பெண்கள் அணியும் ஆபரணங்களின்
பயன்கள்..!

பொட்டு :
பொட்டு வைக்கும்
பெண்களை அவ்வளவு சீக்கிரம்
மெஸ்மரிசம் செய்ய முடியாது.

தோடு :
மூளையின் செயல் திறன்
அதிகரிக்கும். கண் பார்வை திறன்
கூடும் .

நெற்றிச்சுட்டி :
நெற்றிச்சுட்டி அணியும்
போது தலைவலி, சைனஸ் பிரச்சனை
சரி செய்கிறது.

மோதிரம் :
பாலுறுப்புகளை தூண்டும்
புள்ளிகள் மோதிர விரலில்
உள்ளது..ப்ரேசிலட், வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின்
புள்ளிகளை தூண்டும்.
செயின் , நெக்லஸ் :
கழுத்தில் செயின் அணியும் போது
உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள
சக்தி ஓட்டம் சீராகும் .

வங்கி :
கையின் பூஜை பகுதியில்
இறுக்கமான அணிகலன்கள்
அல்லது கயிறுகள் அணியும்
பொது உடலில் ரத்த ஓட்டம்
சீராகி பதற்றம்படபடப்பு, பயம் குறைகிறது .மார்பக புற்று நோய்
வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே
உருதிபடுதப்படிருகிரதுலம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய்
வருவது இல்லை.கரணம் மணிக்கட்டில்
இருந்து முழங்கைக்கு மேல் வரை நெருக்கமாக
வளையல்களை அணிவதால்
மார்பு பகுதியின் ரேத ஓடம் சீராக
வைத்திருக்க உதவுகிறது.

வளையல் :
வளையல்கள் அந்த பகுதியின்
புள்ளிகளை அழுத்துவதன் மூலம்
வெள்ளையணு உற்பத்தி உடலில்
அதிகரிக்கிறது. முக்கியமான
ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட்
செய்யபடுகிறது.இ தன் மூலம்
தாய்க்கும் சேய்க்கும் நோய்
எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம் :
ஒட்டியாணம் அணியும்
போது இடுப்பு பகுதியின்
சக்தி ஓட்டம் நன்றாக
தூண்டப்பட்டு ஆரோக்கியம்
கூடும்.வயிற்று பகுதிகள்
வலு வடையும்.

மூக்குத்தி :
மூக்கில் இருக்கும் சில
புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும்
சிறுகுடலுக்கும் நெருக்கமான
தொடர்னு உண்டு.அந்த புள்ளிகள்
தூண்டப்படும் பொது அது சமந்தமான
நோய்கள்
குணமாகும் .மூக்குத்தி அணியும்
பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல்
சரியாகி வருவதை உணரலாம் .

கொலுசு :
கல்லீரல்,மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம்,
சிறுநீர்ப்பை,வய ிறு போன்ற மிக
முக்கிய உறுப்புகளின் செயல்
திறனை தூண்டிவிடும் அற்புதமான
அணிகலன் கொலுசு.கர்பப்பை இறக்க
பிரச்சனையை தடிமனான
கொலுசு அணிவதன் மூலம்
தீர்க்கலாம் .

மெட்டி :
மெட்டி அணிவது கர்ப்பப்பையை
பலப்படுத்தும். செக்ஸுவல்
ஹார்மோன்கள் தூண்டும்.

பில்லாலி என்பது குழந்தை
பிறந்தவுடன் 3வது விரலில்
அணியும்போது சில புள்ளிகள்
தூண்டப்பட்டு பால்
சுரப்பை அதிகப்படுத்தும் .

Relaxplzz

இரண்டு ஞானிகள் மனிதனைக் கடவுள் என்கிறார்கள். ஒருவர் ஆதிசங்கரர்; இன்னொருவர் விவேக...

Posted: 09 Nov 2014 07:01 AM PST

இரண்டு ஞானிகள் மனிதனைக் கடவுள் என்கிறார்கள். ஒருவர் ஆதிசங்கரர்; இன்னொருவர் விவேகானந்தர். "கடவுளின் ஒரு பகுதிதான் மனிதன்" என்றார் ஆதி சங்கரர். விவேகானந்தர் மனிதனைப் பார்த்து ''நீயே கடவுள்" என்றார். சொல்லும் முறையிலே ஏதோ வித்தியாசம் தெரியுதா? ஆமாம்.

ஆதிசங்கரரின் மனிதனும் விவேகானந்தரின் மனிதனும் வேறு.

ஒருமுறை ஆதிசங்கரர் குளித்துவிட்டு வந்துகொண்டிருந்தார். எதிரே தீண்டத் தகாதவராகக் கருதப்பட்ட ஒருவர் வந்தார். "தூரப்போ" என அவரை விலக்கினார் சங்கரர். எதிரில் வந்தவரோ " சங்கரா என்னை விலகச் சொல்கிறாயா ? எனது ஆத்மாவை விலகச் சொல்கிறாயா?" எனக் கேட்டார். ஆதிசங்கரருக்கு எல்லா மனிதனும் கடவுள் அல்ல. சங்கரர் "நான் பிராணன் அல்ல. ஐந்து வாயுக்கள் அல்ல. ஏழு தாதுக்களும் அல்ல" என்று மனிதனைப் பற்றிய விஞ்ஞானப் புரிதல் முயற்சிகளை மறுத்தார். அறிவும் ஆனந்தமும் கொண்ட சிவமே நான். நான் ஈஸ்வரன். அழிக்க முடியாதவன். துக்கக் கடலை வற்றச் செய்யும் பெருந்தீ நான்" என்று உயர்ந்தபட்சத் தன்னம்பிக்கையிலும் அதன் ஆனந்த மயக்கத்திலும் மூழ்கினார்.

உலகம் கடவுளிடமிருந்து வந்துள்ளது. கடவுள் இல்லை என்றால், உலகமும் இல்லை. உண்மையாக இருப்பதைப் போலத் தோன்றுகிற ஒரு கனவுதான் உலகம் என்று, வெளியில் ஓர் உலகம் என்று இருப்பதையே மறுத்தார் சங்கரர்.

நான் கடவுள். நானே கடவுள் என்றால், அது பாசிஸ அத்வைதம். இந்தக் கருத்தால் பாதிக்கப்பட்ட பலர், இன்று நான் மட்டும்தான் கடவுள் என்று மளிகைக் கடைகளைப் போல மடங்களை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறார் விவேகானந்தர். ஆதிசங்கரரின் அத்வைதத்துக்குப் பலியான மனிதன், ஆன்மிக அடிமைத்தனத்திலும் அரசியல் அடிமைத்தனத்திலும் அழுந்திக் கிடந்தான். அவனைத் தூக்கி நிறுத்துவதே அவரின் நோக்கம். இந்த மாபெரும் உலகை வெறும் கனவு என்று முடிவுசெய்து, ஆதிசங்கரர் குளோஸ் செய்துவிட்ட ஃபைலை விவேகானந்தர் ஓப்பன் செய்தார். நோய்க்குக் காரணமான கிருமியை வைத்தே தடுப்பு மருந்தைத் தயாரிக்கிற மாதிரி அத்வைதத்தை வைத்தே அவர் தயாரித்த தடுப்பு மருந்துதான் நடைமுறை வேதாந்தம்.

அதை எடுத்துக்கொண்டு, பலவீனப்பட்டு இருக்கிற மனிதனிடம் போனார். "இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன்… முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்.

எவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது" என்று அவன் கேள்விப்படாத ஒன்றைச் சொல்லி சத்தியம் செய்தார்.

அதற்குப் பிறகும் அவனுக்கு நம்பிக்கை வரவில்லையோ என நினைத்தாரோ தெரியவில்லை. பலமே வாழ்வு; பலவீனமே மரணம் என்றார்.

பலவீனத்துக்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக, வலிமையைக் குறித்துச் சிந்திப்பதுதான். இந்தப் பயிற்சியை விவேகானந்தர் அளித்தார்.

"இந்த உலகம் மிகப் பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடையவர்களாக்கிக்கொள்வதற்காக வந்திருக்கிறோம்'' என்று உவமை சொன்னார். "நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால், பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால், வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்" என உற்சாகமூட்டினார். "மனிதன் தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கிக்கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக்கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல" என்று சொல்லி தலைவிதி தத்துவத்தை எதிர்த்தார். கடைசியில், அவனைப் பார்த்து "நீயே கடவுள்" என்றார். "நீயும் கடவுள் நானும் கடவுள்" என்றுகூட அவர் சொல்லவில்லை. தன்னுடைய கடவுள் தன்மையைக்கூட அவனுக்காகத் துறக்கத் தயாராக இருந்தாரோ?

தரித்திரத்தில் இருப்போரைத் தரித்திர நாராயணன் எனக் கடவுளாக்கினார். அத்தகைய மனிதர்களுக்குச் சேவை செய்வதே கடவுளுக்குச் செய்யும் வழிபாடு என்று வழிகாட்டினார். இது மனித நேய அத்வைதம். இந்துத்வா அல்ல. இந்து விடுதலை நெறி. இதுதான் விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா மூலம் பாரதியாரை ஆட்கொண்டது.

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 3

இவற்றில் எந்த வாகனம் முதலில் செல்வது சரி..? 1.காவல்த்துறை 2.தீயனைப்பு 3.அவசர ஊர...

Posted: 09 Nov 2014 06:53 AM PST

இவற்றில் எந்த வாகனம் முதலில் செல்வது சரி..?

1.காவல்த்துறை
2.தீயனைப்பு
3.அவசர ஊர்தி
4.நமது வாகனம்.


மூளைக்கு ஒரு வேலை..

விலைமகள் நூறு ரூபாய்க்குக்கூட கிடைத்துவிடுகிறாள் ஆனால் விலைமகன்களோ ஐம்பது சவரனுக...

Posted: 09 Nov 2014 06:42 AM PST

விலைமகள் நூறு ரூபாய்க்குக்கூட
கிடைத்துவிடுகிறாள் ஆனால்
விலைமகன்களோ ஐம்பது சவரனுக்குக்கீழ் கிடைப்பதில்லை...!!!

#வரதட்சணை

- காளிமுத்து


"சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 3

:)

Posted: 09 Nov 2014 06:30 AM PST

:)


அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் .. படித்து விட்டு கண்டிப்பாக உங்கள் நண்பர்களுடன...

Posted: 09 Nov 2014 06:15 AM PST

அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் .. படித்து விட்டு கண்டிப்பாக உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ளுங்கள்..

1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை .. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக யூஸ் செய்கிறோம் .. அதை வினிகரில் கழுவி யூஸ் பண்ணும்போது அந்த கேட்டு போன வாடையை கஸ்டமர்கள் அறிவதில்லை ...

2)சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை யூஸ் பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும் .. அப்ப அது உங்கள் வைத்துக்குள் போனால் ???

3) சோயா சாட்ஸ் .. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே யூஸ் பண்ணுவதில்லை .. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் யூஸ் பண்ணின என்னையோ கலந்து செய்றோம் ..

4) எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை யூஸ் பண்ணுவதில்லை .. பாமாயில் தான் யூஸ் பண்றோம் ..

5) ரைஸ் கடாயில் யூஸ் பண்ணும் பொது சோரு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம் ..

6)இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க ... அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயீலை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம் .. காரணம் அதில் உள்ள என்னை பசை போக கூடாது என்பதற்காக .. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்டாகிவிடும் ..

7)அஜினமோட்டோ .. இதை அதிகமாக யூஸ் பண்றோம் .. உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள் .. இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும் .. சோதித்து பாருங்கள் ..

8)வெள்ளை பெப்பர் .. இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது .. அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம் ..

9)தக்காளி சாஸ் .. இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த , காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை யூஸ் பண்றோம் ..

10)சில்லி சாஸ் .. அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கேட்ட வாடை அடிக்கும் ..

இது தான் .. நாங்கள் பாஸ்ட் பபுட் செய்ய யூஸ் பண்ணும் பொருட்கள் .. 5 நிமிசத்துல 8 plate போடுவோம் .. ஒன்னு 50 ருபாயினு வித்தா 400 ருபாய் சம்பாரிப்போம் .. அத நானும் சாப்பிட்டு ஏன் உடல
ும் கெட்டு விட்டது விட்டது .. மற்றவர்களின் உடலையும் கெடுக்குரெனெ என என் மனசாட்சி உறுத்தியது .. அதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன் ...

- - தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர் )

Relaxplzz

நண்பர்களே, கனத்த இதயத்தோடு நான் பதிவிடும் இந்த சரித்திர சோகம். கப்பலோட்டிய தமி...

Posted: 09 Nov 2014 06:00 AM PST

நண்பர்களே,

கனத்த இதயத்தோடு நான் பதிவிடும் இந்த சரித்திர சோகம்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் இறுதி காலம் குறித்து பெரும்பாலான மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போனது வருந்தத்தக்கது.

தமிழனுக்கே உரியதாக சொல்லப்படும் தன்மான உணர்வை உண்மையிலேயே கொண்டிருந்த திரு வ.உ.சி அவர்கள் சுதேசி கொள்கையைமுன்னெடுக்கும் விதத்தில் உருவாக்கிய சுதேசி கப்பல் தொழிலும் நலிவடைய, போராட்டத்தின் காரணமாக சிறை சென்றதால் வழக்கறிஞராக பணியாற்றவும் தடைவிதித்தது ஆங்கில அரசு.

1908 ஆம் ஆண்டு சிறை சென்ற வ.உ.சி அவர்கள் 1912 டிசம்பர் மாதம் விடுதலையானார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், பெரம்பூர், என பல்வேறு இடங்களில் குடியேறினார்.

சென்னை, கோவை, ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, தூத்துக்குடி, என பல்வேறு ஊர்களில் வாழ்ந்து பார்த்தார்.ஆனால் வறுமை அவரை வாழ விடவில்லை..

சிந்தாதிரிப் பேட்டையில் ஒரு சிறிய வீட்டில் தன் மகளோடு குடியேறினார்.ஒரு சிறிய மளிகை கடையை துவங்கி நடத்தினார். வியாபாரம் குறிப்பிடும் படி இல்லாமல் போகவே வீடு வீடாக சென்று மளிகை பொருட்களின் தேவையை பட்டியல் (லிஸ்ட்) எடுத்து வந்து தன் மகளின் உதவியோடு அந்தந்த வீடுகளுக்கு விநியோகம் செய்து அதில் கிடைத்த சொற்ப தொகையில் வாழ்ந்து வந்தார்.

அரிசி விற்றார், மண்ணெண்ணெய் விற்றார், ஆனால் தன்மானத்தை விற்கவில்லை.யாரிடமும் கையேந்தவில்லை.

சுயராஜ்ய நிதியிலிருந்து திலகர் மாதந்தோறும் அனுப்பி வைத்த 50 ரூபாய் அவருக்கு ஓரளவு உதவியாக இருந்தது.

தென் ஆப்ரிக்க தமிழர்கள் இதனை கேள்வி பட்டு ஒரு தொகையை வ.உ.சி யிடம் சேர்க்குமாறு காந்தியிடம் கொடுத்தனுப்பினர்.ஆனால் ஏனோ அது வ.உ.சி-க்கு வந்து சேரவில்லை.

"இப்போது இருக்கும் நிலையில் அந்த பணம் வேண்டாம் என்று நான் சொல்லப்போனால் அது நான் எனக்கும் என் குடும்பத்தார்க்கும் இழைத்த தவறாகிவிடும் "

என்று வெட்கத்தை விட்டு காந்திக்கு கடிதம் எழுதும் அளவிற்கு வ.உ.சி இருந்தார்..

அவர் இறுதி காலத்தில் எழுதி வைத்த உயில் கண்ணீர் வரவழைக்கும். தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளி கடைக்கும், வன்னிய தெரு எண்ணெய் கடைக்கும் எவ்வளவு கடன் வைத்துள்ளேன் என்பதை சொல்லியிருந்தார்.

இப்படிப்பட்ட சரித்திரத்தை மறந்துவிடாதீர்கள்.. பகிருங்கள்...

via தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு

Relaxplzz


"வரலாற்றுப் பதிவுகள்"

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் அப்பா கேட்பதற்காகவே நம்மை சத்தம் போட்டு எழுப்புகிறாள் அம்மா ,...

Posted: 09 Nov 2014 05:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

அப்பா கேட்பதற்காகவே நம்மை சத்தம் போட்டு எழுப்புகிறாள் அம்மா , எந்த அம்மாவும் உறங்கும் தன் பிள்ளையை எழுப்ப விரும்புவதே இல்லை

சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய நாணயம்.

Posted: 09 Nov 2014 05:41 AM PST

சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய நாணயம்.


"அரிய புகைப்படங்கள்"

:)

Posted: 09 Nov 2014 05:30 AM PST

:)


ஒரு மனிதனின் சிரிப்பைக் காண விரும்பிய கடவுள் அவன் முன்னே தோன்றி “உனக்கு என்ன வேண...

Posted: 09 Nov 2014 05:15 AM PST

ஒரு மனிதனின் சிரிப்பைக் காண விரும்பிய கடவுள் அவன்
முன்னே தோன்றி "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.

"பணம், செல்வம், தங்கம், வைரம்!" என்றான் மனிதன் ஆசையோடு.

கடவுள் வலது கையின் சுட்டுவிரலை நீட்டினார்..
அங்கிருந்த பீரோ தங்கமானது.!

ஆனால் மனிதன் பேசாமல் இருந்தான்.

கடவுள் மறுபடி விரலை நீட்ட, அங்கிருந்த மேடை தங்கமானது.

அவன் பேசாமல் இருந்தான்,

கடவுள் வேக வேகமாக அந்த அறையில் உள்ள பொருட்களை எல்லாம் தங்கமாக்கினார்..

அப்போதும் மனிதன் சிரிக்கவில்லை.

சோர்ந்து போன கடவுள் மனிதனிடம் கேட்டார்.
"இன்னும் உனக்கு என்ன வேண்டும்?" என்று.

"அந்த விரல் வேண்டும்" என்றான் மனிதன்.

கடவுள் மயங்கி விழுந்தார்....!!:

#இப்படியாகத்தான்_மனிதன்

Relaxplzz

மனைவியவள் தாயாகப்போகிறாளென்ற- செய்தியைக்கேட்டவுடன் அவளுக்குஞ்சேர்த்து தகப்பனாகிற...

Posted: 09 Nov 2014 05:00 AM PST

மனைவியவள்
தாயாகப்போகிறாளென்ற-
செய்தியைக்கேட்டவுடன்
அவளுக்குஞ்சேர்த்து
தகப்பனாகிறவன்தான்
நல்லகணவன்..!

Relaxplzz


குடும்பஸ்தன்_பாடசாலை

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் கருவுற்றிருந்தால் ஒரு குழந்தைக்கு மட்டும் தாயாகி இருப்பாய்.,...

Posted: 09 Nov 2014 04:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

கருவுற்றிருந்தால் ஒரு குழந்தைக்கு மட்டும் தாயாகி இருப்பாய்.,
கருணையுற்று இருந்ததனால் அனைவருக்கும் தாயானாய்.!

அன்னை தெரசா

கப்பல் செய்து விளையாடிய அனுபவம் உண்டா ?

Posted: 09 Nov 2014 04:40 AM PST

கப்பல் செய்து விளையாடிய அனுபவம் உண்டா ?


:)

Posted: 09 Nov 2014 04:30 AM PST

:)


கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்! 1. பிறன் பொருள் கொள்ளை அட...

Posted: 09 Nov 2014 04:15 AM PST

கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!

1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர
நரகம்.

2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.

3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.

4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத்
துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.

5. தன் சுவைக்காக உயிர்க்கொலை,
சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.

6. பெற்றோர், மற்ற பெரியோர்ளைத்
துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.

7. தெய்வ நிந்தனை, தன்
தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.

8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப்
பன்றி முகம்.

9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான
நரகம் அந்த கூபம்.

10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத்
துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.

11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம்
செய்வோர்க்கு அக்கினி குண்டம்.

12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக
வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.

13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும்
மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.

14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும்
அதர்மிகளுக்கு வைதரணி.

15. ஒழுங்கின்றி இழிமகளைக்
கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல்
திரிவோர்க்கான நரகம் பூபோதம்.

16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல்
செய்வோர்க்கு பிராணி ரோதம்.

17. டம்பத்திற்காக யாகம் புரியும்
பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.

18. இல்லாளை விபரீத
இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.

19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக்
கொல்வோர்க்கு சாரமேயாதனம்.

20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம்
கொண்டோர்க்கானது அவீசி.

21. மது, போதைப் பொருள், குடியுள்ள
குடிகேடர்களுக்கு பரிபாதளம்.

22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப்
பிறரை மதியாதவர்க்கு க்ஷõரகர்த்தமம்.

23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள்
வதை ஆகியவற்றுக்கு ர&pide;க்ஷõணம்.

24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத்
துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.

25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த
சூகம்.

26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.

27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல
வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.

28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப்
பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல்
போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.
வலைதளம்

Relaxplzz

இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா? ஆஞ்சியோவுக்கோ அல்லது பைபாஸ் இருதய அறுவை சிகிச்...

Posted: 09 Nov 2014 04:00 AM PST

இருதய நோயால் கஷ்டப்படுகிறீர்களா?

ஆஞ்சியோவுக்கோ அல்லது பைபாஸ் இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டள்ளதா?

நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.

நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்

பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள். மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.

நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

கீழ் காணும் முகவரியில் இதை பெற்றுக் கொள்ள முடியும்..

Fettle Bio Products
#18, DABC Aishwaryam main Road,
Nolambur, Chennai - 95
Tel: +9600125638
email: fettlebioproducts@gmail.com
www.fettlebioproducts.com

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் நாய்வாலை நிமிர்த்துவது நம்வேலை அல்ல !.... நிமிர்த்துவதற்காக அ...

Posted: 09 Nov 2014 03:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

நாய்வாலை நிமிர்த்துவது நம்வேலை அல்ல !....
நிமிர்த்துவதற்காக அதுபடைக்கப்படவுமில்லை...!

- திவ்யா ராஜன்

ஒரு சேஞ்சுக்கு நண்டு வேஷம் போட்டா இப்படியாங்க தூக்கி குக்கர்ல உக்கார வைக்குறது...

Posted: 09 Nov 2014 03:40 AM PST

ஒரு சேஞ்சுக்கு நண்டு வேஷம் போட்டா இப்படியாங்க தூக்கி குக்கர்ல உக்கார வைக்குறது...


(y)

Posted: 09 Nov 2014 03:30 AM PST

(y)


0 comments:

Post a Comment