Saturday, 8 November 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


இரண்டு ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டுக்கு வந்திருந்தினர். காய்கறிச்சந்தைக்குச் சென்ற...

Posted: 07 Nov 2014 07:30 PM PST

இரண்டு ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டுக்கு வந்திருந்தினர்.
காய்கறிச்சந்தைக்குச் சென்றார்கள்.
அங்கு குடை மிளகாய் பார்த்தனர். இது என்ன பழம்?,
ஆப்பிள் பழம் போல் இருக்கின்றதே என்று வியாபாரியிடம் கேட்டனர்!.
அவர் பேசும் தமிழ் இவர்களுக்கு புரியவில்லை.
இவர்கள் பேசும் ஆங்கிலம் அவருக்கு விளங்கவில்லை.
சரி இரண்டு பழங்கள் வாங்கி சாப்பிடலாம் என்றெண்ணி வாங்கினார்கள்.
முதலில் ஒருவன் சாப்பிட்டான். மிளகாய் காரமாக இருந்ததால் அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.
கண்ணீரைப் பார்த்த நண்பன் கேட்டான், 'ஏன் அழுகிறாய்'.?
'இல்லை 10 வருடத்திற்கு முன் என் மாமாவை தூக்கில் போட்டார்கள். அவரை நினைத்ததால் அழுகை வந்தது' என்றான்.
பிறகு 'இந்தா நீயும்சாப்பிடு' என்று இன்னொரு மிளகாயை நண்பனிடம் கொடுத்தான்.
நண்பனும் ஆர்வத்துடன் சாப்பிட்டான். காரத்தால் அவனுக்கும் கண்ணீர்வந்தது.
அடப்பாவி, உண்மையை மறைத்து விட்டானே என்று கோபம் கோபமாய் வந்தது.
அவன் கண்களில் கண்ணீரைக்கண்டதும், முன்னவன் கேட்டான், 'நீ ஏன் அழுகின்றாய்?'
இவன் பதில் சொன்னான். 'இல்லை 10 வருடத்திற்கு முன் உன் மாமாவை தூக்கில் போட்ட போது ஏன் உன்னையும் சேர்த்து போடவில்லை என்று நினைத்தேன்' என்றான்.

0 comments:

Post a Comment