ilovemynative: Facebook page wall posts in Tamil |
- குளித்தவுடன் மூஞ்சி அழகான மாதிரி தெரிவது இயற்கையின் செயல்... விபூதி வச்சதும் மூ...
- Question :- What is the striking similarity between Americans and Hindi speaking...
- காசு பணம் இல்லாட்டியும் என் தாத்தன் என் அப்பன் வாழ்ந்த வாழ்க்கை தான் சொர்க்கமா த...
- எரிசக்தி துறைக்கான மத்திய அரசின் பட்ஜெட் 2014- 2015 :- இந்த பட்ஜெட் நிலக்கரி பட...
- பெண்ணைத் தாண்டி வாழ்க்கைல புரிஞ்சிக்கிறதுக்கு எத்தனையோ விசயமிருக்குனு தெரிஞ்சிக்...
- பிரிவு என்பது காற்று. அது சிறு சுடரை அணைத்து விடுகிறது. பெரு நெருப்பை மேலும் கொழ...
- பட்டை, கிராம்பு, ஏலக்காய் என எந்த வாசனை பொருட்களும் இல்லாமல் சமயலில் வாசம் வரவைக...
- காதலித்து பார்..! தரையில கால் நிக்காது. போன்ல ஜார்ஜ் நிக்காது. பர்ஸ்ல காசு நிக்...
- உங்கள் குழந்தைகளுக்குப் பிழையின்றி தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொடுங்கள். த...
- வீட்டு பீரோவில் ஆண்கள் துணி வைக்க 33% இடஒதுக்கீடு கேட்டு யாரேனும் புண்ணியஸ்தன் ப...
- இளவட்டக்கல் ................ முப்பது நாற்பது வருடங்களுக்குமுன் மாப்பிள்ளைக்கல்...
- பெட்ரோல் தீர்ந்து காரை ரோட்டில் தள்ளிக்கொண்டு யாரனும் சென்றால் அரபு நாட்டில் ஐநூ...
- பேருந்தில் ஆணின் பக்கத்தில் சீட் காலியாக இடமிருந்தாலும் உட்காராமல் நின்றோ நகர்ந்...
- வீட்டுக்கு வந்த விருந்தாளிகிட்ட போகும் போது ... பாத்து பத்திரமா போயிட்டு வாங்கன...
Posted: 28 Nov 2014 08:14 PM PST குளித்தவுடன் மூஞ்சி அழகான மாதிரி தெரிவது இயற்கையின் செயல்... விபூதி வச்சதும் மூஞ்சி குளிச்ச மாதிரி தெரிவதெல்லாம் இறைவனின் வரம்... நன்றி ஆண்டவரே... ஆபிஸ் கெளம்புரேன்... @பூபதி |
Question :- What is the striking similarity between Americans and Hindi speaking... Posted: 28 Nov 2014 08:12 PM PST Question :- What is the striking similarity between Americans and Hindi speaking Indians ? Answer :- Americans think that only they represent the World and they are the World. Similarly Hindi speaking Indians think that only they represent India and they are India. Ironically neither case it is true. @Selvakumar |
Posted: 28 Nov 2014 06:01 PM PST |
Posted: 28 Nov 2014 05:54 PM PST |
Posted: 28 Nov 2014 02:32 AM PST காசு பணம் இல்லாட்டியும் என் தாத்தன் என் அப்பன் வாழ்ந்த வாழ்க்கை தான் சொர்க்கமா தெரியுது என் கண்ணுக்கு... மன அழுத்தத்துடன் தினம் தினம் வாழும் இந்த வாழ்க்கையை வெறுக்கிறேன் ... @சதீஷ் குமார் தேவகோட்டை |
Posted: 28 Nov 2014 02:30 AM PST எரிசக்தி துறைக்கான மத்திய அரசின் பட்ஜெட் 2014- 2015 :- இந்த பட்ஜெட் நிலக்கரி படிம மீத்தேன் ( CBM ) உற்பத்தியை பெருக்குவதற்கும், புதிய நிலக்கரி படிம மீத்தேன் வளங்களை கண்டறிவதற்கான பணிகளை துவக்குகின்றது. உற்பத்தியை பெருக்குவதற்காக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மூடப்பட்ட மற்றும் பழைய கிணறுகளில் இருந்தும் எரிவாயு எடுக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். :>- தமிழகத்தை சுடுகாடாக மாற்ற அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்பதையே சூசகமாக சொல்கிறார்கள், மேலும் நமது வளங்களை திருடி நம்மை அகதிகளாக்கும் செயலுக்கு வித்திட்டுள்ளது இந்த பா.ஜ.க பட்ஜெட். @ Sabari Nivas |
Posted: 28 Nov 2014 01:57 AM PST பெண்ணைத் தாண்டி வாழ்க்கைல புரிஞ்சிக்கிறதுக்கு எத்தனையோ விசயமிருக்குனு தெரிஞ்சிக்கிறதுக்குள்ள நமக்கு முப்பது வயசாயிருக்கும். @செந்தில் ஜி |
Posted: 28 Nov 2014 01:55 AM PST பிரிவு என்பது காற்று. அது சிறு சுடரை அணைத்து விடுகிறது. பெரு நெருப்பை மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்கிறது. |
Posted: 28 Nov 2014 01:53 AM PST பட்டை, கிராம்பு, ஏலக்காய் என எந்த வாசனை பொருட்களும் இல்லாமல் சமயலில் வாசம் வரவைக்க பேச்சுலர் கிச்சனில் மட்டுமே முடியும். @பிரபின் ராஜ் |
Posted: 28 Nov 2014 01:30 AM PST காதலித்து பார்..! தரையில கால் நிக்காது. போன்ல ஜார்ஜ் நிக்காது. பர்ஸ்ல காசு நிக்காது. ஆனா நீ மட்டும் நடு தெருவுல நிப்ப..! @காளிமுத்து |
Posted: 28 Nov 2014 01:25 AM PST |
Posted: 28 Nov 2014 01:10 AM PST வீட்டு பீரோவில் ஆண்கள் துணி வைக்க 33% இடஒதுக்கீடு கேட்டு யாரேனும் புண்ணியஸ்தன் போராடினால் அவருக்கு என் முழு ஆதரவையும் தர சித்தமாயிருக்கிறேன்! :P @காளிமுத்து |
Posted: 28 Nov 2014 12:58 AM PST இளவட்டக்கல் ................ முப்பது நாற்பது வருடங்களுக்குமுன் மாப்பிள்ளைக்கல் என்று அழைக்கப்படுகிற இளவட்டக்கல்லைத் தூக்கினால்தான் பெண் வீட்டார், பெண் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இளவட்டக்கல் என்பது ஊரின் மையத்தில் அல்லது ஆட்கள் அதிகமாக நிற்கக் கூடிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கும். இளவட்டக்கல் தூக்கக்கூடிய ஒருவர், உடல் வளமும் மனோபலமும் மிக்கவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒருவரால்தான் அந்தக் கல்லையே தூக்க முடியும். அத்தகைய ஒருவர், தனது பெண்ணை காலம் முழுக்க வைத்துக் காப்பாற்றும் மனோதிடமும் உடல் வலிமையும் பெற்றிருக்கிறார் என்பதே பெண் வீட்டாரின் எண்ணம். அதனால், இளவட்டக்கல்லைப் பலரும் ஏதோ ஒரு சமயத்தில் தங்களுக்குள்ளேயே பந்தயம் கட்டிக் கொண்டு தூக்கிப் பார்ப்பார்கள். ஒருவரின் உடல் வலிமையையும் உள்ள வலிமையையும் குறிப்பால் உணர்த்துகிறது இந்த முறை. ஒரு நாற்பது வருடங்களுக்குமுன் மிக ஒல்லியாக இருப்பவர்களும் பலசாலியாகவே இருந்தார்கள். எல்லோருக்கும் கிராமத்தில் விவசாயம்தான் முக்கிய வேலை. அதனால், உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். அதனால் உடல் மெலிந்தோர், உடல் பருத்தோர் என்ற வித்தியாசம் இன்றி பலரும் உடல் வலிமை மிக்கவராகவே இருந்தார்கள். காளை மாட்டை அடக்குவது, இளவட்டக் கல்லைத் தூக்குவது போன்ற விளையாட்டுக்களில் வீரத்தை வெளிப்படுத்தும் முறை பெரும்பாலும் கல்யாணத்திற்கு காத்திருக்கும் அல்லது தயாராயிருக்கும் காளையர்களுக்கான ஒரு போட்டி. அதிலும் இளவட்டக்கல் என்பது லேசுப்பட்டதல்ல. அதைத் தூக்கும் முறையைப் பற்றி கேள்விப்பட்டவர்களுக்கே மூச்சு முட்டிவிடும். முதலில் குத்தவைத்து உட்காருவது போல உட்கார்ந்துகொண்டு இளவட்டக்கல்லை இரு கைகளாலும் இறுகப் பிடித்து உடம்போடு சேர்த்து அணைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், முழங்காலில் தூக்கி வைக்கும்போது சிறிது இடைவெளி கிடைக்கும். இப்போது மூச்சை நன்றாக இழுத்துக்கொண்டு மெல்ல எழ முயற்சிக்க வேண்டும். உடல் சற்று நிமிர்ந்தவுடன் நெஞ்சுப்பகுதிக்கு கல்லை அங்குலம் அங்குலமாக மேலேற்றி, வலது புறத்திலோ அல்லது இடதுபுறத்திலோ கல்லை உருட்டி ஏற்றிவிடவேண்டும். அவ்வளவுதான். ஆனால், முதன்முறை அப்படிக் கல்லை மேலேற்றும்போது நெஞ்சுப்பகுதியில் சடசடவென்று எலும்புகளின் சத்தம் கேட்குமாம். மார்பிலிருந்து தோள்பட்டைக்கு நகர்த்தும் போதுதான் பலரும் தோல்வியடைந்து விடுவார்களாம். சற்று மூச்சடக்கி தூக்கிவிட்டால் அப்படியே சிறிது நேரம் வைத்திருந்து, அருகிலுள்ள கோயிலை வலம் வந்து கீழே போடுவார்களாம். சிலர், அருகில் உள்ள ஊருணியைச் சுற்றி தமது வீரத்தை வெளிப் படுத்துவார்களாம். ஊரில் உள்ள பெரியவர்கள் சொல்லச் சொல்ல, கேட்பவரின் மனம் கல்லைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பவரின் நிலைக்குத் தள்ளப்படும். தோல்வியடையும் சிலரும், முதன்முறையாக முயற்சி செய்வோரும் ஆளில்லாத நேரமாகப் பார்த்துத் தூக்கிப் பார்ப்பதுண்டு. சில பீமர்கள் ஒரே மூச்சில் தூக்கிவிட்டு அடுத்து என்ன என்பது போலவும் பார்ப்பார்கள். - இயக்குநர் சீனுராமசாமி. ![]() |
Posted: 27 Nov 2014 10:39 PM PST பெட்ரோல் தீர்ந்து காரை ரோட்டில் தள்ளிக்கொண்டு யாரனும் சென்றால் அரபு நாட்டில் ஐநூறு திர்ஹாமம் அபதாரம் விதிப்பார்கள், காரணம் பெட்ரோல் உற்பத்தியாகும் நாட்டில், பெட்ரோல் இன்றி காரை தள்ளக்கூடாது என்பதாகும். அரிசி உற்பத்தியாகும் நம்ம நாட்டில் உண்ண சோறு இன்றி ரோட்டில் பட்டினியாக நடக்கும் நபர்களுக்காக அபராதம் யாருக்கு விதிப்பது? பட்டினியாக இருப்பவருக்கா?? அரசிற்கா?? @காளிமுத்து ![]() |
Posted: 27 Nov 2014 10:15 PM PST பேருந்தில் ஆணின் பக்கத்தில் சீட் காலியாக இடமிருந்தாலும் உட்காராமல் நின்றோ நகர்ந்தோ தான் நிரூபிக்க வேண்டியுள்ளது பெண்ணின் பத்தினித்தனத்தை!! :( @காளிமுத்து |
Posted: 27 Nov 2014 10:12 PM PST வீட்டுக்கு வந்த விருந்தாளிகிட்ட போகும் போது ... பாத்து பத்திரமா போயிட்டு வாங்கனு சொன்னா #அது கிராமம். போறப்ப வெளி கேட்டை சாத்திட்டு போங்கனு சொன்னா #அது நகரம். @காளி முத்து |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment